World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French immigration "reform": an attack on basic human rights

பிரெஞ்சு குடியேற்ற "சீர்திருத்தம்" : அடிப்படை மனித உரிமைகள் மீதான தாக்குதல்

By Kumaran Rahul and Pierre Mabut
4 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

நிக்கோலா சார்க்கோசியின் UMP அரசாங்கத்தின் Brice Hortefeux தலைமையில் இயங்கும் புதிய புலம்பெயர்வு மற்றும் தேசிய அடையாள அமைச்சகம் (Immigration and National Identity Minisry), 2003ல் இருந்து நான்காவது அத்தகைய சட்டம் என்ற முறையில் பாராளுமன்றத்தின் மூலம் புலம்பெயர்ந்தோரை தாக்கும் மற்றொரு சட்டத்தை மக்கள் மீது திணிக்க முயன்றுள்ளது. "புலம்பெயர்தல் கட்டுப்பாடு, ஒருங்கிணைவு மற்றும் புகலிடம்" ("Immigration Control, Integration and Asylum") பற்றிய சட்டத்தில் பயபக்தியுடன் பேணப்படும் புலம்பெயர்ந்தோர் பற்றிய ஈவிரக்கமற்ற பின்பற்றுதலானது, அதனது முதலாவது குறிப்பை செப்டம்பர் 18-19ல் தேசிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இம்முறை இதன் முக்கிய நோக்கம் பிரான்சில் சட்டபூர்வமாக வசிப்பவர்கள் மீண்டும் தங்களுடைய குடும்பங்களுடன் இணைந்திருப்பதை தடுப்பதாகும். பூசலைப் புயல் போல் எழுப்பியுள்ள சட்டத்தின் ஒரு கூறுபாடு தங்கள் குடும்பத்துடன் இணைய விரும்புபவர்கள் மீது மரபணு (DNA) சோதனையை நடத்துவது ஆகும். இச்சட்டத்திற்கு 91 - 45 என்ற விகிதத்தில் வாக்களிக்கப்பட்ட DNA திருத்த ஆதரவு "முற்றிலும் தானேமுன்வந்து செய்யப்படலாம், மற்றும் புலம்பெயருபவரால் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கிணங்க நடத்தப்படும்" என்று கூறுகிறது. UMP யின் பாராளுமன்ற பிரதிநிதியான Thierry Mariani திருத்தத்தை ஆர்வத்துடன் முன்னின்று கொண்டுவந்தார்; அதற்கு காரணம் மோசடித்தனமான ஆவணங்கள் குடியேறுபவர்களால் பயன்படுத்தப்படுவதுதான் என்றும் அவர் கூறினார். இது, "சில ஆபிரிக்க நாடுகள் கொடுக்கும் பிறப்புச் சான்றிதழ்களில் 30-80 சதவிகிதம் வரை பாதிப்பிற்கு உட்படுத்தக்கூடும்" என்றும் அவர் கூறினார்.

சட்டவரைவிற்கு ஆதரவாளர்கள் இந்த நடவடிக்கை குடியிருப்பு அனுமதிகளை மக்கள் விரைவில் பெறுவதற்கு உதவும் என்றும் உறவை நிரூபிக்கக் கொடுக்கப்படும் ஆவணங்களை சரிபார்த்தலுக்கு பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகக்கூடும் என்றும் கூறியுள்ளனர். உண்மையில் மனித உறவுகள் மதிப்பில் மரபியல் அறிவியலை புகுத்தும் ஆபத்தை இது கொண்டுள்ளது; எனவேதான் திருத்தம் ஜேர்மனிய செய்தி ஊடகத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. மனிதகுலத்தை இனம், மரபு ஆகியவற்றின் மூலம் வரையறுத்ததால் ஏற்பட்ட பெரும் சோக விளைவுகள் இன்னும் ஜேர்மனியில் பசுமையாக நினைவில் உள்ளன.

