World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US militarism threatens to unleash regional conflagration

பிராந்திய பேரழிவைக் கட்டவிழ்த்துவிட அமெரிக்க இராணுவவாதம் அச்சுறுத்துகிறது

By Bill Van Auken
23 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

"மூன்றாம் உலக யுத்தத்தைத் தவிர்க்கும் ஆர்வம் உள்ள நாடுகள்" ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் அதிகரித்துவரும் அச்சுறுத்தல்களுக்கு இசைவாக தங்களை மாற்றி கொள்ள வேண்டும் என்ற ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் கடந்த வார எச்சரிக்கையைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் பரந்த பகுதிகளில் ஆயுதவன்முறை அபாயங்கள் சூழக்கூடிய ஒரு தொடர்ந்த வெளிப்படையான போக்குகள் வெளிப்பட்டுள்ளன. உண்மையில், ஒரு புதிய உலக யுத்தத்திற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க தாக்குதலின் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் மற்றும் ஈராக் மீதான தாக்குதலின் நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த இரண்டு நாடுகளிலும் அதிகரித்து வரும் குழப்பங்கள், கணக்கிடமுடியாத வடிவங்களை கொண்ட ஒரு தொடர் அரசியல் விளைவுகளை உருவாக்கியுள்ளது.

துருக்கி, ஈராக், சிரியா, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உட்பட ஐரோப்பிய மேற்கு எல்லைகளில் இருந்து துவங்கி இந்தியாவின் கிழக்கு பகுதி வரையிலான பிராந்தியத்தில் ஒரு இராணுவ மோதலை தூண்டிவிடுவதுடன், மூலோபாய நலன்களுக்காக மற்றைய பெரிய சக்திகளையும் இதனுள் உள்இழுத்துவிட அச்சுறுத்துகின்றது.

பல இலட்ச உயிர்களைப் பலி கொள்ளக் கூடிய அச்சுறுத்தலுடன் ஆயுத மோதல்களுக்கு மேடை அமைக்கப்பட்டு வருகிறது. உண்மையில், இது இந்த முழு பூகோளத்தையும் அழித்துவிடக் கூடியதாகும்.

முதல் நிலையில், ஈரானுக்கு எதிராக யுத்தத்தை விரிவுபடுத்தும் அபாயம் முன்வைக்கப்பட்டுள்ளது. சிரியாவை இழிவுபடுத்துவது மற்றும் அச்சுறுத்துவதுடன், துணை ஜனாதிபதி ரிச்சர்ட் ஷென்னி வார இறுதியில் தெஹ்ரானுக்கு எதிராக கருத்தற்ற அச்சுறுத்தல்களையும் ஒருதலைபட்சமாக தொடர்ந்தார்.

"ஈரான், தனது தற்போதைய நிலையைத் தொடர்ந்தால், கடுமையான விளைவுகளை அளிக்க சர்வதேச சமூகம் தயாராகி வருவதை ஈரானிய ஆட்சி புரிந்து கொள்ள வேண்டி இருக்கும்." என ஞாயிறன்று ஓர் உரையில் தெரிவித்த திரு. ஷென்னி, தொடர்ந்து கூறுகையில், "அமெரிக்கா பிற நாடுகளுடன் இணைந்து, 'ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்ற ஒரு தெளிவான செய்தியை அளிக்கிறது" என்று தெரிவித்தார். ஈராக்கிற்கு எதிராக ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கான சில முக்கிய ஆலோசகர்கள் உள்ளடக்கிய ஒரு சிந்தனைக்கூடமான கிழக்கத்திய கொள்கைக்கான வாஷிங்டன் பயிலகத்தில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு முன்னதாகவே ஷென்னி இந்த கருத்துரைகளை வழங்கி இருந்தார்.

"பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் உலகின் முதன்மை நாடாக" ஈரானை பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய ஷென்னி, தொடர்ந்து கூறுகையில், "பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒரு நாடு, தனது மிக மூர்க்கமான நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்வதை எங்கள் நாடும் மற்றும் சர்வதேச சமூகம் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை" என்று தெரிவித்தார்.

