World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German media, politicians launch chauvinist campaign over a "Muslim takeover" of Germany

ஜேர்மனிய செய்தி ஊடகமும், அரசியல்வாதிகளும் ஜேர்மனியை "முஸ்லிம்கள் எடுத்துக் கொள்வர்" என்ற சோவினிச பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்

By Justus Leicht
14 April 2007

Use this version to print | Send this link by email | Email the author

வெளிநாட்டினரால் நாடு "மூழ்கடிக்கப்பட்டுவிடும்" என்ற குற்றச்சாட்டு பிரச்சாரங்கள் எப்பொழுதுமே தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் கையாளும் கொள்கைகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. குடியேறுபவர்கள் பெருக்கம், அவர்களுடைய பண்பாடு மற்றும் மொழி ஆகியவை "உள்ளூர்" மக்களுடைய வாழ்விற்கு ஒரு அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது; மேலை அல்லது ஜேர்மனிய பண்பாடு என்பது சமயத்திற்கு ஏற்ப ஆபத்திற்குட்படுகிறது. சமீபத்திய காலத்தில், "மூழ்கடிக்கப்படும்" ஆபத்து என்று கூறுவதற்கு பதிலாக "முஸ்லீம்கள் கையில் நாடு போய்விடும்" என்று கூறப்படுகிறது; ஆனால் வேறுபாடு என்னவென்றால், இத்தகைய கூற்று தீவிர வலதுசாரி வட்டங்களில் இருந்து மட்டும் வரவில்லை. Der Spiegel போன்ற ஏடுகள், கிறிஸ்தவ ஜனநாயகவாத, சமூக ஜனநாயகவாத அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் தாராளவாதிகள் அல்லது இடது அறிவுஜீவிகள்கூட இப்பொழுது கூட்டத்தோடு இத்தகைய குரலை எழுப்புகின்றனர்.

இந்தப்போக்கின் ஒரு முக்கிய மைல்கல்லாக கடந்த வசந்தகாலத்தில் இஸ்லாமிய-எதிர்ப்பு கேலிச் சித்திரங்கள் வெளியிட்டது பற்றிய பூசலும் இருந்தது.

வலதுசாரி டேனிஷ் செய்தித்தாளான Jyllands Posten முஸ்லிம்களை அவமதித்து தூண்டும் நோக்கத்துடன் முகம்மது நபிகள் பற்றி கேலிச் சித்திரங்களை வெளியிட்டது. எதிர்பார்த்தபடி சீற்றமான எதிர்ப்புக்களை இது தூண்டியவுடன் --சில வன்முறைகளும் ஏற்பட்டன-- ஐரோப்பா முழுவதும் உத்தியோகபூர்வ வட்டாரங்களில் இழிவுணர்வு வெளிப்படுத்தப்பட்டு அதற்கு பல "இடது அமைப்புக்களின்" ஆதரவும், தூண்டுதலும் இருந்தன. இதன் அடிக்கருத்தாக முஸ்லீம்கள் சகிப்புத் தன்மை அற்றவர்கள், வன்முறையாளர்கள் மற்றும் பிற்போக்கானவர்கள் என்றும் இதற்கு மாறாக மேலை நாடுகள் மிகப் பொறுமையும், சமாதானமும் நிறைந்தவர்கள் என்றும் கூறப்பட்டது. பல கருத்துக்களும் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இப்பிரச்சாரம் மத்திய கிழக்கில் இராணுவத் தலையீடுகளுக்கு நல்வரவு கூறும் வகையிலும் இருந்தது.

கடந்த வாரங்களில் ஒரு ஜேர்மன் மாவட்ட நீதிமன்றம் ஒப்புமையில் சிறிய தீர்ப்பை வழங்கினாலும், ஜேர்மனியிலும் அதே போன்ற பிரச்சாரத்திற்குப் பெரிதும் உதவியது.

