World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: War, social cuts and the role of the Left Party-PDS

ஜேர்மனி : போர், சமூகநலச் செலவினக் குறைப்புக்களும் இடது கட்சி-PDS ன் பங்கும்

Statement by the Socialist Equality Party
23 January 2007

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச ஜனநாயக கட்சி (PDS)- இடது கட்சியும் தேர்தல் மாற்றீட்டு குழுவும் (WASG-Election Alternative) ஜனவரி 19-21 தேதிகளில் பிராங்பேர்ட் பல்கலைக்கழகத்தில் "எழுந்து நில், நிமிர்ந்து நில்" என்ற தலைப்பில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. "ஒரு புதிய இடது பல்கலைக்கழக கூட்டமைப்பை" தோற்றுவிக்க வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். இடது கட்சியின் வலதுசாரிக் கொள்கைகளுக்கு ஒரு புதிய இடது மறைப்பு இடும் முயற்சியை அம்பலப்படுத்தும் வகையில் சோசலிச சமத்துவக் கட்சி (Partei für Soziale Gleichheit-PSG) கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிடுவதின் மூலம் தலையிட்டது.

ஈராக்கின் மீதான போர் வெளிப்படையான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பில் ஒரு புதிய கட்டத்தை தொடக்கி வைத்தது. நவம்பர் இடைக்கால தேர்தல்களில் அமெரிக்க மக்கள் மிகத்தெளிவான பெருமான்மையில் ஈராக் போருக்கு எதிராக தங்களுடைய வாக்குகளை அளித்திருந்தபோதிலும்கூட, புஷ் நிர்வாகம் தற்பொழுது போரை விரிவுபடுத்தி, தான் அங்கு கொண்டுள்ள படைகளை அதிகப்படுத்தி, ஈரானுக்கு எதிரான ஒரு இராணுவத் தாக்குதலுக்கான தயாரிப்புக்களிலும் ஆழ்ந்த முறையில் ஈடுபட்டுள்ளது. புஷ் நிர்வாகத்தின் இலக்கு, அமெரிக்க பொருளாதார மற்றும் மூலோபாய ஆதிக்கத்தை மிக முக்கியமான மூலப் பொருட்களின் இருப்புகளை கட்டுப்படுத்துவதின் மூலம் பாதுகாக்கவேண்டும் என்பதாகும். தந்தரோபாய ரீதியிலான அணுகுண்டுகளை பயன்படுத்துவதையும் உள்ளடக்கிய ஒரு இராணுவத் தயாரிப்பு அச்சமடைந்துள்ள உலக மக்களின் கண்களுக்கு முன்னரேயே நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

இத்தகைய அதிகாரபூர்வ அரசியலை இராணுவமயமாக்கல் அமெரிக்காவுடன் நின்றுவிடவில்லை; அனைத்து வல்லரசுகளாலும் இது தொடரப்படுகின்றது. இராஜதந்திரநெறி என்ற மறைப்பிற்கு பின்னணியில் ஜேர்மனியும் ஐரோப்பாவும் மிகப் பரபரப்புடன் மீண்டும் ஆயுதமயமாக்கும் முயற்சிகளில் உயர்நிலைக்கு வருவதற்கு துடித்து பலாத்காரம் மூலம் தங்களுடைய சொந்த ஏகாதிபத்திய நலன்களையும் சுமத்த விரும்புகின்றன. ஜேர்மனிய, ஐரோப்பிய இராணுவம் மறுகட்டமைக்கப்பட்டு உள்ளதுடன், ஒரு சுயாதீன ஐரோப்பிய ஆயுதத் தளவாட தொழில்துறை சீரமைப்பு ஆகியவை அதிவேகத்துடன் செயல்படுத்தப்படுகின்றன.

வல்லரசுகளுக்கு இடையே எரிபொருள் விநியோகம், மூலப்பொருட்கள் இருப்புக்கள் மற்றும் சந்தைகளுக்கான அதிகரித்த முறையிலான பூசல்கள் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தைத்தான் அதிகரித்த வகையில் நினைவுகூர வைத்துள்ளன.

