World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

A revealing encounter in the halls of Congress

Leading Democrat denounces "idiot liberals" for demanding cutoff of war funds

அமெரிக்க காங்கிரசில் உண்மை வெளிப்படுதல்

போர்ச் செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று கூறியதற்கு "முட்டாள்தனமான தாராளவாதிகள்" என்று முக்கிய ஜனநாயகக் கட்சியாளர் கண்டனம்

By Barry Grey in Washington DC
12 March 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கில் போரை எதிர்த்து அது விரைவில் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று கருதும் பெரும்பாலான அமெரிக்க மக்களுடைய உணர்வுகள் பற்றி ஜனநாயகக் கட்சியின் தலைமை கொண்டுள்ள உண்மையான அணுகுமுறை கடந்த வாரம் சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

20 வருட காலங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரும், ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் 110வது காங்கிரசின் பண ஒதுக்கீட்டு குழுவின் தலைவருமான பிரதிநிதி டேவிட் ஓபே (விஸ்கான்சின் மாநில ஜனநாயகக் கட்சி) மன்ற வராந்தாவில் தன்னை அணுகி ஈராக், ஆப்கானிஸ்தானத்திற்கு எதிராக நடக்கும் போர்களில் நிதி ஒதுக்குவதற்கு எதிராக வாக்களிப்பாரா என வினாவிய ஒரு கடற்படைவீரருடைய தாயார், மற்றொரு போர் எதிர்ப்பாளர் இருவரையும் கடுமையாக சாடினார்.

மார்ச் 5ம் தேதி நடைபெற்ற இக்கலந்துரையாடல்கள் அனைத்தும் ஓபேக்கிற்கும் ஜனநாயகக் கட்சிக்கும் துரதிருஷ்டம் என்ற வகையில், முற்றிலும் வீடியோ காட்சியாக பதிவு செய்யப்பட்டு YouTube Internet வலைத் தளத்தில் இடப்பட்டுள்ளது. கடந்த வியாழன் இரவு மற்றொரு வலைத் தள செய்தியாளர் வீடியோ காட்சித் தொகுப்பை வாஷிங்டன் நிருபர்களுக்கு அனுப்பிவைத்தார்; சனியளவில் இது நாடு முழுவதும் தேசிய செய்தித் தாட்களில் பரந்த முறையில் பிரசுரமாயிற்று. வீடியோ காட்சியை www.grassrootsamerica4us.org என்ற தளத்தில் பார்க்கலாம்.

பிரதிநிதிகள் மன்றத்தில் ஜனநாயகக் கட்சியின் தலைமை கூடுதலான நிதியளிக்கும் சட்ட வரைவு ஒன்றை அறிமுகப்படுத்தியதில் ஓபே முக்கியமாக இருந்தார். இந்த நடவடிக்கை புஷ் நிர்வாகத்தின் வேண்டுகோளான கூடுதலான $100 பில்லியனை ஈராக்கில் போரை தொடர்வதற்கும் போரை தீவிரப்படுத்துவதற்குமான போரை முடிப்பது என கூறப்படும் திட்டத்திற்கு தேவையான பணத்தை வழங்கும் ஜனநாயகக் கட்சியின் முயற்சி ஆகும்.

இதை அளிப்பதற்கு பல நிபந்தனைகள் போடப்படுகின்றன --அவை அனைத்தும் உண்மையில் நிர்வாகம் போரை விரிவாக்கும் திறனைக் குறைப்பவை அல்ல; அமெரிக்கப் படைகள் ஈராக்கில், 2008 மார்ச்சில் இருந்து "நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதை" தொடங்க வேண்டும், அடுத்த ஆண்டு செப்டம்பர் 8 க்குள் முற்றிலும் திரும்பிவர வேண்டும் என்ற நிபந்தனை கூறப்பட்டுள்ளது. (See "Democrats' "withdrawal" plan paves way to escalation of Iraq war")

அந்த தேதிக்கு பின்னரும், இச்சட்ட வரைவின்படி பல ஆயிரக்கணக்கான போர் நடத்தாத படைகள் ஈராக்கில் தொடர்ந்து இருப்பர் -- இவர்கள் "பயங்கரவாத எதிர்ப்பு" பணிகளில் ஈடுபடுவர், அமெரிக்க நிலையங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பர், மற்றும் ஈராக்கிய படைகளுக்கு பயிற்சி அளிப்பர். ஜனநாயகக் கட்சி தலைவர்கள் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தன்னுடைய இராணுவத் தலையீட்டை விரிவாக்க அனுமதி கொடுக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். ஓபேயே கூறியபடி, ஜனநாயகக் கட்சியின் சட்டவரைவின்படி, "அடிப்படையில் எமது வளங்களில் கூடுதலானவற்றை அல் கொய்தாவிற்கும் தலிபானுக்கும் எதிராக ஆப்கானிஸ்தானில் திருப்பும் என்றும் போரை சரியான இடத்தில் இயக்கும்" என்றும் கூறியுள்ளார்.

