World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Amid calls from Clinton and Levin, US moves to oust Iraqi prime minister

கிளிண்டன் மற்றும் லெவினிடமிருந்து வரும் அழைப்புக்களுக்கு மத்தியில் ஈராக்கிய பிரதமரை பதவியிறக்க அமெரிக்கா செயல்படுகிறது

By James Cogan
23 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

புஷ் நிர்வாக அதிகாரிகளின் விரக்தி வெளிப்பாடுகளுடன் சேர்ந்து பிரதம மந்திரி நொவ்ரி அல் மலிக்கியை பதவியிறக்க இந்த வாரம் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள வெளிப்படையான அழைப்புகள், ஈராக்கிய அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதை சுட்டிக்காட்டுகிறது. கோடைகால இடைவெளிக்கு பின்னர் செப்டம்பர் 4 -ல் கூடும் ஈராக்கிய பாராளுமன்ற கூட்டத்தின் போது, மலிக்கியை பதவியிறக்க வாஷிங்டன் மற்றும் பாக்தாத்தில் செயல்பாடுகள் நடந்து வருகின்றன.

ஆயுத சேவைகள் குழுவின் செனட் ஜனநாயக கட்சித் தலைவர் கார்ல் லெவின், செவ்வாயன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறும் போது, "ஈராக்கிய பாராளுமன்றம் இன்னும் சில வாரங்களில் மீண்டும் கூடும் போது, மாலிக்கி அரசை மாற்றி அமைக்க தேர்தல் நடத்தும். ஒரு சிறிய பிரிவு, சிறப்பாக ஒன்றிணைக்கும் ஒரு பிரதம மந்திரி மற்றும் அரசு ஆகியவை அவ்வரசை மாற்ற தேவையான மதிநுட்பத்தைக் கொண்டிருக்கின்றன என்று நான் நம்புகிறேன்." என்று தெரிவித்தார்.

அந்த அறிக்கைக்கு பின்னர் அவர் ஈராக்கில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அவரும், குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர் ஜோன் வார்னரும் இணைந்து, அமெரிக்க தூதுவர் ரெயான் கிரொக்கர், அமெரிக்க இராணுவ ஜெனரல் டேவிட் பீட்ராய்ஸ் ஆகியோருடனும் மற்றும் மலிக்கியை பதவியில் இருந்து இறக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஒத்துழைக்க வேண்டிய ஷியாய்ட், சுன்னி மற்றும் குர்திஷ் அணி தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

2008-ம் ஆண்டின் அதிபர் தேர்தலில் முன்னணி ஜனநாயகக் கட்சி போட்டியாளரான ஹிலாரி கிளிண்டனும், லெவினினின் கருத்துக்களுக்கு உடன்பட்டிருக்கிறார். ஒரு அதிகாரபூர்வ அறிக்கையில், கிளிண்டன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: "செனட்டர் லெவின், தனது கடந்த வார ஈராக் சுற்றுப் பயணத்தின்போது, ஈராக் அரசாங்கம் செயலற்று இருப்பதையும், மத மற்றும் இனவாத தலைவர்களை அது மிகவும் பற்றி கொண்டிருப்பதால், அதனால் ஒரு அரசியல் தீர்வைக் கொண்டு வரமுடியாது என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார். ஈராக்கிய பாராளுமன்றம் ஓரிரு வாரங்களில் மீண்டும் கூடும் போது, அதிகபட்ச ஓட்டு வித்தியாசத்தில் பிரதம மந்திரி மாலிக்கியை மாற்றி அமைக்கும் என்ற செனட்டர் லெவினினின் கருத்தையே நானும் பகிர்ந்து கொள்கிறேன்." என்றார்.

கிளிண்டன் மற்றும் லெவின் இருவரும், மாலிக்கிற்கு சரியான "சிகிச்சை" அளிப்பது தொடர்பாக வெளிப்படையாக விவாதிக்கக் கூடிய அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதிகளாவர். இவ்வாறு அவர்கள் செய்யும்போது, புஷ் நிர்வாகம் உட்பட அமெரிக்க அரசியலில் மற்றும் அதன் ஊடகத்துறையில் பரவலாக இருக்கும் ஒரு கண்ணோட்டத்திற்கு குரல் கொடுக்கிறார்கள். பிரதம மந்திரியாக இருக்கும் மாலிக்கியின் செயல்பாடுகள் முழுவதுமாக ஏமாற்றமளிப்பதாக கிரொக்கர் இந்த வாரம் வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.