தற்போதைய தீவிமடைந்துள்ள சர்வதேச நிலைமைக்கு வெளியே, அதன் தொடர்பு இல்லாமல் எந்த சமூகப் பிரச்சினையும் கருத்திற்கொள்ளப்பட முடியாது. இராணுவ வலிமையை அதிகரிப்பதுடன் இணைந்த முறையில்தான் சமூகச் செலவின குறைப்புக்களும் ஜனநாயக உரிமைகள் தகர்ப்புக்களும் செல்லும். சமூகநலன்புரி செலவீன வெட்டுக்களினால் ஏற்படும் சேமிப்புக்கள் பலமுறையும் நேரடியாக இராணுவச் செலவினங்களுக்கு செலுத்தப்படுகின்றன.

இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டத்தை சமூகப் பிரச்சினையுடன் இணைத்துள்ள ஒரு பரந்த அரசியல் இயக்கம் என்பது மிகவும் அவசியமாகும்; இது மிகவும் அவசரமாக எதிர்கொள்ளப்பட வேண்டும்; அத்தகைய இயக்கத்தை கட்டமைத்தலுக்கு நேரிய மூலோபாயம் தேவையாகும்.

அதிகரித்த வகையில் இராணுவவாதமும், பொதுநலச் செலவின வெட்டுக்களும், தேசிய அரசு, உற்பத்திமுறை தனியார் உடைமையாக இருத்தல் என்பதை அடித்தளமாக கொண்ட ஒரு சமூக அமைப்பில் தம் வேர்களை கொண்டுள்ளன. இன்றைய பொருளாதாரம், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிதிய அமைப்புக்களினால் கட்டுப்படுத்தப்படுகின்றன; இவை புவியில் குறைவூதியத் தொழிலாளிகள், குறைந்த வரிகள், குறைந்த விலையில் மூலப் பொருட்கள் இவற்றை தேடி அலைகின்றன. ஒரு நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு எதிராக மற்ற நாடுகளில் இருக்கும் தொழிலாளர்கள் முன்னிறுத்தப்படுகின்றனர்; சீனா இன்னும் பிற நாடுகளில் இருக்கும் குறைந்த ஊதியங்கள் உலகெங்கிலும் இருக்கும் ஊதியங்கள், சமூகத் தரங்கள் ஆகியவற்றை குறைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

இத்தகைய சமூக அமைப்புடன் மக்களின் பெரும்பாலான பிரிவுகளுடைய நலன்கள் பொருந்தி, இயைந்து இருக்க முடியாது; தற்போதுள்ள முதலாளித்துவ நிலைமைக்குள் சமூக நெருக்கடி தீர்க்கப்பட முடியாது. ஆர்ப்பாட்டங்களும், "கீழிருந்து அழுத்தங்கள்" ஆகியவையும் வந்துள்ள போதிலும், சமூக, ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் மற்றும் இராணுவவாதம், போருக்கான உந்துதலை அவை தடுத்து நிறுத்தப் போதாதவை. அத்தகைய போராட்டத்தை வெற்றிகரமாக தொடுப்பதற்கு சமூகத்தை சோசலிச அடிப்படையில் மறுசீரமைக்க போராடும் ஒரு அரசியல் இயக்கம் தேவை ஆகும்.

இடது கட்சியின் ஏமாற்றுத்தனம்

போருக்கும், சமூக நலச் செலவின வெட்டுக்களுக்கும் எதிரான அத்தகைய அணிதிரளல், இடது கட்சி-PDS மற்றும் WASG உடைய கொள்களுக்கு எதிராக முழு உணர்வுடன் இயக்கப்பட்டால்தான் வெற்றி பெற முடியும். இந்த இரு அமைப்புக்களும் இழிந்த, ஏமாற்றுத்தனமான கொள்கை ஒன்றை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. புளித்துப் போன இடது வார்த்தை ஜாலங்களை இவை பயன்படுத்தி போராட்டப் பிரச்சாரங்களின் தலைமையை கைப்பற்றி பின்னர் முக்கியமான நேரத்தில் சமூக நலச் செலவினக் குறைப்புக்கள், இராணுவவாதம் இவற்றிற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் முடிவெடுத்து விடுகின்றன.

