World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Condolences on the death of Comrade Senthil from the Socialist Equality Party of Sri Lanka

தோழர் செந்திலின் மறைவிற்கு இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் அனுதாபங்கள்

15 March 2007

Use this version to print | Send this link by email | Email the author

ரவீந்திரநாதன் செந்தில் ரவியின் மறைவிற்கு இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியால் அனுப்பப்பட்ட அனுதாபச் செய்தியை இங்கு பிரசுரித்துள்ளோம். லண்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலகக் குழுவின் உறுப்பினரான தோழர் செந்தில், பெப்பிரவரி 28 பிரிட்டனில் நடந்த வாகன விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.

இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி, தோழர் செந்தில் ரவியின் மனைவிக்கும் அவரது பிள்ளைகளுக்கும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் அஞ்சலியையும் அனுப்புகிறது.

பெப்பிரவரி 28, புதன் கிழமை விடியற்காலை சாலை விபத்தில் செந்தில் துன்பகரமாக உயிரிழந்தமை, குறிப்பாக கடந்த மூன்றரை தசாப்தங்களாக இலங்கையில் பிறந்த சாதாரண தமிழ் மக்கள் முகங்கொடுக்கின்ற தாங்கமுடியாத சமூக நிலைமைகளின் அடையாளக் குறியீடாகும். செந்தில் தனது சகோதரிக்கு அகதிகள் தகுதியைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை ஏற்பாடு செய்வதற்காகவே பாரிசுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தார்.

அவர் பொருத்தமான மற்றும் பாதுகாப்பான காரில் பயணித்திருக்கவில்லை. காரணம், கொடூரமான அடக்குமுறைகளால் தான் பிறந்த நாட்டைவிட்டே வெளியேறத் தள்ளப்பட்டதில் இருந்து, சுமார் 17 ஆண்டுகளாக பிரான்சிலும் பிரிட்டனிலும் தொழில் செய்திருந்த போதிலும் கூட அவரால் ஒரு சிறந்த வாகனம் ஒன்றை வாங்க செலவிட முடியாமல் போயுள்ளமை தெளிவு. இந்த உண்மைகள், இலாபம் உருவாக்கும் இயந்திரத்தின் சக்கரமே இயந்திரத்திற்குக் குறுக்கீடாக இருக்கும் போது அதைக் களற்றியெறிவது போலவே மனித வாழ்க்கையையும் நடத்துகின்ற உலக முதலாளித்துவ ஒழுங்குக்கு எதிராக நேரடியாக குற்றஞ்சாட்டுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாலும் மேலாதிக்கம் செய்யப்பட்டுள்ள இலங்கையின் முதலாளித்துவ அரசாங்கங்கள், தமிழர்கள் மீதான பாரபட்சங்கள், துன்புறுத்தல்கள் மற்றும் 1983ல் இருந்து கொடூரமான யுத்தத்திற்கு தமிழ்மக்களை ஆளாக்கியமைக்கும் பிரதான குற்றவாளியாக இருக்கும் அதே வேளை, இந்தப் பிற்போக்கு வேலைத்திட்டத்தில் தீவில் உள்ள சீர்திருத்தவாத தொழிலாளர் வர்க்கக் கட்சிகள் ஆற்றிய பெருங்கேடுவிளைவித்த பங்கை குறைத்து மதிப்பிட முடியாது. ட்ரொட்கிஸத்தை பேசிய லங்கா சமசமாஜக் கட்சி 1964ல் முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்து மாபெரும் காட்டிக்கொடுப்பை முன்னெடுக்காமல் இருந்திருந்தால், நிச்சயமாக இலங்கையிலான அரசியல் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக இருந்திருக்கும் --இதன் காரணமாக இந்திய துணைக்கண்டத்திலும் மற்றும் தெற்காசியாவிலுமான அரசியல் சமநிலையும் மாறியிருக்கும்-- எனக் கூறுவது மிகைப்படுத்தலாக இருக்காது. இது 1947-48ல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை என துணைக்கண்டத்தை துண்டாக்குவதன் மூலம் துணைக்கண்டத்தின் மீது திணிக்கப்பட்ட அரசியல் தீர்வை ஸ்திரப்படுத்த இது சேவை செய்தது. இது 1960 களின் பிற்பகுதியிலும் மற்றும் 1970 களின் முற்பகுதியிலும் கண்முன்னாலேயே மேலும் சிதைந்து போனது.

செந்தில் இந்த அரசியல் இக்கட்டு நிலையினால் வெறுமனே பாதிக்கப்பட்ட மனிதனாக இருக்க மறுத்ததோடு அதற்குப் புறம்பாக ஒரு வழியைத் தேடினார். தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள எரியும் பிரச்சினைகளுக்கான பதில்களை வழங்கும் ஒரே அமைப்பான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவான உலக ட்ரொட்ஸ்கிய இயக்கத்தின் வேலைத்திட்ட்ததை அவர் கண்டார். அவர் பிரான்சில் தனது 20ம் வயதுகளில் ஒரு இளைஞனாக ட்ரொட்ஸ்கிய இயக்கத்தில் இணைந்த கணத்தில் இருந்தே, நிலைகுலைந்து போயுள்ள உலக முதலாளித்துவ அமைப்பை காப்பதன் பேரில் பயன்படுத்தப்பட்டுவரும் இனவாத மற்றும் தேசியவாத பிளவுகளை குறுக்கே வெட்டி, அனைத்துலக சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக ஒரு அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான பாதையில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர்.

செந்திலைப் பொறுத்தளவில், மீண்டுமொருமுறை மிலேச்சத்தனமான மூன்றாவது அனுவாயுத உலக யுத்தத்தின் விளிம்புக்கே உலகை தள்ளிச் செல்கின்ற ஒரு அமைப்பான இந்த இலாப அமைப்பை, முன்னேற்றகரமான முறையில் மாற்றியமைப்பதற்கான உலக இயக்கம் தனது முன்னணிப் படையில் ஒரு மிகப் பெறுமதியான போராளியை இழந்துள்ளது. பூகோளம் பூராவும் உள்ள உழைக்கும் மக்களுக்கு கல்வியூட்டி, அவர்களை உலக சோசலிசத்திற்காக அணிதிரட்டும் பணிக்கு எம்மை தொடர்ந்தும் அர்ப்பணித்துக்கொள்வதன் மூலமே இந்த இழப்பைத் தணிக்க முடியும், அல்லது அதிலிருந்து மீள முடியும்.

எமது பெரும் கவலைக்குரிய இந்தக் கணங்களில், நாம் செந்தில் முன்நின்று நடத்திய போராட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் அனைத்துத் தோழர்களுடனும் ஆதரவாளர்களுடனும் இணைந்துகொள்கிறோம்.

விஜே டயஸ்
பொதுச் செயலாளர்