World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Bush administration rushes to Pakistani dictator's aid

புஷ் நிர்வாகம் பாகிஸ்தான் சர்வாதிகாரியின் உதவிக்கு விரைகிறது

By Keith Jones and Vilani Peiris
22 June 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபின் சர்வாதிகார ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து தாங்குவதற்கும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் நிறுவப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சியை அடக்குவதற்கு பாகிஸ்தானிய இராணுவத்தின் ஆதரவை கூடுதலாக பெருக்குவதற்கும், கடந்த இரண்டு வாரங்களாக பாகிஸ்தானின் சிக்கலில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் இராணுவ ஆட்சியுடன் புஷ் நிர்வாகமும் பென்டகன் அதிகாரிகளும் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்க அரசு துணைச்செயலாளர் ஜோன் நெக்ரோபொன்ட், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச்செயலாளர் ரிச்சார்ட் பெளச்சர் மற்றும் பென்டகனின் மத்திய கட்டுப்பாட்டின் தலைவரான அட்மைரல் வில்லியம் பாலோன் ஆகியோர் அனைவரும் கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தனர். திங்களன்று பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி குர்ஷித் மஹ்முத் கசூரி ஒரு ஐந்து நாள் அமெரிக்க பயணத்தை மேற்கொண்டார்.

திங்களன்று கசூரியைச் சந்திக்குமுன் நிருபர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ், புஷ் நிர்வாகத்தின் முஷாரஃப்பிற்காக வலுவான ஆதரவை மீண்டும் தெளிவுறுத்தினார்: "கடந்த ஐந்து ஆண்டுகளை நீங்கள் நினைவிற் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்; பயங்கரவாதத்தின் மீதான போரில் ஜனாதிபதி முஷாரஃப் உற்ற நண்பராக இருந்துள்ளார். பாகிஸ்தானிலும் முக்கியமான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார்."

இதற்கு இரு நாட்களுக்கு முன்பு, நெக்ரோபொன்ட் பாகிஸ்தானின் இராணுவத் தலைமை பதவியை துறக்குமாறு முஷாரஃப் அமெரிக்காவிடம் இருந்து அழுத்தம் எதையும் பெறவில்லை என்பதை தெளிவாக்கினார்; பாகிஸ்தானின் அரசியலமைப்பு ஒரு ஜனாதிபதி இராணுவப் பதவியில் இருக்க கூடாது என்று குறிப்பாகக் கூறியுள்ளபோதிலும் அவர் விடாப்பிடியாகக் கொண்டுள்ளார். நெக்ரோபொன்ட் கூறினார்: "எப்பொழுது சீருடையை அகற்றுவது என்பது, அவரை (தளபதி முஷரப்பை) பொறுத்தது."

தேசிய மற்றும் மாநில சட்டமன்றங்களினால் இராணுவம் நடத்திய தேர்தல்களில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட முஷாரஃப் மீண்டும் தன்னுடைய திட்டமான "மறு தேர்ந்தெடுத்தலை" கொண்டிருப்பதற்கு அமெரிக்கா ஒப்புதல் கொடுக்குமா என வினாவப்பட்டபோது, புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள் பாகிஸ்தான் மக்கள்தான் "எப்பொழுது, எப்படி தேர்தல்கள் நடக்க வேண்டும், தம்மைச் சுற்றி நடப்பதை கண்காணித்தல்" ஆகியவற்றை முடிவு செய்யவேண்டும் என்று கூறினர்.

வேறுவிதமாகக் கூறினால், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இராணுவத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு செய்து அதிகாரத்தை கைப்பற்றிய முஷாரஃப், மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தாமல் தன்னுடைய "மறு தேர்ந்தெடுத்தலை" சூழ்ச்சியாய் கொண்டு வந்தார் என்றால், அவருக்கு வாஷிங்டனின் ஆசி இருக்கிறது.

அமெரிக்க அரசியல், புவி-அரசியல் நடைமுறையின் முக்கிய பிரிவுகள் சமீபத்திய வாரங்களில் புஷ் நிர்வாகத்திற்கு முஷாரஃப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இரு காரணங்களை இதற்காக முன்வைத்துள்ளனர்.

