World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

ISSE holds successful campaign and meeting in Warsaw, Poland

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் அமைப்பு போலந்து வார்சோவில் வெற்றிகரமான பிரச்சாரக் கூட்டத்தை நடத்துகிறது

By our correspondent
7 June 2007

Use this version to print | Send this link by email | Email the author

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் அமைப்பின் (ISSE) உறுப்பினர்கள் சமீபத்தில் போலந்தின் தலைநகரான வார்சோவில் போருக்கு எதிரான ஒரு சோசலிச, சர்வதேச முன்னோக்கிற்கான ஆழ்ந்த இரு-வார பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை அவர்கள் வழங்கியதுடன், வார்சோ பல்கலைக்ழகம், Academy of Arts மற்றும் நகரத்தின் முக்கிய தொழில்நுட்ப பயிலகத்தில் புத்தகக் காட்சியையும் அமைத்திருந்தனர். மாணவர்கள் துண்டுப் பிரசுரங்களை வாங்கிப் படித்து, ஒரு மணி நேரத்திற்கு நீடித்த விவாதங்களில் ஆர்வத்துடன் பங்கு கேற்றனர்; இவை பலதரப்பட்ட கருத்துக்களையும் வெளிக்கொண்டுவந்தன. இப்பிரசாரம் மே 19ம் தேதி வெற்றிகரமான கூட்டத்தில் முடிவை கண்டது.

1816ல் ரஷ்ய ஜார் மன்னரால் நிறுவப்பட்ட வார்சோ பல்கலைக்கழகம் இன்றுவரை ஒரு முக்கியமான அறிவார்ந்த, பண்பாட்டு மையமாக போலந்தில் இருந்து வருகிறது. மார்ச் 1968ல் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய மாணவர்கள் போராட்டம் நாடு முழுவதும் பரவியது. வார்சோ மக்கள் அரங்கில், Adam Mickiewicz உடைய "Dzidy" என அறிவிக்கப்பட்டிருந்த நாடகம் இரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் எதிர்ப்பு இயக்கம் விரைவாக பரவி, நாட்டின் அரசியல் பண்பாட்டுத் தணிக்கைக்கு எதிரான பொது எதிர்ப்பாக மாறி, அரசாங்கத்திற்கு சொந்தமான உடைமைகள் சமூகக் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது. இந்த எதிர்ப்புக்கள் சக்தியை கொண்டு அடக்கப்பட்டன; பரிவுணர்வு காட்டிய பேராசிரியர்கள் வேலைகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆயினும்கூட, பல்கலைக்கழகம் திறனாயும் சிந்தனை மையமாக தொடர்ந்திருந்தது.

வார்சோ நகர மையத்திற்கு புறத்தே பல்கலைக் கழகம் அமைந்துள்ளது; மிக நேர்த்தியான முறையில் இது வசதிகளை கொண்டுள்ளது. நவீன, பல அடுக்குகளை கொண்ட கட்டிடங்கள் ஸ்ராலினிச சகாப்தத்தில் எஞ்சிய சில மகத்தான கட்டிடங்களுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் பிச்சைக்காரர்கள் மற்றும் வீடு அற்றவர்களின் தொந்திரவிற்கு உட்படாதிருப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு நகர மையத்தின் ஒவ்வொரு முக்கிய பகுதியையும் போலீசார் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். ஒரு சில நூறு மீட்டர் தூரத்திற்குள், Weischsel ஆற்றின் மறுபக்கத்தில், பிராகா புறநகர் முற்றிலும் மாறுபட்ட காட்சியை கொடுக்கிறது. இப்புறநகர் பகுதியில் உயிர்ப்பற்ற இருண்ட இல்லங்கள் வரிசையாக அமைந்துள்ளன; வறுமை இங்கே பரந்து காணப்படுகிறது என்பது வெளிப்படை.

