World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

China's defence report highlights growing dangers of war

சீனாவின் பாதுகாப்பு அறிக்கை வளர்ச்சிகண்டுவரும் யுத்த அபாயத்தை வெளிக்காட்டுகிறது

By John Chan
18 January 2007

Use this version to print | Send this link by email | Email the author

டிசம்பர் இறுதியில் வெளியிடப்பட்ட சீனாவின் இராணுவ மற்றும் மூலோபாய ஆய்வான "2006ல் தேசிய பாதுகாப்பு" என்ற அறிக்கை, பெரும் வல்லரசுகளுக்கிடையில் வளர்ச்சிகண்டுவரும் போட்டிக்கு பெஜ்ஜிங்கின் எதிர்ச்செயல்களை பிரதிபலிக்கும் உயர்மட்ட அரசியல் ஆவணமாகும்.

1998ல் இருந்து ஐந்தாவது தடவையாக வெளிவந்துள்ள இந்த அரசாங்க அறிக்கை, வாஷிங்டனின் அதிகரித்துவரும் அழுத்தத்திற்கான ஒரு பெரும் பிரதிபலிப்பாகும். 2001ல் புஷ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சீன இராணுவம் அமெரிக்காவிற்கு ஒரு "அச்சுறுத்தலாக" இருப்பதாக குறிப்பிட்டு ஒரு தொகை ஆண்டு அறிக்கைகளை பென்டகன் வெளியிட்டுள்ளது. இந்த விமர்சனத்தை எதிர்த்து வாதிட்ட சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோ, தனது நாடு "சமாதானமான வளர்ச்சியில்" ஈடுபட்டுள்ளது என்றார்.

சீனாவின் இராணுவ அபிவிருத்தி "மர்மமானது" என்ற வாஷிங்டனின் கூற்றை திசை திருப்ப முயற்சித்தாலும், அண்மைய அறிக்கையானது முன்னையதை காட்டிலும் நாட்டின் இராணுவ இயந்திரத்தைப் பற்றி மேலும் விபரங்களை வழங்குகிறது. அது பாதுகாப்புச் செலவுகள், கட்டளை அமைப்பு பற்றிய தகவல்களை வழங்குவதோடு இராணுவக் கொள்கை தொடர்பான ஒரு மேலோட்டமான ஆய்வை வழங்குகிறது. அரசாங்கம் 45 நாடுகளைச் சேர்ந்த 70 இராணுவ அலுவலர்களுக்காக இந்த அறிக்கை தொடர்பான ஒரு விசேட பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியது.

எவ்வாறெனினும், சீனாவின் பொருளாதார பேராற்றலானது அதன் சொந்த புறநிலை தர்க்கமாகும். சராசரியான 10 சதவீத ஆண்டு வளர்ச்சி வீதத்துடனும் வெளிநாட்டு நாணய இருப்பில் உள்ள ஒரு ட்ரில்லியன் டொலர்களுடனும் பெஜ்ஜிங்கால் மக்கள் விடுதலை இராணுவத்தில் முதலீட்டைப் பெருக்க முடிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, எண்ணெய் மற்றும் மூலப் பொருட்களைப் பெற உலகம் பூராவும் சீனா முன்னெடுக்கும் முயற்சிகள் அதை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சக்திகளுடனும் நேரடியாக போட்டிக்கு இட்டுச் சென்றுள்ளது.

ஷங்ஹய் கூட்டுத்தாபன அமைப்பில் ரஷ்யாவுடனான சீனாவின் பிணைப்பு வளர்ச்சிகண்டு வருவதானது மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவை மேலாதிக்கம் செய்யும் அமெரிக்க குறிக்கோளை குறுக்கே வெட்டுகிறது. ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவிலும், வளங்களுக்காக உதவிகைள வழங்கி தனது செல்வாக்கை விரிவுபடுத்திக்கொள்வதில் பெஜ்ஜிங் ஈடுபட்டுள்ளது. வாஷிங்டன் பகிரங்கமாக பகைமை பாராட்டும் சூடான், வெனிசூலா மற்றும் பர்மாவில் உள்ள அரசாங்கங்களுக்கு சீன ஆதரவளிப்பதோடு ஆயுதங்கள் கூட வழங்கியுள்ளது.

