World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

German minister calls for internment and assassination of terror suspects

பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை தடுப்புக் காவலில் வைப்பதற்கும் படுகொலை செய்வதற்கும் ஜேர்மன் மந்திரி அழைப்பு விடுகிறார்

By Peter Schwarz
11 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

உள்நாட்டு பாதுகாப்பு பற்றி, கூட்டாட்சி உள்துறை மந்திரி வொல்ப்காங் ஷொய்பிள (Wolfgang Schäuble) ஏதேனும் ஒரு புதிய திட்டத்தை முன்வைக்காமல் ஜேர்மனிய அரசியலில் ஒரு வாரம் கூட கடந்து செல்லுவதில்லை. ஜேர்மனியின் பெரும் கூட்டணியின் (CDU, SPD, CSU) உள்துறை மந்திரி தன் விருப்பப்படி நடக்க முடியுமேயானால், ஜோர்ஜ் ஓர்வெல்லின் "1984" தோற்றத்தையும் மறைத்துவிடக்கூடிய வகையில், ஜேர்மனி, ஒரு பெரிய அண்ணன் வகையிலான (Big brother-type) அரசாக மாற்றப்பட்டுவிடும்.

ஷொய்பிள முன் வைத்துள்ள திட்டங்களில் --அவற்றுள் பலவும் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டன-- பரந்த அளவில் புகைப்பட கருவிகள் மூலம் கண்காணித்தல், உடற்கூறு தகவல்களையொட்டி நபர்களை அடையாளம் காணல், மிகப் பெரிய தகவல் தளத்தின் அடிப்படையில் போலீஸ், இரகசியத் துறைகள், மற்ற அதிகாரிகள் அனைவரையும் குடிமக்களை விசாரிக்கும் வகையில் போலீஸ் வலைகள் ஏற்படுத்துதல், கை தொலைபேசிகளை ஒற்றுக்கேட்டல், நெடுஞ்சாலை புகைப்படக்கருவிகள் மூலம் கார் எண்கள்மீது கட்டுப்பாடு கொள்வதின் மூலம் தனிநபர்களின் நடவடிக்கைகளை சேகரித்தல், இரகசியமான ஆன்லைன் சோதனைகள் மூலம் கணினி குறுந்தகடுகளை சோதனையிடல், ஜேர்மனிய இராணுவத்தை உள்நாட்டு நோக்கங்களுக்கு பயன்படுத்துதல், மேலும் இது ஒன்றும் குறைந்த முக்கியத்துவம் உடையது அல்ல, பயங்கரவாத அச்சுறுத்தல் எனக் கருதப்பட்டால் சாதாரண பயணிகள் விமானத்தைக் கூட சுட்டு வீழ்த்துதல் ஆகியனவும் அடங்கும்.

சமீபத்திய Der Spigel பதிப்பிற்கு கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், உள்துறை மந்திரி ஒரு படி மேலே சென்றுள்ளார். பயங்கரவாதச் சந்தேகத்திற்கு உரியவர்களை வேண்டுமென்றே கொன்றுவிடல் அல்லது காலவரையற்று சிறையில் தள்ளுதல் இவற்றிற்கு அரசு அதிகாரம் கொடுக்கும் வகையில் சட்டபூர்வ வழிவகைகளை அவர் வலியுறுத்துகிறார்.

"உதாரணமாக, பயங்கரவாத செயற்றிறன் உடையவர்கள், ஆபத்து விளைவிக்கக்கூடியவர்கள் எனக் கருதப்படுபவர்கள், மற்றொரு நாட்டில் இருந்து கொண்டுவரப்பட முடியாமற் போனால், அவர்களை நாம் என்ன செய்ய வேண்டும்?" இதைத் தொடர்ந்து சதித்திட்டம் என்ற குற்றம் அறிகமுகப்படுத்த வேண்டும் என்றும் அதில் "எடுத்துக்காட்டாக, இணையத்தின் மூலம் அல்லது மொபைல் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுவதற்குத் தடை விதிக்க" வற்புறுத்தும சில தேவைகள் இருக்க வேண்டும் என முன்மொழிகிறார்; இதன் பின் அவர் மேலும் கேள்வி எழுப்புகிறார்: "அத்தகைய ஆபத்து விளைவிக்கக்கூடியவர்களை நாம் போரிடும் எதிராளிகளாக நடத்தி, அவர்களை சிறப்பிடிக்க முடியாதா?"