ஷென்னியின் உரை 2002 இல் ஈராக் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு தயார் செய்தபோது பிரயோகித்த ''பேரழிவிற்கான ஆயுதங்கள்'' என்ற வார்த்தையடிப்புகளையே எதிரொலிக்கின்றது. ஈரான் தனது அணுவாயுத திட்டங்களை தொடர்வதை தடுக்க ஈரானை இராணுவரீதியாக தாக்க வாஷிங்டன் ஆயத்தமாகி வருகிறது என்ற தெளிவான அச்சுறுத்தலையே துணை ஜனாதிபதியின் கருத்தற்ற பேச்சு உள்ளடக்கியுள்ளது.

ஈராக்கிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ முக்கிய எதிர்ப்புகளை அடக்கி, தமக்கு ஆதரவான பொம்மை ஆட்சிகளை நிறுவிய பின், வாஷிங்டன் வெற்றி பெற்ற நிலையில் இந்த அச்சுறுத்தல்கள் கூறப்படவில்லை. சண்டை தீவிரமாக தொடர்ந்து வரும் இந்த இரண்டு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளுக்காக கூடுதலாக 46 பில்லியன் டாலரை வழங்குமாறு திங்களன்று புஷ் வலியுறுத்தினார். இந்த கோரிக்கை மூலம் மொத்த தொகையானது, அக்டோபர் 1 இல் துவங்கிய நடப்பு நிதியாண்டின் நிதி ஒதுக்கீடான 196 பில்லியன் டாலரை எட்டி இருக்கிறது.

அமெரிக்க இராணுவம் ஏற்கனவே மூழ்கிப்போயுள்ள இந்த நவ காலனித்துவ யுத்தத்திலிருந்து வெளிவர வாய்ப்பில்லை என புஷ் நிர்வாகமும் மற்றும் அமெரிக்க ஆளும் மேற்தட்டும் ஒட்டுமொத்தமாக ஒரு முடிவிற்கு வந்துள்ளன. இந்த ரணமாக்கும் மோதல்கள் தமது சொந்த விதிகளுக்கிணங்க இப்பிராந்தியத்தில் பரவத்தொடங்கியுள்ளன. தற்போது வாஷிங்டனால் தொடரப்படும் மோதலை தீவிரமாக்கும் கொள்கையில் ஒருவகை முட்டாள்த்தனம் இருப்பதாக தோன்றினாலும், இந்த தர்க்கத்தின் அடித்தளமாக இருப்பது அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஒருங்கிணைந்த நெருக்கடியாகும்.

அதிகரிக்க கூடிய தற்போதைய யுத்தங்கள் இராணுவ வட்டாரங்களில் ஆழ்ந்த அமைதியின்மையை உருவாக்கி இருப்பதை, புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள படைகளின் இணைத்தளபதியின் திங்களன்று நியூயோர்க் டைம்ஸில் வெளியான கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன.

இராணுவ நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க தாம் தொடர்ந்து வலியுறுத்த உத்தேசித்திருப்பதாக தெரிவித்த புதிய தலைவர் அட்மிரல் மைக் முல்லன் கூறுகையில், "தற்போது நாங்கள் இரண்டு நாடுகளுடனும் ஒரு பிரச்சனையில் இருக்கிறோம். உண்மையில், உலகின் அந்த பகுதியில் ஒரு மூன்றாவது நாட்டுடன் ஒரு மோதலுக்கு உள்ளாவதன் விளைவுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது" என்று தெரிவித்தார்.

ஈராக்கினுள் ஆயுதந்தாங்கிய தாக்குதல்கள்

ஆனால் ஈரான் தொடர்பாக ஏற்கனவே ஆயுதந்தாங்கிய நடவடிக்கைகள் துவங்கப்பட்டு விட்டற்கான அதிகளவிலான அறிகுறிகள் காணப்படுகின்றன. "ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையினரின் அல்கொய்தா சிறப்பு படைகளுக்கு எதிராக ஓர் இரகசிய எல்லையோர யுத்தத்தை நடத்தும் ஒரு பகுதியாக சமீப மாதங்களில் பல தடவைகள் பிரிட்டீஷ் சிறப்பு படைகள் ஈரானுக்குள் நுழைந்திருக்கின்றன." என பிரிட்டீஷ் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ஞாயிறன்று லண்டன் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது.