மாலிக்கியை பதவியில் இருந்து இறக்க வேண்டுமா இல்லையா என்பதை ஈராக்கியர்களே முடிவு செய்வார்கள் என்று செவ்வாயன்று (21.08.2007) நடந்த ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறிய புஷ், "ஒரு அரசியல் அமைப்பு வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்; அவர்கள் தங்களின் பாராளுமன்றத்திற்கு தாங்களே உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்; ஜனநாயக நாடுகள் செய்வது போன்று, அவர்களே இதில் முடிவெடுப்பார்கள்." என்று தெரிவித்தார். உண்மையில், மாலிக்கியின் முடிவை தீர்மானிப்பதில் ஈராக்கிய மக்களுக்கு எவ்வித செல்வாக்கும் இல்லை. இந்த நாடு "ஜனநாயக" இறையாண்மை கொண்டதல்ல. இது அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கிறது. பாக்தாத்தில் இருக்கும் அரசாங்கம் ஒரு பொம்மை அரசாங்கத்தை விட மோசமாக இருக்கிறது. அதன் தலைமையில் யார் அமர்வது என்பதை - இராஜதந்திரங்கள் மூலமாக அல்லது தேவைப்பட்டால் இராணுவ நடவடிக்கைகள் மூலம் - இறுதியில் அமெரிக்கா தான் முடிவு செய்ய இருக்கிறது.

ஈராக்கில் இருக்கும் அரசியல் சக்திகளின் மிக சிறப்பான ஒத்துழைப்புடன், அந்நாட்டு எண்ணெய் வளங்களை சுரண்டத் துடிக்கும் அமெரிக்காவின் குறிக்கோள்களையும், மற்றும் ஈராக்கின் ஆட்சிப்பகுதிகளை ஒரு உந்துவிசையாக உபயோகித்து, ஈரான், சிரியா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் அமெரிக்க ஆளுமைக்கு இருக்கும் பிற முக்கிய தடைகளுக்கு எதிராக நடந்து வரும் ஆக்கிரமிப்பு யுத்தங்களையும், 2003-ம் ஆண்டு தாக்குதல் முதல் வாஷிங்டன் புறக்கணித்து வருகிறது.

மேற்கூறியவற்றின் அடிப்படையில், மாலிக்கி மற்றும் அவரின் ஷியைட் அரசு அமெரிக்காவிற்கு சாதகமாய் இருக்க தவறி இருக்கிறது. முன்னால் கூறப்பட்ட "இலக்குகளை" பூர்த்தி செய்ய முடியாததால், இந்த ஆண்டு முழுவதும், ஈராக்கி பிரதம மந்திரி தொடர்ந்து புஷ் நிர்வாகத்தின் கண்டிப்பை சந்தித்து வந்திருக்கிறார் என்பதுடன், ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை நிலைநிறுத்தும் முயற்சிக்காக 30,000 கூடுதல் அமெரிக்க துருப்புகளும் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதுமட்டுமின்றி, ஈரானில் ஷியைட் பகுதியில் அரசியல் மற்றும் மதரீதியாக அனுதாபம் பெற்றிருக்கும், ஒரு ஷியைட் அடிப்படைவாதியான மாலிக்கி, தெஹ்ரானுடன் அமெரிக்காவின் பதட்டங்களை தீவிரப்படுத்தும் சூழ்நிலைகளின் கீழ் அந்நாட்டிற்கு அவர் நம்பமுடியாத ஒரு நண்பராகத் தான் இருக்கிறார்.

நாட்டின் எண்ணெய் தொழில்துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவை தாக்கல் செய்வதும் மற்றும் சதாம் உசேனின் பாத் கட்சியைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஆயிரக்கணக்கான சுன்னி அரேபிய உறுப்பினர்களை பொதுத்துறை மற்றும் இராணுவ பணியிடங்களில் இருந்து அகற்றுவதற்கான ஒரு சட்டத்தை நீக்குவதும் மாலிக்கியின் முக்கிய இலக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. இறுதியில் "பாத் கட்சி உறுப்பினர்களை வெளியேற்றுதல்" என்ற முறையிலேயே அறியப்படும் இது, ஆயுதந்தாங்கிய எதிர்ப்பை தெரிவித்து வரும் முன்னாள் பாத் கட்சியினர் மற்றும் சுன்னி கலகக்காரர்களை சமாதானப்படுத்த புஷ் நிர்வாகத்தால் எடுக்கப்படும் ஒரு சிநேகமான அணுகுமுறையே ஆகும். பெரும்பான்மையிலான அமெரிக்கர்கள் போரை எதிர்க்கும் நிலையிலும், அவர்கள் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் சுழலிலும் கூட, தாக்குதலுக்கு நான்கரை ஆண்டுகளுக்கு பின்னரும், அமெரிக்க இராணுவம் அந்நாட்டில் 1,50,000-த்திற்கும் மேற்பட்ட படையினர்களை நிறுத்தி வைத்திருக்கிறது.

