World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Sarkozy, unions collaborate in attack on pensions

பிரான்ஸ்: ஓய்வூதியங்களை தாக்குவதில் சார்கோசி, தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு

By Alex Lantier
19 September 2007

Use this version to print | Send this link by email | Email the author

அனைத்து தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள் மீதும் மாபெரும் தாக்குதலுக்கான தயாரிப்பில் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி பொதுப்பணித்துறை ஊழியர்களின் ஓய்வுதியங்களை குறைக்கத் திட்டமிட்டு வருகிறார். தொழிற்சங்கங்கள் சார்க்கோசியுடன் பிரத்தியேக பேச்சு வார்த்தைகளில் ஒத்துழைப்புகையில் மயக்குவதற்காக செய்தி ஊட கொடுத்துவருகின்றன; இன்னும் பகிரங்கமாக பொதுமக்கள் இந்நடவடிக்கைகளை ஏற்கும் வகப் பிரச்சாரத்தையும் செய்து வருகின்றன.

அவர்களுடைய முதல் இலக்கு சில பொதுப்பணித் துறைத் தொழிலாளர்கள் --இரயில்வேக்கள், பயன்பாட்டுப் பணிகள், சுரங்கங்கள், மத்திய வங்கி, கலைகள் போன்ற துறைகளில் கொடுக்கப்படும் "சிறப்பு திட்ட" தனி ஓய்வூதியங்களை அகற்றுவது ஆகும். இரயில்வேக்கள், மின் மற்றும் எரிவாயுத் தொழிலாளர்கள் இப்பொழுது மொத்தமுள்ள 500,000 தொழிலாளர்களில் 370,000 என்ற எண்ணிக்கையில் உள்ளனர்; இவர்களுக்கு சிறப்பு திட்ட ஓய்வுத் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஓய்வூதியங்கள் குறைந்த வேலைநேரகாலங்களுக்கு பின்னர் (41 ஆண்டுகளுக்கு எதிராக 35 ஆண்டுகள்) பொது அரசாங்கத் தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைவிட அதிக தொகையை கொடுப்பவை ஆகும்.

செப்டம்பர் 9ம் தேதி, பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன் கூறினார்: "இச்சீர்திருத்தம் தயாராகிவிட்டது, எளிதில் நிறைவேற்றப்படலாம்: சிறப்பு திட்டங்களை மட்டும் மற்ற பொதுப் பணித்துறை ஓய்வூதிய விதிகளுக்குள் கொண்டுவருவதுதான் பாக்கி." ஒரு சட்டத்தின் மூலமோ அல்லது வெறும் ஆணையின் மூலமோ "வரவிருக்கும் மாதங்களில்" இது செயல்படுத்தப்பட்டுவிடலாம் என்று அவர் கூறினார். வெட்டுக்களை ஆரம்பிப்பதற்கு சார்க்கோசியிடம் இருந்து "சமிக்கைக்காக" மந்திரிசபை காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

பிய்யோனுடைய கருத்துக்களை உடனே தொழிற்சங்கங்கள் கண்டித்தன; தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீதான பாதிப்பை எதிர்ப்பது என்ற அடிப்படையில் அல்லாமல், ஒருதலைப்பட்ச அரசாங்க ஆணையானது தொழிலாளர்களது பக்கத்தில் இருந்து எதிர்ப்பை தூண்டும் ஆபத்தை கொண்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டும் விதத்தில் இருந்தது. 1995ம் ஆண்டு இரயில் தொழிலாளர்களின் ஓய்வூதியங்களை குறைப்பதற்கான முயற்சிகள் பல வாரங்கள் நீடித்த வேலைநிறுத்தத்திற்கு வழிவகுத்தன; அது நாட்டின் பல முக்கிய பிரிவுகளை மூடும் நிலையை ஏற்படுத்தியதுடன் அலன் யூப்பேயின் வலதுசாரி அரசாங்கத்திற்கு ஒரு பெரிய அரசியல் நெருக்கடியையும் கொடுத்தது. 2003ம் ஆண்டு பிரான்சில் ஓய்வூதியச் சீர்திருத்தம் ஒரு மகத்தான வேலைநிறுத்த அலையை ஏற்படுத்தியது.

