World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India-US nuclear agreement at an impasse

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நெருக்கடி நிலையில்

By Daniel Woreck and Kranti Kumara
9 June 2007

Use this version to print | Send this link by email | Email the author

மார்ச் 2, 2006ல் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் ஆகியோரால் அறிவிக்கப்பட்ட மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்திய, அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் இப்பொழுது ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது; சிக்கலகற்றுவதற்கு அச்சுறுத்தலை கொண்டிருக்கிறது. மே 31ம் தேதி புது டில்லியில் அமெரிக்க வெளிவிவகார துணைச் செயலர் (அரசியல் விவகாரங்கள்) மற்றும் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் தலைமை பேச்சுவார்த்தையாளருமான நிக்கோலஸ் பேர்ன்ஸுக்கும், இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனுக்கும் இடையே உக்கிரமாய் நடந்த மூன்று நாள் பேச்சுவார்த்தைகள் முக்கிய வேறுபாடுகளை தீர்ப்பதில் தோல்வி அடைந்தன.

பேர்ன்ஸ் 123 என அழைக்கப்படும் உடன்பாட்டை அடைவதற்காக முன்கூட்டி நிர்ணயிக்கப்படாத ஒரு பயணத்திற்காக தனிஒரு முனைப்புடன் புது டில்லிக்கு பறந்து வந்தார்; இதற்கு இப்பெயர் கொடுக்கப்பட்ட காரணம் 1954 அமெரிக்க அணுசக்தி சட்டத்தின் (US Atomic Energy Act -USAEA) 123 வது பிரிவின் கீழ் மற்ற நாடுகளுடன் நடத்தப்படும் அமெரிக்க பேச்சுவார்த்தைகளின் இருநாட்டு அணுசக்தி ஒப்பந்தமாக இது இருப்பதால்தான். அவர் புது டில்லிக்கு புறப்படுவதற்கு சற்று முன்னர் பேர்ன்ஸ் பயணம் பற்றி அமெரிக்க தரப்பு உறுதியற்ற தன்மையை காட்டியது; இந்தியாவை இன்னும் சில சலுகைகள் விட்டுக்கொடுக்கும் வகையில் பேச்சுவார்த்தைகளை தூண்டும் உந்துதலாய் இது ஐயத்திற்கு இடமின்றி இருந்தது.

குறிப்பிட்ட நேரத்தில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை கொள்ளலாம், அதையொட்டி புஷ் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையின் "வெற்றிகளை" மன்மோகன் சிங் மற்றும் புஷ் இருவரும் ஜேர்மனியில் இருக்கும் ஹைலிகென்டாமில், G8 உச்சி மாநாட்டை ஒட்டி சந்திக்கும்போது அறிவிக்கலாம் என்று பேர்ன்ஸ் நம்பியிருந்தார். உத்தியோக பூர்வமாக இந்தியா G8 ல் உறுப்பு நாடு இல்லை என்றாலும், மன்மோகன் சிங் உச்சிமாநாட்டின் சில பகுதிகளுக்கு சீனா, பிரேசில், மெக்சிகோ, தென் ஆபிரிக்க தலைவர்கள் அழைக்கப்பட்டது போல், அழைக்கப்பட்டிருந்தார்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப்படி, இந்தியாவிற்கு ஒரு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படும்; அதையொட்டி அது அணு தொழில்நுட்பம் மற்றும் யுரேனிய எரிபொருள் அளிப்புக்களை உலகின் அணுசக்தி வணிகத்தை கட்டுப்படுத்தும் அணுசக்தி அளிக்கும் 45 உறுப்பினர்கள் அடங்கிய குழுவிடம் இருந்து (NSG) பெறமுடியும்; இதற்கு ஈடாக இந்தியா தன்னுடைய குடியியல்சார்ந்த அணுவாற்றல் வசதிகளை தனியே இராணுவத்திற்குப் பயன்படுத்தும் வசதிகளிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்றும் முந்தையதை சர்வதேச அணுசக்தி அமைப்பின் (International Atomic Energy Agency -IAEA) கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இப்படி (Non-Proliferation Treaty -NPT) அணுவாயுதப் பரவலை தடுக்கும் ஒப்பந்தத்தை மீறி அணுவாயுதங்களை தயாரித்துள்ள இந்தியாவிற்கு கொடுக்கப்பட இருந்த சிறப்பு அந்தஸ்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இடைவிடாமல் அதை அரக்கத்தனமாக சித்திரித்து வருதல், அச்சுறுத்தல் கொடுத்தல் என்பதோடு வேறுபடுத்திப் பார்க்க வேண்டியதாகும். ஈரான் NPT ல் கையெழுத்திட்டுள்ள போதிலும், அமெரிக்கா மிகக் கடுமையாக அது முழு குடியியல் சார்ந்த அணுசக்தித்திட்டத்தை IAEA கண்காணிப்பில் அபிவிருத்தி செய்யும் உரிமைகளுக்கு மறுப்பு தெரிவித்து, NPT இன் விதிகள் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு எதிரான போதுமான எச்சரிக்கைகளை கொண்டிருக்கவில்லை என்றும் கூறுகிறது.