இருப்பினும், முன்னாள் சுன்னி ஆட்சிப் பகுதிகளுக்கு வேண்டிய சலுகைகளை பெறுவதற்காக, அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஒத்துழைக்க, ஒருங்கிணைந்த ஷியைட் ஈராக்கி கூட்டணியின் ஒத்துழைப்பை பெற மாலிக்கியினால் முடியவில்லை. பாத் கட்சியினரை வெளியேற்றுதலில் நடக்கும் பின்வாங்கும் நடவடிக்கைகளுக்கு ஷியைட் குழு தலைவர்களாலும், பாராளுமன்ற உறுப்பினர்களாலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உசேனின் ஆட்சிப்பிடியில் கொடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளான இவர்கள், முந்தைய பாத் கட்சியினர் படிப்படியாக அழித்து சிதைத்த தங்களின் தற்போதைய அதிகாரங்களையும் மற்றும் தனியுரிமைகளையும் கவனிக்க தயாராக இல்லை.

இதற்கு பதிலாக, ஈராக்கிய ஆட்சி பகுதிகளில், போட்டி அணிகளுக்கு இடையே இருந்த குழப்பங்கள், கொடிய உள்நாட்டு யுத்தங்களாக நடைபெற்று வந்தன. இவை, எண்ணெய் தொழில்துறையின் எதிர்காலம் போன்ற விஷயங்களில் குறிப்பிடத்தக்க எந்த ஒப்பந்தத்தையும் தடுத்து நிறுத்தவில்லை. சுன்னி மற்றும் ஷியைட் அணியினர், தங்களின் எதிர்பிரிவு உறுப்பினர்களை நகர மற்றும் மாவட்ட சுற்றுப்பகுதிகளில் இருந்து முழுமையாக துடைத்து விட்டனர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், இரண்டு மில்லியனுக்கும் மேலானவர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. ஷியைட் படையினரை விட சற்றே அதிகமாக உயிரிழப்பை சந்தித்திருந்த ஈராக்கிய இராணுவ மற்றும் காவல்துறையினரை காண பல சுன்னி ஈராக்கியர்கள், அமெரிக்கர் வினியோகித்த சீருடை மற்றும் ஆயுதங்களை ஏந்தி வந்திருந்தனர்.

இந்த சூழலில், எதையும் சாராத அமெரிக்க மாற்றம் ஒன்று நிகழ்கிறது. 2003-ல் இருந்து, ஈராக் மற்றும் அதன் பாதுகாப்பு படைகளின் அடித்தளமாக இருக்கும் ஷியைட் கட்சியினர் மீது நம்பிக்கை வைத்து, சுன்னி இன மக்கள் வாழும் பகுதிகளில் வாஷிங்டன், தனது ஒத்துழைப்பை அதிகரித்து இருந்தது. அமெரிக்க இராணுவம், மாலிக்கியை தவிர்த்து, சுன்னி கலகக்காரர்களை சமரசப்படுத்த தன் சுய கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்று ஜெனரல் பீட்ராய்ஸ் கட்டளை இட்டு இருக்கிறார்.

அமெரிக்க துருப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்த பல்வேறு இனங்கள் மற்றும் கொரில்லா குழுக்களுக்காக பல மில்லியன் டாலர் கையாளப்பட்டு இருக்கிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக, அவர்களுக்கு அரசாங்கத்தின் பொதுமன்னிப்பு அளிக்கப்படும் என்பதுடன், கீழிறங்கி வர மறுக்கும் போராளிகளை வேட்டையாட அமெரிக்க இராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. ஈராக் பாதுகாப்பு படைகளின் கட்டமைப்புக்கு வெளியில் இருக்கும் ஆயிரக்கணக்கான சுன்னி இராணுவப் படையினர்களுக்கான சம்பளம் தற்போது அமெரிக்காவால் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மேற்கு மற்றும் மத்திய ஈராக் சார்ந்த ஒரு பெரிய பொறுப்பு சுன்னி போர்தலைவர்களிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் மிக சமீபத்தில் வரை அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி வந்தார் என்பதுடன், ஷியைட் அரசுக்கு எதிரான உள்நாட்டு கலவரங்களுக்கும் தொடர்ந்து ஒத்துழைத்து வருகின்றனர்.

