World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French student mobilisation at an impasse

பிரான்ஸ்: பிரெஞ்சு மாணவர்களின் அணிதிரழ்வு இக்கட்டானநிலையில்
By Pierre Mabut
3 December 2007

Use this version to print | Send this link by email | Email the author

நவம்பர் 27ம் தேதி பிரான்ஸ் நெடுகிலும், ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட LRU (Libertés et responsabilités des universités) எனப்படும் பல்கலைக்கழகங்களின் உரிமைகளும் பொறுப்புக்களும் என்ற புதிய சட்டத்திற்கு எதிரான மாணவர்களின் எதிர்ப்பு பேரணிகள், பல வாரங்களாக இச்சட்டம் கைவிடப்படவேண்டும் என்று நடந்து வரும் போராட்டத்தில் ஒரு சரிவை பிரதிபலித்துள்ளது.

86 பல்கலைக்கழகங்களில் 43 இன்னமும் கடந்த வார தடைகள், தடுப்புக்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும்கூட, பாரிசில் நடந்த தெரு ஆர்ப்பாட்டங்களில் 4,000 பல்கலைக் கழக, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். Toulouse, Lyon, Lille, Nantes, Marseille, Tours என்று சில இடங்களிலும் ஒரு சில ஆயிரக்கணக்கான மாணவர்கள் சட்டம் கைவிடப்பட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். 200 உயர்நிலைப் பள்ளிகளில் (Lycées) வகுப்புக்கள் இன்னமும் தடைக்கு அல்லது முற்றுகைக்கு உள்ளாகி இருக்கின்றன; இவற்றில் 20 பாரிசில் உள்ளவை ஆகும்.

மாணவர்கள் பொது உயர்கல்வியை பாதுகாக்க நடத்தும் போராட்டம் வலுவிழந்துள்ளமை, இரயில் தொழிலாளர்கள் தங்கள் ஓய்வூதிய உரிமைகளுக்காக நடத்திய போராட்டத்தை தொழிற்சங்கங்களும் இடதுசாரி கட்சிகளும் காட்டிக் கொடுத்ததின் நேரடி விளைவு ஆகும். முழு ஓய்வூதியங்கள் பெறுவதற்கான தங்கள் உறுப்பினர்களுடைய பணிக் காலங்களை தற்போதைய 37.5ல் இருந்து 40 ஆண்டுகளுக்கு உயர்த்துவதற்கு கைமாறாக அனைத்து தொழிற்சங்கங்களும் முதலாளிகளுடன் "சலுகைகளுக்காக" பேச்சு வார்த்தைகளை நடத்திய பின்னர், இரயில் தொழிலாளர்களுக்கு வேலைக்கு மீண்டும் திரும்புவதைத் தவிர வேறு ஏதும் செய்ய முடியாத நிலைக்கு விடப்பட்டனர்.

UNEF (பிரெஞ்சு தேசிய மாணவர்கள் சங்கங்கம்) ஆல் தலைமை தாங்கப்படும் மாணவர் சங்கங்கள் LRU சட்டம் கைவிடப்படாமல் இருப்பதற்கான மாணவர் ஐக்கியம் உறுதிப்பாடு ஆகியவற்வறை கீழறுப்பதில் ஆரம்பத்தில் இருந்தே அதேபோன்ற பங்கைத்தான் ஆற்றின. ஏற்கனவே ஜூலை மாதம் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி முதுகலைப் பட்ட மாணவர்களுக்கான தேர்வுசெய்யும் செயற்பாடு ஏதும் கருத்திற் கொள்ளப்படவில்லை என்று கூறிய "உத்தரவாதங்களை" தான் பெற்ற பொழுது, அச்சட்டத்திற்கான எதிர்ப்பை ஜூலையில் UNEF ஏற்கனவே கைவிட்டிருந்தது.

புதிய பல்கலைக்கழக ஆண்டு தொடங்கியதில் இருந்து UNEF, கல்லூரி வளாகங்களில் இருக்கும் பொது மன்றங்களில் (Assemblées Générales -AG) இருந்து தனியே திரண்டிருந்த மாணவர்களின் மீது இறுக்கமான பிடியைக் கொள்ள முற்படுகிறது. UNEF, அரசாங்கத்திடம் இன்னமும் கூடுதலான உயர் கல்விக்காக பணத்திற்கு பேச்சு வார்த்தைகளை நடத்துகையில், மாணவர்களின் பொது மன்றங்கள் தேசிய மாணவர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகளை (National Student Co-ordinating Committee) தேர்ந்தெடுத்து அரசாங்கத்துடன் சட்டத்தை திருத்துவது பற்றி பேச்சுவார்த்தைகளை நடத்த மறுத்துள்ளன.

