World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: The struggle against Sarkozy requires a new political perspective

பிரான்ஸ் : சார்க்கோசிக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு புதிய அரசியல் முன்னோக்கு தேவைப்படுகிறது

Statement of the World Socialist Web Site Editorial Board
12 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

அக்டோபர் 13 பாரிஸில் நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டம், மற்றும் அக்டோபர் 18 அன்று ஜனாதிபதி சார்க்கோசியின் சமூகநலச் செலவின வெட்டுக்களை எதிர்த்து நடக்கும் வேலைநிறுத்த கூட்டங்கள், மற்றும் அணிவகுப்புக்களிலும் கீழ்க்கண்ட அறிக்கை உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்களால் துண்டுப் பிரசுரமாக வினியோகிக்கப்பட இருக்கிறது.

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் பரந்த சமூகநல செலவீன வெட்டுக்கு எதிராக அக்டோபர் 13 ஆர்ப்பாட்டம், மற்றும் அக்டோபர் 18 வேலைநிறுத்தங்களில் பங்கு பெறும் தொழிலாளர்களை உலக சோசலிச வலைத் தளம் வரவேற்கிறது. புதிய அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு, தொழிலாளர்களது எதிர்ப்பின் முதலாவது ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்படுத்தல் என்ற முறையில் இந்த இயக்கம் ஒரு முக்கியமான பங்கை கொள்ள இருக்கிறது.

பெருநிறுவன செய்தி ஊடகத்தால் சார்க்கோசியை சுற்றி ஒரு தற்காலிக புகழ் வட்டம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றாலும், இக்கொள்கைகளில் இயைந்திருக்கும் சமுக சமத்துவமின்மையின் விரிவு ஏற்கனவே பல முறையும் பிரெஞ்சு மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் எதுவும் --1.6 மில்லியன் பொதுத்துறை தொழிலாளர்களுக்கு "சிறப்பு திட்டம்" அளித்த ஓய்வுதிய சலுகைகளுக்கு முற்றுப்புள்ளி, வேலைக்கு எடுத்தல், நீக்குதல் ஆகியவற்றை எளிமைப்படுத்தும் வகையில் தொழில் சட்ட தொகுப்பை மறுபடியும் எழுதுதல், வரிக்களுக்கு ஊக்கம் குறைத்தல், மற்றும் முன்கூட்டி ஓய்வுபெறுதலுக்கு தண்டனை வழங்குதல் ஆகியவை-- புதிதல்ல.

இதேபோன்ற ஓய்வுதிய குறைப்புக்கள் 1995ல் அலன் யூப்பே, ஜோன் பியர் ரஃப்ரன் மற்றும் பிரான்சுவா பிய்யோன் ஆகியோரால் 2003லும், 2006ல் முதல் வேலை ஒப்பந்தம் என்று டொமினிக் டு வில்ப்பன்னாலும் கொண்டுவரப்பட்டவை மில்லியன் கணக்கான மக்கள் பங்கு பெற்ற ஆர்ப்பாட்டங்களை எழச்செய்து பரந்த மக்களின் ஆதரவையும் பெற்றிருந்தன.

ஆனால் தொழிலாளர்கள், சார்க்கோசியில் ஒரு வேறுவித அரசியல் விரோதியை, இவருக்கு முன்பு இருந்தவர்களைவிட மிகத் தீவிர வலதுசாரித் தன்மை கொண்டவர் என்ற நிலையில், எதிர்கொள்கின்றனர். முந்தைய சமூக ஒழுங்குடன் "உடைப்பு" என்ற பெயரில், அனைத்து எதிர்ப்புக்களையும் மீறி தன்னுடைய கொள்கைகளை செயல்படுத்தும் உறுதிப்பாட்டை அவர் ஒன்றும் இரகசியமாக வைத்திருக்கவில்லை.

