World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

UAW moves to prevent defeat of Chrysler contract

கிறைஸ்லர் ஒப்பந்தம் தோல்வியடைவதை தடுக்க ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் முயற்சிக்கின்றது

By Jerry White
25 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

இக்கட்டுரையை பிரசுரத்திற்கு அனுப்புகையில், ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்திற்கும் அமெரிக்காவில் மூன்றாம் இடத்தில் உள்ள அமெரிக்க கார்த்தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள தற்காலிக ஒப்பந்தத்தின் கிறைஸ்லரின் Sterling Heights பொருத்தும் ஆலையில் வாக்கெடுப்பு இன்னமும் அறிவிக்கப்படவில்லை. டெட்ராயிட் புறநகரில் உள்ள இந்த பிரிவு அதை நிராகரித்தால் அது ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க அதிகாரத்துவத்திற்கு பெரும் அடியாக இருக்கும் என்பதுடன் ஒப்பந்தத்திற்கு இயைந்துபோவதற்கு அனைத்து தொழிலாளர்களும் பெரும்பான்மையுடன் "வேண்டாம்" என வாக்களிக்க முடிவெடுக்க இட்டுச்சென்றுவிடும்.

ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க பிராந்திய 1700 பிரிவு வாக்கெடுப்பு ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தின் கடுமையான பிரச்சாரத்திற்கு நடுவே வந்துள்ளது--ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்திற்கு ஆதரவாக டெட்ராயிட்டின் செய்தி ஊடகம் உள்ளது; இன்னும் வாக்களிக்காத நிலையில் ஒப்பந்தம் எப்படியும் ஏற்றுக்கொள்ளச்செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் விழைகிறது.

இந்த ஒப்பந்தம் கிறைஸ்லரின் வோல்ஸ்ட்ரீட் உரிமையாளர்களான தனியார் பங்கு நிறுவனமான செர்பெரஸ் முதலீட்டு நிர்வாகத்திற்கு டஜன் கணக்கான ஆலைகளை இழுத்து மூடும் திட்டத்தை விரைவில் செய்வதற்கு ஒரு பச்சை விளக்கை காட்டுகிறது. முன்பு அறிவிக்கப்பட்டிருந்த 15,000 மணித்தியால மற்றும் மாதாந்த சம்பளம் பெறும் தொழில்வெட்டுக்கள் வெறும் ஆரம்பம்தான். தலைமை நிர்வாகம் ஏற்கனவே குறைந்தது ஐந்து வாகன மாதிரிகளை அகற்றிவிடுவது பற்றி விவாதித்துள்ளனர்.

இதைத்தவிர, ஒப்பந்தம் வருங்கால தொழிலாளர்களின் ஊதியங்களை பாதியாகக் குறைக்கும்; தற்போதைய தொழிலாளர்களின் ஊதியங்களை உறைய வைத்துவிடும்; முதலாளிகள் கொடுக்கும் ஓய்வூதிய சுகாதாரப் பாதுகாப்பு செயற்பாடுகளை அகற்றிவிடும். இப்படி வேலைகள், ஊதியங்கள், நலன்கள் என கார்த்தொழிலாளர்களின் சலுகைகளை அகற்றப்படுவதற்கு ஈடான ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் பல பில்லியன் மதிப்புள்ள ஓய்வூதிய சுகாதாரக்காப்பு அறக்கட்டளை நிதி, (Voluntary Employees' Beneficiary Association -VEBA) மீது கட்டுப்பாட்டை பெறுவதன் மூலம் அமெரிக்காவில் மிகப் பெரிய தனியார் முதலீட்டு நிதிகளின் ஒன்றின்மீது உரிமையாளராகும்.

