World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Who runs Germany?

The intersection of politics and business interests

ஜேர்மனியை யார் ஆட்சிபுரிகின்றனர்?

அரசியலும் வணிக நலன்களும் இணைந்து செயல்படல்

By Dietmar Henning
1 February 2007

Use this version to print | Send this link by email | Email the author

"பணம் உலகை ஆட்டிப்படைக்கிறது" என்பது நன்கு அறியப்பட்டுள்ள பழமொழியாகும். ஆனால் பெரு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளும் அரசியல் வாழ்வில் கொண்டுள்ள சரியான பங்கு பல நேரமும், "தங்கள் மனச்சாட்சிக்கு மட்டும் கட்டுப்பட்ட", மக்களுக்கு "பொறுப்புகூறக் கடமைப்பட்ட", மக்கள் பிரதிநிதிகளின் சுதந்திரம்" மற்றும் மக்கள்தான் "அரசியலில் தலையாய இறைமையாளர்கள் ஆவர்" என்னும் குறிப்புக்களின் பின்னே மறைந்துள்ளன.

செய்தியாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய தகவல்களும் ஆய்வுகளும், மிகவும் சரியான முறையில், ஜேர்மனியை எப்படி நிதிய நலன்கள் ஆளுகின்றன, எத்தகைய நடப்புக்கள் ஆபத்திற்கு உட்பட்டுள்ளன என்பதை தெளிவாகக் காட்டியுள்ளன. அரசியலிலும் வணிகத்திலும் ஊழலும், பாரபட்சமும் உள்ளன என்ற உண்மை ஒன்றும் புதிதல்ல; ஆனால் புதிய தகவல்கள் எந்த அளவிற்கு வணிக நலன்கள் அரசியல் கொள்கையை நிர்ணயிக்கின்றன என்பது பற்றி நன்கு புலப்படுத்துகின்றன.

உதாரணமாக ஜேர்மனியின் தலைநகரான பேர்லினில் பல முக்கிய அரசியல்வாதிகள் ஏனைய பல ஏராளமான மேலதிக வேலைகள் மூலம் கணிசமான பணத்தையும் சட்டபூர்வமாக சம்பாதிக்க முடிகிறது; ஆயினும்கூட அவற்றை பற்றி விவாதிக்க அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதைத்தவிர, அரசியல்வாதிகள் தங்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து வணிகத்தில் முக்கியமான பதவிகளுக்கும் அடிக்கடி மாற்றிக் கொள்கின்றனர்.

முன்னாள் அதிபரான ஹெகார்ட் ஷ்ரோடர் (சமூக ஜனநாயக கட்சி-SPD) இதற்கு உயரிய உதாரணமாவார். 2005ம் ஆண்டு அதிபர் பதவிக்காலம் முடிந்த பின்னர் அவர் உடனடியாக ஜேர்மன்-ரஷ்ய Baltic Sea எரிவாயுக் குழாய்த்திட்ட நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்; இது ரஷ்ய எரிபொருள் நிறுவனமான Gazprom இன் பொறுப்பில் உள்ளது. இதைத்தவிர, ஷ்ரோடர் சில நல்ல ஊதியங்கள் கிடைக்கக் கூடிய பதவிகளையும் (ஸ்விஸ் பதிப்பாளர் Ringier, மற்றும் Ruhr Coal Company ஆகியவற்றிற்கு ஆலோசகராகவும்) தன்னுடைய முன்னாள் பொருளாதார மந்திரி வெயனர் முல்லருடன் இணைந்து வகிக்கிறார்.

ஷ்ரோடருடைய கருவூலச் செயலாளராக இருந்த Caio Koch Wester, ஜேர்மனியின் மிகப்பெரிய வங்கியான Deutsche Bank இற்கு அதிகாரியாக மாறினார். கருவூலச் செயலாளராக இவர் சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கத்தில் (1998-2005) இருந்தபோது, ரஷ்ய கடன்களை கடன், நிதிய அமைப்புக்களுக்கு விற்பதில் (கணிசமானளவு Deutsche Bank உட்பட) Koch Weser பொறுப்புக் கொண்டிருந்தார். முன்னாள் பொருளாதார மந்திரி Wolfgang Clement (SPD), RWE எரிபொருள் குழு மற்றும் Dussmann group இல் அதிகாரியாக பொறுப்பு ஏற்றுள்ளார். அதிபர் அலுவலகத்தில் அரசதுறைக்கு பொறுப்பாக இருந்த Hans Martin Bury (SPD), Lehmann Brothers வங்கியில் நிர்வாக இயக்குனராக பொறுப்பு ஏற்றுள்ளார்.

