World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Russian oil pipeline interruption intensifies struggle for raw materials

ரஷ்ய எண்ணெய் குழாய் தடை மூலப் பொருட்களுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துகிறது

By Peter Schwarz
10 January 2007

Use this version to print | Send this link by email | Email the author

ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே உள்ள மிக முக்கியமான எண்ணெய் குழாய் வழியே எண்ணெய் வழங்கல் தடைக்குள்ளாகி இருப்பது, ஐரோப்பாவிற்கு எதிர்கால எரிபொருள் வழங்கல் மீதாக மிகக் கடுமையான விவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

ஞாயிறு இரவு (ஜனவரி 7), ரஷ்ய எண்ணெய் குழாய் ஏகபோக உரிமை நிறுவனமான Transneft, மேற்கு சைபீரியாவில் உள்ள எண்ணெய் வயல்களுக்கும் ஐரோப்பாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கும் இடையேயான மிக முக்கியமான குழாயான Druschba குழாய்வழியை அடைத்துவிட்டது. ஜேர்மனி தன்னுடைய தேவைகளில் ஐந்தில் ஒரு பகுதிக்கான அதன் அன்றாடக் கொள்திறனான 2 மில்லியன் பீப்பாய்களுடன் (318 மில்லியன் லிட்டர்கள்) ஐந்தில் ஒரு பங்கிற்கு இந்த குழாய்வழியைத்தான் நம்பியுள்ளது. போலந்தும் தன்னுடைய ஆற்றல் தேவைக்களுக்காக இக்குழாயைத்தான் பெரிதும் நம்பியுள்ளது.

எண்ணெய் வழங்கலில் ஏற்பட்ட தடைக்கு பின்னணியில் அதன் நிலப்பகுதி வழியே எண்ணெயை எடுத்தும் செல்லும் பெலாருஸ்க்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான மோதல் உள்ளது.

கிரெம்ளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் Gazprom நிறுவனம், ஆண்டு தொடக்கத்தில் தான் பெலாருசிற்கு விற்பனை செய்யும் எரிவாயுவின் விலையை 1,000 கன மீட்டருக்கு 46 அமெரிக்க டாலர்களில் இருந்து 100 அமெரிக்க டாலர்களாக உயர்த்தியது. மேலும் ரஷ்யா பெலாருசிற்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெயின் வரியை டன் ஒன்றிற்கு 180 டாலர்கள் உயர்த்தியது. மலிவாக ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரஷ்ய எண்ணெய்யை பெலாருஸ் உலகச் சந்தையில் மறு விற்பனை செய்வதை தடுக்கும் நோக்கத்துடன் விலையுயர்வை கொண்டுவந்ததாக Gazprom வாதிட்டது.

மின்ஸ்க்கில் இருக்கும் ஆட்சி இதற்குப் பழிவாங்கும் வகையில் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவிற்கு வழங்கப்படும் எண்ணெய்க்கு தடவழிக் கட்டணமாக ஒரு தொன்னிற்கு 45 அமெரிக்க டாலர்கள் என்று விதித்தது. ரஷ்ய தகவல்களின்படி, Transneft இக்கட்ணத்தை கொடுக்க மறுத்தபின், பெலாருஸ் அதை எதிர்கொள்ளும் வகையில் எண்ணெய் குழாய்களில் இருந்து எண்ணெயை எடுத்துக் கொள்ள முற்பட்டது. இதைத் தொடர்ந்து Trasneft குழாய்களை மூடிவிட்டது.

தற்பொழுது இந்தப் பூசலுக்கு தீர்வு ஏற்படுவதாக தெரியவில்லை. ஆயினும்கூட இந்தச் சிக்கலை அடுத்து ஐரோப்பா சக்தியை கொண்டு செல்வதற்கான ஒரு நேரடியான தடையை எதிர்கொள்ளாது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு புறம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு போதுமான எண்ணெய் இருப்புக்களை கொண்டுள்ளன. மறுபுறமோ அவை வேறு குழாய்த்திட்டம் அல்லது கடல்வழி மூலம் எண்ணெயை இறக்குமதி செய்து கொள்ளமுடியும்.

