World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Sarkozy's electoral victory and the bankruptcy of the French "left"

சார்க்கோசியின் தேர்தல் வெற்றியும் பிரெஞ்சு "இடதின்" திவால் தன்மையும்

By Peter Schwarz
9 May 2007

Use this version to print | Send this link by email | Email the author

வலதுசாரி கோலிச அரசியல்வாதி நிக்கோலா சார்க்கோசி பிரெஞ்சு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை பிரான்சிலும் ஐரோப்பாவிலும் பலரையும் அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு வாக்காளர்கள் ஐரோப்பிய அரசியலமப்ப நிராகரித்தபோது கொண்டிருந்த முழுநிறவான மனநிலயத்தான் ஒருவர் நினவுகூருவார். இதே மக்கள்தாம் இழிபுகழ் பெற்ற "முதல் வேலை ஒப்பந்தம்" (CPE) திரும்பப் பெறவேண்டும் என்பதற்காக தொடர்ச்சியான எதிர்ப்புக்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஓராண்டிற்கு முன் நிகழ்த்தியிருந்தனர்.

அதே நேரத்தில் பல குட்டி முதலாளித்துவ "இடது" அமைப்புக்கள் இவ்வியக்கங்கள் சிராக் அரசாங்கத்தின் கொள்கைகளை "நெறியற்றவை, ஏற்க மறுப்பவை" என செய்துவிட்டதாக அறிவித்திருந்தன. "வேலை கொடுப்பவர்களை நேரடியாக எதிர்க்கவும் புதிய தாராளக் கொள்கையை முழுமையாக எதிர்ப்பதற்கு ஒரு பொது இயக்கம் அமைக்கும் காலமும் வந்துவிட்டது" என்று கூறப்பட்டது. (புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை [லிசிஸிஸிமீஸ்ஷீறீutவீஷீஸீணீக்ஷீஹ் சிஷீனீனீuஸீவீst லிமீணீரீuமீ])

இப்பொழுது, அதற்குப் பின் ஓராண்டிற்கும் குறைவானதில், ஐயத்திற்கு இடமின்றி வலதுசாரி நம்பிக்கை கொண்டுள்ள ஒரு மனிதர் ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார் --இவர் சிந்தனைப் போக்கு அளவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் மற்றும் ஸ்பெயினின் முன்னாள் பிரதமர் ஜோஸ் மரிய அஜ்நருக்கு நெருக்கமானவர் ஆவார். ஒழுங்கு, செயற்பாடு, அதற்கு வெகுமதி என்ற மதிப்புக்களை புதுப்பிக்க சார்க்கோசி விரும்புகிறார்; மேலும் 1968 எதிர்ப்புத் தலைமுறையின் மரபியம் அனைத்தையும் சமாளித்து தகர்க்கும் மனிதராகவும் தன்னை கருதிக் கொள்கிறார். சர்வதேச செய்தி ஊடகம் இவர் வெற்றிபெற்றுள்ளதை களிப்புடன் வரவேற்றுள்ளது. பிரான்சின் நலன்புரி அரசு இறுதியாக தகர்க்கப்படும், நாட்டின் ஐந்து மில்லியன் அரசாங்க ஊழியர்களின் பல வேலைகள் வெட்டுக்கு ஆளாகும், ஓய்வூதியங்கள் குறைக்கப்படும், தொழிலாளர் சந்தை இன்னும் "வளைந்து கொடுக்கும் தன்மையை பெறும்", இவருக்கு முன் பதவியில் இருந்தவர்களுக்கு மாறாக தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு இனி பணியப்படமாட்டாது என்று அவை எதிர்பார்க்கின்றன.

இத்தகைய தீய விளைவைக் கொடுக்கக்கூடிய அரசியல்வாதி எப்படி 19 மில்லியன் வாக்குகள் பெற்று மிக அசாதாரணமான வாக்குப் பதிவு நடைபெற்ற தேர்தலில் வெற்றியாளராக வெளிப்பட முடிந்தது?

சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் செய்தி ஊடகத்திடம் விடை தெளிவாக உள்ளது: பிரெஞ்சு வாக்காளர்கள்தான் இதற்கு குற்றம்சாட்டப்பட வேண்டும். இவர்கள் வாதத்தின்படி, பிந்தையவர்கள் வலதிற்கு நகர்ந்துவிட்டனர், சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செகொலென் ரோயால் விரைவாகவும் போதுமான அளவும் அவர்களை தொடரவில்லை. முன்னாள் நிதி மந்திரி டொமினிக் ஸ்ட்ரவுஸ்-கான் தேர்தல் நாள் மாலை குறிப்பிட்டபடி இழிவான Bad Godesberg மாநாட்டில் ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சி நடத்திய "சமூக-ஜனநாயக புதுப்பித்தல்" வகையை சோசலிஸ்ட் கட்சி கடைப்பிடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டு விட்டது. குறிப்பாக PS "மையத்தில்" இருக்கும் வாக்காளர்களை அசட்டை செய்துவிட்டது.

இந்த விளக்கம் சமூக உண்மையை புறக்கணித்து தேர்தல் முடிவுகளுக்கு பின்னே இருக்கும் ஆழ்ந்த சமூக முரண்பாடுகளை அடையாளம் காண்பதில் தோல்வி அடைந்துள்ளது. "மையத்தில் இருக்கும் வாக்காளர்கள்" என்பது ஒரு அருவமான விளக்கம். ஏனைய இடங்களில் இருப்பதை போலவே பிரான்சில் உள்ள மத்தியதர வர்க்கங்களும் பெரும் துருவமுனைப்பட்டுள்ளன. நீண்ட காலமாக சமூக துருவமுனைகளை ஒன்றிணைக்கும் சமூகப் பசையாக இருந்தனர். ஆனால் பூகோளமயமாக்கலின் விளைவினால் அவர்களில் பெரும்பாலானவர்கள் பாட்டாளி வர்க்கத்திற்குள் கீழிறங்கிவிட்டனர், அதேவேளை ஒரு சிறுபான்மைதான் தன்னை மேலே உயர்த்திக் கொள்ள முடிந்தது.

மத்தியதர வர்க்கத்தின் முதல்தர உறுப்பினர்களான கைவினைஞர்கள், விவசாயிகள், நிலப் பிரபுக்கள், சிறுவணிகர்கள் ஆகியோர் இன்று ஒரு சராசரித் தொழிலாளர் போன்றே பல பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர். இதே நிலைதான் நகர்ப்பகுதியில் உள்ள மத்தியதர வர்க்கத்திற்கும் பொருந்தும். ஒரு பல்கலைக்கழக பட்டமானது நல்ல வேலை, தொடர்ந்த வருமானம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் என்று இருந்த காலம் மாறிவிட்டது. இப்பொழுது பிரான்சில் பல்கலைக்கழக பட்டம் பெற்ற ஒரு தற்காலிக தொழிலாளியை காணமுடியும்; அல்லது ஒரு கல்வியாளர், ஒரு வேலை மையத்தில் இருந்து பகுதி நேர வேலைக்கு மாறுவதையும், அதன் பின் ஒரு குறுகிய கால ஒப்பந்த ஊழியராக இருப்பதையும் பார்க்கமுடியும்.

இந்த சமூக துருவமுனைப்படல் உத்தியோகபூர்வ அரசியலில் பிரதிபலிப்பை காணவில்லை. தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோர் தீவிரமயமாக்கப்பட்டு பல நேரமும் சமூக தீமைகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டாளிகள் அவர்களுடைய போராட்டங்களை நாசப்படுத்தும் வகையில் தலையிட்டு, ஏமாற்றத்தையும் மனச்சோர்வையும் பரப்பின, அதன் மூலம் சார்க்கோசிக்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளன. அவருடைய சொந்த வலிமையை ஒட்டி அவர் வெற்றி இருந்தது என்பதை விட "இடதின்" திவால் தன்மையில்தான், ஒரு முற்போக்கான சமூக மாற்றீட்டை அளிக்க இயலாத அதன் தன்மையில்தான் இருந்தது என்று கூறமுடியும்.

ஸ்ட்ராவுஸ்-கான் ஒரு புறம் இருக்க, நீண்ட காலமாகவே பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி "Bad Godesberg மாற்றத்தை" பின்னுக்கு தள்ளிவைத்துள்ளது. அது ஒரு முதலாளித்துவ கட்சியாகி, முதலாளித்துவ ஒழுங்கை காக்க முற்பட்டுவிட்டது. 1970களில் இது சமூக சமரச வழிகளின் மூலம், அல்லது சமூக சமரச உறுதிமொழி மூலம் அவ்வாறு செயல்பட்டது.

