World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Opposition to UAW-GM deal as workers vote on contract

தொழிலாளர்கள் ஒப்பந்தம் பற்றி வாக்களிக்கும் நிலையில் UAW-GM உடன்பாட்டிற்கு எதிர்ப்பு

By Jerry White
4 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஜெனரல் மோட்டார்ஸுக்கும் யுனைடைட் ஆட்டோ தொழிலாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் பற்றிய வாக்கெடுப்பை தொழிலாளர்கள் இந்த வாரம் தொடங்கினர்; அந்த ஒப்பந்தம் 73,000 GM தொழிலாளர்கள் மூன்று தசாப்தங்களில் மேற்கொண்டிருந்த முதலாவது தேசிய அளவிலான இரு நாள் வேலை நிறுத்தத்தை செப்டம்பர் 26 அன்று முடிவிற்கு கொண்டு வந்திருந்தது.

தொழிலாளர்களின் பெரும் பிரிவினரிடையே தொழிற்சங்கம் விட்டுக் கொடுத்துள்ள மிக அதிக அளவிலான சலுகைகள் பற்றி பரந்த சீற்றம் நிலவுகிறது. இந்த ஒப்பந்தம் தற்போதைய தொழிலாளர்களின் ஊதியத்தை அதே நிலையில் வைப்பதுடன், புதிதாக வரும் தொழிலாளர்களுக்கு பாதியாகக் குறைத்து ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு நிர்வாகம் கொடுக்கும் மருத்துவ பாதுகாப்பு செலவினங்களையும் தகர்த்துவிட்டது. இதற்கு ஈடாக UAW அதிகாரத்துவத்திற்கு பல பில்லியன் டாலர் மதிப்புடைய ஓய்வூதிய பாதுகாப்பு அறக்கட்டளை நிதியத்தின் மீதான கட்டுப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.

போன்டியாக், லான்சிங், டெட்ரோயிட், பிலின்ட் என்று மிச்சிகன் நகரங்களில் இருப்பவை உட்பட -பத்து பெரிய உள்ளூர் சங்கங்களில் ஏழு --- இந்த வாரம் வாக்களிக்க உள்ளன; கிழக்கு ஓகையோவில் உள்ள Lordstown ஆலையில் இருக்கும் சங்கம் திங்களன்று வாக்களிக்க இருக்கிறது. முடிவுகள் அக்டோபர் 10 அன்று எதிர்பார்க்கப்படுகின்றன.

மிக அதிக ஊதியம் பெற்றுவரும் அதிகாரத்துவத்தினரை UAW நாடு முழுவதும் அனுப்பிவைத்து தொழிற்சங்க கூட்டங்களில் இந்த உடன்பாட்டிற்கு ஆதரவைத் திரட்ட முற்பட்டுள்ளது. பொய்கள், அரைகுறை உண்மைகள் என்பவற்றை கொண்டிருக்கும் தொழிற்சங்க பிரச்சாரம் செய்தி ஊடகத்தாலும் எதிரொலிக்கப்படுகிறது; தொழிலாளர்கள் முன்னோடியில்லாத வகையில் வேலை உறுதிமொழிகள் பெற்றுள்ளதாக பிரச்சாரம் கூறுகிறது. உண்மையில் இந்த ஒப்பந்தம் மூன்று ஆலைகள் -- இந்தியானாபொலிஸ், நியூ யோர்க் மற்றும் டெட்ராயின் புறநகர் லிவோனியா ஆகியவற்றில் உள்ளவை-- மூடப்படுவதற்கு வகை செய்கிறது; மேலும் GM தொடர்ந்து வேலைகளை குறைக்கும் வகையிலும் செயல்படும்; இதுகாறும் அது 2005ல் இருந்து 30,000 வேலைகளுக்கும் மேலாக அழித்துள்ளது.

புதனன்று GM இன் பங்கை அமெரிக்கா உயர்தரத்தில் குறிப்பிட்டது; "ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்கத்துடன் தொழிலாளர் உடன்பாடு எதிர்பார்த்ததைவிட மிகவும் சாதகமாக உள்ளதால்" இத்தகைய தர உயர்வு என்று அது கூறியுள்ளது. இடைத் தரகர் மேலும் கூறியதாவது: "UAW சுகாதாரப் பாதுகாப்பை அகற்றியது, எதிர்பார்த்த 25% தள்ளுபடியைவிட சுமையை குறைத்தது (கூடுதலான ஓய்வுதியக் கடமையும் அடங்கும்) என்பது GM பங்கிற்கு அதிக மதிப்பீட்டை கொடுத்துள்ளது.