நகரம் முழுவதும் இருக்கும் கணக்கிலடங்கா உருவச்சிலைகள் வார்சோவின் சீற்றப் புயல் நிறைந்த வரலாற்றை நினைவுபடுத்துகின்றன. மிருகத்தனமான சர்வாதிகாரி Pilsudski க்குப் பாராட்டுக்களுடன், Mickiewicz நினைவுக் கட்டிடங்களும், 1944 வார்சோ எழுச்சிக்கான நினைவுச் சின்னங்களும் உள்ளன. சமீபத்தில் ஒரு அருங்காட்சியகம் இந்நிகழ்வை போற்றும் வகையில் தொடக்கப்பட்டது; ஆனால் தொடக்க தினத்தன்றே ஒரு வன்முறை விவாதமும் கட்டவிழ்க்கப்பட்டது; வார்சோ சேரியில் யூதர்கள் எழுச்சியின் முக்கியத்துவத்தை முன் முயற்சியாளர்கள் முற்றிலும் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயன்றனர். எழுச்சியின் யூதர்கள் பற்றிய முக்கியத்துவத்தை குறையாகக் கூறும் வகையில் ஒரே ஒரு சிறிய முகப்புப் பலகைதான் வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தை ஆரம்பித்தவர்கள் வலதுசாரி அரசியல்வாதிகளை நம்பியிருக்கும் நிலை உள்ளது; அவர்களோ நாசிசத்திற்கு போலந்து மக்கள் காட்டிய எழுச்சியின் பங்குபற்றி முக்கிய வலியுறுத்தல் இடம்பெற வேண்டும் என்று அறிவித்தனர்.

தன்னுடைய கூட்டத்திற்கு ISSE பிரச்சாரம் செய்கையில், தேசிய நோக்கங்களுக்காக வரலாற்றை கருவியாகப் பயன்படுத்துவது பற்றி பல மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். விவாதங்களில் தீவிர கன்சர்வேட்டிவ் Kaczysnki அரசாங்கமும் அதன் பிற்போக்குத்தன தேசியமும் பெரும் வெறுப்பிற்கு உட்பட்டன. பல மாணவர்களும் ISSE இன் சோசலிச, சர்வதேச முன்னோக்கு பற்றி நேரிய முறையில் ஆர்வம் காட்டினர்.

ஸ்ராலினிசம் மற்றும் Solidarity இயக்கத்தின் பங்கு மற்றும் Pilsudski உடைய பங்கு என விவாதங்கள் தவிக்கமுடியாத வகையில் வரலாற்றுப் பிரச்சினைகளை சூழ்ந்து அமைந்தன. பெரும்பாலான மாணவர்கள் ISSE யின் நிலைப்பாடான உண்மையான சோசலிசத்துடன் ஸ்ராலினிசம் எப்பங்கையும் கொண்டிருக்கவில்லை என்பதற்கு ஆதரவு கொடுத்தனர். அதே நேரத்தில், போலந்து தலைநகரத்தில் வளரும் முதல் தலைமுறை மாணவர்கள் ஸ்ராலினிச அதிகாரத்துவம் மற்றும் போருக்குப் பிந்தைய வளர்ச்சிகளை பற்றித் தெளிவற்று இருந்தனர் என்பது தெரியவந்தது. அரசியல் வளர்ச்சிகள் ஒரு தேசியக் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும் என்ற உறுதியான போக்கில் இக்குழப்பம் வெளிப்பட்டது; சர்வாதிகாரத்தையும் ஜனநாயகத்தையும் முற்றிலும் அருவமான தன்மையில் விவாதிக்க வேண்டும் என்ற போக்கிலும் இக்குழப்பம் வெளிப்பட்டது.