அதற்குப்பின், சர்வதேச நிதிய சந்தைகள், பூகோளமயமாக்கல் விளைவுகள் ஆகியவை சமூக சமரசத்தை அடிப்படையாக கொண்ட தளம் அனைத்தையும் அழித்துவிட்டன. ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் மற்றும் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் அரசாங்கத்தின் கீழ் ஒன்றுக்குப்பின் ஒன்றாக உறுதிமொழிகள் மீறப்பட்டது. சமூக வெற்றிகள் வெட்டி குறைக்கப்பட்டன; வேலையின்மை பத்து சதவிகிதத்தில் தேங்கி நின்றது; வருமானங்கள் சரிந்தன, வாழ்க்கைத் தரங்கள் புறநகரங்களில் பெருகிய முறையில் பொறுத்துக் கொள்ள முடியாதவையாக போயின.

இதையொட்டி முதலில் இலாபம் பெற்றது Jean-Marie Le Pen தலைமையிலான தீவிர வலது தேசிய முன்னணி ஆகும். மித்திரோன் அறிமுகப்படுத்திய தேர்தல் சீர்திருத்தத்தின் உதவியுடன் அவருடைய கட்சி வாடிக்கையாக தேர்தல் முடிவுகளில் இரட்டை இலக்கத்தை பெற முடிந்தது.

சமீபத்திய செகோலென் ரோயாலின் பிரச்சாரம் சோசலிஸ்ட் கட்சி ஒரு புதிய கீழ் நிலையைத்தான் பிரதிநிதித்துவம் செய்தது. அவருடைய பொது உறவு ஆலோசகர்களால் கவனமாய் வளர்க்கப்பட்ட, PS வேட்பாளர் சார்க்கோசியின் பெண் வடிவம் மற்றும் விந்தை உலகத்தில் அலிஸ் ஆகியவற்றின் கலவையாக காட்டிக் கொண்டார். தேசிய அடையாளத்திற்கு விசுவாசம், தவறு செய்யும் இளவயதினருக்கு எதிரான நடவடிக்கைகள் என்று வரும்போது சார்க்கோசியின் கொள்கையுடன் போட்டியிட்டு நின்ற இவர், அதே நேரத்தில் வெற்று உறுதிமொழிகளையும் அள்ளி வீசினார். தன்னுடைய உரைகளில் ஒவ்வொரு இரண்டாம் சொற்றொடரிலும் "நான் விரும்புகிறேன்" என்று தொடங்கினார். "நாளைய பிரான்ஸ் ஒரு அமைதியான நாடாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; அனைத்து பிரெஞ்சு மக்களுக்கும் இங்கு இடம் உண்டு, அதை நேசிப்பர்", "ஒவ்வொரு தசாப்தத்தில் இருந்தும் சிறந்ததை எடுத்துக் கொள்ள நான் விரும்புகிறேன், நாளைய பிரான்சை கண்டுபிடிக்க விரும்புகிறேன்." என்றெல்லாம் கூறினார்.

தன்னுடைய விருப்பங்களை எவ்வாறு செயல்படுத்தப்பட முடியும் என்பதை ரோயால் விளக்க முற்படவில்லை. அவரை எவரும் ஏன் நம்பியிருக்க வேண்டும்? தேர்தலில் பலர் பங்கு பெற்றாலும் 36 மில்லியன் வாக்குச் சீட்டுக்களில் 1.6 மில்லியன் பூர்த்தி செய்யப்படாத வாக்குகள் இரு வேட்பாளர்களுக்கு இடையே எவருக்கு வாக்கு என முடிவு செய்ய முடியவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றன. சிலர் சார்க்கோசியை தேர்ந்தெடுக்க விரும்பினர்; அவருடைய திட்டம் ஈர்ப்புத் தன்மை கொண்டிருக்கவில்லை என்றாலும் ஒரு மாற்றத்தை கொடுக்கும் உறுதிமொழியை கொண்டிருந்தது.

தேர்தல் பகுப்பாய்வுகளின்படி, சார்க்கோசி தொழிலாளர்களிடம் இருந்து ரோயால் பெற்ற அளவு வாக்குகளைத்தான் பெற்றார்; 53 சதவிகித தொழிலாளர்கள், தனியார் துறையில் இருப்பவர்கள் கோலிச வேட்பாளருக்கு வாக்களித்தனர். 25ல் இருந்து 34 வயதிற்கிடையே இருப்பர்களில் 57 சதவிகிதத்தினரின் வாக்குகளையும் அவர் பெற்றார். சுயவேலை பார்ப்பவர்களில் 77 சதவிகிதத்தினர் ஆதரவு இவருக்குக் கிடைத்தது; மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுபவர்களில் 68 சதவிகிதம் இவருக்கு வாக்களித்தனர்.

