World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

European Union-Russia summit a diplomatic debacle

ஐரோப்பிய ஒன்றியம்-ரஷ்ய உச்சிமாநாடு, ஒரு தூதரக முறை பேரிடர்

By Niall Green
19 May 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையே மே 18 அன்று ரஷ்ய நகரமான சமராவில் நடைபெற்ற உச்சிமாநாடு, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே இருக்கும் விரோதப் போக்குகள் ஒரு முறியும் கட்டத்தை அடைகையில், ஐரோப்பிய சக்திகளை பொறுத்தவரை ஒரு பேரிடரில் முடிந்தது.

ரஷ்யாவை விரோதப்படுத்தி கொள்வதில் அமெரிக்கா ஒரு முடிவான பங்கினைக் கொண்டும் தனது சமீபத்திய புதிய ஏவுகணைத் திட்டங்களினால் ஐரோப்பிய அரசுகள் இடையே ஒரு பிளவை ஏற்படுத்துவதிலும் முயன்று வந்துள்ளது. போலந்து மற்றும் செக் குடியரசு இரண்டும் ரஷ்யாவிற்கு எதிராக இயக்கப்படும் ஏவுகணை திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன. தன்னுடைய பங்கிற்கு ரஷ்யா அமெரிக்க முன்முயற்சிக்கு விடையிறுக்கும் வகையில் முன்பு சோவியத் ஒன்றியத்தில் பிணைந்திருந்த அண்டை நாடுகளுடன் தன்னுடைய செல்வாக்கை பெருக்கும் முயற்சிகளை உக்கிரப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த முரண்பாடுகளின் நடுவே தான் அகப்பட்டுள்ளதாக காண்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையே உள்ள ஆழ்ந்த பிளவுகள், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே இருக்கும் பிளவுகளும், மாஸ்கோவுடன் மிகப் பதட்டமான, கசப்பான எதிர்கொள்ளலை தோற்றுவித்துள்ளன. கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே, கிட்டத்தட்ட இரத்து செய்யப்பட்டது; ஏனெனில் பல கிழக்கு ஐரோப்பிய நாட்டு தலைவர்களும் கலந்து கொள்ளுவதில்லை என்று அச்சுறுத்தினர் அல்லது மாஸ்கோவின் வெளியுறவுக் கொள்கை பற்றி தங்கள் எரிச்சலை வெளிப்படுத்தும் கருவியாக அதைப் பயன்படுத்த நினைத்தனர். முக்கியமான ஏதும் முடிவெடுக்கப்படாத சூழ்நிலையில் கூட்டம் நடைபெற்றதால், உச்சிமாநாட்டின் முடிவுகள் பற்றி கூட்ட அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.

ஜேர்மனியின் ஆறு மாத கால ஐரோப்பிய ஒன்றிய தலைமையின்கீழ் அமைக்கப்பட்ட இந்த உச்சிமாநாடு, Partnership and Cooperation Agreement (PCA) என்பதை புதுப்பிப்பதற்கான அஸ்திவாரங்களை அமைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. PCA என்பது ஒரு 10 ஆண்டு திட்டம்; இது ஐரோப்பிய ஒன்றியம். மற்றும் ரஷ்யாவிற்கும் இடையே சில பொருளாதார, அரசியல் உறவுகளின் தன்மைகளை எடுத்துரைப்பது ஆகும். ஐரோப்பிய ஒன்றியம் தன்னுடைய மொத்த எண்ணெய், எரிவாயுத் தேவைகளில் நான்கில் ஒரு பங்கை ரஷ்யாவில் இருந்து பெறுகிறது; அதேவேளை மாஸ்கோவின் ஏற்றுமதிகளில் பாதிக்கும் மேலாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பப்படுகிறது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் ஜோஸ் மானுவல் பாரோசோ மற்றும் ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெல் ஆகியோர் அதிகம் மறைக்கப்படாத தூதரகவழி அவமதிப்புக்களை பரிமாறிக்கொண்டதைத்தான் கூட்டம் கண்ணுற்றது. உச்சிமாநாட்டிற்கு வெளியே கைதுசெய்யப்பட்டிருந்த அல்லது அல்லது சமாராவிற்கு பயணிக்க முடியாமல் தடுக்கப்பட்டிருந்த புட்டின் ஆட்சிக்கு எதிரான ரஷ்ய செயற்பாட்டாளர்கள் விதி பற்றிய அக்கறையை மேர்க்கெல் வெளிப்படுத்தினார். "தங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கு அவர்களுக்கு வாய்ப்புத் தரப்படும் என்று நான் நம்புகிறேன்." என மேர்க்கெல் கூறினார்.