CDFT (French Democratic Labour Confederation) இன் தலைவர் François Chérèque கூறினார்: "அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள், கலந்தாலோசனை போன்றவை இல்லாமல் அத்தகைய சீர்திருத்தத்தை நாங்கள் ஏற்கமுடியாது." ஸ்ராலினிச தலைமையிலான CGT (General Confederation of Labour- தொழிலாளர் பொது கூட்டமைப்பு) யின் தலைவரான Bernard Thibault, அரசாங்கம் "வாதத்திற்கு இடமின்றி நிறைவேற்றப்பட்ட ஒரு காரியத்தை எங்களிடம் அளிப்பதன் மூலம் தொடர்ந்து செயற்பட்டால்" அங்கு "விளையாட்டு" இருக்கும் என்றார். அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே "உண்மையான பேச்சுவார்த்தைகள்" தேவை என்ற அழைப்பையும் அவர் விடுத்தார்.

இதை மிக விரைவில் சார்க்கோசி எதிர்கொண்டார். Le Parisien க்கு கொடுத்த பேட்டியில் எலிசே ஜனாதிபதி மாளிகையிலுள்ள பெயரிட விரும்பாத செய்தி ஊடக அதிகாரிகள் பிய்யோனுடைய கருத்துக்கள் "அவசரத் தன்மையுடையவை", "அலங்கோலமானவை" என்று குறை கூறியுள்ளனர். செப்டம்பர் 11 அன்று Rennes ல் நடத்த கால்நடை வளர்ப்போர் மாநாட்டில், சார்க்கோசி ஒய்வூதியப் பிரச்சினைகளை விவாதிப்பதற்கான பொதுப்பணித் துறை பற்றிய திட்டமிட்ட உரையை இரத்து செய்துவிட்டார். பிய்யோனுக்கு அறிவுரையாக அவர் கூறினார்: "பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சிறு வழிவகைகளை கையாள்வது ஆபத்தைத் தராது."

ஆனால் ஓய்வூதியக் குறைப்புக்களை செயல்படுத்துவதில் தான் உறுதியாக இருப்பதை சார்க்கோசி வெளிப்படுத்தியுள்ளார். சிறப்பு திட்ட முறைகளை "தகுதியற்றவை" என்று தாக்கிய அவர் அவற்றை பெறுபவர்கள் இலவசமான சலுகைகளை பெறுவதாக உட்குறிப்பை காட்டியுள்ளார். "கடினமான வேலைகளுடன் பொருந்தாத சிறப்பு திட்டங்கள் உள்ளன; அதேபோல் ஓய்வூதியங்களுக்கான சிறப்பு திட்டங்களுடன் பொருந்தாத கடின வேலைகள் இருக்கின்றன" என்றார் அவர். விவசாயிகளுடைய ஓய்வூதியங்கள் மாதத்திற்கு 400 யூரோக்கள் என்ற முறையில் முற்றிலும் போதுமானவை அல்ல என்றும் விவசாயிகளை பொதுப்பணித்துறை தொழிலாளர்களுக்கு எதிராக மோதவைக்கும் நிலை ஏற்கத்தக்கது அல்ல என்றும் கண்டித்தார்.

அன்றே, வலதுசாரி நாளேடான Le Figaro அதன் துணை நிதிய, பொருளாதாரப்பிரிவு இயக்குனர் Gaetan de Capele எழுதிய ஒரு தலையங்கத்தையும் வெளியிட்டது. "Hold out on the special regimes" ("சிறப்பு திட்டங்கள் மீதாக நீடித்திரு") என்ற தலைப்பில் இருந்த இத்தலையங்கத்தில் de Capele சிறப்பு ஆட்சிகளை "ஏற்கத்தக்கவை அல்ல, நியாயப்படுத்த முடியாதவை", "சலுகை பெற்ற தொழிலாளர் பிரிவிற்கு" கொடுக்கப்பட்ட சலுகைகள் என்று இழிவான முறையில் முத்திரையிட்டார்.

