World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Total surrender by US auto union

அமெரிக்க கார் தொழிற்சங்கத்தின் முழு சரணாகதி

By the editorial board
27 September 2007

Use this version to print | Send this link by email | Email the author

இக்கட்டுரை PDF வடிவமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. WSWS வாசகர்களையும் கார்த் தொழிலார்களையும் இதை நகல் எடுத்து பரந்த அளவில் வினியோகிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.

ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் (United Auto Workers union) ஜெனரல் மோட்டார்சிற்கு எதிராக நிகழ்த்திய 73,000 தொழிலாளர்களுடைய வேலைநிறுத்தத்தை புதன் அதிகாலையில் நிறுத்திவிட்டதுடன், நிறுவனம் கோரியுள்ள பாரிய விட்டுக்கொடுப்புகளை முற்றிலும் சரணடைந்த வகையில் அளிப்பதைப் பிரதிபலிக்கும் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தையும் அறிவித்துள்ளது.

கார்த்தொழிலில் மிகப் பெரிய நிறுவனத்தின் அனைத்து அமெரிக்க ஆலைகளையும் தொழிலாளர்கள் முடக்கிய இரண்டே நாட்களுக்குள் தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தை அடக்கிய ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தின் பிடியில் இருந்து கார் தொழிலாளர்கள் மிக அவசரமான முறையில் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டிய தேவையை வெளிப்படுத்துவதுடன் வேலை இழப்புக்கள், ஊதிய இழப்புக்கள், சுகாதார பாதுகாப்பு இழப்புக்கள், ஓய்வூதிய இழப்புக்கள் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடுவதற்கு அடிப்படையில் ஒரு புதிய தளத்தையும் மற்றும் அமைப்புக்களையும் ஒட்டுண்ணித்தன, ஊழல் மிகுந்த ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்க அதிகாரத்துவத்தில் இருந்து முற்றிலும் சுதந்திரமான வகையில் அமைக்கவேண்டிய தேவையையும் காட்டியுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக போராட்டத்திற்கான புதிய அடிப்படை அரசியல்ரீதியானதாக, சுயாதீன முறையில் அமெரிக்காவில் பெருநிறுவன தன்னலக் குழுவிற்கும், பெருவணிகத்தின் இரட்டைக் கட்சிகளுக்கும் எதிரான வகையில் தொழிலாள வர்க்கத்தை அரசியலில் திரட்டும்வகையில் இருக்க வேண்டும்.

ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம், ஜெனரல் மோட்டார்ஸுக்கு உடந்தையாக இருந்து கொண்டுவந்துள்ள காட்டிக் கொடுப்பை ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலார்கள் திட்டவட்டமாகவும் உடனடியாகவும் நிராகரிக்க வேண்டும். இன்னும் அடிப்படையாக அவர்கள் இப்படி முறியடிக்கப்பட்ட தோல்வியின் கசப்பான படிப்பினைகளையும் நன்கு உய்த்துணர வேண்டும்.

மூன்று தசாப்தங்களில் முதன் முதலாக நடந்த தேசிய கார் தொழில் வேலைநிறுத்தம், 1970ல் நடைபெற்ற 67 நாள் வேலைநிறுத்தத்திற்கு பின்னர் முதல் தடவையாக ஜெனரல் மோட்டார்சில் நடந்த வேலைநிறுத்தம் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் இருக்கும் தொழிலாளர்களின் அதிகரித்துவரும் அதிருப்தி மற்றும் எதிர்ப்பின் வெளிப்பாடாக இருந்தது. நிர்வாகத்தின் திட்டங்களான ஓய்வு பெற்றவர்களுக்கு சுகாதார நலன்களை அழித்தல், ஊதியங்களை குறைத்தல், ஓய்வூதியங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துதல் வேலைகள் மீது தாக்குதலை தொடர்தல் என்பவற்றிற்கு எதிராக திட்டமிட்டு தொழிலாளர்கள் வேலைநிறுத்த முறையை மேற்கொண்டிருந்தனர்.