பாரோசோ, ஐரோப்பிய ஒன்றிய "ஜனநாயகம், செய்தி ஊடகத்தின் சுதந்திரம், கூடும் உரிமை, ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமை ஆகியவை அடங்கியுள்ள "சில புனிதக் கொள்கைகளை கொண்டிருப்பதாக" கூறினார்.

புட்டின் இதற்கு விடையிறுக்கையில், ஒரு முன்னாள் சோவியத் குடியரசான எஸ்தோனியாவில், 2004ல் இருந்து ஐ.ஒ. உறுப்பு நாடாக இருக்கும் பகுதியில், ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதை தடுப்பதில் ஐ.ஒ. தோல்வியடைந்துள்ளதாக தாக்கிக் கூறினார்.

ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உள்ள மோதற் புள்ளிகளின் பட்டியல் நீளமாக இருப்பதுடன், பெருகியும் வருகிறது.

2004ல் ஐ.ஒ.வில் சேர்ந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு தங்கள் விரோதத்தை காட்டியதில் பெரும் குரல் எழுப்பின. உச்சிமாநாடு இரத்து செய்யப்பட வேண்டும் என்று போலந்தும், லித்துவேனியாவும் வாதிட்டன; ரஷ்ய கொள்கைகள் அவற்றிற்கு எதிராக இயக்கப்படுவதாகவும், பேர்லினுக்கு சாதகம் தரும் வகையில் ஐ.ஒ. கொள்கையை இயக்க ஜேர்மனி முயற்சிகள் மேற்கொள்ளுவதை, குறிப்பாக ஆற்றல் தொடர்பானதில் இருப்பதை, அந்நாடுகள் சீற்றத்துடன் குறிப்பிட்டன.

PCA வின் பேச்சுவார்த்தை உடன்பாடுகளை தான் தடுப்பதிகாரத்தால் நிறுத்திவிடப்போவதாக போலந்து கூறியது; போலந்தில் இருந்து இறைச்சி இறக்குமதி செய்வதை ரஷ்யா தடைவிதித்துள்ளதை இது மேற்கோளிட்டது. விலினியசில் இருக்கும் அரசாங்கம் தன்னுடைய ஆற்றல் உள்கட்டுமானத்தை ரஷ்ய நலன்களுக்கு கூடுதலான கட்டுப்பாட்டிற்குள் அளிக்க அழுத்தம் கொடுப்பதாக பல வர்ணனையாளர்கள் கருதும் நிலையில், லித்துவேனியா ரஷ்யா ஆற்றல் அளிப்புக்களை குறைக்கும் முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்க விழைகிறது.

கிரெம்ளினுக்கும் புதிய ஐ.ஒ. உறுப்பு நாடான எஸ்தோனியாவிற்கும் இரண்டாம் உலகப் போரில் இறந்திருந்த செஞ்சேனையின் நினைவுச் சின்னம் ஒன்றை பிந்தையது அகற்றியதை அடுத்து இரண்டிற்கும் இடையே உறவுகள் சீர்குலைந்துள்ளன; இந்த அகற்றலை பயன்படுத்தி, மாஸ்கோ டாலினில் இருக்கும் அரசாங்கத்தின்மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளது. நாட்டின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டுமானத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கம் கொண்ட இணையதள நாசவேலைப் பிரச்சாரத்தை மாஸ்கோ தொடக்கியுள்ளதாக எஸ்தோனியா குற்றம் சாட்டியுள்ளது. இந்த சேதத்தை குறைக்கும் வகையில் NATO, "Cyber-Terrorism" வல்லுனர்களை எஸ்தோனியாவிற்கு அனுப்பிவைத்துள்ளது.