முதலில், ஆப்கானிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தானில் புகலிடம் நாடாமல் தடுப்பதில் முஷாரஃப் ஆட்சி போதியளவு ஆக்கிரோஷம் கொண்டிருந்தது, மற்றும் வேறுவிதமாய் கூறினால் ஆப்கானிஸ்தான் எல்லை பழங்குடிப் பகுதிகளில் தாலிபன் மற்றும் அல் கொய்தாவிற்கு கிடைக்கும் ஆதரவை அது போதிய அளவு நசுக்கி அழித்தது என அவர்கள் நினைக்கவில்லை. செப்டம்பர் 2001ல் இருந்து குறைந்த பட்சம் 10 பில்லியன் டாலர்களாவது உதவி, மற்ற நிதிகள் என்று அமெரிக்காவிடம் இருந்து வாங்கியிருக்கும் ஒரு பாகிஸ்தானிய அரசாங்கம் இன்னும் கூடுதலான முறையில் அமெரிக்க விருப்பங்களுக்கு இசைந்து போக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்திக் கூறுகின்றனர்.

இரண்டாவதாக, தன்னுடைய அதிகாரத்தின்மீது முஷாரஃப் பிடியை இழந்து கொண்டிருக்கிறார் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்; அவருடைய ஆட்சியின் சர்வாதிகாரத்தன்மை மற்றும் அதன் ஊழல் மக்களின் எந்தவிதமான நெறியானதன்மையில் இருந்தும் பிறழ்ந்து விட்டது என்றும் அவர்கள் கருதுகின்றனர். நாட்டின் தலைமை நீதிபதியை முஷாரஃப் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டதில் இருந்து இந்த அச்சங்கள் கூடுதலாகிவிட்டன; இவருடைய போலித் தேர்தலுக்கு தலைமை நீதிபதி இணங்க மாட்டார் என்ற நினைப்பில் அவரை அகற்ற முற்பட்டது இவருக்கு எதிராக திரும்பி, அரசாங்க எதிர்ப்பு அணிகள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை விரைந்து கொண்டுவந்துள்ளன.

New York Times, Washington Post இன்னும் பல சிந்தனைக் குழுக்களும் "முஷாரஃப்பிற்குப் பின்" பாகிஸ்தானுக்காக தீவிரமாக புஷ் நிர்வாகம் திட்டமிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன; மேலும் முஷாரஃப் மற்றும் இராணுவத்தால் ஓரம் கட்டப்பட்டுவிட்ட மரபார்ந்த அரசியல் உயர் தட்டோடும் தொடர்பு கொள்ளுமாறு அவை கூறியுள்ளன; குறிப்பாக பெனாசீர் பூட்டோ மற்றும் அவருடைய Pakistan People's Party (PPP) உடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளன. ஒரு முற்போக்கான, ஏன் சோசலிசக் கட்சி என்றுகூட காட்டிக் கொள்ளும் PPP க்கு ஆதரவு, 1980 களிலும் 1990களிலும் குறுகிய காலங்கள் இரு முறை அது ஆட்சியில் இருந்தபின்னர் சர்வதேச நிதிய அமைப்பின் ஆணைகளுக்கு இணங்க புதிய தாராள கொள்கைகளை அது திணித்தபொழுது சரிந்தது; ஆனால் பெரும்பாலான நோக்கர்களின் கருத்துப்படி பல கட்சிகளில் PPP ஒன்றுதான் குறிப்பிடத்தக்கவகையில் நாடுதழுவிய அளவில் ஆதரவுதளத்தைக் கொண்டுள்ளது.

PPP உடன் முஷாரஃப் ஓர் உடன்பாடு கொண்டு தளபதி ஜனாதிபதியாகவும், பூட்டோவோ அல்லது அவர் தேர்ந்தெடுப்பவர் பிரதம மந்திரியாக செயல்படுவதிலோ புஷ் நிர்வாகம் தயக்கம் காட்டவில்லை; அத்தகைய உடன்பாட்டிற்கு தான் உதவக்கூடுமானால் அதற்கும் நிர்வாகம் தயாராக இருக்கிறது. ஆனால் எவ்வித உடன்பாடும் தளபதி மற்றும் அவர் நம்பியிருக்கும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளின் கருத்துக்களுக்கு ஏற்பத்தான் இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்டியுள்ளது.

