World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel has plans for nuclear attack on Iran

ஈரான்மீது அணுவாயுதத் தாக்குதலை நடத்த இஸ்ரேலிடம் திட்டங்கள் உள்ளன

By Peter Symonds
8 January 2007

Use this version to print | Send this link by email | Email the author

இலண்டனை தளமாகக் கொண்ட Sunday Times ல் நேற்று வெளியாகியுள்ள தகவல் ஒன்று, ஈரானின் நட்டான்ஸில் உள்ள யுரேனிய செறிவூட்டல் ஆலை மற்றும் அணுசக்தி திட்டங்களுக்கும் எதிராக (யுத்தகளத்தில் இராணுவ நிலைமைகளில் பயன்படுத்தப்படும்) தந்திரோபாய அணுவாயுதங்களை பயன்படுத்துவதற்கு இஸ்ரேல் இராணுவம் பயிற்சி பெற்று வருவதாகக் கூறியுள்ளது. மற்ற சில இஸ்ரேலிய இராணுவ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை, இரு விமானப் படைப் பிரிவுகள் இதில் தொடர்புடையவை என்றும் தயாரிப்புக்கள் விமானப்படைத் தளபதி மேஜர் ஜெனரல் எலிசெர் ஷ்கேடியினால் மேற்பார்வையிடப்பட்டு வருவதாகவும் கூறுகிறது.

இஸ்ரேலிய அதிகாரிகள் இத்தகவலை இழிவுபடுத்த உடனடியாக செயல்பட்டனர். வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் மார்க் ரெஜவ் இக்கூற்றை "முறையாக மறுப்பதாகவும்" இஸ்ரேலியர்கள் ராஜீயரீதியான தீர்வில் பற்றுக் கொண்டுள்ளனர் என்ற அதிகாரபூர்வ நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்; மேலும் கடந்த மாதம் ஐ.நா. பாதுகாப்புக் குழு தீர்மானம் ஈரானுக்கு எதிராக தடை விதித்ததை ஆதரிப்பதாகவும் கூறினார். ஆனால், உயர்மட்ட அரசாங்க இராணுவ அதிகாரிகள் பலமுறையும் இஸ்ரேல் தெஹ்ரானை அணுவாயுதங்களை தயாரிக்க அனுமதிக்காது என்பதைக் கூறியுள்ளனர்.

கடந்த மாதம், பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட் குறிப்பிடத்தக்க வகையில் ஈரானுக்கு எதிராக முற்றிலும் வேறுபடுத்திக்காட்டும் முகமாக, பொறுப்பான அணுசக்தி உடைய நாடுகள் என்ற பட்டியலில் இஸ்ரேலையும் சேர்த்துப் பேசினார். இதற்கு முன்பு இஸ்ரேல் எப்பொழுதும் தன்னுடைய அணுவாயுதம் பற்றி ஒப்புக் கொண்டதில்லை; பல பகுப்பாய்வளர்களும் இந்நாடு 80 முதல் 200 வரை அணுவாயத வெடிபொருளை கொண்ட கருவிகளை வைத்திருப்பதாக மதிப்பீடு செய்துள்ளனர். ஓல்மெர்ட்டினுடைய கருத்து ஒன்றும் "நாதவறிக் கூறியது அல்ல"; இது வேண்டுமேன்றே ஈரானுக்கு குறிப்பாக விடப்பட்டுள்ள எச்சரிக்கையாகும்; அதாவது இஸ்ரேலிடத்தில் அணுவாயுதங்கள் உள்ளன, தேவையானால் மத்திய கிழக்கில் தன்னுடைய இராணுவ மேலாதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள அதைப் பயன்படுத்த தயராக உள்ளது என்பதே அது.

Sunday Times அறிக்கை இராணுவத் தயாரிப்புக்கள் மிக முன்னேற்ற நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது. "திட்டங்களின்படி, மரபார்ந்த லேசர் வழிப்படுத்தும் குண்டுகள் இலக்குகளில் "நிலவறைப்பாதைகளை (tunnels)" திறக்கும். இதைத் தொடரந்து "சிறு அணுகுண்டுகள் (mini-nukes) நட்டான்ஸ் ஆலையில் எறியப்படும்; இதையொட்டி ஆழ்ந்த நிலத்தடி வெடிப்பு ஏற்படும்; இது ரேடியக் கதிர்வீச்சு விளைவுகளை பெரிதும் குறைக்கும்." என்று செய்தித்தாள் கூறியுள்ளது. சில பாதைகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன என்றும் சமீபத்திய வாரங்களில் விமானிகள் ஜிப்ரால்டரில் ஈரானிய இலக்குகளைச் சென்று மீளும் 3,200 கிலோ மீட்டர் தூரத்திற்கான பயிற்சியைப் பெற அனுப்பப்பட்டிருந்தனர்.

