World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Gaullist presidential candidate Sarkozy allies with Italy's post-fascists

"Show me your friends, and I will tell you who you are"

இத்தாலியின் பிந்தைய பாசிஸ்ட்டுக்களுடன் கோலிச ஜனாதிபதி வேட்பாளர் சார்க்கோசி உறவாடுகிறார்

"உன்னுடைய நண்பர்களை காட்டு, உன்னை யாரென்று கூறுவேன்"

By Peter Schwarz
23 February 2007

Use this version to print | Send this link by email | Email the author

மேலே மேற்கோளிடப்பட்டுள்ள கிரேக்க பழமொழியின் அடிப்படையில் பிரான்சின் கோலிச ஜனாதிபதி வேட்பாளர் நிக்கோலா சார்க்கோசியை எடைபோடுவோமானால், ஐரோப்பிய அரசியலில் இருக்கும் மிகத் தீவிர வலதுசாரி சக்திகளுடன் உறுதியான உறவுகளை கொண்ட அரசியல்வாதியாக அவர் வெளிப்படுகிறார். இத்தாலியின் பிந்தைய பாசிச Alleanza Nazionale (National Alliance, NA) உடைய தலைவரான Gianfranco Fini சார்க்கோசியின் நெருக்கமான அரசியல் நண்பர்களில் ஒருவராவார்.

2005ம் ஆண்டில் நிக்கோலா சார்க்கோசியின் புத்தகமான குடியரசு, மதம் நம்பிக்கை (La République, les religions, l'espérance) இன் இத்தாலிய மொழிபெயர்ப்பு இத்தாலிய வலதுசாரி தலைவர் எழுதிய முன்னுரையுடன் வெளிவந்தது; இந்த ஆண்டு சார்க்கோசியின் சமீபத்திய நூலான Témoignage உடைய இத்தாலிய பதிப்பிற்கும் முன்னுரை கொடுத்து மீண்டும் அவரை கெளரவப்படுத்தியுள்ளார். இரண்டு பதிப்புக்களிலும் நூல்களின் தலைப்பு பக்கத்தில் பீனியுடைய முன்னுரைகள் இருப்பது மிகப் பெரிய எழுத்துக்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.

கோலிச UMP (Union for a Popular Movement) தலைவர்மீது பீனி பெரும் புகழாரத்தை சூட்டியுள்ளார். "அன்றாட வாழ்வில் எண்ணங்களை எப்படி செயலில் மெய்ப்பித்துக்காட்டுவது என்பதை புரிந்து கொண்ட மனிதர் என்ற வகையில், மற்றும் குடியேற்றம், பொது ஒழுங்கு, நிர்வாக சீர்திருத்தம், எரியும் புறநகர்கள் மற்றும் முக்கியமான நிறுவனங்களுக்கு [பிரெஞ்சு தளத்தை கொண்ட மின் உற்பத்தி மற்றும் போக்கு வரத்து நிறுவனம்] Alstom போன்றவற்றை எதிர் கொண்டதுடன் முக்கிய உலகப் பிரச்சினைகளுக்கு சார்க்கோசி ஒரு கபினட் மந்திரி என்ற முறையில் தனது அனுபவங்களை பிரயோகிக்கிறார்" என்பது பற்றி முன்னுரையில் பீனி விளக்கியுள்ளார்.

NA இன் செய்தித்தாளான இத்தாலிய நூற்றாண்டு (IL Secolo d'Italia) ஒரு நெருக்கமான அறிவார்ந்த தொடர்பு சார்க்கோசிக்கும் பீனிக்கும் இருப்பதாக குறிப்பிட்டு, "அரசியல், குணநலன், தலைமுறைகள் ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட பரஸ்பர நன்மையின் பொருட்டு இணைந்து வாழ்தல்" பற்றியும் எழுதியுள்ளது.

இதற்குக் கைமாறாக சார்க்கோசி பீனிக்கு தன் புகழ்தல் பற்றிய தன் சொந்த வெளிப்படுத்தல் மூலம் பதிலிறுத்தார். 2006 கோடையில், ரோமில் அவர் மிகப் பரந்த அளவு விவாதத்தை பீனியுடன் மேற்கொண்டார். மோதல்கொண்ட கடமைப்பாடுகளின் காரணமாக இந்த ஆண்டு பெப்ருவரி மாதம் NA மாநாட்டிற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை அவரால் ஏற்கமுடியவில்லை; இருந்தாலும் மாநாட்டிற்கு தன்னுடைய வாழ்த்துரையை அனுப்பி வைத்து இத்தாலிய வலதிற்கு ஆர்வத்துடன் தன்னுடைய ஆதரவை தெரிவித்திருந்தார்.