இந்த பாதுகாப்பு அறிக்கை, மத்திய கிழக்கிலும் சர்வதேச ரீதியிலும் புஷ் நிர்வாகத்தின் படையெடுப்பு பற்றி பெஜ்ஜிங்கில் வளர்ச்சியடைந்துவரும் கவலையையே சுட்டிக்காட்டுகிறது. சீனாவின் "பாதுகாப்பு சூழலைப்" பற்றி அணுகும் அதன் முதலாவது பாகம், "தமது இராணுவ கூட்டணிகளை துரிதப்படுத்தும் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பலாத்காரத்தை அல்லது அச்சுறுத்தலை நாடும் ஒரு சிறு தொகையான நாடுகளின் நடைமுறையைப்" பற்றி எச்சரிக்கின்றது.

இந்தப் பாகம், ஆசியாவில் அமெரிக்கத் தலைமையிலான மறு ஒழுங்குப்படுத்தல் அபாயத்தைப் பற்றி குறிப்பாக எச்சரிக்கின்றது. "அமெரிக்காவும் ஜப்பானும் நடைமுறைசார்ந்த ஒருங்கிணைப்பு பணியில் தமது இராணுவ கூட்டணியை பலப்படுத்துகின்றன. ஜப்பான் தனது அரசியலமைப்பை மறுசீரமைக்கவும் கூட்டு சுய-பாதுகாப்பை வளர்த்துக்கொள்ளவும் எதிர்பார்க்கின்றது. அதன் இராணுவ நிலைப்படுத்தலானது அதிகம் எல்லை கடந்து தகவமைவுபடுத்தப்பட்டதாகி வருகின்றது. டி.பி.ஆர்.கே (வட கொரியா) ஏவுகணை பரிசோதனையை முன்னெடுத்திருப்பதோடு அணுவாயுதப் பரிசோதனையையும் மேற்கொள்கின்றது. ஆகையால், கொரிய தீவகற்பம் மற்றும் வடகிழக்கு ஆசியாவிலும் நிலைமை மேலும் சிக்கலானதாகவும் சவால்நிறைந்ததாகவும் ஆகிவருகின்றது."

வடகிழக்கு ஆசியாவில் அதிகளவில் போரிடும் பாத்திரமொன்றை இட்டு நிரப்ப ஜப்பானுக்கு புஷ் நிர்வாகத்தால் வழங்கப்படும் ஊக்குவிப்பு தொடர்பாக சீனா ஆழமாக கவலையடைந்துள்ளது. அக்டோபரில் வட கொரியாவின் அணுவாயுத பரிசோதனையானது ஜப்பானுக்கும் அணுவாயுதங்களை அபிவிருத்தி செய்ய சாக்குப்போக்கை வழங்கக் கூடும் எனவும் பெஜ்ஜிங் பீதியடைந்துள்ளது. வட கொரியாவில் "ஆட்சி மாற்றத்திற்காக" புஷ் நிர்வாகம் கொஞ்சம் உருமறைத்துத் திணிக்கும் அழுத்தமானது சீனாவின் வாயிற்படியில் அரசியல் ரீதியில் பகைமையான ஒரு அரசு உருவாகும் அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளது.

அமெரிக்காவின் ஆதரவை பெற்ற தாய்வானின் சுதந்திரத்திற்கான உத்தியோகபூர்வ பிரகடனத்தை சீனாவின் தேசிய பாதுகாப்புக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலாக இந்த அறிக்கையில் குறிப்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெஜ்ஜிங் தாய்வானை ஒரு துரோகி மாகாணமாக கருதுவதோடு சுதந்திரத்தை நோக்கிய நகர்வுகள் சீனாவினுள் பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவிக்கும் எனவும் பீதியடைந்துள்ளது. சீனத் தாக்குதலில் இருந்து தீவை இராணுவ ரீதியில் பாதுகாக்க அமெரிக்கா வாக்குறுதியளித்துள்ளதோடு, மிகவும் முக்கியமாக, தாய்வானுக்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கையின் போதும் அதற்கு உதவி செய்யுமாறு ஜப்பானையும் ஊக்குவித்துள்ளது.

