World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Mosque massacre: Washington's "war on terror" shakes Pakistan

மசூதிப் படுகொலைகள்: வாஷிங்டனின் "பயங்கரவாதத்தின் மீதான போர்" பாகிஸ்தானை குலுக்குகிறது

By Bill Van Auken
11 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

இஸ்லாமாபாத்தில் லால் மசூதி எனப்படும் செம் மசூதிக்கு எதிராக ஒரு வார காலம் நடத்தப்பட்ட பாகிஸ்தானிய இராணுவ முற்றுகை செவ்வாயன்று பெருத்த உயிர்ச்சேதத்துடனும், கடுமையான யுத்தத்துடனும் வன்முறையில் முடிவடைந்தது. பாகிஸ்தானிய இராணுவ ஆதாரங்களை மேற்கோளிட்டு, Dawn News Television Network நாள் முழுவதும் போர் தொடர்ந்திருந்த நிலையில் 88 குடிமக்களும் 12 இராணுவ கமாண்டோக்களும், கொல்லப்பட்டனர் என்று தகவல் கொடுத்துள்ளது.

ஆனால் நேற்று இரவு வரை உண்மையான இறப்பு எண்ணிக்கையை உறுதி செய்ய முடியவில்லை. இராணுவச் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் வகீத் அர்ஷாத் "நடவடிக்கை முடிந்தபின் நாங்கள் உடல்களை எடுக்கத் தொடங்குவோம்" என அப்பட்டமாகக் கூறி உறுதியான எண்ணிக்கையை கொடுக்க, மறுத்துவிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் மசூதிப்பள்ளியில் படித்த, வறிய குடும்பங்களில் இருந்தும், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு எல்லைப்புற மாநிலத்தில் இருந்தும் வந்த இளைஞர்கள் எனச் சந்தேகிக்கப்படுகிறது. முற்றுகையின்போது, பரபரப்புற்ற குடும்ப உறுப்பினர்கள் மசூதியைச் சுற்றி இராணுவத்தால் போடப்பட்டிருந்த முள்வேலித் தடுப்புக்களுக்கு வெளியே, தெருமுனைகளில் கூடி நின்று, உள்ளே அகப்பட்டிருந்த தங்கள் குழந்தைகள், உறவினர்கள் பற்றிய நல்ல செய்திக்காக காத்திருந்தனர்.

பாகிஸ்தானின் அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவ சர்வாதிகாரி தளபதி பர்வேஸ் முஷாரஃப் பற்றிக் குறிப்பிட்டு, "அமெரிக்கா, ஐரோப்பா இன்னும் பிற இடங்களில் இருந்து ஒவ்வொரு மாணவருக்கும் டாலர்களை பெற்றுக் கொண்டிருக்கிறார். டாலர்களுக்காக எமது குழந்தைகளை அவர் கொன்றுகொண்டு இருக்கிறார்" என்று மசூதிக்குள் தன்னுடை இரு குழந்தைகளை கொண்டிருந்த, மற்ற பெற்றோர்களுடன் காத்திருந்த, பாத்ஷா ரெஹ்மான் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

செவ்வாய் கிழமை அதிகாலையில் இருந்து இஸ்லாமாபாத் தொடர்ச்சியான வெடிச் சத்தங்கள் மற்றும் தானியங்கி கருவிகளின் சுடுதல் சத்தம் மூலம் அதிர்ந்தது. முற்றுகைக்கு உட்பட்ட மசூதி நகரத்தின் மையத்தில் உள்ளது; சண்டையோ அரசாங்க கட்டிடங்கள் மற்றும் வெகு அருகில் இருக்கும் அரசாங்க அதிகாரிகளின் குடியிருப்புப் பகுதிகள் இவற்றினருகே நடந்தது. பாகிஸ்தான் தலைநகரத்தின் பெரும்பகுதிகள் ஊரடங்கு உத்தரவின் கீழ் இருந்தன; மக்கள் தெருக்களில் இருந்து ஒதுங்கிவிட்டனர். மசூதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கூட மக்கள் சில தோட்டாக்களால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