ஒப்பந்தத்தை பகுத்தாய்ந்த, Lehman Brothers ல் பணிபுரியும் கார்த்தொழில் பகுப்பாய்வாளர் Brian Johnson, "ஒப்பந்தம் கார்த்தொழிலின் நெருக்கமான பிடிப்புக்களை கணிசமாக அகற்றுவதை பிரதிபலிக்கிறது" என்று கூறியுள்ளார்.

UAW ஆல் நிகழ்த்தப்பட்ட காட்டிக்கொடுப்பின் வரலாற்று பரப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் விவரங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. புதனன்று Detroit Free Press, 1970ம் ஆண்டு பணவீக்கத்திற்கு எதிராக ஊதியங்களை காக்க 67 நாட்கள் கடுமையான வேலைநிறுத்தம் செய்து பெற்ற வெற்றியான, COLA (Cost of Living Adjustment) எனப்படும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஊதியத்தை சரிப்படுத்தல் என்பதை கிட்டத்தட்ட அகற்றிவிட்டது என்பது "குறைவாகவே கவனிக்கப்பட்டது" என்று கூறியுள்ளது.

ஒப்பந்தத்தின்கீழ் தொழிலாளர்கள் தங்கள் COLA ஊதியத்தில் கணிசமான பகுதி GM தன்னுடைய தற்போதைய மற்றும் ஓய்வு பெறுவோரின் சுகாதாரப் பாதுகாப்புச் செலவினங்களை திசை திருப்புவதால், ஆயிரக்கணக்கான டாலர்களை இழப்பர். ஏடு கொடுத்துள்ள பகுப்பாய்வின்படி ஒவ்வொரு தொழிலாளியும் $6,240 களை COLA தொகைகள் இழப்பு என்ற வகையில் நான்கு ஆண்டு ஒப்பந்தக் காலத்தில் இழந்துவிடுவர்.

இருக்கும் தொழிலாளர்களின் சுகாதார பாதுகாப்பிற்கு கொடுப்பதற்காக தொழிலாளர்களின் COLA வில் இருந்து GM, $270 மில்லியனை எடுத்துக் கொள்ளும். மற்றொரு $180 மில்லியன் தொழிலாளர்களின் COLA வில் இருந்து புதிதாக வந்துள்ள VEBA எனப்படும் Voluntary employee beneficiary association க்கும், $30 பில்லியனை ஓய்வு பெற்றோர் சுகாதாரப்பாதுகாப்பு நிதியத்திற்கும் திருப்பிவிடும்; இவை இரண்டும் தொழிற்சங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றன.

COLA நிதி திசை திருப்பப்படுவதை தவிர, கார்த் தொழிலாளர்கள் டாக்டர்கள் வருவதற்கு இரு மடங்கு கூடுதலான இணைக் கட்டணத்தை கொடுப்பர்; இது $10ல் இருந்து $25 என்று ஆகும்; மணிக் கணக்கில் ஊதிய உயர்வு கொடுக்கப்பட மாட்டாது; ஒரு மொத்த தொகைதான் கொடுக்கப்படும். உயரும் செலவினங்களை எதிர்கொள்ளும்போது இந்த ஏற்பாடு கடந்த 15 ஆண்டுகளாக தேக்கம் அடைந்திருந்த தொழிலாளர்களின் வருமானத்தில் உண்மையான ஊதியக் குறைவு என்பதைத்தான் கொடுக்கும்; ஊதிய உயர்வு 1992ல் இருந்து பணவீக்கத்தைவிட 1.5 சதவிகிதம்தான் ஒவ்வொரு ஆண்டும் இருந்தது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் நிலைமை இன்னமும் மோசமானது ஆகும். அவர்களில் பெரும்பாலனவர்கள் $14 ஒரு மணி நேரத்திற்கு பெறுகின்றனர் --இது தொழிற்சங்கத்தில் இல்லாத தொழிலாளர்களின் மணிக் கணக்கு ஊதியத்தைவிட குறைவானது ஆகும்; மேலும் அவர்கள் குறைந்த மருத்துவ வசதிகளையும், முதலாளி கொடுக்கும் ஓய்வுதியத்திற்கு பதிலாக ஒரு 401(k) ஓய்வூதியத்திட்டத்தையும்தான் பெறுவர்.