உயர் கல்வி மந்திரி Valérie Pécresse உடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் UNEF தலைவரும் சோசலிஸ்ட் கட்சியுடன் தொடர்புள்ள Bruno Juliard, நவம்பர் 27ம் தேதி, "பேச்சுவார்த்தைகளில் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக" கூறி பொது மன்றங்களை "கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார். "புதிய உத்தரவாதங்களும் பாதுகாப்புக்களும் மாணவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் உள்ளன" என்று அவர் கூறினார். நாடு முழுவதும் இருக்கும் பொது மன்றங்கள் இதை ஏற்கும் வகையில் ஜூலியா முனைப்புடன் செயல்படுகிறார். இரண்டு நாட்களுக்கு பின்னர் ஜூலியா "தடுப்புக்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் பெற இருக்கும் முன்னேற்றங்களை கருத்திற் கொண்டு வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

இப்படி கீழிறங்கி வருதல் என்பது ஐந்து ஆண்டு காலத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஒரு பில்லியன் யூரோக்கள் முதலீடு செய்யப்படும் என்று சார்க்கோசி கொடுத்துள்ள உறுதிமொழிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது; மேலும் EDF என்னும் மின் நிறுவனத்தில் அரசாங்கத்தின் பங்குகள் 3 சதவிகிதம் விற்கப்பட்டு மாணவர்களுக்கு உதவ அப்பணம் செலவழிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தேசிய மாணவர் ஒருங்கிணைப்புக் குழு (National Student Co-oridnating Committee) சட்டத்திற்கு எதிராக மிகுந்த போர்க்குணம் கொண்டதாக காட்டிக்கொண்டு, UNEF சட்டம் கைவிடப்பட வேண்டும் என்று அழைப்புவிட மறுத்து வருவதன் காரணமாக UNEF பிரதிநிதிகள் தன்னுடைய வாரந்திர கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதியையும் மறுத்துள்ளது.

ஆனால், வளாகங்களை முற்றுகையிடும் செயலுடன் இணைந்துள்ள இந்த உத்தி, மாணவர்களைப் பிரிப்பதற்கும் முன்முயற்சியை UNEF இடம் அளிப்பதற்கும்தான் பயன்படுகிறது; பிந்தைய அமைப்பு ஜனநாயகத்தின் காவல் அமைப்பு என்று தன்னைக் காட்டிக் கொள்ளுகிறது. அனைத்து பல்கலைக்கழகங்களையும் எப்படியும் முற்றுகைக்கு உட்படுத்துவது என்னும் பொது மன்றங்களின் முடிவுகள் பல நேரங்களிலும் மாணவர்களின் சிறுபான்மை முடிவை பிரதிபலிப்பதாக உள்ளன. பெரும்பாலான மாணவர்கள் இவ்விதத்தில் "முற்றுகையிடுதல்", "முற்றுகைக்கு எதிர்ப்பு" என்று LRU சட்டத்தை எதிர்ப்பதில் இரு விதமான பிரிவுகளில் உள்ளனர். UNEF ஆதரவிற்கு உட்பட்ட பல்கலைக் கழக அதிகாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி "இரகசிய" வாக்கெடுப்பு பிரச்சினை மீது நடத்தினர். இத்தகைய "இரகசிய வாக்கெடுப்புக்கள்" உண்மையில் மோசடி ஆகும்; ஏனெனில் மின்னணு முறை வாக்குகள் தனிப்பட்ட மாணவர்களின் விவரங்களையும் தெரிவித்துவிடும் என்று National Council of Liberty for Computer Data தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தை எப்படித் தோற்கடிப்பது, LRU விற்கு எதிராக இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கும் மாணவர்களை நம்பிக்கை கொள்ள வைத்துத் திரட்டுதல் என்பது எழுப்பப்படாத மைய அரசியல் பிரச்சினையாக உள்ளது. இந்த முன்னோக்கில்லாத நிலை FIDL (உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் சுயாதீன ஜனநாயகக் கட்டமைப்பு) ஐ சேர்ந்த உயர்நிலைப்பள்ளி மாணவர் தலைவர் Tristan Rouquier "சில தீவிர இடதுசாரிக் குழுக்கள், மாணவர் இயக்கத்தை நாசப்படுத்திய பின்னர், சுயாதீனமாக உயர்நிலைப்பள்ளி மாணவர்களை திரட்டுதலை ஆதாரமாய் கொள்ள முற்பட்டுள்ளன" என்று கண்டிக்க வைத்துள்ளது.