ஆனால், ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தை பொறுத்தவரையில், ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலைநிறுத்தம் ஒரு அவநம்பிக்கை நிறைந்த உத்தியாகத்தான் இருந்தது; அதன் நோக்கம், நிர்வாகத்துடன் இது கொண்டுள்ள ஒத்துழைப்பை மறைப்பதற்கு வேலைநிறுத்தம் பயன்படுத்தப்பட்டது; அடிமட்டத் தொழிலாளர்களின் சீற்றத்திற்கு ஆபத்தில்லாத ஒரு வெளிப்பாட்டை கொடுத்தது; மேலும் நிறுவனம் ஓய்வு பெற்றவர்களுக்கு தன்னுடைய சட்டபூர்வ கொடுப்பனவுகளை வழங்குவதை தடுக்கும் வகையில் ஏற்பட்ட உடன்பாட்டின் விதிகளுக்கு ஜெனரல் மோட்டார்ஸுடனான பூசலில் தொழிலாளர்களை பகடைக் காயாக பயன்படுத்த உதவியது; தொழிற்சங்கத்தை ஒரு பெருநிறுவன அமைப்பாக மாற்றவும், ஒரு பல பில்லியன் டாலர் சுகாதாரப் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனத்தை கட்டுப்படுத்தும் உரிமை பெறுவதற்கும் பயன்படுத்தப்பட்டது.

கனடா மற்றும் மெக்சிகோ முழுவதும் ஜெனரல் மோட்டார்சின் செயற்பாடுகள் முடக்கம் காணத் தலைப்பட்ட கட்டத்தில் தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தை முடித்துவிட்டது. ஆரம்பத்தில் இருந்தே ஜெனரல் மோட்டார்ஸ் உடன் ஒருங்கிணைந்துதான் இந்த வேலைநிறுத்தம் தொழிற்சங்கத்தால் நடத்தப்பட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை; நிறுவனத்திற்கு மிகக் குறைந்த நிதியச் சேதம்தான் இருக்க வேண்டும் என்பது அந்நோக்கமாகும்.

ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் Ron Gettlefinger புதனன்று அறிவித்த உடன்பாடு கிட்டத்தட்ட வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே ஒப்புக் கொண்டதாகும். வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்னரே அமெரிக்க கார்த் தொழிலை ஒரு குறைவூதிய, மோசமான வேலை நிலைமைகள் உள்ளதாக மாற்றும் நிர்வாகத்தின் திட்டத்திலிருந்து இது குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டதல்ல.

கார் தொழிலாளர்களின் நலன்கள், பேச்சு வார்த்தைகளில் எந்தக் கட்டத்திலும் பிரதிபலிக்கப்படவில்லை. மூடிய கதவுகளுக்கு பின் நடந்த பேச்சுக்கள் இரு பெருநிறுவன அமைப்புக்களுக்கு இடையே நடக்கும் பேரத்தின் தன்மையை கொண்டிருந்தன; ஒவ்வொன்றும் தன்னுடைய வணிக நலன்களுக்கு சிறந்த ஆதாயத்தைத்தான் தேடின. ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம், ஜெனரல் மோட்டார்சின் பெருநிறுவனப் போட்டியாளர்களின் விட்டுக் கொடுக்காத தன்மை மற்றும் போர்க்குணம் இவற்றை சிறிதளவேனும் காட்டவில்லை என்பதுதான் வேறுபாடு; பேரம் நடந்த மேசையின் அந்தப் புறத்தில் இருந்தவர்கள் அவருக்கு தக்கவகையில்தான் Gettlefinger மீது இகழ்வுற்றனர்.

ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்கள் உடன்பாட்டிற்கு இசைவு தெரிவிப்பதற்கு நம்ப வைக்கும் தன்னுடைய முயற்சிக்கு அனைத்துவித நடவடிக்கைகளையும் தொழிற்சங்கம் மேற்கொள்ளும். ஆனால் உண்மை வோல்ஸ்ட்ரீட் பங்குசந்தை கொடுத்த தீர்ப்பின் மூலம் நிரூபணம் ஆயிற்று; மிக அடிப்படை நிலைமைகள் கார்த் தொழிலாளர்களால் தியாகம் செய்யப்பட்டதை குதூகலிக்கும் முறையில் ஜெனரல் மோட்டார்சின் பங்குகள் மிகப் பெரிய வகையில் 9.4 சதவிகிதம், $3.22 என்று உயர்ந்தன. போர்ட் மோட்டார் நிறுவனத்தின் பங்குகள் 6.5 சதவிகிதம் உயர்ந்தன; ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் இதேபோன்ற செலவைக் குறைக்கும் உடன்பாட்டை தனக்கும் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இது நடந்தது.

