World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

West Bengal Left Front's pro-investor land grab results in deadly clashes

மேற்கு வங்காள இடதுசாரி முன்னணி முதலீட்டாளருக்கு ஆதரவாக நிலத்தைப் பறித்ததால் உயிரிழக்கும் மோதல்கள் ஏற்பட்டன

By Arun Kumar
26 January 2007

Use this version to print | Send this link by email | Email the author

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சார்பில் ஏராளமான விவசாய நிலப்பரப்புக்களை அபகரிக்கும் மேற்கு வங்காள இடதுசாரி அரசாங்கத்தின் கொள்கை, நந்திகிராம் பகுதியில் கடுமையான வன்முறை மோதல்களுக்கு வழிவகுத்து அதில் 12 பேர் வரை பலியானதை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இடதுசாரி முன்னணி அரசாங்கத்தால் 14,500 ஏக்கர்களை கொண்ட சிறப்பு பொருளாதார மண்டலமாக (SEZ) சிறப்புப் பெயரிடப்பட்ட நந்திகிராம் பகுதி இந்தோனேஷியாவின் முன்னாள் சர்வாதிகாரியான சுகார்ட்டோவோடு நெருக்கமான உறவுகளை கொண்டிருப்பதில் இழிபுகழ்பெற்ற இந்தோனேஷியாவின் கூட்டு நிறுவனங்களான சலீம் குழுமத்திடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது. தொழிற் கட்டமைப்பு வசதி திட்டங்கள் உள்ளன. சலீம் குழு SEZ ஒரு இரண்டாவது திட்டத்தை தீட்டியுள்ளது. அதற்காக கிழக்கு மிட்னாப்பூரில் மாநில அரசாங்கம் மேலும் 12,000 முதல் 15,000 ஏக்கர்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுத்தர வேண்டும்.

முன்மொழிவு செய்யப்பட்டுள்ள SEZ-க்காக நிலத்தை கையகப்படுத்தப்போவதாக உள்ளூர் ஹால்தியா மேம்பாட்டு ஆணையம் முன்அறிவிப்பு செய்தவுடன் ஜனவரி மாதத்துவக்கத்தில் நந்திகிராம் கிராமவாசிகள் கண்டனத்தை தெரிவித்தனர். இடதுசாரி முன்னணியோடு தொடர்புடைய கட்சிகளின் உள்ளூர் தொண்டர்கள் சிலரும் இந்தக் கண்டனத்தில் பங்கெடுத்துக்கொண்டனர், அது மிக விரைவாக ஒரு வெகுஜன இயக்கத்தின் தன்மையைப் பெற்றது. கிராம மக்கள் சாலைகளிலும் பாலங்களிலும் தடுப்புக்களை உருவாக்கினர் மற்றும் தடியடி பிரயோகம் செய்த மற்றும் துப்பாக்கி பிரயோகத்திலும் ஈடுபட்ட போலீசாருடன் மோதினர்.

கிராம மக்களுக்கும் இடதுசாரி முன்னணி அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற பங்காளியான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) உள்ளூர் பொறுப்பாளர்களுக்கும் இடையில் கோபாவேசமான மோதல்கள் ஏற்பட்டன மற்றும் உள்ளூர் CPI (M) அதிகாரிகளில் பலர் அந்தப் பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஜனவரி 4-ல் உள்ளூர் CPI (M) அலுவலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

ஜனவரி 6 - 7 நள்ளிரவில் வன்முறைகள் உச்சக்கட்டத்தை எட்டின. பத்திரிகை செய்திகளின்படி அப்போது 250 சிபிஎம் குண்டர்கள், அவர்களில் சிலர் போலீஸ் சீருடைகளில் இருந்தனர், அந்தப் பகுதியில் ஆளுங்கட்சியின் செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டுகின்ற வகையில் எதிர்த்தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தனர். அந்த எதிர்த்தாக்குதல் 7-ந் தேதி காலை 7. 30 மணிக்கு முடிவுக்கு வந்தது. அப்போது 10,000 கிராம மக்கள் கூட்டமாக திரண்டுவந்து CPI (M) காரியாளர்களை விரட்டியடித்தனர். என்றாலும், அதற்கு முந்திய இரவு நடைபெற்ற வன்முறையில் அரசாங்கத்தின் நிலம் கையகப்படுத்தல் திட்டத்தை எதிர்த்த 6 பேர்கள் மடிந்துவிட்டனர் மற்றும் 2 டஜனுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

நந்திகிராம் பகுதியில் ஏற்றத்தாழ ஒரு வாரம் நடைபெற்ற கிளர்ச்சியில் பல CPI (M) உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். CPI (M) வெளியிட்ட ஒரு அறிக்கை 6 பேர் மடிந்ததாக குறிப்பிட்டது.