அந்த செய்தித்தாளின் கருத்துப்படி, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா சிறப்பு படை பிரிவுகளுடன் இணைந்து பிரிட்டிஷ் SAS கமாண்டோக்கள், குறைந்தபட்சம் ஒரு டஜன் முறையாவது அந்த எல்லையோர பகுதிகளில் ஈரானிய படைகளுடன் தீவிர துப்பாக்கி சூட்டை நடத்தி இருக்கின்றன. "ஈரானினுள் உள்ள அமெரிக்க சிறப்பு நடவடிக்கை குழுக்கள் ஒரு தாக்குதலுக்கு ஆயத்தமாகி வருவதற்கான உறுதியான தகவல்களை" டைம்ஸ் இதழ் மேற்கோள் காட்டியது.

இந்த சிறப்பு படை பிரிவுகளில் உள்ள ஒரு பிரிவு ஈரானுக்குள் அழிக்கப்பட்டாலும் என்ன நடக்கும் என்பதை ஒருவர் ஊகித்து பார்க்க வேண்டியுள்ளது. சந்தேகமின்றி, அவர்கள் ஈராக் எல்லைகளில் இருந்து தாக்கியதாக கூறி, அதன் மூலம் ஓர் அமெரிக்க தாக்குதலை நியாயப்படுத்தும் போலிக்காரணம் அளிக்கப்படும்.

ஈரான் மீது ஓர் அமெரிக்க விமான தாக்குதல் நடத்த இலக்குகளை வரையறுக்க சாதகமாக அபுதாபி மற்றும் சைப்ரஸின் விமானத்தளங்களில் ஏழு அமெரிக்க U2 உளவு விமானங்கள் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டு இருப்பதாக அப்பத்திரிக்கை குறிப்பிட்டது.

அதே நேரத்தில், ஈராக் யுத்தமானது ஈராக்-துருக்கிய எல்லையிலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி இருக்கிறது. குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் குர்திஷ் பிரிவினைவாத கெரில்லாக்கள், கடந்த பத்தாண்டுகளுக்குள் அவர்களின் இரத்தம்தோய்ந்த தாக்குதலை நடாத்திய பின்னர், ஆயுதங்கள் மற்றும் துருப்புகளை ஏற்றிய சுமார் 50 வாகனங்களைக் கொண்ட ஒரு துருக்கிய இராணுவ பாதுகாப்பு படை எல்லையோர பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஞாயிறன்று நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையில் அதிகபட்சம் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியினால் சிறைபிடிக்கப்பட்டனர்.

கடந்த வாரம், இந்த சமீபத்திய தாக்குதலுக்கு முன்னதாக, ஈராக்கினுள் உள்ள குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி தளங்களை தாக்க எல்லையைத் தாண்டி ஈராக்கிற்குள் இராணுவத்தை அனுப்புவதற்கான ஒரு தீர்மானத்திற்கு துருக்கிய பாராளுமன்றம் வெற்றிகரமாக அனுமதி அளித்தது.

துருக்கிய பிரதம மந்திரி டேயிப் எர்டோகன் லண்டனில் தமது கடந்த இரண்டு நாள் பயணத்தின் போது கூறுகையில், "அண்டை நாடு பயங்கரவாதத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்பட்சத்தில்....சர்வதேச விதிகளின்படி எங்களுக்கு உரிமை இருக்கிறது மற்றும் நாங்கள் அந்த உரிமைகளைப் பயன்படுத்துவோம். மேலும் இதற்காக நாங்கள் வேறு யாரிடமிருந்து அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை." என தெரிவித்தார்.

ஈராக்-துருக்கிய எல்லைப் பகுதிகளில் நிலைமையை படுமோசமாக்கியதற்கும், ஒரு பரந்த யுத்தத்திற்கான அச்சுறுத்தலை உருவாக்கியதற்கும் ஈராக் மீதான அமெரிக்க தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பை எர்டோகன் குற்றஞ்சாட்டினார்.