பிரான்சில் முக்கிய கத்தோலிக்க மற்றும் புரொடஸ்டான்ட் திருச்சபை தலைவர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்; வலதுசாரி கோலிச முன்னாள் கடுமையான சட்ட ஒழுங்கு, உள்துறை மந்திரியான Chares Pasqua கூட அக்டோபர் 2 வெளிவந்த Le Parisien ல் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்: "DNA சோதனை என்பது ஏற்கத்தக்கது அல்ல. கோலிசார்களான எங்களுக்கு இது மோசமான நினைவுகளைத்தான் கொண்டுவருகிறது. மரபியல் முறையை நாஜிக்கள் எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை நாங்கள் அறிவோம்."

குடும்பம் என்பது அடிப்படையில் ஒரு சமூக உறவு என்றும் உடற்கூற்று தொடர்பு நிருபணம் அதற்கு கண்டிப்பாக தேவை என்று கூறமுடியாது என்றும் பல வர்ணனையாளர்கள் கூறியுள்ளனர். குழந்தைகளை தத்து எடுத்தல் என்பது அவர்களை ஒரு குடும்பத்தின் பிற உறுப்பினர்களை போல் முழு சட்ட உரிமைகளையும் கொடுக்க வல்லது. எல்லைகளோ, இனவழியோ ஒரு மனிதனின் மனித உரிமைகளை நிர்ணயிக்கவில்லை; அவருடைய உறவு மனித சமூகத்துடன் எப்படி இருக்கிறது என்பதைத்தான் வரையறுக்கிறது.

இச்சட்டவரைவு பற்றிய விவாதத்தை ஆரம்பிக்கையில் Hortefeux, Jean-Marie Le Pen உடைய தேசிய முன்னணியுடன் தொடர்பு கொண்டுள்ள இனவழி வாதத்தையே முன்வைத்தார். "நம் நாட்டு மக்கள் பலருக்கும் குடியேற்றப் பிரச்சினை பெரும் கவலையை அளித்துள்ளது. தங்கள் பாதுகாப்பு, வேலைகள், மற்றும் வாழும் முறை இவற்றிற்கு அச்சுறுத்தல் என்று அதைக் காண்கின்றனர். மற்றவர்களை போலவே இவ்விதத்தில் சிந்திக்கும் பிரெஞ்சுக்காரர்களும் கெளரவமானவர்கள்தாம். இந்த எதிர்பார்ப்புக்களை நாம் நன்கு உணரவேண்டும், மெளனமாக இருக்கும் இந்த பெரும்பான்மையினரின் நம்பிக்கைகளை உணரவேண்டும்."

Hortefuex இன் கருத்தின்படி 2005ல் கொடுக்கப்பட்ட 185,000 குடியிருப்பு அனுமதிச் சீட்டுக்களில், 94,500 குடும்பங்கள் இணைவதற்கு என்றும் 13,000 வேலைகளுக்கு என்றும் இருந்தன. ஜனாதிபதி சார்கோசியிடமிருந்து Hortefeux-ன் சுருக்க குறிப்பு, குடும்பங்கள் இணைதலை பலியிட்டு வேலைக்காக குடியேறுதல் என்பது தற்போதைய 7 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதம்வரை உயர்த்தப்படும் என்பதாகும்.

இந்த மசோதாவின் நோக்கம் குடும்பங்கள் இணைதலை மிகக் கடினமாக ஆக்குதல் ஆகும். விண்ணப்பம் செய்பவர்கள் பிரெஞ்சு மொழி மற்றும் "குடியரசு மதிப்பீடுகள்" ஆகியவற்றில் தேர்வுகள் எழுத வேண்டும். தக்க நிதிய இருப்புக்களும் ஒரு நிபந்தனையாக இருக்கும். வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியுள்ள ஒரு நபர் குடும்பத்துடன் இணைந்திருப்பதற்கு விண்ணப்பித்தால், குடும்ப அளவைப் பொறுத்து அவர் குறைந்த ஊதியத்தை விட 1 முதல் 1.2 பங்கு அதிகம் சம்பாதிக்கவில்லை என்றால், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பிரான்சில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவிடும்.