முதலில் வீடியோ காட்சி YouTube வில் வந்தபோது, பின்னர் டினா ரிச்சர்ட்ஸ் என்று அடையாளம் காணப்பட்ட ஒரு பெண்மணி, ஒரு நண்பருடன், ஓபேயின் Rayburn House அலுவலகக் கட்டிடத்திற்கு வெளியே அவரை அணுகுவது காட்டப்படுகிறது. தன்னுடைய மகன் ஒரு கடற்படைவீரர் என்றும் ஈராக்கில் இருமுறை சென்று தன் கடமையை செய்துள்ளதாகவும், மூன்றாம் முறை செல்லுவதை எதிர்பார்த்து இருப்பதாகவும் ரிச்சர்ட்ஸ் விளக்குகிறார். தன்னுடைய மகன் பெரும் மன உளைச்சல் நிலையில் துயர் உறுவதாகவும் (post-traumatic stress disorder) தற்கொலை செய்ய முயன்றதாகவும் அவர் ஓபேயிடம் தெரிவிக்கிறார். "முன்னாள்படையினர் (VA- Veterans Administration) அலுவலகத்தில் அனுமதிபெறவே எங்களுக்கு ஆறுமாத காலம் ஆயிற்று" என்று இச்சட்டமன்ற பிரதிநிதியிடம் அவர் கூறுகின்றார். "அவர்களின் மகனிடம் 10 நிமிஷங்கள் பேசிய பின்னர், அவர் சிறுபிள்ளை பிராயப் பிரச்சினைகளை கூறுவது போல் உள்ளது என்று அவரிடம் கூறினர்."

சற்று கடிந்து என்றாலும் கெளரவமாக விவாதத்தை முடித்துக்கொள்ளும் வகையில் ஓபே தோன்றுகிறார். ஆனால் போர் நிதி ஒதுக்கும் சட்டவரைவிற்கு எதிராக அவர் வாக்களிக்க திட்டம் கொண்டுள்ளாரா என்று அவரை ரிச்சர்ட்ஸ் கேட்டபோது ஓபே பெருகியமுறையில் கொதித்துப் போகிறார்.

"முற்றிலும் இல்லை. நான்தான் கூடுதல் உதவி வேண்டும் என்ற சட்டவரைவையே முன்மொழிய இருக்கிறேன். போரை நிறுத்துவதற்குத்தான் நாங்கள் கூடுதல் உதவி நிதி அளிக்கிறோம் ...கூடுதல் நிதிக்கு எதிராகப் போனால் போரை நிறுத்த இயலாது. முட்டாள் தாராளவாதிகள் அதை உணர்ந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது."

இதன்பின்னர் "துருப்புக்களுக்கு ஆதரவு" (அதாவது அவர்களை போரினுள் தொடர்ந்து ஈடுபடுத்துதல்) என்ற போலிக்காரணத்தை ஓபே பின்னர் எழுப்புகிறார்: "துருப்புக்களுக்கு தேவையானவற்றை நான் ஒன்றும் மறுக்கப்போவதில்லை" என்கிறார் அவர். மற்றொரு நயமான கருத்தாக ஜனநாயகக் கட்சியினரின் திட்டமான, கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்களை படையினர் மற்றும் முன்னாள் படையினர்களுடைய மருத்துவ பாதுகாப்பிற்கு, புஷ்ஷின் போர்ச்செலவுகளுடன் சேர்க்க வேண்டும் என்பது எப்படி போர் நிதிக்காக வாக்களிப்பதற்கு நியாயமானது ஆகும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். "முன்னாள் படையினர் மருத்துவமனைகள், பாதுகாப்புத்துறை மருத்துவமனைகளுக்கு நிதியம் அளித்தலை நான் மறுக்கப்போவதில்லை. சட்டவரைவிற்கு எதிராக வாக்களித்தால் அப்படித்தான் நேரிடும்" என்று அவர் அறிவித்தார்.

ரிச்சர்ட்ஸ் பேச முற்படுகிறார்; ஆனால் ஓபே அவரை நிறுத்தும் வகையில் கூறுகிறார்: "நான் போரை வெறுக்கிறேன். துவக்கத்தில் அதற்கு எதிராகத்தான் வாக்களித்தேன் ..ஆனால் போர் நிதியை நிறுத்துவதற்கு போதுமான வாக்குகள் நம்மிடையே இல்லை; அதைச் செய்யவும் கூடாது."