அரசாங்கத்திடம் UNEF சரணடைவதற்கு எதிராக தேசிய மாணவர் ஒருங்கிணைப்புக் குழு அரசியல் போராட்டம் நடத்த மறுத்த பிரச்சினை நவம்பர் 25 அன்று பெரிதாயிற்று.

Lille ல் நடைபெற்ற 300 பேராளர்கள் கொண்ட குழுவின் நான்காம் தேசியக் கூட்டம், UNEF (தக்க சான்றுகள் இல்லாமல் இருந்த) பிரதிநிதிகள் சிலருக்கு உள்ளே நுழைய அனுமதியை மறுத்தது. இதன் பின் 50 UNEF உறுப்பினர்கள் "கோபத்திலும், பெரும் திகைப்பிலும்" கூட்டத்தை விட்டு வெளியேறினர். ஒரு செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்: "மாணவர் சங்கங்கள் [UNEF போன்றவை] அங்கீகரிக்கப்படுதல் மீதாக முறியும் புள்ளி இருந்தது; மேலும் இந்த சங்கங்கள் மாணவர்களுக்கு நல்ல நிலைமையை... பெற்றுத்தரவேண்டி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தின என்பதன் மீதாகவும் முறிவு இருந்தது... இத்தகைய பதட்டம் மற்றும் வன்முறை இருக்கும் சூழ்நிலையை அனுமதிக்க கூடாது என்று UNEF கூறுகிறது; இது மாணவர் பிரதிநிதிகள் மற்றும் செய்தி ஊடகம் இரண்டிற்குமே பொருந்தும்." (Le Monde, 26 November)

LRU க்கு எதிராகப் போராட்டத்தை தொடர்வதற்கு ஒரு அரசியல் முன்னோக்கு இல்லாதது Lille இல் வாக்களிக்கப்பட்ட குழுவின் தீர்மானத்தில் வெளிப்பட்டது. குழுவின் போர்க்குண, அரசியல் சார்பற்ற எதிர்ப்புக்கள் பெரும்பாலும் SUD Étudiant (Student Solidarity Unity Democracy), LCR, மற்றும் அராஜகவாதக் குழுக்கள் ஆகியவற்றிற்ன் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தது.

SUD Étudiant, SUD-Rail Union இணைந்திருக்கும் கூட்டமைப்புடன்தான் பிணைந்துள்ளது; அதுதான் தொழிற்சங்க முக்கிய கூட்டமைப்புக்களில் ஒன்றாக இருந்து சரணடைந்ததில் பங்கு பெற்றது ஆகும்; குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் உள்ள CGT (General Confderation of Labour) அரசாங்கத்தின் வளைந்து கொடுக்காத "ஓய்வூதியச் சீர்திருத்தங்கள்" பிரச்சினையில் குறிப்பாக தாழ்ந்து நின்றது.

தேசிய மாணவர் ஒருங்கிணைப்பு குழுத் தீர்மானம், இரயில் தொழிலாளர்களின் போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டது பற்றிய ஒரு குறிப்பையோ அல்லது பகுப்பாய்வையோ கொடுக்கவில்லை.

உண்மையை தலைகீழாக மாற்றி வைத்த நிலையில் தீர்மானம் கூறுவதாவது: "எமது கோரிக்கைகளை ஒட்டி அரசாங்கத்தை பின்வாங்க வைத்து வெற்றி பெறுவது இயலும் ... சார்க்கோசி நமக்கு எதிரே பின்வாங்க மாட்டேன் என்று முயன்று கூறலாம்; அவரும் அவருடைய அரசாங்கமும் வேலைநிறுத்தங்களால் வலுவிழந்துள்ளன. ... இரயில் தொழிலாளர்கள் குறிப்பாக சார்க்கோசி மற்றும் அவருடைய கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவது முடியும் என்று காட்டினர்." இத்தகைய முன்னோக்குத்தான் LCR ன் தலைவரான ஒலிவியே பெசன்ஸநோவினாலும் கூறப்பட்டது; அவரும் உண்மையை பற்றிய தன்னுடைய கற்பனைகளை கொண்டுள்ளார். AFP செய்தி நிறுவனம் கொடுத்துள்ள தகவலின்படி, "அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு உள்ளது, அரசாங்கம் பின்வாங்கக்கூடும் என்பதும் உண்மையில் நடக்கக் கூடியதே" என்று அவர் நினைப்பதாகக் கூறியிருந்தது.