சுன்னி இராணுவ குழுக்களுக்கு உதவும் அதே வேளையில் - இன வன்முறைகளுக்கும், அமெரிக்க துருப்புகள் மீதான தாக்குதலுக்கும், ஈரான் ஆயுதங்களை வினியோகித்து வருவதுடன், பயிற்சியும் அளித்து வருவதாகக் கூறி, மஹ்டி இராணுவம் எனப்படும் ஷியைட் குடிப்படையினர் பெருமளவில் வலுவாக உள்ள மோக்தடா அல் சதர் பகுதிகளில் ஒரு கடுமையான தொடர் தாக்குதலுக்கு பீட்ரியாஸ் உத்தரவிட்டு இருந்தார். ஜூன் மாதம், இராணுவத்தினர் மீது நிகழ்ந்த தாக்குதலுக்கும், பிரபலமாக அறியப்பட்ட ஷியைட்டுகளின் உயிரிழப்புகளுக்காகவும் சாதரிஸ்ட் குழு அரசிலிருந்து வெளிநடப்பு செய்தது. ஷியைட் பகுதிகளில் அமெரிக்க நடவடிக்கைகள் அந்த வாரங்களில் இருந்துதான் மிக ஆழமாக இருந்து வருகிறது. ஈரானியர்களின் ஒத்தழைப்புடன் இருக்கும், சுன்னி அடிப்படைவாதி குழுக்கள் அல்லாத ஷியைட் இராணுவத்தினர், அல்கொய்தாவுடனும் தொடர்பு கொண்டிருக்கலாம் என்பதால், இது தற்போது அமெரிக்காவிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

அமெரிக்காவின் உயர்வுடன் தொடர்புடைய இந்த கொள்கைகள், சுன்னி அடிப்படையை சேர்ந்த பாராளுமன்ற கன்னைகளை ஊக்குவித்து இருக்கிறது. இது ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க உந்தி இருப்பதுடன், அதன் அதிகாரத்தின் முக்கிய பிடிகளை அவர்கள், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் இடமளிக்கிறது. ஜூலையில், சுன்னி ஈராக்கிய இணைப்பு முன்னணி - மாலிக்கி அரசு ஒரு குறுகிய வெறி கொண்ட ஷியைட் அரசு என்று வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்து, மந்திரிசபையில் இருந்து மந்திரிகளை இராஜினாமா செய்யும்படி கேட்டு கொண்டது. இந்த மாதம், முன்னாள் இடைக்கால பிரதம மந்திரி ஐயத் அலாவியின் ஈராக்கிய தேசிய பட்டியலில் இருந்த மந்திரிகள், மந்திரிசபை கூட்டத்திற்கு எதிராக போராட்டத்தை அறிவித்திருந்தார்கள்.

இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் பாராளுமன்றம் கூடும் போது, மாலிக்கி ஒரு எதிர்மறையான கூட்டத்தை சந்திக்க நேரிடும். மந்திரிசபை வெளிநடப்புகளை தொடர்ந்து, இந்த அரசு வெளிப்படையாகவே சுன்னி அரேபிய கட்சியின் 58 உறுப்பினர்களால் எதிர்க்கப்பட்டு வருகிறது. மேலும் அலாவியின் தலைமையில் இருக்கும் பாதுகாப்பு கூட்டணியில் உள்ள 25 உறுப்பினர்கள் மற்றும் பாஸ்ராவை சேர்ந்த ஷியைட் இஸ்லாமிய ஒழுக்க கட்சியின் (ஃபதிலா) 15 உறுப்பினர்களும் கூட இவ்வரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதிகாரபூர்வமாக, நம்பிக்கையில்லா தீர்மானத்தை செயல்படுத்த 275 உறுப்பினர்களில் வெறும் 25 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே இருந்தால் போதுமானதாகும். 138 உறுப்பினர்கள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக இருக்கும்பட்சத்தில், ஜனாதிபதியான குர்தீஸ் தலைவர் ஜலால் தலபானி, ஒரு புதிய பிரதம மந்திரியை தேர்ந்தெடுக்கவும், புதிய மந்திரிசபை அமைக்கவும் அழைப்பு விடுப்பார். ஷியைட் ஒருங்கிணைந்த ஈரானிய கூட்டணியில் இருக்கும் மாலிக்கி, வெறும் 80 உறுப்பினர்களின் ஆதரவில் மட்டுமே இருக்கிறார். குர்திஷ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 53 பேர், தங்கள் வாக்களிப்பை பற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அதேபோன்று அரசின் முக்கிய ஷியைட் போட்டியாளர்களான மதகுரு மொக்தாதா அல்சதருக்கு விசுவாசமான அணியின் 32 உறுப்பினர்களும் கூட எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஈராக்கிய பாராளுமன்றத்தில் இருக்கும் இந்த பல்வேறு கோஷ்டிகளும், அணிகளும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது எவ்வாறு ஈராக்கிய பாராளுமன்றத்தில் ஒன்று கூட போகின்றன என்பதை அடுத்த சில வாரங்களில் நடக்கும் இராஜதந்திரங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் இலஞ்ச லாவண்யங்கள் செயல்படும் விதம் தான் முடிவு செய்யும். இவற்றில் முக்கிய பங்கு வகித்து வரும் தூதுவர் கிரோக்கர் மற்றும் ஜெனரல் பீட்ரியஸ் இருவருமே தொடர்ந்து முக்கிய பங்குவகிப்பார்கள் எனலாம்.