ஜனவரி 6-7 இரவில் நடைபெற்ற மோதல்களின்போது போலீசார் எவரும் அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். போலீசார் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று அரசாங்க அதிகாரிகள் அல்லது செல்வாக்குமிக்க CPI (M) தலைவர்கள் கட்டளையிட்டிருக்கலாம் என்று கருதுவதற்கு வலுவான அடிப்படை இருக்கிறது.

இதற்கு முன்னர், வலதுசாரி மற்றும் இடதுசாரி அணிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் எதிரிகள் மீது, வன்முறை தந்திரோபாயங்களை பயன்படுத்தி இருக்கின்றனர். மேற்கு வங்காள போலீஸ் அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டதால் அவ்வாறு செயல்பட்டார்கள். இந்தியாவின் மக்கள் தொகையில் அதிகமான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐந்து மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்காளத்தில் சிபிஐ(எம்) தலைமையிலான இடது முன்னணி 1977 முதல் ஆட்சி செய்து வருகிறது.

வலதுசாரி திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் நக்சல்பாரிகள் (மாவோயிஸ்டுகள்) உட்பட "வெளியாரால்" தூண்டிவிடப்பட்ட ஒரு ஆத்திரமூட்டல் காரணமாக நந்திகிராம் பகுதியில் கண்டனப் பேரணிகள் நடைபெற்றதாக ஆரம்பத்தில் சிபிஐ(எம்) தலைமை கூறினாலும் அதை பின்னர் மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விவசாய முன்னணியின் முன்னணித் தலைவரான சிபிஐ(எம்)-ன் மத்திய குழுவின் ஒரு மூத்த உறுப்பினரான பிணாய் கோனார், கட்சிக்காரியாளர்களை நந்திகிராம் பகுதி கண்டன இயக்கத்தை எதிர்கொள்ளவும் எதிர்க்கின்ற கிராம மக்களை "துப்பாக்கிக்கு துப்பாக்கி மற்றும் லத்திக்கு லத்தி" என்று சமாளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஜனவரி 6-7-ல் நடைபெற்ற சம்பவங்கள் வருந்தத்தக்கவை என்று மேற்கு வங்காள முதலமைச்சர் புத்ததேவ் பட்டா சார்ஜி முதலில் கருத்துத் தெரிவித்தார். ஆனால் அவர் போலீசார் அல்லது மோதல்களில் சம்மந்தப்பட்டிருந்த CPM கட்சி ஊழியர்களை கண்டிக்கவில்லை. அல்லது மடிந்துவிட்டவர்கள் குடும்பத்திற்காக எந்த மன்னிப்பும் அனுதாபமும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் கட்சியின் முன்னணி அரசாங்க மற்றும் கட்சி அதிகாரிகளும் CPI (M) மாநில செயலாளர் பீமன்போஸூம், மாகாண அதிகாரிகள் தங்கள் நிலத்தைப் பறிக்க நடவடிக்கை மேற்கொண்டனர் என்று கூறியதில் எந்த உண்மையும் இல்லை என்று குறிப்பிட்டனர். பொய்களை பரப்புவதன் மூலம் வெளியில் இருப்பவர்கள் தூண்டிவிட்டதுதான் இந்த எதிர்ப்புக்கள் என்று குற்றம் சாட்டினார்.

