World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Voters in India's most populous state spurn traditional parties

இந்தியாவின் மிக அதிக மக்கள் உள்ள மாநிலத்தின் வாக்காளர்கள் மரபார்ந்த கட்சிகளை வெறுப்புடன் உதறுகின்றனர்

By Kranti Kumara
16 May 2007

Use this version to print | Send this link by email | Email the author

இந்தியாவின் அரசியல் அமைப்புமுறை மற்றும் செய்தி ஊடக நோக்கர்கள் வியப்பும் திகைப்பும் அடையும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சி (BSP), உத்தரப் பிரதேச (UP) சட்ட மன்றத்தில் 403 இடங்களில் 206ல் வெற்றி கண்டதானது 1992க்குப் பின்னர் மாநிலத்தில் முதல் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க அதிகாரமளித்துள்ளது.

1984 ல் நிறுவப்பட்ட BSP (சமூகத்தின் பெரும்பான்மைக் கட்சி) பல காலமும் துன்புற்றுள்ள, இன்றும் கடுமையான சமூக பிரிவினை, பொருளாதார அடக்குமுறை ஆகியவற்றால் பாதிப்பிற்கு உட்பட்டுள்ள தலித்துக்களின் (முன்னாள் "தீண்டத்தகாதவர்கள்") அரசியல் பிரதிநிதி எனக் கூறுகிறது. இக்கட்சி சமூக நீதிக்குப் போராடுவதாகவும் "சமூகத்தின் அனைத்து மக்களுடைய நல்வாழ்விற்கும்" (சர்வசமாஜ்) கடுமையாய் உழைக்கப்போவதாகவும் கூறியுள்ளது.

உண்மையில் BSP, ஒரு குறுகிய குட்டி முதலாளித்துவ தலித் உயரடுக்கிற்காகத்தான் வாதிடுகிறது; இப்பிரிவு, வறுமை மற்றும் சாதி அடக்குமுறைக்கு எதிரான மக்கள் சீற்றத்தை ஒருங்கிணைத்து அரசியல் அதிகாரம் பெறுவதின்மூலம் தன்னை வளமைப்படுத்திக்கொள்ள முற்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் BSP இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) இணைந்து மூன்றுமுறை கூட்டரசாங்கத்தை அமைத்துள்ளது மற்றும் சமூகத்திற்கு தீமை பயக்கும் பெரு முதலாளிகளின் புதிய தாராள பொருளாதார "சீர்திருத்த" செயற்பட்டியலை அமல்படுத்துவதில் இந்தியாவின் அரசியல் அமைப்புமுறையுடன் இணைந்துள்ள சக்திகளுடன் சேர்ந்துள்ளது.

உத்தரப் பிரதேச சட்ட மன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளதன் மூலம் BSP அரசியல் உயரடுக்கு மற்றும் செய்தி ஊடக பண்டிதர்களின் மரபார்ந்த அறிவை மீறியது, இது மொத்த வாக்குகளில் 30 சதவிகிதத்தை அடைந்ததின் மூலம்தான் இந்நிலைக்கு வந்துள்ளது. மேலும் UP வாக்காளர்களில் 45 சதவிகிதத்தினர்தான் குழப்பம் மிக்க, ஏழு சுற்றுக் கொண்ட, ஆறு-வார தேர்தலில் வாக்குப்பதிவு செய்தனர் என்பதைக் கணக்கில் கொண்டால், BSP இன் வெற்றி மாநிலத்தின் வாக்காளர்களில் 14 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களின் ஆதரவை வென்றெடுத்து அமையப்பெற்றது என்பது புலனாகும்.

மிகக் குறைவான வாக்காளர்கள் வாக்களிக்க வந்தது அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பரந்த அளவில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதைத்தான் முதலும் முக்கியமானதுமான முடிவாகக் காட்டுகிறது. ஆனால் இந்தியாவின் தேர்தல் குழுவின் வழிகாட்டலில் வெளிவேடத்திற்கு வன்முறையைத் தடுக்க என்ற வகையில் பெரும் ஆயுதங்கள் ஏந்திய போலீஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் நிறுத்தப்பட்டது, இரண்டாவது முக்கிய காரணி ஆகும்.

