World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

The betrayal of the French rail workers strike and the role of the LCR

பிரெஞ்சு இரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த காட்டிக் கொடுப்பும் LCR ன் பங்கும்

Statement by the Socialist Equality Party (Germany)
29 November 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசிக்கும் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே நடைபெற்ற முதல் பலப்பரீட்சை கசப்பான தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த உண்மையை மறுப்பதற்கு இல்லை. ஒரு பத்து நாட்கள் வேலையில் ஈடுபடாமல் இருந்தும்கூட, அரசாங்கம் தன்னுடைய ஓய்வூதிய சீர்திருத்தங்கள், சிறப்புத்திட்ட நலன்கள் என்று அழைக்கப்பட்டவை பற்றிய திருத்தங்களை திரும்பப் பெற மறுத்துவிட்ட நிலையில் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப நேரிட்டது. தங்களின் இந்த சரணாகதிக்கான விலைபற்றியதில் தொழிற்சங்கங்கள் பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன.

பிரெஞ்சு மற்றும் சர்வதேச வணிகச் செய்தி ஊடகம் ஒரு வெற்றிக் குரலை எழுப்பியுள்ளது. "அனைத்துச் சீர்திருத்தங்களின்" தாய் போன்ற சிறப்புத்திட்ட சலுகைகள் பற்றிய சீர்திருத்தங்கள் "இந்த நாட்டில் அனைத்தும் மாற்றப்பட வேண்டும்" என்ற பொதுமக்கள் கருத்திற்கு நம்பிக்கை கொடுத்துள்ளன என்று Le Figaro களிப்புடன் அறிவித்துள்ளது. "பொதுப் பணித்துறைக் குறைப்பு மற்றும் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைத்தல், சமூக காப்பீட்டுச் செலவினங்கள் குறைக்கப்படுதல் ஆகியவை அடுத்து செயற்பட்டியலில்" உள்ளன என்றும் அது கூறியுள்ளது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் தோல்வி அடையவில்லை; ஆனால் அவர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு விட்டனர். இந்த உண்மையை உணர்தலும் இந்தக் காட்டிக் கொடுப்பின் பரப்பினை உணர்தலும் முதல் பொறுப்பு ஆகும். இதன் காரணங்கள் பற்றி உரிய பகுப்பாய்வு வருங்காலப் போராட்டங்களுக்கு தயார் செய்தலுக்கும், இன்னும் தோல்விகளை தவிர்ப்பதற்கும் முக்கிய முன்னிபந்தனை ஆகும்.

"சமூக இயக்கத்தை உடைப்பதில் நிக்கோலோ சார்க்கோசி வெற்றி அடையவில்லை", "அறநெறிப்படியோ, பொருளுரைப்படியோ" இது ஒரு தோல்வி அல்ல என்று கூறும், LCR இன் தலைவரான ஒலிவியே பெசென்ஸநோ போன்றவர்கள், இக்காட்டிக்கொடுப்பிற்கு பொறுப்பான தொழிற்சங்கங்கள், உத்தியோகபூர்வ இடது கட்சிகள், மற்றும் Lutte Ouvrière (LO), LCR ஆகியவற்றின் பிற்போக்குப் பங்கினை மூடிமறைத்து வருகின்றனர்; இவை அனைத்துமே வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தி அதன் தோல்விக்கு நனவுடன் தயார் செய்தவைதாம்.

என்ன நடந்தது என்பது பற்றி முதலாளித்துவம் நன்றாகவே அறிந்துள்ளது. வருங்காலப் போராட்டங்களின் பரப்பு எப்படி இருந்தாலும், இதே சக்திகள் மீண்டும் காட்டிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில்தான் முதலாளித்துவம் உள்ளது.

இரயில் தொழிலாளர்களின் காட்டிக் கொடுப்பானது ஏற்கனவே தாக்கம்மிகுந்த அரசியல் விளைவுகளை கொடுத்துள்ளது. வேலைக்கு தொழிலாளர்கள் மீண்டும் திரும்பிய சிறிது நேரத்திலேயே புறநகர்ப்பகுதிகளில் இளைஞர்களின் எதிர்ப்புக்கள் வன்முறையில் வெடித்தன. இந்த நிகழ்வுகளுக்கு இடையே ஒரு நேரடித் தொடர்பு உள்ளது. வேலைநிறுத்தத்தை நெரித்தது சமூகத்தின் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கும் அடுக்குகளை தனிமைப்படுத்துவதை தீவிரமாக்கியுள்ளது; இதன் எதிர்காலம் பிரிக்க முடியாமல் தொழிலாள வர்க்கத்தின் விதியுடன் பிணைந்துள்ளது. எந்த முன்னேற்றமான முன்னோக்கும் இல்லாத நிலையில், இளந் தலைமுறை மக்களின் பெருந்திகைப்பு, சீற்றம் நிறைந்த வன்முறைச் செயல்களாக வெடித்தது. இதற்கு விடையிறுக்கும் வகையில் அரசாங்கம் மிகப் பெரிய அளவில் அதன் பாதுகாப்புப் பிரிவுகளை கட்டமைத்து அனைத்துத் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளையும் தாக்கியுள்ளது.

தேவையான படிப்பினைகளை பற்றியெடுத்தல் மற்றும் காட்டிக் கொடுப்பிற்குக் காரணமான அமைப்புக்களுக்கு மாற்றீடாக ஒரு அமைப்பை நிறுவுதல் என்பதில்தான் இனி அனைத்துமே அடங்கியுள்ளன.

தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி வசந்த காலத்தில் இருந்தே சிறப்புத்திட்ட சலுகைகள் பற்றிய மோதலுக்கு கவனத்துடன் தயாரிப்பு செய்துள்ளார். 1995ல் ஓய்வூதியங்களின் மீது ஆரம்பத் தாக்குதல் நடாத்திய அரசாங்கத்தின் தலைவராக இருந்த அலன் யூப்பே அதில் இருந்து பின்வாங்கும் கட்டாயம் ஏற்பட்டு இறுதியில் மகத்தான மக்கள் எதிர்ப்பை அடுத்து இராஜிநாமா செய்யும் நிலையை அடைந்த அதேவிதியை தான் அனுபவித்துவிடக் கூடாது என்பதில் பெரும் கவலையை சார்க்கோசி கொண்டிருந்தார்.

அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுமுன்பே, சார்க்கோசி மூன்று முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புக்களின் தலைவர்களை சந்தித்திருந்தார். CGT யின் Bernard Thibault, CFDT இன் François Chérèque, FO இன் Jean Claude Mailly ஆகியோரே அவர்கள். அவர்களிடம் சார்க்கோசி கூறியதாவது: "உடனடியாக உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன். (சிறப்புத்திட்ட சலுகைகள்) இந்த சீர்திருத்தத்தை நான் செயல்படுத்த விரும்புகிறேன். மற்றவை அனைத்தும் பேச்சு வார்த்தைகள் மூலம்தான்." (Le Monde, 26.11). அப்போது முதல் அவர் தொழிற்சங்கத் தலைவர்களுடன் இரவு உணவுக் கூட்டங்கள் உட்பட, பேச்சுக்களை பகிரங்கமாகவும் தனியாகவும், நடத்தியிருந்தார். CGT தலைவராக சக்தி துறையில் இருக்கும் Frédéric Imbrecht உடன் முதல் பெயரை கொண்டு பழகும் அளவிற்கு சார்க்கோசி இருந்தார்.

வேலைவாய்ப்புத்துறை மந்திரியான Xavier Bertrand ம் தொழிற்சங்கத் தலைவர்களுடன் ஊடாடி வந்தார். அவர் வாடிக்கையாக அவர்களை முறைசாராச் சூழலில் தன்னுடைய Rue de Grenelle அமைச்சரகத்தில் விருந்துகளுக்கு அழைத்திருந்தார். அவரே கூறியுள்ளபடி தொழிற்சங்கத் தலைவர்களுடன் அவர் குறைந்தது 80 மணி நேரம் விவாதங்களில் கழித்தார். சார்க்கோசியும் பெத்ரோனும் இறுதியில் சிறப்புத்திட்ட சலுகைகளுக்கு எதிராக தங்கள் தாக்குதல் தொடங்கி விட்டது என்று அறிவித்தவுடன், அவர்களுக்கு ஏற்கனவே தொழிற்சங்கங்களின் ஆதரவு உறுதியாகக் கிட்டியிருந்தது.

வேலைநிறுத்தத்திற்கு சற்று முன்பே ஒவ்வொரு பிரிவும் தனித்தனியே பேச்சுவார்த்தகள் நடத்தலாம் என்ற அழைப்பை விடுத்ததின் மூலம் பேர்னார்ட் திபோ கடைசிச் சந்தேகங்களையும் போக்கினார். திபோ கொடுத்த தகவல் பிழைக்கு இடமில்லாமல் கூறப்பட்டது: சீர்திருத்தத்தின் மூக்கிய கூறுபாடுகளை ஏற்றாக வேண்டும் என்ற முடிவிற்கு அவர் வந்து விவரங்களை பற்றி பேச்சுவார்த்தைகளுக்கு தயாரானார்.

ஆனால் திபோவினால் வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவிற்குக் கொண்டுவர முடியவில்லை. அடிமட்ட காரியாளர்களின் எதிர்ப்பு மிக அதிக அளவில் இருந்தது. எனவே அவர் தேய்மான மூலோபாயத்திற்கு மாறினார் -- அதாவது வேலைநிறுத்தமானது இறுதியாக சக்தியில்லாது போகும் வரை மேலிருந்து ஆதரவில்லாத வகையில் அது தொடரப்பட அனுமதிக்கப்பட்டது. பிரெஞ்சுப் பொருளாதாரத்திற்கு கணிசமான இழப்பு ஏற்பட்ட போதிலும்கூட, சார்க்கோசி இந்த மூலோபாயத்திற்கு ஆதரவைக் கொடுத்தார். "திபோ என்னும் படைவீரர் காப்பாற்றப்பட வேண்டும்" என்று சார்க்கோசி கூறியதாக Le Monde மேற்கோளிட்டுள்ளது. "ஒரு நீடித்த மோதலில் அவர்கள் எந்த வெற்றியும் பெற முடியாது என்று அவருடைய உறுப்பினர்களை நம்ப வைக்க அவருக்கு கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்."