சார்க்கோசி இந்த இலக்கை கருத்திற் கொண்டு, சோசலிஸ்ட் கட்சி பிரதிநிதிகளை தன்னுடைய அரசாங்க பதவிகளுக்கு தேர்வு செய்துவருவதுடன், தொழிலாள வர்க்கத்தின் மீதான இவருடைய தாக்குதல்களுக்கு தொழிற்சங்க தலைவர்களுடன் இணைந்தும் செயலாற்றுகிறார்; அதே நேரத்தில் தீவிர வலதுடனும் ஊடாடுகிறார். இவருடைய தேர்தல் முடிவை தொடர்ந்து இவர் தன்னுடைய முதல் அழைப்பை புதிய பாசிச தேசிய முன்னணி (FN) தலைவர் ஜோன் மரி லு பென் ஐ ஜனாதிபதி மாளிகையான எலிசே க்கு விருந்தனராக வருமாறு அழைப்பு விடுத்தார். இவருடைய, குடியேற்றம், தேசிய அடையாளம் பற்றிய அமைச்சரகம் ஆயிரக் கணக்கான குடியேறுபவர்களை காவலில் வைக்கும் செயலை தொடக்கியுள்ளது; இப்பொழுது பிரான்சில் இருக்கும் தங்கள் உறவினர்களுடன் சேர முற்படும் வெளிநாட்டினர் DNA சோதனைக்கு உட்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது; இந்த நடவடிக்கை அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும்.

உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு மீதான இரக்கமற்ற வலியுறுத்தல் இவருடைய சோவினிச மற்றும் இராணுவவாதம் நிறைந்த வெளிநாட்டுக் கொள்கைக்கு பொருந்தும் வகையிலேயே உள்ளது.

புஷ் நிர்வாகத்தின் எரியூட்டுபவர்களின் மத்திய கிழக்கில் போரை விரிவுபடுத்த வேண்டும் என்ற அவர்களுடைய உந்துதலுக்கு சார்க்கோசி பக்க பலமாக உள்ளார். ஆகஸ்ட் 28ம் தேதி வெளியுறவுக் கொள்கை பற்றிய தன்னுடைய உரையில் ஈரானுடனான அணுசக்தி திட்டம் பற்றிய பேச்சுவார்த்தைகள் முறிந்தால் மாற்றுச் செயல் "ஒரு ஈரானிய குண்டு அல்லது ஈரான்மீது குண்டுத் தாக்குதல்" என்பதாக இருக்கும் என்று கூறினார்; முதல் மாற்றீடு "ஏற்க இயலாத ஆபத்து" என்றும் கூறிவிட்டார். செப்டம்பர் 16ம் தேதி பிரெஞ்சு வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெர் பிரெஞ்சு இராணுவப் பிரிவினர் ஈரான்மீது தாக்குதல்கள் நடத்தத் தயாராகி வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தி, இது "திட்டங்கள் தயாரிப்பில் வாடிக்கைதான்" என்றும் கூறிவிட்டார்.

பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கமும் பூகோளமயமாக்கலும்

சார்க்கோசியின் தீவிர வலதுசாரி போன்ற ஆட்சி எழுச்சி பெற்றுள்ளது ஆளும் அரசியல் வாதிகளின் தனிப்பட்ட இழிவினோதங்களின் விளைவு என்று வெறுமனே விளக்கப்பட முடியாதது ஆகும். இது, உலக முதலாளித்துவம் மகத்தான மாறுதல்களை கொண்டுள்ளதற்கு --வளரும் நாடுகளில் குறைவூதிய உற்பத்தி ஆலைகள் வெளிவந்துள்ளது, ஈராக், ஆப்கானிஸ்தான், இன்னும் பரந்த அளவில் மத்திய கிழக்கு ஆகியவற்றில் அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்கொண்டுள்ள சங்கடம் ஆகியவற்றுக்கு- பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் கூட்டு விடையிறுப்பாகும்.