வாஷிங்டன் சீனாவின் எல்லையுடன் அல்லது அருகில் உள்ள நாடுகளுடன் ஒரு தொகை இரணுவக் கூட்டு அல்லது மூலோபாய ஒழுங்குகளைக் கொண்டுள்ளது. இந்த நாடுகளில் தென் கொரியா, ஜப்பான், தாய்வான், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தானும் அடங்கும். அமெரிக்காவின் சுற்றிவளைப்பு அச்சுறுத்தலுக்கு பதிலிறுக்கும் வகையிலும் குறிப்பாக எண்ணெய் போன்ற மூலப் பொருட்களின் வழங்களை உத்தரவாதப்படுத்திக்கொள்ளவும் சீனா தனது இராணுவத்தை விரிவுபடுத்தி வருகின்றது.

இந்த ஆண்டு சீனாவின் பாதுகாப்புச் செலவு 283.8 பில்லியன் யுவான்களை அல்லது 36.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டுகிறது. இதை 2005 உடன் ஒப்பிடும் போது சுமார் 15 வீத அதிகரிப்பாகும். 1990 முதல் 2005 வரை சீனாவின் இராணுவச் செலவின் சராசரி வருடாந்த அதிகரிப்பு 15.36 வீதமாக இருந்தது. இந்த அதிகரிப்பை மறைத்துக்கொள்ளும் அரசாங்க அறிக்கை, இந்த அதிகரிப்பில் அதிகளவு சம்பளத்துக்கே செலவாகுவதாக கூறிக்கொள்கிறது. சீனாவின் இராணுவச் செலவானது அமெரிக்காவின் 6.2 வீதத்துடன் ஒப்பிடுகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4 வீதத்திற்கும் குறைவானதாகவே உள்ளதாகவும் அது பிரகடனம் செய்கின்றது.

சீனா 1983 மற்றும் 1997ல் இருவேறு சந்தர்ப்பங்களிலும், மொத்தம் ஒன்றரை மில்லியன் அளவு மிகப் பெருந்தொகையான துருப்புக்கள் குறைப்பை மேற்கொண்டது. 2003-2005ல் மேலும் 200,000 துருப்புக்கள் குறைக்கப்பட்டன. தற்போது பி.எல்.ஏ. 2.3 மில்லியன் இராணுவ சிப்பாய்களைக் கொண்டுள்ளது. இது உலகின் பிரமாண்டமான ஆயுதப் படையாகும். இதற்கும் மேலாக, பிரதானமாக உள்நாட்டில் அமைதியின்மையை நசுக்குவதற்காக சீனா 660,000 பலமான மக்கள் பொலிஸ் ஆயுதப் படையையும் கொண்டுள்ளது.

பீஜிங் அதன் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு ஆயுதங்களை பெறும் செலவு அல்லது இராணுவம் சம்பந்தப்பட்ட வர்த்தகத்தில் வரும் வருமானத்தை உள்ளடக்காத காரணத்தால் சீனாவின் வருடாந்த இராணுவ வரவு செலவுத் திட்டம் உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம் என பென்டகன் கூறுகின்றது. அமெரிக்க இராணுவ செலவு அதிகரிப்பை நியாயப்படுத்துவதற்காக சீன "அச்சுறுத்தலை" மிகைப்படுத்தும் பென்டகனின் மதிப்பீட்டை அமெரிக்க ஆய்வாளர்களின் கூற்று குற்றஞ்சாட்டும் அதே வேளை, சீனாவின் இராணுவ நவீனமயப்படுத்தலானது சந்தேகத்திற்கிடமின்றி 1990களின் முற்பகுதியில் இருந்து தொடங்கியதாகும்.

1970 வரை மாவோ சேதுங்கின் விவசாயிகளை அடித்தளமாக கொண்ட பி.எல்.ஏ. குறைந்தளவிலேயே ஆயுதபாணியாக்கப்பட்டிருந்தது. அமெரிக்க அல்லது சோவியத் படையெடுப்பு சம்பவத்தில், ஆக்கிரமிப்பாளர்களை சுற்றிவளைப்பதற்காக "கடல்போல் மனிதர்களை" வைத்திருப்பதே அதன் பிரதான கையாளும் வழிமுறையாக இருந்தது. 1980களில், அமெரிக்கா சீனாவை சோவியத் ஒன்றியத்தை சரியீடு செய்யும் எடையாகப் பயன்படுத்த முயற்சித்ததோடு பெஜ்ஜிங்கின் இராணுவத்தை நவீனமயப்படுத்துவதற்காக "சந்தை சீர்திருத்தத்தின்" முன்னெடுப்புகளை பயன்படுத்திக்கொள்ள அதற்கு நடைமுறையில் ஊக்குவிப்பு வழங்கியது.