பல ஆயிரக்கணக்கான பாகிஸ்தானிய துருப்புக்கள் இந்த செயலில் ஈடுபடுத்தப்பட்டனர். சில தகவல்களின்படி, முஷாரஃப் நேரடியாக தாக்குதலை வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது; அவர் முன்பு கட்டுப்பாடு கொண்டிருந்த மிக உயர்மட்ட சிறப்புப் பிரிவின் தலைமையின்கீழ் இது நடந்தது. தாக்குதல் தொடங்கி 17 மணி நேரம் கடந்தும் பூசல் தொடர்கிறது என்பது எதிர்ப்பின் உறுதித்தன்மைக்கு சான்று ஆகும்.

இறப்பு எண்ணிக்கை பற்றிய தகவல்களை கட்டுப்படுத்தும் வகையில் பாகிஸ்தானிய துருப்புக்களும் போலீசாரும் செய்தி ஊடகத்தினரை மசூதியில் இருந்து வெகு தொலைவில் நிறுத்தியதுடன், மருத்துவமனைகளிலும் அனுமதிக்கவில்லை; ஏனெனில் இதுவரை வந்துள்ள தகவல்களைவிட இறப்பு எண்ணிக்கை கொடூரமாக இருக்கக் கூடும். இந்த தடையை மீற முற்பட்ட நிருபர்கள் சுடப்படுவர் என்று அச்சுறுத்தப்பட்டனர்.

செம் மசூதியில் இறந்தவர்கள் என உறுதிபடுத்தப்பட்டவர்களில் அதன் துணைத் தலைவரான அப்துல் ரஷிட் காஜியும் ஒருவராவர். உள்துறை அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜவேட் சீமா பாகிஸ்தானிய செய்தி ஊடகத்திடம் மசூதி வளாகத்தின் தரைமட்டத்தில் கீழ்ப்பகுதியில் தடுப்புக்களுக்கு இடைய மகளிர் மற்றும் சிறார்களுடன் இருந்ததாக கூறினார். துருப்புக்கள்மீது போராளிகள் சுட்டபின், "துருப்புக்கள் விடையிறுத்த வகையில், இருபுறத்தில் இருந்தும் வந்த தோட்டாக்களில் அவர் கொல்லப்பட்டார்."

காஜியுடன் இருந்த மகளிர், குழந்தைகள் கதி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை; ஆனால் மசூதியில் இருந்து வந்த செல்போன் தகவல் ஒன்றில் "எங்கு பார்த்தாலும் சடலங்கள் உள்ளன" என்று ஒருவர் கூறினார்; காஜியின் தாயாரும் கொல்லப்பட்டார். இராணுவமும், அரசாங்கமும் வாடிக்கையாக மகளிர் மற்றும் மசூதியில் இருந்த குழந்தைகளை "மனிதக் கேடயங்கள்" என்று குறிப்பிட்டு வந்தனர்; இதன் பொருள் அவர்கள் இறப்பின் பொறுப்பு மசூதித் தலைவர்களை சேர்ந்தது என்பதாகும். ஆனால் மசூதித் தலைவர்களோ மசூதியின் பின்னே தங்கியவர்கள் சுய விருப்பத்துடன்தான் அங்கு இருந்தனர் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தீவிர இஸ்லாமிய சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற வாஷிங்டனுடைய கோரிக்கைகளை திருப்திப்படுத்தும் வகையில்தான் குருதி கொட்டப்பட்ட நடவடிக்கை முஷாரப்பினால் உத்திரவு இடப்பட்டிருந்தது; பாகிஸ்தானுக்குள் சரிந்து கொண்டிருக்கும் தன்னுடைய நிலையை நிலைநிறுத்தவும் இது பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் மசூதி வளாகத்தின்மீது வன்முறையான தாக்குதல், கணிசமான உயிரிழப்பு என்பது பாகிஸ்தானை இன்னும் உறுதியற்ற தன்மைக்கு கொண்டு சென்று, உள்நாட்டுப் போரின் முதல் சண்டை என ஆகக்கூடும் என்று கருதுவதற்கும் இடமுண்டு.