எதிர்காலத்திலும் தொழிற்சங்கங்களின் தேவை வேண்டும் என்பதை சார்க்கோசி நன்கு அறிவார். "கீழ்மட்ட அணிகளுடன் இடர்பாடு கொண்டிருக்கும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக தன்னுடைய குரலை கடுமையாக்கிக் கொள்ள நாட்டின் தலைவர் விரும்பவில்லை. தன்னுடைய சீர்திருத்தங்களான தொழில் சட்டங்கள், வேலைவாய்ப்பு அலுவலகங்களை வேலையற்றோர் பொதுநல அலுவலகங்களுடன் இணைத்தல், தனியார்துறை ஓய்வூதியங்கள், தொழிற் பயிற்சி ஆகியவற்றை செயல்படுத்துவதற்கு, சீர்திருத்தங்களை தொடர்வதற்கு தொழிற்சங்கங்களின் உதவி தேவை என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். "மற்ற சீர்திருத்தங்களுக்கு ஒரு முன்னோடி மாதிரிபோல்தான் சிறப்புத்திட்ட சலுகைகள்; பொறுப்பான தொழிற்சங்கங்கள் நமக்குத் தேவை" என்று ஜனாதிபதி மாளிகை எலிசேயின் செய்தித் தொடர்பாளரான David Martignon வாதிட்டிருந்தார்.

நவம்பர் 20ம் தேதி மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்த மறுநாள், நேரம் கனிந்தது. தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்த அமர்ந்தன. அடுத்த நாள் காலை பொதுக் கூட்டங்களில் இருந்த அவர்களுடைய பிரதிநிதிகள் வேலைநிறுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவரும் வகையில் செயல்பட்டனர். பேச்சுவார்த்தைகளில் SUD தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்; இந்த அமைப்பு முன்னதாக பேச்சுவார்த்தைகளின் மிகத் தீவிர எதிர்ப்பாளர் என்று தன்னைக் காட்டிக் கொண்டிருந்தது.

கடந்த மூன்று தசாப்தங்களாக தொழிற்சங்கங்களின் வளர்ச்சியை கவனித்து வரும் எவருக்கும் CGT, SUD ஆகியவற்றின் நடவடிக்கை ஒன்றும் வியப்பைக் கொடுக்காது. வர்க்க எதிரியின் முகாமிற்குள் தொழிற்சங்கங்கள் புகுந்துவிட்டன என்பது ஒரு சர்வதேச இயல்நிகழ்வு ஆகும்; இது இந்த அமைப்புக்களின் தன்மை, முன்னோக்கு ஆகியவற்றில் இருந்து நேரடியாக விளைகின்றன. முதலாளிகளுடன் தொழிலாளர்களின் ஊதியங்கள், பணி நிலைமகள் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்துதற்கு தொழிற்சங்கங்கள் நோக்குநிலை கொண்டிருந்த நிலையின் கீழ், அவை முதலாளித்துவ பொருளாதாரம் சுமுகமாக செயலாற்ற வேண்டும் என்பதில் நேரடி அக்கறை கொண்டு, வர்க்கப் போராட்டத்தின் மீது அதாவது, முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்திற்கு அமைப்பியல் ரீதியாய் விரோதப் போக்கை எடுக்கின்றன. சாராம்சத்தில் தேசியவாத தன்மையுடன்கூட, அவை சார்க்கோசியின் "சீர்திருத்தங்கள்" உலகப் பொருளாதாரம், உலக அரசியல் ஆகியவற்றில் பிரான்சின் நிலையைப் பாதுகாக்கும்பொருட்டு தேவை என்று நம்பிவிட்டன.

CGT இன் வரலாறு இவ்விதத்தில் தக்க அடையாளத்தை காட்டுகிறது. 1953, 1968ம் ஆண்டுகளில் இது ஏற்கனவே தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி மிகப் பெரும் புரட்சித்திறன் கொண்டிருந்த இரு பொது வேலைநிறுத்தங்களையும் நெரித்துக் கட்டிப்போட முடிந்தது. இரு சந்தர்ப்பங்களிலும் இந்த தொழிலாளர்கள் சலுகைகள் பறிப்பு என்பதற்கு அது தக்க முறையில் பரிசில்களை பெற்றது. இதற்கிடையில் பூகோளமயமாக்கல் என்பது சமூக சமரசம் எதையும் அடிப்படையாக கொள்ள விடாமல் தகர்த்து அழித்துள்ளது. CGT யும் பழமைவாத அரசாங்கத்தின் முகாமிற்குள் தம்மை முற்றிலும் மாற்றிக் கொண்டுவிட்டது. சார்க்கோசி மற்றும் பெத்ரோன் ஆகியோருடன் தொழிற்சங்கங்கள் மணிக் கணக்கில் கூடிக்குலாவுவதை விளக்குவதற்கு இதுதான் ஒரே வழியாகும்.

LCR உம் LO வும் காட்டிக்கொடுத்தலை எப்படி ஆதரித்தன

ஏற்கனவே வேலை நிறுத்த ஆரம்பத்திலேயே மிக அதிகமாக தொழிற்சங்கங்கள் இழிவிற்கு உட்பட்டிருந்தன. வேலைநிறுத்த கூட்டங்களில் தலைமைக்கு எதிரான பகிரங்க நம்பிக்கையற்ற தன்மைதான் நிலவியிருந்தது. பெரும்பாலான விவாதங்கள் தொழிற்சங்கக் கருவிகள் தங்களை விற்றுவிடுவதை எப்படித் தவிர்க்கலாம் என்பது பற்றித்தான் மையம் கொண்டிருந்தன. அடிமட்ட உறுப்பினர்களுடன் ஆலோசனைகள் நடத்தாமல் எந்தவித உடன்பாடும் கூடாது என்று எச்சரித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த 12 ஆண்டுகளில் பிரெஞ்சுத் தொழிலாளர்கள் பல தொடர்ச்சியான கசப்பான அனுபவங்களை கொண்டுள்ளனர்; இவற்றில் தொழிற்சங்கங்கள் குறுக்கிட்டு சமூக மோதல்கள் திரண்டு எழுவதைத் தடுத்து இறுதியில் விற்றுவிடுதலை உறுதியாக்கும் வகையில்தான் செயல்பட்டன.