சில மாணவர்கள் ஈராக்கிய ஆக்கிரமிப்பில் போலந்து படைகள் பங்கு பெற்றுள்ளதை ஆதரித்தனர்; இது ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் காக்கும் பிரச்சினை என்று அவர்கள் அறிவித்தனர். வரலாற்றில் பல நேரமும் போலந்து ஆக்கிரமிப்பு, அடக்குமுறை ஆகியவற்றை அனுபவித்துள்ளது என்று வாதிட்ட அவர்கள் மற்ற நாடுகளுக்கு உதவும் பொறுப்பு தங்களுக்கு உண்டு என்றும் கூறினர்.

போலந்தின் வரலாறும் இப்பிரச்சாரத்தின் இறுதியில் ISSE நடத்திய கூட்டத்தின் மையக் குவிப்பாக இருந்தது.

தன்னுடைய ஆரம்ப பங்களிப்பில், Marius Heuser போலந்தின் தொழிலாளர் இயக்கத்தில் இரு முக்கிய மரபுகள் இருந்தன என்று வலியுறுத்தினார் -- ஒரு சர்வதேசிய மரபு, மற்றொரு தேசிய மரபு என அவை இருந்தன. நான்காம் அகிலம்தான் ஸ்ராலினிசத்திற்கு எதிராக ரஷ்ய மற்றும் போலந்து தொழிலாளர்கள் இயக்கம் ஐக்கியப்பட்டு போராட வேண்டும் என வலியுறுத்தியதாக Heuser விளக்கினார்; அது ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தின் பகுதியாக இருக்க வேண்டும் என்றும் நான்காம் அகிலம் வலியுறுத்தியிருந்தது. (See "Report to ISSE meeting in Warsaw: Nationalism and internationalism in Poland")

PSG (சோசலிச சமத்துவக் கட்சி) யின் நிர்வாகக் குழு உறுப்பினரும், Solidarity and the Perspective of Political Revolution in Poland என்ற நூலின் ஆசிரியருமான வொல்ப்காங் வேபர், தற்கால வரலாற்றாளர்கள் நிறைய பேர் குறிப்பிட்டுள்ளது போல் Pilsudski ஒன்றும் தனிச்சிறப்பு வாய்ந்த மனிதர் அல்ல என்று குறிப்பிட்டார். அவருடைய பிற வெற்றிகளும் குறிப்பாக போலந்து அரசு நிறுவப்பட்டதும், மற்ற அவருடைய எதிராளிகளின் பலவீனத்தால் நிகழ்ந்தவை. ஒரு எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்த அவர் ஒரே நோக்கத்தை உறுதியாகக் கடைப்பிடித்தார். 1920, 1930 களில் போலந்து முக்கியமான பொருளாதார முன்னேற்றத்தை காணவில்லை; சமூக, ஜனநாயக முன்னேற்றத்தில் குறிப்பான வளர்ச்சியையும் காணவில்லை. மாறாக நாடு தேக்கத்தையும், கொடூரமான சர்வாதிகாரத்தையும்தான் அனுபவித்தது. பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரையில் போலந்து மிகவும தாமதித்து விட்டது. தேசிய அரசுகள் தோற்றுவிக்கப்படுதல் ஒரு முற்போக்கான நிலை என்பது கடந்த காலமாகி விட்டிருந்தது; இரண்டு சக்திவாய்த அரசுகளால் சூழப்பட்டிருந்த போலந்து ஒரு சுதந்திரமான தேசிய வளர்ச்சியை பெறுவதற்கு இயலாதிருந்தது.