மாஸ்கோ தன்னுடையது எனக் கருதும் செல்வாக்கு மண்டலத்தில் அமெரிக்கா மற்றும் ஐ.ஒ. அவற்றின் செல்வாக்கை கூடுதலாக செலுத்தும் அம்முயற்சிகளை ரஷ்யா இன்னும் ஆக்கிரோஷமான முறையில் எதிர்கொள்ளுகிறது. ஒரு பிராந்திய சக்தி என்னும் தன்னுடைய பங்கை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேலை செய்யும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகவும் கிரெம்ளின் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. பிரஸ்ஸல்ஸில் ரஷ்யாவின் தூதராக இருக்கும் விளாடிமீர் சீஷோவ் முந்தைய கிழக்கு முகாம் நாடுகள் ஐ.ஒ.விற்குள் இணைந்துள்ளது பிரஸ்ஸல்ஸுக்கும், மாஸ்கோவிற்கும் இடையே உள்ள உறவை "இன்னும் சிக்கல் வாய்ந்ததாக" செய்துள்ளது என்று கூறினார்.

எந்த தனிப்பட்ட ஐ.ஒ.உறுப்பு நாட்டிற்கும் எதிரான ரஷ்ய நடவடிக்கை, அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் எதிரான நடவடிக்கை என்று கருதப்படும் என பாரோசோ எச்சரித்தார். "நெருக்கமான ஒத்துழைப்பு வேண்டும் என்றால், ஐ.ஒ. ஒற்றுமை கொண்ட கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதை நீங்கள் உணரவேண்டியது மிகவும் முக்கியமாகும்" என்று அவர் கூறினார்.

பேர்லின் மற்றும் பிற முக்கிய ஐரோப்பிய சக்திகளின் நலன்களை வெளிப்படுத்தும்போது, பிரஸ்ஸல்ஸ், கிழக்கு ஐரோப்பிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகள் மாஸ்கோவுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவை பற்றிய விமர்சனங்களை பயன்படுத்த விருப்புடன் இருக்கையில், ஐ.ஒ.வின் ஏகாதிபத்திய குறியிலக்குகளுக்கு இந்த வலிமையற்ற, வறிய அரசுகளின் நலன்கள் ஒன்றும் மையமாக இல்லை. மாறாக, ஐரோப்பிய சக்திகள் மேற்கு எல்லையில் மாஸ்கோவின் பெருகிய உறுதிப்பாட்டை அப்பகுதியை தாங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கான தமது திறமைக்கு ஓர் அச்சுறுத்தல் என்றே கவலைப்படுகின்றன.

பிரஸ்ஸல்ஸுக்கும் மாஸ்கோவிற்கும் இடைய பல முக்கிய வெளியுறவு, பொருளாதார விஷயங்களில் கணிசமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. கோசோவோ சேர்பியாவில் இருந்து பிரிய வேண்டும் என்று ஒரு ஐ.நா. தீர்மானம் இயற்றப்பட வேண்டும் என்பதற்கு ஐ.ஒ. பாடுபடுகிறது; அவ்வாறு செய்தால் 1990 களின் ஆரம்பத்தில் முன்னாள் யூகோஸ்லாவியா சிதைப்பு ஜேர்மனி மற்றும் அமெரிக்க தலைமையின்கீழ் நடந்தது முடிவாகிவிடும். மாஸ்கோ நீண்ட காலமாக சேர்பியாவுடன் தொடர்புகளை கொண்டு அதை பால்கன் பகுதியில் நட்பு நாடாகக் கருதுகிறது; எனவே சேர்பிய அரசாங்கத்திற்கு பிடிக்காத எந்த ஐ.நா. தீர்மானத்தையும் அது தடுப்பதிகாரத்தால் நிறுத்திவிடுவதாக அச்சுறுத்தியுள்ளது.