இரண்டு நாட்கள் கழித்து பட்டாசார்ஜி ஒரு வேறுபட்ட நிலையைக் கடைப்பிடித்தார். "அரசாங்கம் ஒரு தவறை புரிந்துவிட்டதாக" அறிவித்தார். "அடுத்து நடந்த வன்முறைகளுக்கு அது பிரதான காரணமாகும்" என்று கூறியதுடன் ஹால்தியா மேம்பாட்டு ஆணையம் தந்த நிலம் கையகப்படுத்தல் அறிக்கையை "கிழித்தெறியுமாறு" மாவட்ட மஜிஸ்திரேட்டுக்கு (கலெக்டர்) கட்டளையிட்டார். "மற்றும் சிறிது காலத்திற்கு அமைதியாக விட்டுவிடும்படி" குறிப்பிட்டார்.

கொந்தளிப்பை அடக்குவதற்கு ஒரு அரசியல் நடைமுறையை தாம் துவக்கியிருப்பதாக பட்டா சார்ஜி சொன்னார் மற்றும் சம்மந்தப்பட்ட "ஒவ்வொருவரது நம்பிக்கையையும் பெறுவதற்கு" முன்னர் சலீம் குழுமத்திற்காக மாநில அரசாங்கம் எவருடைய நிலத்தையும் கையகப்படுத்தாது என்று உறுதியளித்தார்.

ஆனால் இடதுசாரி முன்னணி அரசாங்கம் முதலீட்டாளருக்கு மலிவான நிலத்தையும் வரி சலுகைகளையும் இதர சலுகைகளையும் வழங்குவது மூலமும் தொழிலாளர்களது தீவிரவாதத்தை மட்டுப்படுத்துதல் மூலமும் மேற்கு வங்காளத்தை "தொழில்மயமாக்குவதற்கான" தனது உந்தலுடன் முன்னேறும் என்றும் கூட அவர் தெளிவுபடுத்தினார். இப்படி செய்யாவிட்டால் "மேற்கு வங்காளம் பின்னுக்கு தள்ளப்பட்டுவிடும்" என்று பட்டாச்சார்ஜி சொன்னார்.

பட்டாச்சார்ஜி தற்போது மேற்கொண்டுள்ள முயற்சி ஒரு பெரிய அரசியல் நெருக்கடியை தடுத்து நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டது. CPI(M) நவீன தாராளவாத பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கு வங்காளத்தின் மீது திணித்து வருகின்ற நேரத்தில் மத்தியில் ஒரு வலதுசாரி காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை தாங்கி நின்று கொண்டிருக்கிறது. அப்படி இருந்தும் அது தன்னை ஒரு மார்க்சிச கட்சி என்று காட்டிக்கொள்கிறது மற்றும் இந்தியாவின் உழைக்கும் மக்களுக்காக வாதாடுவதாக கூறிக்கொள்கிறது.

2006 இறுதி மாதங்களில் SEZ பிரச்சினை நாடு முழுவதிலும் பொதுமக்களது கவலைக்குரிய விவகாரமாக மாறிவிட்டது. இடதுசாரி முன்னணியின் இதர பெரும் கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பார்வர்டு பிளாக்கும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியும் பகிரங்கமாக மேற்கு வங்காள அரசின் அவசர நடவடிக்கைகள் குறித்து சந்தேகங்களை எழுப்பின. பெருவர்த்தக நிறுவனங்கள் சார்பில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் தங்களுக்கு தெரியாமல் நடந்துவிட்டதாக குறிப்பிட்டன. முதலாளிகளின் கட்டளைகளை செயல்படுத்துவதற்கு CPI(M) எந்த அளவு தயாராக உள்ளது என்பதை நந்திகிராம் சம்பவங்கள் எளிதாக தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அதற்குப்பின்னர் அவர்கள் மிகவும் அச்ச உணர்வோடு அதே நடவடிக்கைகளை கண்டிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. மேற்கு வங்காள அரசாங்கம் வெளிப்படையாக நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கைகளை கடைபிடிக்கவில்லை. நிலத்தை கையகப்படுத்தும்போது அதன் சொந்தக்காரர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் மாற்று வீட்டுவசதி உறுதிமொழி தரப்படவில்லை.

இதைவிட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி 14 முன்னணி அறிவாளிகளும் அவர்களில் பலர் சமூகப் பணியாளர்கள் ஒரு பகிரங்கக் கடிதம் எழுதி அரசாங்கத்தை கடுமையாக கண்டித்தனர். இவர்களில் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களான ரோமிலா தாபர் மற்றும் ஸ்மித் சர்கார் ஆகியோர் நீண்டகாலமாக இடதுசாரி முன்னணியோடு சம்மந்தப்பட்டவர்கள் ஆவர்.