பசுமைக் கட்சியின் பாராளுமன்ற பிரதிநிதியும் Hesse மாநிலத்தில் கட்சிக்குழுவின் தலைவருமான Matthias Berninger, தன்னுடைய பதவிகளை பெப்ருவரி மாதம் இராஜிநாமா செய்துவிட்டு Masterfood (Mars, Ballisto, Snickers bars தயாரிப்பாளர்கள்) என்னும் கால்நடைத்தீவனம் மற்றும் சாக்லேட் உற்பத்தி நிறுவனத்தில் முக்கிய பதவிக்கு மாறினார். இந்தப்பட்டியல் நீண்டுகொண்டு செல்கின்றது.

சமீப காலத்தில் ஒரு திட்டமிட்டமுறையில் ஜேர்மனியில் வணிக, அரசியல் நலன்கள் பாராளுமன்ற உறுப்பினர்களூடாக செல்வாக்கு செலுத்தும்முறை ஒன்றினூடாக (lobbying) கணிசமாக பெருகியுள்ளது. இது அரசியல் அதிகாரத்தின் மையங்களை பெரு வணிகத்திற்கு நேரடித் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செல்வாக்கை பயன்படுத்தும்முறை கடந்த வருடங்களாக எண்ணிக்கையளவில் அதிகரித்துள்ளது. செய்தி ஒலிபரப்பு வர்ணனையாளர் Joachim Wagner, 2003 Die Zeit பத்திரிகையில் எழுதியுள்ளபடி இச் செல்வாக்கை செலுத்துபவர்களின் ஆதிக்கம் "கூட்டரசு குடியரசின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு" கொண்டுள்ளனர் என்று எழுதியுள்ளார். ஜேர்மனிய DAX பங்குசந்தை குறியீட்டில் பிரதிபலிக்கப்பட்டுள்ள, கிட்டத்தட்ட ஜேர்மனியின் 30 மிகப்பெரிய வணிக நிறுவனங்களும் பேர்லினில் தங்கள் செல்வாக்கை படரவிடும் அலுவலங்களை கொண்டுள்ளன.

ஏறத்தாழ 2000 செல்வாக்கு கூட்டமைப்புக்கள் தற்பொழுது ஜேர்மனிய பாராளுமன்றத்தில் பதிவு செய்துள்ளன; மற்ற உரிமைகளுடன் இவற்றிற்கு பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கு பெறும் உரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு செல்வாக்காளருக்கு ஐந்து பிரதிநிதிகள் அல்லது பாராளுமன்ற கட்சி குழுவின் தலைவர் ஒருவரோ உறுதியளித்தால், அவருக்கு "பாராளுமன்ற அடையாள ஆவணம்" வழங்கப்படும்; இதன் மூலம் அவர் பாராளுமன்றம் மற்றும் பிரதிநிதிகள் அலுவலகங்களில் நுழைவதற்கு உரிமை பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 4,500 வணிகப் பிரதிநிதிகள் பேர்லினில் இத்தகைய அடையாள ஆவணங்களை கொண்டுள்ளனர்; ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் 7 செல்வாக்காளர்கள் என்ற கணக்கில் இது உள்ளது.

Die Zeit பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில், இந்த செல்வாக்காளர்களில் கணிசமான பகுதியினர் உண்மையில் முன்னாள் மந்திரிகள், அரசாங்க செயலாளர்கள், அலுவலக மேலாளர்கள், செய்தித்தொடர்பாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் அடங்கியுள்ளதாகவும், இவர்கள் தங்களுடைய புதிய எஜமானர்களுக்காக பணியில் இருப்பவர்களுடன் உள்ள தொடர்பை பயன்படுத்திக்கொள்ளுகின்றனர் என்றும் தெரிவிக்கிறது.