அமெரிக்க நட்சத்திரப் போர் முறை

மாஸ்கோவின் புதிய ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கையின் மையப்பகுதியாக, வாஷிங்டன் அதன் "நட்சத்திரப் போர்கள்" என அழைக்கப்படுவதின் நிலையப் பகுதிகளாக, ஏவுகணை கேடயப் பாதுகாப்பு முறையை போலந்திலும் செக் குடியரசிலும் நிறுவுவதை வெறுப்புடன் மறுக்க எதிர்க்க முயல்கிறது; ரஷ்ய இராணுவத் திறன்களுக்கு அது ஒரு நேரடி அச்சுறுத்தல் என்றும் மாஸ்கோ கருதுகின்றது. தன்னுடைய இராணுவச் செலவில் மிகப் பெரிய அதிகரிப்பை கொண்டுள்ள வகையில் ரஷ்யா இதற்கு விடையிறுப்பாக அறிவித்துள்ளது; மேலும் பாலிஸ்டிக்-எதிர்ப்பு ஏவுகணை ஒப்பந்தத்தில் இருந்து விலகப் போவதாகவும் கூறியுள்ளது; அதைத்தவிர போலந்து, மற்றும் செக் குடியரசு ஆகியவற்றிற்கு எதிராக தன்னுடைய அணுவாயுதத்தை நேரடியாக இயக்கும் வகையிலும் அச்சுறுத்தலை கொடுத்துள்ளது. அமெரிக்க மூலோபாயத்தின் முக்கிய கூறுபாடு, ஐரோப்பிய மண்ணில் அதன் ஆயுதங்களை வளர்ச்சிறச்செய்வது ஆகும்; அதையொட்டி கிழக்கு, மேற்கு ஐ.ஒ.உறுப்புநாடுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தலாம் என்பது அதன் எண்ணம். சமாராவில் ஏற்பட்டுள்ள சங்கடம் அமெரிக்க மூலோபாயம் பலன் அளித்துள்ளதை காட்டுகிறது.

முக்கிய ஐரோப்பிய சக்திகள், குறிப்பாக ஜேர்மனி மற்றும் பிரான்ஸ், "நட்சத்திரப் போர்கள்" திட்டம் பற்றி எச்சரிக்கையுடன் இருந்து, கிரெம்ளின் எதிர்ப்புக்களுக்கு பரிவு காட்டிலானலும், கிழக்கு ஐ.ஒ. உறுப்பு நாடுகள் அமெரிக்க இராணுவ வலிமையில் நம்பிக்கை கொண்டிருப்பதைத்தான் பெருக்கிவிட்டிருக்கிறது; மேலும் இது இப்பகுதியில் மாஸ்கோ இன்னும் கூடுதலான ஆக்கிரோஷ நிலைப்பாட்டைக் கொள்ளலாம் என்றும் காட்டுகிறது.

மாஸ்கோவின் கூடுதலான ஆக்கிரோஷ இராணுவ நிலைப்பாடும், முயற்சிகளும் அதை ஒரு உலக சக்தி என்று காணவேண்டும் என்பதுதான், புட்டின் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றிக் கடுமையாக விமர்சித்ததின் நோக்கமாகும். கிரெம்ளினில் இருந்து அண்மையில் வெளியிடப்பட்ட வெளியுறவுக் கொள்கை அறிக்கை ஒன்று கூறுகிறது: "ஒற்றை உலக சக்தி என்ற கற்பனை ஒரே நேரத்தில் ஈராக்கையொட்டி பிளந்து சிதறிவிட்டது." மேலும், "ஒரு வலிமையான, இன்னும் கூடுதலான தன்னம்பிக்கை உடைய ரஷ்யா உலகின் நேரிய சவால்களின் இணைந்த அங்கமாக மாறிவிட்டது."

