World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : மலேசியா

Malaysia: Large protest in Kuala Lumpur demands electoral reforms

மலேசியா: கோலாம்பூரின் மாபெரும் ஆர்ப்பாட்டம் தேர்தல் சீர்திருத்தத்தை கோருகிறது

By John Roberts
16 November 2007

Use this version to print | Send this link by email | Email the author

சுமார் ஒரு தசாப்தத்திற்கு பின்னர், மலேசியாவில் நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டத்தில் நாட்டின் தேர்தல் முறைகளை சீர்திருத்த வலியுறுத்தி சனியன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கோலாலம்பூரின் தெருக்களில் இறங்கினர். அரசியல் எதிர்கட்சிகள் மற்றும் 26 அரசு சாரா அமைப்புகளின் ஒரு கூட்டணியான பெர்ஷிஹ் (Clean) என்பதால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதம மந்திரி அப்துல்லாஹ் பதாவி இந்த ஆர்ப்பாட்டத்தை பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார், ஐந்து நபர்களுக்கு மேல் கூட்டம் கூடுவதற்கு அனுமதி கோரும் காலனித்துவ யுக சட்டத்தின் அடிப்படையில் போலீசாரால் இப்போராட்டம் தடை செய்யப்பட்டது. இந்த பேரணி நடத்தப்படுமேயானால் போலீஸ் ''கடுமையான நடவடிக்கைகள்'' எடுக்கும் என கடந்த வாரம் தேசிய போலீஸ் அதிபர் மூசா ஹாசான் எச்சரித்தார். இதுபோன்ற எச்சரிக்கை அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள செய்திஊடகத்தால் தினந்தோறும் திரும்பதிரும்ப வழங்கப்படுகிறது.

கடந்த வெள்ளியன்று ஆளும் தேசிய மலேசிய ஐக்கிய அமைப்பின் (UMNO) கூட்டத்தில் பேசிய அப்துல்லாஹ், பெர்ஷிஹ் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பின்வருமாறு தமது சொந்த எச்சரிக்கைகளை விடுத்தார்: "அவர்கள் என்னுடன் சவால் விடுகிறார்கள்; என்னிடம் சவால் விடப்படுவதை நான் விரும்பவில்லை." என தெரிவித்தார். மேலும் அவர் அந்த பேரணி இரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

தலைநகரின் எல்லைகளிலும் மற்றும் வடக்கு மாகாணமான கேடாஹ் வரையிலான முக்கிய நெடுஞ்சாலைகளிலும் போலீஸ் சாலைத் தடுப்புக்களை ஏற்படுத்தியது. பெரும்பாலான பேருந்துகள் திருப்பி விடப்பட்டன. "ஒவ்வொரு மூலையிலும் ஆயுதமேந்திய போலீசின் காவலால் கோலாம்பூரின் மத்திய பகுதி ஒரு படையெடுப்புக்கு தயாராகி வரும் ஒரு கோட்டை போலிருந்தது" என டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டது. நீர்பீச்சிகளுடன் கூடிய ஆயிரக்கணக்கான ரோந்து போலீஸார் நிறுத்தப்பட்டனர்.