குவாண்டநாமோ என்னும் அமெரிக்க கொடுஞ்சிறை முகாம் பற்றிய குறிப்பு இங்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் உள்ளது. பல ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான கைதிகள் அவ்விடத்தில் சட்ட விரோதமாக, "சட்டவிரோத எதிரிப் போராளிகள்" என்ற காரணம் காட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். "பெருமளவு வழக்குகளில் சட்ட வழிப் பிரச்சினைகள் கடைசிவரையிலும்தான் உள்ளன; இலக்கு வைத்துக் கொலை செய்யப்படுதல் என அழைக்கப்படுவதிலும்கூட," என்று ஷொய்பிள தொடர்கிறார். இதன் பொருள் "அரசால் சந்தேகப்படுபவர்கள் முறையாக படுகொலை செய்தல்தான்" என்று Der Spigel விளக்கம் கொடுக்கிறது.

இதைத் தொடர்ந்து ஷொய்பிளவிடம் Der Spiegel கூறுகிறது: "நீங்கள் அரசியலமைப்பு முறையிலான அரசை தடுப்பு முறை அரசாக மறுவடிவமைக்கும்பொழுது அதன் மட்டுப்பாடுகளுக்குள் விரிவுபடுத்துகிறீர்கள், அதன்மூலம் அரச கொலைகளையும் ஏற்கிறீர்கள்." உள்துறை மந்திரி இதற்கு கோபத்துடன்: "இல்லை, இல்லை! ஜேர்மனிய மாநிலங்களின் போலீஸ் சட்டங்களை கவனியுங்கள். இறுதியில் துப்பாக்கிமூலம் விடையிறுப்பது இங்கு நீண்டகாலமாக உள்ளது" என பதில் கொடுக்கிறார்

அத்தகைய சட்டத்தின் சட்டபூர்வதன்மை பெரும் சர்ச்சைக்குரியது என்ற உண்மையை நாம் மறந்தாலும், ஷொய்பிளவுடைய ஒப்புமை சீற்றத்தை கொடுக்கிறது. "இறுதியில் துப்பாக்கி மூலம் விடையிறுப்பது" என்பது ஸ்தூலமாய் நெருக்கடிச் சூழ்நிலைக்குத்தான் பொருந்தும் உதாரணமாக பிணையாளிகளின் உயிர்களை காப்பாற்றுவதற்கு பிணைபிடித்தவரை கொல்வது ஒன்றுதான் வழி என்று இருக்கும்போது ஜேர்மனிய போலீஸார் சுட்டுக் கொல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் ஷொய்பிள கூறுவதோ சந்தேகத்திற்கு உரியவர்கள், நெருக்கடி நிலை இல்லாத நேரத்திலும், வேண்டுமென்றே கொல்லப்படலாம் என்பதாகும்; அதாவது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் வாடிக்கையாக நடத்தும் படுகொலைகளைப் போன்றது; அல்லது பயங்கரவாதிகள் தளம் என்று கூறப்படுபவற்றை அமெரிக்க ஏவுகணைகள் தாக்குவது போல். "ஆபத்து கொடுக்கக்கூடியவர்" என்ற சொல்லை ஷொய்பிள பயன்படுத்தியது ஒன்றும் தற்செயலான நிகழ்வு அல்ல.