1990-91ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை அடுத்து அடிப்படை மாற்றங்கள் இடம்பெற்றன. முதலாவது வளைகுடா யுத்தத்தில் ஈராக் இராணுவத்திற்கு அமெரிக்கா ஏற்படுத்திய அழிவுகரமான தோல்வியால் சீன ஜெனரல்கள் அதிர்ச்சியடைந்தனர். உயர் தொழில்நுட்ப போர் முன்னெடுப்புகள் மேலாதிக்கம் செய்த "இராணுவப் புரட்சியின்" ஒரு புதிய யுகமாக பெஜ்ஜிங் அதை வருணித்தது. அமெரிக்கா பூகோள மூலோபாய மேலாதிக்கத்தை அடைவதற்காக தனது இராணுவ உயர்நிலை வல்லமையை பயன்படுத்துகின்ற அளவில், பி.எல்.ஏ. அதைப் எட்டிப் பிடிக்க வேண்டும் அல்லது அதற்கு கீழ்படிய வேண்டும் என சீன தலைமைத்துவம் பிரகடனம் செய்தது.

எவ்வாறெனினும், 1989ல் தியனமன் சதுக்க படுகொலைகள அடுத்து, பிரதான மேற்கத்தைய சக்திகள் ஆயுத வியாபாரத் தடையை அமுல்படுத்தின. ஆகவே சீனா ரஷ்யாவின் பக்கம் திரும்பியதோடு அதன் ஜெட் போர் விமானங்களையும், தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களையும் மற்றும் அபிவிருத்திசெய்ப்பட்ட இராணுவத் தொழில்நுட்பங்களையும் கொள்வனவு செய்யும் பிரதான வாடிக்கையாளராகியது. தாய்வானில் சுதந்திர சார்பு இயக்கத்தின் எழுச்சி பெஜ்ஜிங்கின் உடனடி கவலையாக இருந்த அதே வேளை, அமெரிக்காவின் மூலோபாய சுற்றிவளைப்பை எதிர்க்கும் வழிவகைகளும் அதற்குத் தேவைப்பட்டன.

2006 அரசாங்க அறிக்கையின் "தேசிய பாதுகாப்புக் கொள்கை" தொடர்பான பிரிவு, 2050 அளவில் உயர் தொழில்நுட்ப இராணுவமொன்றைக் கட்டியெழுப்பும் சீனாவின் இலக்கை விரிவுபடுத்துகிறது. "இயந்திரமயமாக்கத்தை அத்திவாரமாகவும் மற்றும் அகல் தகவல் தொழில்நுட்பமயமாக்கலை இயக்கும் சக்தியாகவும் பற்றிக்கொள்வது அதன் இலக்காகும். "செயற்திறன் கொண்ட பாதுகாப்புத் திட்டமும்" மற்றும் அதிகபட்ச உயர் தொழில்நுட்ப சுடுதிறன் கொண்ட ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட இராணுவப் படையை சீனாவை நெருங்கிய பிராந்தியத்தில் துரிதமாக திட்டமிட்டு அமைக்கும் இயலுமையை உருவாக்குவதும் இந்த அறிக்கையின் மைய வலியுறுத்தல்களாக உள்ளன.

