World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

More Chrysler locals reject UAW contract betrayal

ஐக்கிய கார்த்தொழிலாளர் சங்க ஒப்பந்த காட்டிக்கொடுப்பை கூடுதலான பிராந்தியப்பிரிவுகள் நிராகரிக்கின்றன

By Jerry White
22 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஆறு பெரிய பிராந்திய தொழிற்சங்கப் பிரிவுகள், ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கமும் (UAW) கிறைஸ்லர் LLC உம் செய்துகொண்டுள்ள தற்காலிக உடன்பாட்டை நிராகரித்து வாக்களித்துள்ளன. இதே விகிதத்தில் எதிர்ப்பு தொடர்ந்தால், ஒப்பந்தம் தோல்வி அடையும். 1982ல் தொழிலாளர்கள் ஒப்பந்தத்தை நிராகரித்ததன் பின்னர் இதுதான் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தின் முதல்முதலான நாடுதழுவிய தோல்வியாக இருக்கும்; 1982ல் கிறைஸ்லர் தொழிலாளர்கள் 1979-80ல் கிறைஸ்லர் தப்பிப்பிழைப்பதற்காக விட்டுக்கொடுத்திருந்த இழப்புக்களை மீண்டும் பெறுவதற்காக போராடியிருந்தனர்.

ஞாயிறன்று டெட்ராயிட்டில் உள்ள ஜெபர்சன் நோர்த் ஆலையில் கொடுக்கப்பட்ட "வேண்டாம்" வாக்கு ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க அதிகாரத்துவத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் ஒரு தாக்குதல் ஆகும். உயர்மட்ட தொழிற்சங்க அதிகாரிகள், ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க தலைவர் ரோன் கெட்டில்பிங்கர், துணைத் தலைவர் தளபதி ஹோலிபீல்ட் போன்றோர் நேரடியாக அந்த ஆலையில் "வேண்டும்" என வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்திருந்தனர். தொழிற்சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தகவல்படி, ஆலையின் இரண்டாம் சுற்றுவட்டவேலை விரைவில் நிறுத்தப்பட்டுவிடும் என்று ஹோலிபீல்ட் அறிவித்தார். கிறைஸ்லரின் போட்டியிடும் தன்மையை அதிகரிக்கும் ஒப்பந்தத்திற்கு அவர்கள் இசைவு கொடுக்காவிட்டால் தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் வேலைகளை பெறுதல் மிகக் கடினம் என்றும் அவர் அச்சுறுத்தினார்.

இந்த ஒப்பந்தம் கிறைஸ்லருடைய உரிமையாளர்களான செர்பெரஸ் முதலீட்டு நிர்வாகம் என்னும் தனியார் பங்கு நிறுவனம் ஆலைகளை மூடவும், விற்கவும் கடுமையான ஊதிய பிற நலன்கள் சலுகைகளை குறைத்து சுமைகளை அதிகரிக்கவும் திட்டங்களை விரைந்து செயல்படுத்த உதவும். இதற்கு ஈடாக ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க அதிகாரத்துவம் அமெரிக்காவிலேயே தனியார் முதலீட்டு நிதியங்கள் பெரியவற்றில் ஒன்றான, ஒரு பல பில்லியன் ஓய்வு பெற்றோர் சுகாதாரப் பாதுகாப்பு அறக்கட்டளை நிதியமான VEBA மீது கட்டுப்பாட்டை கொள்ளும்.

ஜெபர்சன் ஆலை தொழிலாளர்களிடையே இந்த ஒப்பந்தம் பற்றி பரந்த எதிர்ப்பு இருந்தது; சிலர் கையால் தயாரிக்கப்பட்ட "வேண்டாம் என வாக்குப் போடுக" என்ற பதாகைகளை ஏந்திச் சென்றனர். 1,100 உற்பத்திப் பிரிவுத் தொழிலாளர்களில் 57 சதவிகிதத்தினரும் 195 திறமைப் பயிற்சி பெற்றவர்களில் 79.5 சதவிகிதத்தினரும் ஒப்பந்தத்தை எதிர்த்தனர் என்று சங்கம் கூறியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள் தொழிலாளர்களை பேட்டி கண்டு ஜெபர்சன் நோர்த் ஆலையில் ஒப்பந்தத்திற்கு எதிரான அறிக்கைகளையும் வினியோகித்திருந்தனர். (See "Detroit autoworkers speak out against UAW-Chrysler contract")

Jeep Grand Cherokee, Jeep Commander ஆகியவற்றைத் தயாரிக்கும் டெட்ராயிட் ஆலை 2,200 தொழிலாளர்களைக் கொண்டது; வியாழனன்று வாக்களிப்பு தொடங்கியதில் இருந்து ஒப்பந்தத்தை நிராகரிக்கும் நான்காம் பெரிய இணைப்பு ஆலை இதுவாகும்.