மரபார்ந்த துறைகளில் பிரான்ஸ் தன் ஐரோப்பிய போட்டியாளர்களிடம், குறிப்பாக ஜேர்மனியிடம் தன் சந்தையின் பங்கை இழந்து வருகிறது. அரசாங்கத்தின் Economic Analysis Council (CAE) - பொருளாதார பகுப்பாய்வுக் குழு, "பிரான்சில் (குறிப்பாக ஜேர்மனியுடன் ஒப்பிடும்போது) இருக்கும் சாதகமற்ற ஊதியச் செலவினங்களின் வளர்ச்சி" பற்றிக் கூறியதுடன், "ஜேர்மனியின் முன்னேற்றம் அடைந்துள்ள போட்டித்தன்மை வணிக இலாபப் பெருக்கில் கொண்டுள்ள மகத்தான ஆதாயத்துடன் இணைந்து நிற்கிறது" என்றும், "அதையொட்டி மிக துரிதமான உற்பத்தி வகை முதலீடு ஏற்பட்டுள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளது. சுருங்கக்கூறின், ஜேர்மன் முதலாளித்துவத்தின் ஜேர்மனிய தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீது பல ஆண்டுகளாக நடத்தும் வெற்றிகரமான தாக்குதல் அதற்கு ஒரு போட்டிக் கூர்மையைக் கொடுத்துள்ளது.

இதன் விளைவாக, பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் போராடிப் பெற்ற அனைத்து சமூக நலன்களும் --ஒரு முற்போக்கான வரிவிதிப்பு முறையினால் விளைந்த சமூகநலத் திட்டங்கள், கட்டுபடியாகக் கூடிய மருத்துவப் பாதுகாப்பு, ஊதிய உயர்வுகள் போன்றவை-- உலக அரங்கில் பிரெஞ்சு தொழிலின் போட்டித் திறனை மீண்டும் நிறுவுவதற்காக பின்னே தள்ளப்பட்டு விடும். சிறிய, போட்டித் திறன் குறைந்த நிறுவனங்கள் சரிவிற்கு உட்படும் மற்றும் பெரிய பிரெஞ்சு நிறுவனங்கள் உலக உழைப்பு பிரிவினை முறையுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதலால் பதிலீடு செய்யப்படும்.

பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் இன்னும் கூடுதலான முறையில் உலகச் சந்தைக்கு ஏற்ப நடந்து கொள்ளும் முறையில், ஈராக்கில் அமெரிக்க இராணுவ வாதத்தின் தோல்வி முயற்சியின் புவி-அரசியல் விளைவுகளையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. வளரும் நாடுகளின் பொருட்களை பெறுவதில், நீண்ட காலமாக அது கொண்டிருந்த சாதகமான வாய்ப்புக்களை உறுதிப்படுத்துவதற்கான அதன் திறனை, குறிப்பாக மத்திய கிழக்கு எண்ணெயை தொடர முடியுமா என்பது பற்றி பிரெஞ்சு ஏகாதிபத்தியம் சந்தேகப்படத் தொடங்கிவிட்டது.

எண்ணெய்த் தொழிற்துறையில் இருக்கும் "சக்திகளின் சமநிலை அதிகரித்த வகையில் பிரான்ஸ் போன்ற ஜனநாயக நாடுகளுக்கு பாதகமாக ஆகும் போல் தோன்றுகிறது" என்று Le Figaro தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அத்தகைய கவலைகளுக்கு விடையிறுக்கும் வகையில் சார்க்கோசி ஒரு ஐரோப்பிய இராணுவ வலிமை வளர வேண்டும் என்றும் அது மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய அரசியல் தலைமைக்காக