"பச்சை விளக்கு காட்டப்பட்டவுடன், இது ஒரு பணியாக நடத்தப் பெறும்; ஒரு தாக்குதல், அதன் பின்னர் ஈரானிய அணுத் திட்டம் தகர்க்கப்பட்டு விடும்." என்று ஒரு ஆதாரம் சண்டே டைம்சிடம் தெரிவித்துள்ளது. செய்தித்தாளின்படி, இலக்குகள் ஈரானின் இஸ்பஹானுக்கு அருகே இருக்கும் யுரேனிய மாற்று ஆலை மற்றும், அரக்கில் கட்டுமானத்தில் இருக்கும் அதன் கடின நீர் சுத்திகரிப்பு ஆலை என்றும் அவை இரண்டும் மரபார்ந்த குண்டுவீச்சுக்களுக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிகிறது. "இந்தப் பணியில் 99 சதவிகித வெற்றி என்று கிடையாது. ஒன்று 100 சதவிகித வெற்றியாக இருக்க வேண்டும் இல்லாவிடில் வெற்றியே இல்லை என்று இருக்க வேண்டும்" என்று விமானிகளில் ஒருவர் கூறினார்.

வேண்டுமென்றே இதனை கசியச் செய்ததில், இஸ்ரேலிய ஆட்சிக்குப் பல நோக்கங்கள் உள்ளன. இஸ்ரேலிய இராணுவம் கடந்த ஆண்டு லெபனானில் இருந்து அவமானகர முறையில் பின் வாங்கியதை தொடர்ந்து, ஓல்மெர்ட் அரசாங்கம் ஒரு கடின நிலைப்பாட்டைக் கொள்ள உறுதிபூண்டுள்ளது. சண்டே டைம்சின் கட்டுரை மத்திய கிழக்கிற்கும் உலகிற்கும் இஸ்ரேல் தன்னிடத்தில் உள்ள அனைத்து வழிவகைகளையும் இப்பகுதியில் உள்ள எதிர்கால போட்டியாளர் என்று இருக்கும் எவர்மீதும் செலுத்தத்தயார் என்ற தகவலைக் கொடுப்பது ஓரளவு இதன் நோக்கமாகும்.

சண்டே டைம்ஸின் கருத்தின்படி ஈரானிய நட்டான்ஸில் உள்ள யுரேனிய செறிவூட்டல் ஆலைகள் குறைந்தது 20 மீட்டர்கள் சுற்றளவு உடையை கற்கள், கான்க்ரீட்டினால் பாதுகாப்பு உடையவை என்பதைக் கருத்திற்கொண்ட இஸ்ரேல் தன்னுடைய தந்திரோபாய அணுவாயுதங்கள் என்ற விருப்பத்தை நியாயப்படுத்துகிறது. ஆனால் அணுகுண்டுப் பயன்பாடு என்பது --1945ல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியை அமெரிக்கா சாம்பல் மேடாக்கிய பின் முதல் தடவையாக பயன்படுத்துவது என்பது -- எல்லாவற்றிற்கும் மேலாக இராணுவ முடிவு என்பதைவிட ஓர் அரசியல் முடிவாக, மத்திய கிழக்கில் இருக்கும் ஒரே அணுவாயுத சக்தி என்ற மூலோபாய மேன்மையை உறுதிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாக இருக்கும்.