பெர்ஷிஹ் ஆதரவாளர்களை மிரட்டுவதற்கான அரசாங்க முயற்சிகள் இருந்த போதிலும், ஆயிரக்கணக்கானவர்கள் இதில் பங்கெடுத்துக் கொண்டதுடன் போலீஸின் கடுமையான தாக்குதலையும் தைரியமுடன் எதிர்கொண்டனர். பத்தாயிரத்திற்கும் குறைவானவர்களே பங்கெடுத்தனர் என போலீஸ் கூறினாலும், இந்த போராட்டத்தில் சுமார் 30,000 முதல் 40,000 பேர் பங்கு பெற்றிருந்ததாக பல்வேறு சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜமெக் மசூதி பகுதியில் இருந்து அரச மாளிகை வரையிலான பல கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபயணம் சென்று அவர்களின் தேர்தல் சீர்திருத்த கோரிக்கைகளைக் கொண்ட ஒரு அறிக்கையை அளிக்க இந்த பேரணி ஒருங்கிணைப்பாளர்கள் திட்டமிட்டனர். பேரணியை கலைக்கும் முயற்சியில் கண்ணீர் புகை மற்றும் குண்டாந்தடிகளால் இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் தாக்கியது, ஆனாலும் அவர்களின் இலைக்கை அடைவதில் இருந்து பேரணியாளர்களை தடுத்து நிறுத்துவதில் போலீஸார் தோல்வி அடைந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய போது நடந்த ஒரு நிகழ்வை ஆசியா டைம்ஸ் வலைத் தளம், தனது ஓர் செய்தியில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: "ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்ட திடீரென போலீஸ் பக்கவாட்டில் இருந்து வந்து தாக்கியது. மாட்டிக் கொண்ட சிலர் தரையில் இழுத்து செல்லப்பட்டதுடன், இழுத்து செல்லப்படுவதற்கு முன்னதாக பல அதிகாரிகளால் உதைக்கப்பட்டு, குத்தப்பட்டனர். சில நிமிடங்களுக்குப் பின்னர், ஜமெக் மசூதி பகுதிக்குப் பின்புறம் இருக்கும் கடைவீதிகளுக்கு போலீஸ் விரைந்தனர், கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தட்டிக்கதவுகளுக்கு பின்னால் மறைந்திருந்த நிலையில், மூடப்பட்டிருந்த கடைகளை நோக்கி உரக்க சத்தமிட்டும், கூவி கொண்டும் சென்றார்கள். புகைப்படக்கருவியுடன் இருந்த நபர்கள் அவற்றை மூடிவிடும்படியும் அல்லது அவர்கள் கைது செய்யப்படும் அபாயத்தை எதிர்நோக்கவேண்டியிருக்கும் எனவும் போலீஸார் கூறினர். டெளங்கு அப்துல் சாலையின் பின்புறம், போராட்டக்காரர்களுக்கு அருகில் போலீஸ் வாகனங்கள் முன்னோக்கி செல்ல வசதியாக நீர்பாச்சிகளை போலீஸ் உபயோகித்தினர்.

போலீஸ் கணக்குகளின்படி, 245 நபர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னால் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் கூட, வழக்கையும் மற்றும் ஓர் ஆண்டு வரையிலான சிறை தண்டனையும் அவர்கள் ஏற்க வேண்டி இருக்கும்.

அடுத்த ஆண்டு வரவிருக்கும் தேசிய தேர்தல்களை தடையின்றி நடத்துவதை உறுதிப்படுத்தும்படி பெர்ஷிஹ் நாட்டின் தலைமையிடம் கோரி வருகிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்களர்களை நீக்குமாறும், கள்ள ஓட்டுக்களை மற்றும் ஒரே நபர் பல ஓட்டுக்கள் இடுவதைத் தடுக்க அழியாத மை பயன்படுத்துமாறும், ஆளும் கட்சியால் தவறாக பயன்படுத்தப்படும் தபால் ஓட்டுக்களை நீக்கவும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசுத்துறை ஊடகத்தை சமமாக பயன்படுத்த அனுமதிக்கவும் பெர்ஷிஹ் கோரி வருகிறது.

மலேசிய ஊடகமும் போராட்டத்தை தடுக்க முயற்சித்தது. அரசு சார்ந்த நியூ ஸ்டிரைட் டைம்ஸ் இதழ், "சட்டவிரோத கூட்டங்கள் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன" என்ற தலைப்பில் நான்காம் பக்கத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஆனால், பெரிய போராட்டங்கள் மீண்டும் உருவாகி இருப்பதால் சந்தேகத்திற்கிடமின்றி, அரசாங்கம் கவலை அடைந்திருக்கிறது. தேசிய நீதி கட்சி (Keadilan), இஸ்லாமிய வாத இஸ்லாம் சே-மலேசிய கட்சி (PAS) மற்றும் சீன இனத்தை ஆதாரமாக கொண்ட ஜனநாயக நடவடிக்கை கட்சி ஆகிய மூன்று முக்கிய எதிர்கட்சிகளும் இந்த பெர்ஷிஹ் கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்றன.