சமூகநலச் செலவினங்கள், வேலைகள் மற்றும் போர்ப் பிரச்சினைகள் சிராக்கின் மந்திரிகளுக்கு எதிராக 2003 மற்றும் 2006ல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட மக்களின் மனங்களில் தனியான பிரச்சினைகள் என்று தோன்றலாம். இன்று சார்க்கோசியின் வெட்டுக்கள் அவை அனைத்தையும் ஒற்றைப் பிரச்சினையாக ஒருங்கிணைத்துள்ளன. இலாப முறையில் அடிப்படையில் பொருளாதாரத்தை சீரமைப்பது, போருக்கு செல்வது, ஆலைகள் மூடல், ஏராளமானோர் வேலையிழப்பது, ஓய்வுதிய வெட்டுக்கள் மற்றும் உயரும் சுகாதார, கல்வி செலவுகள் இவற்றிற்கு எதிராகப் போராடுவதற்கு தொழிலாளர்கள் சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்தையும், மனித குலத்தின் சமூகத் தேவைகளை உற்பத்தி செய்யும் ஒரு சர்வதேச திட்டமிட்ட பொருளாதாரத்தையும் மாற்றீடாக முன்கொள்ள வேண்டும்.

பிரெஞ்சு இடதின் தற்போதைய தலைவர்கள் அத்தகைய முன்னோக்கிற்கு இணக்கம் காட்டவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட தேவை இல்லை. கடந்த நாற்பது ஆண்டுகளாக பிரெஞ்சு முதலாளித்துவ இடதின் முக்கிய கட்சியாக இருக்கும் சோசலிஸ்ட் கட்சி அதன் முன்னாள் உயர்மட்ட தலைவர்கள் --டொமினிக் ஸ்ட்ரவுஸ் கான், ஜாக் லோங், இன்னும் முக்கியமாக வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்நெர் ஆகியோர்--சார்க்கோசியிடம் இருந்து அரசாங்கப் பதவிகளை ஏற்பதைக் காண்கிறது. அவர்கள் சார்க்கோசிக்கு மிகச் சிறந்த அரசியல் மூடுதிரையை கொடுக்கின்றனர்; நீண்டகால மனிதாபிமான "சோசலிஸ்ட்டான" குஷ்நெர் போன்றவரை தவிர வேறு எவரால் மத்திய கிழக்கில் நடக்கும் ஒரு குருதிப் பாதைக்கான திட்டத்தை சார்க்கோசி அறிவிக்கும்போது மக்களிடையே உருவாகும் வெறுப்பு உணர்வைத் தவிர்க்க இயலும்?

முக்கிய தொழிற்சங்கத் தலைவர்கள் சார்க்கோசியுடன் வாடிக்கையாக சமூகநல குறைப்புக்களை பற்றி விவாதிக்க தொடர் சந்திப்புக்களை கொண்டுள்ளனர். செப்டம்பர் ஆரம்பத்தில் CFDT தலைவர் François Chérèque உடன் பிரத்தியேகமாக Violon d'Ingrres உணவு விடுதியில் அத்தகைய பேச்சுவார்த்தை ஒன்றின் பின்னர் சார்க்கோசி, "பிரான்சிற்கு ஒரு சக்திவாய்ந்த சீர்திருத்த இயக்கம் வேண்டும் என்பதை Chérèque உணர்ந்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.

சீர்திருத்த அரசியல் வழிவகையை ஒட்டி, தொழிற்சங்க தலைமை பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களின் தகர்ப்பை தவிர்க்க முடியாதது என்று காண்கிறது. கண்டிப்பாக வேண்டும் என்றால்தான் அது வேலைநிறுத்த அழைப்புக்களை கொடுக்கிறது; ஆனால் சார்க்கோசியின் இலக்குகளுடன் அடிப்படையான உடன்பாட்டையும் வெளிப்படையாக அறிவிக்கிறது. இவ்விதத்தில் CGT உடைய Christophe Le Duigou "சிறப்பு திட்ட" ஓய்வுதியங்கள் சீர்திருத்தம் பற்றி விவாதிக்க தான் தயார் என்று குறிப்புக் காட்டி, "ஆனால் ஒரே நேரத்தில் ஒரு துறை, ஒரு நேரத்தில் ஒரு தொழில் பற்றித்தான்" இருக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த இலக்கு தொழிலாளர்கள் அரசியல் அரங்கில் சார்க்கோசியின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக விரோதம் காட்டி கூட்டாக அணிதிரள்வதை தடுக்கும் நோக்கத்தை கொண்டது ஆகும்.