முற்றுகையிடப்பட்ட மசூதியினுள் இருந்தவர்களுடைய நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய ஆதரவாளர்கள் பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் இடையே உள்ள ஒரு முக்கிய வணிகப் பாதையான இமயத் தொடரில் உள்ள மூலோபாய கார்கோரம் நெடுஞ்சாலையை அடைத்தனர். பல உள்ளூர் மசூதிப் பள்ளி மாணவர்களை கொண்டிருந்த எதிர்ப்பாளர் கூட்டம் முஷாரஃப் ஆட்சிக்கு எதிரான ஒரு ஜிகாத்தை (சமயப்போரை) தொடக்குவதாக உறுதி பூண்டனர்.

திங்களன்று மசூதியின்மீது தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு, பதட்டம் நிறைந்திருந்த வட கிழக்கு எல்லைப்புற மாநிலத்தில் பஜாவூர்ப்பகுதியில் சுமார் 20,000 பழங்குடி மக்கள், பலரரும் ஆயுதமேந்திய நிலையில் முற்றுக்கைக்கு எதிராக தெருக்களுக்கு வந்து "முஷாரஃப்பிற்கு மரணம்!", "அமெரிக்கா வீழ்க!" என்று கோஷமிட்டனர். செய்தி ஊடகத் தகவல்களின்படி, பாகிஸ்தானிய ஆட்சி 20,000 துருப்புக்கள் கொண்ட படைப்பிரிவு ஒன்றை அமைதியற்ற அப்பகுதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது; இப்பகுதியோ ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகள் இப்பகுதியில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின; இதையொட்டி ஏராளமான இறப்புக்கள் ஏற்பட்டன; அப்படையினர் எல்லை கடந்து பஜாவூரிலும் வட மேற்கின் மற்ற பகுதிகளிலும் செயல்களை தொடர இஸ்லாமாபாத்தின் அனுமதியை கோரியுள்ளனர். இஸ்லாமிய சக்திகளுக்கு எதிராக குழிதோண்டும் முஷாரஃப் ஆட்சியின் ஆழ்ந்த நெருக்கடி பாகிஸ்தானிலேயே ஒரு பெரிய அமெரிக்க தலையீட்டிற்கு போலிக் காரணத்தை வழங்கக்கூடும்.

வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் குருதி கொட்டுவதற்கு வாஷிங்டனின் ஒப்புதலுக்கு அடையாளம் காட்டினார். "பாகிஸ்தான் அரசாங்கம் மிகவும் பொறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்து அரசாங்கங்களும் ஒழுங்கை காப்பாற்றும் பொறுப்பை கொண்டிருக்கின்றன." என்று அவர் கூறினார்.

நெக்ரோபொன்ட் ஒரு தகவலைக் கொண்டு வருகிறார்

மோதல் தொடங்குமுன், கடந்த மாதம் இஸ்லாமாபாத் சென்றிருந்த, ஐ.நா.விற்கு வாஷிங்டனின் தூதரான ஜோன் நெக்ரோபொன்ட், ஒரு Voice of America பேட்டியில் கூறினார்: "இவ்விஷயத்தில் பாகிஸ்தானிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட அரசாங்கம் மற்றும் அதிகாரிகள்தான் தீர்வு காணவேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் இதுபற்றி ஏதும் கூறுவதற்கில்லை. எனவே, பாகிஸ்தான் அரசாங்கம் எடுக்கும் எந்த முடிவுகளுக்கும் மதிப்புக் கொடுப்போம்."