தேசிய மலேசிய ஐக்கிய அமைப்பில் இருந்து அன்வர் இப்ராஹிம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, மலேசியாவில் கடைசியாக மிக பெரிய அரசாங்க எதிர்ப்பு போராட்டம் 1998 இல் ஏற்பட்டது. துணை பிரதம மந்திரி மற்றும் நிதி மந்திரியாக இருந்த அன்வர், 1997-1998 இல் ஏற்பட்ட ஆசிய பொருளாதார நெருக்கடிகளை தொடர்ந்து பொருளாதார கொள்கைகளை மாற்றி அமைத்ததன் மீது பிரதம மந்திரி மஹதிர் மொஹம்மத்துடன் கருத்து வேறுபாடு கொண்டார்.

மலேசிய பொருளாதாரத்தை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கோரிக்கைகேற்ப திறந்து விட அன்வர் ஆதரவு தெரிவித்தார். இது ஏற்கனவே தேசிய மலேசிய ஐக்கிய அமைப்புடன் நெருக்கத்தை கொண்ட வாணிப பிரிவுகளின் கடுமையை மேலும் பாதித்திருக்கலாம். அன்வரின் கொள்கைகளை மஹதிர் நிராகரித்தார் என்பதுடன், அன்னிய செலவாணி மற்றும் மூலதன கட்டுப்பாடுகளை விதித்ததுடன், அன்வரைக் கட்சியில் இருந்தும் வெளியேற்றினார். அவர் மறுசீரமைப்பு அல்லது சீர்திருத்தத்திற்காக போராட்டங்களை ஒருங்கிணைக்க தொடங்கிய போது, மஹதிர் அரசாங்கம் அவரை கைது செய்து இலஞ்சம் மற்றும் பாலியல் குற்றங்களை அவர் மீது சுமத்தியது.

அன்வர் மீதான இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானதால், அதற்கடுத்த ஏப்ரல் மாத தேர்தல் வரை அரசியல் அதிகாரங்களில் ஈடுபட அவர் தடை விதிக்கப்பட்டார். எவ்வாறிருப்பினும், அவர் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான தண்டனை தேசிய நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதால், அவர் 2004 -ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சனிகிழமையன்று நடந்த பேரணியில் கலந்து கொண்ட அவர், பேரணி "வரையறுக்க முடியாத வெற்றி" பெற்றதாக ஊடகத்திற்கு தெரிவித்தார்.

அரசாங்கம் மற்றும் அதன் கொள்கைகள் மீதான எதிர்ப்பு மற்றும் கடுஞ்சீற்றத்தின் அதிர்ச்சியே இந்த பேரணியின் முக்கிய நோக்கம் என்பது தெளிவாக இருந்தது. மலேசியாகினி வலைத் தள ஆய்வாளர் மற்றும் ஓர் அரசாங்க விமர்சகரான ஜேம்ஸ் வோங்க், டைம்ஸ் இதழிற்கு கூறுகையில், "தேர்தல் சீர்திருத்தத்திற்காக மட்டுமில்லாமல், பிற மனக்குறைகளின் வெளிப்பாடுகளைக் காட்டவும் தான் ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிவந்தார்கள்." எனத் தெரிவித்தார். ஆளும் மேற்தட்டு பெருமளவில் பயனடைந்து வரும் தேசிய மலேசிய ஐக்கிய அமைப்பினது கொள்கைகளின் மயக்கத்தில் இருந்து தெளிந்து வரும் 'குறைந்த வருவாய் பெறும் மலேசியர்கள்', இந்த பேரணியில் சிறப்பாக கலந்து கொண்டதாக இன்டர்நேஷனல் ஹெரால்டு டிரிபியூன் குறிப்பிட்டது.