இஸ்ரேலிய அணுவாயுதத் தாக்குதல் ஈரான் மீது இயலாது என்று நினைப்பவர்கள், நினைத்துப் பார்க்கமுடியாததைத்தான் நீண்டகாலமாக இஸ்ரேல் செய்துள்ளது என்பதை மனத்திற் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டில் அது பாலஸ்தீனிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு எதிராகப் பெரும் காழ்ப்புணர்வு உடைய குற்றம் சார்ந்த போரை தொடுத்தது. கடந்த ஜூலை இரண்டு கைப்பற்றப்பட்ட வீரர்களை காப்பாற்றுதல் என்ற போலிக்காரணத்தின்பேரில், இஸ்ரேல் ஒரு முழு அளவு படையெடுப்பை லெபனான்மீது கொண்டு, நூற்றுக்கணக்கான குடிமக்களை கொன்றுகுவித்ததுடன், ஈரானுக்கும் சிரியாவிற்கும் எதிரான நேரடி நடவடிக்கையின் முதல் கட்டம் என்ற வகையில் லெபனான் நாட்டின் பெரும்பகுதியை தரைமட்டமாக்கியது. மேலும் ஈராக்கில் ஓசிரிக்கில் உள்ள சிறிய ஆய்வு அணு ஆலையின் மீதும் 1981ம் ஆண்டு எத்தகைய தூண்டுதலும் இல்லாதபோதும் ஒரு தாக்குதலை நடத்தியது என்பதும் நினைவு கூரப்பட வேண்டும்..

ஓல்மெர்ட் அரசாங்கமோ புஷ் நிர்வாகமோ தெஹ்ரானிடம் அணுவாயுதத் திட்டம் இருப்பதற்கான உறுதியான சான்றுகளைக் கொடுக்கவில்லை. ஈரானிய ஆட்சி தொடர்ந்து அணுவாயுதத் தடை ஒப்பந்தத்தின் அடிப்படையில் (NPT) தான் நட்டான்ஸ் ஆலையில் யுரேனிய செறிவூட்டலில் ஈடுபடுவதற்கு உரிமை உண்டு என்றும், அதன் நோக்கம் அணுசக்தி ஆலைகளுக்கு எரிபொருள் கொடுப்பது என்றும் அத்தகைய வசதிகளில் முதலாவது புஷெரில் முடிவடையும் தறுவாயில் உள்ளது என்றும் கூறிவருகிறது. இஸ்ரேலோ பகிரங்கமாக சர்வதேச அணுவாயுதப் பரவல் தடுப்பு முயற்சிகளை மீறியுள்ளதுடன் NPT யில் கையெழுத்து இடாததுடன், தன்னுடைய அணுசக்தி ஆலைகளை சோதனைக்கு உட்படுத்தவும் தயாராக இல்லை.

இந்த சூழலில், தெஹ்ரானில் கடந்த மாதம் நாஜி இன ஒழிப்புபற்றிய மறுப்பாளர்களின் சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்த, ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹ்மதிநெஜாட்டின் வெளிப்படையான செமிட்டிய எதிர்ப்பு அறிக்கைகள், இஸ்ரேலிய ஆளும் உயரடுக்கின் மிகத் தீவிர வலதுசாரி, இராணுவப் பிரிவுகள் செய்யவிரும்பியதை நேரடியாக செய்து கொடுத்தன. இஸ்ரேலிய தலைவர்கள் அஹ்மதிநெஜாட்டின் இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற அழைப்புக்களை பயன்படுத்தி யூதர்களுக்கு ஒரு "இரண்டாம் இன அழிப்பு" வரவிருக்கிறது என்ற அச்சத்தை தூண்டிவிட்டுள்ளனர்.

கடந்த நவம்பர்மாதம், தன்னுடைய அரசாங்கத்திற்கு ஆதரவைத் திரட்டும் வகையில், ஓல்மெர்ட் இஸ்ரேலின் தீவிர வலதுசாரி இயக்கமான Beitunu வின் (இஸ்ரேல் எங்கள் இல்லம்), தலைவரான Avigdor Liberman ஐ தன்னுடைய மந்திரிசபையில் துணைப் பிரதமராக கொண்டு வந்துள்ளார். பிரத்தியேகமாக தோற்றுவிக்கப்பட்டுள்ள மூலோபாய விஷயங்கள் என்ற அமைச்சரகம் அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது; இது இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கவனிக்கிறது, குறிப்பாக ஈரானுக்கு எதிரான குவிப்பை உடையது. ஒரு வலதுசாரி தேசியவாதியும், இனவெறியாளருமான லிபர்மன், இஸ்ரேலிய அரேபியர்களை இனவழித் தூய்மை மூலம் அகற்ற வேண்டும், பாலஸ்தீனிய குடிமக்கள்மீது குண்டுவீசப்பட வேண்டும், எகிப்தின் அஸ்வான் உயர் அணைக்கட்டை அழிக்கும் இலக்கு வேண்டும் என்றெல்லாம் அழைப்பு விடுத்து பெரும் இகழ்வைப் பெற்றுள்ளவர் ஆவார்.