"ஈராக்கில் இருந்து வெளியேறவேண்டும்" என அழைக்கப்படும் குழு ஒன்று "படைகள் முழுமையாக திரும்பப் பெறுவதற்கு முழு நிதி அளித்திடுக" என்று கூறும் திருத்தம் பற்றி ரிச்சர்ட்ஸ் பேச முற்பட்டபோது, ஓபே கூச்சலிடுகிறார்: "அதில் ஒரு பொருளும் இல்லை...அத்தீர்மானத்தில் நாம் கொண்டுள்ள வாசகம் போருக்கான அதிகாரத்திற்கு முடிவு காண்கிறது. போரைத் தொடர்வது தவறு என அது கூறுகிறது. போர் இல்லாவிட்டால் அதற்கு நிதி ஒதுக்காமல் இருக்க தேவை இல்லை....தாராளவாதக் குழுக்கள் சட்டவரைவில் என்ன உள்ளது என்பது தெரியாமல் சுற்றிச் சுற்றிப் பேசுகின்றனர்."

உண்மையில், சட்ட மன்றத்தின் கீழ் பிரிவிலோ, செனட்டிலோ ஜனநாயகக் கட்சியினரின் திட்டங்கள் எதிலும் போர் சட்டவிரோதம் எனக் கூறும் கருத்து ஏதும் இல்லை. இன்னும் கூடுதலாக $100 பில்லியனை போருக்கு ஒதுக்கும் ஒரு சட்ட வரைவு அதே நேரத்தில் அது தொடரப்படுவதற்கான அதிகாரத்தை எவ்வாறு நிறுத்த முடியும்?

ரிச்சர்டுடன் இருப்பவர் குறுக்கிட்டு ஜனநாயகக் கட்சியினர் நிதியத்தை நிறுத்துவதின் மூலம் போரை நிறுத்த முடியும் என்று கூறியபோது ஓபே இன்னும் உரக்கவும், வெறித்தனமாகவும் பேசுகிறார்: "உங்களிடத்தில் போதுமான வாக்குகள் இல்லை என்றால் எப்படிச் செய்யமுடியும்? என்று ஓபே கேட்கிறார். "புஷ்ஷின் கூடுதல் தேவை பற்றி வாக்களிப்பிற்கு வர விடாமல் செய்யலாம்." என்று உடன் இருப்பவர் கூறுகிறார். "ஆனால் மன்றத்தில் வாக்களிப்பிற்கு வர விடாமல் செய்யும் முறை இல்லை" என்று ஓபே திருப்பிக் கத்துகிறார். "செனட்டில்தான் அதைச் செய்யமுடியும்" உடன் இருப்பவர் பதில் கூறுகிறார்; "அவர்களுக்கு தேவையானது 40 வாக்குகள்தாம்."

இப்படிப்பட்ட முறையான கருத்து, போரை நிறுத்துவதற்காக சட்டமன்ற ஜனநாயகக் கட்சியினரிடம் தீவிர ஆதரவு இல்லை என்பதை உயர்த்திக் காட்டும் கருத்து, ஓபேக்கு ஆத்திரம் ஊட்டுகிறது. "நான் வருந்துகிறேன். இந்தச் சட்டவரைவை நான்தான் மன்றத்தில் முன்மொழிய உள்ளேன்; இச்சட்டவரைவு போரை நிறுத்தும். அது உங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றால், நீங்கள் சட்டவிரோதமாக ஏதோ கூறுகிறீர்கள்... நான் மேலும் ஏதும் பேச விரும்பவில்லை. வேறுயாரிடமாவாது பேசுங்கள் சென்றுவாருங்கள்." என்றார் அவர்.

இவ்வாறு கூறியபின், பிரதிநிதிகள் மற்ற உறுப்பினர் தன்னுடை அலுவலகத்திற்குள் நுழைந்து கதவை அறைந்து சாத்திக் கொள்ளுகிறார்.

வெள்ளியன்று, வீடியோ நிருபர்களிடையே பார்வைக்கு வந்த பின், தலைநகரில் ஓபே மன்னிப்புப் போன்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டார்: "இப்பிரச்சினைகளில் உள்ள அவர்களின் தீவிர ஆர்வத்தை நான் மதிக்கிறேன். என்னுடைய கருத்தையும் அவர்கள் மதிப்பார்கள் என விரும்புகிறேன். இரு புறத்தாரும் பெரும் ஏமாற்றத் திகைப்பில் உள்ளோம்; அது தேவையற்ற விவாதத்தை நாங்கள் மேற்கொள்ளும்படி செய்துவிட்டது; இருவருமே அப்போரில் அமெரிக்கக் குறுக்கீட்டை முடிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். எப்படி என்பதில்தான் வேறுபாடு உள்ளது" என்று அவர் கூறினார்.