எப்படியிருந்தபோதும்1 நீண்டகால விளைவுகளை பற்றிய மதிப்பீடு, நிலைமையின் மோசமான தன்மையை வலியுறுத்துகின்றது. தன்னுடைய எண்ணெய் தேவைகளில் 82 சதவிகிதத்தையும், எரிவாயு தேவையின் 57 சதவிகிதத்தையும் மூன்றாம் நாடுகளில் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் இறக்குமதி செய்கிறது. இன்னும் 25 ஆண்டுகளில் இந்த சதவிகிதம் எண்ணெய் தேவையில் 93 சதவீதமாகவும் எரிவாயுத் தேவையில் 84 சதவீதமாகவும் உயரும் எனத் தெரிகிறது.

குறிப்பாக அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரின் தலைமையிலான முன்னாள் ஜேர்மன் சமூக ஜனநாயக-பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கம் ரஷ்யாவுடன் நீண்டகால ஆற்றலுக்கான பங்காண்மை பற்றி பார்வையை செலுத்தியிருந்தது; முன்னாள் சோவியத் காலத்தில் இருந்தே ரஷ்யா நம்பகத்தகுந்த வழங்குநராக இருந்து வருகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் ஷ்ரோடர் நெருக்கமான நட்பைத்தான் கொண்டுள்ளார் மேலும் தற்பொழுது பால்டிக் கடல் எரிவாயு குழாய்த்திட்ட குழுமத்தின் மேற்பார்வை பிரிவிற்கு தலைவராக உள்ளார்; இவருடைய ஊதியம் Gazprom ஆல் கொடுக்கப்படுகிறது.

ஓராண்டிற்கு முன் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் ஏற்பட்ட இதேபோன்ற பூசல் ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயு வழங்கலில் குறுகிய காலத் தடையையே ஏற்படுத்தி இருந்தது. சமீபத்திய தடையை அடுத்து, ரஷ்ய எரிபொருளை இறக்குமதி செய்தல் என்பது அதிகரித்த வகையில் ஆபத்தான வணிகமாக இப்பொழுது பார்க்கப்படுகிறது.

கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தை சேர்ந்த ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கல், ஒரு குறிப்பிட்ட எரிபொருள் வழங்குநரை மட்டுமே ஜேர்மனி வெளிப்படையாக நம்பியிருக்க முடியாது என்பதைத்தான் ரஷ்ய-பெலாருஸ் ஆற்றல் முரண்பாடுகள் நிரூபித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆற்றல் பாதுகாப்பு, ஒரு முக்கிய பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு ஐரோப்பிய ஒன்றியம் ஜேர்மனியின் தலைமையின் கீழ் இருக்கும்போது விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவித்தார். ஜனவரி 1ம் தேதியில் இருந்து ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியத் தலைமையை ஏற்றுள்ளது.

ஜேர்மனிய வெளியுறவு இரகசியப் பிரிவின் (BND) தலைவரான Ernst Uhrlau வும் இவ்விஷயத்தில் தன்னுடைய அக்கறையை தெரிவித்துள்ளார். ஜேர்மன் வழங்கலில் ஏற்பட்ட தடையானது, எரிபொருள் பாதுகாப்பு ஜேர்மனிக்கும் அதன் பாதுகாப்புப் பிரிவுகளுக்கும் பிரதான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.

ஆற்றல் நுகர்வோரின் மத்திய அமைப்பும் (The Federal Association of Energy Consumers -VEA) ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு மீது அதிகரித்த வகையில் ஜேர்மன் தங்கியிருப்பதற்கு எதிராக எச்சரிக்கை கொடுத்துள்ளது. VEA இன் தலைவரான Manfred Panitz ஹனோவரில் பின்வருமாறு அறிவித்தார்: "ரஷ்யா இப்பொழுது முன்னாள் சோவியத் அரசுகளுக்கு செய்து கொண்டிருப்பது, நமக்கும் நாளைக்கு நேரலாம்.... ரஷ்யாவை நம்பியிருப்பது என்பது சேதத்தை கொடுக்கும்; கவலையுடன் நான் அதைக் காண்கிறேன்."

