World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan's US-backed dictator lashes out

Repression fails to staunch anti-Musharraf protests

பாகிஸ்தானின் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி சாடுகிறார்

அடக்குமுறை முஷாரஃப்-எதிர்ப்பு குருதி-சிந்தும் போராட்டங்களை தடுத்து நிறுத்த முடியவில்லை

By Keith Jones and Vilani Peiris
8 June 2007

Use this version to print | Send this link by email | Email the author

பாகிஸ்தானின் அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சியை பெரும் வன்முறையும், நம்பிக்கையற்ற தன்மையும் சூழ்ந்துள்ளன.

மே 12-13 வார இறுதியில் கராச்சியில் மக்கள்மீது, 40 பேர்களுக்கும் மேலாக மடிந்த நிலையில், வன்முறைத் தாக்குதல்களை தூண்டிவிட்டு அச்சுறுத்தும் முயற்சியில் தோல்வியடைந்த பின்னர், தளபதி பர்வேஸ் முஷாரஃப்பின் ஆட்சி புதிய அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை தீவிரமாக வெளிக்கொண்டு வந்துள்ளது. "தடுப்பு கைதுகள்" மற்றும் செய்தி ஊடகத்தை மிரட்டும், எதிர்ப்பை மெளனமாக்கும் பல கட்டுப்பாடுகளும் அடங்கியுள்ளன.

ஜூன் 1ம் தேதி பாகிஸ்தான் இராணுவத்தின் பிரிவுத் தளபதிகள், முக்கியமான உயரதிகாரிகள் பங்கேற்ற அவசரக் கூட்டம் முஷாரஃப்பிற்கு முழு ஆதரவை அறிவித்தது; அவரோ பாகிஸ்தானின் ஜனாதிபதி மற்றும் படைகளின் தலைவர் என்ற இரு பதவிகளையும் கொண்டுள்ளார். Inter-Services Public Relations bureau வில் இருந்து வந்த அறிக்கை ஒன்று கூறுகிறது: "நாட்டின் முக்கியமான அமைப்புக்களுக்கு எதிராக, தன்னலக் குழுக்களாலும் சந்தர்ப்பவாதிகளாலும் தொடக்கப்பட்ட தீய பிரச்சாரங்கள் நடப்பதை கூட்டம் கவனத்திற் கொண்டுள்ளது; இவர்கள் தங்களுடைய சொந்த நலன்கள், செயற்பட்டியலுக்காக சட்டத்தையும் மீறி நடக்க முற்பட்டுள்ளனர்."

இதன் பின்னர், --முஷாரஃப்பின் முன்னாள் பிரதம மந்திரியும் தற்பொழுது ஜனாதிபதி-படைத்தலைவரே ஆதரிக்கும் மிக முக்கியமான அரசியல் குழுவின் தலைவருமான செளதரி ஷூஜட் ஹுசைன்-- இராணுவத்தை இழிவுபடுத்தும் பிரச்சாரம் இருப்பதாகவும், இதில் தொடர்புடையவர்கள் "RAW (பாகிஸ்தானின் பரம விரோதியான இந்தியாவின் இரகசியப் போலீஸ்) வின் முகவர்கள், அவர்கள் "தேசத் துரோகிகளாக கருதப்பட வேண்டும்." என்று கூறினார்.

கடந்த வார இறுதியில், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தலைமை நீதிபதி இப்திகார் மகம்மது செளதிரியை தயாரிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் மூலம் முஷாரஃப் அகற்ற முற்பட்டுள்ள முயற்சியை சுற்றியிருக்கும் பூசல்கள் நிறைந்த விவாதங்களை ஒலி/ஒளி பரப்பக்கூடாது என்று தடைக்கு ஆளாயின. (செளதிரியுடைய உண்மையான குற்றம் அவர் அரசாங்கத்தின் செயற்பட்டியலுக்கு இடையூறு கொடுக்கும் வகையில் நிறைய தீர்ப்புக்களை கொடுத்ததுதான்; குறிப்பாக பாகிஸ்தான் எஃகு மில்ஸ் விற்கப்பட்டது தொடர்பாகவும், பயங்கரவாத சந்தேகத்திற்கு உரியவர்கள் எனப்பட்டவர்கள் மறைந்தது பற்றியும் கொடுத்த தீர்ப்பு; இந்த இலையுதிர்காலத்தின் போலி ஜனாதிபதி தேர்தலுக்கு ஆராயாமல் அங்கீகாரம் வழங்குதற்கு இவர்மீது நம்பிக்கை வைக்க முடியுமா என்று முஷாரஃப்பிற்கு கவலை ஏற்பட்டுவிட்டது.)