பெருவணிக மற்றும் நிதியத்தின் இரண்டு முக்கிய தேசிய அரசியல் பிரதிநிதிகளான காங்கிரஸ் கட்சி மற்றும் BJP ஆகிய இரண்டும் UP தேர்தலில் பெரும் பின்னடைவுகளைப் பெற்றன.

இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தில் மேலாதிக்கம் செலுத்தும் காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது; கடந்த தேர்தலைவிட இது 4 இடங்கள் குறைவாகும்; மொத்த வாக்குப் பதிவில் 9 சதவீதத்திற்கும் குறைவாக பெற்றது. 18 சதவீத வாக்குகளை பெற்ற BJP தன்னுடைய மொத்த இடங்கள் பாதியாக 97ல் இருந்து 50 ஆகக் குறைந்ததை கண்ணுற்றது.

இத்தகைய தேர்தல் அடி இரு கட்சிகளும் கணிசமான வளங்களையும் அரசியல் சக்திகளையும் UP தேர்தலில் செலவிட்ட பின்னரும்கூட பெற்றது ஆகும். உ.பி.யில், 165 மில்லியன் மக்கள், மாநிலங்களிலேயே அதிக மக்கட் தொகை இருக்கும் நிலை என்று இருந்தாலும் கூட, அங்கு நல்ல தேர்தல் முடிவுகள் வரவேண்டும் என்று இவை விரும்பின; அதுதான் 2009 முதல் பகுதியில் வர இருக்கும் அடுத்த தேசிய பொதுத் தேர்தல்களில், தக்க அரசியல் இயக்கம் பெறுவதற்கு இன்றியமையாததாக இருந்திருக்கும்.

இரு பெருவணிக கட்சிகள் பெற்ற இழப்புக்கள் இவற்றின் பெருவணிக பொருளாதார கொள்கைகளை கடந்த இரு தசாப்தங்களாக ஈவிரக்கமற்று சுமத்தியதற்காக மக்களின் மறைமுக கண்டனம் ஆகும் --அக்கொள்கைகள் சமூகத்தின் ஒரு சிறு அடுக்கை செல்வம் கொழிப்பதாக ஆக்கியுள்ள அதேவேளை, ஏற்கனவே பெரும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுடைய பொருளாதார பாதுகாப்பின்மை, இடர்பாடுகள் ஆகியவற்றை பெருக்கவும் செய்துள்ளன.

BSP இன் தேர்தல் வெற்றி பின்வரும் காரணங்களின் சங்கமத்தின் விளைவு ஆகும்: உத்தியோகபூர்வ அரசியல் சாதி வழியில் கூறுகூறாய் பிரிந்தது, கடந்த ஒன்றரை தசாப்தத்தில் கொள்கையற்ற, நிலையற்ற அரசியல் கூட்டுக்கள் தொடர்ந்து வந்ததற்கு வழிவகுத்தது, முக்கிய தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் BJP யிடம் மக்கள் காட்டிய விரோதப் போக்கு, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளின் முன்னேறிய சீரழிவு, இறுதியாக முந்தைய சிறுபான்மை சமாஜ்வாதிக் கட்சி (Socialist Party) அரசாங்கத்திடம் பரந்தமக்களின் மயக்கம் தெளிந்தது ஆகியனவாகும்.

சமாஜ்வாதி கட்சி (SP) இந்தியாவின் இறக்கும் தருவாயிலுள்ள சமூக ஜனநாயகக் கட்சியின் பல மகவுகளுள் ஒன்றாகும் (மற்றொன்று நீண்ட காலமாக BJP யின் நட்புக் கட்சியாக உள்ளது). இதன் முக்கிய எதிரியான BSP ஐ போலவே, SP யும் ஜனரஞ்சக சாதி அடிப்படையிலான முறையீடுகளை செய்கிறது; அதே நேரத்தில் பெருவணிகத்தின் ஆதரவை நாடி அரசியல் ஆதாயங்கள் கொடுக்கும் வலைப்பின்னலுக்கும் தலைமை தாங்குகிறது. SP தலைவரும் இப்பொழுது தோல்வியடைந்துவிட்ட முதல் மந்திரியுமான முலாயம் சிங் யாதவ் இந்தியாவின் மிகப் பெரிய வணிக நிறுவனங்களுள் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸுடன் நெருக்கமான தொடர்புக்கு இழிபுகழ் பெற்றவர் ஆவார்.

