World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

What is behind Russia's delay of Iran's nuclear reactor?

ஈரானின் அணுசக்தி நிலையம் அமைப்பதில் ரஷ்யா தாமதப்படுத்துவதின் பின்னணி யாது?

By Peter Symonds
22 February 2007

Use this version to print | Send this link by email | Email the author

கட்டமைப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி தெஹ்ரான் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளாதல் புஷெர் (Bushehr) என்னும் தெற்கு துறைமுகத்தில் உள்ள ஈரானிய அணுசக்தி நிலையத்தின் பணிகள் தாமதப்படும் என்று திங்களன்று ரஷ்ய அதிகாரிகள் திடீரென அறிவித்துள்ளனர். சாதாரணமான வணிகமுறை முரண்பாடுகள் என்பதற்கு அப்பால், இந்த தாமதம் ஈரானுக்கு எதிரான புஷ் நிர்வாகத்தின் இராணுவ அச்சுறுத்தல்களால் உண்டு பண்ணப்பட்ட தீவிர பதட்டங்களுக்கு இன்னொரு குறிகாட்டியாகும்.

ஈரான் தன்னுடைய யூரேனிய செறிவு நிலையங்களை மூடவேண்டும் என்று ஐ.நா.பாதுகாப்புக் குழு கொடுத்துள்ள காலக் கெடுவிற்கு இரண்டு நாட்கள் முன்னதாகத்தான் ரஷ்யாவின் அறிக்கை வந்துள்ளது. தன்னுடைய அணுசக்தி திட்டங்கள் அனைத்தும் சமாதான வழிவகைக்குத்தான் என்று வலியுறுத்தி வரும் தெஹ்ரான் அதன்படி இன்னும் நடந்துகொள்ளவில்லை. புஷெர் அணுநிலையம் ரஷ்ய நிறுவனங்களால் முடிக்கப்படும் தறுவாயில் உள்ளது; இது மின்சார உற்பத்திக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இது ஐ.நா. தீர்மானத்தில் உள்ளடங்கவில்லை.

Rosastom என்னும் ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரான Sergei Novikov கருத்தின்படி ஈரான் அது கொடுக்க வேண்டிய நிதியப் பொறுப்புக்களில் பின்தங்கியுள்ளது. "பெப்ருவரி மாதம் பணம் ஏதும் வரவில்லை. ஜனவரி மாதம், 25 மில்லியன் டாலர்கள் பாக்கி இருக்கும் நிலையில் நாங்கள் 5.1 மில்லியன் டாலர்கள்தான் பெற்றுள்ளோம்" என்று அவர் கூறினார் குறைவாக பணம் வந்தால் அது ஒப்புக்கொள்ளப்பட்ட அட்டவணையை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும் என்றும் அதில் அணுசக்தி எரிபொருள் மற்றும் நிலையம் தொடக்கப்படுவதும் அடங்கும் என்று அவர் கூறினார்.

பல முறையும் தாமதங்களுக்கு பின்னர், ரஷ்யாவும் ஈரானும் கடந்த ஆண்டு அணுசக்தி நிலையம் முடிக்கப்படுவது பற்றி ஒரு கால அட்டவணைக்கு உடன்பட்டிருந்தன. அணுசக்தி எரிபொருள் மார்ச் 2007 க்குள் கொடுக்கப்பட்டுவிடும் என்றும், அணுநிலைய திறப்பு செப்டம்பரில் நடத்தப்படும் என்றும், அதையொட்டி மின்சக்தி உற்பத்தி நவம்பரில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இப்பொழுதோ அணுசக்தி எரிபொருள் தாமதமாகிவிட்டது. ரஷ்ய அரசாங்க அணுசக்தி நிறுவனமான Atompromresursy ல் உள்ள அதிகாரியான Andrei Cherkasendko உடைய கருத்தின்படி 2008 நடுப்பகுதிவரை செயற்பாடுகள் தொடங்குவது அரிது எனப்படுகிறது.

இந்த அறிவிப்பிற்கு ஈரான் புறத்தில் இருந்து சீற்றமான விடையிறுப்பு வந்துள்ளது. ஈரான் நாட்டின் அணுசக்தி அமைப்பின் துண இயக்குனரான Muhammad Saeedi பணங்கள் கொடுப்பதில் தாமதம் ஏதும் இல்லை என்று கூறினார். ரஷ்ய ஒப்பந்தக்காரர் மீதுதான் பணப் பிரச்சினைகள் உள்ளனவே அன்றி ஈரானியர் தரப்பில் இல்லை என்று அவர் வலியுறுத்தினார். புதன் கிழமையன்று, ஈரானிய பாராளுமன்றத்தின் அவைத்தலைவரான Gholam-Ali Haddad-Adel குறிப்பிட்ட காலத்திற்குள் அணுநிலையத்தை முடித்துத்தருமாறு ரஷ்யாவை வலியுறுத்தியதுடன் "ஈரானிய மக்களுடைய உள்ளத்தில் தாமதம் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்" என்றும் எச்சரித்தார்.