இது ஏழை குடியேறுபவர்கள்மீது அப்பட்டமான பாகுபாடு ஆகும்; பிரான்சில் இயங்கும் மக்கள் தொகையில் 1.3 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ், அதாவது மாதம் ஒன்றுக்கு 645 யூரோக்களுக்கும் குறைவான ஊதியத்தில் வாழ்கின்றனர். பிரான்சில் 2.5 மில்லியன் தொழிலாளர்கள் குறைந்த பட்ச ஊதியத்தில் உள்ளனர் (1280 மொத்த யூரோக்கள் மாத வருமானம்). இது மொத்த தொழிலாளர் தொகுப்பில் 16.8 சதவிகிதம் ஆகும்.

இச்சட்டம் பிரெஞ்சு மக்களின் உடன்பங்காளிகள், நாட்டில் ஏற்கனவே இருப்பவர்கள், தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பி, அங்கிருந்து நீண்ட காலம் தங்குவதற்கான விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது; இது பிரெஞ்சு குடியிருப்பு அனுமதி பெறுவதற்கு இன்றியமையாத முன்னிபந்தனை ஆகும்.

மேலும், குடும்பம் மறுஇணைதலை அடைந்துவிட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அரசுடன் "குடும்பத்தை வரவேற்றல் மற்றும் ஒன்றிணைதல் ஆகியவற்றிற்கான ஒப்பந்தம்" ஒன்றில் கையெழுத்திட வேண்டும்; இதில் "பிரான்சில் பெற்றோர்களுடைய உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய கல்வி" ஆகியனவும் அடங்கும். இவை முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தீர்மானித்தால், குடும்ப நலச் சலுகைகள் நிர்வாகத்தால் பறிக்கப்பட்டுவிடலாம். இது மிகவும் தீமை பயக்கும் செயலாகும்.

கணவர்கள், மனைவிகள், குழந்தைகள் என்று பிரான்சில் சட்டபூர்வமாக வசித்து வருபவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு அனுப்பப்படுவர்; அதன் பின் விசா மனு பிரான்சில் நீண்ட காலம் தங்குவதற்கான அனுமதி கோரி அனுப்பப்படல் என்பது தேவைப்படும்.

புகலிடம் நாடும் அகதிகள் ஒரு மாதம் என்பதற்கு பதிலாக இரு வாரங்கள் மட்டுமே தங்கள் மனுக்களின் நெறித்தன்மையை நிருபிக்க, நிர்வாகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கொடுக்கப்படுவர். தன்னுடைய தஞ்ச மனு நிராகரிக்கப்பட்டு, மேல்முறையீட்டிற்கு அனுமதி கொடுக்காமல் ஒரு எரித்தியரை நாடு கடத்தியதற்காக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் ஏற்கனவே பிரான்சை கண்டித்துள்ளது.

சட்டவரைவில் இருக்கும் மற்றொரு விதியின்படி ஆவணங்கள் அற்ற குடியேறுபவர்கள் அவசரகால வீடுகளில் வசிக்கும் உரிமை அற்றவர்கள் ஆகின்றனர். கிறிஸ்துவ அறக்கட்டளை அமைப்புக்கள் Emmaüs, Cimade போன்றவை கோபத்துடன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன: "மனித உரிமைகள் முழங்கிய நாட்டில் தெருக்களில் இருக்கும் மக்கள், சட்டபூர்வமாக வாழாவிட்டாலும், உறைவிடம் இல்லாமல் இருப்பதை நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அவர்களுக்கு இந்த அடிப்படை உரிமையை ஆண்டு முழுவதும் மறுப்பது என்பது முத்திரையிட்டு இம்மக்களை ஒதுக்கி வைப்பதற்கு ஒப்பாகும்; மக்கள் கெளரவமாக, சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தின்மீது பொறுத்துக் கொள்ள முடியாத தாக்குதல் ஆகும்.

DNA திருத்தம் ஆளும் UMP கட்சியினரிடையே கூட செனட்டில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது; அங்கு சட்டக் குழு இதை நிராகரித்தது. ஆனால் "தேசிய பாராளுமன்றம்தான் இதுபற்றி இறுதி முடிவு எடுக்க முடியும்" என்று Brice Hortefeux தெளிவாக்கிவிட்டார். மனித உரிமைகள் குழு, திருத்தமானது "குடியரசின் கொள்கைகள், பொதுச் சட்டம் இவற்றை உடைப்பதில் ஒரு படி முன் சென்றுள்ளது" என்று கூறியுள்ளது. இதை விஞ்ஞான அல்லது மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே DNA சோதனை என்று இருக்கும் பிரெஞ்சு சிவில் சட்டத்தொகுப்பு பற்றிய குறிப்பு ஆகும்.