இதற்கு மாறாக ரோயால் இளைய வாக்காளர்கள், 24 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களின் பெரும்பாலோரின் வாக்கைத்தான் பெற முடிந்தது; இந்த வாக்காளர்கள்தான் சார்க்கோசி வெற்றியால் நேரடியாக பாதிப்பு அடையக்கூடியவர்கள். பொதுத்துறையில், கணிசமான வேலைவெட்டுக்கள் இருக்கும் என்று சார்க்கோசி கூறியுள்ள நிலையில், 57 சதவிகிதத்தினர் ரோயாலுக்கு வாக்களித்தனர்; அவருக்கு வேலையின்மையில் உள்ளவர்களில் 75 சதவிகித்தினருடைய ஆதரவும் கிடைத்தது. மாணவர்களில் 58 சதவிகிதத்தினரும் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தனர்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மில்லியன் கணக்கான வாக்குகள் சார்க்கோசிக்கு போடப்பட்டன என்பது அவருடைய வேலைத்திட்டத்துடன் உடன்பாடு என்ற பொருளைத் தருமா? அப்படி முடிவு எடுத்தால் அது அபத்தமாகும். தேர்தலே ஒரு அடிப்படை முரண்பாடு என்ற கூறுபாட்டை கொண்டிருந்தது. ஒருபுறத்தில் பரந்த ஆர்வமும் அரசியல் வாழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வேகமும் இருந்தது; இது தேர்தல் கூட்டங்களில் பலர் கலந்து கொண்டமை மற்றும் வாக்குப்பதிவு அதிகமாக இருந்தமை என்பதில் வெளிப்பட்டது. மறுபுறம், வாக்காளர்கள் வலதுசாரி முதலாளித்துவ வேலைத்திட்டத்தை கொண்டிருந்த இரு வேட்பாளர்களை எதிர்கொண்டனர்; அவை சாரம்சத்தில் அன்றி அவற்றின் பாணியில்தான் வேறுபட்டிருந்தன.

உத்தியோகபூர்வ "இடதின்" திவால்தன்மை இந்த ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின் விச்ஷி ஆட்சிக்கு பின்னர் ஜனாதிபதி பதவியை ஏற்கும் மிகப் பிற்போக்கான அரசியல்வாதி சார்க்கோசி ஆவார். தான் விடுத்துள்ள அச்சுறுத்தல்களை தீவிரமாக அவர் செய்லபடுத்துவார் என்பதில் ஐயமில்லை. இது இவருடைய சீற்றம் நிறைந்த குணத்துடன் பிணைந்தது மட்டும் அல்ல; வேலை கொடுப்போர் கூட்டமைப்புக்கள், நிதிய வட்டங்கள் ஆகியவை கொடுக்கும் மகத்தான அழுத்தத்தின் விளைவும் கூட ஆகும்.

நிராகரிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய அரசியலமைப்பை சற்றே மாறுதலுடன் புதிய வாக்கெடுப்பு இல்லாமல் மீண்டும் அறிமுகப்படுத்த இருப்பதாக சார்க்கோசி ஏற்கனவே கூறியுள்ளார். மே 17ம் தேதி அவர் முன்னாள் தொழில் மந்திரி பிரான்சுவா பிய்யோனை தன்னுடைய பிரதம மந்திரியாக நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு ஓய்வூதியத் திட்டத்தை "சீர்திருத்த" பிய்யோன் செய்த முயற்சிகள் மில்லியன் கணக்கான பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களை எதிர்ப்பிற்காக தெருக்களில் கொண்டு வந்து நிறுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கல்வி மந்திரி என்னும் முறையில் பிய்யோன் மாணவர்களிடம் இருந்து புதுப்பிக்கப்பட்ட எதிர்ப்புக்களை தூண்டிவிட்டார்.

இவருடைய தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவரான Claude Gueant உடைய கருத்தின்படி, சார்க்கோசி "இடது" மந்திரிகளையும் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்து, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களில் சோசலிஸ்ட் கட்சியையையும் சேர்ந்துக் கொள்ள முனைவார்.