"மெக்கா ஜேர்மனி : ஓசையின்றி முஸ்லிம்கள் எடுத்துக் கொள்ளுகின்றனர்" என்ற தலையங்கத்துடன் மார்ச் 26 Der Spiegel வார இதழ் வெளிவந்தது. முதல்பக்கத்தில் நன்கு அறிமுகமான பேர்லினின் Brandenburg Gate இருட்டில் மூழ்கிய வகையில் காட்டப்பட்டு இஸ்லாமிய மூன்றாம் பிறையும் நட்சத்திரமும் அதற்கு மேல் வரையப்பட்டிருந்தன.

Spiegel க்கு வாடிக்கையாக கட்டுரை எழுதுபவரான Franz Josef Wasgner எழுதினார்: "எமது நீதியின் அடையாளங்கள் தலைஅணி அல்லது பர்தாவை காட்டுகின்றன. எமது சட்டங்களே வலுவிளந்த நிலையில், எவ்வாறான நாட்டில் நாம் வாழ்கிறோம்?"

கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் (CDU) பாராளுமன்ற பிரிவின் துணைத் தலைவரான வொல்வ்காங் போஸ்பாக் செய்தி ஊடகத்திடம், "நாம் சிறிது சிறிதாக ஜேர்மனிக்குள் பிற பண்பாடுகளின் அறநெறி மதிப்புகளை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்; அவற்றை எமது சட்ட அமைப்பின் அடிப்படையாக்கி கொண்டிருக்கிறோம்" என்பது பற்றி நீண்டநாளாக அச்சப்படுவதாகக் கூறினார்.

பெண்ணுரிமைவாதியான Alice Schwarzer ஜேர்மனிய சட்ட அமைப்புமுறை, "நீண்ட காலமாக, இஸ்லாமிய சக்திகளால் ஊடுருவப்பட்டுள்ளதாக" கருத்துத் தெரிவித்தார்; பவேரிய மாநிலப் பிரதமரும் கிறிஸ்தவ சமூக யூனியனின் (CSU) தலைவருமான Edmund Stoiber "ஜேர்மனியில் சட்டத்தின் ஆட்சி "குர்ரான் வழியில் செல்லக்கூடாது", தன்னை "குறைமதிப்பிற்கும்" உட்படுத்திவிட அனுமதிக்கக் கூடாது." என்று கூறினார்.

இத்தகைய தீவிர பரபரப்பு பிரச்சாரத்திற்கு காரணமாக இருந்து என்ன?

பிராங்பேர்ட் நகர குடும்ப நீதிமன்றம் ஒன்றில் விவாகரத்து வழக்கு ஒன்று வந்ததை சூழ்ந்து இது உள்ளது; அதில் மொரொக்கோவை பூர்வீகமாக கொண்ட ஜேர்மனிய பெண்மனி ஒருவர் தன்னுடைய மொரொக்கோ கணவனை விவாகரத்து செய்ய விரும்பினார். அவர்கள் மொரொக்காவில் 2001ம் ஆண்டு "குர்ரானிய முறைப்படி" திருமணம் செய்து கொண்டிருந்தனர்; பின்னர் அவர்கள் ஜேர்மனியில் குடியேறினர். அவர்கள் திருமணம் செய்து கொண்ட சிறிதுகாலத்திற்கு பின்னர் கணவர் தன் மனைவியை அடிக்கத் தொடங்கினார். இக்காரணத்தை ஒட்டி மே 2006 மனைவி கணவரைவிட்டுப் பிரிந்தார். அதே ஆண்டு ஜூன் மாதம் குடும்ப நீதிமன்றம் திருமணமாகி வசித்து வந்த வீட்டில் மனைவி முழு உரிமையுடன் இருக்க வேண்டும் என்றும் கணவர் தன்னுடைய முன்னாள் மனைவியிற்கு 50 மீட்டர்கள் அருகே செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