மத்திய கிழக்கிலும் ரஷ்ய அரசாங்கம் இன்னும் கூடுதலான தீவிர பங்கைக் கொண்டுள்ளது; இதில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை செளதி அரேபியா மற்றும் வளைகுடா ஷேக் ஆட்சிகளுடன் நடத்தியது, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திட்டமிட்டுள்ள பொருளாதார தடைகளை தடுப்பதிகாரத்தில் நிறுத்துவது, ஹமசுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவது ஆகியவை அடங்கும்.

இந்தக் கூடுதலான உறுதிகாட்டும் பங்கு முக்கிய ஐரோப்பிய சக்திகள் மீது நேரடி பாதிப்பைக் கொண்டுள்ளது; அவை மாஸ்கோவின் பெருகிய பொருளாதார வலிமை மற்றும் அதன் புவியியல் மூலோபாய வகையிலான இராணுவ, தூதரக, பொருளாதார வழிவகைகளின் செல்வாக்கு ஆகியவற்றால் அச்சுறுத்தப்படுவது போல் உணர்கின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய காஸ்பியன் ஆற்றல் கொள்கைகள் "அழிவில்"

உச்சிமாநாட்டை குறைவுபடுத்திய மிக முக்கியமான நிகழ்வு, மே 12 அன்று ரஷ்யா, காஜகஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகியவற்றிற்கு இடையே கையெழுத்தான உடன்பாடு ஆகும்; இதன்படி ஒரு புதிய எண்ணெய், எரிவாயு குழாய்த்திட்டம் காஸ்பியன் கடற்கரையோரத்தில் இருந்து ரஷ்யாவின் ஆற்றல் அளிப்பு இணையத்திற்கு அமைக்கப்படும். இந்த உடன்பாடு ஐ.ஒ. மற்றும் அமெரிக்க முயற்சிகளான அவற்றின் ஆற்றல் கொழிக்கும் பகுதியில் ரஷ்யாவின் குறுக்கீடு இன்றி தொடர்பு மேற்கொள்ளுவதில் முன்னேறலாம் என்பவற்றிற்கு பெரிய பாதிப்பு ஆகும்; அதையொட்டி அவை முன்னாள் சோவியத் ஒன்றியத்தித்தில் பரந்திருந்த எண்ணெய், எரிவாயு அளிப்பு தடங்களை தம் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரலாம் என்று நினைத்திருந்தன.

மாஸ்கோவிற்கு சில சலுகைகள் வணிகத்தில் கொடுப்பதின் மூலமும், ஐ.ஒ. சந்தைகளில் இடம் அளிக்கும் வகையில் திட்டமிட்ட ஆற்றல் சாசன வடிவமைப்பைப கொண்டு, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் இன்னும் கூடுதலான உறுதித்தன்மை உடைய ரஷ்ய ஆற்றல் இறக்குமதிகளை கொள்ளலாம் என்று எதிர்பார்த்து இருந்தது. ஐரோப்பிய அரசாங்கங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனி, மாஸ்கோவின் உறுதிப்பாட்டு ஆற்றல் கொள்களால் உளைச்சல் கொண்டு இன்னும் கூடுதலான நம்பகத்தன்மை வாய்ந்த வகையில் புட்டினுடன் உடன்பாடு காண, ரஷ்யாவை ஐரோப்பிய பெருவணிகத்தின் மேலதிக முதலீட்டுக்கு கதவுதிறந்து விடுகின்றன. ரஷ்யாவும் அந்நாட்டு உடைமையான மாபெரும் ஆற்றல் நிறுவனமான Gazprom இரண்டும் உக்ரைன், பேலரஸ் மற்றும் லித்துவேனியா ஆகியவற்றிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் எண்ணெய், எரிவாயு அளிப்பை நிறுத்தியுள்ளன; இதற்கு காரணம் விலைகளை அதிகரித்து, அரசியல் செல்வாக்கை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதாகும்; இந்நடவடிக்கைகள் மேலை ஐரோப்பிய ஆற்றல் நலன்களை அச்சுறுத்துகின்றன.