இது போலீஸ் நடைமுறையில் இருந்து தோன்றியது ஆகும். இந்தச் சொல் ஜேர்மனிய குற்றவியில் ஆய்வு அலுவலகத்தால் (BKA) இரகசியத்துறைகளால் பயங்கவாத ஆதாரங்கள் திறனுடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை குறிக்க பயன்படுத்துவதாகும். Der Spigen இன் கருத்தின்படி, மார்ச் மாத கடைசிவரை, BKA 65 நபர்கள் "ஆபத்து கொடுக்கக்கூடியவர்கள் (சிகப்புத் தரம்) என்றும் 177 நபர்களை "பொருந்தும் நபர்கள் (மஞ்சள் தரம்) என்றும் அடையாளம் கண்டுள்ளது.

"ஆபத்து கொடுக்கக்கூடியவர்கள்" என்று குறிப்பிடுவதற்கான சான்றுகளை பற்றி ஆய்வது தன்னுடைய விசாரணைக்கு ஙிரிகி பயன்படுத்தும் அளவுகோல்களை போலவே கண்டறிவது கடினமாகும். ஒரு மசூதிக்கு அடிக்கடி செல்லுதல், தற்செயல் தொடர்பு, வெறும் விரும்பத்தாகாத அரசியல் கருத்துக்கள் அனைத்துமே BKA யால் விசாரணைக்கு போதுமான ஆதாரம் என்று மேற்கோளிடப்பட்டுள்ளன. Der Spigel எழுதுகிறது: "ஒரு நபரை "ஆபத்து கொடுக்கக்கூடியவர்" என்று அராசங்கம் அழைப்பதற்கு எவ்வித அளவுகோல்கள் இருக்க வேண்டும் என்று கேட்டால், சில முணுமுணுப்புக்கள்தான் பதிலாக வருகின்றன... அதன் நோக்கம் "அரசியல் நடைமுறையில்" இருந்து வருகிறது என்று BKA தெரிவிக்கிறது; அதற்கு சட்டபூர்வ இயைபு கிடையாது." முதலில் ஒருவர் சந்தேகிக்கப்பட்டுவிட்டால் அவருக்கு வெளியேறும் வழியே இல்லை. ஒரு BKA அறிக்கையை Der Spiegel சுருக்கமாக கூறுகிறது: "எவர்மீதும் குற்றம் சாட்டப்படவில்லை என்பதாலும், எவரும் விடுவிக்கப்படவில்லை என்பதாலும், ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது -- வெளிநாட்டிற்கு அனுப்பிவிடுதல் அல்லது சிறைவாசம்."

முதுகெலும்பற்ற விமர்சனம்

FDP அரசியல்வாதியான Sabine Leutheusser-Schnarrenberger, முன்னாள் நீதித்துறை மந்திரியாக அதிபர் ஹெல்முட் கோலின் கீழ் இருந்தவர், சந்தேகத்திற்கு உரியவர்களை படுகொலைசெய்யும் தன் திட்டத்தின் மூலம் ஷொய்பிள அரசியல் கொலையை சட்டநெறிக்கு உட்படுத்த முற்படுகிறார் என்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

Suddeutsche Zeitung ல் எழுதும் செய்தியாளர் Heribert Prantl, "ஜேர்மனிய நீதித்துறையை ஒரு குவண்டநாமோ மயமாக்கும் தன்மைக்கு" ஷொய்பிள தயாரித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். "அரசியலமைப்பு முறைக்கு உட்பட்ட ஒரு அரசை சட்டவிரோத ஆட்சியாக சிதைக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுகிறார்", "அரசே கொலைசெய்வதவற்கு அனுமதி கோருகிறார்" என்றும் Prantl வலியுறுத்தியுள்ளார். இதன் பின், சதித்திட்டம் ஒரு குற்றஞ்சார்ந்த நடவடிக்கை என்பது பற்றிய ஷொய்பிளவின் திட்டம் பற்றி Prantl கூறுகிறார்: " அத்தகைய சிந்தனை, பேச்சுக்கள் மற்றும் செயல்கள் இன்னொரு வழியில் குற்ற விசாரணைக்கு உள்ளாகாத பொழுது அரசிற்கு விரோதமாக நினைப்பவர், பேசுவபவர் நடப்பவர் எவரும் சதிகாரர்."