பணவரவில் "கொடுக்கப்படவில்லை" என்பது தாமதத்திற்கு ஒரு போலிக்காரணம் என்பது வெளிப்படை. ஈரான் பணத்தை அமெரிக்க டாலர்கள் என்பதற்கு பதிலாக யூரோக்கள் மூலம் கொடுக்க விரும்புகிறது; ஏனெனில் அதன் கொள்கை, இருப்புக்களை கணக்குகளை டாலர் தவிர்ந்த ஏனைய நாணயங்களில் வைத்துக் கொள்ளுவது என்பதாகும். தெஹ்ரானுக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக புஷ் நிர்வாகம் ஐரோப்பிய, ஆசிய வங்கிகளை ஈரானின் டாலர் கணக்குகளை முடக்கி வைக்குமாறு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் அபத்தமான முறையில் Rosatom, ஈரான் யூரோக்களில் பணத்தை திருப்பத் தருதல் கூடாது என மறுக்கிறது; முதல் ஒப்பந்தமும் அதன்படி மறு பேச்சு வார்த்தைகளுக்கு உட்பட வேண்டும் என்று அது கூறுகிறது.

1995 ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட 1.3 பில்லியன் டாலர்கள் ஒப்பந்தம், தொடர்புடைய ரஷ்ய ஒப்பந்தக்காரர்களுக்கு இலாபம் தராது என்று பல வர்ணனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒப்பந்தம் மறு பேச்சு வார்த்தைகளுக்கு உட்பட வேண்டும் என்று கூறுவது ஈரானிடம் இருந்து இன்னும் பணத்தை கறப்பதற்கான வழிதான். அதிகம் பேசப்பட்டுவிட்ட இந்த திட்டம் ஈரானிய ரஷ்ய உறவுகளிலும் மிக முக்கியமான கூறுபாட்டை கொண்டுள்ளது. கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள புஷெர் நிலையம் பற்றிய அற்ப முரண்பாடுகள் இனி வரவிருக்கும் அணுக் கட்டமைப்பு ஒப்பந்தங்கள் என்பவை பற்றி மாஸ்கோவின் நம்பிக்கைகளை தகர்த்துவிடக்கூடும்.

Rosatom முடிவு வெளிப்படையாக அரசியல் என்பதே அன்றி வணிக முடிவு அல்ல என்பது தெளிவாகிறது. கடந்த தசாப்தம் முழுவதும் இத்திட்டத்தில் இருந்து முற்றிலும் விலக வேண்டும் என்ற வாஷிங்டனுடைய அழுத்தத்தை மாஸ்கோ பலமுறையும் எதிர்த்து வந்துள்ளது. ரஷ்ய வற்புறுத்தலின்பேரில்தான் டிசம்பர்மாதம் வெளிவந்த ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் சர்வதேச பொருளாதார தடைகள் புஷெர் அணுநிலையத்தை ஒதுக்கி வைத்திருந்தது. அதே நேரத்தில் மாஸ்கோ அரசாங்கம், புஷ் நிர்வாகம் அணுசக்தி பிரச்சினையை போலிக் காரணமாக கொண்டு ஈரான்மீது இராணுவத் தாக்குதல் நடத்தலாம் என்று ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது; அதையொட்டி ஈரான் தன்னுடைய யுரேனிய செறிவு அது தொடர்புடைய மற்ற செயற்பாடுகளை மூடிவிட வேண்டும் என்ற அழுத்தம் பெருகியுள்ளது.

ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் பற்றிய விவாதத்தை அடுத்து உடனடியாக வந்ததால், மாஸ்கோ புஷெர் திட்டத்தை தெஹ்ரானுக்கு எதிரான மற்றொரு நெம்புகோலாக பயன்படுத்த விரும்புகிறது என்று ஐயமில்லை. மேலும் வாஷிங்டன் இன்னும் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை ஈரானுக்கு எதிராக சுமத்த வேண்டும் என்று கோருகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் ஈரானிய அணுநிலைய தாமதத்தை பயன்படுத்தி ஏதேனும் புதிய ஐ.நா.தீர்மானம் தவிர்க்கமுடியாமல் வருமேயானால் இதை பேரம் பேச உபயோகிக்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்க கூடும்.

ஏனைய சில கணிப்பீடுகளும் இதில் இருக்கக் கூடும். ஈரான்மீது ஒரு தீவிர அமெரிக்க தாக்குதல் என்ற ஆபத்து உள்ளது என்பது ரஷ்யாவிற்கு நன்கு தெரியும். USS John C. Stennis தலைமையிலான இரண்டாம் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் ஒன்று இப்பகுதியில் திங்கட்கிழமையன்று வந்தது; ஈராக் மீது அமெரிக்க படையெடுப்பு 2003ல் தொடங்கியதற்கு பின்னர் முதல் தடவையாக பாரசீக வளைகுடாவில் இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா அதன் வளைகுடா நட்பு நாடுகள் பலவற்றில் Patriot ஏவுகணை-எதிர்ப்பு கருவிகளையும் நிலைநிறுத்தியுள்ளது. இப்படி அச்சுறுத்தும் வகையிலான இராணுவ நடவடிக்கைகளை ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் ஈராக்கில் அமெரிக்க-எதிர்ப்பு எழுச்சியாளர்களுக்கு அது கொடுக்கும் ஆதரவு என்னும் அமெரிக்க பிரச்சாரமும் அதிகரித்து வருகிறது.