மே 11ம் தேதியன்று, ஐரோப்பிய ஒன்றியம், காஸ்பியன் பகுதியில் உள்ள எண்ணெய், எரிவாயு உற்பத்தி செய்யும் நாடுகளின் மூத்த பிரதிநிதிகளை போலந்து நகரான கிராகோவில் சந்தித்தது. இந்தக் கூட்டத்தை பயன்படுத்தி இப்பகுதியில் தன் நலன்களை பெறுவதற்கு ரஷ்ய முயற்சிகளை கடந்து முன்னேறலாம் என்று ஐ.ஒ. நம்பிக்கை கொண்டிருந்தது; அது ஐ.ஒ.விற்கு சமாரா உச்சி மாநாட்டிற்கு முன்னதாக கூடுதலான உரத்தைக் கொடுத்திருக்கும்.

ஆனால் அதற்கு மறுநாள் காஜக்ஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தானுடன் மாஸ்கோ கொண்ட உடன்பாடு ஐ.ஒ.வின் காலடியில் இருந்து சடுதியில் கம்பளத்தை அகற்றிவிட்டது. ஜேம்ஸ்டெளன் அறக்கட்டளையின் பகுப்பாய்வாளரான விளாடிமீர் சோகோர் மே 14 அன்று Eurasia Daily Monitor ல் துர்க்மன் நகரமான துர்க்மென்பாஷியில் வெளிவந்த அறிவிப்பு, "கிராகோ உச்சிமாநாட்டினுள் இருண்ட நிழலைக் கொண்டுவந்து" வாஷிங்டன் மற்றும் ஐ.ஒ. ஆகியவற்றின் காஸ்பியன் பகுதி முயற்சிகளை "அழிவில்" தள்ளியது என்று எழுதினார்.

துர்க்மன்பாஷியில் பேச்சுவார்த்தை நடத்திய ரஷ்ய, காஜக் மற்றும் துர்க்மன் தலைவர்கள் காஸ்பியன் கடலோர எரிவாயு குழாய்த்திட்டம் செப்டம்பர் 1, 2007ல் கையெழுத்திடப்படும் என்றும் பணிகள் 2008 பிற்பகுதியில் தொடங்கும் என்றும் அறிவித்தனர். உஷ்பெக்கின் ஜனாதிபதி இஸ்லாம் கரிமோவுடன் முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றொரு அறிவிப்பில், மூன்று நாடுகளும் மிகப் பெரிய அளவில் இப்பொழுது இருக்கும் சோவியத் கால குழாய்த்திட்டங்கள், துர்க்மன் எரிவாயுவை ரஷ்யாவிற்கு உஸ்பெகிஸ்தான், காஜக்ஸ்தான் மூலம் எடுத்துச் செல்லுபவை, உயர்ந்த தொழில்நுட்பத்திற்கு உயர்த்தப்படும் என்றும் கூறினர்.

இந்த உடன்பாடு காஸ்பியன் பகுதியில் இருந்து 90 பில்லியன் கன மீட்டர்கள் எரிவாயு ரஷ்யாவிற்கு செல்லுவதற்கு வகை செய்யும்; அது தற்போதைய தரங்களில் 80 சதவிகிதம் உயர்வு ஆகும்.