அதன் துரிதமான பொருளாதார வளர்ச்சி ஒரு புறமிருக்க, சீனா ஒரு பக்குவமான கைத்தொழில் சக்தி என்பதில் இருந்து மிகத் தொலைவில் உள்ளது. அதன் புதிய விமான, டாங்கி மற்றும் யுத்தக் கப்பல் பரம்பரைகள், மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பிரதியெடுத்தல் (copy) மற்றும் விரிவாக்குவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஏற்கனவே இதற்கான வழிவகைகள் அதனிடம் உள்ளன. பி.எல்.ஏ. இன்னமும் முழுமையாக இயந்திரமயமாக்கப்பட்ட இராணுவமாக கட்டியெழுப்பப்படவில்லை. அல்லது அதில் கட்டாயமாகப் படைக்குச் சேர்க்கப்பட்டுள்ள குறைந்தளவே கல்வியூட்டப்பட்ட விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் இன்னமும் "தகவல் தொழில்நுட்பமயமாக்கப்பட்ட யுத்த முன்னெடுப்புகளில்" போராட முடியாது. சீனா அணுசக்திகொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டிய போதிலும், ஆழ்கடல் கடற்படையை கட்டியெழுப்பவில்லை. அதன் விமானப்படை துல்லியமாக வழிகாட்டும் ஆயுதங்களால் உபகரணமயப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அவற்றின் எண்ணிக்கை பலம் இன்னமும் பழங்கால சோவியத் ஜெட் விமானங்களையே ஆதாரமாகக் கொண்டுள்ளன.

அணுவாயுத பிரிவில், சீனா அமெரிக்காவிடமிருந்து மிகவும் பின்தங்கியுள்ளது. இந்த அரசாங்க அறிக்கை, நாட்டின் உத்தியோகபூர்வமான "முதல் பாவனை இல்லை" என்ற அணுவாயுத கொள்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதோடு சீனா அனுவாயுத போட்டியில் ஈடுபடாது எனவும் பிரகடனம் செய்கின்றது. ஆனால் நாட்டின் அணு சேகரிப்பைப் பற்றி இந்த ஆவணம் சிறிதளவே தெரிவிக்கின்றது.

அமெரிக்க விஞ்ஞானிகள் சம்மேளனமும் இயற்கை வளங்கள் பாதுகாப்புப் பேரவையும், "சீன அணு சக்தியும் அமெரிக்க அணுவாயுத யுத்த திட்டமும்" என்ற தலைப்பில் நவம்பரில் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று, பென்டகனும் சீ.ஐ.ஏ. வும் புதிய பரம்பரை அணுவாயுதங்களுக்காக அமெரிக்கா செலவிடுவதை நியாயப்படுத்துவதற்காக, சீனாவின் அணுவாயுத "அச்சுறுத்தலை" வேண்டுமென்றே மிகைப்படுத்திக் காட்டுவதாகக் கண்டறிந்துள்ளன.

"சீனாவே அடுத்த பெரும் அச்சுறுத்தல். எனவே புதிய ஆயுதங்களும் இராணுவ செலவை அதிகரிப்பதும் அவசியமாகும் என அமெரிக்காவில் சிலர் வாதிடுகின்றனர். சீனாவில் உள்ள சிலர், அமெரிக்கா தலைமையிலான அண்மைய யுத்தங்கள், இராணுவ நவீனமயப்படுத்தல்கள் மற்றும் ஆக்கிரமிப்பு மூலோபாயங்கள் மற்றும் கொள்கைகளை அமெரிக்க 'மேலாதிக்கத்திற்கு' ஆதாரமாக காணுவதோடு இவை தமது இராணுவம் நவீனமயப்படுத்தப்படுவதை கோருகிறது எனவும் வாதிடுகின்றனர். இரு நாடுகளும் யுத்தத்திற்கு திட்டமிடுவதற்காக பெருந்தொகையான பணத்தை முதலீடு செய்வதோடு எந்தவொரு அமெரிக்க-சீன யுத்தமும் அணுவாயுதங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் ஆற்றலுடனேயே வரும்," என அது எச்சரிக்கின்றது.

அமெரிக்காவின் களஞ்சியத்தில் உள்ள 10,000 அணுவாயுதங்களை சீனாவின் மதிப்பீட்டு எண்ணிக்கையான வெறும் 200 அணுவாயுதங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியதாகும். சீனாவிடம் அமெரிக்காவைத் தாக்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் 20 மட்டுமே உள்ள அதே வேளை, அமெரிக்காவிடம் சீனாவைத் தாக்கக் கூடிய 830க்கும் அதிகமான ஏவுகணைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பன்மடங்கான அணுவாயுத முனைகளைக் கொண்டவையாகும். அமெரிக்கா அணுவாயுத தொழில்நுட்பத்திலும், அணுவாயுதங்களை ஏவக்கூடிய மூலோபாய நீர்மூழ்கிக் கப்பல்களிலும் மற்றும் விமான அணுவாயுதத் தாக்குதல் இயலுமையிலும் சீனாவை விட மிகவும் முன்நிலையில் உள்ளது.

ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அணுவாயுத மோதல் பிரமாண்டமான மனித அழிவுகளை விளைவாக்கும் என்பதை இந்த ஆய்வறிக்கை மதிப்பிட்டுள்ளது. சீனாவின் 20 கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை களஞ்சியத்தின் மீது அமெரிக்கா ஒரு முறை அணுவாயுதத் தாக்குதல் நடத்தினால் 26 மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள் மற்றும் காயமடைவார்கள். அதே வேளை சீனாவுக்கு எதிரான "மிகவும் பிரமாண்டமான தாக்குதலுக்கு கடந்த காலத்தில் அமெரிக்க திட்டமிட்டிருந்ததாக இந்த ஆய்வறிக்கை கண்டுபிடித்துள்ளது. தனது 20 அணுவாயுத ஏவுகணைகளையும் கொண்டு அமெரிக்கா கண்டத்தை சீனா தாக்கினாலும் ஒரு மதிப்பீட்டின்படி 40 மில்லியன் மக்கள் கொல்லப்படுவர். அமெரிக்காவால் முன்னறிவிக்கப்பட்டது போல், சீனாவால் 75-100 அணுவாயுத முனைகளை உருவாக்க முடியுமெனில் இந்த மரண எண்ணிக்கை மிகவும் உயர்ந்ததாக இருக்கும்.

எவ்வாறெனினும், அணுவாயுத முதன்மை நிலையை அடைய அமெரிக்கா கடும் முயற்சி செய்துகொண்டிருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன --அதாவது முதலாவது தாக்குதலுக்கு பதிலடியாக பதில் அணுவாயுதத் தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்கும் இயலுமையை உருவாக்குவதாகும். இத்தகைய ஆற்றலானது குளிர் யுத்த காலத்தின் போது, அழிவு தொடர்பான அந்நியோன்ய உறுதிப்பாட்டின் எடுத்துக்காட்டை அடிப்படையாகக் கொண்ட மூலோபாய சமநிலையை, அடிப்படையில் திருத்தியமைக்கும். இந்த எடுத்துக்காட்டானது அழிவுகரமான பழிவாங்கல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பீதியினால் ஏதாவது ஒரு பக்கத்தில் இருந்து முதலாவது தாக்குதலை முன்னெடுப்பதை தவிர்ப்பதாகும். புஷ் நிர்வாகம் அதன் எதிர் தாக்குதல் அணுவாயுத ஆற்றலை நேர்த்தியாக்கிக்கொண்டிருப்பது மட்டுமன்றி, எந்தவொரு விளைபயன்கொண்ட எதிர்தாக்குதலையும் சுருக்குவதை இலக்காகக் கொண்ட எறிபொறியியல் தடுப்பு ஏவுகணை அமைப்பையும் அபிவிருத்தி செய்துகொண்டிருக்கின்றது.

அமெரிக்கத் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற சாத்தியத்தை கருத்தில் கொண்டு, சீனாவும் ரஷ்யாவும் முதலாவது தாக்குதலைத் தடுப்பதற்காக புதிய நடமாடும் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை பரம்பரையை உருவாக்கத் தள்ளப்பட்டுள்ளன. சீனாவின் "மர்மமான" பாதுகாப்பு விரிவுபடுத்தல்கள் பற்றி புஷ் நிர்வாகம் மீண்டும் மீண்டும் விமர்சித்துள்ளது. ஆனால் அதன் சொந்த இரக்கமற்ற இராணுவ நிர்மாணிப்புகளும், அதே போல் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அதன் ஆக்கிரமிப்பும், உலக அரசியலில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தும் காரணியாக இருப்பதையிட்டு அலட்சியம் செய்தவாறே தொடர்வதோடு யுத்த ஆபத்தையும் உக்கிரப்படுத்தியுள்ளது.