VEBA திட்டம் தொழிற்சங்கத்திற்கு அமெரிக்காவிலேயே மிகப் பெரிய முதலீட்டு நிதியங்களுள் ஒன்றின்மீது கட்டுப்பாட்டைக் கொடுக்கும். வோல்ஸ்ட்ரீட்டின் உந்ததுலில் தொழிற்சங்கம் தக்க நிதிய ஊக்கங்களைப்பெற்று தொழிலாளர்கள் நலன்களைக்குறைத்து, UAWல் இருக்கும் நூற்றுக்கணக்கான தொழிற்சங்க அதிகாரத்துவத்தினருக்கு பெருகிய, நிலையான வருவாய்க்கு வழிவகுத்துள்ளது.

பெருநிறுவன அமெரிக்கா VEBA திட்டத்தை மற்ற தொழில்களுக்கும் ஒரு முன்மாதிரி என்று பாராட்டியுள்ளது; தங்களுடைய சுகாதாரப் பாதுகாப்பு கடமைகளை உதற விரும்பும் விமான நிறுவனங்களுக்கு இது பொருந்தும் என்றும் பாராட்டியுள்ளது. 2000ல் நிறுவனம் அளிக்கும் நலன்களைத் தரும் அமைப்புக்களின் சதவிகிதம் 69 என்பதில் இருந்து இன்று 60 சதவிகிதமாக குறைந்துவிட்டது; இது இன்னும் தொடர்ந்து சரிவடையும்; இதையொட்டி பெருகிவரும் மருத்துவச் செலவினங்களின் சுமைகள் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களினால் ஏற்கப்படும்.

GM ஒப்பந்தம் என்பது ஒரு ஆரம்பந்தான். டிட்ரோயிட்டின் மற்ற மூன்று பெரிய கார்த் தயாரிப்பாளர்களுடன் --போர்ட், கிரைஸ்லர் --பேச்சுவார்த்தைகள் நடக்கும்போது இந்நிறுவனங்கள் தாங்கள் கோரும் சலுகைகளுக்கு இன்னமும் கூடுதலான அழுத்தத்தை கொடுக்கும் என்பது தெளிவாகிறது. செவ்வாயன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டுள்ளபடி, கிரைஸ்லர் மற்றும் போர்ட் இரண்டும் இன்னும் கூடுதலான வளைந்து கொடுக்கும் தன்மையில் ஆலைகளை மூடல், ஓய்வூதிய நலன்களை குறைத்தல் ஆகியவற்றிற்கு விரும்புகின்றன.

உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசிய தொழிலாளர்கள் ஒப்பந்தத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஐந்து ஆண்டுகள் Pontiac Truck & Bus plant என்று UAW லோக்கல் 594 ல் இருக்கும் ஒரு இளந்தொழிலாளி WSWS இடம் கூறினார்: "அவர்கள் மத்தியதர வகுப்பை முற்றிலும் அழித்துக் கொண்டிருக்கின்றனர். பணக்காரர்களிடம் இப்பொழுது மிக அதிகம் இருக்கிறது; தொழிற்சங்கங்கள் பில்லியன்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர உள்ளன. இந்நிறுவனங்கள் மூன்றாம் உலக தொழிலாளர்களை சாதகமாகப் பயன்படுத்தவும் எங்கள் வேலைகளை விட்டுவிடவும் அங்கு சென்றுகொண்டிருக்கின்றன. இப்பொழுது அவர்கள் மணி ஒன்றிற்கு $14 என்று வேலைவாங்க விரும்புகின்றனர். அதில் நாம் எப்படி உயிர் வாழ முடியும்?"

UAW local 735 ன் உறுப்பினர்கள், GM ன் இடம் மாற்றும் ஆலை, மிச்சிகன் வில்லோ ரன்னில் இருப்பதில் வேலை பார்ப்பவர்கள் புதன் பிற்பகல் ஒப்பந்தம் பற்றி வாக்களித்தனர். ஒப்பந்தத்திற்கு எதிரான எதிர்ப்பையும் பெரும் ஏமாற்றத்தையும் அவர்கள் வெளிப்படுத்தி முறையான எதிர்ப்பு இதற்கு இல்லாதது பற்றியும் கூறினர்.