SP தன்னுடைய மொத்த வாக்குகளை 1 சதவிகிதப் புள்ளி 2002 தேர்தலில் இருந்து உயர்த்திக் கொண்டு 26 சதவிகிதத்தை பெற்றாலும், தொகுதி எண்ணிக்கை 97 ஆகக் குறைந்துவிட்டது; ஏனெனில் பல தொகுதிகளில் வாக்காளர்கள் BSP க்கு ஆதரவு கொடுத்து SP வேட்பாளரை தோற்கடிக்க முடிவெடுத்திருந்தனர்.

SP அரசாங்கத்தின் ஊழலை BSP தலைவர் மாயாவதி தன் கட்சியின் பிரச்சாரத்தின் மையமாக முன்வைத்தார்; இதில் குற்றக் கும்பல்களுடன் நெருக்கமான தொடர்பு இருந்த கூறுபாடுகளும் இருந்தன. "சட்டம் மற்றும் ஒழுங்கு" கெட்டுவிட்டதாக இவ்வம்மையார் கூறி, யாதவ் மற்றும் பிற SP தலைவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என்றும் கூறினார். இந்த ஊழலின்மீதான கவனக்குவிப்பு மாநிலத்தின் தொடர்ந்த வறுமையை BSP அரசாங்கம் எப்படி எதிர்கொள்ளும் என்ற வினாவில் இருந்து ஒதுங்கிச்செல்வதற்கு மாயாவதியை அனுமதித்தது.

BJP க்கு அதிரடி

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் BSP போட்டியாளர்களிடையே பல சோர்ந்த முகங்கள் இருந்தாலும், BJP தான் மிகப் பெரும் அடியைப் பெற்றது.

1990 களின் தொடக்கத்தில் BJP இடஒதுக்கீடு மற்ற பின்தங்கிய வகுப்பினர் என்பவர்களுக்கு இடஒதுக்கீடுகள் நீட்டிப்பு (உடன்பாட்டு நடவடிக்கை) பற்றி உயர்சாதியினர் நடத்திய போராட்டத்தை பயன்படுத்தியும் உத்தரப் பிரதேச நகரமான அயோத்தியில் மசூதி ஒன்று இந்து புராணக் கடவுள் இராமரின் பிறந்த இடத்தில் கட்டப்பட்டது என்பதைப் பயன்படுத்தியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி முன்னிடத்தை அடைந்தது.

1991 ல் 31.5 சதவீத மக்கள் வாக்குகளைத்தான் பெற்றது என்றாலும் உ.பியில் 221 தொகுதிகளில் வெற்றி பெற்றது. டிசம்பர் 1992ல் பாபர் மசூதியைத் தரைமட்டமாக்க இந்து வெறியர் கும்பல் ஒன்றை அனுமதித்ததை அடுத்து பதவியில் இருந்து அகன்றபின், உ.பியில் பல கூட்டரசாங்கங்களில் அது பங்கேற்றது.

மீண்டும் இந்து மேலாதிக்க உணர்வை தூண்டிவிடும் வகையில், BJP தலைமை ஒரு தீய முஸ்லிம் எதிர்ப்புக் குறுந்தகடு ஒன்றை 2007 உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் வினியோகிக்க தயாரித்தது. (See India's Hindu-chauvinist BJP attempts to incite communal riots ahead of pivotal state election.) ஆனால் இந்த முயற்சி இவர்களையே பாதித்து BJP ஐ இன்னும் தனிமைப்படுத்தியது. BJP தலைமை மற்றும் ராஷ்ட்ரிய சுய சேவக் சங்கம் (RSS) ல் உள்ள அதன் கூட்டாளிகள் அதிர்ச்சியுற்ற நிலையில் , BJP பிரச்சாரத்தில் பெரிதும் ஈடுபட்டிருந்த தொண்டர்கள் இப்பொழுது கத்திகளை உருவிக் கொண்டு நிற்கின்றனர்.