எப்படி இருப்பினும், மத்திய கிழக்கில் கடந்த முப்பது ஆண்டுகளாக அமெரிக்க சதிகளுக்கு உடன்பட்டு வருபவரும், சிஐஏ -க்கு ஆதரவாகச் இருப்பவருமான முன்னாள் பாத் கட்சியை சேர்ந்த ஐயத் அலாவி, ஈராக்கிய பிரதம மந்திரியாக வருவதற்கான முன்னணி வேட்பாளராக அமெரிக்காவின் பின்புலத்தில் இருந்து வருகிறார். வாஷிங்டன் போஸ்ட் பதிப்பிருந்த அலாவி மீதான கருத்து கணிப்பில், அவர் "ஈராக்கிற்கான திட்டம்" என்பதில் ஆறு புள்ளிகள் பெற்றிருக்கிறார்.

அவரின் திட்டம், அமெரிக்க ஆர்வங்களின் மற்றும் கோரிக்கைகளின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாக இருக்கிறது. மாலிக்கின் வெளியேற்றம்; பெரும்பான்மையான நாடுகளுக்கு இடையேயான யுத்த சட்டம் தொடர்பான வாக்குறுதி; இன கருத்தோட்டங்களுக்கு எதிரான ஒரு தடுப்பு, அதாவது, பாதுகாப்பு துருப்புகளில் இருக்கும் ஷியைட் இராணுவத்தினர் தொடர்பானது; ஈராக் விவகாரங்களில் ஈரானை தலையிடாமல் இருக்க கூறுவது; சமரசம் என்ற பெயரில் பாத் கட்சியினரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருதல் என இதில் பல முக்கிய உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஈராக்கிய பாராளுமன்றம், வாஷிங்டன் விரும்பும் அரசாங்கத்தை அமைக்க தவறுமா? என்ற மற்றொரு கேள்வியும் நிலவுகிறது. கடந்த 12 மாதங்களில், மாலிக்கிக்கு எதிராக ஒரு இராணுவ சதியை நடத்தி வரும் புஷ் நிர்வாகத்தின் வாதங்கள் குறித்து பல எண்ணிக்கையிலான கட்டுரைகள் அமெரிக்க ஊடகங்களில் வந்திருக்கின்றன.

திருப்திகரமாக இல்லாத பொம்மை அரசுகளை கலைக்க இது போன்ற முறைகளை கையாள்வதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பல சாதனைகளைப் புரிந்திருக்கிறது. 1963-ல், வியட் காங் விடுதலை இயக்கத்தை, தென் வியட்நாம் ஜனாதிபதி நெகொ டின்ஹ் டிய் நசுக்குதலில் தோல்வியுற்று விரக்தி அடைந்தபோது, அதிபர் மாளிகையை கைப்பற்ற, டியம்மைக் கொலை செய்து, அமெரிக்கத் துருப்புக்களை பெருமளவில் உருவாக்கவும் போரை உக்கிரப்படுத்தவுமான அமெரிக்கத் திட்டங்களை நிறைவேற்றுவதில் துணை புரிகின்ற ஒரு சர்வாதிகாரத்தை திணிக்க, இராணுவத்தில் உள்ள அதிருப்தி கொண்ட பிரிவினரை கென்னடி நிர்வாகம் ஊக்குவித்தது.