The Hill என்னும் செய்தித்தாளிடம் அவர் இரு போர் எதிர்ப்பு நடவடிக்கையாளர்களிடம் பேசிக் கொண்டிருப்பதற்கு முன்னரே பெரும் அழுத்தத்தில் இருந்ததாகவும், இரு போர் எதிர்ப்பாளர்கள் அவருடைய விஸ்கோன்சின் தொகுதி அலுவலகத்தில் இருந்தனர் என்றும் கூறினார். அவர்கள் நகர மறுத்ததாகவும் பின்னர் கைது செய்ப்பட்டனர் என்றும் கூறினார். "நான் வெளிப்படையாகக் கூறவிரும்புகிறேன். அப்படிப்பட்ட சந்திப்பு பலருக்கும் இந்த முட்டாள்தனமான போர் கொடுத்துக் கொண்டிருக்கும் ஏமாற்றத் திகைப்பின் ஒரு வகைதான்."

ஆனால் தன்னைக் கேள்விக்கு உட்படுத்தியவர்கள் மீது காட்டியது பெரும் ஏமாற்றத் திகைப்பு அல்ல, விரோதப் போக்கும் இகழ்வும்தான் என்பதைத்தான் ஓபே காட்டினார். ஓபேயும் மற்ற ஜனநாயகக் கட்சிக் குழுவினரும் உணரும் ஏமாற்றத் திகைப்பு போர் தொடர்பானதல்ல, போருக்கு மக்கள் காட்டும் பரந்த எதிர்ப்பு என்பதில்தான் உள்ளது.

இந்த காலனித்துவ நடவடிக்கைக்கு ஜனநாயகக் கட்சி முழு ஒத்துழைப்பும் கொடுத்து, அதன் அடித்தளத்தில் இருக்கும் ஏகாதிபத்திய இலக்குகளையும் பாதுகாக்க விழைகிறது. கடந்த நவம்பரில் அமெரிக்க வாக்காளர்கள் அளித்த மகத்தான போர் எதிர்ப்பு வாக்கின் அடிப்படையில் காங்கிரஸில் அதிகாரத்தை வென்ற பின்னர், ஜனநாயகக் கட்சியினர் போரை எதிர்ப்பதாக காட்டிக் கொள்ளுவதற்கு தயங்குகின்றனர்; ஏனெனில் ஒருவேளை மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு நேரடித் தோல்வி என்ற கருத்தை இச்செயல் ஏற்படுத்தி விடுமோ என்று நினைக்கின்றனர்.

தானும் மற்ற ஜனநாயகக் கட்சித் தலைமை உறுப்பினர்களும் "போரில் அமெரிக்க தலையீடு" நிறுத்தப்பட வேண்டும் என்னும் அமெரிக்க மக்கள் கருத்தில் உடன்பட்டிருப்பதாகவும் எப்படி அதைச் செய்வது என்பதுதான் பிரச்சினை என்று ஓபே கூறவது தவறானது ஆகும். பெரும்பாலன அமெரிக்கர்கள் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெற வேண்டும், இப்பொழுது நடைபெறும் படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என விரும்புகின்றனர்; ஏனெனில் போர் பொய்களின் அடிப்படையை தளமாக கொண்டிருந்தது என்பதால் அவர்களுடைய நியாய உணர்வு இது முற்றிலும் பிற்போக்குத்தன இலக்குகளுக்காக தொடரப்பட்டுள்ளது என்பதாகும். பெருகிய முறையில் போர் தங்களுடைய வேலைகள், வாழ்க்கைத்தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் இவற்றுடன் தொடர்புடையதாக அவர்கள் நினைக்கின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு இராணுவ, அரசியல் பேரழிவை ஏற்படுத்திவிட்டது என்பதால் ஜனநாயகவாதிகள் போர் பற்றிக் குறைகூறுகிறார்கள். பலமுறையும் வலியுறுத்தியுள்ளது போல், அவர்கள் புஷ்ஷை போன்றே ஈராக்கில் "வெற்றி வேண்டும்" என விழைகின்றனர்; இதன் பொருள் ஈராக்கிய எதிர்ப்பு ஒடுக்கப்பட வேண்டும், ஆக்கிரமிப்பின் அடிப்படை போர் நோக்கமான ஈராக்கின் பரந்த எண்ணெய் இருப்புக்கள் மீது அமெரிக்க ஆதிக்கம் நிறுவப்படவேண்டும் என்பதை சாதித்தல் அவர்களுக்கும் இசைவானதுதான்.

இந்த இரு நிலைப்பாடுகளுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகள், வழிவகை அல்லது தந்திரோபாயங்கள் தொடர்பானது அல்ல; அமெரிக்க ஆளும் உயரடுக்கு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு இடையே இருக்கும் சமரசத்திற்கு இடமில்லாத மோதலின் வெளிப்பாடுதான்.