சனிக்கிழமை அன்று, St.Louis (South) உள்ள ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க பிராந்திய பிரிவு 110 இன் இணைப்புப் பிரிவு ஆலையும் ஒப்பந்தத்தை நிராகரித்தது. ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க பிராந்தியப்பிரிவு 136 இன் சகோதர ஆலையான St.Louis (North) இணைப்பு ஆலையும் ஒப்பந்தத்தை 81 சதவிகித வித்தியாசத்தில் நிராகரித்து வாக்களித்தது. Local 1183 தொழிலாளர்களில் 54 சதவிகிதத்தினரான, 2009ல் மூடப்பட இருக்கும் நெவார்க், டிலாவரில் இருக்கும் ஆலையில் உள்ளவர்களும் ஒப்பந்தத்தை நிராகரித்து வாக்களித்தனர்.

ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் Jefferson வடக்கு மற்றும் St.Louis North இரு ஆலைகளிலும் ஒப்பந்தம் ஆதரவைப் பெற்று விடும் என்று நம்பியிருந்தனர்; 2011 ல் அடுத்த ஒப்பந்தம் முடிந்த பின் புதிய தயாரிப்புக்கள் உற்பத்தியாகும் சில ஆலைகள் என்று கிறைஸ்லர் குறிப்பிட்டிருந்தவற்றில் இவ்விரண்டும் அடங்கும்.

ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க பிராந்தியப் பிரிவு 122 லும் ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டது; அது ஓகையோ ட்வின்பர்க்கில் உள்ள வாகன வெளித்தகடு தயாரிக்கும் தொழிற்சாலை தொழிலாளர்களை பிரதிபலிக்கிறது; வாக்களித்தவர்களில் 53 சதவிகிதத்தினர் "வேண்டாம்" என வாக்களித்தாக பிராந்தியப்பிரிவின் வலைத்தளம் தெரிவிக்கிறது. டெட்ராயின் axle ஆலைத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும், ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க பிராந்தியபிரிவு 961ல் வாக்களித்த தொழிலாளர்களில் 54 சதவிகிதத்தினர் ஒப்பந்தத்தை நிராகரித்தனர்.

11,000 தொழிலாளர்களுக்கும் மேலானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குறைந்தது ஆறு பிராந்திய பிரிவுகளாவது தொழிற்சங்கத்திற்கும் கார்த்தயாரிப்பாளருக்கும் இடையே கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளனர்; 6,500 தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு பிரிவுகளேனும் அதை ஏற்றுக் கொண்டுள்ளதாக டெட்ராயிட் நியூஸ் தெரிவிக்கிறது. மிஷிகனில் உள்ள டிரென்டன், ஓகையோவில் உள்ள பெரிஸ்பேர்க், விஸ்கோன்சினில் உள்ள மிலுவாகி, கெனா மற்றும் ஜோர்ஜியாவில் உள்ள மோரா ஆகிய பிராந்திய சிறு பிரிவுகள் ஒப்பந்தத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளன.

உடன்படிக்கை நிறைவேறுவதற்கு கிறைஸ்லரின் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்கள் 45,000 பேரில் பெரும்பாலானவர்கள் "வேண்டும்" வாக்கை அளிக்க வேண்டும். Detroit Free Press இடம் கிறைஸ்லர் நிர்வாகி ஒருவர் டெட்ராயிட்டில் உள்ள ஜெபர்சன் வடக்கு இணைப்புப் பிரிவு, மற்றும் இவ்வாரம் வாக்கெடுப்ப நடைபெற உள்ள Belvidere, Illinois, Sterling Heights, Mischigan ஆகிய இரு இணைப்பு ஆலைகளில் ஒப்பந்தம் தோல்வியுற்றால், "எங்களுக்குப் பெரும் தொந்திரவு ஆகும்" என்று கூறினார்.