கிறைஸ்லரின் அமெரிக்க தொழிலாளர்களில் 20 சதவிகிதத்தினர் பணிபுரியும் ஆலைகளான நான்கு டெட்ராயிட் பகுதி ஆலைகளில் புதனன்று வாக்கெடுப்பிற்கு முன்னதாக, உயர்மட்ட தொழிற்சங்க அதிகாரிகள் ஒப்பந்தத்திற்காக பிரச்சாரம் செய்வதற்கு ஆலைகளின் தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களும் துண்டுப்பிரசுரங்களும் ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களை கண்டித்து "தவறான தவகல்கள் கொடுக்கப்படுகின்றன" எனக் கூறுவதுடன் இந்த ஒப்பந்தம் வேலைகளை பாதுகாக்கும் என்ற பொய்யையும் வளர்த்துள்ள வகையில் வெளியிடப்பட்டுள்ளன.

டெட்ராயிட் செய்தி ஊடகம் இந்த முயற்சியில் சேர்ந்து கொண்டது; கார்த் தொழில் ஆய்வாளர்கள் இந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் அது இன்னும் மோசமான ஒப்பந்தத்திற்குத்தான் வழிவக்கும் என்று தொழிலாளர்களிடன் தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் செர்பெரஸ் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் வகையில் விடையிறுக்கும் என்றும், இன்னும் சிலர் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் ஒப்பந்தம் பற்றி மறு பேச்சுவார்த்தைகள் நடத்தாமல் மற்றொரு வாக்களிப்பிற்கு ஏற்பாடு செய்யும் என்று கூறுகின்றனர்.

Warren Truck, Warren Stamping plants, Sterling Heights Stamping plants ஆகியவற்றின் தொழிலாளர்களை பிரநிதித்துவப்படுத்தும் டெட்ராயிட் பகுதியில் மூன்று பிராந்தியப்பிரிவுகள் இவ்ஒப்பந்தத்திற்கு பெரும் வித்தியாசத்தில் ஒப்புதல் கொடுத்துள்ளன. இதன் பின்னர், Warren Truck பிரிவு 140ன் தலைவர் வாக்கெடுப்பு நடத்தினார்; இதில் 60 சதவிகிதத்திற்கும் குறைவான உறுப்பினர்கள் பங்கு பெற்றனர்; "மிகப் பெரும் வெற்றி கிடைத்தது" எனக் கூறப்பட்டது.

Kokomo, Indiana வில் உள்ள மூன்று இடம்மாற்றும் ஆலைகளின் 4500 தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் மிகப் பெரிய கிறைஸ்லர் பிராந்தியபிரிவுத் தொழிலாளர்கள் ஒப்பந்தத்திற்கு பெரும் தோல்வியை கொடுத்த மறுநாள் டெட்ராயிட் பகுதி வாக்குகள் பதிவாயின. ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க பிராந்தியப் பிரிவு 685ல் இருந்து வாக்களித்த 3,159 தொழிலாளர்களில் 72 சதவிகிதத்தினர் "வேண்டாம்" வாக்குகளை அளித்தனர் என்று உள்ளூர் தொழிற்சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அருகில் இருக்கும் Kokomo Casting ஆலையின் 751 தொழிலாளர்களில் 78 சதவிகிதத்தினர் ஒப்பந்தத்தை நிராகரித்தனர் என்று ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த பிராந்தியப்பிரிவில் 800 தொழிலாளர்கள் இருந்தனர்.

புதன்கிழமை மாலை வரையில், மிஷிகன், மிசெளரி, டிலாவர் ஆகியவற்றில் இருக்கும் நான்கு பெரிய இணைப்பு ஆலைகளின் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குறைந்தது ஒன்பது பிராந்தியப்பிரிவுகள் ஒப்பந்தத்தை நிராகரித்துவிட்டன. மொத்தத்தில் இந்த பிராந்தியப்பிரிவுகள் 16,500 தொழிலாளர்களுக்கும் மேலானவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. 19,5000 தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குறைந்தது 20 பிராந்தியப் பிரிவுகளாவது, பல சிறு பிரிவுகள் உட்பட இதனை ஏற்றுள்ளன. ஸ்டெர்லிங் ஹைட்ஸ் ஆலைகளை ஒப்பந்தத்தை எதிர்பார்த்தபடி நிராகரித்தால் இடைவெளி கணிசமாக குறைந்தும்; இப்பிராந்தியப்பிரிவு வாக்குகள் 19.000 தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும்.

ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு, ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தின் தகுதியான 45,000 உறுப்பினர்களில் வாக்களிப்பவர்களில் ஒரு சாதாரண பெரும்பான்மை ஒப்புதல் தெரிவிக்க வேண்டும்.

கடைசி முக்கிய வாக்கு வெள்ளி மற்றும் சனியன்று இலிநோய்யில் உள்ள Belvidere இணைப்பு ஆலையில் நடைபெறும். ஒப்பந்தத்தை பிராந்திய தலைமை எதிர்த்துள்ளது; இதற்கு எதிராக ஆழ்ந்த எதிர்ப்புணர்வு உள்ளது; குறிப்பாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் முழுநேர தொழிலாளர்களாக நியமனம் செய்யப்படாத நூற்றுக்கணக்கான தற்காலிக ஊழியர்களிடையே அந்த உணர்வு உள்ளது. ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க-ஜெனரல் மோட்டர்ஸ் ஒப்பந்தத்தின் விதிகளின்படி, கிட்டத்தட்ட 4,000 தற்காலிக ஊழியர்கள் முழுநேர வேலைக்கு உறுதியளிக்கப்பட்டனர்; ஆனால் அவர்கள் 70 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாகத்தான் மரபார்ந்த விகிதத்தில் பெறுவர்; அதேபோல் குறைந்த தரமுடைய சுகாதாரப் பாதுகாப்பையும் பெறுவர்.

ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் பல வாக்களித்த பிராந்தியப் பிரிவுகளின் "வேண்டும்", மற்றும் "வேண்டாம்" என வாக்குகளில் விகிதாசாரத்தைத்தான் வெளியிட்டுள்ளது; எதிராகவும், ஆதரவாகவும் விழுந்த உண்மையான வாக்கு எண்ணிக்கையை வெளியிடவில்லை. சில பிராந்தியப் பிரிவுகளின் விகிதாசாரங்களை கூட வெளியிடவில்லை.

ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க அதிகாரத்துவத்தின் அடாவடி தந்திரோபாய மற்றும் தனது உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகள் பற்றிய இகழ்வான தன்மையும் தெரிந்த நிலையில், ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் கொடுத்துள்ள எந்த புள்ளிவிவரங்களும் அப்படியே எடுத்துக் கொள்ளப்பட முடியாதவை ஆகும்.

ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால், 1982ல் கிறைஸ்லர் தொழிலாளர்கள் நிராகரித்ததற்கு பின்னர் வரும் முதல் தேசிய கார்த்தொழில் ஒப்பந்த நிராகரிப்பு என்பதாகும். 1979-80ல் தாங்கள் பாடுபட்டுப் பெற்றிருந்த ஊதியங்கள் நலன்கைளை மீண்டும் பெறுவதற்காக, கிறைஸ்லர் தப்பிப் பிழைப்பதற்காக தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுவந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டிருந்தது. நிராகரிப்பிற்கு பின்னர் அப்பொழுது ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் தலைவராக இருந்த Douglas Fraser, அப்பொழுது நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இருந்தவர், தொழிலாளர்களை ஒரு "மாற்றத்திற்குட்படுத்தப்பட்ட" ஒப்பந்தத்தில் மீண்டும் கையெழுத்திடுமாறு வலியுறுத்தினார்; அது கிறைஸ்லருக்கு $1.1 பில்லியன்களை விட்டுக்கொடுத்தது; கிட்டத்தட்ட ஒரு தொழிலாளி $10,000 விட்டுக்கொடுத்தார்.