ஒடுக்குமுறை பற்றிய அச்சத்தால் பெயர் குறிப்பிட விரும்பாத மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் ஓர் அரசியல் விஞ்ஞானி இன்டர்பிரஸ் சேவைகள் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: "ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு அன்வருக்காக தெருவில் இறங்கிய ஆங்கிலம் தெரிந்த மேற்தட்டுடன் ஒப்பிடுகையில், இந்த முறை பெரும்பான்மையான போராட்டக்காரர்கள் இளைஞர்களாகவும், மலேய தொழிலாளவர்க்கத்தினராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்." என தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்த நகர்புற மலேயர்கள் மந்தமாகிவிட்ட தனியார்துறை சம்பளங்களாலும் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகளாலும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். "அவர்கள் குறைந்த சம்பளம் அளிக்கும் பணிகளில் இருப்பதுடன், நகரத்திற்கு வெளியே வசதியற்ற, மலிவான குடியிருப்புகளில் வாழ்ந்து கொண்டு நிரந்தரமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளார்கள். இது போன்ற மக்களைத் தான் புதிய பொருளாதார கொள்கை (NEP) உருவாக்கி வைத்திருக்கிறது." என தெரிவித்தார்.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த புதிய பொருளாதார கொள்கையே தேசிய மலேய ஐக்கிய அமைப்பின் இனவாத கொள்கையின் ஆதாரக்கல்லாக அமைந்திருக்கிறது. தேசிய மலேய ஐக்கிய அமைப்பின் நேரடி தலையீடு இருந்த 1969 இன் இனக்கலவரத்தை தொடர்ந்து, புதிய பொருளாதார கொள்கையானது தொழிலில், அரசாங்க பதவிகளில் மற்றும் கல்வியில் பழங்குடி மலேயர்கள் மற்றும் நிலபுத்திரர்களுக்கு முன்னுரிமை இடஒதுக்கீடுகளை வழங்கியதுடன், மொத்த மக்கள்தொகையில் 40 சதவீதம் இடம் பெற்றுள்ள சீனர்கள் மற்றும் இந்திய இனத்தவரை வேறுபடுத்திப் பார்த்தது. மலேய ஆளும் மேற்தட்டு மற்றும் மத்திய வர்க்கத்தினருக்கு பயனளித்த இந்த புதிய பொருளாதார கொள்கை பெரும்பான்மையாக இருந்த மலேய தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்குப் பயன்படவில்லை.

தேசிய மலேய ஐக்கிய அமைப்பு ஏற்கனவே வடக்குப் பகுதிகளில், பெரும்பான்மையாக, கிராமப்புற கெலன்டன் மாகாண சட்டமன்றத்தில் இஸ்லாமிய PAS கட்சியிடம் கட்டுப்பாட்டை இழந்து விட்டிருக்கிறது. மேலும் தற்போது இது, நகர்புற மலேய வாக்குகளுக்காக அன்வரின் துணைவியாரால் தோற்றுவிக்கப்பட்ட தேசிய நீதி கட்சி (Keadilan) இனாலும் புதிய சவாலை எதிர்கொண்டு வருகிறது. சீன மற்றும் இந்திய வாக்காளர்கள் மத்தியில், தேசிய மலேய ஐக்கிய அமைப்பு அதன் பழமைவாத கூட்டாளிகளான மலேசியன் சீனர் சங்கம் மற்றும் மலேசிய இந்திய காங்கிரஸ் ஆகியவற்றைச் சார்ந்து இருக்கிறது. 1957இல் சுதந்திரம் பெறும் வரை அதிகாரத்தில் இருந்த தேசிய மலேய ஐக்கிய அமைப்பு-கூட்டணி, தேர்தல் முறையை சீர்திருத்தம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுமானால், அடுத்த ஆண்டு தேர்தலில் அது மிக பெரிய இழப்பைச் சந்திக்கலாம்.