பிராந்திய தலைவர்கள் ஒருமனதாக ஆதரவு கொடுத்த நிலையிலும் ஜெனரல் மோட்டார்ஸின் ஒப்பந்தத்திற்கு மாறாக, பரந்த எதிர்ப்பை எதிர்கொண்ட நிலையில் பல பிராந்திய தொழிற்சங்கத் தலைவர்கள் கிறைஸ்லர் ஒப்பந்தத்தை எதிர்த்துள்ளனர். ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க அதிகாரத்துவம் தன்னுடைய உறுப்பினர்களிடையே எழுந்துள்ள எதிர்ப்பை அடக்குவதற்கு விரைவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அக்டோபர் 17ம் தேதி ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஹோலிபீல்ட் சர்வதேச தொழில் சங்கத்தின் ஒப்புதலை நியமனங்களுக்காக நம்பியிருப்பவர்களுக்கு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு என்பது அவர்களுடைய நல்ல ஊதியம் கிடைக்கும் வேலை இழப்புக்கள் என்பது மட்டும் அன்றி மீண்டும் இணைப்பு ஆலையில் சேரவேண்டியிருக்கும் என்று ஒரு கடிதத்தில் பிராந்திய அதிகாரிகளுக்கு எழுதித் தெளிவாக்கியுள்ளார். "சர்வதேச தொழிற்சங்கம் இந்த தற்காலிக ஒப்பந்தத்திற்கு அனைத்து நியமிக்கப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளும் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு ஆதரவைத் தரவேண்டும்" என்று கடிதத்தின் ஒரு பகுதி கூறுகிறது; மேலும், "நீங்கள் இக்கடிதத்தின் பொருளுரை, முக்கியமான கருத்துக்கள் ஆகியவற்றை நன்கு அறிந்து கொண்டு உங்களுக்கு ஆதரவு தரும் வகையில் தொழிலாளர்களை நாடவேண்டும்." கடிதம் முடியும்போது, "இக்கடிதத்திற்கு பதில் எழுதவும்; இந்த தற்காலிக உடன்பாட்டிற்கு ஒப்புதலை உங்கள் கையெழுத்திட்டு பிராந்திய பிரிவின் எண்ணும் குறிக்கப்பட வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

New York Times, தொழிற்சங்கத் தலைவர்கள் "இந்த வாக்களிப்பு முடிவதற்கு முன் சிலவற்றை செய்ய முடியும். உள்ளூர்த் தலைவர்களை ஒப்பந்தத்திற்கு இசைவு கொடுக்குமாறு ஏற்கனவே அதிகாரிகள் செல்வாக்கை பயன்படுத்துகின்றனர். சில ஒப்பந்த விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை என்ற நிலையில், தொழிற்சங்கமும் நிர்வாகமும் உத்தரவாதங்கள் கொடுக்கலாம் அல்லது குறிப்பிட்ட ஆலைகளுக்கு சில வசதிகளை கொடுத்து தங்களுக்கு சாதகமான வகையில் வாக்குப் பெறுதலைக் கொள்ளலாம்." இதில் Belvidere, Illinois இணைப்பு ஆலைகளில் பணி புரியும் தற்காலிக தொழிலாளர்களுக்கு $3,000 டாலர் போனஸ் வழங்கப்படலாம்; அங்கு பரந்த எதிர்ப்பு உள்ளது; ஜெனரல் மோட்டர்சில் தற்காலிக தொழிலாளர்களை போல் அங்கு முழுநேரத் தொழிலாளர்கள் நியமிக்கப்படுவதில்லை.

இன்னும் தீயவகையில், நியூ யோர்க் டைம்ஸ் தகவல் கூறுகிறது: "ஒப்பந்தம் தோல்வியை சந்திக்கும் என்றால், தொழிற்சங்கம் வாக்கெடுப்பு நடத்துவதை நிறுத்திவைத்து, போர்ட் இல் உடன்பாடு காணும் நம்பிக்கையுடன் அங்கு செல்லலாம்." இத்தைய ஜனநாயக விரோத முறைகள் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்திற்கு தெரியாத புதிய பழக்கம் இல்லை; ஏனெனில் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் தொழிலாளர்களுக்கு முற்றிலும் பொறுப்புக் கூற தேவையற்ற அதிகாரத்துவத்தினால் அது கட்டுப்படுத்தப்படுகிறது.