1995 மோதல் அது வெற்றி அடைந்தது என்று கூறப்படுவதன் விளைவை கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் பல நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மூன்றரை வாரங்கள் சமூகப் பாதுகாப்பு நலன்கள், ஓய்வூதியங்கள், சுகாதார நலன்கள், வேலைகள் ஆகிவற்றை காக்க வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். தொழிற்சங்கங்கள் இவ் அணிதிரளல்கள் வலதுசாரி அரசாங்கத்திற்கு ஒரு அச்சுறுத்தலை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தி, இறுதியில் ஒரு மோசமான சமரசத்திற்கு உடன்பட்டதன் மூலம் இவ்வியக்கத்தை மூச்சுத்திணற வைத்தன. யூப்பே திட்டத்தின் மிக சர்ச்சைக்குரிய பகுதி திரும்பப்பெறப்பட்டது, ஆனால் அவருடைய பிற நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து இருந்தன. பிரதம மந்திரி யூப்பே தன்னுடைய பதவியையும் சிலகாலம் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது; முறையாக அரசாங்க மாற்றத்தை தயாரிக்க ஜனாதிபதி ஜாக் சிராக்கிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

2003ல் அரசாங்கம் ஓய்வூதியங்கள்மீது தன்னுடைய தாக்குதலை தொடர்ந்தது; கணிசமான எதிர்ப்புக்களுக்கு இடையே தன்னுடைய நடவடிக்கைகளை சுமத்த முடிந்தது. அரசாங்கத்தின் திட்டங்களை CFDT வெளிப்படையாக ஆதரித்தது; CGT, FO இரண்டும் ஒருங்கிணைக்கப்படாத வேலைநிறுத்தக் கொள்கையை பின்பற்றின, தங்கள் நோக்கம் அரசாங்கத்தை வீழ்த்துவது அல்ல என்பதையும் பகிரங்கமாக வெளிப்படுத்தின. அந்த நேரத்தில் தொழிற்துறை மந்திரியாக இருந்த François Fillon, வெளிப்படையாக "பொறுப்பான அணுகுமுறைக்காக" பின்னர் பேர்னார்ட் திபோவிற்கு நன்றி தெரிவித்தார்.

2005 வசந்த காலத்தில் முதல் வேலை ஒப்பந்தத்திற்கு (CPE) க்கு எதிராக தொழிற்சங்கங்கள் குறுக்கிட்டதற்கு காரணம் எதிர்ப்புக்களை கட்டுப்படுத்தி அவற்றை நெரிக்க வேண்டும் என்பதிலானல்தான்.

பிரெஞ்சு சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிற்சங்கங்களைப்போலவே செல்வாக்கிழந்துவிட்டன. சோசலிஸ்ட் கட்சி தலைவர் லியோனல் ஜோஸ்பன் ஐந்து ஆண்டுகள் அரசாங்கத்தில் இருந்த பின் 2002 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற அதிர்ச்சியில் இருந்து இரு கட்சிகளும் மீளவே இல்லை; அப்பொழுது அவர் வலதுசாரித் தீவிரவாதி லூ பென்னால் தோற்கடிக்கப்பட்டார். அப்பொழுது முதல் இரு கட்சிகளும் இன்னும் மேலதிகமாக வலதுபுறத்திற்கு நகர்ந்துள்ளன.

இவ்வாண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தின்போது சோசலிஸ்ட் கட்சி பல பிரச்சினைகளிலும் சார்க்கோசியை வலது புறத்தில் இருந்து முந்திச்செல்வதற்கு முயன்றது. தேர்தல்களில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கட்சியின் முக்கியமான உறுப்பினர்கள் நேரடியாகவே சார்க்கோசியின் முகாமிற்குச் சென்றுவிட்டனர். இரயில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின்போது சோசலிஸ்ட் கட்சி தொழிலாளர்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்று பெயருக்குக் கூட கருதவில்லை. சார்க்கோசியின் சீர்திருத்தங்களின் அடிப்படைக் கூறுபாடுகளுக்கு கட்சி ஆதரவு கொடுக்கிறது; இதையொட்டி சிறப்புத்திட்டத் தொழிலாளர்கள் முழு ஓய்வூதியங்களை பெறுவதற்கு குறைந்தது 37.5 ஆண்டுகள் என்பதற்குப் பதிலாக 40 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். கட்சியின் தற்போதைய தலைவரான François Hollande சார்க்கோசி பற்றி கூறிய ஒரே விமர்சனம் அவரது "மோதல் பாணி" பற்றியதுதான்; ஆனால் சார்க்கோசியின் கொள்கைகள் பற்றி Hollande பிரச்சினைகள் ஏதும் எழுப்பவில்லை. விரைவில் பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறுதான் வேலைநிறுத்தக்காரர்களுக்கு அவர் அவசர அழைப்பை விடுத்தார்.

தொழிற்சங்கங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இடது கட்சிகள் செல்வாக்கிழந்துபோனமை தீவிர வலது கட்சிகள் கணிசமான செல்வாக்கைப் பெறுவதற்கு உதவியுள்ளன. Lutte Ouvrière ம் பெருகிய முறையில் LCRம் உத்தியோகபூர்வ பிரெஞ்சு அரசியலின் வாடிக்கையான கூறுபாடுகளாகிவிட்டன. 2002ல் இவர்களின் தேர்தல் தொகுதியில் கிட்டத்தட்ட 10 சதவிகிதத்தினர் ஜனாதிபதித் தேர்தலில் இவ்விரு அமைப்புக்களின் வேட்பாளர்களான Arlette Laguiller மற்றும் Olivier Besancenot-க்கு தங்கள் வாக்குகளை அளித்தனர். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தில் 1.5 மில்லியன் வாக்காளர்கள் பெசன்ஸநோவிற்கு வாக்களித்தனர்.