வட கடலில் இருந்து எண்ணெய் வழங்களை மறுப்பது என்பது ரஷ்ய பனிட்சில் இருந்து கூடுதலான இறக்குமதிகள் மூலம் சமாளிக்கப்படக் கூடாது என்று அவர் சேர்த்துக் கொண்டார். அப்படியில்லாவிடின், ஜேர்மனிக்கான எரிபொருள் வழங்கலில் ரஷ்யாவின் சதவீதம் 30சதவிகிதத்தில் இருந்து 50 ஆக விரைவில் உயர்ந்துவிடும் என்றார்.

மாற்று எரிபொருள் ஆதாரங்களுக்கான தேடுதல் பரந்த அரசியல் விளைவுகளை கொண்டுள்ளது; ஐரோப்பாவை இது மற்ற சக்திகளுடன், அதாவது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் எரிபொருள்- வேட்கை விரிவடையும் சீனா, இந்தியா போன்ற நுகர்வோர்களுடன், பூசலுக்கு வகை செய்யும். அந்நாடுகள் அனைத்தும் பெருகிய முறையில் பற்றாக்குறையில் இருக்கும் எரிபொருள் சேர்ம இருப்புக்களைத் தேடி அலைகின்றன. இதைத்தவிர தங்களுடைய தனிப்பட்ட தேவைகளை பாதுகாப்பாக பெறும் குறிப்புடன் ஐரோப்பிய அரசாங்கங்கள் ஒரு பொது எரிபொருட் கொள்கையை அபிவிருத்தி செய்தல் என்று வரும்போது மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போர்களின் பிரதான இலக்கு மத்திய கிழக்கு மற்றும் வளைகுடாப் பகுதிகளில் இருக்கும் எண்ணெய், எரிவாயு இருப்புக்களை அமெரிக்க கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருதல் என்பதேயாகும். ஜேர்மனிய, பிரெஞ்சு மற்றும் பிற ஐரோப்பிய அரசாங்கங்கள் ஈராக்கிய போரை தொடுப்பதில் பங்கு பெறுவதற்கு நிராகரித்ததும் இக்காரணத்தை ஒட்டித்தான். தங்களுடைய சொந்த ஏகாதிபத்திய நலன்கள் ஆபத்திற்குட்பட்டுவிடும் என்று அவை கருதி ரஷ்யாவுடன் தங்கள் ஒத்துழைப்பை வளர்க்க விரும்பின.

தன்னுடைய வெளியுறவுக் கொள்கை இலக்குகளைப் பின்பற்றுவதற்கு எண்ணெய், எரிவாயுவை வேண்டுமென்றே பயன்படுத்தும் தன்னம்பிக்கை மிகுந்த ரஷ்ய நடவடிக்கைகள் இப்பொழுது ஐரோப்பிய நாடுகளை மீண்டும் அமெரிக்க ஆதரவை நாட வைத்துள்ளன. அதிபர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை எடுத்துக்கொண்ட பின்னர் முதல்தடவையாக பயணித்தது அமெரிக்காவிற்கு ஆகும்; அங்கு அமெரிக்க ஜனாதிபதியின் அரசியல் வலுவிழந்த நிலைமையை வலுவாக்க முற்பட்டார். அவருடைய பயணத்தின்போது ஈராக்கில் அமெரிக்க படைகள் கூடுதலாக்கப்பட வேண்டும் என்ற புஷ்ஷின் திட்டங்கள் பற்றி ஒரு வரி கூட கூறவில்லை; அதேபோல் சதாம் ஹுசேனை அவசர அவசரமாக தூக்கிலிட்டது பற்றியும் ஏதும் கூறவில்லை. பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக்கும் சிரியாவிற்கு எதிராக லெபனானில் அமெரிக்காவுடன் தற்பொழுது ஒத்துழைப்புக் கொடுத்துள்ளார்.