கடந்த வாரம் லிபர்மன் ஈரானை வெளியேற்றுமாறு ஐ.நா.விற்கு அழைப்பு விடுத்து மற்ற பெரும் சக்திகளையும் தெஹ்ரானுக்கு எதிராகச் செயல்படுமாறு கோரினார். "ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தனியாக நிற்க முடியும், நிற்கும்; ஆனால் அவ்வாறு எங்களைச் செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது" என்று அவர் கூறினார். "அணுசக்திகளை அது அடையவிட்டால், முழு சுதந்திர உலகமும் மிக அதிக விலையை அதற்குக் கொடுக்க நேரிடும் -- இஸ்ரேல்தான் மிக அதிகமான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்; ஆனால் ஈரானிய ஆக்கிரோஷம் அத்துடன் நின்று விடாது."

ஈரானுக்கு எதிரான ஐ.நா. பொருளாதாரத் தடைகள் போதாது என்று குறைகூறுவதில் லிபர்மன் மட்டும் இல்லை. கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஆண்டு அறிக்கையில் The Institutite for National Security Studies (INSS) என்னும் இஸ்ரேலிய சிந்தனைக் குழாம் பெரும் ஆபத்து வரும் வகையில் எச்சரித்தது: "சர்வதேச சமூகத்தில் பெருகிய கவலை இருந்தபோதிலும், பொருளாதாரத் தடைகள் சுமத்தப்படுவது போதுமா என்ற வினாக்களை INSS எழுப்புகிறது. ஈரானுக்கு ஆதரவாக நேரம் உள்ளது; இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டால் அன்றி, ஈரான் அணுவாயுதங்களை கொள்ளுவது என்பது சிறிது காலத்திற்குள் நடந்து விடும்."

இத்தகைய கருத்துக்கள் சண்டே டைம்ஸிற்கு கசியவிடப்பட்டதற்கு மற்றொரு காரணம் இருப்பதைக் காட்டுகின்றன: புஷ் நிர்வாகத்திற்கு விரைவில் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அழுத்தம் கொடுத்தல்; அல்லது, குறைந்த பட்சம், இஸ்ரேலுக்கு அவ்வாறு செய்வதற்கு ஆதரவைக் கொடு என அழுத்தம் கொடுத்தல். செய்தித்தாள் இஸ்ரேலிய துணைப் பிரதமர் Epharim Sneh கடந்த மாதம் கூறியவற்றை ஆதராம் காட்டி எழுதுகிறது: "இஸ்ரேலும் சர்வதேச சமூகமும் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது." இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் பல முறையும் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பேசியுள்ளனர் என்றும் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

நியூ யோர்க்கரில் கடந்த ஏப்ரல் மாதம் வந்த கட்டுரை ஒன்றில், மூத்த அமெரிக்க செய்தியாளரான சேமர் ஹெர்ஷ் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனில் மிக உயர்மட்டத்தில், ஈரான் மீது பெரும் விமானத் தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தின் விவரங்களை கொடுத்துள்ளார்; இதில் அணுவாயுத இடங்கள் மீதான தாக்குதல்களும் உள்ளன; அவற்றுடன் திட்டம் நிற்கவில்லை. தந்திரோபாய அணுவாயுதப் பயன்பாட்டை நட்டான்ஸ் செறிவூட்டல் ஆலை போன்ற இலக்குகளுக்கு எதிராக பயன்படுத்துவது பற்றிய விவாதமும் மிகவும் இரத்தத்தை உறைய வைக்கும் அம்சத்தில் உள்ளது.

ஹெர்ஷின் கட்டுரை ஒரு முன்னாள் பாதுகாப்பு அதிகாரியை மேற்கோளிடுகிறது; அவர் அமெரிக்க போர் விமானங்கள், அரேபியக் கடலிலுள்ள விமானந்தாங்கிக் கப்பல்களில் இருந்து செயல்பட்டு "அணுவாயுத தாக்குதல் பணி போன்றவற்றை மாதிரி முறையில் விமானங்களை இயக்கினர்" என்றும், அதாவது "தோளுக்கு மேலாக" குண்டுவீசுதல் என்று அழைக்கப்படும், விரைவாக மேலே செல்லும் உத்திகளை-- கடந்த ஆண்டு கோடையில், ஈரானிய கடலோர ராடர்களுக்கு அருகே நடத்தினர் என்று கூறியுள்ளார்.