"ஒரு வேலைநிறுத்த நிதியமாக" $950 மில்லியன் தொகையை ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் கொண்டுள்ளது. வேலைநிறுத்தப் பாதிப்பினால் ஏற்படக்கூடிய இழப்பை பல வாரங்கள் இது ஈடுகட்டப் போதுமானது; தொழிற்சங்க தலைமை ஒதுக்கும் அற்பத்தொகையான வாரத்திற்கு $200 என்றாலும் இது போதுமானதேயாகும். ஆனால் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் பற்றிய பிற விஷயங்களை போல், கையிருப்பு பெருந்தொகையை போராட்டத்திற்காக பயன்படுத்தப்படாமல், பெரும் ஊதியம் மற்றும் செலவினங்களை கொண்டுள்ள, தொழிற்சங்கத்தை நடத்துகின்ற அதிகாரத்துவத்தினரைத்தான் சென்று அடையும்.

நோவை அதிகரிப்பதுபோல், தொழிற்சங்கங்களின் மில்லியன் கணக்கான டாலர்கள் இரண்டு நாட்கள் வேலையிழப்பால் ஊதிய இழப்பு பெற்ற தொழிலாளர்களின் கஷ்டங்களுக்கு உதவாது; ஏனெனில் வேலைநிறுத்த உதவிகள் எட்டு நாட்கள் வேலைநிறுத்ததிற்கு பிறகுதான் கொடுக்கப்படும்.

இசைவு கொடுக்கப்பட்டு விட்டால், நான்கு ஆண்டுகால ஒப்பந்தம் தற்போதைய, புதிதாக வரவிருக்கும் கார்த் தொழிலாளர்களுக்கு பேரழிவு விளைவுகளைத்தான் கொடுக்கும்; மற்றும் நூறாயிரக்கணக்கான ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் அத்தகைய விளைவுகள்தான் வரும். வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டுள்ளபடி, இந்த உடன்பாடு, "ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் ஓய்வு பெற்றவர்களுடைய சுகாதார பாதுகாப்பிற்கு ஜெனரல் மோட்டார்ஸ் கொண்டுள்ள கடன்பாடுகளை மறுசீரமைக்கும் வரலாற்றுத் தன்மை கொண்டுள்ளது; இதன் தற்போதைய தொழிலாளர்கள் பலரையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு குறைந்த ஊதியங்களில் புதிய தொழிலாளர்களை அமர்த்துவதற்கும் ஒரு வடிவமைப்புக் கருவியை இது கொடுக்கும்."

ஆயிரக்கணக்கான வயது கூடிய தொழிலாளர்கள் ஓய்வு பெறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு மரபார்ந்த ஊதியத்தில் பாதியை மட்டுமே பெறும் இளைய தொழிலாளிகள் நியமிக்கப்படுவர்; பாரியளவில் அவர்களுடைய சலுகைகள் குறைக்கப்பட்டுவிடும். தொழிற்சங்கக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் புதிய சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு இன்னும் கடுமையான வகையில் ஓய்வு பெற்றவர்கள் தங்கள் கையைவிட்டுச் செலவழிக்க வேண்டிய தொகைகளை அதிகரிக்கும்; ஓய்வூதிய நிதியத்தின் இருப்புக்களை பெரிதும் கரைத்து விடும்; மேலும் இப்பொழுதுள்ள தொழிலாளர்களின் ஊதியங்கள், நலன்கள் ஆகியவை புதிதாக வெட்டுக்களையும் காணும்.