மத்திய அமெரிக்காவில் இருந்து ஈராக் வரை பெருமளவில் அமெரிக்க தூண்டுதலில் நிகழ்ந்த படுகொலைகளில் பழுத்த அனுபவம் உடைய நெக்ரோபொன்ட், மிகவும் கூடுதலான தன்னடக்கத்தை காட்டுகிறார். முஷாரப் மற்றும் பிற பாகிஸ்தானிய அதிகாரிகளுடன் இவர் நடத்திய விவாதங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான வேலையை அவர்கள் முடித்துவிட வேண்டும் என்ற வாஷிங்டனின் இறுதி எச்சரிக்கையை கொண்டிருந்தது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

செவ்வாயன்று கிளீவ்லாந்தில் பேசிய ஜனாதிபதி புஷ், இஸ்லாமாபாத்தில் நடந்த படுகொலைக்கு பேராதரவு ஒப்புதலைக் கொடுத்தார். சர்வாதிகாரி முஷாரஃப் பற்றிக் கூறுகையில், "எனக்கு அவரைப் பிடிக்கும்; அவரை நான் பாராட்டுகிறேன்" என்று கூறிய அவர் "இத்தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அவர் வலுவான நண்பர்" என்றும் விவரித்தார்.

இந்த "தீவிரவாதிகள்" பெரும்பாலும், இப்பகுதியில் வாஷிங்டன் மற்றும் அதன் முக்கிய நட்பு அரசாங்கமான பாகிஸ்தானின் இராணுவ ஆட்சி ஆகியவை தொடரும் கொள்கைகளின் துணைவிளைவுதான் என்பது அமைதியாகக் கூறப்படாமல் விடப்படுகிறது.

மசூதிக்கும் முஷாரப் அரசாங்கத்திற்கும் இடையே அழுத்தங்கள் சமீப காலத்தில் பெருகிய முறையில் தீவிரமாயின; இதற்குக் காரணம் ஒருபுறம் அரசாங்கத்தின் முயற்சியான மசூதி சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் நிலங்களை எடுத்துக் கொள்ளுவது ஆகும்; மறுபுறம் தலைநகரிலும் நாடு முழுவதும் ஷரியா சட்டங்கள் சுமத்தப்பட வேண்டும் என்ற இஸ்லாமிய கோரிக்கைகள் ஆகும். செம் மசூதி வளாகத்தில் இருக்கும் மாணவர்கள் தங்களுடைய கண்காணிப்பு முயற்சியை, அதாவது DVD க்கள், வீடியோ ஒலிநாடாக்கள் ஆகியவற்றை விற்கும் கடைகள் மீதான தாக்குதல்களை அதிகரித்தனர், கடந்த மாதம் பரவலாக அறிவிக்கப்பட்டுள்ள சம்பவத்தில், ஒரு மசாஜ் நிலையத்தில் இருந்து சீன மகளிர் குழு ஒன்றையும் கடத்தியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி பெய்ஜிங்கில் இருந்தும் பாகிஸ்தானிய அரசாங்கத்திடம் இருந்தும் எதிர்ப்புக்களையும் சீற்றத்தையும் தூண்டியது; தன்னுடைய மிக நெருக்கமான பங்காளி, நட்புநாடுகளில் ஒன்று என சீனாவை பாகிஸ்தான் அரசாங்கம் கருதுகிறது.

ஆனால் எப்பொழுதும் உறவுகள் இப்படி நச்சுத் தன்மையுடனும் இருந்ததில்லை. மசூதியின் மைய இருப்பிடம், பாகிஸ்தானின் இராணுவ உளவுத்துறை ISI தலைமையகத்தில் இருந்து சில அடுக்குகள் தூரம்தான் என்பது, ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. பல ஆண்டுகளாக செம் மசூதி கிட்டத்தட்ட அரசாங்கம் நடத்தும் மசூதி போல் விளங்கி, 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அயூப் கான் காலத்தில் இருந்து, தொடர்ச்சியான பாகிஸ்தானிய இராணுவ ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்றதாகும்.