TUI (போக்குவரத்து நிறுவனம்) பிரதிநிதி Wof-Dieter Zumpfort பெருமிதத்துடன் தானும் தன்னுடைய உடன் செல்வாக்காளர்களும் அதிகாரிகள் கார்களுக்கு இலவச வாகனங்களுக்கு வரிகள் குறைப்பதில் வெற்றியடைந்தது பற்றி குறிப்பிட்டதாக Die Zeit தகவல் கொடுத்துள்ளது; அதே நேரத்தில் பெரிய அளவில் கார் தொழில் இருக்கும் எல்லா ஜேர்மனிய மாநிலங்களில் இருக்கும் பிரதம மந்திரிகளுக்கும் பாராட்டை அவர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளது; பவேரியாவில் Edmund Stoiber (CSU), பாடன் வூர்ட்டம்பேர்க்கில் Erwin Teufel (CDU), ரைன்லாந்து-பாலடினேட்டில் உள்ள Kurt Beck (SPD), லோயர் சாக்சனியில் இருக்கும் Sigmar Gabriel (SPD) தற்பொழுது சுற்றுச் சூழல் மந்திரியாகவும் இருப்பவர் என்று பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

செல்வாக்காளர்கள் சட்டங்களைத் தடுப்பது மட்டும் அல்லாமல், பல நேரமும் அவற்றை வரையவும் செய்கிறார்கள். "சில நேரங்களில் செல்வாக்காளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிடப்பட்டுள்ள சட்டங்களின் முன்வரைவை பெறுவதற்கு முன்பே, அவற்றைப் பெறுகின்றனர்." என்று வாக்னர் எழுதியுள்ளார். "எனவே டெலிகாமின் பிரதிநிதி Maldaner முன்வரைவுச் சட்டங்களுக்கே தன்னுடைய நிறுவனத்தின் சார்பில் மாற்றீட்டு ஆலோசனைகளை தருவது அசாதாரணமானதல்ல என்றும், இவை பின்னர் அமைச்சரகங்களுக்கும் பாராளுமன்ற வல்லுனர் குழுக்களுக்கும் கொடுக்கப்படுகின்றன." இத்தகைய நடைமுறைகளில் இது தனியான ஒன்று மட்டுமல்ல.

வழக்குரைஞரும், சுதந்திரச் செல்வாக்காளருமான Anja Hollmann "சுகாதாரத் துறையில்" பணிபுரிகிறார். ஒரு குறிப்பிட்ட கட்டணத்திற்காக அவர் அமைச்சரகங்கள், பாராளுமன்றக் குழுக்கள் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் இருக்கும் முக்கியமான 50 அல்லது 100 பங்காளிகளின் பட்டியலை ஜேர்மனியில் சுகாதாரத் துறையில் முக்கியமாக இருக்கும் நிறுவனங்களுக்கு கொடுப்பார். "விருப்பப்பட்டால், இவ்வம்மையார் உணவுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கும் (ஒரு கட்டணத்திற்கு) ஏற்பாடும் செய்வார்."

பெருநிறுவனங்களின் செல்வாக்குக்காரர்கள் குறிப்பிடத்தக்க வகையில் சுகாதரத் துறையில் காணப்படுகின்றனர். இது மற்ற புள்ளிவிவரங்களில் இருந்தும் தெளிவாகிறது. அண்மையில் Federal Audit Office, கூட்டாட்சி தணிக்கை அலுவலகம் தங்கள் வணிக ஆதரவாளர்கள் பெயரை வெளியிட விருப்பம் காட்டுவதில்லை என்று குறைகூறியுள்ளது. ஆகஸ்ட் 2003க்கும் 2004 கடைசிக்கும் இடையே ஜேர்மனிய அரசாங்க அமைச்சரகங்கள் 55 மில்லியன் யூரோக்களுக்கும் மேலாக ஆதரவு நிறுவனங்களின் நன்கொடைகளை பெற்றுள்ளன.

44.5 மில்லியன் யூரோ என்ற தொகையுடன், சுகாதாரத்துறை அமைச்சரகம் மிக அதிக பங்கை வசூலித்தது! ஜேர்மனிய சட்டத்தின்படி அத்தகைய நன்கொடைகள், அவை "சிறுவர்கள், இளம் வயதினர் புகைக்கூடாது என்னும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு" என்றாலும் (3.6 யூரோ மில்லியன்), அமைச்சரகத்தில் நடக்கும் விருந்து என்றாலும் பதிவு செய்யப்பட வேண்டும். மிகவும் தாராளமாக நன்கொடை அளித்தவர்களுடைய பெயர்கள் இரகசியமாகத்தான் உள்ளன.