சமூக ஜனநாாயகக் கட்சியின் (SPD) தலைவரான Kurt Beck உம் ஷொய்பிளவை விமர்சித்தார்: "சுதந்திரத்தைக் கொலை செய்யும் கட்டத்தில், அதைக் காப்பாற்ற நம்மால் முடியாது." ஆனால் ஷொய்பிள இத்தகைய குறைகூறல்களை பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாமல் தன்னுடைய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவருவதில் உறுதியாக உள்ளார். SPD அணிகளிலிருந்து தீவிர எதிர்ப்பு ஏதும் வராது என்று அவருக்கு தெரியும். ஏனெனில் இவருடைய கருத்துக்கள் அவருடைய சமூக ஜனநாாயகக் கட்சி முன்னோடியான ஓட்டோ SL னால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின் விரிவுதான்; செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு பின்னர் SL இரண்டு பரந்த பாதுகாப்பு சட்டங்களின் தொகுப்பை இயற்றினார்; அவை ஏராளமான அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது முழு அளவிலான தாக்குதல் தன்மையை கொண்டிருந்தன.

இவ்வாண்டு மார்ச் மாதம், SL தயாரித்திருந்த இரு "பயங்கரவாத எதிர்ப்பு கோப்பு" எனக் கூறப்பட்டவற்றை செயல்படுத்தினார்; இவை போலீஸ், மத்திய அதிகாரிகள், இரகசிய பிரிவினர் ஆகியவை சேகரித்திருந்த தகவல்களை மையத் தளத்தில் நாட்டின் பாதுகாப்பு, உளவுத்துறை அமைப்புக்கள் பயன்படுத்துவதற்கு சேர்க்கப்பட்டன. போலீஸ் மற்றும் இரகசியப் பிரிவுகளுக்கும் இடையே இருந்த பிரிவை இது அகற்றிவிட்டது; அதுதான் ஜேர்மனியின் போருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது; அதையொட்டி BKA விற்கு அமெரிக்காவில் உள்ள FBI வழிவகையில் மகத்தான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூடுதலான அதிகாரங்களுக்கு SPD தொடர்ந்து ஆதரவை கொடுக்கிறது; அவ்வப்பொழுது ஒரிரு எதிர்ப்புக் கருத்துக்களை கூறினாலும் பொதுவான நிலை அதுதான். கட்சியின் உள்நாட்டு விவகாரங்கள் பற்றிய செய்தித் தொடர்பாளர் Dieter Wiefelsputz பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு விடையிறுப்பு பற்றிய ஒரு புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்; இதில் ஜேர்மனிய இராணுவம் உள்நாட்டு விவகாரங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதற்கு ஆதரவு கொடுத்துள்ளார். SPD பாராளுமன்ற பிரிவின் தலைவரான Peter Struck இதற்கு உடனடியாக கொடுத்த விடையிறுப்பு, ஷொய்பிள SPD ஐ "உறுதியற்ற சிறு யுத்தப் பிரபுக்கள் போல் நடத்திவருகிறார்" என்று குறைகூறியதும், ஜேர்மனிய பாதுகாப்புச் சட்டம் இன்னும் கடுமையாக்கப்படுவதற்கு SPD தயாராகி வருகிறது என்பதைத்தான் குறிப்பிடுகிறது.