முன்பு கடைசி இராணுவ சர்வாதிகாரியாக இருந்த ஜியாவுல் ஹக்கின் கீழ்தான் மசூதி, அப்பொழுது இருந்த பாகிஸ்தானிய ஆட்சி மற்றும் அமெரிக்கா அப்பகுதியில் பின்பற்றிவந்த கொள்கைகளை ஒட்டி அரசியலில் பிணைந்து நின்றது. ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கு எதிரான, CIA ஆதரவிற்குட்பட்டிருந்த முஜாஹிதீனுக்கு கணிசமான கருத்தியல் மற்றும் தளவாடங்கள் ஆதரவுத் தளமாக பயன்பட்டு வந்தது. இதற்கு பதிலாக ஜியா இதற்கு பிரத்தியேக நிலப்பகுதியை வழங்கினார், அந்த இடத்தில்தான் நேற்றைய மோதல் கட்டவிழ்ந்தது.

பல தசாப்தங்கள் மசூதியை நடத்திய முஸ்லிம் மதகுருவான மெளலான அப்துல்லா 1998ல் படுகொலை செய்யப்பட்டார். இப்பொழுது போலீஸ் வசம் இருக்கும் அப்துல் அஜிஸ் மற்றும் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்துல் ரஷீத் என்னும் அவருடைய இரு மகன்களும் செம் மசூதி பொறுப்பை எடுத்துக் கொண்டு, ஆப்கானிஸ்தானின் தாலிபன் மற்றும் அல் கொய்தா உட்பட, முஜாஹிதீனுக்கு பின் வந்தவர்களுடனும் நெருக்கமான பிணைப்புக்களை கொண்டிருந்தனர்; இந்த உறவை அவர்கள் பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் ISI உடன் பகிர்ந்து கொண்டனர்.

பாகிஸ்தானிய ஆட்சியாளர் ஆப்கானிஸ்தானின்மீது அமெரிக்க படையெடுப்பிற்கு ஆதரவு கொடுத்து தாலிபன் அகற்றப்படுவதற்கும் உதவியபொழுது மசூதிக்கும் முஷாரஃப்பிற்கும் இடையே உறவுகள் செப்டம்பர் 2001க்கு பின்னர் சீர்குலைந்தன. அவருடைய கொள்கைகளை கண்டித்திருந்தாலும், முஷாரஃப் இஸ்லாமியவாதிகளை இடதில் இருந்து வரும் எதிர்ப்புக்கு ஒரு எதிரெடையாக பயன்படுவர் என்று கருதி அவர்களை ஒப்பீட்டளவில் சகிப்புத்தன்மையுடன் நடத்தினார்.

செம் மசூதி முற்றுகையை ஒரு குருதி சிந்துதலின் மூலந்தான் நிறுத்தவேண்டும் எனத் திட்டமிட்ட அரசியல் முடிவைத்தான் பாகிஸ்தான் சர்வாதிகாரி எடுத்தார் என்பதில் ஐயமில்லை. செவ்வாய் அதிகாலையில், முன்னாள் பிரதமரும் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின் தலைவருமான செளத்ரி ஷூஜட் ஹுசைன் தலைமையில் ஓர் உயர்மட்ட பேச்சுவார்த்தை குழு மசூதி சரணடைவதற்கு ஒப்பந்தம் ஒன்றை தயாரித்திருந்தது. முஷாரஃப்பிடம் ஆவணம் கொடுக்கப்பட்டபோது, அவர் அதில் இருந்த கருத்துக்கள் ஒவ்வொன்றையும் கிட்டத்தட்ட திருத்தி, அது செயலாற்றப்பட முடியாமல் செய்துவிட்டார். அதைத்தொடர்ந்து வெகு விரைவில், தாக்குதல் தொடங்கியது.

வாஷிங்டனை திருப்திப்படுத்துவது என்பது முஷாரஃப்பின் கணிப்புக்களில் முக்கியமான ஒன்று என்றாலும், அவருடைய ஆட்சியை எதிர்கொண்டுள் அரசியல் நெருக்கடியின் ஆழ்ந்த தன்மையும் இதில் வெளிப்படுகிறது.