இதே காலக்கட்டத்தில் ஐரோப்பிய ஆயுதங்கள் மற்றும் விண்வெளி நிறுவனமான EADS ஜேர்மனிய படைகளுக்கும், பாதுகாப்பு அமைச்சரகத்திற்கும் 87,000 யூரோக்கள் நன்கொடை கொடுத்துள்ளதாக Stern இதழ் கண்டுபிடித்துள்ளது. ஒரு முறை 15,000 யூரோக்கள் விமானப் படையின் 50ஆவது ஆண்டு நிறைவு விழாவிற்காக நன்கொடையாக தரப்பட்டது; மற்ற நேரங்களில் ஒரு சில ஆயிரம் யூரோக்கள் "வரவேற்புகள், கொண்டாட்ட நடனங்கள், அதிகாரிகள், ஜேர்மனிய படைகள், மற்றும் அவர்களின் விருந்தாளிகளின்" உணவுக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டன. EADS இன் செய்தித் தொடர்பாளர் Michael Hauger இத்தகைய அற்ப தொகைகள் பற்றி பரபரப்பு காட்டுப்படுவது பற்றித் தனக்கு புரியவில்லை என்று கூறினார். "20 நிகழ்ச்சிகளுக்கு 87,000 யூரோக்கள் என்பது ஒரு நிகழ்ச்சிக்கு 4,350 யூரோக்கள் என்று ஆகிறது. இதனால் கொள்கையை அல்லது அரசியல்வாதிகளை செல்வாக்கிற்கு உட்படுத்தப்படமுடியும் என்ற பேச்சிற்கே இடமில்லை" என்று அவர் முடிவாக கூறினார். நிகழ்ச்சிக்கு நன்கொடை என்பது "முற்றிலும் சாதாரண நடைமுறை, இதில் இரகசியம் ஒன்றுமில்லை என்றும் அவர் கூறினார்.

ஜேர்மனிய அமைச்சரகங்களில் வணிகப் பிரதிநிதிகள்

அரசியல் அம்பலங்கள் பற்றி ஜேர்மனிய தொலைக்காட்சி ஒன்று சமீபத்தில் ஒரு புதிய வகை செல்வாக்குமுறையை ஒளிபரப்பியது; Monitor தொலைக்காட்சி நிகழ்ச்சியுடைய கருத்தின்படி வணிக முயற்சிகளின் திறமைக்கு இதைவிட எடுத்துக் காட்டு சிறந்து இருக்க முடியாது. "செல்வாக்காளர்கள் தங்கள் எஜமானர்களின் நலன்களுக்காக கொள்கையின்மீது செல்வாக்கை படர முற்படுகின்றனர்... அதற்காக அவர்கள் அமைச்சரகங்களுக்கு செல்கின்றனர். சில செல்வாக்காளர்கள் செல்ல வேண்டியதில்லை; ஏனெனில் அவர்கள் ஏற்கனவே அங்கு உள்ளனர்."

Monitor உடைய கருத்தின்படி மிக முக்கியமான ஜேர்மனிய நிறுவனங்களில் உள்ள "தற்காலிக ஊழியர்கள்" அனைத்து அரசாங்க அமைச்சரகங்களிலும் தீவிரமாக செயல்படுகின்றனர். அவர்களில் குறைந்தது 100 பேராவது பாராளுமன்ற அதிகாரிகள் இருக்கும் அலுவலகங்கள் அல்லது அதற்கு அருகில் உட்கார்ந்து கொண்டு, சட்டமுன்வரைவுகளை தயார் செய்தல், இரகசிய ஆவணங்களை ஒற்றுப் பார்த்தல், சில நேரம் முக்கியமான அரசாங்கப் பணிகளை செய்தல் போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர்.

"Simens, DaimlerChrysler, Lufthansa அல்லது Deutsche Bank, என்று கிட்டத்தட்ட பெரிய நிறுவனங்கள் அனைத்துமே அங்கு உள்ளன" என்று Monitor தெரிவிக்கிறது; பின் பல விஷயங்களிலும் விரிவான தகவல்களையும் கொடுக்கிறது. உதாரணமாக Dailmer Chrysler ஊழியர் ஒருவர் ஜேர்மனிய போக்குவரத்து அமைச்சரகத்தில் வேலைபார்க்கிறார். 2002ம் ஆண்டு அமைச்சரகத்திலேயே அவருக்கு ஒரு மேசை இருந்தது; களிப்புடன் அவர் உள் ஆவணங்களையெல்லாம் பார்க்கமுடியும்; "இதை வீட்டிற்கும் எடுத்துச் சென்றிருப்பார்."