ஆயினும், பின்வாங்குதல் என்பது தொழிற்சங்கத் தலைவர்களால்தான் செய்யப்பட்டது; அதில் SUD-Rail இருந்தது; இது மாணவர்களை தனிமைப்படுத்தி வலுவிழக்கச் செய்துள்ளது.

SUD, LCR மற்றும் அராஜகவாதிகளால் ஆதரவு பெறப்பட்ட, தேசிய மாணவர் ஒருங்கிணைப்புக் குழுவை அதே திசையில் வழிநடத்திச்செல்கிறது. தீர்மானம் தொடர்கிறது: "பெரும் பொது மன்றங்கள் தடுப்புக்களுக்கு வாக்களிக்காமல் இருந்திருந்தால், மாணவர்களுக்கு வேலைநிறுத்தம் செய்வதற்கு ஒரு உண்மையான உரிமை இல்லாமற் போயிருக்கும். இடத்தை ஆக்கிரமிக்காவிட்டால், அவர்களுக்கு கூடும் உண்மையான உரிமை என்பது இல்லை. வாக்கெடுப்புக்கள் மூலம் வகுப்புக்கள் மீண்டும் தொடக்கப்படலாம் என்ற முயற்சியை எதிர்கொண்டுள்ள நிலையில், நாங்கள் பொதுமன்றங்கள்தான் அடுத்த நடவடிக்கையை முடிவெடுக்கும் முறைப்படியான தன்மையை கொண்டுள்ளன என்று கருதுகிறோம்." எனவே, "அரசாங்கம் உயர்கல்விக்காக மிகப் பெரிய அளவில் நிதியூட்ட வேண்டும்" ஆனால் இந்த அரசாங்கம்தான் அனைத்து சமூக நலன்களையும் தகர்த்து வருகிறது.

ஒரு சோசலிச அரசியல் முன்னோக்கு இல்லாத போர்க்குண எதிர்ப்பு மாணவர் போராட்டத்திற்கு ஒரு தேக்கத்தை கொண்டு வந்துள்ளது. முன்னோக்கு மற்றும் வரலாற்றின் பெரும் பிரச்சினைகள் ஆகியவை நல்ல முறையில் இயற்றப்பட வேண்டும். தேசிய மாணவர் ஒருங்கிணைப்புக் குழு வெளிப்படையான அரசியல் போராட்டத்தை சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்த முறையில் தொடக்குவதற்கு முடியாத, விரும்பாத நிலையில் உள்ளது; அதேபோல் மாணவர் சங்கங்களில் UNEF போன்ற தங்கள் கூட்டாளிகளை எதிர்க்கவும் முடியவில்லை. இதுதான் மையவாதத்தின் பங்கு ஆகும்; அது அனைத்து விதமான முற்போக்கு சொல் வனப்புரைக்கும் தலை வணங்கி மரியாதை செலுத்தும்; ஆனால் ஒவ்வொரு நெருக்கடியான கணத்திலும் பெரிய அதிகாரத்துவங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளும். பிரான்சில் இத்தகைய நிலைக்கு நீண்ட கால வரலாறு உள்ளது.

அரசியல் மற்றும் அரசியல் போக்குகள் மாணவர் இயக்கத்திற்கு வெளியேதான் இருக்க வேண்டும் என்று கூறப்படும் வாதம் வலதுசாரிகளால் முன்வைக்கப்படுகிறது; அவை மாணவர்கள் உத்தியோகபூர்வ அரசியலின் செல்வாக்கிற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்று விரும்புகின்றன; அதாவது, முதலாளித்துவ அரசியலுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். பல இடது போக்குகளின் குழப்பம், கூச்சல் இவற்றிற்கு இடையே நேர்மையான மாணவர்களும் இந்த கருத்தைத்தான் விரும்புவர்.