இந்த இலக்கை ஒட்டி --1995, 2003, 2006 போராட்டங்களில் முன்பு தாங்கள் தொழிலாளர்கள் நலன்களை விற்றுவிட்ட வழிவகையிலும்-- தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 18ம் தேதி ஓய்வூதிய வெட்டுக்கள் பற்றி சார்க்கோசி நிகழ்த்திய முக்கிய உரை நடந்து ஒரு மாதம் பின்னும் வேலைநிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை. 2003, 2006ம் ஆண்டுகளின் வேலைநிறுத்தங்களில் நடந்தது போலவே, இதன் இலக்கு அரசியல் அளவில் தொழிலாளர்களை தொடர்ந்து ஆனால் அதிக இடைவெளி கொடுக்கப்பட்ட, பயனற்ற வேலைநிறுத்தங்கள் மூலம் சோர்வடைய செய்துவிடுவது ஆகும். வேலைநிறுத்தங்களுக்கு இடையே, பிற்போக்குத்தன சட்டங்கள் ஏற்கனவே இயற்றப்பட்டுவிடும்.

சீர்திருத்தவாதக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் அரசியல் திவால்தன்மை ஒரு சர்வதேச நிகழ்வு ஆகும். முதலாளித்துவதின் கீழ் பூகோளந்தழுவிய உற்பத்திமுறையின் வளர்ச்சி, முதலாளிகளுடனும் அரசுடனும் கொள்ளப்படும் தேசிய உடன்பாடுகளின் அடிப்படையிலான சீர்திருத்தவாத கொள்கைகளின் அடிப்படையை அழித்துவிட்டது. தொழிற்சங்கத் தலைவர்கள் இவ்விதத்தில் நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் கருவிகளாக மாறிவிட்டனர் மற்றும் அவர்கள் தொழிலாள வர்க்கத்தில் இருந்து முற்றிலும் அந்நியமான சலுகைமிக்க சமூக அடுக்காகி விட்டனர்.

பிரெஞ்சு இரயில் தொழிலாளர்கள் தங்கள் ஓய்வூதியங்கள், வேலைகள் ஆகியவற்றை தனியார் மயமாக்குதல் என்ற அச்சத்திற்கு எதிராக காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கையில், ஜேர்மனிய இரயில் ஓட்டுனர்கள் தங்கள் வாழ்க்கைத் தரங்களை காப்பாற்றுவதற்கு, நீதிமன்றத் தடைகள் மூலம் அவர்களுடைய வேலைநிறுத்த முயற்சிகள் தடுக்கப்படுவதை எதிர்த்து, முக்கிய இரயில் தொழிற்சங்கங்கள் இவர்களுடைய போராட்டத்தை நாசப்படுத்தும் முயற்சியை எதிர்த்து போராடி வருகின்றன.

அமெரிக்காவில், கார்த் தொழிலாளர்கள் சங்கமான UAW ஜெனரல் மோட்டார்ஸையே இழுத்து மூடிய ஒரு குறுகிய வேலைநிறுத்தத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து, ஊதியங்களை புதிய தொழிலாளர்களுக்கு பாதியாகக் குறைக்கும், மருத்துவக் காப்பீட்டை பெரிதும் குறைக்கும், ஓய்வூதிய உரிமைகளை பெரிதும் பாதிக்கும் ஒப்பந்தம் ஒன்றை பேசி முடித்ததுடன், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரை தொழிலாளர்கள் ஓய்வுதிய நிதியத்தின் மேலாளர்களாகவும், வோல் ஸ்ட்ரீட் மீது பெரும் பங்காற்றுபவர்களுள் ஒருவராகவும் மாற்றும் ஒப்பந்தத்தையும் பேரம் பேசி முடித்துள்ளனர்.