மேலும், ஷொய்பிளவின் திட்டங்கள் பற்றி வெற்றாரவார தாக்குதல்கள் நடத்தினாலும், Süddeutsche Zeitung இல் காட்டியிருக்கும் நொண்டித்தன்மையுடைய விடையிறுப்பு உள்துறை மந்திரி கோடைகாலம் முழுவதும் மெளன விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்று விடுத்துள்ள அழைப்புத்தான். ஆனால் மறுபுறம், ஷொய்பிளவின் திட்டங்கள் CDU மாநிலப் பிரதமர்கள் மூவரால் வரவேற்கப்பட்டுள்ளன: ஹெசே இன் Roland Koch, பாடன் வூர்டெம்பேர்க்கின் Günther Öttinger மற்றும் சார்லாந்தின் Peter Müller ஆகியோரே அவர்கள். ஜேர்மனிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அமெரிக்காவில் செயல்படுத்தப்படும் சித்திரவதை நடைமுறைகளில் இருந்து தன்னை விலக்கி வைத்துக்கொண்டாலும், அதிபர் அங்கேலா மேர்க்கெல் பகிரங்கமாக குவண்டநாமோ முகாம் பற்றி குறைகூறியிருந்தாலும், ஷொய்பிள அமெரிக்க பாதுகாப்பு பிரிவுகளுடன் நெருக்கமாக தொடர்ந்து ஒத்துழைக்கிறார்.

Der Spiegel இடம் ஷொய்பிள கூறினார்: "இதுகாறும் இல்லாத அளவிற்கு இப்பொழுது அமெரிக்க உளவுத்துறை அமைப்புக்களுடன் நாம் மிக நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறோம். அமெரிக்கர்களை போல் உலகில் வேறு எந்த நாட்டிலும் உலகந்தழுவிய சிறப்பான வேவுபார்க்கும் முறை இல்லை.

அதனால் நாம் ஒவ்வொரு நாளும் பயனடைகிறோம். சமீப வாரங்களில், நான் பலமுறை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு மந்திரியான Michael Chertoff ஐ சந்தித்துள்ளேன். மே மாத நடுவில் அவர் தன்னுடைய மனைவியுடன் Gengenbach ல் உள்ள எங்கள் வீட்டிற்கும் வந்திருந்தார்; பயங்கரவாத ஆபத்து பற்றி நாங்கள் வெளிப்படையாக கருத்துப் பறிமாற்றங்களை கொண்டோம்."எனவே ஷொய்பிள இதுவரை மூனிச் அரசாங்க வழக்கறிஞர் அலுவலக ஜேர்மனிய குடிமகனான காலீட் எல்-மஸ்ரியைக் கடத்தி அவரை ஆப்கானிஸ்தானத்தில் இருந்து அமெரிக்க அதிகாரிகளுக்கு மாற்றிய CIA முகவர்களுக்கு எதிராக கொண்டுவந்துள்ள கைது ஆணைகளை செயல்படுத்துவதற்கு மறுத்துள்ளது வியப்பைக் கொடுக்கவில்லை.

அரசாங்க வக்கீல் அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு இணக்க அவர் மறுப்பது பற்றி Der Spigel ஆல் வினவப்பட்டதற்கு ஷொய்பிள கொடுத்த பதிலாவது: "உளவுத்துறை பிரிவுகளும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டியவைதாம். ஆனால் அமெரிக்கா அவை சிலவற்றை அவைகளே செய்வது நல்லது என்று நினைக்கிறது. நாம் அவர்களை அதற்காக மதிக்க வேண்டும்.

மேம்போக்காக பார்த்தால் ஷொய்பிளவின் வலுவான அரசிற்கான பிரச்சாரம் ஒரு தனிப்பட்ட மனிதரை ஆட்டிப் படைக்கும் கருத்து எனத் தோன்றலாம். வேறு எந்த ஜேர்மனிய அரசியல்வாதியும் தடையற்ற அரச அதிகாரத்திற்கு குறுக்கே நிற்கும் அனைத்து அரசியலமைப்பு தடைகளும் தகர்க்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த அளவு இடைவிடாமல், சோர்வடையாமல் பாடுபட்டதில்லை. ஷொய்பிளவின் கருத்தின்படி, "தற்கால அரசியல் சிந்தனையின் ஆரம்பக் கட்டம் உள்நாட்டிலும், வெளியேயும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும்." என்பதாகும்.