தன்னுடைய பங்கிற்கு தொழிலாள வர்க்கம் சார்க்கோசி மற்றும் அவருடைய அரசாங்கத்துடன் தவிர்க்க முடியாத போராட்டங்களுக்கு தயார் செய்து கொள்ள வேண்டும்; இதில் சோசலிஸ்ட் கட்சி அதன் கூட்டாளிகளின் திவால்தன்மையில் இருந்தும் தக்க படிப்பினைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்ட அடிப்படையில் அது சார்க்கோசிக்கு எதிரான போராட்டத்தை கட்டாயம் முன்னெடுக்க வேண்டும்; ஏனெனில் அது ஒன்றுதான் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை தேவைகள் நிலவும் முதலாளித்துவ அமைப்பின் உறவுகளுடன் பொருந்தாத தன்மையில் இருந்து மேற்செல்கிறது. இந்த இலக்கை அடைய தொழிலாளர்களுக்கு ஒரு புதிய சுயாதீன சோசலிசக் கட்சி தேவைப்படுகிறது.

பிரெஞ்சு இடது தீவிரக் கட்சிகளான LCR, LO இரண்டும் முறையாக அத்தகைய வளர்ச்சியை தடுக்கத்தான் முற்பட்டுள்ளன. இரு அமைப்புக்களுமே ரோயாலுக்கு இரண்டாம் சுற்றில் வாக்களிக்க அழைப்பு விடுத்துள்ளன; இப்பொழுது அவருடைய தோல்வியை அதிர்ச்சியுற்ற சந்தர்ப்பவாதிகள் போல் எதிர்கொள்ளுகின்றன. இரண்டுமே முக்கியமாக ஏதும் நடைபெறவில்லை என்பது போலவும், அரசியல் ஐந்தொகையை கணிக்க மறுப்பதுடன், வாடிக்கையான பணிக்கு திரும்பிவிட்டன.

தேர்தல் முடிவுகள் பற்றிய தன்னுடைய அறிக்கையில் LO வின் ஆல்லெட் லாகியே உவகையுடன் அறிவிக்கிறார்: "அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பரந்த மக்கள்திரள் நிக்கோலா சார்க்கோசி ஜனாதிபதி பொறுப்பை மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகள் இருந்த அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து நிற்கும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட அரசாங்கங்களை எதிர்த்து நிற்கும்". உத்தியோகபூர்வ இடதின் திவால்தன்மையில்தான் முற்றிலும் அதிகாரத்திற்கு வந்துள்ள ஒரு ஜனாதிபதியின் சட்டரீதியான தன்மை பற்றி வினா எழுப்ப இவ்வம்மையார் கற்பனை கூட செய்தது கிடையாது.

இவ்வம்மையார் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு "தலை நிமிர்ந்து நில்லுங்கள்" என்று அழைப்பு விடுத்துள்ளார். "நமக்கு ஆதரவாக ஒரு வேளை சில விஷயங்கள் மாற வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு. செகோலென் ரோயால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் நாம் போராட வேண்டி இருந்திருக்கும்; நிக்கோலா சார்க்கோசியுடனும் அதே போல்தான், போராட்டமும் அப்படியேதான் இருக்கும்" என்று அவரது ஆதரவாளர்களை அழைக்கிறார்.

தேர்தல் இரவன்று LCR ன் ஓலிவியே பெசன்ஸநோ "அனைத்து சமூக, ஜனநாயக சக்திகளும் ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார். ஐக்கியத்தின் பெயரால் ஏற்படும் அத்தகைய உடன்பாடு -- உண்மையில் LCR ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்கங்கள் மற்ற முதலாளித்துவ ஒழுங்கின் முண்டுகோல்களுடன் உடன்பாட்டைக் கொண்டுள்ளது-- சார்க்கோசி மற்றும் அவருடைய அரசாங்கத்திற்கு எதிரான எந்தப் போரட்டத்தையும் பயன்ற்றதாக்கும். எவ்வித தீவிர மோதலும் அதிகாரத்திற்கான போராட்டமாக தவிர்க்க முடியாமல் வளர்ச்சி அடையும்; அத்தகைய போராட்டம் LO, LCR இரண்டினாலுமே உறுதியாக நிராகரிக்கப்படும்; அவை ஆதரவளிக்கும் தொழிற்சங்கங்க அதிகாரத்துவங்களினாலும் நிராகரிக்கப்படும்.