இந்தப் போலித்தனமான சமத்துவ திருப்திப்படுத்தும் வழிவகையை சில புள்ளிவிவரங்கள் தகர்க்கின்றன. French Institute for Research on Public Administration உடைய கருத்தின்படி, ஒரு இரயில்வே ஊழியரின் சராசரி மாத ஓய்வூதியம் 1,620 யூரோக்கள் ஆகும்; இது தனியார் பிரிவு மாத ஓய்வூதிய சராசரியான 1,465 ஐ விட 155 யூரோக்கள்தான் கூடுதலானது. இந்த சாதாரண எண்ணிக்கையை குற்றம் சாட்டும் வகையில், de Capele பெரும் செல்வம் கொழித்தவர்களின் பெருத்த செல்வங்கள், உதாரணத்திற்கு Liliane Betterncourt (15.26 பில்லியன் யூரோக்கள்), Bernaud Arnauld (14.41 பில்லியன் யூரோக்கள்) அல்லது Serge Dessault -(10 பில்லியன் யூரோக்கள்) ஆகியவையும் "ஏற்கத்தக்கதல்ல மற்றும் நியாயப்படுத்தக்கூடியதும் அல்ல" என்று கூறவில்லை.

ஆனால் சிறப்பு திட்டங்களின் மீதான தாக்குதலில் இருக்கும் சமூக விரோத நோக்கங்களை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்: "அனைத்து பிரெஞ்சுக்காரர்களும் ஓய்வூதிய உரிமைகள் பெறுவதை மட்டுப்படுத்தும் வகையில் நடக்கவிருக்கும் [ஓய்வூதியங்கள் பற்றிய] பெரும் 2008 விவாதம், சிறப்பு திட்டங்கள் பற்றிய விவாதம் முதலில் நடத்தப்பெறாத வரை தொடங்கப்பட முடியும் என்று எவரேனும் கூறமுடியுமா?" இந்த "தவிர்க்க முடியாத சீர்திருத்தம்" அரசாங்கத்தால் "மிகுந்த நம்பகத்தன்மையுடன்" கவனிக்கப்படுவதாகவும், பொதுமக்களுக்கு "இதைப் பற்றி நம்பிக்கையுட்டும் வழிவகை" தேவை என்றும் அழைப்புவிடுத்த வகையில் தன் கருத்தை முடித்தார்.

பிரெஞ்சு முதலாளித்துவமும் பூகோளமயமாக்கலும்

இப்பிற்போக்குத்தன சீர்திருத்தங்கள் விரைவில் கொண்டுவரப்பட வேண்டும் என்று பிரெஞ்சு ஆளும் வர்க்கம் வலியுறுத்கிறது; ஏனெனில் இவை வரவில்லை என்றால் பூகோள பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகளில் அது போட்டித்தன்மை இழக்கப்பட்டுவிடும் என்று நினைக்கிறது. அரசாங்கத்தின் (Council of Economic Analyses CAE) பொருளாதார ஆய்வுக் குழுவினால் ஆகஸ்ட் 30ம் தேதி பூகோளமயமாக்கல்; பிரான்சின் பலம்: என்ற தலைப்பில் வெளிவந்துள்ள சிறு பிரசுரத்தில் இப்பிரச்சினைகள் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.

இச்சிறு பிரசுரம் பிரெஞ்சு வணிகம், உலக உழைப்பு பிரிவினை முறையை மிகக் குறைந்த அளவில்தான் பயன்படுத்தி வருகிறது என்று சுட்டிக்காட்டுகிறது. "பல ஆவணங்களில் ஆய்ந்து கூறப்பட்டுள்ள, தற்கால வணிக போட்டித் தன்மையில் மிக முக்கியமான காரணி, மதிப்புச் சங்கிலி (value chain) பல பிரிவுகளுக்கு உட்படுத்தப்படுவது ஆகும், அதாவது, உற்பத்திச் செலவீனங்களை வளர்ச்சி நிலைக்குத் தகுந்தவாறு அனுமதிக்கும் வகையில் இடைப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வது ஆகும். ஜேர்மனி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை பிரான்சை விட இத்துறையில் வளரும் நாடுகளில் இருந்து வரும் அளிப்பைப் பயன்படுத்தி மிகவும் முன்னேற்றத்தில் உள்ளன."