மிக உயர் அடுக்கினர், கட்சித் தலைவர் சோனியா காந்தி, அவருடைய மகன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, அவருடைய மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் பிரச்சாரத்தை மேற்கொண்டும் காங்கிரஸ் கட்சி பல தொகுதிகளை இழந்தது. சுதந்திரம் அடைந்து முதல் மூன்று தசாப்தங்களில் காங்கிரஸ் உ.பி. அரசியலில் மேலாதிக்கம் கொண்டிருந்தது மற்றும் தேசிய அளவிலும் காங்கிரஸ் ஆதரவிற்கு உத்தரப் பிரதேசம் நங்கூரம் போல் இருந்தது. இப்பொழுது உத்தரப் பிரதேசத்தில் இதன் ஆதரவு இரு இடங்களில், பாராளுமன்றத் தொகுதிகளான ரே பரேலி மற்றும் அமேதியில் மட்டும் உள்ளன; இவற்றின் பிரதிநிதிகளாக முறையே சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் உள்ளனர்.

இரட்டை ஸ்ராலினிச கட்சிகளான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்டுக்கள்) CPM என்ற இரண்டும் உ.பி. சட்டமன்றத்தில் ஒரு இடத்தைக் கூடப் பெறமுடியவில்லை. 1957ல் பிரிவினை அடையாத இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உ.பியில் 46 இடங்களைப் பெற்றிருந்தது என்பதில் இருந்து ஸ்ராலினிச கட்சிகளின் ஆழ்ந்த சரிவை அறிந்து கொள்ளலாம். தேசிய அளவில் CPI, CPM இரண்டும் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தை நிறுத்திவைக்க ஒன்றுபட்டுள்ளன; அதே நேரத்தில் காங்கிரஸ் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் முந்தைய BJP தலைமையிலான தேசியக் கூட்டணியின் கொள்கைகளை ஒத்த முறையில்தான் ஆட்சி செய்கிறது என்பதையும் ஒப்புக் கொள்ளுகின்றன. உத்தரப் பிரதேசத்தில் இக்கட்சிகள் தங்கள் தனித்தனி வழியே சென்றன; முந்தைய சட்ட மன்றத்தில் யாதவின் SP க்கு ஆதரவு கொடுத்த CPM இப்பொழுது உட்குறிப்பாக தேர்தல் உடன்பாட்டை ஆளும் கட்சியுடன் கொண்ட நிலையில், CPI போட்டி முதலாளித்துவக் குழுவுடன் சேர்ந்து கொண்டது.

அவர்கள் சாதி அடையாளத்தை முன்னிலைப்படுத்துவது கீழ்சாதியின் அதிருப்தியை அடையாளம் காட்டும் வகையில் உள்ளது எனக் கூறி, முலாயம் மற்றும் மாயாவதி நடத்தும் சாதி அரசியலை நெறிப்படுத்த ஸ்ராலினிஸ்டுகள் பெரிதும் முயன்றுள்ளனர் என்பது கட்டாயம் மேலும் கூறப்பட வேண்டும். இவர்கள் இடஒதுக்கீட்டு முறையை --உறுதிப்படுத்தும் நடவடிக்கை வேலைத்திட்டங்களை-- ஆதரிக்கின்றனர்; அதுவோ சமூக ஒழுங்கை சவால் செய்யாது விடுகின்ற அதேவேளை, முதலாளித்துவத்தால் தோற்றுவிக்கப்படும் துன்பத்தை "இன்னும் சமமான முறையில்" பங்கு போடுவதற்கு பிளவுபடுத்தும் மற்றும் திசைதிருப்பும் போராட்டத்தை உருவாக்குகிறது.

பரந்த அளவிலான வறுமை, சாதி அரசியல் மற்றும் குற்றம்சார்ந்த அரசியல் வாதிகள்

இந்தியாவின் வறுமை நிறைந்த மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும் ஒன்றாகும். 2003-2004ல் தனிநபர் சராசரி வருமானம் இந்த மாநிலத்தில் நாட்டிலேயே இரண்டாம் மோசமான நிலையில் 5,700 ரூபாயாக ($130) இருந்தது; தேசிய சராசரியில் இது அரைப்பகுதிதான். 2001ல் வயது வந்தவர்களில் 57 சதவீதத்தினர்தான் கல்வியறிவு பெற்றவர்கள் ஆவர். குறைந்தது 10 சதவிகித கிராமங்களிலாவது மின்வசதி கிடையாது; மாநிலத்தின் தலைவீத ஆற்றல் நுகர்வு அனைத்து மாநிலங்களிலும் கடைசியில் இருந்து இரண்டாவது இடத்தைப் பெறுகிறது.