இந்திய-அமெரிக்க 123 உடன்பாட்டின் விவரங்கள் பல மாதங்களாக பேச்சு வார்த்தைகளில் உள்ளன. ஆனால் டிசம்பர் 2006 Henry Hyde Act விதிகள் சிலவற்றின்படி (இவை USAEA இலும் திருத்தம் செய்து அமெரிக்க அரசாங்கம் இந்தியாவுடன் குடியியல் சார்ந்த அணுசக்திக்கு, அது அணுவாயுதங்களை தயாரித்திருந்தபோதிலும் கொள்ளலாம் என்கின்றன), என்பது பெரும் முட்டுக் கட்டைகளாக உள்ளன.

Hyde Act அறிமுகப்படுத்தும் பல தேவைகள் இந்தியாவின் அணுசக்தி அமைப்பினாலும் இந்தியாவில் அரசியல் உயரடுக்கினராலும் வாஷிங்டன் இந்தியாவின் அணுசக்தி வளர்ச்சித் திட்டத்தை கடுமையாக தடைக்கு உட்படுத்திவிடும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவின் மேலாதிக்க விழைவுகளுக்கு தாழ்த்திவிடும் என்றும் கருதப்படுகிறது.

மே மாதத்தில் Strastfor வலைத் தளத்தில் வந்த கருத்து கூறியதாவது: "அமெரிக்க காங்கிரஸ் முதல் ஒப்பந்தத்துடன் சேர்த்த சில புதிய நிபந்தனைகள் பற்றி இந்தியா களிப்பு அடையவில்லை; நிறைய சலுகைகளை இந்தக்கட்டத்தில் கொடுப்பதற்கு இரு பக்கங்களும் தயாராக இல்லை."

இந்தியாவிற்கு கவலை மிக அதிக அளவில் தரும் Hyde Act நிபந்தனைகள் வருமாறு:

*அமெரிக்கா இதேபோன்ற சோதனைகளை நடத்துதற்கு தடை ஏதும் இல்லை என்றாலும், இந்தியா எவ்வித அணுசக்தி வெடிப்பு முறையையும் வெடிப்பதில் இருந்து தடை செய்யப்படுகிறது. IAEA உடன் கொண்டுள்ள உடன்பாட்டை மீறிய வகையில் ஏதேனும் செய்தாலோ, அணுசக்தி வெடிப்புச் சோதனையை இந்தியா நடத்தினாலோ, "திரும்பிச் செல்லும் உரிமையை" அமெரிக்கா எடுத்துக் கொள்ளும்; அதன்படி இதுகாறும் கொடுக்கப்பட்ட அமெரிக்க உலைகள், செலவழிக்கப்பட்ட எரிபொருள், உபயோகிக்கப்படாத எரிபொருள் உட்பட அனைத்தையும் திருப்பிக் கொடுக்குமாறு அமெரிக்கா கோரும்.