ரஷ்ய நலன்கள் இப்பொழுது இன்னும் வலுவான நிலையில் முக்கியமான எண்ணெய், எரிவாயு இவற்றை ஐரோப்பா மற்றும் உலகச் சந்தைகளுக்கு அளிப்பதில் உள்ளது; இதை கிரெம்ளின் பயன்படுத்தி தன் போட்டியாளர்களைவிட அதிக ஆணைகள் இடும் முயற்சியில் ஈடுபடும். காஸ்பியனுக்கு அப்பால் ஒரு குழாய்ப்பாதை திட்டம் அஜர்பைஜானில் பாக்குவிலிருந்து ஜோர்ஜியா மூலம் துருக்கிய துறைமுகமான சேகனுக்கு - ரஷ்யாவை ஒதுக்கிச் செல்லும் நோக்கம் கொண்டது -- இப்பொழுது உபயோகமற்றதாக போய்விட்டது; BBC பகுப்பாய்வாளரான Natalia Antelava, "இது துர்க்மெனிஸ்தானின் பரந்த இயற்கை எரிவாயு வளங்களை நேரடியாக பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த, "வாஷிங்டன், பிரஸ்ஸல்ஸ் மற்றும் பெய்ஜிங்கிற்கு மாபெரும் அதிரடியாகும்" என்று கூறியுள்ளார்.

ரஷ்யாவின் ஆற்றல் மந்திரியான விக்டர் கிறிஸ்டெங்கோ, மே 12 அன்று குறிப்பிட்டார்: "இன்றைய தேதிவரை, காஸ்பியனுக்கு அப்பால் எரிவாயுக் குழாய்த்திட்டம் என்பது இயங்கவில்லை". ஆனால் அத்தகைய திடீர்த்தாக்குதலுடன் ரஷ்யா தப்பியோடுவதை அனுமதிப்பதில் ஐ.ஒ. மற்றும் வாஷிங்டன் இரண்டும் இப்பகுதியில் கூடுதலான இடரில் இருக்கின்றன. பாகு-டிபிலிஸ்ட்-சேகன் குழாய்த்திட்டம் மேற்கின் ஆற்றல் கொள்கையின் மத்திய காட்சி ஆகும்; இதன் மதிப்பு பல பில்லியன் டாலர்கள் ஆகும்; இது ரஷ்யாவை சூழ்ச்சியால் வெல்வதற்கும் அதன் உலகாற்றல் செல்வாக்கை குறைப்பதற்கும் முக்கியமானது ஆகும். துர்க்மேன் ஜனாதிபதி Kurbanguly Berdymukhamedov மற்றும் கசாக் தலைவர் நூர்சுல்த்தான் நஜார்பேவ் இருவரும் மாஸ்கோவில் இவ்வுடன்பாட்டில் கையெழுத்திட்டாலும், தங்கள் குழாய்த்திட்டங்களுக்காக ஐ.ஒ. மற்றும் அமெரிக்காவிற்கு அவர்கள் கதவைத் திறந்துதான் வைத்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா இரண்டிற்கும் இடையே மனித உரிமைகள் பற்றி பெரும் ஆரவார பூசல்கள் இருந்தாலும், மாஸ்கோ, பிரஸ்ஸல்ஸ் இரண்டுமே கரிமொவ் மற்றும் Berdymukhamedov ஆகியாரின் மத்திய ஆசிய கொடுங்கோலாட்சிகளுடன் உடன்பாடு காண்பதற்கு பெரும் ஊக்கத்துடன் முயன்றுவருகின்றன; Berdymukjhamedov உண்மையில் மறைந்துவிட்ட கொடுங்கோலன் Saparmurat Niyazov இடமிருந்து பதவியை, பலரும் விமர்சித்துள்ள முடிவு செய்யப்பட்ட தேர்தல் என பரவலாக அங்கீகரிக்கப்படும் தேர்தலின் மூலம் எடுத்துக் கொண்டவர் ஆவார். ஜனநாயக உரிமைகள் மீறல் பற்றி புட்டினை குறைகூற மேர்க்கெல் தயாராக இருந்தார்; ஆனால் ஈராக்கிற்கு எதிரான போரில், அதுவும் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளின் நலன்கள் என வரும்போது, அமெரிக்காவிற்கு அவர் கொடுத்த ஆதரவு அத்தகைய உரிமைகள்பால் அவர் கொண்டுள்ள அவமதிப்பைத்தான் எடுத்துக் காட்டுகிறது.