பலமுறையில் கணவர் மனைவியை துன்புறத்தியதாக கூறப்பட்டபின், சில நேரம் கொன்றுவிடுவதாக பயமுறுத்துவதாக கூறி, மனைவி உடனடியாக விவாகரத்திற்கு வழக்கை தொடர்ந்தார். பொதுவாக ஜேர்மனியில் ஒரு திருமணம் கணவரும் மனைவியும் பிரிந்து ஓராண்டிற்கு பின்னர்தான் விவாகரத்து கொடுக்கப்படும். இந்நிலை "பொருத்தமற்றதாக" இருக்குமானால், விவாகரத்து விரைவில் கொடுக்கப்படலாம்.

ஜனவரி 2007ல் குடும்ப நீதிமன்றம் தன்னுடைய ஜூன் 2006 தீர்ப்பை உறுதி செய்தது; கணவர் தன்னுடைய மனைவியை அணுகுவது தடைசெய்யப்பட்டது. அதே நேரத்தில் நீதிபதி "பொருத்தமற்ற தன்மை" என்பது இங்கு பொருந்ததாது என்றும் அதையொட்டி முன்கூட்டியே விவாகரத்து கொடுக்கப்பட முடியாது என்றும் தன்னுடைய கருத்தைக் கூறினார். விவாகரத்து நடவடிக்கைகளை ஓராண்டு தடுத்து நிறுத்தி வைக்கலாம், தம்பதிகள் ஓராண்டு பிரிந்திருக்கும் வரை அது நிறுத்திவைக்கப்படலாம்; இல்லாவிடின் விவாகரத்து மனுவை தான் நிராகரிக்கக் கூடும் என்றும் அவர் கூறினார்.

நீதிபதி கொடுத்த காரணங்களில், "மொரொக்கோ பண்பாட்டு வட்டங்களில்", ஒரு கணவன் தன்னுடைய மனைவியை அடிப்பது "அசாதாரணமானது அல்ல" என்றும் குர்ரான் (4:34)ல் இஸ்லாம் இதை நியாயப்படுத்தியுள்ளாதாக கூறப்பட்டதும் சேர்க்கப்பட்டிருந்தது. நீதிபதியின் கருத்தின்படி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருந்தபோது மனுதாரருக்கு இது தெரிந்திருக்க வேண்டும். இதையொட்டி மனைவியின் வக்கீல், நீதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று ஒரு மனுக் கொடுத்தார்; செய்தி ஊடகம் இவ்வழக்கு பற்றி பரந்த அளவில் தகவல் கொடுத்தபின், அந்த மனு ஏற்கப்பட்டது.

நீதிபதி அகற்றப்பட்டுவிட்டாலும், ஹெஸே மாநில நீதித்துறை மந்திரி Jurgen Banzer (CDU) நீதிபதிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது பற்றி தான் பரிசீலிக்க இருப்பதாக அறிவித்தும், செய்தி ஊடகமும், அரசியல் அமைப்பும் இந்த வழக்கை வைத்து ஜேர்மனிய நீதிமுறையில் இஸ்லாமிய சக்திகள் ஊடுருவி உள்ளது என்பதற்கான நிருபணம் என்ற குற்றச்சாட்டை முழங்கியுள்ளன.

முதலாவதாக, "பொருத்தமற்ற தன்மை" என்பது பற்றிய கருத்துப் பற்றி நீதிபதி வெளியிட்ட கருத்து முற்றிலும் தவறானது என்பது மட்டுமில்லாமல் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வையும் வெளிப்படுத்துகிறது.

