World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

European Union demands speedy formation of unity coalition in Serbia

ஐரோப்பிய ஒன்றியம் சேர்பியாவில் ஐக்கிய கூட்டணி விரைவில் அமைக்கப்பட வேண்டும் என்று கோருகிறது

By Julie Hyland
25 January 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஞாயிறு தேர்தல்களை அடுத்து விரைவில் ஒரு மேற்கத்தைய சார்பு உடைய கூட்டணி அரசாங்கம் சேர்பியாவில் அமைக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ள நிலையில், Tomislav Nkolic உடைய SRS தேசியவாத தீவிரக் கட்சி 28 சதவிகித வாக்குகளைப் பெற்று 250 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 81 இடங்களை கொண்டுள்ளது. DS என்னும் Democratic Party, ஜனாதிபதி போரிஸ் டாடிக்கின் தலைமையின் கீழ் 23 சதவிகித வாக்கை பெற்று 65 இடங்களை கைப்பற்றியுள்ளது; பிரதம மந்திரி Vojislav Kostunica வின் சேர்பிய ஜனநாயகக் கட்சி (DSS) 17 சதவிகிதத்தையும் 46 இடங்களையும் எடுத்துள்ளது.

சிறு கட்சிகளில், G17 Plus Party 6.8 சதவிகித வாக்குகளையும், முன்னாள் ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசெவிக்கின் சோசலிஸ்ட் கட்சி (SPS) கட்சி 5.6 சதவிகிதத்தையும், தாராண்மை ஜனநாயகக் கட்சியின் தலைமையிலான கூட்டணி 5.3 சதவிகித வாக்குகளையும் பெற்றன. இன்னும் நான்கு சிறிய கட்சிகளும் கூட ஒவ்வொன்றும் சில இடங்களை பெற்றன.

பெப்ருவரி 25ம் தேதி முதல் பாராளுமன்றக் கூட்டம் தொடங்குகிறது; இதில் இருந்து 90 நாட்களுக்குள் ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். மேற்கின் யூகோஸ்லாவிய உடைப்பு காலத்திற்கு முன்பாக 1990களில் மிலோசெவிக்கின் SPS கூட்டணியில் இருந்த SRS ஐ ஓரம் கட்டிவிட வேண்டும் என்பதை ஐரோப்பிய ஒன்றியம் தெளிவாக்கியுள்ளது.

SRS இன் உத்தியோகபூர்வ தலைவர் இப்பொழுது Vojislav Seselj ஆவார்; தற்பொழுது ஹேக்கில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தீர்ப்பாயத்தின் முன் அவர் போர்க்குற்றங்களுக்கான விசாரணைக்கு காத்திருக்கிறார். கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக அதன் கோசோவோ நிலைப்பாடு பற்றிய தேசிய பரபரப்பை தட்டியெழுப்பும் முயற்சிகள் இருந்தன; கோசோவோ ஐக்கிய நாடுகளின் கட்டுப்பாட்டின்கீழ் 1999ல் இருந்து இருக்கிறது.

1990களில் தொடங்கிய முன்னாள் யூகோஸ்லாவிய கூட்டாட்சிக் குடியரசின் இராணுவ மற்றும் அரசியல் துண்டாடலின் இறுதிக் கட்டமாக கொசோவோவின் சுதந்திரம் இருக்கும். மூலோபாயம் மிக்க பால்க்கன் பகுதிகள், அதன் வளங்கள் மீது தங்கள் மேலாதிக்கத்தை அடைய வேண்டும் என்று மேலைவல்லரசுகள் இந்த வழிவகையை பயன்படுத்துகின்றனர். ஆனால், மேற்கின் திட்டங்களுக்கு சேர்பியாவில் மக்கள் எதிர்ப்பானது, ஐ.நா.வை ஜனவரி 21 தேர்தல்கள் முடியும் வரை கோசோவோவின் வருங்கால நிலை பற்றிய தன்னுடைய முன்மொழிவுகளை வெளியிடுவதை தாமதப்படுத்தச் செய்தது.