LO, LCR இரண்டும் தங்கள் அதிகாரத்தை தொழிற்சங்கங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இடது செய்த காட்டிக் கொடுப்பை மூடிமறைப்பதற்கு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளன; அதேபோல் இந்த அமைப்புக்களுக்கு எதிராக எந்த எழுச்சி வந்தாலும் முளையிலேயே அவற்றை கிள்ளிவிடவும் செய்தன. தொழிற்சங்கங்களுக்கு எதிராக, LCR தனது சக்திகளை பகிரங்கமாகத் திரட்டி, காட்டிக் கொடுத்தலுக்கு எதிராக எச்சரிக்கை கொடுத்திருந்தால் -- அதுதான் முதல்நாளில் இருந்தே அவற்றின் திட்டம்-- பூசலின் போக்கில் அது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவை முற்றிலும் எதிரிடையாக செயல்பட்டு, தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான எவ்வித எழுச்சியையும் துண்டிப்பதற்கு திட்டமிட்டே வேலைசெய்தன.

தொழிற்சங்கங்கள் பற்றிய குறைகூறலோ அல்லது அவற்றின் அதிகாரத்துவத்தின் முடக்கும் செல்வாக்கை கடப்பது பற்றிய எவ்வித முன்முயற்சியோ LCR, LO ஆகியவற்றின் அறிக்கைகளில் தேடினாலும் காண்பதற்கு இல்லை. இக்கட்சியின் உறுப்பினர்கள் விசுவாசமான தொழிற்சங்கத்தினராகவே செயல்பட்டனர். LCR கணிசமாக செல்வாக்கைக் கொண்டிருக்கும் SUD பேச்சுவார்த்தை மேசையில் அதன் கலந்து கொள்ளல் மூலம் இந்த காட்டிக்கொடுப்புக்கு முறைமை தரக்கூடிய முத்திரையை இரவல் கொடுத்தது. பெசன்ஸநோ சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசாங்கத்துடன்தான் சேர்ந்து நிற்கும் என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்த போதிலும் LCR உடன் வேலை நிறுத்த ஆதரவிற்கு அவை சேரவேண்டும் என்று ஏராளமான அழைப்புக்களை விடுத்தார்.

LO இன்னும் அதிகமாகச் சென்று வேலைநிறுத்தத்தின் நடுவில் சோசலிஸ்ட் கட்சியுடன் வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களில் தான் பட்டியலில் பங்கு பெற இருக்கும் விருப்பத்தை அறிவித்தது. வேலைநிறுத்தம் செய்தவர்கள் சோசலிஸ்ட் கட்சியுடன் வெளிப்படையான விரோதத்தை எதிர்கொண்ட சூழ்நிலையின் கீழ், LO அந்த அமைப்புடன் தன்னுடைய ஐக்கியத்தை நிலைநாட்டிக்கொள்ள முற்பட்டது.

LCR முற்றிலும் இழிவான வகையில் மற்றும் வேண்டுமென்ற அதிகாரத்துவத்தை பேணுவது அக்டோபர் 22 அன்று பாரிசில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் விளக்கிக்காட்டப்பட்டது. ஒலிவியே பெசன்ஸநோ முக்கிய பேச்சாளர் என்று இருந்த இக்கூட்டம் கவனத்துடன் தயாரிப்பிற்கு உட்பட்டிருந்தது. பாரிஸ் முழுவதும் சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன. இறுதியில் கிட்டத்தட்ட 2,000 பேர் இலத்தீன் பகுதியில் இருக்கும் Mutualité பேரரங்கில் கூடினர்.

தொழிற்சங்கங்கள் இதற்கு முதல் நாள், நிர்வாகம் மற்றும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கின; 22ம் தேதி காலை வேலைநிறுத்தத்தின் பொதுக் கூட்டங்கள் வேலைநிறுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று வாக்களித்தன. ஆயினும்கூட, பெசன்ஸநோ தொழிற்சங்கங்களின் இந்தக் காட்டிக் கொடுப்பு பற்றி ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை; இந்த காட்டிக்கொடுப்பை ஒரு வெற்றி என சித்தரித்துக் காட்டவும் முற்பட்டார். வேலைநிறுத்தத்தை நிறுத்த முடியாத இயக்கத்தின் வெளிப்பாடு என்று போற்றினார்; இது தொடரும் என்றும் சார்க்கோசியைப் பின்வாங்க வைக்கும் என்றும் கூறினார். சமூக இயக்கம் முடிந்துவிடவில்லை என்றும் அது நிரந்தரமாகத் தொடரும் என்றும் அவர் அறிவித்தார். "சக்திகளைத் திரட்டுதல், தெருக்களில் இருந்து இன்னும் அதிகமான முறையில் அழுத்தத்தை அதிகரித்து இச்சீர்திருத்தங்களை தடைசெய்யும் வகையில் செயல்படுதல்தான்" செய்ய வேண்டிய பணி என்றும் கூறினார்.