இந்த Daimler Chrysler நபர் அவருடைய நிறுவனத்தின் பெருநிறுவன மூலோபாயப் பிரிவு மற்றும் போக்குவரத்து கொள்கை பிரிவின் இயக்குனர் ஆவார்; இவர் ஏப்ரல் மற்றும் மே 2002 இல் ஜேர்மனிய போக்குவரத்துத்துறையில் இருந்தார்; அக்காலத்தில் புதிய நெடுஞ்சாலை கண்காணிப்பு முறை ஒன்றுக்கான 1 பில்லியன் யூரோ ஒப்பந்தம் ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு கூட்டு முயற்சியில் Daimler Chrysler உம் பங்கு பெற்றிருந்தது; இது பின்னர் அந்த ஒப்பந்தத்தைப் பெற்றது. இது தற்செயல் நிகழ்வாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

அமைச்சரகத்தில் வேறு ஒரு திட்டத்திற்காக அப்பொழுது பணியாற்றிய அரசியல் அறிவியலாளரான Nils Ehlers "அவர் எப்படி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார் என்பது பற்றியும் சிலவற்றை சாதிக்க முடியவில்லை, சிலவற்றை சரியாக நிர்ணயிக்க முடியவில்லை போன்று பேசிவந்தார் என்பது பற்றி நான் கேள்விப்பட்டேன்." அமைச்சரகத்தில் இருந்து கார் நிறுவனத்தில் இருந்த தன்னுடைய மேலதிகாரிகளுக்குத் தகவல்களை இந்த Daimler Chrysler ஊழியர் அனுப்பி வைத்தார் என்பதில் தனக்கு முழு நம்பிக்கை உண்டு என்று'' Monitor இடம் கூறினார்.

அதற்கு பின்னர் ஜேர்மனிய அரசாங்கம், நான்கு நிறுவனப் பிரதிநிதிகள் நேரடியாக சட்டங்களின் முன்வரைவை தயார் செய்வதில் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் இரு பிரதிநிதிகள் ஒரு பிரிவின் தலைமைப் பொறுப்புக்களுக்கும், உயர்ந்த நிர்வாக அதிகாரங்களுடன், நியமிக்கப்பட்டிருந்தனர்.

Monitor வேறு சில உதாரணங்களையும் கொடுத்துள்ளது. 2004ம் ஆண்டு மின்விசை நிறுவனங்கள் மின் சட்டங்கள் திருத்தத்தில் ஒத்துழைத்தன. Monitor க்குக் கிடைத்த பொருளாதார விஷயங்கள் அமைச்சரகத்தின் உள் ஆவணங்களின்படி, தனியார் துறையின் எரிபொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் "வழிவகைகளை தெளிவாகக் கூறினர்; அவை அப்படியே அரசாங்க சட்டத்தில் சொல்லுக்கு சொல் ஏற்கப்பட்டது -- அதாவது RWE என்னும் மின்விசை நிறுவனத்தில் இருந்து அப்படியே எடுத்துக் கொள்ளப்பட்டது."

இதேபோன்ற வழிவகைதான் விமானத்தில் இருந்து வரும் ஓசைக் கட்டுப்பாடு பற்றிய புதிய சட்டம் இயற்றும்போதும் ஏற்பட்டது. அனைத்து இரவு விமானப் பணிகள் மீதும் தடை என்ற திட்டங்கள் தகர்க்கப்பட்டன; ஏனெனில் பிராங்க்பேர்ட் நகரில் ஜேர்மனியின் மிகப் போக்குவரத்துகூடிய விமான நிலையத்தை கட்டமைக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கும் Fraport AG போன்ற நிறுவனங்களுக்கு மிக அதிக முறையில் தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்கான செலவு ஏற்பட்டுவிடும். சுற்றுச் சூழல் அமைச்சரகத்தால் தயாரிக்கப்பட்டிருந்த துவக்க முன்வரைவு ஒன்று பின்னர் போக்குவரத்து அமைச்சரகத்தால் Fraport AG உடைய நலன்களுக்கு ஏற்ற வகையில் திருத்தியமைக்கப்பட்டது.

"பங்குச் சந்தையில் பதிவாகியுள்ள நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் பல ஆண்டுகளாக போக்குவரத்துத் துறையிலேயே செயலாற்றுகிறார்... Fraport இவருக்கு ஊதியம் கொடுத்து, இவரை இருத்தி வைத்துள்ளது. விமானப் பயண சட்டங்கள் பிரச்சினைக்கான பொறுப்பும் இவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது."