பாகிஸ்தானின் தலைமை நீதிபதி செளத்திரி இப்திக்காரை திடீரெனப் பணி நீக்கம் செய்ததால் விளைந்த வெகுஜன எழுச்சி, இவருடைய ஆட்சி பற்றிய பெருகிய விமர்சனத்திற்கு வழிவகுத்தது; அதிகாரத்தில் இவர் இருப்பது பற்றிய திறன் பற்றியும் வினாக்கள் எழுப்பப்பட்டன; இது குறிப்பாக அமெரிக்க அரசியல் நடைமுறை மற்றும் செய்தி ஊடகத்தில் வெளிவந்தது. இப்பொழுது, செம் மசூதியில் கொட்டப்படுள்ள குருதி இந்த அரசியல் விவாதம் முஷாரஃப் "பயங்ரவாதத்திற்கு எதிரான போரில்" ஒரு முக்கிய நண்பர் என்று திசை திருப்பப்பட்டுள்ளது.

இந்த முற்றுகை மற்றும் இதைத்தொடரும் எதிர்பார்க்கப்படும் எழுச்சிகளை ஒரு போலிக்காரணம் காட்டி, புதிய அவசரகால நிலைமையை அவர் சுமத்தக்கூடும் என்று பெருகிய முறையில் ஊகங்கள் வந்துள்ளன; இதையொட்டி வரவிருக்கும் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் தவிர்க்கப்படலாம்.

பெனாசீர் பூட்டோவின் பாக்கிஸ்தான் மக்கள் கடசி (PPP) உடன் சேர்ந்து கொண்டு அத்தகைய ஆட்சிமுறையை முஷாரஃப் நிறுவக்கூடும்; இஸ்லாமியவாதிகளுக்கு எதிராக மதசார்பின்மையை நிலைநிறுத்துவதற்கு இராணுவத் தலைவருடன் தான் பொது ஒத்துழைப்புதர தயாராக இருப்பதாக அது குறிப்புக் காட்டியுள்ளது.

பாகிஸ்தானின் நாளேடான Dawn செவ்வாயன்று கடந்த வார இறுதியில் லண்டனில் பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் நடத்திய பல கட்சி மாநாட்டில் ஒரு கூட்டு அறிக்கையை ஏற்கும் நிலைப்பாட்டை PPP கிட்டத்தட்ட தகர்த்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.

ஒரு தேர்தல் இல்லாமல் தனக்கு மறுமுறை பதவி கொடுக்க தேசிய, மாநில சட்ட மன்றங்களை பயன்படுத்த முஷாரஃப் முயன்றால், அவற்றில் இருக்கும் தங்கள் உறுப்பினர்கள் மொத்தமாக இராஜிநாமா செய்ய வேண்டும் என்று மற்ற கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. "அரசாங்கத்துடன் இரகசியப் பேச்சு வார்த்தைகள் நடத்துவதாக நம்பப்படும் PPP பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்ட மன்றங்களில் இருந்து இராஜிநாமா செய்வது பற்றி உறுதியாக இல்லை; மற்ற கட்சிகளோ தளபதி-ஜனாதிபதி தன்னுடைய திட்டங்களை செயல்படுத்தினால் உறுதியாக உள்ளன." என்று செய்தித்தாள் கூறுகிறது.

பாகிஸ்தானிய உயரடுக்கின் எதிர் கன்னைகளுக்கிடையே எத்தகைய ஏற்பமைவை ஒட்டுப் போட்டாலும், செம்மசூதி படுகொலை நாட்டின் அனைத்து அரசியல் நிறுவனங்களின் ஆழ்ந்த உறுதியற்ற தன்மைக்கு இன்னுமொரு அடையாளம் ஆகும்; மற்றும் "பயங்கரவாதத்தின் மீதான போரில்" வாஷிங்டனின் முக்கிய நட்பு நாடு ஒரு புரட்சிகர நெருக்கடிக்குள் அமிழ்த்தப்படும் என்ற அதிகரித்து வரும அச்சுறுத்தலுமாகும்.