தற்போதைய போலந்தின் உயரடுக்கு அவர்களுடைய விருப்பங்கள், சடரீதியான யதார்த்தத்தை ஒத்திருக்கவில்லை என்ற சங்கடத்தை எதிர்கொண்டுள்ளனர் என்று Heuser குறிப்பிட்டார். நாடு ஐரோப்பிய ஒன்றியத்துடன், குறிப்பாக ஜேர்மனியுடன் நெருக்கமான பொருளாதாரப் பிணைப்புக்களை கொண்டாலும், ஐரோப்பாவின்மீது ஜேர்மனியின் மேலாதிக்கம் நிறைந்துவிட்டால் என்ன ஆவது என்றும் அஞ்சுகிறது; ஏனெனில் அது கிழக்கு ஐரோப்பிய பிராந்திய சக்தி என்னும் போலந்தின் சொந்த விழைவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஐரோப்பாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டால் அது போலந்தை முக்கியத்துவம் அற்றதாக ஆக்கிவிடும் என்றும் உயரடுக்கு அஞ்சுகிறது. 19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் இருந்து போலந்தின் முதலாளித்துவ வர்க்கம் ரஷ்ய ஜாரிடம் அடங்கியிருந்த நிலையிலும், இங்கிலாந்து பிரான்ஸ் ஆகியவற்றுடன் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக Pilsudski உடன்பாடு கொண்டிருந்த நிலையிலும், பின்னர் ஹிட்லருடன் ஒத்துழைத்த நிலையிலும், போலந்தின் தற்போதைய ஆளும் உயரடுக்கு தன்னுடைய நிலைப்பாட்டை அமெரிக்காவுடனும் அதன் ஆக்கிரோஷமான வெளிநாட்டுக் கொள்கையுடனும் பிணைத்துக் கொண்டுள்ளது.

இக்கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்கள் ஈராக் மற்றும் ஆப்கானிய குடிமக்கள் மட்டும் அல்லாமல், போலந்தின் தொழிலாளர்களும் ஆவர்; அவர்கள்தான் மேலாதிக்கம் நிறைந்த உயரடுக்கின் விழைவுகளுக்கு உயர்ந்த விலையை கொடுக்க வேண்டியதாயிற்று. Kacyznski சகோதரர்கள் தேசிய பிரச்சாரத்தை பயன்படுத்தி சர்வாதிகார வகை ஆட்சி வடிவமைப்பிற்கும், கடந்த ஆண்டுகளின் முற்போக்கு சிக்கன நடவடிக்கைகளையும் தொடர்ந்தனர்; அதேவேளை சர்வதேசப் பணிகளில் போலந்தின் துருப்புக்கள் அனுப்பப்பட்டனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற மற்றொருவர் தேசியவாதம் குறிப்பிட்ட வகையில் போலந்து தொழிலாளர்கள், மாணவர்கள் இடையே வேரூன்றியிருப்பதாக தான் நம்பவில்லை என்று குறிப்பிட்டார். ஒரு தீவிர விவாதம் நடத்துகையில் முற்றிலும் மாறுபட்ட சித்திரம்தான் வெளிப்படுகிறது. பல போலந்து தொழிலாளர்கள் அயல்நாடுகளில் வசித்து, வேலை செய்துள்ளனர்; அதேபோல் அங்கு நண்பர்களையும் கொண்டுள்ளனர். அவர்கள் தங்களை ஐரோப்பியர்கள் என்று கருதுகின்றனர். ஒரு சர்வதேச முன்னோக்கு உடைய அரசியல் போக்கு போலந்தில் முற்றிலும் இல்லாததுதான் பிரச்சினையாகும்.

போலந்தில் நான்கு ஆண்டுகளாக வசித்துவரும் ஒரு லெபனிய மாணவர், ஒரு ஐரோப்பிய முன்னோக்கிற்கு, முற்றிலும் மாறுபட்ட பார்வையில் இருந்து ஆதரவு கொடுத்தார். ஐரோப்பா போலந்திற்கு நல்லது ஏனெனில் போலந்து அப்பொழுதுதான் ரஷ்யாவிற்கு எதிரான தன்னுடைய நலன்களை காத்துக்கொள்ள முடியும். அதையும் தவிர, போலந்தின் வாழ்க்கைத் தரங்கள் ஐரோப்பிய சராசரி தரத்தை ஏற்குமாதலால், அது உயரும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு ஒருவர் விடையிறுக்கையில், ஐரோப்பா முழுவதும் சாதாரண மக்களின் வழாக்கைத்தரம் சரிந்து கொண்டிருக்கிறது எனத் தெரியும். போலந்தில் விவசாயம் மற்றும் சுரங்கத் தொழில்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையின் பேரில் மறுசீமைக்கப்படுவது பரந்த ஏழ்மையை தோற்றுவித்துவிட்டது. விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதுடன், ஊதியங்கள் தேக்கமடைந்து விட்டன. வங்கிகள், பெருவணிகங்களின் ஐரோப்பிய ஒன்றியம் அனைத்துத் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராகவும்தான் முதலிலும், முக்கியமாகவும் இயக்கப்படுகிறது.