* தற்போதைய உடன்பாட்டின்படி, இந்தியா அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் எந்தக் கருவி அல்லது எரிபொருளையும் வெளிப்படையான அமெரிக்க அனுமதி இல்லாமல் செலவழிக்கப்பட்ட அணுசக்தி எரிபொருளை மறுமுறை பயன்படுத்தக்கூடாது. இந்த 123 உடன்பாட்டில் இருக்கும் வெளிப்படை மொழி என்பதில் அமெரிக்காவால் முன்கூட்டிய நிரந்தர, முழுமையான அனுமதி என மாற்றப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

ஹைட் சட்டம் இந்தியா, "ஈரானை அணுவாயுதங்கள் உட்பட பேரழிவு ஆயுதங்கள் பெறும் முயற்சிகள் மற்றும் யூரேனிய செறிவூட்டல், அணுசக்தியை மறுவழிப்படுத்துதல், பேரழிவு ஆயுதங்களை இயக்கும் வகைகள் இவற்றில் இருந்து தவிர்த்துக் கொள்ளுவதற்கு அறிவுரை கூறுதல், தனிமைப்படுத்துதல், தேவையானால் பொருளாதாரத்தடைகள் மற்றும் அதை அடக்குதல் ஆகியவற்றை கையாள வேண்டும்" என்று அமெரிக்கா கூறுகிறது. இந்த நடவடிக்கையின் முக்கியத்துவம் சற்று பூசலில் உள்ளது; ஏனெனில் வெள்ளை மாளிகை இது ஒரு "ஆலோசனைதான்" என்று கூறினாலும், இந்தியா தன் வெளியுறவுக் கொள்கை அமெரிக்க சட்டத்தின் கீழ் ஆணையிடப்படுவதற்கு எதிர்ப்பைக் காட்டியுள்ளது.

* அமெரிக்க ஜனாதிபதி ஒவ்வொரு ஆண்டும் காங்கிரசிற்கு இந்தியா சட்டத்தின்படி நடந்து கொண்டுவருகிறது என்று சான்று கொடுக்க வேண்டும்; உலக அரங்கில் அமெரிக்கா கூறுவதை செய்வதற்கு இது வாடிக்கையாக மிரட்டும் வகையில் பயன்படுத்தப்படும் என்று இந்திய ஆளும் உயரடுக்கு அஞ்சுகிறது.

புஷ் நிர்வாகம் இந்தியாவுடனான இறுதி 123 உடன்பாட்டிற்கு IAEA, NSG இவற்றின் ஒப்புதலை பெற வேண்டும் என்று ஹைட் சட்டம் விதிக்கிறது. NSG உறுப்பினர்களில் பலர் ஏற்கனவே இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்; ஒருமித்த உணர்வு ஒன்றை அந்த அமைப்பின் மூலம் ஒப்புதலுக்காக இந்த உடன்பாட்டின் வெற்றிக்காக பெறமுடியுமா என்பது இந்தக் கட்டத்தில் தெளிவாக இல்லை.

புஷ் நிர்வாகம் ஹைட் சட்டத்தின் சில விதிகள் பற்றி பகிரங்கமாக உடன்பாடு இல்லை என்று கூறினாலும், இந்த சட்டமன்றத்தின் கட்டுப்படுத்தும் ஆணைகளை பயன்படுத்தி இந்தியா அதன் உயரடுக்கின் பல பிரிவுளுக்கு ஏற்கமுடியாத சில சலுகைகளை கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்கிறது; குறிப்பாக இந்தியாவின் அணுசக்தி அமைப்பும் இராணுவமும் இதற்கு ஆதரவாக இல்லை.

இந்தியா NNWS (Non-Nuclear Weapons State) அணுசக்தி இல்லாத நாடு என்ற பகுப்புமுறையைத்தான் ஹைட் சட்டம் கொண்டுள்ளது; இதன் விளைவாக பல NPT வகையிலான தடுப்புக்களுக்கு USAEA வில் இருக்கும் தடுப்புக்களுக்கு உட்பட நேரிடும். NNWS ல் இந்தியாவை பகுத்துக்காட்டியுள்ளதின் அபத்தம் உடனடியாக வெளிப்படையாகும்; ஏனெனில் இந்தியா கணிசமாக அணுவாயுதங்களை கொண்டிருக்கிறது; தேவையானால் "அணுசக்தி வகைத் தடைகளையும்" பெருக்க விரும்புகிறது. ஆயினும்கூட இத்தகைய பகுப்பு முறை அமெரிக்க சட்டத்தின்படி, NPT ல் கையெழுத்திடா நிலையில், இந்தியா குடியியல் சார்பு அணுசக்தி எரிபொருள், தொழில்நுட்பம் ஆகியவற்றை பெறுவதற்கு தேவையாகும்.