இடது கட்சி-PDS, அரசாங்கப் பொறுப்பு எடுத்துள்ள நகரங்களிலும் பகுதிகளிலும், அதன் அரசியல் ஜேர்மனியின் முக்கிய முதலாளித்துவ கட்சிகளின் கொள்கைகளில் இருந்து பிரித்துக் காணமுடியாத தன்மையைத்தான் கொண்டுள்ளது. தேசிய அளவில் தனது பங்கை ஒரு எதிர்க்கட்சியாக காட்டிக்கொள்வதன் மூலம் மட்டுமே, இடது கட்சி போருக்கும் இராணுவவாதத்திற்கும் எதிரான ஒரு சக்தி என்று காட்டிக் கொள்ளுவது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடது கட்சியின் தலைவர்களான Gregor Gysi, Oscar Lafontaine இருவரும் நீண்ட காலம் முன்னரே தாங்கள் இப்பிரச்சினையில் ஒத்துழைப்புக் காட்டுவதாக அடையாளம் காட்டியுள்ளனர். அவர்களுடைய சமாதான வழிவகைக்கான கருத்தை பசுமைக் கட்சியின் முத்திரையில் இருந்து பிரித்துக் காட்டுவதற்கு சிறப்பாக ஏதும் இல்லை; பசுமைக் கட்சியோ எவ்வளவு விரைவில் அத்தகைய கட்சி ஜேர்மனிய இராணுவத்தின் இராணுவச் செயற்பாடுகளுக்கு ஆதரவைக் கொடுப்பதற்கு பயன்படுத்தப்படமுடியும் என்பதை நிரூபித்து விட்டது.

இடது கட்சியை சேர்ந்த நகரசபை தலைவர் ஒருவர் கிழக்கு ஜேர்மனிய மாநிலமான Thuringia வில் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி ஒன்றில் புதிய ஜேர்மனிய இராணுவ வீரர்களுக்கு உறுதி மொழி எடுத்து வைப்பதற்கு தலைமை தாங்கினார் என்ற ஒரு செய்தியே கட்சி மாநாடுகளின் பல தீர்மானங்கள், கொள்கை அறிக்கைகள் என்ற பல பக்கங்களில் வரும் கருத்துக்களைவிட அதன் உண்மையை நன்கு எடுத்துரைக்கிறது. பல குழுக்கள் --தவறாகத் தங்களை "இடது", "சோசலிஸ்ட்", புரட்சிகர என்றுகூட -- அழைத்துக் கொள்ளுபவை இடது கட்சியுடன் "ஒரு பரந்த இடது கூட்டணி" என்ற பெயரை கூறிக்கொண்டு ஒத்துழைத்து வருகின்றன; உண்மையில் இந்த அமைப்பின் வலதுசாரி, சந்தர்ப்பவாத கொள்கைகளை வெளிப்படையாகக் கண்டிப்பதற்கு ஒருவரும் முன்வரவில்லை. இந்த அடிப்படையில்தான் சமூக ஜனநாயக கட்சியுடன் உடன்பாடு கொண்டுள்ள இடதுகட்சி இன்னும் கடுமையான முறையில் சமூக வெட்டுக்களை பேர்லினில் மற்றைய பழைமைவாத கட்சிகள் தலைமையிலான மாநிலங்களைவிட கூடுதலான முறையில் சுமத்துவதுடன், இன்னமும் ஒரு இடதுசாரி, முற்போக்கான சக்தி என்று காட்டிக் கொள்ளவும் முற்படுகிறது.

இத்தகைய கோழைத்தனமான இடது கட்சியின் அடிபணிதலை நாங்கள் உறுதியுடன் நிராகரிக்கிறோம். போருக்கும், பொதுநலச் செலவினக்குறைப்புக்களுக்கும் எதிரான வெற்றிகரப் போராட்டத்திற்கு முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று உண்மையை நிதானத்துடன் பார்த்து அவற்றின் உண்மையை எடுத்துரைத்தல் ஆகும். இடது கட்சியை பொறுத்தவரையில், இதன் பொருள் அவர்களுடைய சமூக விரோத, பிற்போக்குக் கொள்கைகளுக்கு எதிரான அயராத போராட்டத்தை நடத்தி அவர்களுடைய போலித்திரையை அகற்றுவதும் ஆகும்.

பேர்லின் படிப்பினைகள்

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இடது கட்சி பேர்லின் செனட்டில் சமூக ஜனநாயக கட்சியுடன் (SPD) உடன் கூட்டணியில் அதிகாரத்தில் பங்கு கொண்டுள்ளது; இது Berlin Bank Co. சரிவிற்கு பின் நடந்தது. இந்த "சிவப்பு-சிவப்பு-செனட்டின்" முதல் உத்தியோகபூர்வ நடவடிக்கை இந்த வங்கியின் தனிஉடைமையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் 21.6 யூரோ பில்லியன் கடன் மூலம் நிதி உத்தரவாதங்களை அளித்ததுதான்.