பூட்டோவின் கோரிக்கையான முஷாரஃப் அரசியலமைப்பிற்கு மதிப்புக் கொடுத்து பாகிஸ்தானின் இராணுவத் தலைமைப் பதவியை துறந்துவிட வேண்டும் என்பதற்கு முஷாரஃப் விருப்பம் காட்டவில்லை; ஏனெனில் தனக்கு மக்களிடையே ஆதரவுத் தளம் இல்லை என்பதை அவர் நன்கு அறிவார். பூட்டோவுடன் எவ்வித உடன்பாடும் கூடாது என்று இராணுவத்திற்கு ஆதரவு கொடுக்கும் முஸ்லீம் லீக் (Q) கடுமையாக எதிர்ப்பதும் முஷாரஃப்பிற்கு கூடுதலான சிக்கலை கொடுத்துள்ளன. தற்பொழுது பல முக்கிய மந்திரிப் பதவிகளை வகிக்கும் PML(Q) தலைவர்கள் தங்கள் வசதிகளையும், சலுகைகளையும் ஒரு PPP முஷாரஃப் கூட்டு வந்தால் இழந்துவிடுவர்.

பாகிஸ்தானுக்கு வந்திருந்தபோது பெளச்சர் மற்றும் நெக்ரோபொன்ட் இருவரும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்தனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து பல மில்லியன் கணக்கான பெயர்கள் விடுப்பட்டுப் போயுள்ளன என்று எதிர்க்கட்சியினர் குறைகூறியுள்ளனர். இணையதளத்தில் பட்டியலை வெளியிட குழு மறுப்பதற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன; அப்படி வெளியிட்டால் இருக்கும் குறுகிய கால அவகாசத்திற்குள் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பட்டியலில் சரிபார்த்து சேர்த்துக் கொள்ள பெரும் வசதியாக இருக்கும்.

இராணுவம் PPP உடன் கூட்டு வைத்துக் கொள்ளும் வாய்ப்பு பற்றி முஷாரஃப் அல்லது மற்ற அரசாங்க அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டதா என்று வினவப்பட்டதற்கு நெக்ரோபொன்ட் நேரடி விடை கொடுப்பதை தவிர்த்தார். "பலருடனும் நடத்திய விவாதத்தில் இப்பிரச்சினை பொதுவாகத்தான் பேசப்பட்டது" என்று அவர் கூறிவிட்டார்.

மார்ச் 9 அன்று தலைமை நீதிபதி இப்திகார் முகம்மது செளத்ரியை தற்காலிக பணிநீக்கம் செய்ததை அடுத்து எதிர்க்கட்சிகள் காட்டிவரும் எதிர்ப்புக்களை அடக்குவதற்கு முஷாரஃப் ஆட்சி தக்க மூலோபாயத்திற்கு திணறி வருகிறது.

எதிர்ப்புக்கள் ஏப்ரலில் பெருகியபோது, தலைமைநீதிமன்ற சக நீதிபதிகள் மூலம் தலைமை நீதிபதி மறுபடியும் பதவியில் இருத்தப்பட்டுவிட்டால் முஷாரஃப் இழந்த செல்வாக்கை ஓரளவு மீட்க முடியும் என்று அரசாங்கத்தில் இருப்பவர்களும் அதற்கு ஆதரவாளர்களும் கருத்துத் தெரிவித்தனர்; செளத்ரி அவசரப்பட்டு அகற்றப்பட்டதின் தவறான நடவடிக்கைக்கு இவருடைய பிரதம மந்திரியாக இருக்கும் முன்னாள் சிட்டிபாங்கின் துணைத் தலைவரை பொறுப்புக் கூற வைத்துவிடலாம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் மே 12-13 தேதிகளில் முஷாரஃப் ஆட்சி பாகிஸ்தானின் பெரிய நகரமான கராச்சியில் பெரும் குருதி சிந்திய வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. பாதுகாப்பு படைகளின் உடந்தையுடன், முஷாரஃப் ஆதரவு MQM உடைய குண்டர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்திய கடுமையான தாக்குதலில் 40 பேருக்கும் மேலானவர்கள் இறந்து போயினர். தலைமை நீதிபதி செளத்ரிக்கு ஆதரவான அணிவகுப்பை இரத்து செய்யுமாறு கூறிய அரசாங்க அழுத்தத்திற்கு அது உடன்படவில்லை ஆதலால் எதிர்க்கட்சியினர்தான் வன்முறைக்குப் பொறுப்பாவர் என்று கூறி, MQM-ன் வன்முறையை ஆதரித்தார்.

இம்மாத தொடக்கத்தில், நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப் பெறுதல், உரையாடல்கள் நேரடியாக ஒளிபரப்பப்படுதல் ஆகியவற்றை தடைசெய்த கடுமையான சட்டங்களை அரசாங்கம் அறிவித்தது ஆனால் செய்தி ஊடகமும் பொதுமக்களும் போட்ட கூக்கூரலில் மறு வாரமே இந்த அறிவிப்பு பின்வாங்கப்பட்டது.