பிரான்சின் போட்டியாளர்கள் உலகச் சந்தைகளில் இருந்து மலிவான அளிப்புக்களை (Supplies) பெற்று அவற்றைப் பயன்படுத்துகையில், பல பிரெஞ்சு தொழில்களும் உலகச் சந்தையில் தங்கள் பங்கை இழக்கத் தொடங்கிவிட்டன. அரசு, பெருநிறுவனங்களின் இணைப்பிற்கு உதவிய பழைய தொழில்களில் --விமானக் கட்டுமானம், பாதுகாப்பு, விசை, போக்குவரத்து, தொலைத் தொடர்பு, கார்த்துறை போன்றவற்றில்-- பிரெஞ்சு தொழிற்துறை இன்னமும் போட்டித் தன்மையை கொண்டுள்ளது. ஆனால் புதிய தொழில்களில், மின்னணுப் பொருட்கள், மென்பொருள் வடிவமைப்பு போன்றவற்றில், சந்தையில் இருந்த பங்கு சுருங்கிவிட்டது (அது முறையே 14, 12 சதவிகிதம் என்று குறைந்துவிட்டது.)

இன்னமும் பெரிய அளவில் பிரெஞ்சுத் தொழில் உற்பத்தி வழிவகைகளை கொண்டிருக்கும் மருந்துப்பொருட்கள் துறையில், பிரான்சில் இருக்கும் நிலையங்களில் உற்பத்தியில் அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது; ஆனால் ஆய்வு, வளர்ச்சிப் பிரிவுகள் அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில்தான் நடைபெற்று வருகின்றன.

இதன் விளைவாக, பிரெஞ்சு முதலாளித்துவம் பணம் செலுத்துகை சமநிலையில் மோசமான நிலையில் இருப்பதுடன், ஆசிய உற்பத்தியாளர்களின் குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு போட்டியையும் புதிதாக சந்திக்கும் அச்சத்தை எதிர்கொண்டுள்ளது; அவையோ நடுத்தரத் தொழில்நுட்பம் என்று பிரெஞ்சு முதலாளித்துவம் மிகப் போட்டித் தன்மையுடையவற்றில் சிறப்பாக செயல்படுகின்றன. மூன்றில் இரு மடங்கு பிரான்சின் உயர்தர தொழில்நுட்ப ஏற்றுமதிகள் விமானக் கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளில்தான் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டி, இவ்வறிக்கை பிரான்ஸ் "தன்னை தொழில்நுட்ப ஏணியில் இன்னும் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் "அப்பொழுதுதான் குறைவூதிய நாடுகளில் இருந்து வரும் போட்டிக்கு எதிராக ஒரு தடையை பெற்றிருக்கும்" என்றும் கூறியுள்ளது.

பிரெஞ்சு தொழிற்துறையை உயிரி தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் என்று முதலாளித்துவ அடிப்படையில் விரிவாக்கம் செய்ய அழைப்பது, தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கு அரசு நெறிமுறைகள் குறைந்த தடையாக இருக்கும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் இத்துறைகளில் முதலீடு என்பது கூடுதலான இலாபம் என்ற உண்மையின் மீதாக தட்டுத்தடுமாறுகிறது. CAE பல பிரச்சினைகளை பட்டியலிட்டுக் கூறுகிறது; செல்வந்தர்கள்மீது உயர்வரிகள், பிரெஞ்சு சமூகப் பாதுகாப்புப் பிரிவு மருந்துகளுக்காக கொடுக்கும் மிகக் குறைந்த விலைகள், இதையொட்டி பிரான்சில் மருந்து தயாரிப்பு நிறுவங்கள் பெரும் குறைந்த இலாப விகிதம்; ஏராளமான செல்வம் படைத்த "தேவதை போன்ற முதலீட்டாளர்கள்" (Angel Investors) மென்பொருள் பயன்பாட்டு முறை நிறுவனங்களுக்கு நிதியங்களை கொடுக்கத் தயாராக இருப்பது போன்றவை இதில் அடங்கியுள்ளன.