ஜேர்மனிய அரசாங்க அமைச்சரகங்கள், பாராளுமன்ற அலுவலங்கள் இவற்றினுள் நடப்பது பற்றி Fraport AG நன்கு அறிந்துள்து என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. பாராளுமன்றத்திற்காக விமானப் பயணம் பற்றிய தீர்மானம் ஒன்று இருந்த கோப்பை Monitor காட்டுகிறது. "ஒரு வல்லுனர் பட்டனை அழுத்தினால், காப்பு உடைய கோப்பு கூட உண்மையாக எவர் இயற்றினார் என்பதை வெளிப்படுத்தும். பாராளுமன்றப் பிரதிநிதிகள் ஒன்றும் இயற்றவில்லை; மாறாக Fraport AG தான் செய்துள்ளது."

Hesse மாநிலத்தில் இருக்கும் போக்குவரத்து அமைச்சரகத்தில் Fraport ஊழியர்கள் இரவு விமானப் பயணங்களுக்கு சிறப்பு அனுமதி கொடுக்கும் பொறுப்பைக் கூட கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் தன்னுடைய நிறுவத்திற்கு 300 அத்தகைய பயணங்களை மேற்கொள்ள Fraport ஊழியர் அனுமதிகள் வழங்கியுள்ளார். இதில் இருந்து அதிக தூரம் இல்லாத பொருளாதார விவகாரங்கள் அமைச்சரகத்திலும், (ஹெஸ மாநிலத்தில்) ஒரு பெண்மனி ஜேர்மனிய பங்குச் சந்தையில் இருந்தும் தன்னுடைய ஊதியத்தை பெற்றுக் கொள்ளுகிறார். அமைச்சரகத்தில் அவருடைய பணி ஜேர்மனிய பங்குச் சந்தை விவகாரங்களை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்துவதாகும் -- அதாவது தன்னுடைய எஜமான நிறுவனத்தையே!

German Building Industry Federation என்னும் நிறுவனம் தன்னுடைய ஊழியரான Susanne Vollrath ஐ ஜேர்மனிய போக்குவரத்து அமைச்சரகத்தில் பணியாற்ற அனுப்பிவைத்தது. வாரத்தில் நான்கு நாட்கள் அவருடைய வேலை அரசாங்க கட்டிட ஒப்பந்தங்களை தனது நிறுவனத்திற்கு பெற்றுத் தருதல் ஆகும். வாரத்தில் எஞ்சிய ஐந்தாவது நாளில் அவர் அந்த ஒப்பந்தங்களை தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்குகிறார். அமைச்சரகத்தில் அவர் பொதுத்துறை-தனியார் பங்காளி அமைப்பு (Public-Private Partnership) நடைமுறைக் குழுவில் வேலை பார்க்கிறார்.

இவருடைய கட்டிடத் தொழில் எஜமானர் Heiko Stiepelmann ஆவார். அவர் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளுவது "முன்பு முடிவுகளின் தயாரிப்பிற்கான விசாரணைகளில் தொடர்பு கொண்டிருந்தோம். அப்பொழுது பலவும் தாமதமாகும். இப்பொழுது PPP யுடனான தொடர்புடன் வளர்ச்சி நடவடிக்கைகள் பற்றி முன்பாகவே தொடர்பு கொண்டுவிடுகிறோம். எங்களை பொறுத்தவரையில் இது திறமையான செயல்பாட்டு முறையாகும். அமைச்சரகத்துடன் எங்களுக்கு ஒப்பந்தம் உண்டு; எங்களுடைய ஊழியரே ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசின் நலன்களுக்காகவும் பணியாற்றுகிறார்." என்றார்.

இத்தகைய வாதத்தின் தர்க்கம் பெருவணிகத்தின் நலன்கள், ஜேர்மானியக் கூட்டாட்சிக் குடியரசின் நலன்களுடன் முற்றிலும் இயைந்தவை என்பது ஆகும். இத்தொடர்பு பற்றி Stiepelmann சிறிதும் ஐயப்படவில்லை; தற்கால ஜேர்மனிய வணிகத் தலைவர்களும் நிறுவன மேலாளர்களும் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள "மக்கள் பிரதிநிதிகளின் முழு சுதந்திரம்" பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் இது தெளிவுபடுத்துகிறது.