"அங்கு எவ்வித வெற்றியும் இருப்பதாக நான் காணவில்லை." என்று குறிப்பிட்ட அவர், "பல ஆயிரக்கணக்கான மக்களின் மரணம் மட்டுமே அங்கு நடந்து வருகிறது. அங்கு ஈராக்கின் முழுமையான உள்கட்டமைப்பு மற்றும் மேற்கட்டமைப்புகள் அனைத்தும் நாசமாகி இருக்கின்றன." என்றார்.

குர்திஷ் பிரிவினைவாதம் என்ற பெயரில் ஈரானுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வரும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் இணை அமைப்பை துருக்கி முழுமையாக ஆதரிக்கும் நிலையில், குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி மீதான நடவடிக்கைகளில் அமெரிக்கா கண்காணாமல் இருக்கிறது என்பதை துருக்கி நன்றாகவே அறிந்திருக்கிறது.

இராணுவ நடவடிக்கையை வலியுறுத்தி எதிர்கட்சிகளால் ஆர்பாட்டங்கள் நடத்தப்படுவதை சமீபத்திய குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் தாக்குதல்கள் தூண்டிவிட்டன. அன்காராவில், "குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி மற்றும் அமெரிக்கா ஒழிக!" என்ற முழக்கத்துடன் பலர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வேறெங்கும் இல்லாதளவு படுகொலை வன்முறை நடந்த ஈராக்கின் ஒரு பகுதியை மேலும் பெரும் குழப்பத்திற்குள்ளாக்கிவிடும் அச்சுறுத்தல்களுடன் துருக்கியின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஈராக்கில் வாஷிங்டனின் நவ-காலனித்துவ தலையீடுகள் துருக்கி மற்றும் ஈரான் எல்லையோரங்களில் பதட்டங்களை அதிகரித்திருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானில் யுத்தத்தை தொடர்வது அதன் அண்டை நாடான பாகிஸ்தானில் ஓர் அரசியல் வெடிப்பீப்பாயை தூண்டிவிடுவதற்கான அச்சுறுத்தலாக இருக்கிறது.

கடந்த வியாழனன்று, 136 மக்களின் உயிரைப் பறித்த மற்றும் நூற்றுக்கணக்கானவர்களைக் காயப்படுத்திய பெனாசீர் பூட்டோவின் ஊர்வலத்திற்கு எதிராக நடந்த பெரிய குண்டுவெடிப்பானது, பாகிஸ்தானில் மேலும் பல பெரிய இரத்தகறைகளை ஏற்படுத்துவதற்கான மற்றும் உள்நாட்டு யுத்தத்திற்கான ஆரம்பம் என்பதைத் தெளிவாக நிரூபிக்கிறது.

ஊழல் வழக்குகளால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பதவியில் இருந்து அகற்றப்பட்ட பூட்டோ, அந்நாட்டின் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பெர்வாஸ் முஷாரப்புடன் வாஷிங்டன் செய்த தரகின் ஒரு பகுதியாக மீண்டும் பாகிஸ்தானுக்கு அழைத்து வரப்பட்டார். தலிபான்கள் பெருமளவில் அடைக்கலமும், ஆதரவும் பெற்று வரும் ஆப்கானிஸ்தான் எல்லையோர இன பிராந்தியங்களில் அமெரிக்க படைகளைப் பரப்பி வரும் நிலையில், அமெரிக்க ஆதரவு ஆட்சியை பெருமளவிலான அமைதியின்மையில் இருந்து காப்பாற்றும் நோக்கில் ஒரு அதிகார பகிர்வு உடன்படிக்கையை முன்னிறுத்துவதே இதன் நோக்கமாகும்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிகளால் ஆப்கானிஸ்தானில் எதிர்ப்பை அடக்கவும் மற்றும் பாகிஸ்தானில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்து, தோல்வியுற்ற கூட்டு நடவடிக்கைகளின் விளைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதர் Paddy Ashdown கடந்த வாரம் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துடனான ஒர் நேர்காணலில் தெரிவித்தார்.