ஓர் அரசியல் புள்ளியாக அன்வரின் மறுபிரவேசமானது, 1998 இல் பொருளாதார கொள்கை மீது வெடித்த கருத்து முரண்பாடு இன்னும் தீரவில்லை என்பதையே காட்டுகிறது. சமீபத்திய தகவல்களின்படி, புதிய பொருளாதார கொள்கை மலேசியாவிற்கு ஒத்ததல்ல என கூறி அவர் அதற்கு சவால் விட்டிருக்கிறார். ஆளும் மேற்தட்டு பிரிவுகளின் புதிய பொருளாதார கொள்கை மற்றும் தேசிய பொருளாதார கட்டுப்பாடுகள் உலகளாவிய பொருளாதாரத்தில் மலேசியாவை இணைப்பதிலும் மற்றும் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் பெரும் தடைகளாக இருக்கின்றன. மஹதிரை அகற்றிய பின் 2003 இல் பதவிக்கு வந்ததில் இருந்து முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் எதுவும் செய்யப்படாதது குறித்து பிரதம மந்திரி அப்துல்லாவை அன்வர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

மலேசியாவில் சர்வதேச மூலதனத்தை முதலீடு செய்வதில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஓய்வு பெறும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் தெய்ரி ரொம்மெல் எச்சரித்திருக்கிறார். அவர் அசோசியேட் பிரசிற்கு நவம்பர் 14ல் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எதிராகவும் மற்றும் சிறுபான்மை பழங்குடி மலேய மக்களுக்கு ஆதரவாகவும் வேறுபட்ட கண்ணோட்டத்துடன் இந்த நாடு ஒரு கட்சி நாடாக இருந்தது. "உங்களின் உரிமைக்காக, ஓர் அன்னியரிடம் அல்லது ஒரு மலேசிய குடிமகனிடம், யாரிடம் நீங்கள் நிற்கின்றீர்கள் என உங்களுக்குத் தெரியாது." என தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 2009ல் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மலேசியாவிற்கு இடையே நடக்கவிருக்கும் ஒரு கட்டுபாடற்ற வர்த்தக உடன்படிக்கை திட்டங்களில் இந்த புதிய பொருளாதார கொள்கை தடையாக இருக்கும் என எச்சரிக்கிறார்.

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் மறுகட்டமைப்பு உட்பட சில மாற்றங்களை செய்திருப்பதுடன் அன்னிய முதலீட்டுக்காக சிறப்பு பொருளாதார மண்டலங்கலையும் அப்துல்லாஹ் உருவாக்கி இருக்கிறார். ஆனால் இந்த சிறிய பொருளாதார சீர்திருத்ததிற்கே அவர் தேசிய மலேய ஐக்கிய அமைப்பிற்குள் மஹதிர் மற்றும் அவரின் ஆதரவாளர்களால் ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளாகியிருகிறார். வளர்ந்து விட்ட போட்டிகள் தங்களின் தொழில் நலன்களை பாதிக்கும் என்பதற்காக மட்டுமின்றி, புதிய பொருளாதார கொள்கை முடிவுக்கு வந்தால் தங்களின் இனவாத அரசியல் அடித்தளங்களும் இல்லாதொழிக்கப்பட்டுவிடும் என தேசிய மலேய ஐக்கிய அமைப்பு மற்றும் மலேய ஆளும் மேற்தட்டு பிரிவுகள் அஞ்சுகின்றன.

பெரியளவில் அடக்கி வைக்கப்பட்ட எதிர்ப்பு மற்றும் விரோதத்தை கட்டவிழ்த்துவிடுவதால் நிலைநிறுத்தப்படும் அபாயங்களை அரசாங்கமும் உணர்கிறது. ஜனநாயக உரிமைகள் மற்றும் சிறந்த வாழ்க்கை தரத்தை முன்வைத்து இளைய தலைமுறையும், மலேய தொழிலாள வர்க்கமும் அவர்களுக்கு நிகரான சீனர்கள் மற்றும் இந்தியர்களுடன் இணைந்து கொண்டால், அது போன்றதொரு எழுச்சி தேசிய மலேய ஐக்கிய அமைப்பின் சமுதாய பிரிவுகளின் மீதான செல்வாக்கு பிரயோகத்திற்கு மட்டுமின்றி, அன்வர் போன்ற எதிர்கட்சி தலைவர்களால் ஆதரவளிக்கப்பட்டுவரும் சில வரையறுக்கப்பட்ட கோரிக்கைகளையும் தாண்டி செல்லலாம் என அஞ்சப்படுகிறது.