இப்படியான நீடித்த பொருளாதாரப் பிற்போக்கானது, அரசின் வளங்களில் தங்களை ஊட்டிக் கொள்வதற்கான வாய்ப்பை அடைவதற்கு குரூரமான சாதி முறையீடுகள் செய்வதன் மூலம் தங்களை செல்வக் கொழிப்பு உடையவர்களாக்கிக் கொள்ளும் மற்றும் பெருமுதலாளிகளுடன் குதியாட்டம் போடும், நெறியானதாக்கும் மற்றும் குற்றத்தன்மை உடையதாகும் பல்வேறு குட்டி முதலாளித்துவ கூறுகளால் வழிநடத்தப்படும் மிகவும் விரும்பத்தகாத அரசியல் கட்சிகளின் உதயத்திற்கு வழிவகுத்துள்ளது.

மாயாவதியும் BSP யும் இந்த வார்ப்பில் பொருந்தியுள்ளனர்

தலித்துக்கள் கொடூரமான, வாடிக்கையான பாரபட்சத்தை எதிர்கொள்கின்றனர், சமூகத்தில் இழப்பிலுள்ள சமூகப் பொருளாதாரக் குழுக்களில் அதிகமாக உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. "தீண்டாமை" என்பது அகற்றப்பட்டுவிட்டது என அறிவித்து 60 ஆண்டுகளுக்கு பின்னரும், தலித்துக்கள் இன்னமும் கிராமங்களில் பொதுக் கிணறுகளில் இருந்து நீர் எடுக்க முடியாது; பல நேரமும் உயர்சாதி வன்முறைக்கு இலக்காகின்றனர்; நிலமற்றவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் இவர்களே; ஆனால் இந்திய மொத்த மக்கட்தொகையில் 15 சதவிகதத்தை இவர்கள் கொண்டுள்ளனர். கடந்த காலத்தை போலவே, இன்றும் பலரும் வாழ்க்கை நடத்துவதற்கு மனித மலத்தை கைகளால் அப்புறப்படுத்துதல், பிணங்களை புதைத்தல் அல்லது எரித்தல் போன்ற இழிந்த பணிகளைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் BSP அடக்கிவைக்கப்பட்டிருக்கும் சீற்றம் கொண்ட மற்றும் தலித் மக்களின் அந்நியமாதலைப் பற்றி குரல் கொடுக்கவில்லை. மாறாக இது பிரிட்டிஷாரால் முன்னோடியாக காலனித்துவ அரசில் கொண்டுவரப்பட்ட, இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் விளைவாகத் தோன்றிய குட்டி முதலாளித்துவத்திற்காக பேசுகிறது, இதையொட்டி கல்லூரிகளில் சில இருக்கைகளும் ஆட்சிப் பணித் துறையில் ஒரு சில இடங்களும் அரசாங்கம் உத்தியோக பூர்வமாக கூறும் "பட்டியலில் உள்ள சாதிகளுக்கு" இடம் ஒதுக்கப்படுகிறது.

தன்னுடைய சொந்த சொத்தை தலித் விழிப்புணர்வின் சான்று என வாடிக்கையாகக் கூறும் மாயாவதி இத்தகைய அபகரிக்கும் சமூக அடுக்கின் சாராம்ச பிரதிநிதியாவார். கல்லூரியில் படித்து, இவர்கள் ஆளும் ஸ்தாபனஅமைப்புமுறையின் ஒரு பகுதியாக வர விரும்புகின்றனர்; இதுகாறும் ஆளும் அமைப்புமுறை உயர்சாதியினரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது. கல்வி, வேலை வாய்ப்புக்கள் அனைவருக்கும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று போராடுவதற்குப் பதிலாக, நிலச்சீர்திருத்ததிற்கு அழைப்பு விடுவதற்குப் பதிலாக, தலித் மற்ற ஏழைகளின் நிலைமையை மாற்றும் வகையில் முற்போக்கான பொருளாதார மறுசீரமைப்பு வேண்டும் என்று அழைப்பு விடுவதற்குப் பதிலாக, சாதிப் பிளவுகளை அகற்றப் போராடுவதற்குப் பதிலாக, இந்த உயர்மட்ட அடுக்கு இடஒதுக்கீடுகளை விரிவுபடுத்துவதில் குவிப்பு காட்டுகிறது; அதே நேரத்தில் சாதி அடையாளங்களை விடாப்பிடியாக வலியுறுத்துகின்றது.