ஒரு சில நாட்களில் ஓய்வு பெறத் தகுதி பெறும் Donnie Philips, WSWS இடம், ஒப்பந்தத்தை நிராகரிக்க தன் சக தொழிலாளர்களை வலியுறுத்தும் வகையில் தன்னுடைய வாகனத்தை பெரிய அறிவிப்புடன் தொழிற்சங்க அரங்கின் நுழைவிடத்தில் நிறுத்த விரும்பியிருந்ததாக கூறினார். "அந்த அறிவிப்பு 'பெருநிறுவனப் பேராசைக்கு வேண்டாம் என வாக்களி' என்று கூற இருந்தது. இவர்களிடம் என்ன நடக்க இருக்கிறது என்பதைப் பற்றி நான் கூற முற்பட்டுவருகிறேன்" என்று தொடர்ந்த அவர், "அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள், எதையும் எங்களுக்கு கொடுக்கவில்லை" என்றார்.

"GM பேரம் நடத்தும் குழுவிற்கு அவர்கள் பெரிய போனஸ் தொகையை கொடுக்க இருக்கிறார்கள்; எங்கள் முகத்தில் எரிச்சிலை தடவுவதற்காகவே இது நடக்கிறது. என்னுடைய தந்தை GM ல் இருந்து ஓய்வு பெற்றார்; என்னுடைய தாயார் போர்டில் இருந்து ஓய்வு பெற்றார். என்னுடைய பாட்டனார்களும் எங்கள் முழுக் குடும்பமும் கார் ஆலைகளில்தான் வேலை பார்த்தனர்.

"நான் இங்கு வந்தபோது 30 ஆண்டுகள் வேலைசெய்வதாக உடன்பாடு. இந்தமாதம் பத்தாம் தேதியுடன் என்னுடைய 30 ஆண்டுகள் முடிவடைகின்றன. அவர்கள் எங்கள் மருத்துவக்காப்பை பறித்துவிட்டனர். அடுத்து ஓய்வூதியம். மேலும் புதிய தொழிலாளர்களுக்கு அவர்கள் பாதி சம்பளம்தான் கொடுக்க விரும்புகின்றனர்.

"நீண்டகால தற்காலிக ஊழியர் என்றால் என்ன என்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா? நான் தொழிற்சங்க அமைப்பாளராக இருந்தேன்; அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்துள்ளேன். ஒரு சுழலும் கதவை அவர்கள் அமைக்கிறார்கள்; எந்த நலன்களுக்கும் அவர்கள் பணம் கொடுப்பதில்லை."

Jm Neff ஒப்பந்த உடன்பாட்டை தீர்மானமாக எதிர்த்துள்ளார். 29 ஆண்டுகள் பணியாற்றிய அவர், "இன்னும் நான் இங்கு இருப்பேனாயின்" 2008 ஏப்ரல் 1ம் தேதி ஓய்வு பெறத் தகுதியுடையவனாவேன் என்று சேர்த்துக் கொண்டார்.

ஏனெனில் Neff "உட்கருவில் இல்லாத" தொழிலாளி என்று புதிய ஒப்பந்தத்தின்படி, மறு வகைப்படுத்தப்படுவார்; இதனால் நிறுவனத்திற்கு அவர் இன்னும் கடினமான, ஆபத்து நிறைந்த வேலை கொடுக்கப்படும்; அதன் நோக்கம் ஆலையில் இருந்து அவரை வெளியேற்றி அவருக்குப் பதிலாக ஒரு குறைவூதியத் தொழிலாளரை நியமிப்பதாக இருக்கும்.

"அவர்கள் எங்கள் மருத்துவச் செலவுகளையும் பறிக்கின்றனர்." என்றார் அவர். "ஆண்டிற்கு ஐந்து முறைதான் டாக்டரை பார்ப்பது என்பது என்ன? கடந்த ஆண்டு எனக்கு இதயத் தாக்குதல் இருந்தது. நான் டாக்டரை 20 தடவை சந்திக்க நேரிட்டது."