அரசாங்கத்தால் பரந்த அளவில் படிக்கப்படுவதாக கூறப்படும் CAE பகுப்பாய்வுகளில் உட் குறிப்பாக இருப்பது பிரெஞ்சு சமூகத்தை அடிப்படைரீதியில் மறுசீரமைப்பு செய்வதற்கான அழைப்பு ஆகும். இந்த முன்னோக்குகளின் அடிப்படையில் செயல்படும் ஓர் அரசியல்வாதியின் இலக்குகள் உலகச் சந்தையின் வாய்ப்புக்களை பயன்படுத்தும் திறனுடைய பெரும் பிரெஞ்சு நிறுவனங்களை அமைப்பது, அதே நேரத்தில் குறைவான திறமையுடைய, உள்ளூரை அடிப்படையாக கொண்ட அளிப்பாளர்களை இழப்பிற்கு ஆளாகவிடுவது ஆகும்; தனியார் சொத்துக் குவிப்பிற்கு எதிராக இருக்கும் தடைகள் அனைத்தையும் அகற்றுவது; வணிக வரிகளை குறைத்தல், சமூகச் செலவினங்களை குறைத்தல், விலை உச்ச வரம்புகளை குறைத்தல் மற்றும் பொதுமக்களின் சமூகப்பாதுகாப்பிற்காக இருக்கும் அனைத்து வழிவகைகளையும் அகற்றி, புதிய தொழிற்சாலைகளை நிறுவுதற்கும் ஒருங்கிணைப்பு பெறுவதற்கும் ஆதரவு கொடுத்தல் ஆகியவையாம்.

சார்க்கோசி இத்திட்டத்தின்படி நடக்கிறார் என்பதற்கான ஒவ்வொரு அடையாளமும் உள்ளது. அவருடைய பதவிக்காலத்தின் முதல் மாதங்கள் இரு பெரிய இணைப்புக்களுக்கான திட்டங்களை பார்த்துள்ளன -- சூயஸ்- Gaz de France மின்விசை- எரிவாயு இணைப்பு மற்றும் இப்பொழுது அணுசக்தி பெருநிறுவனம் Aureva மற்றும் பொறியியல் மற்றும் போக்குவரத்து நிறுவனமான Alstom ம் இணைந்துள்ளன. மிக உயர்மட்ட வருமானங்களை உடையவர்கள் மீதான வரிவிதிப்புக்களை சார்க்கோசி 60ல் இருந்து 50 சதவிகிதமாக குறைத்துள்ளார். சிறப்பு திட்டங்களின் ஓய்வு ஊதியங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்ற அழைப்பு தொழிலாளர்களின் ஓய்வூதிய உரிமைகளை வீசி எறிவதற்கான முதல் நடவடிக்கையேதான். பிரெஞ்சு பல்கலைக் கழகங்களையும் திட்டமிட்டுச் சீர்திருத்தல் என்பது அவற்றை அமெரிக்க வகையிலான தனியார் துறை ஒத்துழைப்பு மாதிரி வடிவமைப்பிற்கு கொண்டுவரும் நோக்கத்தை உடையது.

பிரெஞ்சு உயரடுக்கு, பூகோளமயமாக்கத்தை எதிர்கொண்டுள்ளவிதம் வெளியுறவுக் கொள்கை பற்றி இன்னமும் கூடுதலான அச்சம் நிரம்பிய, வன்முறைப் பார்வையை உள்ளடக்கியுள்ளது. "The new petrochemical Yalta" என்ற தலையங்கத்தில், Le Figaro எண்ணெய் வளமுடைய மூன்றாம் உலக நாடுகள் "அவற்றின் எண்ணெயை பிறர் பெருவதற்கு கடினமாக பேரங்களை கொள்ளுவது என்று உறுதியாக உள்ளனர்" என்று கூறியுள்ளது. முதலாளித்துவ உலகம் மற்றும் சோவியத் ஒன்றியம் இவற்றிற்கு இடையே இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உலகந்தழுவிய இராணுவ எதிர்ப்பு நிலைப்பாட்டை ஏற்படுத்திய யால்டா ஒப்பந்தங்களுடன் ஒப்பீடு செய்து, Le Figaro வின் Stephane Marchand எண்ணெய் தொழிற்துறையின் "சக்திகளின் சமநிலை, பிரான்ஸ் போன்ற தொழிற்துறை ஜனநாயகங்களுக்கு பெருகியமுறையில் சாதகமற்றதாக இருப்பதாக உறுதியைக்கொடுக்கிறது" என்று கூறியுள்ளார்.