உயர் சாதிகளை கடுமையாகக் கண்டிக்கும் மொழியைப் பயன்படுத்தி அரசியலில் பெயரை ஈட்டிய, மாயாவதி, தலித்துகள் மற்றும் தலித் கெளரவம் எனும் பெயரில் BSP அரசியல் செப்புக்காசில் ஒரு பங்கைக் கேட்கிறது.

முதல்தடவை 1995ல் ஒரு கூட்டணி அரசாங்கம் ஏற்பட்டபோது இவர் உத்தரப் பிரதேச முதல் மந்திரியாக வந்தார்; அதன்பின் இருமுறைகள் நடுவில் சிதைவுற்ற கூட்டணி அரசாங்கங்களின் முதல் மந்திரியாகவும் இருந்தார். பதவியில் இருக்கும்போது அவர் தலித்துக்களை ஆட்சித் துறையில் செல்வாக்கான பதவிகளுக்கு உயர்த்தி 20ம் நூற்றாண்டின் தீண்டாமைப் பிரிவு அரசியல் வாதி பி.ஆர்.அம்பேத்காரின் சிலைகள் பலவற்றை அமைத்து "தலித் சக்தியை" உறுதிப்படுத்த முற்பட்டார். ஆனால் இவருடைய அரசாங்கங்கள், இந்திய சமூக பொருளாதார ஒழுங்கிற்கு சவால்விடும் நடவடிக்கைகள் எடுப்பது ஒருபுறம் இருக்கட்டும், தீவிரச் சீர்திருத்தங்கள் எவற்றையும்கூட செயல்படுத்தவில்லை;

இவர் மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புடையதாக கூறப்படும் மிகப் பெரும் சொத்துக்களைக் குவித்துள்ளார்.; அதை அதன் பரப்புத் தன்மை தெரியாமல் இருப்பதற்காக இவர் தன்னுடைய நெருங்கிய உறவினர்களிடையே விநியோகத்துள்ளதாக கூறப்படுகிறது 2003ல் இவர் முதல் மந்திரி பதவியை ராஜிநாமா செய்ய நேரிட்டது; அதற்குக் காரணம் "தாஜ் மரபிய தாழ்வார" (Taj Heritage Corridor) ஊழல் என்பதில் 1.75 பில்லியன் ரூபாய்கள் ($40 மில்லியன்) மதிப்புடையதில் இவர் குற்றம் சாட்டப்பட்டார். புகழ்பெற்ற தாஜ் மகாலுக்கு அருகே, இவ்வரலாற்றுச் சிறப்பிடத்தின் சிறப்பை குறைக்கும் வகையில், இலஞ்ச பணம் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாக வணிக கட்டிடங்களை கட்டுவதற்கு மிக செல்வம் நிறைந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் உள்ள அரசாங்க நீதிமன்றம் இந்த ஊழலில் மாயாவதியின் தொடர்பு பற்றிய விசாரணை அறிக்கையை உடனடியாக கொடுக்குமாறு உத்தரவு இட்டுள்ளது.

தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் மாயாவதி தன்னுடைய அலங்காரச் சொற்களை சற்று மாற்றி, மரபார்ந்த உயர்சாதிக்கு எதிரான உரைகளை தவிர்த்தார். இது ஒரு தந்திரோபாயத்தின் பகுதியாகும்; இதையொட்டி BSP உயர்சாதியினரையும், பிராமணர்கள் உட்பட, சாதி அடிப்படையில் வேட்பாளர்களாக நிறுத்ததுல் போன்றவற்றை செய்து நிதிய ஆதரவையும் ஈடாகப் பெற்றார்.

இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தி அவர் கூறியதாவது: "பல பணக்காரர்கள் நம் கட்சியின் சார்பில் தேர்தல்களில் நிற்க விரும்பினர்; அவர்களிடம் இருந்து நன்கொடை பெறுவதில் தவறு ஏதும் இல்லை. எப்படியும் இப்பணத்தை நான் வறிய மற்றும் பொருளாதாரத்தில் நலிந்துள்ள தலித் வேட்பாளர்கள் தேர்தலில் பங்கு பெறத்தான் உபயோகிக்க உள்ளேன்."