இதன்பின் திங்களன்று அரசாங்கம் PEMRA எனப்படும் அரசு ஒலிபரப்பு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஏராளமான புதிய அதிகாரங்களை மின்னணு செய்தி ஊடகத்தை ஆளுமை செய்யும் விதிகள் பற்றி ஆணைகள், மற்றும் அவற்றின் உரிமங்களை பறிமுதல் செய்யவும், கருவிகளை பற்றிக் கொள்ளவும், ஒலிபரப்பாளர்கள் புதிய ஆணைகளை மீறினால் அவர்களுடைய இடங்களை மூடுவதற்கு உத்தரவு கொடுக்கும் அதிகாரங்களை கொடுத்தது.

"இது ஒரு மிகக் கடுமையான சட்டம்" என்று, ஆஜ் தொலைக் காட்சியின் செய்தி இயக்குனர் தலாத் ஹுசைன் BBC யிடம் கூறினார். "தன்னுடைய கொள்கைகளுக்கு எதிராக தொலைக்காட்சி திரைகளில் எவையும் இடம் பெறக் கூடாது என அரசாங்கம் விரும்புவது மிகத் தெளிவு" என்றார் அவர்.

இராணுவம் மற்றும் நீதித்துறைகளை அவமதிக்கும் வகையில் அறிக்கைகள் கொடுப்பது, காட்சிகளை ஒளிபரப்புவது என்ற வகையில் தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் மக்களுடைய எதிர்ப்பை தூண்டிவிடுகின்றன என்று அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கனடாவில் National Post உடைய நிருபரான பீட்டர் குட்ஸ்பீட் குறிப்பிட்டுள்ளபடி, பாகிஸ்தானின் தளபதிகள், "முஷாரஃப் ஒரு நாய்!","தளபதிகள் தேசத்துரோகிகள்" என்று நீதிமன்றத்திற்கு வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பரித்ததை காட்டிய தொகுப்புக்களால் பெரும் சீற்றம் அடைந்துள்ளனர்.

செய்தி ஊடகத் தடைகள் செய்தியாளர்களுக்கு எதிரான மிரட்டல் நடவடிக்கைகளுடன் இணைந்துள்ளன. நியூ யோர்க் டைம்ஸ் கொடுக்கும் தகவல்படி, GEO தொலைக்காட்சியில் அறிவிப்பாளராக இருக்கும் ஹமித் மீர் தன்னுடைய குடும்பத்தை வெளிநாட்டிற்கு அனுப்பிவிடத் தீர்மானித்துள்ளார்; ஏனெனில் "அவருடைய குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன."

பொது மக்கள் எதிர்ப்பிற்கு இடையே, வியாழனன்று அரசாங்கம் சற்றே பின்வாங்கியுள்ளது. செய்தி ஊடகம் மற்றும் தொலைக்காட்சி நிலையங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின், பிரதம மந்திரி ஷெளகத் அஜிஸ் PEMRA வுடைய புதிய அதிகாரங்களை அரசாங்கம் பரிசீலனை செய்யும் வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

செய்தி ஊடகம் அரசாங்கத்திற்கு எதிர்ப்பை பற்றி தகவல் கொடுக்கும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்ந்து கொண்டுவிட்டது, எதிர்ப்பு இயக்கத்தைப் பற்றிக்கூறும்போது தானே கண்காணித்துக் கொள்ளும் என்று இராணுவம் கணக்கிடுகிறது போலும்; அதே போல் ஒருவேளை செய்தி ஊடகத்தின் உரிமைகள் மீது சற்றே குறைந்த தன்மையை உடைய தாக்குதல்களை விதிகள் மூலம் கொண்டு வரலாம் என்று கருதுகிறது போலும்.

ஆனால் சந்தேகத்திற்கு இடமில்லாதது, முஷாரஃப் ஆட்சி பாகிஸ்தான் மக்கள் மீது பாதுகாப்பு, இராணுவப் படைகளைக் கட்டவிழ்த்துவிடத் தயாராக இருப்பது என்பதுதான். புதனன்றும், வியாழனன்றும் பாதுகாப்புப் படையினர் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களை தடுப்புக் காவலில் வைத்தனர்; இதன் நோக்கம் லாகூர், இஸ்லாமாபாத் இன்னும் மற்ற நகரங்களில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் வீண் முயற்சியாகும்.

