World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

New French law treats juvenile offenders as adults

புதிய பிரெஞ்சு சட்டம் இளம் குற்றவாளிகளை வயது வந்தவர்களாக நடத்துகிறது

By Pierre Mabut
14 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

புதிய பிரெஞ்சு நீதித்துறை மந்திரியான Rachida Dati ஜூலை 5ம் தேதி இளவயதினர் குற்றம் செய்வதை தடுக்கும் சட்டவரைவு ஒன்றை செனட் மன்றத்திற்கு அளித்தார். இது ஏற்கப்பட்டு ஜூலை 17ம் தேதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.

நீதித்துறை நடுவர்களாலும் சமூகத் தொண்டு அமைப்புக்களாலும் நிராகரிக்கப்பட்டுள்ள இந்த சர்ச்சைக்குரிய புதிய சட்டம், அற்ப குற்றங்கள் மற்றும் தீவிர குற்றங்களுக்கும் திரும்ப குற்றம் செய்பவர்களுக்கு தானாகவே குறைந்தபட்ச தண்டனைகளுக்கு விண்ணப்பிக்கிறது. 16 வயது ஆன இளம் குற்றவாளிகள் இனி வயது வந்தோர் போல் நடத்தப்படுவர்.

குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவலர் போல் காட்டிக் கொள்ளும் Rachida Dati, "ஒரு தடுப்பாகச் செயல்படக்கூடிய குற்றவியல் சட்டத்திற்கான" ஜனாதிபதி சார்கோசியின் தேர்தல் திட்டத்தில் இருந்து தெளிவான கட்டளையை எடுத்துக் கொள்கிறார். "பாதுகாப்பு, அமைதி ஆகியவற்றுக்கான நெறியான கோரிக்கை என மனதை ஆட்டிப்படைத்து நிற்கும் சினம்கொண்ட பிரெஞ்சு மக்களுக்கு நாம் உறுதியான விடையளிக்க வேண்டும்" என்று அவர் அறிவித்தார்.

ஒரு வழக்கறிஞரான Dati, 2003ல் இருந்து சார்க்கோசிக்கு ஆலோசகராகவும், 2006ல் இருந்து ஒரு UMP உறுப்பினராகவும் இருந்து வருகிறார். "கடினமான இளங்குற்றவாளிகளை" சட்டம் இலக்கு கொண்டுள்ளது என்றும், இதன் விளைவுகள் சிறையில் கைதிகள் எண்ணிக்கையை பெருக்கும் என்ற விமர்சனத்தை "ஒரு திரித்தல்" என்றும் கண்டித்தார். ஆனால் ஏற்கனவே சிறையிலுள்ளோர் எண்ணிக்கை வெடிக்கக்கூடும் என்று கணித்துள்ள நீதிபதிகளும் குற்றவியல் நடுவர்களும் இக்கூற்றை மறுத்துள்ளனர்.

அடிக்கடி சிறு குற்றம் செய்பவர்களின் சராசரி தண்டனைக்காலம் 5.7 மாதமாக இருக்கும் நிலையில், புதிய சட்டம் இளம் குற்றவாளிகளுக்கு ஓராண்டு சிறைவிதிப்பு கட்டாயமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. Dati கொடுத்துள்ள நீதித்துறை புள்ளிவிவரங்களின்படி, இளவயதினர் செய்யும் குற்றங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 40 சதவிகிம் அதிகமாகியுள்ளது. தற்பொழுது, பிரெஞ்சு சிறையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 64,000 ஆகும். இடம் இருக்கும் எண்ணிக்கையை விட இது 12,000 அதிகமாகும். இந்த எண்ணிக்கையில் 16 மற்றும் 17 வயதினை உடைய 3,150 பேரும் உள்ளடங்குவர்.

புதிய சட்டம் மிகக் கடுமையாக தண்டனை வழங்கும்போது நீதிபதிகளுக்கு இருக்கும் விருப்புரிமையை வரம்பிற்கு உட்படுத்துகிறது. குற்றம் புரிபவரின் ஆளுமை, குற்றச் சூழ்நிலை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளும் ஒரு நீதிபதியின் தீர்ப்பு இப்பொழுது குற்றம் புரிந்தவர் சமுதாயத்திற்குள் மறு வாழ்வு அளிக்கப்பட முடியும் என்ற "அசாதாரணமான உத்தரவாதத்தினை" அடிப்படையாகக் கொண்டாக வேண்டும்.

புதிய நீதித்துறை மந்திரியால் ஏற்கப்பட்டுள்ள இக்கடினப்போக்கு, சட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அவருடைய ஊழியர்களிடம் இருந்தே பெரும் குறைகூறலுக்கு உட்பட்டுள்ளது. அவருடைய முதன்மை தனிச்செயலாளரான Michel Dobkine தன்னுடைய பதவியை ஜூலை 7ம் தேதி "முற்றிலும் சொந்தக் காரணங்களுக்காக" என்று கூறி இராஜிநாமா செய்துவிட்டார். இதைத் தொடர்ந்து சில நாட்களில் அவருடைய ஊழியர்களில் உயர் அந்தஸ்தில் இருக்கும் மூவரும் இராஜிநாமா செய்தனர்; அவர்களில் ஒருவர் "இளம் குற்றவாளிகளின் சட்ட உரிமைகளுக்கு" பொறுப்பாக இருந்தவராவர்.

