World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Demonstrations greet new French president

புதிய பிரெஞ்சு ஜனாதிபதியை ஆர்ப்பாட்டங்கள் வரவேற்கின்றன

By Pierre Mabut
19 May 2007

Use this version to print | Send this link by email | Email the author

மே 16ம் தேதி கோலிச நிக்கோலா சார்க்கோசி புதிய பிரெஞ்சு ஜனாதிபதியாக பதவியேற்ற அன்று, பல முக்கிய நகரங்களில் இளைஞைர்கள் ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தினர். எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சார்க்கோசி விரைவில் தன்னுடைய உயர்கல்வி "சீர்திருத்தங்கள்" செயல்படுத்தும் விருப்பத்தை கொண்டுள்ளார் என்பதற்கான வகையில்தான் விரக்தியும் சீற்றமும் எதிர்ப்புக்களாக வெளிவந்துள்ளன.

பிரான்ஸ் முழுவதும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு போலீசார் தொல்லைகள் கொடுத்த ஒரு வாரத்திற்குப் பின், பாரிஸ் நகரத்தில் 1,500 மாணவர்கள் தெருக்களில் இறங்கினர். Place de la Nation இல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு மாணவர் Liberation இடம். "ஒரு வாரத்தில் 1,000க்கு மேற்பட்ட கைதுகள் இடம்பெற்றன; இது கடந்த ஆண்டு (முதல் வேலை ஒப்பந்தம்) CPE-எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது நடந்ததைவிட கூடுதலாகும்." என்று கூறினார்.

மற்றொரு மாணவர் மே 6ம் தேதி நான்கு மாத சிறை தண்டனை கொடுக்கப்பட்டு Fleury-Mérogis சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னுடைய நண்பரிடத்தில் இருந்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்று கவலைப்பட்டார். கடந்த ஆண்டு CPE எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இருந்ததைவிட போலீஸ் அடக்குமுறை கூடுதலாக இருந்தது என்று மாணவர்கள் குறைகூறியுள்ளனர். இது எதிர்ப்புக்களையும் கடினமாக்கியுள்ளது. "ஒரு புறம் இப்பொழுது நன்கு நடந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் இல்லை, மறுபுறம், வன்முறையாளர்கள் (Casseurs) இல்லை. நம் மீது கண்ணீர்ப்புகை வீசப்பட்டு, தடியடியும் நடத்தப்படும்போது, எவருமே ஏதேனும் ஒன்றை எடுத்து திருப்பித்தான் வீசுவர்."

Rennes, Lyon, Nantes, Toulouse நகரங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு எழுந்தனர். உத்தியோகபூர்வ மாணவர் சங்கமான UNEF சார்க்கோசியின் ஆட்சியை முற்றிலும் நெறியுடையது என்று ஏற்றுக் கொண்டதால், அன்றைய நடவடிக்கைகளுக்கு ஆதரவைக் கொடுக்கவில்லை. UNEF தலைவரான Bruno Julliard சார்க்கோசி மே 6ம் தேதி வெற்றி பெற்றபின் நிகழ்ந்த எதிர்ப்பு அலைகளுக்கு விடையிறுத்த வகையில் கூறினார்: "தேர்தல் முடிவுகளை நாம் மதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஜனநாயகம் என்ற பார்வையில், இந்த வாக்கை எதிர்ப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை ... அப்படிச் செய்தல் பயனற்றது என்றுதான் கொள்ளவேண்டும்." ஜூலியா சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக உள்ளார்; மாணவர்களை செகோலென் ரோயாலுக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அரசு கல்வியின் மீதான சார்க்கோசியின் தாக்குதல் "முதல் முடிவுகள்" என்று அவர் அழைத்தவற்றுள் ஒன்று ஆகும். பல்கலைக்கழகங்களை ஆங்காங்கு உள்ள பல்கலைக்கழக நிர்வாக குழுக்களுக்கும் தலைவர்களுக்கும் "தன்னாட்சி" கூடுதலாக கொடுத்தல் என்பது, உள்ளூர் முதலாளிகளுடன் பங்காண்மைக்கான ஆதரவை ஏற்படுத்தி, பின்புறமாக தனியார் மயமாக்கலுக்கு இடமளிப்பதன் மூலம், ஒவ்வொரு பல்கலைக் கழகமும் பிரிட்டனில் பிளேயர் செய்தது போல், தன்னுடைய சொந்த கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமையை அனுமதிப்பதாகும்.

வேலை நிறுத்தங்களின்போது பள்ளிகளில் "குறைந்தபட்ச பணிகள்" செய்யப்பட வேண்டும் என்பதை சார்க்கோசி தெளிவுபடுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை மேலும் சமீபத்திய அரசாங்கங்களுக்கு மிகவும் தீவிரமான எதிர்ப்பாளர்களான தொழிலாளர்களில் ஒரு பிரிவினரான ஆசிரியர்களின் வேலைநிறுத்த உரிமையைக் குறைக்கும்; மரபார்ந்த முறையில் போர்க்குணம் கொண்ட இரயில் தொழிலாளர்களுக்கு எதிராக இயக்கப்படும் "பொதுப் போக்குவரத்து துறையில் குறைந்த பட்சப்பணி" என்று புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதற்கு இணையானதாக இது இருக்கும். இது அரச கல்விப் பணியானது "அனைத்து பள்ளிகளின் கதவுகளையும் மாணவர்கள் வருகைக்காக வேலைநிறுத்த நேரத்தில் திறந்துவைக்கும் கட்டாயத்திற்கு" கடப்பாடுடையதாக்கும்.