இந்த தலையங்கம், சார்க்கோசி உறுதியாக அமெரிக்காவின் மத்திய கிழக்கு போர்த் திட்டங்களுக்கு இணங்கிச் செல்லும் நேரத்தில் வந்துள்ளது. பிரான்சின் வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெர், ஜலால் தலாபானி உட்பட அமெரிக்க சார்புடைய அரசியல் வாதிகளுடன், பிரெஞ்சு எண்ணெய் நிறுவனம் Total மற்றும் அமெரிக்க பெரு எண்ணெய் நிறுவனம் Chevron உடன் ஈராக்கில் Majnoon எண்ணெய் வயல்களை பற்றிய ஒப்பந்தங்களை செய்து கொண்ட பின்னர், சமீபத்தில் பாக்தாத்திற்கு பயணித்திருந்தார். ஒரு முனையில் இராணுவ சக்தியாக தன்னை கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பாவிற்கு அழைப்பிவிடுத்த பின்னர் சார்க்கோசி உலகம், தன்னுடைய தெஹ்ரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் என்ற கொள்கை தோற்றால், உலகம் "ஒரு ஈரானிய குண்டு அல்லது ஈரான்மீது குண்டுவீச்சு" என்பதற்கு இடையே ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றார்.

தொழிற்சங்கங்களின் பங்கு

சார்க்கோசியின் அரசாங்கத்தில், தொழிலாளர்கள் இவருக்கு முன்பு இருந்த ஜனாதிபதி ஜாக் சிராக்கின் கீழ் அமைக்கப்பட்ட பல மந்திரிசபைகளில் இருந்து வேறுபட்ட ஆட்சியைத்தான் எதிர் கொள்கின்றனர்.

பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்க பதில் நடவடிக்கையின் அடிப்படை வேலைத்திட்டத்தை - பெருகிய உறுதியற்ற சூழ்நிலையின் கீழ் சமூக செலவினக் குறைப்புக்கள், இராணுவ ஆக்கிரோஷமுறை செலவுகள் போன்றவற்றை சார்க்கோசி செயல்படுத்த முயன்று வருகிறார். 2003லும் 2006லும் பிரான்சிற்குள்ளே நிகழ்ந்த ஓய்வூதியக் குறைப்புக்கள், தொழிலாளர் நலச் சட்ட சீர்திருத்தங்கள் இவற்றிற்கு எதிரான மகத்தான வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் மற்றும் 2005ல் ஐரோப்பிய அரசியலமைப்பை நிராகரித்த வகையில் பிரெஞ்சு, டச்சு வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்தது, ஆகியவை ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தை ஏதோஒருவகையில் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. ஈராக்கில் அமெரிக்க நெருக்கிடியின் உலகளாவிய வெடிப்புத் தன்மை கொண்ட விளைவுகளையும் சார்க்கோசி எதிர்கொண்டாக வேண்டும்.

பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் புறநிலையான பலவீனமான நிலை இருப்பினும் சார்க்கோசி எடுத்துச்செல்ல முடிகிறது என்றால், இது தொழிற்சங்க அதிகாரத்துவம் அவருக்கு கொடுக்கும் அரசியல் உதவியினால்தான் பெரும்பாலும் முடிகிறது எனலாம். சார்க்கோசியுடனான அவர்களின் பகட்டான பேச்சுவார்த்தைகள், சார்க்கோசியின் பிற்போக்குத்தனமான குறைப்புக்கள் எப்படியோ பிரெஞ்சு தேசம் ஒட்டுமொத்தத்தின் சிறந்த நலன்களின் பேரிலானது என்று சிற்சில குழப்பமான கருத்துக்களை மனதிற்கொள்ள முதலாளித்துவ செய்தி ஊடகத்தை அனுமதிக்கின்றது.

சற்றே விவேகத்துடன் பகிரங்கமாக 22,800 பொதுப் பணி வேலைகள் நிரப்பப்படமாட்டாது என்ற அறிவிப்பு வருவதற்கு முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட வகையில், சார்க்கோசி முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புக்களின் தலைவர்களை அடிக்கடி சந்தித்து வருகிறார்; இதில் மற்றவர்களை தவிர CFDT உடைய François Chérèque, Force Ouvrière இன் Jean Claude Mailly மற்றும் CGT உடைய Bernard Thibault ஆகியோரும் அடங்குவர்.

தொழிற்சங்கங்கள் சார்க்கோசியுடன் 2006ல் நடந்த முதல் வேலை ஒப்பந்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட காலத்தில் இருந்தே நெருக்கமாக ஒத்துழைத்துள்ளன. அக்காலக்கட்டத்தில் உள்துறை மந்திரியாக இருந்த சார்க்கோசி அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த டொமினிக் டு வில்ப்பன்னுடைய CPE திட்டங்களை குறைகூறி, தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து கொண்டு ஆர்ப்பாட்டங்களை நிறுத்துவதில் வெற்றி அடைந்து வில்ப்பனை CPE சட்டத்தை திரும்பப் பெறக் கட்டாயப்படுத்தினார்.