லெபனிய இதழான Al-Watan Al-Arabi புதன் கிழமை அன்று ரஷ்ய வெளியுறவு மந்திரி Sergei Lavrov ஈரான் உட்பட அப்பகுதியில் ஈராக்கில் இருக்கும் அமெரிக்கப் படைகள் பயன்படுத்துவது கூடாது என்று எச்சரித்தது பற்றி எழுதியதாவது: "ஈராக்கில் இருக்கும் சர்வதேச படைகள் ஐ.நா.பாதுகாப்புக் குழு இட்ட கட்டளையின்படிதான் உறுதியாக நடந்து கொள்ள வேண்டும்; அதன்படி ஈராக்கை விட்டு அது எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது." என்று அவர் கூறியிருந்தார். அவர் மேலும் கூறியதாவது: "பூசல் அதிகரிப்பு மற்றும் அது ஈராக்கிய எல்லைகளுக்கு அப்பால் பரவுதல் என்பது தவிர்க்க முடியாமல் மத்திய கிழக்கு மட்டும் அல்லாமல் பல இடங்களிலும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்."

ஆனால் லாவ்ரோவிற்கு நன்கு தெரிந்துள்ளபடி, ஐ.நா. தீர்மானம் இல்லாதது ஒன்றும் புஷ் நிர்வாகத்தை மார்ச் 2003ல் சட்டவிரோத படையெடுப்பை தொடங்குவதை நிறுத்திவிடவில்லை. பின்னர் ரஷ்யாவும் மற்ற ஐ.நா.பாதுகாப்புக் குழு உறுப்பு நாடுகளும் எந்தவித ஆய்வும் இன்றி ஏற்றுக்கொள்வது போல் பின்னர் உறுதி செய்தன. அதேபோல் ஐ.நா. தீர்மானம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஈரானை தாக்குவதில் இருந்து அமெரிக்காவை எதுவும் நிறுத்தப்போவதில்லை.

திங்களன்று அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டுப்பாட்டகம் ஈரான்மீது நடத்தப்பட இருக்கும் போரில், விமான மூலம் தாக்குதல்கள் நடத்த வேண்டிய இடங்கள் பற்றிய குறிப்பை முடித்துள்ளதாக BBC தெரிவிக்கிறது; இதில் ஈரானின் அணுசக்தி நிலையங்களும் பல இராணுவ கட்டமைப்புக்களும் அடங்கும். அணுசக்தி நிலையங்கள் பட்டியலில் புஷெர் நிலையமும் சேர்க்கப்பட்டுள்ளது; இது மின் உற்பத்திக்காகத்தான் என்றாலும், செலவழிக்கப்பட்ட எரிபொருள் மிச்சங்கள் அனைத்தும் ரஷ்யாவிற்கு திருப்ப கொடுக்கப்பட்டுவிடும் என்று ஒப்பந்தம் இருந்தபோதிலும் கூட, இதுவும் பட்டியலில் உள்ளது.

இப்பின்னணியில், புஷெர் திட்டம் பற்றிய ரஷ்யாவின் காலதாமத அறிவிப்பு இன்னும் கூடுதலான தீமைக் கூறுபாட்டினையும் வெளிப்படுத்துகிறது. கால அட்டவணையின் மிக முக்கியமான கூறுபாடு, நிலைய எரிபொருளான செறிவுற்ற யூரேனியம் பற்றியது ஆகும்; இது அடுத்த மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். எரிபொருள் ஏற்றப்பட்டுவிட்டால், நிலையத்தின் மீது விமானவழி தாக்குதல் என்பது கதிரியக்க மாசுகளின் தொகுப்பை சுற்றுச்சூழலில் கொண்டுவரக் கூடிய திறனை கொண்டுள்ளது; இது ஈரான் மட்டும் அல்லாமல் அண்டை நாடுகளையும் பெரிதும் பாதிக்கும். இந்த நிலையத்தில் வேலைசெய்துவரும் ரஷ்ய தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆபத்திற்கு உட்படுவர்; இது ஒரு சர்வதேச நிகழ்வை தூண்டிவிடும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது.

திடீரென காலதாமதமாகும் என்று ரஷ்யா கூறுவதானது வெளிப்படையான வினாவைத்தான் எழுப்புகிறது: ஈரான்மீதான ஒரு இராணுவ தாக்குதல் பற்றிய புஷ் நிர்வாகத்தின் திட்டங்கள் பற்றி புட்டின் நிர்வாகத்திற்கு எந்த அளவிற்கு தெரியும்?