"ஈராக்கில் தோல்வியைத் தழுவுவதை விட ஆப்கானிஸ்தானில் தோல்வி அடைவது மிகவும் மோசமாகும்." என தெரிவித்த Ashdown தொடர்ந்து கூறுகையில், "பாகிஸ்தான் விழுந்துவிடும் என்பதை அது அர்த்தப்படுத்தும் மற்றும் நமது சொந்த நாடுகளின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு முக்கிய தாக்கங்களை கொண்டிருக்கும் மற்றும் அது ஷியைட், சுன்னி இடையே ஒரு பெரியளவிலான கிளர்ச்சியையும் தூண்டிவிடும்." என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "முதல் மற்றும் இரண்டாம் உலக யுத்தங்களை ஐரோப்பிய உள்நாட்டு யுத்தங்கள் என்று சிலர் குறிப்பிடுவார்கள். இதனால் தூண்டப்படும் ஒரு பிராந்திய உள்நாட்டு யுத்தம் அவ்வாறான ஒரு யுத்தத்தை தூண்டிவிடும் என நான் நினைக்கிறேன்." என்று தெரிவித்தார்.

மாஸ்கோவுடனான பதட்டங்கள்

கருங்கடலில் இருந்து அரேபியன் கடல் வரையில் விரிந்து பரந்திருக்கும் 2,500 மைல் அடித்தளத்தைக் கொண்ட பிராந்தியத்திலுள்ள நாடுகளில் அமெரிக்க இராணுவத்தை அனுமதிக்க இந்த நிகழ்வுகள் அச்சுறுத்துகின்றன. இந்த பிராந்தியம் தெற்கு பக்கமாக முன்னாள் சோவியத் யூனியனையும் உட்கொண்டிருக்கிறது என்பதால், முதன்மையாக புஷ்ஷின் மூன்றாம் உலக யுத்தம் சார்ந்த கருத்துக்கள் குறிப்பிடும் மாஸ்கோவிற்கு மேலும் தெளிவாக அச்சுறுத்தலை முன்வைக்கின்றது.

கடந்த வியாழனன்று ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஒரு தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் அமெரிக்க-ரஷ்யா பதட்டங்கள் மீண்டும் உயிர்த்தெழுந்தன. அதாவது, ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பானது என்பது அந்நாட்டு எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதற்கானது என்று அதில் அவர் உருவகப்படுத்தினார் மற்றும் ரஷ்யாவின் மண்ணில் இதே போன்று செய்ய துணியும் அமெரிக்காவின் முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்கான இராணுவ திறன் ரஷ்யாவிடம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.

"நல்ல வேளை, ரஷ்யா ஈராக்காக இல்லை." என்று கூறிய அவர், "அது தனது தேசிய எல்லைக்குள் மட்டுமின்றி, உலகின் பிற பிராந்தியங்களிலும் தனது நலன்களைக் காப்பதில் போதிய வலுவாகவுடன் இருக்கிறது." என தெரிவித்தார்.

ரஷ்யாவின் புதிய Topol-M ஏவுகணையின் பரிசோதனை குறித்தும் இந்த ஒளிபரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது பசிபிக் பிரதேசங்களில் இருந்து 1000 மைல் தூரத்திற்கு அப்பால் சென்று தாக்கும் திறன் உடையது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ரஷ்யாவின் இராணுவத்தை மறுசீரமைக்க பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும் புட்டின் தெரிவித்தார். "அணு ஆயுதங்களை மேம்படுத்துவதில் மட்டுமின்றி, வேறுஆயுதங்களிலும் நாங்கள் கவனம் செலுத்துவோம்." என தெரிவித்த அவர், "வாஷிங்டன், போலாந்தில் மற்றும் செக் குடியரசில் ஓர் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கான அதன் முன்மொழிவில் முன்னேறுமானால், ரஷ்ய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் நிச்சயமாக பதிலுக்கு சில அடிகள் எடுத்து வைப்போம்." என எச்சரித்தார்.