"அன்புடைய Gianfranco", உங்களுக்கு இம்மாநாட்டை திறம்பட ஏற்பாடு செய்து நடத்தியதற்காக, "மிகச் சிறந்த வாழ்த்துக்கள்"; "இத்தாலிய அரசியல் காட்சியில் மிக முக்கியமான ஆக்கபூர்வ சக்திகளில் ஒன்றைத்தான் NA பிரதிபலிக்கிறது என்பதை இம்மாநாடு மீண்டும் உறுதி செய்துள்ளது." என்று சார்க்கோசி கூறியிருந்தார்.

"உங்களுடன் புதுப்பிப்பதற்கான பாதையில் பின்பற்றி வரும் வகையில் உள்ள NA இன் அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்; அவர்கள் NA வை இன்றுள்ள அதன் நிலைக்கு கொண்டுவந்துள்ளனர் -- அவ்வமைப்பு பெர்லுஸ்கோனியின் "முன்னேறும் இத்தாலி" [Berlusconi's "Forza Italia "] யுடன் சேர்ந்து தற்கால, புதுமை வலதின் உணர்வை உட்கொண்டிருக்கிறது."

சார்க்கோசி தொடர்ந்து கூறினார்: "முன்கூட்டிய எண்ணங்களுக்கு எதிராகப் போரிடும் தைரியம், அறிவார்ந்த வகையில் சுதந்திரமாக செயல்படும் தன்மையுடன் இணைந்து உங்களை புதுமை மிகுந்த தீர்வுகளை துணிவாய் முன்னிலைப்படுத்த வைத்துள்ளது; இவை இரண்டும் இத்தாலிய வலதை Unione [இத்தாலியின் தற்பொழுதை மைய-இடது கூட்டணி, ரோமனோ பிரோடியின் தலைமையில் உள்ளது] க்கு எதிராக மக்கள் இயக்கமாக துணிவுடன் எதிர்த்துப் போரிட வைத்துள்ள சிறப்பியல்புகளாகும், அரசியல் வாழ்வை நவீனப்படுத்துவதற்கான மிக முக்கியமான சக்தியாக அதனை தொடர்ந்து வைத்திருக்க வேண்டி நாம் கட்டாயம் முழுமையாக வளர்த்தெடுக்க வேண்டும்."

Alleanza Nazionale விற்கு பொங்கி வரும் உணர்வுடன் சார்க்கோசி பரிவுணர்வும் ஆதரவும் காட்டியிருப்பது பல விதங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

NA ஆனது இத்தாலிய சமூக இயக்கமான MSI என்னும் நவ பாசிச கட்சியின் நேரடிப் பின்தோன்றலாகும், இது போருக்கு பிந்தைய காலத்தில் பல தசாப்தங்களும், பாசி சர்வாதிகாரி பெனிடோ முசோலினியின் நீண்ட கால ஆதரவாளர்களை உறுப்பினர்களாக கொண்டிருந்த தளத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது 55 வயதாகும் பீனி, நீண்டகாலம் MSI தலைவரான Giorgio Almirante உடைய வலது கரமாகத் திகழ்ந்தவராவார்.

1977ம் ஆண்டு, MSI இன் இளைஞர் அமைப்பிற்கு பீனி தலைவரானார்; 1987ம் ஆண்டு Almirante ஐ அடுத்து அவர் MSI யின் தலைவராக விளங்கினார். 1994ம் ஆண்டு சில்வியோ பெர்லுஸ்கோனியின் முதல் அரசாங்கத்தில் ஒரு மந்திரியாக இருந்த பீனி, முசோலினியை "இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அரசியல்மேதை" என்று புகழ்ந்தார்.