இதற்கிடையில் அரசாங்க முகாமிற்குள் இருக்கும் பூசல்கள் வெளிவந்துள்ளன. கராச்சி வன்முறையில் இருந்து PML(Q) தன்னை ஒதுக்கிக் கொள்ள முயன்றுள்ளது. 1947-1950 களில் வட இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ஓடி வந்த, உருது பேசுபவர்களான, கராச்சி, ஹைதராபாத் என்னும் சிந்து நகரங்களில் செறிந்து இருக்கும் மொஹாஜிர்களுடைய தளத்தைக் கொண்டுள்ள MQM மாநிலங்களுக்கு அதிகாரம் கூடுதலாக பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது. தளபதி- ஜனாதிபதியை பொறுத்த வரையில், அவர் தன்னை விட்டு விலகி ஓடியிருப்பதற்காக PML (Q) தலைமையை அவர் கண்டித்துள்ளார்.

அரசாங்கம் தன்னுடைய முதலீட்டாளர் சார்புக் கொள்கைகள் பெருகிய பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்துள்ளதாகவும், வறுமையை குறைத்துள்ளதாகவும் கூறுகிறது; ஆனால் அரசாங்கத்தின் வறுமை பற்றிய கூற்றுக்களை உலக வங்கி கூட நம்பகத்தன்மை உடையது என்று ஏற்கவில்லை; உணவுப் பொருட்களுக்கான; பணவீக்கம் 8ல் இருந்து 10 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது மக்களுக்கு பெரும் இடர்களை கொடுத்துள்ளது. சமீபத்திய வாரங்களில் பலமுறை முஷாரஃப் ஆட்சியின் கீழ் தனியார் மயமாக்கப்பட்ட நிறுவனங்களுள் ஒன்றான கராச்சி மின் விநியோகக் கழகம் ஏற்படுத்திய மின் வெட்டை ஒட்டி பல கலகங்கள் வெடித்துள்ளன.

சில சமயம் 12 முதல் 16 மணிநேரம் வரை நீடிக்கும் மின்வெட்டுக்கள் பற்றி கேள்விக்கு இடமின்றி கராச்சி மக்கள் சீற்றம் அடைந்தாலும், கடந்த மாதம் நடந்த நிகழ்வுகளும் எதிர்ப்பிற்கு எரியூட்டியுள்ளன; மேலும் அரசாங்கம் நெருக்கடியில் உள்ளது என்ற உணர்வும் எதிர்ப்பை பெருக்கியுள்ளது.

முஷாரஃப்பும் அவருடைய அதிகாரிகளும் பலமுறையும் இராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டம் கொண்டுள்ளோம் எனக் கூறப்படுவதை மறுத்துள்ளனர். ஆனால் அத்தகைய சட்டம் இல்லாமலேயே எதிர்க்கட்சி செயல்வீரர்கள் நூற்றுக்கணக்கில் கைதுசெய்யப்படுகின்றனர்; செய்தியாளர்களும் பெருகிய முறையில் அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைக்கு இலக்காகி வருகின்றனர்.

கராச்சியின் கடந்த மாதம் நடைபெற்ற குருதி சிந்திய நிகழ்வுகள் முஷாரஃப்பின் ஆட்சி எதிர்ப்பை குருதியில் மூழ்கடித்துவிடுவதற்கு தயாராக உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கராச்சி வன்முறை பற்றி புஷ் நிர்வாகம் ஒருவர்கூட பாகிஸ்தானிய அதிகாரிகளை பற்றிக் குறை கூறவில்லை என்பது கராச்சியில் கவனிக்கப்படாமற் போகவில்லை; இஸ்லாமாபாத்தின் மிகச் சமீபத்திய அமெரிக்க தூதரான ஜோன் நெக்ரோபொன்ட் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தவறானவழி, குருதிசிந்தும் வரலாற்றைக் கொண்ட நபராவார்; Hondrus ல் ரோனோல்ட் றேகனின் கீழ் அமெரிக்கத் தூதராகவும், ஈராக்கில் 2004-05 ல் அமெரிக்கத் தூதராகவும் இருந்துள்ளார்.