பிராந்தியப்பிரிவு 1700 தலைவர் பில் பார்க்கர் வெளிப்படையாக புதிய ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளார்; தற்காலிக ஒப்பந்தம் 2011ல் காலாவதியாவதை அடுத்து அவருடைய ஆலை மற்றும் பலவும் வருங்கால உற்பத்தியில் என்ன பங்கைக் கொள்ளும் என்பது பற்றி கிறைஸ்லர் உறுதி கொடுக்காததை அடுத்து இந்த முடிவை அவர் கொண்டுள்ளார். ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் தலைவர் ரோன் கெட்டில்பிங்கர் மீண்டும் ஒப்பந்தத்தின்மீது பேச்சுவார்த்தைகள் நடத்தி அவற்றில் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம்-ஜெனரல் மோட்டர்ஸில் ஒப்பந்தத்தில் இருக்கும் வேலைப்பாதுகாப்பு பிரிவுகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும், ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க தலைமை "இப்பிரச்சினை பற்றி தனியே செல்ல விரும்பினால், பொது உறுப்பினர்கள் மட்டும் இல்லாமல், பிராந்திய தலைமையையும் அது பெரிதும் திருப்திப்படுத்தும்" என்று கூறியுள்ளார்.

உண்மையில் ஜெனரல் மோட்டர்ஸ் ஒப்புக் கொண்டுள்ள வேலை உறுதிப்பாடுகள் முற்றிலும் "சந்தை நிலைமைகளை" ஒட்டித்தான் இருக்கும். 25 ஆண்டுகாலமாக நடைபெறும் முந்தைய ஒப்பந்தங்கள் எப்படி உண்மையாக இருந்தனவோ அப்படித்தான் இவையும் இருக்கும்; அவற்றில் 60,000 ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் உறுப்பினர் வேலையிழப்புக்கள் மூன்று பெரிய அமெரிக்க கார்த்தயாரிப்பு நிறுவனங்களில் ஏற்பட்டன. ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம்-ஜெனரல் மோட்டர்ஸ் ஒப்பந்தம் இசைவு பெற்ற இரு வாரங்களில் ஜெனரல் மோட்டர்ஸ் டெட்ராயிட், பான்டியாக் மற்றும் லான்சிங்கில் இருக்கும் ஆலைகளில் இரண்டாம் சுற்றுவேலைகள் அகற்றப்பட்டுவிட்டதாக அறிவித்துள்ளது; இதையொட்டி 2,600 தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை இழந்தனர்.

பிராந்தியப்பிரிவு 1700 இன் வாக்கெடுப்பிற்கு முன், ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க துணை தலைவரான கிறைஸ்லர் பிரிவிற்கு பொறுப்பாக இருக்கும் ஹோலிபீல்ட் உள்ளூர் தலைவர்களிடம் Sterling Heights பொருத்தும் ஆலை தொழிற்சங்கமும் நிர்வாகமும் கொண்டுள்ள வெளியிடப்படாத முந்தைய "இரகசிய" உடன்பாடு ஒன்றின்படி 2016 வரை உற்பத்தி செய்யும் உறுதியை பெறும் என்று கூறினார்.

உலக சோசலிச வலைத் தளத்திடம் தொழிலாளர்கள் புதனன்று Sterling Heights இணைப்பு ஆலையில் வாக்கெடுப்பு நடைபெறும்போது பேட்டி கொடுத்தனர். எட்டு ஆண்டுகள் பணி புரிந்துள்ள ஒரு தொழிலாளி கூறினார்: "இந்த முக்கிய (core), முக்கியமற்ற (non-core) பிரிவினை பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன்; அதைத்தான் தெளிவாக்குங்கள் என்கிறேன். அதிக ஊதியம் கொடுக்கப்படும் அனைத்து முக்கிய தொழிலாளர்களையும் பணி நீக்கம் செய்து விடுவார்களா, அல்லது டெல்பியில் செய்தது போல் அனைவரையும் குறைவூதியத்திற்கு வேலை செய்யச் சொல்வார்களா? மோபர் உதிரிபாகத்தயாரிப்பு தொழிலாளர்கள் முக்கியமற்ற ஊதியங்களில் வேலை செய்தது போல் செய்ய நான் தயாராக இல்லை."