அதற்குப் பின் பீனி பகிரங்கமாக இத்தாலிய பாசிச கடந்த காலத்தில் இருந்து பல நேரங்களிலும் தன்னை தொடர்பறுத்துக் கொண்டு, NA வை ஒரு தேசிய கன்சர்வேடிவ் அமைப்பு என்ற மேலும் மிதமான போர்வையில் மறைக்க முற்பட்டார். ஆனால் இது கட்சி முழுவதற்கும் பொருந்தாது; அது இன்னும் பாசிசத்தின் அடையாளமான நெருப்பை மூன்று வண்ணங்களில் அதன் மரபுரிமைச் சின்னம் தாங்கிய பதாகையில் கொண்டுள்ளது. சர்வாதிகாரியின் (முசோலினி) படங்கள் இன்னும் கட்சித் தலைமை அலுவலகத்தை அலங்கரிக்கின்றன; கட்சி எண்ணிறைந்த புதிய பாசிச உறுப்பினர்களை கொண்டுள்ளது.

NA, ஐரோப்பிய அளவில் வலதுசாரி தேசியவாத சக்திகளுடன் இணைந்து செயலாற்றுகிறது. கட்சியின் ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் Union for a Europe of the Nations என்னும் பாராளுமன்ற குழுவில் உள்ளனர்; இதில் பல வலதுசாரி தேசிய கட்சிகள் உள்ளன; முக்கியமாக இவை ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்ப்பவை ஆகும்.

ஐரோப்பிய தேசங்களுக்கான ஒன்றியத்தில் இருக்கும் பல கட்சிகள் இழிந்த முறையில் இனவெறிபிடித்தவை ஆகும்; Italian Lega Nord (வடக்குக் குழு); Law and Justice என்னும் வலதுசாரி போலந்து ஆளும் கட்சிகள்; the League of Polish Familities; வலதுசாரி Danish People's Party; மற்றும் French Rassemblement pour la France என்னும் சார்ல் பஸ்குவா ஆல் நிறுவப்பட்ட தேசிய கட்சி ஆகியவை இதில் உள்ளன.

சார்க்கோசியின் UMP, மற்றொருபுறத்தில், ஐரோப்பிய மக்கள் கட்சியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளது; அதில் ஐரோப்பாவின் முக்கிய கன்சர்வேட்டிவ் மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக கட்சிகள், ஜேர்மனியில் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU), கிறிஸ்துவ சமூக யூனியன் (CSU) ஆகியவையும் அடங்கும்.

சார்க்கோசி இத்தாலியின் நவீன பாசிஸ்ட்டுக்களுடன் கொஞ்சி நிற்பது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. ஒரு ஹங்கேரிய பிரபுவின் மகன் என்னும் முறையில், சார்க்கோசி மிகவும் பாடுபட்டுத்தான் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மனுவைப் பெற முடிந்தது; அது கோலிச ஸ்தாபன அமைப்பிற்கு எதிராக கடும் போராட்டத்திற்கு பின்னரே அடையப்பட்டது.

பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சிக்கான புதிய இயங்குமுறைகளை வளர்த்தெடுப்பதற்கு அவர் முயன்று கொண்டு வருகிறார்; சமீபத்திய காலத்தில் போர்க்குண சமூக எதிர்ப்புக்களால் பலமுறையும் பிரான்ஸ் அதிர்வை எதிர்கொண்ட நிலையில், தொழிலாள வர்க்க எதிர்ப்புக்களை இதுவரை அடக்கி வைத்திருந்த, அதன் மூலம் முதலாளித்துவ ஒழுங்கிற்கு தூணாக நின்ற பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் ஆகியவற்றின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

வரும் வசந்தகால ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில், சார்க்கோசி அரச எந்திரங்களை வலுப்படுத்துவதற்கு விரக்தியடைந்துள்ள குட்டி முதலாளித்துவ தட்டுக்கள், தொழிலாளர்களின் குழப்பமுற்றிருக்கும் பகுதிகள் ஆகியவற்றை வெகுஜன வாய்ச்சவடாலுடன் சர்வாதிகாரத்திற்கு கீழ்ப்படிதலை ஆதரிக்கிற வேண்டுகோளுடன் இணைத்துக் கொள்ள முயல்கிறார்; இதற்காக பாசிச மரபுகள், சிந்தனை இவற்றின்பால் கவர்ச்சியூட்டி இழுக்கவும் முற்படுகிறார்.

See Also:

பிரான்சில் கருத்து வாக்கெடுப்பு : ஆளும் கட்சி வலதுக்குத் திரும்புவதற்கு சர்கோசி தலைமைதாங்குகிறார்