இதன்பின்னர் செனட் ஒவ்வொன்றாக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது: நகரத்தின் பொதுப் பணித் துறையில் 15,000 வேலைகள் தகர்க்கப்பட்டன; அடுத்த 5 ஆண்டுகளில் இது இன்னும் 18,000 தகர்ப்பு என்று ஆயிற்று; மாநில அரசாங்கம் உள்ளூர் வேலைகொடுப்பார் சங்கத்தில் இருந்து விலகியது; அதையொட்டி நடைமுறையில் இருந்த கூட்டு உடன்பாடுகள் அனைத்தும் கடக்கப்பட்ட ஊதியங்களில் 10 சதவிகிதக் குறைப்பிற்கு வழிசெய்யப்பட்டது; 3,000 வேலைகள் தகர்ந்தன; பேர்லின் போக்குவரத்து ஊழியர்களுடைய ஊதியங்களில் 10 சதவிகிதக் குறைப்பு ஏற்பட்டது. வேலைகளில் பாரிய குறைப்புக்கள், ஊதியங்களில் வெட்டுக்கள் ஆகியவை நகர மருத்துவமனைகளிலும் கொண்டுவரப்பட்டன. ஒரு மணிக்கு ஒரு யூரோ என்ற வகையில் 34,000 பணிகள் கொண்டுவரப்பட்டு நிரந்தர வேலைகள் அகற்றப்பட்டன; மழலையர் பள்ளிகளில் தொடங்கி பயிற்சிக் கட்டண உயர்வும், ஆசிரியர் எண்ணிக்கை குறைப்பும் நடைபெற்றன; ஆசிரியர் எண்ணிக்கை பள்ளிகளில் குறைக்கப்பட்டதுடன் பெற்றோர்கள் கொடுக்க வேண்டிய கட்டணமும் நுழைக்கப்பட்டது. 75 மில்லியன் யூரோக்கள் அளவிற்கு வெட்டுக்கள் பேர்லினில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களில் கொண்டுவரப்பட்டன; 65,000 வீடுகள் கொண்ட அரச வீடமைக்கும் அமைப்பு (GSW) தனியார் அமெரிக்க முதலீட்டாளர், ஊக வணிக நிறுவனமான Cerberus க்கு விற்கப்பட்டது.

பட்டியல் இன்னும் பெருகுகிறது. நகரத்தின் இடது கட்சி-SPD கூட்டணியினால் செயல்படுத்தப்பட்ட நீண்ட வலதுசாரி நடவடிக்கைகள் பட்டியலில் மிக முக்கியமான பகுதியைத்தான் மேற்கூறியது குறிப்பிடுகிறது.

நாடு முழுவதிலும் சமூக பாதுகாப்பு நலன்கள், பொதுப் பணித் துறைகளின் செலவினங்கள் ஆகியவற்றிற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பேர்லின் செனட் வழிகாட்டியது; இதையொட்டி மிகக் கடுமையான இடர்பாடுகளை கொண்ட விளைவுகளை பல தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பங்களும் எதிர்கொண்டன. தொழில்துறை வேலைகளின் எண்ணிக்கை வியத்தகு முறையில் வீழ்ச்சி அடைந்துவிட்டது; அதிகாரபூர்வ வேலையின்மை விகிதம் தற்பொழுது பேர்லினில் 18.1 சதவிகிதம் ஆகும். நகரத்தின் 3.3 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 250,000 பேர் முன்னர் "சமூக நல உதவி" என்று அழைக்கப்பட்டதின் கீழ் தற்பொழுது வந்துள்ளனர்; இது இன்று "Arbeitslosengeld-2" ("Unemployment-2") என்று அழைக்கப்படுகிறது. பேர்லின் இப்பொழுது கொண்டுள்ள வறுமையின் தரம் 1920களில் இருந்த மோசமான நிலைமைக்கு ஒத்துள்ளன. உத்தியோகபூர்வ தகவலின்படி ஐந்தில் ஒரு குழந்தை வறுமையில் வளர்கிறது.