ஆயினும், புஷ்ஷுடனான அணியில் நெருங்கிவரல் என்பது ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அழித்து விடப்போவதில்லை. புஷ்ஷிற்கு ஆதரவை மேர்க்கல் கொடுத்தாலும், ஜேர்மன் மற்ற ஐரோப்பிய நலன்களின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தலிலும் அவர் உறுதியாக உள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையை ஆறுமாதத்திற்கு வகிப்பதற்கான காலகட்டத்திற்குள் சில பேரவாத் திட்டங்களை முடிக்க ஜேர்மன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு வசந்தகாலத்தில் திட்டமிடப்பட்டுள்ள உச்சி மாநாட்டில் ஆற்றலுக்கான செயற்திட்டம் ஒன்றை முன்வைக்க உள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் ஆற்றல் மற்றும் மூலப் பொருட்களை ஐரோப்பாவிற்கு பாதுகாப்பாக பெறுவது என்பதாகும். அதே நேரத்தில், ஜேர்மனிய அரசாங்கம் லிஸ்பன் வழிவகையை முன்னெடுப்பதிலும் முயற்சியைக் கொண்டுள்ளது; அதன் நோக்கமோ தொழிலாளர் நெகிழ்வுத் தன்மையை அதிகரிப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தை சர்வதேச அளவில் மிகப் போட்டிமிக்கதாக்க செய்வதாகும்.

ஜேர்மனி போன்ற பெரிய பங்காளிகள் கொள்கை உறுதிப்படுத்தப்படுவதில் முக்கிய பங்கை ஆற்றவிருக்கும் நிலைமைகளில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகளில் ஒன்றுபட்ட குரலைக் கொடுக்கும் நோக்கத்திற்காக அரசியல் அமைப்பை அறிமுகப்படுத்துவதை புதுப்பிக்கும் திட்டத்தையும் அது ஜூனில் முன்வைக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த முயற்சிகள் இராணுவ ரீதியாக மறு ஆயுதபாணியாக்கலுடன் நெருக்கமான பிணைப்பை கொண்டுள்ளன. தன்னுடைய இராணுவத் திறனை மிகப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து கொண்டாலேயன்றி அமெரிக்காவிற்கு ஒரு போட்டியாளர் என்ற நிலைப்பாட்டை ஐரோப்பா கொள்ள முடியாது. மத்திய கிழக்கில் (லெபனான்), ஆப்கானிஸ்தான் மற்றும் ஆபிரிக்க கொம்பு போன்ற முக்கியமான நெருக்கடி மையங்களில் ஜேர்மனிய அல்லது ஐரோப்பிய ஒன்றியப் படைகள் ஏற்கனவே செயலூக்கமுடன் உள்ளன. இந்தப் பின்னணியில் "ஆற்றல் பாதுகாப்பு", அதாவது எண்ணெய், எரிவாயு இருப்புக்களை பெறுதலுக்கான போராட்டம் என்பது அதிகரித்த வகையில் இராணுவ வாதத்திற்கு ஒர் உந்துசக்தியாக உள்ளது.

செவ்வாயன்று, Times of London ல் வந்துள்ள பேட்டி ஒன்றில், "நமக்கு ஆற்றல் என்பது முன்பு நிலக்கரியும், எஃகும் பயன்படுத்தப்பட இருந்தது போன்றதாகும்" என ஜேர்மன் அதிபர் அறிவித்தார். ஐரோப்பிய நிலக்கரி, எஃகு கூட்டுரிமையில் இருந்து தோன்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலங்களை பற்றி மேர்க்கல் குறிப்பிட்டிருந்தார், ஆனால் லோரைனில் இருந்த நிலக்கரி இருப்புக்கள் பின்னர் ஜேர்மனிய ரூர் பகுதி நிலக்கரி இருப்புக்கள் பூசல்களை வளர்ப்பதில் பெரும் பங்கை ஆற்றிய பொழுது, கடந்த நூற்றாண்டின் இரு உலகப் போர்களுக்கு இட்டுச்சென்ற காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமாக அது உள்ளது"

ரஷ்ய ஆற்றல் அளிப்புக்களை சூழ்ந்துள்ள தற்போதைய முரண்பாடுகளும் அதையொட்டிய சர்வதேச எதிர்விளைவுகளும், சக்தி வாய்ந்த நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட்டு, இலாப நோக்கிற்கான உந்துதலின் ஆதிக்கத்தில் இருக்கும் சமூக முறையின் கீழ், உலக வளங்களை எவ்வித அறிவார்ந்த, சமாதான வகையிலான பயன்படுத்தலுக்கும் இயலாமையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.