ஐ.நா.வின் தூதர் Martti Ahitissari தன்னுடைய முன்மொழிவுகளை இவ்வாரத்தின் பிற்பகுதியில் கொடுக்க இருக்கிறார். குறிப்பாக கடந்த ஆண்டு பொது கருத்து வாக்கெடுப்பில் குறுகிய வாக்கில் தன்னுடைய அண்டை நாடான மொன்டிநீக்ரோவுடனான சேர்பியாவின் ஐக்கியம் சம்பிரதாயபூர்வமாக கரைந்து போன பின்னர், SRS க்கு ஆதரவை அதிகப்படுத்தக் கூடிய, பரந்த தேசிய உணர்வைப் பற்றி எரியச்செய்யக்கூடிய, கொசோவோவிற்கு "நிபந்தனையுடன் கூடிய" சுதந்திரம் இருக்கும் என்று பரந்த அளவில் எதிர்பார்க்கப்படுவதை, மேலை வல்லரசுகள் பொது அறிவிப்பு செய்வதை இப்பொழுது வரைக்கும் தவிர்த்து வந்துள்ளன. இருக்கைகளில் SRS இன் பங்கு ஒன்றுதான் குறைந்துள்ளது என்றாலும், பாராளுமன்றத்தில் அது தொடர்ந்து மிக அதிக இடங்களைக் கொண்ட கட்சியாக இருக்கிறது. கொசோவோவின் சுதந்திரத்தை எதிர்ப்பதாக மற்றைய முக்கிய கட்சிகளும் பதிவு செய்துள்ளன. கொசோவோ சேர்பியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறிய ஒரு புதிய அரசியல் அமைப்பு கடந்த ஆண்டு ஒப்புதலளித்து உறுதிசெய்யப்பட்டது.

ஆயினும்கூட, மூன்று மேலைச் சார்புடைய கட்சிகளின் கூட்டணி ஐ.நா.வின் முன்மொழிவுகளில் இருந்து வெளிப்படும் விளைவுகளுக்கு ஈடுகொடுத்து, நாட்டின் பெரிய வர்த்தக பங்காளரான ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒன்றிணைவதன் ஒரு பகுதியாக, பெருவணிகம் மற்றும் வங்கிகளால் கோரப்படும் பொருளாதார "அதிர்ச்சி வைத்தியத்தை" செயல்படுத்தும் என்று பிரதான வல்லரசுகள் நம்புகின்றன.

சேர்பிய தேர்தல்களை, "ஜனநாயக ஆதரவு" சக்திகளுக்கு வெற்றி என்று ஐரோப்பிய வெளியுறவுத் துறை மந்திரிகள் புகழ்ந்துள்ளனர்; அதன் வெளியுறவுக் கொள்கைத் தலைவரான Javier Solana, "ஜனநாயகம் மற்றும் ஐரோப்பிய ஆதரவு சக்திகளுக்கு பெரும்பாலானவர்கள் வாக்களித்துள்ளனர்" என்று கூறியுள்ளார். NATO வின் தலைமைச் செயலாளர் ஜெனரல் ஜாப் டு ஹுப் ஷெப்பர் புதிய அரசாங்கம் "இன்னும் கூடுதலான வகையில் ஐரோப்பிய-அட்லான்டிக் ஒருங்கிணைப்பிற்கு ஒத்துழைக்கும்" என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

பெல்கிரேடைத் தளமாகக் கொண்ட அரசியல் பகுப்பாய்வாளரான Nebojsa Spaic, ஜனநாயகக் கட்சியினர் கோஸ்டுனிகாவின் DSS மற்றும் G17 Plus உடன் சேர்ந்து ஒரு புதிய அரசாங்கம் அமைக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளதாக பத்திரிக்கை தகவல்கள் மேற்கோளிட்டுள்ளன. "கடுமையான பேச்சுக்கள் மற்றும் சூழ்ச்சிப் பேரங்களும் இருக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்; ஆனால் அவர்களுடைய நலன்களும் சிந்தனைப் பிணைப்புக்களும் அவர்களின் விரோதப் போக்கை விட அதிகமாக இருப்பதால் கூட்டணி அமைப்பர் என்று நினைக்கிறேன்" என்று ஸ்பைக் கூறினார்.

ஸ்பைக் தெரிவிப்பதைக் காட்டிலும் உறுதியான அரசியல் தலைமை ஏற்படுத்தப்படுவது என்பது கூடுதலான சிக்கல் வாய்ந்ததாக இருக்கும்.