மற்றொரு தொழிலாளர் கூறினார்: "இது பணப் பிரச்சினை மட்டும் அல்ல; இது நமக்கு வேலை உறுதியாக உள்ளதா என்பது பற்றியும் ஆகும். இங்கு நான் எட்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன். அடுத்த இருபது ஆண்டுகளுக்கு என்னுடைய வேலை இங்கு உறுதியாக இருக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்."

மற்றொரு தொழிலாளி "செர்பெரஸ் ஒன்றும் மிகவும் நம்பகமான நிறுவனம் அல்ல. ஏராளமான வேலைகளை அகற்றுவதற்குத்தான் அவர்கள் விரும்புகின்றனர்; அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை." என கூறினார்.

எட்டு ஆண்டுகளாக வேலை பார்க்கும் Jenise என்னும் தொழிலாளி கூறினார்: "தங்கள் அமெரிக்க ஆலைகளில் முதலீடு செய்ய உள்னரா என்பது பற்றி அவர்கள் எதற்காக இரகசியமாக இருக்கின்றனர்? இங்கு இருக்கும் ஆலைகளை Cerberus மூடிவிட்டு மெக்சிகோ, கனடா, சீனாவில் ஆலைகளைக் கட்டமைக்கும் விதத்தில் உலகரீதியாக செல்ல உள்ளனரா? இப்பொழுதில் இருந்து அடுத்த நான்கு ஆண்டுகளில் எங்கு இருப்போம் என்று தெரியாவிட்டால் எப்படி பலவற்றை திட்டமிட முடியும்?"

உலகெங்கிலும் கார்த்தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களில் உலகந்தழுவிய கார்ப் பெருநிறுவனங்களின் தாக்குதல்களால் எதிர்கொண்டுள்ளனர் என்று இந்த நிருபர் சுட்டிக் காட்டியதற்கு Jenise விடையிறுத்தார்: "தொழிலாளர்களும் உலகந்தழுவிய முறையில் ஒன்றுபட வேண்டும். மெக்சிகோ, கனடா ஆகியவற்றிற்கு நாம் நெருக்கமாகத்தான் உள்ளோம்."

"இங்கு, Sterling Heights அவர்கள் மற்ற கிறைஸ்லர் ஆலைகளுடன் போட்டியிட வேண்டும் என்கிறார்கள். ஒரு நடுத்தர கார்த் தயாரிப்பிற்கு புதிய இடம் வேண்டும் என்று அவர்கள் பேசும்போது, இலிநோய்யில் உள்ள பெல்விடர் ஆலைக்கு எதிராக நாங்கள் இருப்பதாக கூறுகின்றனர்; அது ஒரு மிகப் புதிய ஆலைகளில் ஒன்றாகும். செலவினங்களைக் குறைக்க நூற்றுக்கணக்கான தற்காலிகத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்தியுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் மிசெளரியில் உள்ள ஆலை ஒன்றுடன் போட்டி போட்டு இன்னும் கூடுதலான ஊதியங்கள், தொழில்நிலைமை ஆகியவற்றை விட்டுக் கொடுப்பர் என்று பார்த்தோம். அப்படித்தான் அவர்கள் இந்த விளையாட்டை இங்கு விளையாடுகிறார்கள்" என்று இப்பெண்மணி கூறினார்.

"VEBA வைப் பொறுத்தவரையில், அது ஏற்கனவே Caterpillar மற்றும் சில நிறுவனங்களில் தோல்வி அடைந்துவிட்டது. அது பல ஆண்டுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது; பின்னர் விரைவில் அது மூழ்கி விட்டது."