ஓய்வு பெற்றோர் சுகாதாரப் பாதுகாப்பு அறக்கட்டளை, விரும்பி வந்து தொழிலாளர் சேர்ந்துள்ள நல அறக்கட்டளை என்று அழைக்கப்படும், VEBA (தொழிலாளர்களின் சுயாதீன நல அமைப்பு) என்ற புதிய அமைப்பில், மற்ற கார் தொழில் அதிபர்களும் பகுதி நிதியம் அளிப்பர்; அமெரிக்காவில் மிகப் பெரிய முதலீட்டு நிதியத்தின்மீது ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் அதன் கட்டுப்பாட்டை செலுத்தும் --இதன் மதிப்பு $70 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது; இதையொட்டி வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலின் சொற்களில் இது ஒரு "பெரிய நிதிய அமைப்பாக விளங்கும்."

Gettelfinger உம் மற்ற உயர்மட்ட ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க அதிகாரிகளும், தாங்கள் பெயரளவிற்கு பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள், வேலை இழுப்புக்கள் இவற்றில் இலாபம் பெறும் வகையில் மில்லியனர்களாக மாறுவர்.

ஒப்பந்தத்தின் விதிகள்

* சுகாதாரப் பாதுகாப்பு: தொழில் வழங்குனர் நிதியுதவி வழங்கும் சுகாதாரப் பாதுகாப்பு நிலை ஓய்வூதியம் பெறுபவர்கள் பெறும் உரிமையை தொழிற்சங்கம் கைவிட்டுவிட்டது; இந்த நலன் 1964ல் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க தொழிலாளர்களால் பெறப்பட்டது ஆகும். VEBA அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஜெனரல் மோட்டார்ஸ் இன் சட்டபூர்வ மற்றும் ஒப்பந்த கடமைகளை 400,000 ஓய்வு பெற்றவர்கள், அவர்களை நம்பியிருப்பவர்களுக்கு அளிக்க வேண்டியதை முடித்து விடுகிறது.

ஆரம்பத்தில் இருந்தே VEBA அறக்கட்டளை நிதியத்தை குறைவாகப் பெற்றிருக்கும்; ஜெனரல் மோட்டார்ஸ் தான் கொடுக்க வேண்டிய $51 பில்லியனுக்கு பதிலாக $30 பில்லியனை மட்டுமே கொடுக்கும் என்று தகவல்கள் வந்துள்ளன. ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், அவர்களுடைய குடும்பங்கள் ஆகியவற்றின் விதி தொழிற்சங்கம் பெருகியமுறையில் உறுதியற்ற பங்குச் சந்தையில் செய்யும் முதலீடுகளைத்தான் முற்றிலும் நம்பியிருக்கும். நிதியத்தில் குறைப்பு ஏற்பட்டால் அது இணைந்து கொடுப்பவர்கள் மற்றும் கட்டணங்களை பெரிதும் உயர்த்தும்; VEBA நிதியம் இல்லாத நிலையில் அப்படித்தான் ஆயிற்று என்பதை Caterpillar, Detriot Diesel தொழிலாளர்கள் கசப்பான அனுபவமாகப் பெற்றனர்.

* ஓய்வூதியங்கள்: Business Week ஏடு குறிப்பிட்டுள்ளபடி ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம், ஜெனரல் மோட்டார்ஸுக்கு அதன் ஓய்வூதிய நிதியைக் கொள்ளையடித்து VEBA அறக்கட்டளைக்கு கொடுக்க வேண்டிய அளிப்பின் ஒரு பகுதியை கொடுக்க உடன்பட்டது. இது வருங்காலத்தில் ஓய்வூதிய நிதியம், ஓய்வூதிய நலன்களின் கடன்களை தீர்க்கும் திறனுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

* ஊதியங்கள்: இந்த உடன்பாடு இரு-அடுக்கு ஊதிய முறையை நிறுவுகிறது; வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்தின்படி, "அதில் புதிதாக வேலையில் சேர்த்துக்கொள்ளப்படுவோருக்கு ஊதிய, பிறநலன்களின் விகிதங்கள் மிகவும் குறைவாக (பாதியாகக் கூட இருக்கலாம்) ஜெனரல் மோட்டார்சில் இருக்கும் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க தொழிலாளர்களுக்கு கொடுக்கும் ஊதியம்-பிற சலுகைகள் ஆகியவற்றில் இருந்து கொடுக்கப்படும்." இணைக்கும் உற்பத்தி தடத்தில் இல்லாத (non-assembly line) தொழிலாளர்களுக்கு (பராமரிப்பு, பிற பணிகள்) ஊதியங்களும் குறைக்கப்பட்டுவிடும்.