கோஸ்டுனிகாவில் DSS மற்றும் டாடிக்கின் DS ற்கும் இடையே கடுமையான போட்டி உள்ளது; முந்தையவர் பிரதம மந்திரி பதவியை கைவிட இதுவரை மறுத்துள்ளார். EU வில் நுழைவுக்கு கோஸ்டுனிகா ஆதரவு கொடுக்கையில் இதை இன்னும் கூடுதலான வகையில் பொருளாதார "இடைமருவுதலுடனும்" தேசியவாத வன்மத்திற்கு முறையிடும் இசைநிகழ்ச்சியுடனும் இணைக்க முயன்று வருகிறார். இதையொட்டி புத்தாண்டு தினத்தன்று ஒரு கொல்லப்பட்ட தேசியக் குழுவின் தலைவரின் விதவையும் டர்போ நாட்டுப்பறக் கலைப் பாடகருமான சேகாவின் இசைவிழாவில் அவர் தோன்றினார். முடிவுகள் வருவதற்கு முன்பே கோஸ்டுனிகா SRS உடன் கூட்டணி நாடுவார் என்றும் ஆலோசனைகள் இருந்தன.

கோஸ்டுனிகாவின் சூழ்ச்சிக்கையாளல் SRS ஐ வீழ்த்தத் தவறியது மட்டுமில்லாமல், 2003 தேர்தல்களுடன் ஒப்பிடும்போது அவருடைய DSS கிட்டத்தட்ட 10 இடங்களை இழக்கவும் வைத்தது.

G17 Plus ம் தன்னுடைய வாக்குகளின் பங்கு 2003 உடன் ஒப்பிடும்போது 11.5 சதவிகிதம் சரிந்ததை கண்ணுற்றது. இது 1995ல் Srebrenica வில் 8,000 முஸ்லிம் ஆடவர், சிறுவர் ஆகியோர் படுகொலை தொடர்பாக இனப்படுகொலை குற்றம் சாற்றப்பட்ட பொஸ்னிய சேர்பிய தளபதி ராட்போ ம்லேடிக்கை ஒப்படைக்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபரில் கூட்டணியில் இருந்து விலகியபொழுது, அக்டோபர் வரை கோஸ்டுனிகா அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மிலாடிக் மற்றும் ஏனைய குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒப்படைக்க வேண்டும் என்பதை ஐரோப்பிய ஒன்றியம் சேர்பியாவுடனான நெருங்கிய பொருளாதாரத் தொடர்புகளுக்கு முக்கிய நிபந்தனையாகக் கொடுத்திருந்தது. கோஸ்டுனிகா அரசாங்கம் ஒப்படைக்கத் தவறியது இனி ஒத்துழைப்புக்கள் இயலாது என்ற அச்சுறுத்தல்களுக்கு வழிவகுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவுகளைக் கொள்ளுவதற்கு G17 குறிப்பான ஆர்வம் காட்டியுள்ளது. அமெரிக்க காங்கிரஸ், வாஷிங்டனின் National Endowment for Democracy, மற்றும் பெரும்பாலானவர்கள் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதிய அமைப்பு ஆகியவற்றில் பணி புரிந்த 17 பொருளாதாரவாதிகள் கொண்ட அமைப்பான Centre for International Private Enterprise ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்புகளை இக்கட்சி கொண்டுள்ளது. இந்தப் பொருளாதார சீர்திருத்தம் "அதன் தீவிர இயல்பால் எந்த வகை படிப்படியாய் செய்தலுக்கு இடம்கொடாததன் காரணமாக ஓர் அதிர்ச்சி வைத்தியம் போல் செயல்படுத்தப்பட வேண்டும்" என்று கூறிக்கொண்டு தனியார் மயமாக்குதல், "தாராளமயம்" இவற்றின் அடிப்படையில் IMF உடைய கட்டமைப்பு சரிசெய்தல் கொள்கைகளை G17 ஊக்குவித்தது

இந்த திசையில் ஆரம்ப நடவடிக்கைகளினால் வாழ்க்கைத்தரங்களில் ஏற்படும் பாதிப்பு பற்றிய சமூக அதிருப்தி --வேலையின்மை 20 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளது-- தேர்தலில் முக்கிய பங்கை கொண்டிருந்தது என்று பல வர்ணனையாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