"மொரோக்கோ பண்பாட்டு வட்டங்களில்" சாதாரணமானது எனக் கூறப்படுவது எதுவாயினும் ஜேர்மனிய குடும்பச் சட்டத்தின் கீழ் தேவையற்றது. மேலும் மொரோக்கோவில் பலவிதமான "பண்பாட்டு வட்டங்களுக்கும்" இடமிருக்கக் கூடும். மற்ற நாடுகளில் இருப்பதைப் போலவே ஒரு ஏழை விவசாயி, அல்லது நாடோடி - அதிக கல்வி அல்லது தற்கால வாழ்வு பற்றி அறிந்திராதவரின் பண்பாடு ஒரு பெரிய நகரத்தில் இருக்கும் பல்கலைக்கழக பட்டதாரியின் பண்பாட்டில் இருந்து கணிசமாக வேறுபட்டிருக்கும். "மொரோக்கிய", "இஸ்லாமிய", "ஜேர்மனிய" பண்பாடு என்று பொதுவாக குறித்தல் தீவிரநாட்டு வெறி, இனவெறி போன்ற மோசமான தன்மைகளை குறிக்கக்கூடும்.

நீண்ட காலமாக சட்ட முறை ஒரு திருமணம் பொருந்தாமல் போவதற்கு தவறான முறைகள் அச்சுறுத்தல் வழிவகை செய்துவிடும் என்பதை உணர்ந்துள்ளது. இஸ்லாமிய நீதிமுறையைக் கருத்திற்கொண்டாலும், அத்தகைய வழிவகைகளை விவாகரத்திற்கு ஒரு காரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது; குறிப்பாக தன்னுடைய குடும்பச் சட்டங்களை மூற்று ஆண்டுகளுக்கு முன்பு நவீனப்படுத்திய மொரொக்கோவிலும் அந்நிலை உள்ளது. ஒரு மனைவியை அடிப்பதோ, கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்துவதோ மொரொக்கோவிலும் கூட தண்டனைக்குரிய குற்றம் ஆகும்."

இப்பொழுது செய்தியாளர்களும் அரசியல்வாதிகளும் குற்றம்சாட்டுவது போல் இஸ்லாமிய வகைக்கு ஒத்து நீதிபதி போனார் என்று கூறுவதற்கு இல்லை. மாறாக அவருடைய கருத்தின்படி, "முஸ்லிமுடன் ஒருவர் தொடர்பு கொண்டால் அது அவர்களுடைய குற்றம்தான். அவர்கள் தவறாக நடத்தப்படுவதை எதிர்பார்க்க வேண்டும், அது இஸ்லாமின் இயல்பில் உள்ளது". இத்தகைய கருத்துக்கள் கடந்த சில ஆண்டுகளாகத் தூண்டிவிடப்படுகின்ற இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வுகளில் ஒரு பகுதியாகும்.

ஜனநாயக உரிமைகளின்மீதான தாக்குதல்

ஆனால், செய்தி ஊடகத்தில் சில பிரிவுகள் மற்றும் அரசியல்வாதிகளோ நீதிபதியின் கருத்துக்களை வலது பக்கத்தில் இருந்து தாக்குகின்றனர். இந்த சட்ட நிகழ்வை பயன்படுத்தி முஸ்லிம்கள் மற்றும் குடியேறுபவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை தாக்குவதற்கு மட்டுமில்லாமல் ஜேர்மனிய தொழிலாள வர்க்க மக்களின் உரிமைகளையும் தாக்குகின்றனர். அவர்களுடைய பார்வையில் முஸ்லிம்கள் எவ்வித அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளையும் ஜேர்மனிய நீதிமன்றங்களில் அனுபவிக்கக்கூடாது என்பதாகும்.