தற்போதைய ஒப்பந்த காலத்தில், இப்பொழுது இருக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஏதும் கிடையாது. மாறாக நான்கு ஆண்டுகால ஒப்பந்தக் காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் நிர்வாகம் ஒரு மொத்த போனஸ் தொகையை கொடுக்கும். வாழ்க்கைத்தர செலவினம் ஈடுகட்டும் வகையிலும், கூடுதலான சுகாதாரப் பாதுகாப்புச் செலவினங்களில் இருக்கும் தொழிலாளர்களின் பங்கை நாடுவதற்கும் ஜெனரல் மோட்டார்ஸ் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம்.

இது அடிப்படையில் மூன்று பெருநிறுவனங்கள் (GM, Ford, Chrysler) மூன்றும் மிகப் பெரிய அளவில் ஊதிய வெட்டுக்களை பாரிய Delphi கார் பகுதிகள் தயாரிப்பு தொழிற்சாலை செய்து கொண்டதை விரிவுபடுத்தும் நோக்கத்தை பிரதிபலிக்கிறது; மேலும் "மத்தியதர வகுப்பு" கார் தொழிலாளி என்ற முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலின் கோரிக்கை நிறைவேறுதலும் ஆகும்.

* வேலைகள்: ஜெனரல் மோட்டார்சிடமிருந்து வேலைப் பாதுகாப்பு உத்தரவாதங்களை பெறுவதற்காக வேலைநிறுத்தத்தை தொடக்கியதாக ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் கூறியது. ஆனால் ஒப்பந்தத்தை ஒரு வேலைப் பாதுகாப்பு உடைய வரம் என்று சித்தரித்துக் காட்டுவது கார்த் தொழிலாளர்களின் அறிவிற்கு ஒரு அவமதிப்பு ஆகும். எப்படிப் பார்த்தாலும், இந்த உடன்பாடு எவ்வித வேலை உத்தரவாதங்களையும் கொடுக்கவில்லை; அமெரிக்க ஆலைகளில் புதிதாக பணம் முதலீடு செய்வது நிர்வாகத்தால் கருதப்படும் என்ற வெற்று உறுதிமொழிகள்தான் கொடுக்கப்பட்டுள்ளன.

ஜெனரல் மோட்டார்ஸ் சிறிதும் தடையற்ற முறையில் வேலைக் குறைப்பு, ஆலை மூடப்படும், தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என்ற அச்சுறுத்தல் ஆகியவற்றை பயன்படுத்தி தொழிலாளர்களிடம் இருந்து வரவிருக்கும் காலத்தில் கூடுதலான சலகைகளையும் பறிக்க முடியும்.

ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தை ஒரு வணிகமாக VEBA மூலம் மாற்றியது என்பது நீடித்தவகையிலான சீரழிவின் உச்சக் கட்டமாகும்; இதில் தொழிற்சங்கம் பெருகிய முறையில் தொழிலாளர்களுடன் விரோதப் போக்கை கொள்ளும் என்பதோடு இன்னும் கூடுதலான முறையில் சலுகை பெற்ற ஒரு அதிகாரத்துவ கருவியாக மாறி தனது உறுப்பினர்களுக்கே பொறுப்புக் கூறாத நிலைக்கும் வந்துவிடும்.

இது ஒரு தனிப்பட்ட ஊழல் பிரச்சினை என்பது மட்டும் அல்ல; (தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அனைத்து தட்டுக்களிலும் ஊழல் நிறைந்து இருந்தாலும் இது அப்பிரச்சினை மட்டும் அல்ல). ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தின் முழு முன்னோக்கு மற்றும் கொள்கையின் தோல்வியில் வேர்களை கொண்டுள்ளது என்பது மட்டும் அல்லாமல், உத்தியோகபூர்வ அமெரிக்க தொழிலாளர் இயக்கம் முழுவதற்கும் இவ்வாறுதான் நிலைமை உள்ளது.