டாடிக்கின் DS, வெளியேறும் அரசாங்கத்தில் இல்லை என்பதனால் நலன்களை அடைந்து, தேர்தலில் அதிக இலாபங்களை கண்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின்பால் உறுதியாக நோக்குநிலை கொண்டிருந்த டாடிக் சேர்பிய உறுப்பாண்மை "எமது மக்களுக்கு சிறந்த நிலைமைகளை அளிக்கும்" என்று கூறியதோடு, தன்னுடைய தலைமையிலான அரசாங்கம் ஐ.நா. கேட்டுள்ளபடி ஹேகிற்கு கோரப்பட்டுள்ள நபர்களை ஒப்படைப்பதன் மூலம் நாடு தனிமைப்பட்டிருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் உறுதியளித்தார்.

கோஸ்டுனிகாவுடன் சேர்ந்து டாடிக் சேர்பியாவிற்குள் கோசோவோ இருக்க வேண்டும் என்று வாதிட்டு, அதற்கு பரந்த சுயாட்சி கொடுப்பதாகவும் உறுதிமொழி கொடுத்துள்ளார். இருவரும் "சமாதான" வழியில் பூசல்களை தீர்ப்பதாக உறுதி கொடுத்துள்ளனர். ஆனால் நிகழ்வுகள் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை. கோசோவோவிற்கு சுதந்திரம் என்று சேர்பியாவில் கேட்கும் ஒரே கட்சி Lieral Democratic List தான். இது Cedomir Jovanovic ன் தலைமையில் உள்ளது; ஆனால் பைனான்சியல் டைம்ஸ், "டாடிக்-டிஜெலொ லிஸ்டிற்கு ஆதரவு தரும் பல வாக்காளர்களும் கோசோவோ பிரிந்து செல்லட்டும் என விரும்புவர்" என்று கூறியுள்ளது.

சேர்பியாவில் நடக்கும் நிகழ்வுகள் மட்டுமே அனைத்தையும் நிர்ணயித்துவிட முடியாது. கோசோவோவில் அல்பானிய தலைவர்கள் சுதந்திரம் என்பதற்கு குறைவான எதையும் ஏற்பதற்கில்லை என்று கூறிவிட்டனர். திங்களன்று கோசோவோவின் பிரதம மந்திரி Agim Ceku மேற்கு நாடுகளுக்கு அழைப்பு விடுத்து "சேர்பியாவின் கடின சிக்கல் வாய்ந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு கோசோவோ பிரச்சினை பிணையாக ஆக்கப்பட்டுவிடக்கூடாது" என்று வாதிட்டுள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜேர்மனி ஆகியவை கோசோவோவின் சுதந்திரத்திற்கு ஆதரவு கொடுக்கின்றன; எவ்வளவு விரைவில் இது கொண்டுவரப்படலாம் என்பதில்தான் அவை வேறுபடுகின்றன. ஆனால் SRS உடைய தலைவரான Tomislav Nikolic கோசோவோ சுதந்திரத்திற்கான அதன் எதிர்ப்பிற்கு ரஷ்ய ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் ரஷ்யா, சேர்பிய ஆதரவு இல்லாவிட்டால், கோசோவோவின் சுதந்திரத்திற்கு எதிராகத் தன்னுடைய தடுப்பு அதிகாரத்தை பயன்படுத்தும் என்று கூறியுள்ளார். ரஷ்ய தூதர்கள் NATO விற்கும் பெல்கிரேடுக்கும் இடையே உறவுகள் வலுப்படுவது பற்றிக் கவலை தெரிவித்துள்ளனர்.

"கொண்டலீசா ரைசுடன் (அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்) பயணித்திருந்த ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி, ரஷ்யா கொசோவோ உடன்பாட்டை தடுப்பதில் அற்பத்தனமாய் நடந்துகொள்கிறது" என புகார்கூறியதாக பைனான்சியல் டைம்ஸ் மேற்கோள் காட்டுகிறது.

"இது ஐரோப்பிய பாதுகாப்புப் பிரச்சினையாகும். ரஷ்யா சேர்பியாவை குழப்பிக் கொண்டிருப்பது 1914 நிகழ்வை நினைவூட்டுவது போல் உள்ளது" என்று இந்த அதிகாரி முதல் உலகப் போருக்கு வழிவகுத்த நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பேசினார்.