"இஸ்லாமிய வழிவகையின்படி எமது நீதித்துறை செல்கிறதா" என்ற தலைப்பு (Bild செய்தித்தாள்), "ஷாரிய சட்டம்தான் நம்மை ஆள்கிறதா?" (Der Spiegel இதழ் ஆகியவை இத்தகைய தலைப்புக்கள் கொடுப்பதின்மூலம், இவை நீதிமன்றங்களை பற்றி மற்றவற்றுடன் சீற்றமான அவமதிப்புக்களையும் பின்வருமாறு கொடுக்கின்றன:

* தன்னுடைய பிரார்த்தனைகளை செய்ய ஒரு முஸ்லிம் பணியாளர் விரும்பியதால் அவருக்கு எச்சரிக்கை கொடுப்பதில் இருந்து ஒரு நிறுவனம் தடை செய்யப்படுகிறது;

* மெக்காவிற்கு பயணிக்க ஒருவர் முடிவு எடுத்ததால் பதவி நீக்கம் செய்ய விரும்பிய ஒரு நிறுவனம் அந்த முடிவை மாற்றிக் கொண்டது;

* விலங்குகள் நலத்துறை பிரச்சினையில் யூதர்களுக்கு இருப்பது போலவே முஸ்லிம்களுக்கும் மத வகையில் சுதந்திரம் உயர்த்தப்பட்டு, அரசியலமைப்பு நீதிமன்றம் இஸ்லாமிய வழிநெறியின்படி விலங்குகள் கொலைசெய்யப்படும் உரிமையை ஏற்றது;

* மசூதிகள் கட்டப்படுவதை நிர்வாக நீதிமன்றங்கள் அனுமதிப்பதுடன், திருச்சபை மணி ஓசை ஒலிப்பது போலவே, முஸ்லிம் பீரார்த்தனைக்கான அழைப்புக்களும் அனுமதிக்கப்படுகின்றன.

* குற்ற வழக்குகள், குற்றம் இழைத்தவர்களின் பண்பாட்டு பின்னணியின் சூழல் பற்றிய பிரச்சினையும் ஆராயப்படுகிறது. இதையொட்டி சில தீர்ப்புக்களில் தண்டனை குறைக்கப்படுகிறது; பின்னர் அதுவும் மாற்றப்படுகிறது.

இத்தீர்ப்புக்கள் பற்றி குறைகூறல்களின் மறுபக்கம் என்னவென்றால், முஸ்லிம்கள் தங்கள் நம்பிக்கைப்படி வாழ்ந்தால் அது இரகசியமாகத்தான் இருக்க முடியும் என்றும் Spiegel, Bild ஆகியவை கூறுகின்றன. இல்லாவிடின் அவை தடைக்கு உட்பட்டு, அவை பணியிடத்தில் செய்யப்பட்டால் வேலை நீக்கத்திற்கு அடிப்படையாகிவிடும் என்பதாகும் . Der Spiegel இன் முக்கிய கட்டுரை முஸ்லீம் தொழிலாளர்களின் வேலைப்பாதுகாப்பு உரிமையை, டச்சு நாட்டு திரைப்பட இயக்குனர் Theo van Gogh கொலைக்குற்றத்துடன் ஒப்பிட்டு "அதாவது, சட்டத்தின் ஆட்சி மற்றும் அதன் பணியாளர்களுடைய உறுதியான ஆதரவுடன் இஸ்லாமியமயமாக்குதல் ஊர்ந்து வந்துவிடும்" என குறிப்பிடுகின்றது.