எதிர்ப்பு இயக்கத்தின் வலிமை ஆட்சியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது; இதுவரை முஷாரஃப்பிற்கு விசுவாசமாக இருந்த பல அரசியல் குழுக்கள், தங்களின் பாத்திரத்திற்காக தலைமை நீதிபதியை நீக்கிய முஷாரஃப்பின் முடிவு, மற்றும் கராச்சிக் குருதிக் களரி ஆகியவை பற்றி ஒன்றை ஒன்று தாக்கியுள்ளன.

தளபதியை பொறுத்தவரையில், தன்னுடைய அரசாங்கக் கொள்கைகளுக்கு - அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான பங்காளித்தனம், தனியார் மயமாக்குதல், முதலீட்டாளர் சார்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிர வலதிற்கு பல சலுகைகள் ஆகியவற்றுக்கு - மக்களுடைய ஆதரவைத் திரட்டத்தவறியதற்கு தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மீது பெருகிய முறையில் கசப்பைக் கொண்டுள்ளார்.

News (பாகிஸ்தான்) இன் நேற்றய பதிப்பின்படி, முஷாரஃப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (Q) வின் பாராளுமன்ற பிரதிநிதிகளை அவர்கள் அவரை புதனன்று சந்தித்தபோது கடிந்து கொண்டுள்ளார். News தெரிவிப்பதாவது: "புதன்று ஜனாதிபதி தளபதி பர்வேஸ் முஷாரஃப் ஆளும் கூட்டணியைக் கடுமையாக சாடினார்; குறிப்பாக "எப்பொழுதும் அவரை சிக்கலில் விட்டுவிடுவதற்காக" பாக்கிஸ்தான் முஸ்லிம் லீகின் தலைமையையும் சட்டம் இயற்றுபவர்களையும் சாடினார், அவருடைய நடைமுறை மாற்றப்பட்டால் நாட்டிற்கு பெரும் ஆபத்து வரும் என்றும் கூறினார்.

News, தான் நியமித்த ஆயிரக்கணக்கான அரசியல் பதவி பெற்றவர்களில் பத்து பேர்கூட தனக்கு ஆதரவாகப் பேசுவர் என நம்பிக்கையில்லை என்று முஷாரஃப் கூறியதாக தெரிவிக்கிறது. "ஒரு சோதனை, இடர்பாடுகள் நிறைந்த காலத்தில் நீங்கள் எப்பொழுதும் என்னைத் தனியே விட்டுவிடுகிறீர்கள் என்று அப்பட்டமாக கூறுவேன். ஆப்கான் கொள்கையில் மாற்றமோ, டாக்டர் A.Q.Khan, Bugi பிரச்சினைகளோ, மே 12 நீதித்துறை நெருக்கடியோ, நீங்கள் என்னுடைய ஆதரவிற்கு வந்ததே இல்லை."

கடந்த எட்டு ஆண்டுகளாக முஷாரஃப்பின் சர்வாதிகாரத்தை வேட்கையுடன் ஆதரித்து வரும் மேற்கத்திய தலைநகரங்களில் பாகிஸ்தான் ஆட்சி ஆட்டம் கண்டுவருகிறது என்ற கவலை வளர்கின்றது; எனவே இராணுவத்திற்கும் முதலாளித்துவ எதிர்ப்பிற்கும் இடையே உடன்பாட்டை பேரம் செய்வதற்கு தலையிடுமாறு அதிகம் அழைப்புக்கள் வருகின்றன.

ஆனால் புஷ் நிர்வாகம் முஷாரஃப்பிற்கு ஐயத்திற்கு இடமில்லாத ஆதரவைக் கொடுக்கும் தன்னுடைய கொள்கையில் உறுதியாக உள்ளது; இவரை அது பலமுறையும் "பயங்கரவாதத்தின் மீதான போரில்" முக்கிய நண்பர் என்று கூறியுள்ளது. திங்களன்று வெளியுறவுத்துறையின் அதிகாரி Sean Mccormack பேசுகையில் அமெரிக்க அரசாங்கம் பாகிஸ்தானின் இராணுவ சர்வாதிகார ஆட்சியுடன் கொண்ட ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினார்: "அரசியலில், உறுதியான, இன்னும் வெளிப்படையான, கூடுதலான பொருளாதார ஏற்றம் இருக்கும் பாகிஸ்தானை அனைவரும் காண விரும்புகின்றனர். அதைத்தான், ஜனாதிபதி முஷாரஃப்பின் அரசாங்கமும் விரும்பித் தொடர்கிறது. அதை நாங்கள் ஆதரிக்கிறோம், ஊக்குவிக்கிறோம். பல பெரும் ஆபத்துக்கள் உள்ளன என்பது உறுதியே. ஒரு முக்கியமான பகுதியில், உறுதிப்பாட்டிற்கு பெயர்வாங்காத பகுதியில், பாகிஸ்தான் ஒரு முக்கிய நாடாகும்... எனவே கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பொதுவாக சரியான திசையில் இருப்பதாகத்தான் நாங்கள் நினைக்கிறோம், அவற்றிற்கு ஊக்கம் கொடுக்கிறோம்."