"தொழிற்துறை பயன்பாட்டிற்காக நில ஆர்ஜிதம் செய்யும் மாநில அரசாங்கத்தின் கொள்கையின் ஒரு விளைவாக மேற்கு வங்காள நந்திகிராம் பகுதியில் நடைபெறுகின்ற வன்முறை செயல்களின் அளவுகள் பெருகிக்கொண்டு வருவது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறோம். கிராமப் பகுதிகளில் கொந்தளிப்புக்கள் வளர்ந்து வருவது குறித்து கொல்கத்தா தொலைக்காட்சிகள் செய்திகளை தருகின்றன. இதே அளவிற்கு இந்தக் கொள்கை நிறைவேற்றப்பட்டால் இதே நிலவரம் மாநிலம் முழுவதும் ஏற்படலாம். மனித உரிமைகள் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பற்றி கவலைப்படாமல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று அந்த பகிரங்கக் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

நந்திகிராம் பகுதியில் ஏற்பட்ட ஆழமான ஆத்திரத்தால் அதிர்ச்சி அடைந்த CPI (M) தொழிற்துறை கொள்கையை முதலீட்டாளர்கள் ஈடுபடுவதற்கு முன்னர் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆறு வாரங்கள் ஒரு பிரச்சார இயக்கத்தை CPI (M) தொடக்கியது.

இந்த இயக்கத்தின் ஓர் அங்கமாக விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தவும் பெருமுதலாளிகளை ஈர்ப்பதற்காக குத்தகைதாரர்களின் வாழ்வுரிமைகளை பறிப்பதை எதிர்க்கின்ற அனைவரும் வளர்ச்சித் திட்டத்திற்கு எதிரானவர்கள் என்று கரும்புள்ளி குத்துவதற்கு CPI (M) முயன்று வருகிறது. நக்சல்பாரிக் குழுக்கள் வகுப்புவாதக் கட்சிகள் மற்றும் இடதுசாரி முன்னணிக்கு எதிரான வலதுசாரி அணியினர் ஆகியோருக்கிடையில் உருவாகிவிட்ட இரகசிய முறைகேடான கூட்டணியின் நிழல் யுத்தம்தான் நந்திகிராம் பகுதி விவசாயிகளின் நடவடிக்கைகள் என்று அது கூறியது.

நிச்சயமாக வலதுசாரி சக்திகள் மேற்கு வங்காள தொழிலாளர்களது ஆத்திரத்தையும் கவலைகளையும் தங்கள் பிற்போக்குத்தனமான குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். டிசம்பரில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 25 நாள் உண்ணாவிரதத்தை நடத்தினார். சிங்கூருக்கு அருகே டாட்டா கார் தொழிற்கூடம் ஒரு புதிய கார் தயாரிப்பு ஆலையை கட்டுவதற்கு 1,000 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலத்தை கையகப்படுத்தி அந்த நிறுவனத்திடம் ஒப்படைப்பதை எதிர்ப்பதற்காக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் இந்து பேரினவாத பாரதீய ஜனதாக் கட்சி வலுவான ஆதரவை மம்தா பானர்ஜிக்கு வழங்கியது. 1998 முதல் 2004 வரை தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி அரசாங்கம் இந்தியாவை ஆட்சி புரிந்த நேரத்தில் அக்கட்சி மேலாதிக்க பங்காளியாக செயல்பட்டது. BJP-யும் அதன் திரிணாமுல் காங்கிரஸ் ஒரிஸா கூட்டாளிகளான பிஜூ ஜனதா தளமும், ஒரிஸாவில் கலிங்கா நகர் எஃகு நிறுவனம் கட்டிய நேரத்தில் தங்களது நிலத்தை அபகரித்துக் கொண்டதை எதிர்த்து மலைவாழ் மக்கள் மேற்கொண்ட இயக்கத்தை கொடூரமாக அடக்கி ஒடுக்கினர். ("இந்தியா: போலீஸ் துப்பாக்கி பிரயோகத்தில் 12 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்" என்ற கட்டுரையை காண்க)