தன்னுடைய அச்சுப்பதிப்பில் இந்த ஏடு ஆத்திரமூட்டுதலுக்கு பெயர்போன Henryk M. Broder முஸ்லிம்களுக்கு எதிராக மேலும் ஆத்திரமூட்டுவதற்கு ஒரு பக்கத்திற்கும் மேலாக கொடுத்துள்ளது; Broder கருத்தின்படி அவர்கள் அனைவரும் வெறியர்கள், வன்முறைப் போக்கு குற்றவாளிகள் என்று கருதப்பட வேண்டும். ப்ரோடரின் சமீபத்திய புத்தகமான ''ஹேய்! நாம் சரணடைந்து கொண்டிருக்கிறோம்' '("Hurrah, We are capitulating) என்பதில் அவர் மேலை நாடுகள் இஸ்லாமிற்கு நிபந்தனையின்றி சரணடைந்துவருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பரபரப்புச் செய்தி ஊடகம் மற்றும் Stoiber, Beckstein போன்ற அரசியல்வாதிகளிடம் ஓரளவு ஜனரஞ்சக கருத்து வெளிப்பாடு எதிர்பார்க்கப்படுவதுதான். ஆனால் இப்பொழுது Der Spiegel உம் "ஜேர்மனிய பண்பாட்டிற்கு தலைமை தாங்குவது" என்ற பிரச்சாரத்தின் புதிய பதிப்பை எடுத்துக் கொண்டு, அதில் குடியேறுபவர்கள் மற்றும் ஏனைய மதங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கும் எதிராக எழுதுவது, அதே நேரத்தில் சமய சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் சுய நிர்ணயம் பற்றியும் எழுதுவது என்பது விந்தைதான்.

முஸ்லிம் பெற்றோர்கள் பாடசாலை உல்லாசப் பயணங்கள், பால் கல்விப் பாடங்கள் மற்றும் விளையாட்டு கல்வி இவற்றில் இருந்து தமது பெண் பிள்ளைகளுக்கு விதிவிலக்கு அளிக்க கோருவதற்கு அனுமதி தரும் தீர்ப்புக்கள் பற்றி இகழ்வாக பேசப்படுவதில் குறிப்பிடத்தக்க வகையில் துர்நாற்றம் வீசும் பாசாங்குத்தனம் உள்ளது. இது இஸ்லாமை அரவணைத்துச் செல்லும் நோக்கத்துடன் அதிகம் பொருந்தவில்லை; மாறாக மிக திட்டமிட்டவகையில் குடியேற்றிய குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகள் சமூகரீதியாக ஒதுக்கிவைக்கப்படுவதைத்தான் காட்டும். ஜேர்மனியில் இருப்பதுபோல் இன, சமூக பூர்வீகத்தில் தங்கியே கல்வி வாய்ப்புக்கள் இருப்பது வேறு எந்த ஒரு நாட்டிலும் இல்லை என்ற முடிவிற்கு ஐரோப்பிய ஆணைக்குழு வந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் கல்வி சிறப்புப் பிரிவு குறிப்பிடுகிறது: "ஜேர்மனிய கல்வி முறையில் தேர்வு என்பது வசதியற்ற அடுக்குகளை பெரிதும் பாதிக்கிறது; குடியேற்ற பின்னணி, ஊனமுற்றவர்கள் அல்லது சமூக அடிப்படையில் வசதியற்றவர்கள் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்களில் 20 சதவிகிதத்தினர் உயர்நிலை பள்ளித் தேர்ச்சிகூட பெறுவதில்லை. குடியேற்ற பின்னணி உடைய மாணவர்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேலானவர்களுக்கு தொழில் பயிற்சி கிடைப்பதில்லை. இது ஒதுக்கி வைக்கப்படுதவதை இன்னும் தீவிரமாக்குகிறது."

சமீபத்திய ஆண்டுகளில் பவேரிய, பாடன் வூர்ட்டம்பேர்க், ஹெஸ, சார்லாந்து, வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா ஆகிய மாநிலங்கள் "கிறிஸ்துவ" மதிப்புக்கள் அடையாளங்கள் ஆகியவற்றிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்து மற்ற அடையாளங்களில் இருந்து பிரித்துக் காட்டுகின்றன. 2003ம் ஆண்டு அரசியலமைப்பு நீதிமன்றம் அனைத்து சமயங்களுக்கும் "உறுதியான வகையில் சம வாய்ப்புத்தான் இருக்க வேண்டும்" என்று அடிக்கோடிட்டிக்காட்டிய பின்னரும் இது தொடர்கிறது.

ஹெஸ மாநிலம் இன்னும் அதிகமாகச் சென்று அனைத்து அரசு ஊழியர்களிடத்தும் பிரிவினை உணர்வை பெருக்கியுள்ளது.