இந்திய உயரடுக்கினருக்கு இந்த அணுசக்தி எரிபொருள் அளிப்பு உறுதி மற்றும் வெளிநாட்டு அணுசக்தி தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யும் திறன் இரண்டும் மிகவும் முக்கியமானது ஆகும். இந்தியாவில் மிகக் குறைந்த உள்நாட்ட அணு யுரேனிய இருப்புக்கள்தான் உள்ளன; அவை குடியியல் மற்றும், இராணுவ அணுசக்தி தேவைகளுக்கு போதுமானதாக இல்லாமல் அதை சிரமத்திற்கு உட்படுத்துகிறது.

International Panel on Fissile Material இன் மதிப்பீடுகளின்படி, இந்தியா தன்னுடைய அணுவாயுத உற்பத்திகளை ஆண்டிற்கு 6ல் இருந்து 12 என்ற தற்போதைய நிலையிலிருந்து ஆண்டிற்கு 40 முதல் 50 வரை என்று, இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு இராணுவத்திற்காக யூரேனியம் உள்பட உள்நாட்டு வளங்களை செலவழிக்க வகைசெய்துவிட்டபின் அதிகரிக்க முடியும்.

இந்திய அணுசக்தி அமைப்பு கணிசமான முயற்சியில் இந்தச் சிக்கல் வாய்ந்த அணுசக்தி தொழில்நுட்பம் பற்றி, அதன் உற்பத்தி உட்பட, ஆய்ந்திருந்தாலும், இதன் கருவிகள் பலவும் மாற்றுப் பொறியியல் தன்மை, நடுவர் இடர்பாடுகள் ஆகியவற்றிற்கு உட்பட்டிருப்பதால் அவற்றின் தரம் பற்றி வினாக்கள் எழுகின்றன. இந்திய அணுசக்தி நடைமுறை உலகில் இருக்கும் அணுசக்தி நடைமுறையுடன் இடைத்தொடர்பு கொண்டு இன்னும் முன்னேற்றமான தொழில்நுட்பம், அறிவியல் பெருக்கம் ஆகியவற்றைக் காண விரும்புகிறது.

அணுவாயுத தடையில் இந்தியா ஒரு கால வரம்பை அறிவித்துள்ளது; ஆனால் இந்த தடையை சட்டபூர்வ கட்டுப்பாடாக மாற்றுவதை தடுக்கிறது. பாகிஸ்தான் அல்லது சீனா அணுவாயுதங்களை சோதித்தல், அல்லது புதிய அணுவாயுதங்களை அமெரிக்காவே தயாரித்தல் போன்ற உலக நிலையினால் பாதிப்பு ஏற்படுகிறது என்று தாங்கள் நினைத்தால் இந்த தடையை எப்பொழுது வேண்டுமானாலும் நீக்கும் உரிமை இருக்க வேண்டும் என்று இந்திய உயரடுக்கு விரும்புகிறது.

எரிக்கப்பட்ட எரிபொருளை மறுபயன்பாடு செய்யும் உரிமையும் இந்தியாவிற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது; ஏனெனில் அத்தகைய எரிபொருள் இந்தியா தயாரிக்க விரும்பும் மூன்று கட்ட, இந்திய அணுசக்தி கட்டமைப்பிற்கு தேவையாகும் --இந்த வழிவகையின் இறுதிக் கட்டம் தோரியம் பயன்படுத்துவதாக இருக்கும்; இந்தியா இதனை மிக அதிக அளவு இருப்பில் கொண்டுள்ளது. யூரேனியமும் புளூட்டோனியமும் மறு பயன்படுத்தலுக்கு தடை என்றால் இந்தச் சிக்கல் வாய்ந்த பொறுப்பெடுத்தலை இன்னும் கடினமாக்கும்; இந்தியா அதையொட்டி மகத்தான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார பாதிப்புக்களை சந்திக்க நேரிடும்.