சோசலிஸ்ட் கட்சி (PS) அதன் கோபத்தை DNA திருத்தம் பற்றி குவிப்பாக காட்டியுள்ளது; ஆனால் பெரும்பாலும் மசோதாவின் முக்கிய விதிகளை பற்றிப் பேசாமல் உள்ளது; அடிப்படையில் இது ஒப்புதல் கொடுப்பதற்கு சமமாகும். பாராளுமன்றத்தில் மசோதாவிற்கு எதிராக வாக்களிக்கையில் பொதுச்செயலாளர் பிரான்சுவா ஹொலாந்த் "குடும்பத்துடன் குடிபெயர்வது பற்றிய கட்டுப்பாடு திறமையாக இருக்க வேண்டும்... இந்தவிதத்தில் நாம் குடும்பங்கள் இணைவதை கட்டுப்படுத்தப்போவதில்லை" என்ற கவலையை தெரிவித்தார்.

சார்க்கோசியின் கொள்கைகளுடன் சோசலிஸ்ட் கட்சி இணைந்திருப்பது இன்னும் கூடுதலான முறையில் தெளிவாகியுள்ளது. அடுத்த சில வாரங்களில் புலம்பெயர்ந்தோர் ஒதுக்கீடுகளில் புது சட்டங்கள் வரவிருக்கும் என்பதை சார்க்கோசி ஏற்கனவே தெளிவாக்கியுள்ளார். "உயர் வரம்பிற்குள் தொழில், வகையினம், மற்றும் இயல்பாக, உலகின் பகுதிகள் என்ற வகையில் ஒதுக்கீடு பற்றிய கருத்தை நாம் ஆராயவேண்டும் என்று விரும்புகிறேன்." இந்த கருத்தை "கவனிக்கப்படக் கூடியது" என்று கூறி ஹொலந்த் தழுவியுள்ளார்.

இது சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதித் தேர்தல் திட்டத்துடன் இணைந்துள்ளது; அதுவும் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் செகோலென் ரோயால் தன்னுடைய ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் எடுத்துக் கூறிய கருத்துக்களுடன் ஒத்திருக்கிறது. ஒரு சோசலிஸ்ட் கட்சி பிரதிநிதியும் ரோயாலின் ஆதரவாளருமான Manuel Vallas இன்னும் வெளிப்படையான முறையில் சார்கோசியுடன் உடன்பாடு இருப்பதை தெரிவித்தார். "குடியேறுவர்கள் எண்ணிக்கை பற்றிய விவாதத்தை தொடங்குவது பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை. இந்நாட்டில் உள்ள சமூக சக்திகளுடன் உடன்பாடு கொள்ளுவது தடுக்கப்படுவதாக இருக்கக்கூடாது." தன்னுடைய பங்கிற்கு அவர், சோசலிஸ்ட் கட்சி குடியேற்றப் பிரச்சினைகளில் இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

குடியேற்றப் பிரச்சினை பற்றி சோசலிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு 2005ம் ஆண்டு சோசலிஸ்ட் கட்சி ஆதிக்கத்திற்கு உட்பட்ட SOS Racisme என்னும் இனவெறி எதிர்ப்பு அமைப்பின் முன்னாள் தலைவரும் இப்பொழுது சோசலிஸ்ட் கட்சி தலைமையிடத்தில் இருப்பவருமான மாலிக் புத்தி என்பவரால் "A New Policy on Management of the Flow (of Immigration)" என்ற பிரிவில் வந்த ஆய்வு ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது; "எமது சமூகத்தின் தேவைகள், திறன் இவற்றை முன்கூட்டிக் கணித்து அதற்கு ஏற்ப குடியேறுபவர்கள் எண்ணிக்கையை அனுமதிக்கப்பட வேண்டிய கொள்கையை நாங்கள் திட்டமிட விரும்புகிறோம். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸ் வரவேற்கக்கூடிய குடியேறுபவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இருந்து, பிரான்சுடன் வரலாற்று, பொருளாதார மற்றும் அரசியல் தொடர்பு கொண்ட நாடுகளின் அக்கறைகளையும், (வட அமெரிக்காவில்) மாக்ரெப், CFA நாடுகள் (பிரெஞ்சு ஆபிரிக்கா) அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராய் இருக்கின்ற அல்லது இல்லாத குறிப்பிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றை கருத்திற் கொள்ளும்".