"அரசாங்கத்தின் நடுநிலை பாதுகாக்கும் சட்டம்" ஹெஸ மாநிலத்தில் தொடக்கத்தில் வலியுறுத்துவதாவது: "அரசியல்ரீதியாக, தங்கள் உலகப் பார்வையிலும், சமய முறையிலும் அரசு ஊழியர்கள் தங்களை நடுநிலையில் இருத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக அவர்கள் தங்களுடைய பதவியின் நடுநிலைமை, அரசியல், சமய, சிந்தனைப் போக்கு, சமாதானம் ஆகியவை பற்றிய நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் ஆடைகளையோ அடையாளங்களையோ அணியக்கூடாது; 1வது, 2வது வாசகங்களை எப்படி நடைமுறையில் செயல்படுத்துவது என வரும்போது, ஹெஸ மாநிலத்தில் உள்ள, கிறிஸ்தவ, மனிதநேய மரபுகள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்."

சாதாரண சொற்களில் கூறினால் ஹெஸ சியில் கிறிஸ்தவ மரபுகளை கடைபிடிப்பவர்கள்தான் நடுநிலையில் இருக்க முடியும். இதுபற்றி சிறிதளவு சந்தேகத்தை எவர் எழுப்பினாலும், "கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை சந்திக்க நேரிடலாம்." மேலும் பல கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) அரசியல்வாதிகள் வெளிப்படையாக கிறிஸ்தவ உலகம் காக்கப்படுவதற்கான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஹெஸ மாநில சமூகத்துறை மந்திரி Silke Lautenschläger (CDU) நீதிபதியின் போக்கை குறைகூறியுள்ளார் அவர் "கிறிஸ்துவ" மதிப்புக்களின்படி தன்னுடைய தீர்ப்பை கொடுக்கவில்லை என்பதால் அல்ல. "ஒருங்கிணைப்பிற்கு ஒரு தெளிவான கருத்துக் கண்ணோட்டம் தேவை. இங்கு மன்னிப்பிற்கு இடமில்லை. எமது சமூகத் தளம் மனிதனை பற்றிய கிறிஸ்துவ சிந்தனை; மற்றும் அரசியலமைப்பில் இழைந்துள்ள மனித கெளரவம் பற்றிய கருத்தாய்வு ஆகும்" என்றும் இந்த அரசியல்வாதி வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் Lautenschlager கருதுவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர் Hartz IV சமூகநல "சீர்திருத்தங்கள்" இன்னும் கடுமையாக்கப்படவேண்டும் என்று கோரியபோதே தெளிவாக்கப்பட்டது; அதாவது வேலையின்றி வாடும் நபர் தன்னுடைய குழந்தைகள் அல்லது பெற்றோர்களிடம் பண ஆதரவிற்கு நிற்க வேண்டும் என்பதாகும் அது.

கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், கிறிஸ்தவ சமூக யூனியன் (CDU/CSU) குடும்பக் கொள்கை பற்றிய செய்தித் தொடர்பாளரான Johannes Singhammer இதேபோன்ற கருத்துக்களைத்தான் மகளிரின் கெளரவம் மற்றும் சுய நிர்ணயம் என்பது "கிறிஸ்தவ அறநெறிக் கோட்பாடுகளின் விளைவு!" எனக் குறிப்பிட்ட விதத்தில் வெளிப்படுத்தினார். உண்மையை தலைகீழாக்கி கூறுவதைத்தான் Singhammer செய்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, தேவாலயங்கள் மற்றும் "கிறிஸ்தவ உலகின் மற்ற பாதுகாவலர்களுக்கு எதிராக மகளிரின் சம உரிமைகளுக்காக கடினமாக போராட்டத்தை நடத்தியது சோசலிஸ்ட் தொழிலாளர்களின் இயக்கம்தான்.