நந்திகிராம் மற்றும் இதர பகுதிகளில் மேற்கு வங்காளம் குறி வைத்துள்ள நிலத்தை கையகப்படுத்துவதற்கான பகுதிகளை சார்ந்த மக்கள் CPI (M) தலைமையிலான இடதுசாரி முன்னணியின் கூற்றுக்களை நம்புவதற்கு தயாராக இல்லை. கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு, வீடுகளுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படும் தங்களது வாழ்வு ஆதாரத்தை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்ற கூற்றை பாதிக்கப்பட்ட மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. அனைவர்களது நலன்களையும் கருத்தில் கொண்டு தான் தொழில்மயமாக்கும் கொள்கை கடைபிடிக்கப்படுகிறது என்ற CPI (M)-ன் வாதத்தையும் ஏற்க அந்த மக்கள் தயாராக இல்லை.

அரசு தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களைப்போல் தற்போது முதலாளித்துவவாதிகள் மேற்கொண்டிருக்கும் மூலோபாயம் முதலீடுகளை வலுப்படுத்துவதற்காகவும் வளப்படுத்துவதற்காகவும் பூகோள சந்தைகளை வென்றெடுக்கவும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து இந்தியாவில் ஏராளமாகவும் பரவலாகவும் கிடைக்கும் மலிவுக்கூலி தொழிலாளர்களை சுரண்டுவதும் ஆகும்.

காங்கிரஸ் BJP, மாநிலங்களிலும் மத்தியிலும் கூட்டணி அரசாங்கம் அமைத்தது போன்று அமைக்கப்பட்ட மேற்கு வங்காள இடதுசாரி கூட்டணி அரசாங்கம் பொதுச்சேவைகளையும், பொதுத்துறை பணிகளையும் வெட்டியது. முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தொழிலாளர்களது உரிமைகளை கட்டுப்படுத்தியது. தற்போது, பிரிட்டன் காலனி ஆட்சி கால சட்டங்களை பயன்படுத்தி ஏராளமான நிலத்தை கையகப்படுத்தி இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தருகிறது. மற்றும் அரசாங்கம் "கலவர பகுதிகள்" என்று அறிவிக்கின்ற இடங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் கண்டனப் பேரணிகள் நடத்துவதற்கு தடைவிதித்து வருகிறது.

நந்திகிராம் பகுதியில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கையை தாமதப்படுத்துவது என்ற இடதுசாரி முன்னணி அரசாங்கத்தின் முடிவை இந்தியாவின் பெருநிறுவன ஊடகங்கள் பாராட்டியுள்ளன. அண்மையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம் இயற்றியுள்ள SEZ சட்டத்தின் கீழ் பெருவர்த்தக நிறுவனங்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு கிராமப்புற இந்தியாவை வளர்ந்து வருகின்ற எதிர்ப்பு குறித்து ஆளும் வர்க்கத்திற்குள் நிலவுகின்ற கவலைகளை, இந்த ஊடகச்செய்திகள் எதிரொலிக்கின்றன. மேற்கு வங்காள நிலவரம் பற்றி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் கிராமப்புற மக்களிடையே நிலவுகின்ற கவலைகளை எதிரொலிக்கின்ற வகையில் இவை அமைந்துள்ளன.

தனது தொழில்மயமாக்கும் கொள்கையால் ஏற்படுகின்ற மனிதநேய பாதிப்புக்களை அலட்சியப்படுத்திவிடக்கூடாது என்று பட்டாச்சார்ஜியை எச்சரித்து வலதுசாரி எக்ஸ்பிரஸ் ஜனவரி 12-ல் எழுதியுள்ள தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: "ஒரு தொலைநோக்கை முன்னெடுத்து வைப்பது மட்டும் போதுமானதல்ல எவரது நன்மைக்கு அந்த முன்னோக்கு திட்டம் கொண்டு வரப்படுகிறதோ அவர்களும் அதை பகிர்ந்துகொள்ள வேண்டும். முதலீட்டாளர்கள் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல் அத்திட்டத்தால் பாதிக்கப்படக்கூடும் என்று கருதப்படுபவர்கள் கண்ணோட்டத்திலும் அதைப் பார்க்க வேண்டும்."