இத்தகைய வெற்றுத்தனமான சொற்பிரயோகங்கள்தான் ஒவ்வொரு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மூலதனமாக இருக்கின்றன. தங்களுடைய பொறுப்பை மூடிமறைக்கும் நோக்கத்தை இது கொண்டிருப்பதுடன் அரசியல் முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இந்த வடிவ வாயரற்றலில் LCR நிபுணத்துவம் பெற்றதாகும்.

குட்டி முதலாளித்துவக் கட்சிகள்

LCR, மற்றும் LO இரண்டும் செய்தி ஊடகத்தால் வாடிக்கையாக "தீவிர இடது", "ட்ரொட்ஸ்கிஸ்டுகள்" என்று விவரிக்கப்படுகின்றன. உண்மையில் இவை குட்டி முதலாளித்துவ கட்சிகள்தாம். இவற்றின் ட்ரொட்ஸ்கிச வாதம் முற்றிலும் கட்டுக்கதை தன்மையைத்தான் கொண்டுள்ளது. ட்ரொட்ஸ்கிசவாத இயக்கத்தின் தத்துவார்த்த மற்றும் அரசியல் மரபியத்துடன் இவை எந்த விதத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.

1968 மே-ஜூன் நிகழ்வுகளுக்கு நாற்பது ஆண்டுகளுக்கு பிறகும்கூட, இக்கட்சிகள் அரசியல், பொருளாதாரத்தின் ஒவ்வொரு பகுதியையும் குட்டி முதலாளித்துவத்தின் அரசியல் வாழ்வுக் கூறுபாட்டுடன் பிணைக்கும் நிலையில்தான் உறுதியாக வெளிப்பட்டுள்ளன. இவர்களுடைய உலகப் பார்வை, இவர்கள் வாழ்க்கை நெறி, இவர்களுடைய சமூக அக்கறைகள் ஆகியவை முதலாளித்துவத்துடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளன. முன்னாள் LCR உறுப்பினர்கள் நூற்றுக் கணக்கில் உத்தியோகபூர்வ அரசியல், வணிகம், பண்பாடு, பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் வெற்றிகரமான போக்கைக் கொண்டு, தங்கள் கட்சி இளைஞர்களோடு முற்றிலும் தொடர்பைத் துண்டித்த முறையில்தான் வாழ்ந்து வருகின்றனர்.

ஜேர்மனி அல்லது அமெரிக்காவில் இருந்து வரும் எவரும் பிரெஞ்சு செய்தி ஊடகம் பெசன்ஸநோவை நடத்தும் வழிவகை பற்றி வியப்படைவர். நவம்பர் 19, இரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் நடுவில் முக்கால் மணி நேரம் முக்கியமான காலத்தில் France Inter, i-Tele ஆகிய நிலையங்களால் பேட்டி காணப்பட்டார். இவர் தோன்றுவதற்கும் Le Monde ஒரு மூன்று பத்தி விளம்பரம் மூலம் தகவலை வெளியிட்டிருந்தது.

பிரெஞ்சு ஆளும் உயரடுக்கிற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இடது கட்சிகளின் சரிவை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடம் பற்றி நன்கு தெரியும். இந்த வெற்றிடம் உடனடியாக புரட்சிகர வளர்ச்சி ஏதும் வராமல் இருக்கும் வகையில் இட்டு நிரப்பப்பட வேண்டும். இதுதான் LO, LCR ஆகியவற்றின் வேலையாக உள்ளது. இத்தகைய நடத்தையில் தற்செயல் நிகழ்வு ஏதும் இல்லை. தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரின் இடது இயக்கங்களின் மையவாதக் கருத்துக்களின் வெளிப்பாடாக அவை இல்லை. அவை வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தி தோற்கடிப்பதற்கு நனவுடன் செயல்பட்டன; ஆரம்பத்திலிருதே அவர்களுடைய பங்கு இக்காரணியை கொண்டிருந்தது.

லியோன் ட்ரொட்ஸ்கியினால் தோற்றுவிக்கப்பட்ட உலக சோசலிசப் புரட்சிக் கட்சியான நான்காம் அகிலத்தில் LO எப்பொழுதும் சேர்ந்ததில்லை. அது தொழிற்சங்கங்களின் தேசிய சூழலுக்கு ஏற்ப தான் நடந்து கொள்ளுவதற்கு சர்வதே அமைப்பை எப்பொழுதும் ஒரு தடை என்றே கருதி வந்துள்ளது.

1953ல் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தில் இருந்து உடைத்துக்கொண்ட பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் (Pabloite United Secretariat) பிரெஞ்சுப் பகுதியாகத்தான் LCR இருந்து வந்துள்ளது. அது தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர சக்தியாக கருதுவதில்லை; பதிலாக அது ஸ்ராலினிச மற்றும் குட்டி முதலாளித்துவ தேசிய இயக்கங்களை --அல்ஜீரிய FLN, Fidel Castro, நிகரகுவாவின் Sandinistas மற்றும் இன்று அவர்களது சரிநிகர் நபர்களான Hugo Chavez, Evo Morales ஆகியோரின் அமைப்புக்களை-- நோக்கி திரும்பியது. பல ஆண்டுகளாக LCR பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்ள முயன்றது. இவ்வாறு செய்கையில் அது சோசலிஸ்ட் கட்சியின் சரிவினால் ஏற்பட்டுள்ள இடைவெளியை தாண்டிச்செல்ல தயார் செய்கிறது.