முரண்படும் நலன்கள்

ஐயத்திற்கு இடமின்றி மிகச் சிக்கல் வாய்ந்த முரண்பட்ட காரணிகள் ஒரு ஒப்பந்தத்தை அடைவதற்கு இரு புறத்திலும் பெரும் முயற்சிகள் வேண்டும் என்ற உந்துதலை கொடுத்துள்ளன.

உடன்பாடு வெற்றிகரமாக முடிந்தது என்றால், இப்பொழுது ரஷ்யாவினால் கொடுக்கப்படும், மிக அதிக அளவிலான அணுசக்தி தொழில்நுட்பம், இராணுவ தளவாடப் பொருட்களுக்கான இந்திய சந்தை அமெரிக்க பெருவணிகத்திற்கு கிடைக்கும். அமெரிக்க வணிகக் குழுவின் கருத்துப்படி, ஒரு வெற்றிகர உடன்பாடு அணுசக்தி நுட்பம் மற்றும் பிற விற்பனைகள் மூலம் $100 பில்லியன் வணிகத்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு கொடுக்கும்.

பொருளாதார கணக்கீடுகள் கணிசமான முக்கியத்துவம் கொண்டாலும், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உந்துதல் கொடுக்கும் முக்கிய காரணிகள் புவிசார்-அரசியல் தன்மை உடையவை ஆகும்.

இந்தியா "ஒரு உலக சக்தியாக" வருவதற்கு தான் உதவத் தயாராக இருப்பதற்கு இந்த அணுசக்தி உடன்பாடு நிரூபணம் என்று புஷ் நிர்வாகம் கூறிக் கொள்ளுகிறது; உலகின் "இரு பெரும் மக்கட்தொகை நிறைந்த ஜனநாயகங்களுக்கு இடையே" "பூகோளந்தழுவிய பங்காளித்தனத்தின்" முதல் கட்டமாகும் இது என்றும் அமெரிக்கா கூறுகிறது.

எழுச்சி பெற்று வரும் சீனாவை கட்டுப்படுத்தி, அடக்கி வைப்பதில் தான் காட்டும் முயற்சிகளின் மையப்பகுதியாக இந்தியாவை ஆக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது. இந்தியாவை பயன்படுத்தி எண்ணெய் வளம் நிரம்பியிருக்கும் மத்திய ஆசியப் பகுதியில் இன்னும் ஊடுருவ அது நம்பிக்கை கொண்டுள்ளது; இதற்காக அமெரிக்காவுடன் அதிகம் பிணைந்துள்ள ஒப்பந்தங்களை இந்தியா கொள்ளுவதை அது விரும்புகிறது --அவை அதிகரித்த அளவில் இராணுவ, அணுசக்தி, புவி-அரசியல் பிணைப்புக்கள் மூலம்-- இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்காணித்தலுக்கு தயார் செய்கிறது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள சங்கடங்கள், புஷ் நிர்வாகத்தை இந்தியாவுடன் இத்தகைய உடன்பாட்டை முடிக்க வேண்டும் என்ற உணர்விற்கு தள்ளியிருக்கிறன.

ஏப்ரல் 26ம் தேதி வாஷிங்டன் போஸ்ட் பதிப்பில் எழுதிய நிக்கோலஸ் பேர்ன்ஸ் அறிவித்தார்; "வாஷிங்டனுக்கும் டில்லிக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளின் போக்கு மிக விரைவாக உள்ளது; அமெரிக்க நலன்களுக்கு கிடைக்கக்கூடிய இலாபத் திறன்கள் கணிசமாக இருக்கும்; எனவே ஒரு தலைமுறைக்குள் அமெரிக்கர்கள் இந்தியாவை நம்முடைய இரண்டு அல்லது மூன்று மூலோபாய முக்கிய பங்காளிகளுள் ஒன்றாகக் கருதுவர் என்று நான் நம்புகிறேன்.

அமெரிக்க நிறுவனங்களுக்கு மிகக் கணிசமாக வரக்கூடிய இலாபத்திறன் பற்றி பேர்ன்ஸ் தொடர்ந்து கூறினார்: "அமெரிக்க நிறுவனங்கள் முதலில் முதலீடு செய்து இலாபம் பெரும் வகையில் இந்த மகத்தான விசைச் சந்தை இருக்கும். இந்தியாவும் விரைவில் இருதரப்பு உடன்பாட்டை முடிக்க செயல்பட்டு இதை உண்மையாக்கும் என்று நம்புகிறோம்."