செனட்டிற்கு (மேல் மன்றம்) குடியேறுபவர்கள் பற்றிய சட்ட மசோதா அக்டோபர் 2ம் தேதி DNA திருத்தம் பற்றிய முழு விவாதம் நடத்துவதற்காக அனுப்பப்படும்; இதன் பின் UMP பெரும்பான்மை இருக்கும் பாராளுமன்றத்திற்கு வாக்கெடுப்பிற்காக வரும். குடியேற்றம் பற்றிய புதிய மசோதாவை அறிமுகப்படுத்திய அளவில் பிரெஞ்சு அரசாங்கம் குடியேற்றப் பிரச்சினைகள் பற்றி பொது மக்கள் கவனத்தை ஈர்க்க முயல்கிறது; அதே நேரத்தில் ஓய்வூதிய உரிமைகள், வேலைப் பாதுகாப்புக்கள் மற்றும் வேலைநிறுத்த உரிமை பற்றிய புதிய சட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

DNA நடைமுறையை பற்றி Brice Hortefeux க்கு எவ்வித மன உறுத்தலும் கிடையாது; அவர் கூறுகிறவாறு இது ஏற்கனவே பதினோரு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்கப்பட்டுவிட்டதாகவும், புலம்பெயர்தல் பற்றிய "ஐரோாப்பிய கோட்டை" என்பதின் ஒரு பகுதியை அமைக்கிறது என்றும் இவர் கருதுகிறார். Prüm உடன்படிக்கை இன்னும் ஒரு படி மேலே செல்லுகிறது. ஜேர்மனி, ஆஸ்திரியா ஆகியவற்றால் தூண்டப்பட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து சுதந்திரமாக பேரம்பேசி முடிவு செய்யப்பட்டது, மற்றும் பிந்தையது மே 2005ல் பெல்ஜியம், ஸ்பெயின், பிரான்ஸ், லுக்சம்பேர்க் மற்றும் நெதர்லாந்து ஆகியவற்றாலும் கூட கையெழுத்திடப்பட்டது. இது "எல்லை கடந்த ஒத்துழைப்பு, குறிப்பாக பயங்கரவாதம், எல்லை கடந்த குற்றங்கள், சட்டவிரோத குடியேற்றம் ஆகியவைகளை எதிர்த்து போராடுவதில் உதவக்கூடிய DNA சான்றுகள், கைரேகை ஆகிய முக்கிய தனிப்பட்ட தகவல்கள் சம்பத்ப்பட்டதுடன் 'கிடைக்கக்கூடியமை பற்றிய கோட்பாட்டின்' அடிப்படையில் தகவல்கள் பரிமாற்றத்தை அதிகரிக்கும் வடிவமைப்பை கொண்டது ஆகும்." (ஐரோப்பிய மட்டத்தில் Justice, Home Afairs பிரச்சினைகள் என்று House of Commons Home Affairs Committee கொடுத்துள்ள அறிக்கையில் இருந்து). இதன் நோக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்துடன் இதனை இணைத்துவிடுவது ஆகும்.

Sarkozy-Hortefux மசோதாவானது அரசின் கண்காணிப்பு மற்றும் அடக்குமுறை அதிகாரங்களை பிரான்ஸ் மட்டும் என்றில்லாமல், ஐரோப்பா முழுவதும் வலுப்படுத்துகிறது; குடியேறுபவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்கள் ஆகியோரின் அடிப்படை மனித உரிமைகள் மீதான ஐரோப்பிய அளவிலான பரந்த தாக்குதல்களின் தீவிரப்படுத்தலை பிரதிநிதித்துவம் செய்கிறது.