ஜனவரி மாதம் LCR ஒரு புதிய "முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியை" தோற்றுவிக்க விரும்புகிறது; இதுவே வெளிப்படையாக ஒரு சீர்திருத்தத் தன்மை கொண்டதே அன்றி புரட்சிகர அரசியலுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. புதிய கட்சி ஒரு "போர்க்குண" கட்சி என்று இருக்கும், ஆனால் "உயரடுக்கு, நவீன ஆடம்பரக் கட்சியாக" இராது என்று Mutualité யில் பெசன்ஸநோ அறிவித்தார். இது ட்ரொட்ஸ்கிசத்தை கொண்டிருக்காது ஆனால் அனைத்து தாராளவாத, ட்ரொட்ஸ்கிச, குவேராயிச, கம்யூனிஸ்ட் கருத்துக்களில் இருந்து வேண்டியதை எடுத்துக் கொள்ளும். 1917ல் அக்டோபர் புரட்சி தொடங்கி சோவியத் ஒன்றியத்தின் சரிவுடன் முடிந்த காலகட்டம் இறுதியில் முடிவுக்கு வந்து விட்டது என்று அவர் கூறினார். இப்பொழுது "இருபதாம் நூற்றாண்டிற்கான சோசலிசத்தை" வளர்க்கும் பணி வந்துள்ளது என்றார். புதியகாலம் ஒன்றில் வாழ்கிறோம், இதற்கு ஒரு புதிய அரசியல் வேலைத்திட்டமும் புதிய வழிவகைகளும் தேவை என்றும் கூறினார்.

ட்ரொட்ஸ்கிச மரபியத்தின் தெள்ளத் தெளிவான நிராகரிப்பை இப்படி முறைப்படுத்திக் கூறலின் சாத்தியம் எளிதானதல்ல. பெசன்ஸநோவின் "முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி" என்பது ஜேர்மனிய இடது கட்சி, இத்தாலியில் உளள Rifondazione Communista, பிரேசிலில் இருக்கும் லூலாவின் தொழிலாளர் கட்சி ஆகியவற்றைத்தான் வலுவாக நினைவூட்டுகிறது. இந்த மூன்றுமே தொழிலாள வர்க்கத்தின் இடது நோக்கிய வளர்ச்சிக்கு பிரதிவிளைவாகவே ஸ்தாபிக்கப்பட்டன. ஆனால் மூன்றுமே தொழிலாள வர்க்கத்தை காட்டிக் கொடுத்து முதலாளித்துவ அரசாங்கங்களின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டன. LCR இல் இருக்கும் உள்ளூர் சக சிந்தனையாளர்கள் இந்த மூன்றிலும் பங்கேற்றிருந்தனர்.

ஒலிவியே பெசன்ஸ்நோ இந்தக் கட்சியில் இருக்கும் அனைத்து நெறியற்றவை, போலித்தனங்கள் ஆகியவற்றின் உயிர்வாழும் உருவத் தொகுப்பு ஆவார். நீண்ட காலம் LCR ன் தலைவராக இருந்த அலன் கிறிவினால் இவர் கட்சியின் பொது முகமாகக் கட்டமைக்கப்பட்டார். இயக்கத்திற்கு ஏற்றம் ஊட்டும் வகையில் அஞ்சல் ஊழியராக தன்னுடைய கடமையை செய்து வந்த ஒரு இளந் தொழிலாளி, நல்ல பதவியைக் கட்சியில் பெற்றுள்ளார் என்ற தோற்றத்தைக் கொடுப்பது அவரது வேலை ஆகும். இதுவும் ஏற்கனவே ஒரு பொய்யாகிவிட்டது. இந்த 33 வயதான தந்தை வரலாற்றாளர் என்ற முறையில் ஒரு பல்கலைக்கழக சான்றிதழ் கொண்டிருப்பதுடன் இரண்டு ஆண்டுகள் கிறிவினின் உதவியாளராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பணியாற்றினார். அவருடைய பகுதி நேர வேலை முற்றிலும் பிரச்சாரங்களுக்காகத்தான் உள்ளது. ஒரு முக்கிய நூல்பதிப்பு நிறுவனத்தின் இலக்கிய இயக்குனர் என்று நல்ல ஊதியம் பெற்று வரும் மனைவியின் கணவர் என்ற முறையில், இவர் ஒன்றும் ஒரு அஞ்சல் ஊழியரின் சொற்ப ஊதியத்தில் தன்னுடைய குழந்தையை வளர்க்கும் கட்டாயத்தில் இல்லை.

பெசன்ஸ்நோ ஒரு முன்மாதிரி செய்தி ஊடக நபராக உள்ளார்; தன்னுடைய அறியாமை மற்றும் மேம்போக்குத்தனத்தை சரளமான உரையாற்றல் மூலம் ஈடுகட்டுகிறார். ட்ரொட்ஸ்கிச மரபுகள் பற்றி அவர் இகழ்வுணர்வைத்தான் கொண்டுள்ளார். இளைஞர்களுக்கு அவர் கூறும் முன்மாதிரி, பல இளைஞர்களிடம் நம்பிக்கையற்ற கொரில்லா யுத்தத்துக்கு ஆதரவாக செயல்படுவதில் தொழிலாள வர்க்கத்திற்கு தங்களின் புறமுதுகை காட்டுவதை விளைவித்த அரசியல் சந்தர்ப்பவாதியும், சாகசவாதியுமான சே குவேரா தான்.