இப்பொழுது தொழிற்சங்கங்கள் வெளிப்படையாக சிறப்பு திட்ட ஓய்வூதியங்களை குறைக்க பிரச்சாரம் செய்து வருகின்றன. Chérèque, CFDT இதுபற்றி பேச்சுவார்த்தைகள் நடத்த தயாரென்றும், "தக்க முடிவுகளை அவை வளர்ச்சியுறும் வகையில் செய்யா விட்டால், இவை திவாலாகிவிடும் என்றும் மக்களுடைய ஓய்வூதியங்கள் தரப்படமாட்டாது" என்றும் கூறியுள்ளார். சிறப்பு திட்டங்கள் திவாலாகும் என்றால் அது சார்க்கோசி மற்றும் அவருடைய அரசாங்கம் அதற்கு கொடுக்க வேண்டிய பணத்தை தராவிட்டால்தான் என்ற உண்மையை இக்கருத்து எளியமுறையில் அசட்டை செய்கிறது.

CGT சிறப்பு திட்ட ஓய்வூதியங்களுக்கு காட்டும் அணுகுமுறை சமீபத்தில் SNCF என்னும் பிரெஞ்சு பொதுத்துறை இரயில் தொழிலாளர்களின் CPR (Caisse de Retraite et de Prévoyance) என்னும் ஏப்ரல் மாதத்தில் வந்த ஓய்வூதியத் திட்டத்தில் அவர்கள் காட்டிய ஒத்துழைப்பில் வெளிப்படுகிறது. பல தொழிலாளர்களும் நிர்வாகம் உடன்பாடு பற்றிய உறுதியான உரையை வெளியிடுவதற்கு மறுப்பது கவனித்து, அதையொட்டி ஏற்படும் விளைவுகள் வேலை பார்ப்பவர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களுடைய ஐக்கியத்தைக் குலைக்கும் என்று எதிர்த்தனர். ஆனால் CGT அவர்களை உடன்பாட்டை ஏற்க அழுத்தம் கொடுத்தது; CGT இன் இரயில் துறை செயலரான Didier Le Reste, "இவ்விதத்தில் நமது ஓய்வூதியங்கள் பொதுவான பொதுத்துறை தொழிலாளர்கள் நிதிக்கு குறைக்கப்படுவதிலிருந்து தப்பி விட்டோம்" என்றார். ஆனால் Le Reste இன் நம்பிக்கை மிகுந்த வெளிப்படை கருத்து இப்பொழுது நிகழ்வுகளினால் கடக்கப்பட்டு விட்டது.

CPR இன் திட்டத்தை எதிர்த்த பல தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதுடன் CGT ஐ விட்டு விலகுமாறும் அழுத்தம் கொடுக்கப்பட்டு, இறுதியில் தொழிற்சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். CGT ஐ விட்டுவிலகாவிட்டால் வன்முறையை சந்திக்க நேரிடும் என அவர்களுள் ஒருவர் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

தொழிற்சங்க உயரடுக்கு விரும்பும் கொள்கை CGT யின் ஓய்வூதியப் பிரிவுத் தலைவரான Jean-Christophe Le Duigou இனால் மையவாத-இடது நாளேடான Le Monde க்கு கொடுத்த பேட்டியொன்றில் வெளிவந்தது: "சிறப்பு திட்டங்கள் பற்றி விவாதிக்க CGT தயாராக உள்ளது; ஆனால் 'ஒரு நேரத்தில் ஒரு நிறுவனம் பற்றித்தான், ஒரு நேரதந்தில் தொழிற்சாலை பற்றித்தான்' " என்று அதில் அவர் கூறினார். சுருங்கக்கூறின், ஒவ்வொரு வேலைத்தளத்திலும் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தனித்தனி ஒப்பந்தத்தை முன்வைப்பதன் மூலம் தொழிலாளர்கள் வெட்டுக்களுக்கு எதிராக கூட்டாக திரள்வதை தடுப்பதுதான் நோக்கம் ஆகும்.