தொழிற்துறை சங்கங்களின் தலைவர்கள், 1930களின் கடுமையான தொழில்துறை மோதல்களில் உள்நிறுத்தப் போராட்டங்களில் எழுச்சியுற்றவர்கள், ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் உட்பட, ஒரு தொழிற் கட்சிக்கான போராட்டம் என்பதை நிராகரித்து, மாறாக ஜனநாயகக் கட்சியுடன் பிணைந்து நின்றனர். இது தொழிலாள வர்க்கத்தை அமெரிக்க ஆளும் உயரடுக்கின் நலன்களுக்கு அடிபணியச் செய்வதைத்தான் குறிப்பிடுகிறது; மேலும் அரசாங்கம் அளிக்க வேண்டிய சமூக நலன்கள், அனைவருக்கும் பொருந்தும் தன்மையுடைய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தொழில்துறை ஜனநாயகம் ஆகியவற்றை கைவிடும் தன்மையையும் கொடுத்துவிட்டது. அமெரிக்க முதலாளித்தவமுறை ஒவ்வொரு ஆலையிலும் ஒவ்வொரு வேலைத் தளத்திலும் செலுத்தும் பொருளாதார சர்வாதிகாரத்தை ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் ஏற்றது.

இதன் பொருள், கார்த் தொழிலாளர்களின் ஊதியங்களும், பிற நலன்களும் நிறுவனங்களின் இலாபமுறையுடன் பிணைக்கப்பட்டு, அடிபணியச்செய்யப்பட்டது.

அமெரிக்க தொழிற்துறையின் மேலாதிக்க உயர்நிலை இருந்த காலத்தில் (உலகில் 10 கார்களில் ஆறு டிட்ராயிட்டில் இருந்த கார் தயாரிப்பாளர்களால் கட்டமைக்கப்பட்ட காலத்தில்) இந்தக் காட்டிக் கொடுப்பின் விளைவு அதிகம் தெரியவில்லை. ஆனால் அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகந்தழுவிய பொருளாதார நிலையில் தீவிர வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் உற்பத்தி அடித்தளத்தில் இதன் தீவிர வெளிப்பாடு சரிவைக் காணும் நிலையில், தொழிற்சங்கத்தின் முதலாளித்துவ, தேசியவாத கொள்கைச் சார்பின் பேரழிவு தரக்கூடிய தாக்கங்கள் ஒவ்வொரு கார்த் தொழிலாளியின் மீதும் பாதிப்பை கொடுத்துள்ளன. இன்று, பல தலைமுறை கார் தொழிலாளர்கள் போராடி வெற்றி பெற்ற விளைவுகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன.

அமெரிக்க கார்த் தொழிலின் நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் வர்க்கப் போராட்டத்தின் எவ்வித வடிவமைப்பையும் துறந்துவிட்டது; ஆலைகள் மூடல், ஊதியக் குறைப்புக்கள் ஆகியவற்றிற்கு கார்த் தொழிலாளர்கள் காட்டும் எதிர்ப்பையும் நசுக்கி விடுகிறது; மேலும் தொழிற்சங்கம்-நிர்வாகம் பங்கு பெறுதல் என்ற பெருநிறுவனக் கொள்கையும் தழுவிவிட்டது. இந்த அடிப்படையில்தான் இது 1978ல் இருந்து 600,000 தொழிற்சங்கங்கள் உறுப்பினர்கள் வேலைகளை அகற்ற ஒத்துழைத்ததுடன் இன்னும் கூடுதலான முறையில் ஊதியங்கள், நலன்கள், பணிநிலைகள் என்று தொழிலாளிகள்மீது நடத்தப்படும் தாக்குதலுக்கும் ஒத்துழைப்பை கொடுக்கிறது.

அதிகரித்துவரும் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியானது, தேசிய பொருளாதாரம் மற்றும் தேசிய தொழிலாளர் சந்தையின் வடிவமைப்பிற்குள் பெருநிறுவனங்களில் இருந்து சலுகைகளை பெறும் தேசியவாத வேலைத்திட்டத்தை அடித்தளமாக கொண்ட அனைத்து தொழிலாளர் அமைப்புக்களையும் மதிப்பிழக்க செய்ததன் மூலமாக சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் இறுதி ஆணி, அமெரிக்க தொழிற்சங்கங்கள் மீது என்று இல்லாமல் உலகெங்கிலும் இருக்கும் தொழிற்சங்கங்கள்மீது அடிக்கப்படுகின்றது. தொழிலாளர்களுக்கு மேலும் சலுகைகள் கொடுப்பதற்கு ஒருகாலத்தில் அழுத்தம் கொடுத்த அமைப்புக்கள் என்ற நிலையில் இருந்து, எல்லா இடங்களிலும் தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திற்கு சலுகைகள் கொடுக்குமாறு தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அமைப்புக்களாக தங்களை மாற்றிக் கொண்டுள்ளன.

ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க அதிகாரத்துவத்தின் முக்கிய அக்கறை, விரைவாக உறுப்பினர் எண்ணிக்கை சரிந்தள்ள இந்த மூன்று தசாப்த காலத்தில், அதையொட்டி தொழிற்சங்கக் கட்டணப் பாக்கிகளில் ஏற்பட்ட விளைவான குறைவையும் அடுத்து, தன்னுடைய நலன்களை காப்பாற்றிக் கொள்ளுவதற்கு அது நிர்வாகத்துடன் ஒத்துழைத்த விதத்தில் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்களின் வேலைகளையும் தகர்ப்பதற்கு இட்டுச்சென்றுள்ளது. சுகாதாரக் காப்பீட்டு வணிகத்தில் VEBA என்னும் பாரிய அறக்கட்டளை நிதியின் கட்டுப்பாட்டை அது பெற்றுள்ள அளவில், ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் தன்னுடைய பிரச்சினையை தீர்க்க நம்புகிறது. அதற்காக அது வேலைகளையும், ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களில் வாழ்க்கைத் தரங்களையும் தியாகம் செய்வதையும், தன்னை செல்வம் கொழிக்கச் செய்வதற்கான உரிமைகளை பெறுவதற்கும் தயாராக உள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ் வேலைநிறுத்தம், தொழிலாளர்களுக்கும் பழைய அதிகாரத்துவம் நிறைந்த தொழிலாளர் அமைப்புக்களுக்கும் இடையே உள்ள இயல்பான பூசலை உயர்த்திக் காட்டுகிறது. அது காட்டிக் கொடுத்தள்ள நிலையில் தொழிலாளர்கள் அதன் தேவையற்ற சுமையான இந்த அமைப்புக்களை தூக்கி எறியாமல் எந்தத் தீவிரப் போராட்டத்தையும் நடத்த முடியாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; அதேபோல் தொழிலாள வர்க்கத்திற்காக ஒரு புதிய அரசியல் இயக்கத்தை கட்டமைக்க வேண்டிய தேவையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அத்தகைய இயக்கம் பெருவணிகக் கட்சிகள் இரண்டில் இருந்தும் சுயாதீனமாக வெளிப்பட்டு தன்னை அடிப்படையில் மாறுபட்ட சமூகக் கோட்பாட்டின் அடிப்படையில் இருத்திக் கொள்ள வேண்டும்: பொருளாதார வாழ்வு, பெருநிறுவன இலாப, தனியார் செல்வத்திற்கு பணியாற்றுவதற்கு என்று இல்லமால், தொழிலாள வர்க்கத்தின் தேவைகள், சமூகம் முழுவதிற்குமான தேவைகள் ஆகியவற்றிற்கு என்று இருக்க வேண்டும். சமூக சமத்துவம் மற்றும் உண்மையான ஜனநாயகம், அதாவது சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில்தான் அது நிறுவப்பட வேண்டும்.

தற்கால சமூகம் நம்பியிருக்கும் பரந்த தொழில்கள், பெருநிறுவன நிர்வாகிகளின் தனிப்பட்ட தொகுப்பாகவோ வோல்ஸ்ரீட் ஊகவணிகர்களின் தனிப்பட்ட அமைப்பாகவோ இருக்கக் கூடாது. கார்த் தொழில் ஒரு பொதுத் துறையாக, கட்டுபடி ஆகக்கூடிய பாதுகாப்பான முறை, தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்குள் இயங்கி, சுற்றுச்சூழலுக்கு இயைந்த போக்குவரத்து, உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு இவற்றை அளிப்பதாக மாற்றப்பட வேண்டும்.