இந்திய ஆளும் உயரடுக்கு இந்தியா ஒரு பெரிய உலக சக்தியாகிறது என்ற வாஷிங்டனின் பேச்சில் பெரும் திருப்தியைக் கொண்டுள்ளது. இந்தியாவின் அணுசக்தித் திட்டத்திற்கு, புவி அரசியல் காரணங்களுக்காகவும் இந்தியாவின் குடியியல் சார்பு அணுசக்தி விசைத் திறன் விரைவில் விரிவாக்கம் செய்யப்படுவதற்கும், சர்வதேச பிரித்து வைக்கப்படலில் இருந்து வெளியேறுவது மிகவும் முக்கியம் என்றும் அது நம்புகிறது.

ஆனால் இந்தியாவை "அணுவாயுதக் குழுவில்" முழுமையாக அனுமதிக்க அமெரிக்கா மறுப்பது, ஹைட் சட்டத்தில் இருக்கும் பல நிபந்தனைகள், ஒப்பந்தத்தை பயன்படுத்தி அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுக்கு எதிரான மோதலில் நிற்க வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டுவது, ஈரானிய இயற்கை எரிவாயுவை தெற்கு ஆசியாவிற்கு குழாய்த்திட்டம் மூலம் கொண்டுவருவதை கைவிட்டுவிடுமாறு கூறுவது ஆகியவை இந்திய அரசாங்கத்திற்கும் உயரடுக்கிற்கும் அனுமதி அளித்திருக்கிறது.

ஈரான் மற்றும் பாகிஸ்தான் உடன் சேர்ந்து எரிவாயுத் திட்டம் (IPI) ஒன்றை கைவிடுமாறு இந்தியாவை அமெரிக்கா வற்புறுத்துகிறது; இதற்கு ஈடாக அணுசக்தி ஒப்பந்தத்தை கொடுப்பதுடன் ஒரு போட்டி குழாய்த்திட்டத்தையும் அது தர உள்ளது; அத்திட்டம் துர்க்மேனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்திய குழாய்த்திட்டம் (TAPI) ஆகும். Asia Times online கருத்தின்படி, TAPI குழாய்த்திட்டம், IPI திட்டம் போலன்றி, முக்கிய அமெரிக்க எண்ணெய், கட்டுமான நிறுவனங்களையும் தொடர்புபடுத்தி, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட ஆப்கானிய பகுதி வழியே செல்லும். இது அமெரிக்காவை மற்ற நாடுகளின்மீது கட்டுப்பாட்டை கொள்ளும் நிலையில் வைக்கும்; இந்திய உயரடுக்கு இத்தகைய அமெரிக்காவை நம்பியிருந்தல் பற்றி எச்சரிக்கையாக இருப்பது உணர்ந்து கொள்ளத்தக்கதே; அதுவும் நீண்டகாலமாக மிரட்டும் உத்திகளை அமெரிக்கா பயன்படுத்திவரும் நிலையில்.

இந்தியாவிற்கு சமீபத்திய பேர்ன்ஸின் வருகை அதிக பேச்சுக்களை, குறிப்பாக அமெரிக்கத் தரப்பில் இருந்து, 123 உடன்பாடுகள் பற்றிய பேச்சுக்கள் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டன என்பதுடன் வந்துள்ளன. ஆனால் இரு திறத்தாருக்கும் இடையே இருக்கும் வேறுபட்ட உந்துதல்கள், நலன்கள் ஆகியவற்றை பார்க்கும்போது, இது அடையப்படமுடியுமா என்பது சந்தேகமாகத்தான் உள்ளது. இறுதிவடிவம் பெற்றாலும், அதற்கு NSG, IAEA மற்றும் அமெரிக்க காங்கிரஸ் ஆகியவற்றின் ஒப்புதல் வேண்டும்; அப்படியும் அதி ஆட்டம் கொடுக்கும் ஒரு புவி அரசியல் அஸ்திவாரத்தில்தான் தொடர்ந்து தங்கியிருக்கும்.