ஆனால் ஷொய்பிளவின் முன்முயற்சிக்கு சக்திவாய்ந்த புறநிலைக் காரணங்கள் உள்ளன. அவர் பெற்றுவரும் ஆதரவின் தரம் இதைத் தெளிவாக்குகிறது; அதேபோல் அவருடைய திட்டங்களுக்கு மிகக் குறைந்த எதிர்ப்புக்களும் அவற்றை தெளிவாக்குகின்றன.

ஈராக்கில் அமெரிக்காவின் பேரிடரை எதிர்கொள்ளும் வகையில், ஜேர்மனிய அரசாங்கம் மத்திய கிழக்கில் தன்னுடைய இராணுவ நிலைப்பாட்டை, தன்னுடைய நலன்களை முன்னேற்றிக் கொள்ளுவதற்காக அதிகரித்துள்ளது. ஜேர்மனியின் போருக்குப் பிந்தைய அரசியலமைப்பை (அடிப்படைச் சட்டம்) வருங்காலத்தில் ஜேர்மனிய துருப்புக்கள் NATO அல்லது UN பின்னணியில் ஈடுபடும் பணிகளுக்கு என்று மட்டும் இல்லாமல், "பிரத்தியேகமான தேசிய பொறுப்பின்" அடிப்படைக்கும் பணியாற்றும் வகையில் திருத்தப்பட வேண்டும் என்று ஷொய்பிள விரும்புகிறார்.

இதுவரை ஜேர்மனி ஒப்புமையில் அமெரிக்கா, கிரேட் பிரிட்டன் அல்லது ஸ்பெயினோடு ஒப்பிடும்போது பயங்கரவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்படவில்லை. ஆனால் ஷொய்பிளவின் திட்டம் ஜேர்மனிக்குள் அத்தகைய தாக்குதல்களின் ஆபத்தை அதிகரிக்கத்தான் உதவும்.

ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, ஜேர்மன் அரசை வலுப்படுத்துவது என்பது ஜேர்மன் சமூகத்தில் பெருகிவரும் அழுத்தங்களுக்கு ஒரு விடையிறுப்பாகும். ஆழ்ந்த ஜனநாயக மரபுகள் ஜேர்மனியில் இருந்ததில்லை; ஒரு வெற்றிகரமான பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி அங்கு நடைபெற்றதே இல்லை. ஜேர்மனியில் ஜனநாயக உரிமைகள் இருந்தன என்றால், அவை 1914க்கு முன்பு மார்க்சிச தலைமையிலான சமூக ஜனநாயக இயக்கத்தின் போராட்டத்தால் விளைந்ததுதான். அத்தகைய ஜனநாயக உரிமைகளின் குறைந்த தன்மை சமூக நிலைமைகள் ஒப்புமையில் உறுதியாக இருக்கும் வரையில்தான் தக்கவைக்கப்பட முடியும். 1933ல் ஹிட்லர் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுவதற்கு முன்பே வீமர் குடியரணு பெருகிய முறையில் சர்வாதிகார நடவடிக்கைகளை எடுக்கத் தலைப்பட்டு, நெருக்கடிக்கால ஆணைகள் மூலம் ஆண்டது; அவை SPD யினால் அரைகுறை விருப்பத்துடன் ஆதரவிற்கு உட்பட்டிருந்தன.

இறுதிப் பகுப்பாய்வில், ஷொய்பிள, அரசை மகத்தான அளவில் மறுஆயுதபாணியாக்கலை நடைமுறைப்படுத்தும் முயற்சியானது அதிகரித்த அளவில் சமூகம் துருவமுனைப்படலின் எதிர்விளைவு ஆகும்; இதில் போருக்கு பிந்தைய காலத்திய வர்க்க சமரசம் இனி சாத்தியப்படப்போவதில்லை. அச்சுறுத்தும் வன்முறை கொண்ட வர்க்க மோதல் என்ற பின்னணியில், ஷெளபிளவின் பிரச்சாரம் ஒரு கடும் எச்சரிக்கையாக கட்டாயம் உணரப்பட வேண்டும்.