சார்க்கோசியுடன் ஒத்துழைப்பது என்னும் தொழிற்சங்கங்களின் செயல் --இவற்றின் வலதுசாரித் திட்டங்கள், சட்டம் ஒழுங்கு வார்த்தைஜாலங்கள் மற்றும் தீவிர வலதுடன் ஊடாடுதல் ஆகியவை எந்த தீவிர அரசியல் நோக்கருக்கும் நன்கு வெளிப்படையாக தெரியும்-- அரசியல் ரீதியாய் குற்றம் சார்ந்த, அரச சார்புடைய பெருநிறுவன முறைக்கு பெரிதாய் நகர்தலை குறிக்கிறது.

பிரான்சின் ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கத்துடன் நிரந்தரமாக ஒரு மோதலை தவிர்க்க முடியாது; அதுவோ 1995, 2003 மற்றும் 2006 ஆண்டுகளில் இதேபோன்ற பிற்போக்குத்தன வெட்டுக்களுக்காக பலமுறையும் தன்னை அணிதிரட்டி நின்றுள்ளது. சார்க்கோசி அதிகாரத்திற்கு வந்துள்ளதும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சீரழிவும் அவர்களுடைய கொள்கைகள் பற்றிய தொழிலாள வர்க்க எதிர்ப்பின் அரசியல் அச்சில் ஒரு விலகலுக்கு வழிவகுத்துள்ளன.

பிரெஞ்சு அரசியல் பூகோள பொருளாதார சக்திகளினால் தீர்மானிக்கப்படும் பொழுது மற்றும் இராணுவவாதம் மற்றும் போர் இவற்றின் கொடூரமான வாய்ப்புக்களால் எதிர்கொள்ளப்படும் பொழுதான ஒரு சகாப்தத்தில், தொழிற்சங்கங்களை அரசுடன் உடன்பாடுகள் மூலம் வாழ்க்கைத் தரங்களை காக்கும் போராட்டத்திற்கு தலைமைதாங்கும் தொழிற்சங்கங்களை நம்பியிருத்தல் பயனற்றதும் ஆபத்தானதும் ஆகும். வளர்ந்துவரும் உலகில் வெடிக்கும் தன்மை உடைய இராணுவ நிலைமையையும், உயர் தொழில்நுட்பம் மற்றும் குறைவூதிய உழைப்பு கொண்ட உற்பத்தியாளர்களுடன் பெருகிய முறையில் நம்பிக்கையிழந்த வகையில் போட்டியிடுவதை எதிர் கொள்கையில், பிரெஞ்சு உயரடுக்கு இன்னும் கூடுதலான முறையில் தொழிலாளர்களுக்கு சலுகைகளை கொடுக்க விருப்பம் அற்றதாகத்தான் இருக்கும். சார்க்கோசியுடனான தொழிற்சங்கங்களின் இடைவிடாத ஆலோசனைகள் இக்கொள்கையின் அடிப்படை நிலைப்பாடுகளுடன் அவர்கள் உடன்படுகின்றனர் என்பதைக் காட்டுகின்றன.

வாழ்க்கைத்தரங்கள், வேலைகள், சர்வதேச அரசியல் பற்றிய பிரச்சினைகள் 2003 மற்றும் 2006ல் சிராக் மந்திரிகளுக்கு எதிரான வேலைநிறுத்தம் அல்லது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்திய பலருடைய மனங்களிலும் ஏதோ வெவ்வேறு பிரச்சினைகள் என்று தோன்றியிருக்கலாம். இன்று சார்க்கோசி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இப்பிரச்சினைகனை முழுமையான ஒன்றாக ஒருங்கிணைத்துள்ளது. உலகச் சந்தையின் அடிப்படையில் பிரெஞ்சு பொருளாதாரத்தை மறு சீரமைத்தல், இலாபமற்ற நடவடிக்கைகளை அகற்றுதல், ஏராளமான வேலைகளை தகர்த்தலை மற்றும் மலிவான எண்ணைய்க்கு சர்வதேச போட்டி மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க தலைமையிலான கொள்ளை இவற்றை, தொழிலாளர்கள் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் மற்றும் சர்வதேச திட்டமிட்ட பொருளாதாரம் இவற்றை கட்டாயம் எதிராக முன்வைக்க வேண்டும்.