ஆயினும், கொசோவோவின் சுதந்திரம் ஜோர்ஜியாவை அப்காஜியா மற்றும் தெற்கு ஓசேட்டியாவை சுதந்திரமாக்க வலியுறுத்தும் ரஷ்யா சாதகமாக பயன்படுத்த முடியுமானால், இதற்கான உடன்பாட்டிற்கு புட்டின் ஆதரவு கொடுப்பார் என்னும் ஊகங்கள் எழுந்துள்ளன.

பெரும்வல்லரசு சூழ்ச்சியால் ஸ்திரம்குலையும் பாதிப்பு ஒருபுறம் இருக்க, டாடிக்கின் கருத்தான சேர்பிய மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக இடர்ப்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதால் சரியீடு செய்யப்பட முடியும் என்பதும் பல காரணங்களினால் தவறாக உள்ளது.

முதலில், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே விரிவாக்க வழிவகை குறைக்கப்பட வேண்டும் என்ற பரந்த அளவிலான கூக்குரல்கள் வந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் சேர்பியாவை உறுப்பினராக்கல் நாட்டின் பொருளாதார தனிமைப்படலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கவர்ச்சியூட்டும் வழியாகக் கூறினாலும், சேர்பியா உறுப்பினராக அனுமதிக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் இல்லை.

அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறுவுகள் என்பது பால்கன் மக்கள் கூடுதலான வறுமையைத்தான் முன்கணிக்கிறது. தேர்தல் முடிந்தவுடன், Standard & Poor's Ratings Services உடைய பகுப்பாய்வாளர் Sladana Tepic, வரவிருக்கும் அரசாங்கம் "சேர்பிய கட்டமைப்புச் சீர்திருத்தம் மற்றும் ஸ்திரப்படுத்தல் முயற்சிகளிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு பின்வாங்குதலை" தேர்ந்தடுக்கக்கூடிய ஆபத்து உள்ளமை சர்வதேச மூலதனத்திற்கு தொந்திரவு கொடுக்கும் பிரச்சினை என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

Deutsche Press Agentur கருத்தின்படி பெல்கிரேட் பங்குச் சந்தையின் முக்கிய குறியீட்டு எண் டிசம்பர் மாதம் 12 சதவிகிதம் உயர்ந்தது என்றும் முதல் ஆண்டின் முதல் வாரங்களில் இன்னும் 7 சதவிகிதம் உயர்ந்ததாகவும் தெரிகிறது. வெளியார் முதலீடு 2005ல் 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதில் இருந்து 2006ல் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது; அதாவது இது கிட்டத்தட்ட சேர்பியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் ஆகும், இதற்கு தொலைத் தொடர்பு விற்பனை உதவியது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் DPA, வரவிருக்கும் எந்த அரசாங்கமும் "நீண்டகாலம் தாமதப்படுத்தப்பட்டவை, அரசாங்கத்திற்குரிய நிறுவனங்கள் குறிப்பாக பயன்பாடுகள், எண்ணெய், மருத்துகள் பிரிவுகளை விற்றல் மூலம் தேசியப் பொருளாதாரம் மேலும் திறந்து விடுவதை" செய்ய வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கோருவதாக தெரிவிக்கிறது. வல்லுனர்கள் "இன்னும் கூடுதலான முறையில் நாட்டின் நீதித்துறைச் சீர்திருத்தம் வேண்டும் என்றும், அது சர்வதேச வணிகக் கட்டமைமைப்பு அந்நாட்டில் காக்கப்படுவதற்கு உதவும் என்றும்" கோருகின்றனர்

இந்தச் செயற்பட்டியல்தான் மிக உறுதியுடன் DS னால் பின்பற்றப்படுகிறது; இதன் பிரதம மந்திரிப் பதவிக்கான வேட்பாளர், பொருளாதார வல்லுநர் Bozidar Djelic ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்துள்ள இலக்குகளை அடைவதற்காக, "கடுமையான நிதிய நிர்வாகத்தின் மூலம்" சேர்பியாவை ஒரு "பால்கன் புலியாக" மாற்றுவேன் என்று உறுதிமொழி கொடுத்துள்ளார்.