ஒரு சர்வதேச முன்னோக்கு

ஒரு முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாள வர்க்கம்தான் உறுதியான புரட்சிகர சக்தியாக உள்ளது, தொடர்ந்து இருக்கவும் முடியும். பிரான்சில் நடக்கும் வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் ஐரோப்பா முழுவதும் வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்கு கட்டியம் கூறுபவை ஆகும். கடுமையான அரசியல் அழுத்தம் மற்றும் தொழிற்சங்கங்களின் நாச வேலை இவற்றுக்கு இடையே தங்கள் வேலைநிறுத்தத்தை ஒரு வாரம் நடத்திய பிரெஞ்சு இரயில் தொழிலாளர்கள் வெளிப்படுத்திய தைரியம், உறுதிப்பாடு ஆகியவற்றின் மூலம் இது தெளிவாகிறது.

ஆனால் மையப் பிரச்சினை அரசியல் தலைமை பற்றிய பிரச்சினையாக தொடர்கிறது. தொழிலாள வர்க்கம் அரசியல் நடைமுறையில் தங்களுக்கு ஒரு இடத்தை தக்கவைக்க முயற்சிக்கும் பிழைப்புவாதிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வரை இன்னும் கூடுதலான தோல்விகள் தவிர்க்க முடியாதவை ஆகும்.

அரசியல் மற்றும் சமூக நிலைமை சடுதியில் தீவிரமாகி வருகிறது. ஈராக்கிய போர், உலகந்தழுவிய நிதிய நெருக்கடி, தீவிர சர்வதேச அழுத்தங்கள் ஆகியவை ஆளும் வர்க்கத்தை ஐரோப்பா முழுவதும் அமெரிக்க நிலைமைகளை அறிமுகப்படுத்த கட்டாயப்படுத்துகின்றன. பெரிய சக்திகளின் அரசியல் மற்றும் இராணுவவாதம் அரசாங்கம் நிதியளிக்கும் சமூகத் திட்டங்களுடன் இயைந்து இருக்க முடியாது; உலகந்தழுவிய போட்டி உயர்ந்த அளவு வரிவிதிப்பு மற்றும் சமூக நலன்களுக்கான பொதுச் செலவு ஆகியவற்றுடன் இயைந்து இருக்க முடியாது. இலாபமுறையின் மேலாதிக்கத்திற்கு வரும் தடைகள் அனைத்தும் ஒரு புறம் தகர்க்கப்படுகின்றன. வேலைகள், கல்வி, நோய், மூப்பு இவற்றிற்கான காப்பீடுகள், நியாயமான ஊதியங்கள் ஆகியவை ஒரு சிறிய செல்வந்த மேற்தட்டின் செல்வக் கொழிப்பு மற்றும் அதிக இலாபம் பெறல் என்ற பலிபீடத்தில் பலியிடப்படுகின்றன.

இத்தாக்குதல்களை ஒரு தேசிய வடிவமைப்பிற்குள் எதிர்த்துப் போரிட இயலாது. தொழிலாள வர்க்கம் ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கம் ஒரேவிதமான பிரச்சினைகளையும் ஒரேவிதமான எதிரிகளையும்தான் எதிர்கொள்ளுகின்றது.

ஜேர்மனியில் இரயில் டிரைவர்கள் கடந்த ஆறு மாதங்களாக முன்னேற்றகரமான வேலை நிலைமை, மற்றும் ஊதியங்களுக்காக வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கம், நிர்வாகம் ஆகியவற்றின் பரந்த எதிர்ப்பை மட்டும் அவர்கள் எதிர்கொள்ளாமல், நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்கள், SPD மற்றும் இடது கட்சி ஆகியவற்றின் எதிர்ப்பையும் எதிர்கொள்கின்றனர்; இவை இரயில் டிரைவர்களின் கோரிக்கைகளுக்கு எதிராக இருப்பதுடன் வெளிப்படையாக வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் வகையிலும் செயல்பட்டு வருகின்றன.

உண்மையான ஐரோப்பிய மற்றும் சர்வதேச முன்னோக்கு ஒன்றின் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் தலைமை கட்டாயம் வளர்க்கப்பட வேண்டும். ஆளும் வர்க்கம் தன்னைத்தானே சர்வதேச வழியில் கட்டமைத்து நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறது. சார்க்கோசிக்கு பின்னால் ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய அரசாங்கங்களும் பலம் கொடுத்து நிற்கின்றன. தொழிலாள வர்க்கத்திற்கும் அதன் சொந்த சர்வதேச அமைப்பு தேவைப்படுகிறது. தேசிய வழிவகைகளில் அது தன்னைப் பிளவுபடுத்திக் கொண்டுவிட அனுமதித்துவிடக்கூடாது. வங்கிகள் மற்றும் பெரும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்பதை அதன் சொந்த மாற்றீடாக கட்டாயம் முன்வைக்க வேண்டும்.

அதிகரித்துவரும் வேலையின்மை, சமூக சமத்துவம் இன்மை ஆகியவை ஒரு சோசலிசக் கொள்கை மூலம்தான் கடக்கப்பட முடியும்; அதுதான் இலாப முறைக்கு மேலாக மனிதத் தேவைகளை முன்வைத்து, பெரிய மற்றும் முக்கிய நிறுவனங்களை பொதுக் கட்டுப்பாட்டிற்குள் மாற்ற முடியும்.

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் (PSG), பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) 1953ம் ஆண்டு மிசேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேலின் சந்தர்ப்பவாதங்களில் இருந்து ட்ரொட்ஸ்கிச மரபுகளை காப்பாற்றுவதற்காக தோற்றுவிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகள் ஆகும். பிரான்சில் இருக்கும் அனைத்துத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கை உறுதியாகப் பற்றி எடுத்துக் கொண்டு பிரான்சிலும் ஒரு பகுதியைக் கட்டியமைக்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.