புஷ் நிர்வாகத்தின் ஆதரவைத் தவிர, முஷாரஃப் ஆட்சி பதவியில் இருப்பதற்கு முக்கிய காரணம் முதலாளித்துவ எதிர்ப்பின் கோழைத்தனமும், உடந்தைத் தன்மையும்தான். இதன் பல இழைகளும் இராணுவத்துடன் பிணைந்தவை ஆகும்; தங்களுடைய வர்க்க சலுகைகள் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தை காக்கும் முக்கிய தடுப்பரணாகத்தான் இராணுவம் காணப்படுகிறது.

நீதிபதி செளத்ரி பதவிநீக்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கள் மற்றும் கராச்சியில் MQM ஆல் நிகழ்த்தப்பட்ட வன்முறை தாக்குதல்கள், புட்டோ மற்றும் PPP தலைமை முஷாரஃப்புடன் திரைக்குப் பின்னே நடத்திக் கொண்டிருந்த பேச்சுவார்த்தைகளைத் தடைக்கு உட்படுத்தியுள்ளன. ஆனால் PPP இன் வாழ்நாள் தலைவர், தான் முஷாரஃப்புடன் இணைந்து பணியாற்ற தயார் என்றும் அதற்கு அவர் இராணுவச் சீருடை அணிந்த ஜனாதிபதியாக இருக்கக் கூடாது என்றும், தன்னுடைய கட்சி அப்பொழுது முஷாரஃப்பின் போலி ஜனாதிபதி மறுதேர்தலுக்கு உதவும் என்றும் கூறயுள்ளார். தற்பொழுது இருக்கும் சட்ட மன்றங்கள் மூலம் முஷாரஃப் மறுபடியும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் நடவடிக்கையில் ஈடுபட்டால், PPP மற்ற எதிர்க் கட்சிகளுடன் மொத்தமாக இராஜிநாமாச் செய்வதில் சேராது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த நோக்குநிலையுடன் இணைந்த வகையில் PPP, குடியரசுக் கட்சியின் வலது உள்ளடங்கலான அமெரிக்க அரசியல் நடைமுறையுடன் நெருக்கமான உறவுகளை நாடுகிறது; இதில் அடங்கும். International Republican Institute உடைய பிரதிநிதிகளுடன் PPP தலைவர்கள் பல பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்; PPP வலைத்தளம் தற்பொழுது Lisa Curtis எழுதும் கட்டுரையையும் வெளியிட்டுள்ளது. தற்பொழுது Heritage Foundation உடைய ஒரு மூத்த ஆராய்ச்சியாளரான கர்ட்டிஸ் முன்பு குடியரசுக் கட்சி செனட் உறுப்பினரான ரிச்சார்ட் லுகார் மற்றும் அமெரிக்க அரசுத்துறைக்கும் வேலை செய்துள்ளதோடு, கெளரவிக்கப்பட்ட ஒரு முன்னாள் CIA பகுப்பாய்வாளராகவும் இருக்கிறார்.

PML (Nawaz) ன் தலைவரும், செல்வம் கொழிக்கும் தொழில்துறை அதிபருமான நவாஸ் ஷெரிப் இராணுவ ஆதரவுடன் நிறுவப்பட்ட ஒரு கட்சிக்கு தலைமை தாங்குகிறார்; பல ஆண்டுகள் இவர் இராணுவத்தின் தயவில் தன்னுடைய வணிக, அரசியல் போக்குகளில் பெரும் நலன்களை பெற்றுள்ளார்.

இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகளின் ஆறுகட்சிக் கூட்டணியாகிய Muttahida Kajlis-e-Amal, 2002 தேர்தல்களில் இராணுவத்தின் ஆதரவினால் ஆதாயம் பெற்று, அதற்கு ஈடாக முஷாரஃப்பின் 1999 இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்னரான சட்டரீதியான ஆதரவை வழங்கும் தேவையான வரிசைக்கிரமமான அரசியலமைப்பு திருத்தங்கள் நிறைவேறுவதற்கு வாக்குகள் கொடுத்து உதவியது. அவற்றை ஒட்டி ஒரு ஜனாதிபதியாக அவருடைய அதிகாரம் விரிவாக்கப்பட்டது; மேலும் அரசாங்க கொள்கை பற்றிய முக்கிய பகுதிகளை வடிவமைப்பதில் இராணுவம் முக்கிய அரசியலமைப்பு பங்கை வழங்கியது. இன்றளவும் MMA வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை முஷாரஃப்பின்கீழ் ஆட்சி நடத்துகிறது; இராணுவ சார்புடைய PML(Q) உடன் சேர்ந்து பலூசிஸ்தானில் ஒரு கூட்டணி மூலமும் ஆட்சி நடத்துகிறது.