மூன்றாம் உலக யுத்தம் குறித்த புஷ்ஷின் கருத்துக்கள் குறித்து கேட்கப்பட்ட போது, அவர் "அதை ஒரு பேச்சுவழமைக்காக மட்டுமே பயன்படுத்தினார்" என வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை தொடர்பாளர் டானா பெரினோ தெரிவித்தார்.

அமெரிக்க இராணுவ தாக்குதல்கள் இந்த பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமையால் உருவான ஸ்திரமின்மை மற்றும் கருத்து வேறுபாடுகள் குறித்த ஓர் ஆய்வு, இப்பகுதி உலகின் மீதமுள்ள முக்கிய பகுதி கனிம வளங்களைக் கொண்டிருப்பதால், ஒரு பெரியளவிலான காட்டுத்தீ போன்ற மோதல் பேச்சுவழமையாக இல்லாமல் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கிறது என்பது தெளிவாக உள்ளது என்பதை காட்டுகின்றது.

போட்டி முதலாளித்துவ நாடுகளின் முரண்பாடான நலன்கள் மற்றும் அனைத்திற்கும் மேலாக இராணுவ மேலாதிக்கத்தை பயன்படுத்தி தனது பொருளாதார வீழ்ச்சியை ஈடுசெய்வதற்காக ஆசிய மற்றும் ஐரோப்பிய போட்டியாளர்களுடனான செலவில் முக்கிய இயற்கை வளங்களையும் மற்றும் சந்தைகளை ஆக்கிரமிக்கும் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தின் உந்துதல் இந்த அச்சுறுத்தலுக்கு அடித்தளமாக உள்ளது.

இந்த நிலைமையின் கீழ், ஏனைய பெரிய சக்திகளின் பிற முக்கிய நலன்களைப் பாதிக்கும் வகையில் வாஷிங்டனின் வளர்ந்து வரும் கட்டுக்கடங்காத அமெரிக்க இராணுவவாத தலையீடுகளால் மனிதகுலத்தை புதிய உலக யுத்தத்தினுள் மூழ்கடிக்கும் அபாயம் இருப்பது முற்றிலும் உண்மையாகும்.

இதுதான் புஷ்ஷால் வளர்க்கப்பட்டு, அமெரிக்காவின் ஆளும் தட்டினரின் முக்கிய பிரிவினரால் ஆதரிக்கப்படும் ''ஒருதலைப்பட்சமான யுத்த'' கோட்பாட்டின் தவிர்க்க முடியாத விளைவாகும்.

இந்த சர்வதேச போர் நடவடிக்கைகளைத் திசை திருப்ப அமெரிக்க ஆளும் தட்டிற்குள், எவ்வித உண்மையான அரசியல் எதிர்ப்பும் காணப்படவில்லை. வெளிவேடமிட்டு வரும் ஜனநாயக கட்சியினர், ஈரானின் முதன்மை பாதுகாப்பு படைகளை ஒரு "பயங்கரவாத அமைப்பு" என முத்திரை குத்தும் தீர்மானத்தை அமெரிக்க செனட்டில் குடியரசு கட்சிகளுடன் இணைந்து கூட்டாக அனுமதித்திருக்கும் நிலையில், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு யுத்தங்களுக்கும் தொடர்ந்து நிதி வழங்கி வருகின்றனர். இதன் மூலம் ஒரு தூண்டப்படாத தாக்குதலை மற்றொரு நாட்டின் மீது நடத்த அரசியல் போலிகாரணத்தை அளித்து வருகிறார்கள்.

யுத்தத்திற்கும் அதை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும், ஒரு பொதுவான சோசலிச திட்டத்தின் அடிப்படையில், அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர் வர்க்கத்தின் சுதந்திரமான ஒருங்கிணைப்பின் மூலமே, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை அச்சுறுத்தும் ஒரு மிக பெரியளவிலான மற்றும் சூறையாடும் யுத்தத்தின் உண்மையான மற்றும் அதிகரித்து வரும் அபாயத்திற்கான பதிலை அளிக்க முடியும்.