உண்மையில், இது ஒரு முக்கிய பிற்போக்குச் செயலாகும். அரசியலும் பல இடது போக்குகளின் வரலாறுகளும், மாணவர் இயக்கத்தில் இருப்பவை அனைத்தும், ஆராயப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு, சார்க்கோசியின் முழுத் திட்டத்தையும் தோற்கடிப்பதற்காக அனைத்து இளைஞர்கள், தொழிலாளர் வர்க்கப் பிரிவுகளினால் ஒரு முன்னோக்கு, திட்டம் ஆகியவற்றைக் காண்பதற்காக விவாதிக்கப்பட வேண்டும்; சார்க்கோசியின் திட்டத்திற்கு பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ முறையின் ஆதரவு உள்ளது; அவை பிரான்சை ஊக வணிகர்களின் சுவர்க்கமாக மாற்ற விரும்புகின்றன.

தங்கள் வரலாறு மற்றும் முன்னோக்கு ஆகியவை நெருக்கமாக ஆராயப்படக்கூடாது என விரும்பும் சில தலைவர்கள் ஐக்கியத்தை அப்படி ஆராய்தல் குலைத்துவிடும் என்று கூறுகின்றனர். ஆனால், கொள்கையற்ற, புரிந்து கொள்ளும் தன்மை இல்லாத ஐக்கியம் என்பது உண்மையான ஐக்கியமே அல்ல. இறுதியில் இது சிதைவு, தனிமைப்படுத்தப்படல், பலவீனம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.

"ஐக்கியம்" பற்றிய இதே வாதம், எப்படியும் ஐக்கியம் வேண்டும் எனக் கூறப்படுவது, முதல் வேலை ஒப்பந்தம் என்று இளைஞர்களுக்காக கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வந்தது; அதன் விளைவு UMP கன்சர்வேடிவ் அரசாங்கம் அதிகாரத்தில் இருந்து சார்க்கோசி பதவியை பெறுவதற்கு வழிவகுத்தது. ஜனாதிபதி சார்க்கோசியின் கோலிச ஆட்சி இன்று முற்றிலும் தொழிற்சங்கத் தலைவர்களையும் அவர்களுடைய நண்பர்களையும், "இடதிலும்", "தீவிர இடதிலும்" இருப்பவர்களைத்தான் நம்பியுள்ளது.

தேசிய மாணவர் ஒருங்கிணைப்புக் குழு, SUD Étudiant, LCR ஆகியவை எதிர்கொள்ளாத ஒரு அடிப்படை உண்மை என்னவென்றால், LRU அகற்றப்படுதல் என்பது, அரசாங்கத்தை கீழே இறக்கும் பிரச்சாரம் என்றும் அதன் தொழிற்சங்க அமைப்புக்கள், உத்தியோகபூர்வ இடது என்ற தூண்களைச் சரித்தல் என்றும் கருதப்படுவது ஆகும். UNEF அதிகாரத்துவத்திற்கு சவால் விட்டு மோதுவது என்பது (அதுவோ சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானது), அரசியல் அளவில் அத்துடன் உடைத்துக் கொண்டு ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கை தளமாகக் கொண்டு ஒரு மாற்றீட்டை செயல்படுத்துவது ஆகும்.

தொழிற்சங்கப் போர்க்குணமும் மிகத்தீவிர நடவடிக்கைகள், வனப்புரைகளும் தொழிலாள வர்க்கத்திடையே ஒரு சோசலிச நனவிற்கான போராட்டத்தை பதிலீடுசெய்துவிடா. மாணவர்களின் பங்கு மாணவர்களின் உரிமைகளைக் காப்பது மட்டும் அல்ல: தொழிலாளர் வர்க்கம் முழுவதையும் ஒரு போராட்டத்திற்காக திரட்டுவதற்கு வெளியே வேறு எந்த வகைப் போராட்டமும் மலட்டுத்தனமான எதிர்பாகத்தான் இருக்கும்.

போர், சமூகப் பிற்போக்குத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு நல்ல எதிர்காலத்திற்கான போராட்டம் என்பது சர்வதேச சோசலிசத்திற்கான அரசியல் போராட்டத்தை எடுத்தல் என்று அர்த்தமாகும். உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இளைஞர் அமைப்பான சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பில் இணையுமாறு மாணவர்களை கேட்டுக்கொள்கிறோம். மற்றும் பிரான்சிலும் ஐரோப்பாவிலும் ஒரு சோசலிச மாற்றீட்டைக் கட்டியமைப்பதில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுகிறோம்.