இவ்வம்மையாருக்கு சார்க்கோசி தன்னுடைய முழு ஆதரவையும் கொடுத்துள்ளார். "நான் Rachida உடன் பேசினேன். என்னுடைய முழு நம்பிக்கையையும் தெரிவித்துள்ளேன்." என்று அவர் கூறினார். இராஜிநாமாக்கள், "அமைச்சரக மந்திரிசபை வாழ்வில் ஒரு வாடிக்கையான பகுதிதான்" என்றும் அவர் உதறித்தள்ளினார். ஆனால் Liberation TM தொழிற்சங்க ஆதாரங்கள் கொடுத்துள்ள தகவல்படி, "தற்போது விஷயங்கள் மோசமாகத்தான் சென்று கொண்டிருக்கின்றன" மற்றும் ஒருவித அமைதியற்ற தன்மையை பிரதிபலிக்கின்றன".

சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் நீதித்துறை மந்திரியான Robert Badinter செனட் மன்றத்தில் இச்சட்டத்தை விமர்சித்தார்; அதிலும் ஒழுக்கநெறி விளக்கத்திற்கு இருக்கும் அனைவரிலும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயரையே உதாரணமாகக் கொண்டார். "குற்றங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றத்திற்கான காரணங்கள்மீது கடுமையாக இருக்க வேண்டும் என்று டோனி பிளேயர் கூறியுள்ளார்" என்று Badinter கூறினார்; "இதில் இரண்டாம் பகுதி முதல் பகுதியில் இருந்து பிரிக்க முடியாதது என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள்... திரும்பத் திரும்ப குற்றங்கள் நிகழ்வதற்கான வளர்ப்பிடம் சிறையில் பெரும் கூட்டம் கூடுவதால்தான் என்பதை நாம் அறிவோம்."

Badinter இன் கருத்தின்படி, "மீண்டும் குற்றத்தில் ஈடுபடலுக்கு எதிரானது வெற்றிகரமான முறையில் மீண்டும் கெளரவமாக வாழ வழிவகுத்தலாகும்." இதன்மூலம் சோசலிஸ்ட் கட்சி என்ன பொருள் கொண்டுள்ளது என்பது அதன் வேட்பாளர் செகோலென் ரோயால் சமீபத்திய ஜனாதிபதி தேர்தல்களில் கூறியதில் வெளிப்பட்டது. இளம் குற்றவாளிகள் புதிய படைவீரர்களுக்கான பயிற்சி முகாம் பாணி மறுவாழ்விற்காக இராணுவத்திற்கு அனுப்பப்படவேண்டும் என்று அவர் வாதிட்டார்.

வழக்கறிஞர்கள், நீதிபதிகள், இளம் குற்றவாளிகளை கவனிக்கும் உளவியல் வல்லுனர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் என்று தொழில்நெறி மிகுந்தவர்கள் வலுவாக இப் புதிய சட்டத்தை எதிர்த்துள்ளனர். "வளரும் இளமைப் பருவத்தினர் வயதுவந்துவிட்டோர் அல்லர்" என்ற வேண்டுகோள் தொடங்கப்பட்டுள்ளது; 16 முதல் 17 வயது வரை இருக்கும் இளைஞர்கள் 15,000 பேர் போலீசாரால் ஒவ்வொரு ஆண்டும் பலமுறை விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த பெரும்பாலான வளரும் இளமைப் பருவத்தினர் 14 வயதில் இருந்து கல்வி ஏதும் பெறவில்லை. தகுதிகள் ஏதும் இல்லாமல் அவர்கள் முதல் வேலை பெற முடியாது. சமூகத்திற்கு பயன் இல்லை என்று கருதப்பட்டு, பலமுறை தோல்வியினால் அவமானப்படும் இவர்கள், அலைகின்றனர், அதனால் தூண்டப்பட்டு தங்கள் குற்றங்கள் பலவற்றை ஒன்றாய் செய்கின்றனர்."

இளம் குற்றவாளிகள் "வாடிக்கையாக" சிறையில் தள்ளப்படுதல் "ஒரு மேலே செல்லமுடியாத முடிவுநிலையை" ஏற்படுத்திவிடும் என்று இவர்களுடைய முறையீடு விளக்குகிறது. இளைஞரை எதிர்கொள்ளக்கூடிய ஒரு நிலை "கை தொலைபேசி திருடப்படுதல், அத்தகைய இரு முந்தைய குற்றங்களுக்கு பின்னர் ஒரு 16 வயது நிரம்பியவர் இரு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறக்கூடும்." "இளவயது குற்றவாளிகள் மறுசீரமைப்பிற்கான திட்டத்தை வந்தடைவதற்கு அரசாங்கம் முதல் இத்துறையில் தொழில்நேர்த்தியுடன் ஈடுபட்டுள்ளவர்கள் என்று அனைவரும் ஒருங்கிணைந்து முயன்று முந்தைய சட்டத்தை விவாதித்து மதிப்பீடு செய்வதற்காக" என கையெழுத்து சேகரிப்பதற்காக வந்துள்ள இம்முறையீடு வேண்டுகோள் விடுக்கிறது.

இந்த முறையீட்டின் நேர்மை ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய பிரெஞ்சு அரசாங்கத்தை முற்றிலும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. தான் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னரே, சார்க்கோசி போலீஸ் மற்றும் அரச எந்திரத்தின் பல பிரிவுகளுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்தார். அவரால் நியமிக்கப்பட்ட நீதி மந்திரி அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்டம், இவருடைய ஆட்சியின் தனித்தன்மையின் அடையாளமாக "சட்டம், ஒழுங்கு" கொள்கை இருக்கும் என்பதை தெளிவாக்குகிறது.