தன்னுடைய உண்மையான முகத்தை இடது கட்சி பேர்லினிலும், அது அதிகாரத்தில் உள்ள கிழக்கு ஜேர்மானிய மாநிலமான Mecklenburg Pomerania விலும் காட்டியுள்ளது. இதற்கு ஒன்றும் "இடது", அல்லது "சோசலிஸ்ட்" என்று கூறிக்கொள்ளும் உரிமை கிடையாது. ஒவ்வொரு முக்கிய பிரச்சினையிலும் கட்சியின் பொருளாதாரம், தொழிலாளர்துறை, அறிவியல், ஆய்வு, பண்பாடு, சுகாதாரம், சமூகக் கொள்கை ஆகியவற்றின் செனட்டர்கள் பெருவணிக மற்றும் வங்கிகளுடைய நலன்களை மக்களுடைய இழப்பை பிரதிபலிக்கும் வகையில் செயல்படுத்தியுள்ளனர். எனவேதான் பாதி வாக்குகளுக்கும் மேலாக இழந்தது என்ற நிலை இதற்குக் கடந்த இலையுதிர்கால தேர்தல்களில் நியாயமான வகையில் கிட்டியது.

ஆனால் இத்தகைய கொள்கைகளின் சமூக விளைவுகள் மட்டும் பேரழிவைத் தருவதில்லை. இடது கட்சி இன்னும் கூடுதலான வகையில் பல குடும்பங்களையும் வறுமையிலும் திகைப்பிலும் "இடதுசாரிக்" கொள்கை என்ற பெயரில் தள்ளும் உந்ததுலைக் கொண்டுள்ளது; எனவே தீவிர வலதுசாரி தன்னல அரசியல்வாதிகளுக்கு அரசியலில் உகந்த இடத்தையும் இவர்கள் தோற்றுவிக்கின்றனர். புதிய பாசிச அமைப்புக்களான ஜேர்மனிய தேசியக் கட்சி மற்றும் பல வலதுசாரி தீவிரக் கட்சிகள், தங்களுடைய செல்வாக்கை முன்னாள் சோசலிச ஜனநாயக கட்சி (PDS) ஆட்சி நடத்தியிருந்த இடங்கள் அல்லது தற்பொழுது ஆட்சியில் இருக்கும் இடங்களில் பெருக்கிக் கொள்ள முடிந்தது என்பது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல;

LCR உம் Rifondazione Communista வும்.

எல்லையை தாண்டிச் சற்று பார்த்தால், ஒரு கட்சி சோசலிச வார்த்தை ஜாலங்களையும் முதலாளித்துவ ஒழுங்கமைப்பை பாதுகாப்பதையும் ஒன்றிணைக்கும்போது என்ன நேர்கிறது என்பது தெரியவரும்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலிய Rifondazione Comunista (RC) என்னும் கட்சி PDS உடன் ஐரோப்பிய அளவில் ஒத்துழைக்கும் கட்சி ஐரோப்பாவில் இடது புதுப்பிக்கப்பட்டுள்ளதற்கான மாதிரி என எடுத்துக் கூறப்பட்டது. இந்த அமைப்பு ஈராக் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

இன்று நடைமுறை அரசியல் முகாமில் அது உறுதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. ரோமனோ புரோடியின் வலதுசாரி அரசாங்கத்தின் ஒரு கூறுபாடு என்னும் முறையில், RC கடந்த கோடைகாலம் லெபனானில் இத்தாலி துருப்புக்களை அனுப்பியதின் மூலம் குறுக்கிடுவதற்கு தீவிர ஆர்வத்துடன் பிரச்சாரம் செய்தது. இதன் தலைவர் Fausto Bertinotti ரோமில் பாராளுமன்ற அவைத் தலைவராக, இத்தாலிய அரசியலில் மூன்றாம் உயர்ந்த இடத்தில் உள்ளார்.