PSG யின் தலைவரான உல்ரிச் ரிப்பேர்ட் சரியான அரசியல் வளர்ச்சிகளை அணுகும்போது, தெளிவான வரலாற்று அணுகுமுறைகளை கொண்டிருக்க வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவித்தார். தேசிய அரசின் பாதுகாப்பில் தொழிலாளர்களுக்கு நலன் இல்லை என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் மார்க்சிஸ்ட்டுக்கள் உள்ளனர். நாடுகள் வர்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. தனி நாடுகளில் இருக்கும் ஆளும் வட்டங்களுக்கு இடையேயான பூசல்கள் பெருகிவரும் நேரத்தில், தொழிலாளர்கள் அதே பிரச்சினைகளை சர்வதேச அளவில் எதிர்கொள்ளுகின்றனர்; சர்வதேச ஐக்கியத்தின் அடிப்படையில்தான் அதற்கு விடையிறுக்க வேண்டும்.

போலந்து வரலாறு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாறைப் பொறுத்தவரையிலும்கூட இத்தகைய அணுகுமுறைதான் இருக்க வேண்டும் என்று ரிப்பேர்ட் கூறினார். தொழிலாளர்கள் ஐரோப்பாவிற்குள் இருக்கும் தேசிய எல்லைகளை கடப்பதில் உடல் அமைப்பியல் சார்ந்த நலனை கொண்டுள்ளனர் என்றும் சர்வதேச உற்பத்தி சக்திகள் திட்டமிட்ட வகையில் மனிதகுலத்தின் நலனுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். ஐரோப்பாவை ஒரு முதலாளித்துவ அடிப்படையில் ஒன்றுபடுத்துவது தோல்வியில்தான் முடியும் என்று அவர் கூறினார். தன்னுடைய ஏகாதிபத்திய போட்டியாளர்களை கூடுதலாக சவால்விடும் வகையில் ஐரோப்பா மேற்கொள்ளும் முயற்சிகள் ஐரோப்பாவிற்குள்ளேயே பிளவுகளை அதிகமாக ஆழப்படுத்தும் என்றார் அவர். இதன்பின் ரிப்பேர்ட் ஜேர்மனிய ஆளும் உயரடுக்கு ஐரோப்பாவை தன்னுடைய மேலாதிக்கத்தின்கீழ் ஒன்றுபடுத்த விரும்பும் சமீபத்திய முயற்சிகளை பற்றிப் பேசினார்; இந்த வளர்ச்சி போலந்து, மற்றும் ஏனைய நாடுகளால் எதிர்க்கப்படுகின்றன.

Social Equslity Party தன்னுடைய நடவடிக்கைகளை தொடர்ந்து போலந்தில் விரிவுபடுத்த உள்ளது. இந்தப் பணியின் மையத்தில் இருப்பது இருபதாம் நூற்றாண்டில் போலந்து தொழிலாளர் இயக்கத்தின் மிக முக்கியமான அனுபங்கள் பற்றி தெளிவுறுத்துவது ஆகும்; இந்த வரலாறு ஐரோப்பிய, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு மிக முக்கியமான படிப்பினைகளை கொண்டுள்ளது. இப்பணியில் முக்கியமான கட்டம் போலந்து மொழியில் ட்ரொட்ஸ்கியின் படைப்புக்களை வெளியிடுவது ஆகும்.