வாஷிங்டனுடைய ஆதரவைத் தவிர, இன்றளவும் முஷாரஃப் தப்பிப் பிழைப்பதற்கு மற்றொரு முக்கிய காரணி இராணுவத்துடன் சதிவகையில் முதலாளித்துவ எதிர்ப்பு ஒத்துழைப்பதும் பொதுமக்களை கண்ட அச்சமும் ஆகும்.

MMA எனப்படும் மத கட்சிகளின் கூட்டு, இன்றளவும் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் முஷாரஃபின் கீழ் ஆளுவதுடன், பலூச்சிஸ்தானில் முஷாரஃப் சார்பு உடைய PML (Q) என்பதுடன் பங்கு பெற்றுள்ள வகையிலும், ஆளும் கூட்டணியில் உள்ளது. முஷாரஃப் பதவியில் இருந்து நீக்கிய முன்னாள் பிரதம மந்திரியான நவாஸ் ஷெரிப் தளபதி-ஜனாதிபதியின் அயரா எதிர்ப்பாளர் ஆவார். ஆனால் தொழிலதிபரும் மற்றும் மத வலதின் உற்ற நண்பராக பல நேரமும் இருப்பவருமான இவர் தன்னுடைய அரசியல் வாழ்க்கை போக்கிற்கும், ஏன் வணிகக் கொழிப்பிற்கும் கூட, இராணுவ அமைப்பு மற்றும் அரசாங்க அதிகாரத்துவத்தை நம்பியிருக்கிறார்.

பெனாசீர் பூட்டோ மற்றும் அவருடைய பாகிஸ்தான் மக்கள் கட்சியைப் பொறுத்தவரையில், முற்போக்கானவர்கள், சோசலிஸ்ட்டுக்கள் கூட என்று காட்டிக் கொண்டாலும், அவர்களுடைய நோக்குநிலை வாஷிங்டனுடைய ஆதரவை வெல்லுதலாக உள்ளது; இதற்காக அவர்கள் அமெரிக்க நலன்களை தற்பொழுதைய அரசாங்கத்தை விட விசுவாசமாக பேணுவர் என்ற சார்பை கொண்டுள்ளனர்; இவர்கள் இராணுவத்துடன் உடன்பாடு காணவும், முடிந்தால் வெறுப்பிற்குரிய முஷாரஃப்புடன் உடன்பாடு கொள்ளவும் தயாராக உள்ளனர்.

New York Times க்கு இந்த வாரம் கொடுத்த பேட்டி ஒன்றில், பூட்டோ தான் தளபதியுடன் இணைந்து பணிபுரியத்தயார் என்றும், அதற்கு அவர் இராணுவத் தலைவர் என்ற பதவியை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். "உண்மை என்னவெனில் PPP உடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் தயாராக இருப்பது சாதகமானது", "நிதானமான போக்குகள் ஒன்றாக வரவேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளார் போலும்" என்று பூட்டோ அம்மையார் டைம்சிடம் கூறினார்.

பூட்டோ முஷாரஃப்புடன் உடன்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் மத தீவிரத்தை எதிர்க்கும் பொதுத் தளத்தை குறிப்பிட்டார். ஆயினும் முஷாரஃப்பே பலமுறையும் மத வலதுடன் ஒத்துழைத்துள்ளதுடன், அவர்களுக்கு தாழ்ந்தும் நடந்து கொண்டுள்ளார்; வாஷிங்டனும் அவர் கொண்டுள்ள பிற்போக்குத்தனமான உடன்பாடு, சமூக அளவில் கெடுதலை கொடுக்கும் புதிய தாராள பொருளாதாரக் கொள்கைகளும்தான் ஒரு அரசியல் சூழ்நிலையை கொடுத்து, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மக்களுடைய நலன்களின் காப்பாளர்கள் என்று காட்டிக் கொள்ள இடமளித்துள்ளன.

Times இடம் பூட்டோ, இராணுவத்துடன் உடன்பாடு கொள்ளுவது, சர்வாதிகாரிக்கு எதிரான மக்கள் எழுச்சியை விட நல்லது என்று தான் கருதுவதாகத் தெரிவித்தார். "தெருக்கள், செல்லும் திசையைக் கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டால், இயக்கத்தை உண்மையில் எவர் கைப்பற்றுவர் என்பது எவரது ஊகமாகவும் ஆகிவிடும்"