பிரான்சில் புரட்சிகர கம்யூனிஸ்ட கழகம் (LCR) கடந்த இரண்டு ஆண்டுகளாக PDS யில் மற்றொரு ஐரோப்பியப் பங்காளியான பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒரு "பரந்த இடது கூட்டணி" ஏறுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று பாடுபட்டு வருகிறது. தன்னுடைய பங்கிற்கு பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி என்று அழைக்கப்படும் அமைப்புடன் முறித்துக்கொள்ள மறுக்கிறது; இது 35 ஆண்டு காலமாக அக்கட்சியுடன் ஒத்துழைத்து வருகிறது. இத்தகைய நிலையில், போருக்கும், சமூகநலன்புரி செலவினக் குறைப்பிற்கும் எதிராக பிரான்சில் பரந்த எதிர்ப்புள்ளவர்களுக்கு, நாட்டின் வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல்களில் வேட்பாளராக பங்கு பெறும் உரிமை இல்லை. இரண்டு முக்கிய வேட்பாளர்கள் இப்பொழுது உள்ளனர்; செகோலென் ரோயால் என்னும் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர், மற்றும் தற்போதைய உள்துறை மந்திரியான ஆளும் கோலிச UMP ஐ சேர்ந்த நிக்கோலா சார்க்கோசியுமே அவர்களாவர். வலதுசாரித்தனம், சட்டம்-ஒழுங்குக் கொள்கைகளை தேர்தல் பிரசாரத்தில் கொடுப்பதில் இருவருமே ஒருவரை ஒருவர் போட்டியிடுகின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு

சோசலிச சமத்துவக் கட்சியானது (PSG), சமூக ஜனநாயக கட்சி, இடது கட்சி, தொழிற்சங்கங்கள் இவற்றில் இருந்து முற்றிலும் சுயாதீனமான முறையில் ஓர் அரசியல் இயக்கத்தை கட்டமைத்து சமூகத்தை ஒரு சோசலிச அடிப்படையில் மறுசீரமைக்க போராட விழைகிறது.

வேலையின்மை, சமூகநலன்புரி செலவினங்கள் குறைப்பு, போர் ஆகியவற்றிற்கு எதிராக போரிடுதல் என்பது மார்க்சிச இயக்கத்தின் சக்திவாய்ந்த மரபுகளின் அடிப்படையில்தான் நடத்தப்பட முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மனிய பிரிவு என்னும் முறையில் PSG கடந்த காலப் பெரும் போராட்டங்களின் அடிப்படையில் தன்னுடைய தளத்தை கொண்டுள்ளது. சமூக ஜனநாயகத்திற்கும், மாஸ்கோவிலும் கிழக்கு ஜேர்மனியிலும் தவறான முறையில் மார்க்சிச மரபை பிரதிநிதித்துவப்படுத்தியதாக கூறிவந்த ஸ்ராலினிசத்திற்கும் ஒரு மார்க்சிச மாற்றீடு உள்ளது என்பதற்கு உயிர்வாழும் நிரூபணமாக நான்காம் அகிலம் உள்ளது.

1938ம் ஆண்டு ஸ்ராலினிசத்திற்கு எதிராக சர்வதேச சோசலிச முன்னோக்கை பாதுகாப்பதற்காக லியோன் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை நிறுவினார். நான்காம் அகிலத்தின் மூலங்கள் இடது எதிர்ப்பில் காணப்படாலும்; அதுதான் 1923ல் இருந்து சோவியத் ஒன்றியத்தின் சீரழிவிற்கு எதிராகப் போராடியது. சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகள் தொழிலாளர்கள் இயக்கங்களை ஆதிக்கத்திற்கு உட்படுத்தியிருந்த காலத்தில் மார்க்சிச மரபை தனிமைப்படுத்த அவற்றால் முடிந்தது. இப்பொழுது அந்த அதிகாரத்துவங்களின் அரசியல் திவால்தன்மை ஒரு புதிய வரலாற்றுச் சகாப்தத்தை தோற்றுவித்துள்ளது; இதில் நான்காம் அகிலம் தன்னுடைய செல்வாக்கை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. உலக சோசலிச வலைத் தளம் என்ற வடிவமைப்பில் இது தன்னை வெளிப்படுத்தியுள்ளது; அது குறுகிய காலத்தில் மிகப் பரந்த சர்வதேச வாசகர் தளத்தை கொண்டு, மார்க்சிச நெறியின் நேரிய ஒலியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

போருக்கும், சமூக செலவினக் குறைப்புக்களுக்கும் எதிரான போராட்டத்தைக் கொள்ள விரும்பும் அனைத்து மாணவர்களையும் இளைஞர்களையும் நாங்கள் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத்தள ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுகிறோம்.