தற்பொழுது ஒப்பந்தத்தை எதிர்க்கும் தொழிற்சங்க அதிகாரிகள் சில போலியான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு ஒரு புதிதாகப் பேச்சுவார்த்தைகள் மூலம் வரவிருக்கும் ஒப்பந்தத்திற்கு ஆதரவு கொடுக்க விரும்பக்கூடும். ஒப்பந்தத்தினை முக்கியமாக எதிர்ப்பவர் பில் பார்க்கர் ஆவார்; இவர் ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தைகள் நடத்திய ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க கிறைஸ்லர் குழுவின் தலைவரும் Sterling Heights இன் பொருத்தும் ஆலையின் பிராந்தியப்பிரிவு 1700ன் தலைவரும் ஆவார். ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய கொள்கை பிரிவுடன் நீண்ட காலமாக தொடர்பு கொண்டுள்ள பார்க்கர் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க தலைவர் ரோன் கெட்டில் பிங்கரை ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் ஜெனரல் மோட்டார்ஸ் உடன்பாட்டில் தான் செய்தது போல் வருங்காலத்தில் வேலைகளுக்கான போதிய உத்தரவாதத்தை கிறைஸ்லர் ஆலைகளில் பெற்றுக் கொடுக்கும் வகையில் செயல்படாததற்காக குறைகூறியுள்ளார்.

உண்மையில் இத்தகைய உறுதி உத்தரவாதங்கள் சிறிதும் மதிப்பற்றவை. எந்த புதிய உற்பத்திப் பொருளும் "சந்தை நிலவரங்களுடன்" பிணைந்துள்ளது. ஆலைகளை மூடுவதற்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்புவதற்கும் ஜெனரல் மோட்டார்ஸிற்கு கணக்கிலடங்கா தப்பித்துக் கொள்ளும் வழிகள் உள்ளன. ஜெனரல் மோட்டார்ஸ் ஒப்பந்த்தை ஏற்றுக்கொண்டபின்னர், நிறுவனம் Detroit/Hamtramck and Pontiac சரக்குவண்டி இணைப்பு ஆலைகளில் இரண்டாம் சுற்றுவட்டவேலையை இல்லாதொழிக்க உள்ளது என்ற அறிவிப்புக்கள் வெளிவந்தது இதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; அந்த இரு ஆலைகளுக்கும் இங்கு புதிய பொருட்களை உற்பத்திசெய்யும் உறுதிமொழி கொடுக்கப்பட்டிருந்தன; ஆனால் அறிவிப்பை தொடர்ந்து 1,600 தொழிலாளர்கள் கால வரையற்று பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தில் இருக்கும் மற்ற எதிர்ப்பாளர்களும், பார்க்கரும் Solidarity House அதிகாரத்துவத்திற்கு எவ்வித உண்மையான மாற்றீட்டையும் கொடுக்கவில்லை. பிரச்சினை ஒன்றும் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தை சீர்திருத்துவது அல்ல. VEBA திட்டத்துடன் அது இப்பொழுது ஒரு இலாபம் சம்பாதிக்கும் வணிகமாக மாறிவிடும்; பிரச்சினை இந்த காலம் கடந்துவிட்ட அமைப்புடன் முறித்துக் கொள்ளுவதுதான்.

ஒப்பந்தத்தை நிராகரித்தல் என்பது முதல் கட்டம்தான். ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தின் கரங்களில் இருந்து ஒப்பந்தத்திற்கான போராட்டம் அகற்றப்பட்டு, தொழிலாளர்கள் குழுக்கள் தொழிலாளர்கள் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் பணி நிலைமையைக் காப்பதற்கான போராட்டங்களை தொடக்க வேண்டும். ஒரு நாடுதழுவிய கார்த் தொழிலாளர் வேலைநிறுத்தும் தொடக்கப்பட்டு ஜெனரல் மோட்டர்ஸ், போர்ட், டெல்பி, விஸ்ரியோன் மற்றும் பிற தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் வகையில் பிரச்சாரம் வேண்டும்; கனடா, இலத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா என்று உலகம் முழுவதிலும் கார்ப் பெருநிறுவனங்களால் இதேபோன்ற தாக்குதல்களை எதிர் நோக்கியுள்ள கார்த் தொழிலாளர்களைக்கும் அறைகூவல் விட வேண்டும்.

தொழிலாளர்களின் நிலைமைகள், உரிமைகளின் பாதுகாப்பு ஒரு முற்றிலும் புதிய அடிப்படையில் வளர்ச்சியுற வேண்டும். இதன் பொருள், எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை கட்டமைப்பது ஆகும்; அது பெருவணிக இரு கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக இருக்க வேண்டும்; இலாபங்களுக்காக அல்லது உயர்நிர்வாக அதிகாரிகளின் பங்குப் பெருக்கங்களுக்காக அல்லது வோல்ஸ்ட்ரீட் ஊகவணிகக்காரர்களுக்காக என்று இல்லாமல் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டத்தில் இருந்து தொடங்க வேண்டும்.