பள்ளிகள் செயல்படும்போது, குறிப்பாக ஏழ்மை நிறைந்த அண்டைப் பகுதிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறை பொதுவாக இருப்பது பற்றி சார்க்கோசியால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. தன்னுடைய நடவடிக்கைகளை, கற்பிக்காத செய்றபாடுகளை ஒட்டி ஆசிரியர்களிடையே வேலை நேர இழப்பு உள்ளது எனக் கூறும். Darcos அறிக்கையின் அடிப்படையில் இவர் அமைத்துக் கொண்டுள்ளார். அதன்படி ஆசிரியர்கள் கூடுதலான நேரம் பணி செய்து, மாலையில் பள்ளிகளில் சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டுப்பாடங்களை மேற்பார்வையிட வேண்டும். இன்னும் கூடுதலான உற்பத்தி திறனுக்கான உந்துதல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் என்பவைதான் தற்பொழுது நாளின் நடப்பாக உள்ளது.

சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்களுக்கு காபினெட் மந்திரி பதவியை கொடுத்துள்ள சார்க்கோசி, தேசியவாத - ஜனரஞ்சக சமாதான சின்னத்தை பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கும் காட்டியுள்ளார். பதவியேற்ற முதல் நாள், புதிய ஜனாதிபதி 1944ம் ஆண்டு எதிர்ப்புப் போராளிகள் 35 பேர் நாஜிக்களால் தூக்கிலிடப்பட்டிருந்த பாரிசில் உள்ள Bois de Boulogne நினைவிடத்திற்கு சென்றிருந்தார்.

அலுவலகத்தில் தன்னுடைய முதல் வேலை, ஒரு கம்யூனிஸ்ட்டான 17 வயது Guy Môquet, (ஒரு ஜேர்மனிய அதிகாரியை கொன்றதற்கு பதிலடியாக தூக்கிலிடப்பட்ட 50 கம்யூனிஸ்ட்டுக்களில் ஒருவர்), 1941ல் தூக்கிலடப்படுவதற்கு சற்று முன் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம், அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆண்டுத் தொடக்கத்தில் படித்துக் காட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாக இருக்கும் என்று அறிவித்திருந்தார். பாரிசில் நாஜி எதிர்ப்பு துண்டுப் பிரசுரங்களை வினியோகித்துக் கொண்டிருக்கும்போது Môquet சிறைபிடிக்கப்பட்டார். அவருடைய கடிதத்தில், இவ்விளைஞர் எந்த வருத்தமும் தெரிவிக்காமல், தன்னுடைய குடும்பத்திடம் கூறினார்: " இதயபூர்வமாக நான் விரும்புவநு யாதெனில் என்னுடைய மரணம் ஒரு நோக்கத்திற்காக பயன்பட வேண்டும் என்பதுதான்."

சார்க்கோசி முதலில் Guy Môquet ஐ ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள விரும்பியபோது, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான Marie Georges Buffet, சீற்றத்தை வெளிப்படுத்தி, Môquet மற்றும் அவரைப் போன்றவர்கள், இன்று கோலிச வேட்பாளரின் இனவெறித் தாக்குதல்கள், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களுக்கு மற்றும் இவருடைய பிற பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எதிராக இருப்பர் என்று அறிவித்தார்.

Buffet இப்பொழுது தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சார்க்கோசியின் ஆணையான இளம் எதிர்ப்புப் போராளியின் கடைசிக் கடிதம் பகிரங்கமாக படிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவை தெரிவித்துள்ளார். மே 16ல் இவ்வம்மையார் செய்தி ஊடகத்திற்கு ஒரு அறிக்கை வெளியிட்டார்; அதில் சார்க்கோசியின் சிடுமூஞ்சித்தனமான தந்திர செயல்பற்றி எந்த விமர்சனமும் இல்லை. சார்க்கோசியின் முடிவைக் கூறி, இக்கடிதத்தை படித்தல் "ஒரு வலுவான செய்தியை கொடுக்கும்" என்ற கருத்தையும் கூறியுள்ளார். ஸ்ராலினிச தேசிய செயலாளர், Môquet ஐ, "எதிர்ப்பில் பங்கு பெற்றதன் மூலம், நாட்டுப்பற்றை கொண்டவர்" என்று அழைத்ததுடன், "மனித விடுதலைக்கான போராட்டத்தில் பங்கு பெற்றிருந்தார், மற்றும் ஜனநாயகத்தில் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் கொண்ட குடியரசை கட்டியமைக்கும்" பணியிலும் ஈடுபட்டிருந்தார் என்றும் கூறியுள்ளார். "இந்த தகவல் வருங்கால தலைமுறைகளுக்கு அளிக்கப்பட வேண்டும்; அதையொட்டி மதிப்புக்கள், உரிமைகள், குறிக்கோள்கள் ஆகியவை எமது குடியரசின் இதயத்தானத்தில் வைக்கப்படும் தன்மையை கொண்டுள்ளது" என்றும் அவர் அறிவித்துள்ளார். அவர்கள் வழியில், பிரெஞ்சு ஸ்ராலினிஸ்டுகள் சார்க்கோசியுடன் செயலாற்றுவதற்கு தங்கள் விருப்பத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

இன்று சார்க்கோசியால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் மிகப் பெரும்பாலானவர்கள், நாஜி ஆக்கிரமிப்பின்போது குறிப்பிடத்தக்க வகையில் வராது போயினர். பலரும் மார்ஷல் பெத்தனின் ஒத்துழைப்பாளர் விஷி ஆட்சிக்கு ஆதரவைத்தான் கொடுத்தனர்; அந்த ஆட்சி பிரெஞ்சு புரட்சியின் குறிக்கோளான "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்பதை "வேலை, குடும்பம், தாய் நாடு" என்று மாற்றியது; இது சார்க்கோசியின் தற்போதைய தீவிர போராட்டத்துடன் இயைந்துதான் உள்ளது.