சீர்திருத்த அமைப்புக்களின் திவால்தன்மையில் இருந்து படிப்பினைகளை பற்றி எடுத்துக் கொள்ளுவது தொழிலாளர்களுக்கு முக்கியமாகும். பத்து ஆண்டுகள் ஆழ்ந்த சமூகப் போராட்டங்களுக்கு பின்னர் சார்க்கோசி பதவிக்கு வருதல் என்பது தொடர்ந்து சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்புக்களால் மட்டுமே சாத்தியமானது. இந்த அமைப்புக்களில் இருந்து அரசியல் மற்றும் அமைப்பு ரீதியாக உடைத்துக் கொள்ளுவது ஒன்றுதான் சார்க்கோசியின் தாக்குதல்களுக்கு எதிரான ஒரு வெற்றிகரமான போராட்டத்திற்கு தவிர்க்க முடியாத முன்நிபந்தனை ஆகும்.

தற்போதைய தலைமையின்மீது எந்த நம்பிக்கையையும் வைக்க முடியாது; அதேபோல் அரசியல் அளவில் அவர்களுடன் நட்பு கொள்ளுபவர்கள்மீதும் வைக்க முடியாது. மாறாக, தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மிகுந்த அளவு விரிவாக்கப்படுவதற்கு போராட வேண்டும்; தங்கள் வேலையிடங்களில், வேலைநிறுத்தக் குழுக்கள், மற்றும் பொதுக் கூட்டங்களை தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான முறையில் அமைத்து, அதிகாரத்துவத்தினர் சார்க்கோசியின் சமூக விரோதக் கொள்கைகளுக்கு ஒத்துழைப்பதை, சமரசத்திற்கு இடமின்றி அரசியல் அளவில் அம்பலப்படுத்த வேண்டும்.

அத்தகைய போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு, தொழிலாளர்கள் தங்கள் சுயாதீனமான அரசியல் கட்சியை சோசலிச சர்வதேசியத்தின் அடிப்படையில் ஸ்தாபித்து தங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும். போர், சமுகச்செலவுச் சிக்கனம் ஆகியவை பெருகியுள்ள இந்த சகாப்தத்தில் அவர்கள் ஐரோப்பா மற்றும் உலகின் மற்ற இடங்களில் இருக்கும் தொழிலாளர்களுடன் இணைந்து நின்று, பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளின் மாபெரும் புரட்சிகர போராட்டங்களை தாங்கிநின்ற சோசலிச சர்வதேசிய கலாச்சாரத்தையும் தொழிலாளர்களின் ஐக்கியத்தையும் புதுப்பிக்க வேண்டும். இந்த முன்னோக்குத்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் முன்வைக்கப்படுகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பெருவணிகத்தின் இலாப நலன்களுக்கு என்றில்லாமல் மக்களின் தேவையை முதன்மையாக வைக்கும் சமுதாயத்தை கட்டி அமைக்க இலக்குக் கொண்டுள்ளது. உற்பத்தி சக்திகளின் தனிச்சொத்துடைமை, தேசிய அரசு இவற்றை அடித்தளமாக கொண்டுள்ள ஒரு சமூக முறையுடன் பெரும்பான்மையான மக்களின் நலன்கள் இயைந்துபோகாது என்பதை நாங்கள் உணர்கிறோம்; இப்பொழுது இருக்கும் முதலாளித்துவ நிலைமைகளின் கட்டமைப்பிற்குள்ளே சமூக நெருக்கடி கடக்கப்பட முடியாது என்றும் நம்புகிறோம். ஒரு தேசிய கட்டமைப்பின் வரம்புகளின் உள்ளே ஒரு சமூகப் பிரச்சினை கூட தீர்க்கப்பட முடியாது.

இதன் பொருள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகள் பிரான்சிலும் ஐரோப்பா முழுவதும் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.