புஷ் நிர்வாகம், ஈரான்மீதான இராணுவத் தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டு விடவில்லை; ஈரானுடனும் சிரியாவுடனும் ஈராக்கை ஸ்திரப்படுத்த பேச்சுவார்த்தைகளைக் கொள்ள வேண்டும் என்று உயர்மட்ட ஈராக் ஆய்வுக் குழுவால் விடுக்கப்பட்ட முன்மொழிவினையும் நிராகரித்துள்ளது. அமெரிக்க ஆளும் உயரடுக்கின் மிக இராணுவவாத பிரிவு வெளிப்படையாக ஈரானுக்கு எதிராக போர் தொடக்கப்பட வேண்டும் என்று வாதிடுகிறது. கடந்த ஆண்டு கடைசியில் வந்த கட்டுரை ஒன்றில், புதிய கன்சர்வேடிவ்களுக்காக மூலோபாயத்தை கொடுக்கையில், அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்ட்டிட்யூட்டின் Joshua Muravchik தெளிவாக அறிவித்தார்: "எந்தத் தவறுக்கும் இடம் கொடாதீர்கள். ஜனாதிபதி புஷ் தன்னுடைய பதவியை விட்டு விலகுமுன் ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் மீது குண்டுவீச்சு நடத்தியே தீரவேண்டும்."

பென்டகன் அத்தகைய நிலைக்குத் தயாரித்து வருகிறது என்பதற்கான அடையாளங்கள் ஏற்கனவே உள்ளன. கடந்த சில மாதங்களில், மூத்த அமெரிக்க அதிகாரிகள் செளதி அரேபியாவிற்கும் மற்ற வளைகுடா நாடுகளுக்கும் பயணித்து அந்நாடுகளின் பாதுகாப்பு உறவுகள், இராணுவத் திறன் ஆகியவற்றை வலுப்படுத்தும் வழிவகைகள் பற்றி விவாததித்தனர். அத்தகைய விவாதங்களுக்கான ஒரு வெளிப்படைக் காரணம் குவைத், கட்டார், பஹ்ரைன் போன்ற இடங்களில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை அமெரிக்கத் தாக்குதலுக்கு சாத்தியமான ஈரானியப் பதிலடியிலிருந்து காப்பதின் தேவையாகும்.

அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களுடை கடற்படை வலிமையையும் இப்பகுதியில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இரண்டாம் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் குழு- USS John C.Stennis and escort ships என்னும் கடற்படைப்பிரிவு இம்மாதக் கடைசியில் பாரசீக வளைகுடாவை அடைவதாக உள்து. William Fallon என்னும் அட்மைரல் ஒருவரை முதல்தடவையாக அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டின் தலைவராக அசாதரணமான முறையில் ஜனாதிபதி புஷ் நியமனம் செய்துள்ளார்; இதுதான் ஈரான், ஈராக் உட்பட அனைத்து மத்திய கிழக்கு நடவடிக்கைகளுக்கும் பொறுப்புடையதாகும்.

ஓய்வுபெற்ற கேர்னல் சாம் கார்டினர் சண்டே டைம்ஸிடம் ஈரான்மீதான அமெரிக்கத் தாக்குதல் நடக்கக் கூடியதே என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார். இரண்டாம் விமானந்தாங்கிக் கப்பல் வளைகுடாப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது, மற்றும் பிரிட்டனின் கண்ணிவெடிகள் அகற்றும் கப்பல்களும் "மிகப் பெரிய விஷயங்கள்" என்று அவர் குறிப்பிட்டார். "ஈரானைத் தாக்கி விளைவுகளை சந்திக்கத் தயாராக திட்டமிட்டிருந்தால்தான் இவற்றிற்குத் தேவை ஏற்படும்" என்று அவர் குறிப்பிட்டார்; அதாவது அம்முயற்சிகளில் Strait of Hormuz என்னும் உலகின் பெரும்பாலான எண்ணெய் செல்லும் கடல் வழியை ஈரான் மூடும் முயற்சிகளும் அடங்கியிருக்கக்கூடும்.

இந்த ஆபத்துத் தரும் அச்சுறுத்தல்களின் பின்னணியில் எத்தகைய துல்லிய நோக்கங்கள் இருந்தாலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரண்டும் அணுவாயுதங்களை பயன்படுத்தும் சாத்தியம் கொண்ட ஒரு புதிய பேரழிவு செய்யும் எரியூட்டலுக்கு தயாராகின்றன.