World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Transport strike brings France to a standstill

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் பிரான்சை ஸ்தம்பிதமடையச் செய்தது

By Antoine Lerougetel
19 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

தங்கள் ஓய்வூதியங்களை காப்பதில் வேலைநிறுத்தம் செய்யும் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரான்சின் இரயில், பஸ் மற்றும் புறநகர் போக்குவரத்து முறையை வியாழனன்று கிட்டத்தட்ட அசையா நிலைக்கு கொண்டு வந்து விட்டனர். ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியினால் தலைமை தாங்கப்படும் கோலிச அரசாங்கம் இரயில்வே தொழிலாளர்களின் உண்மையான ஓய்வூதிய திட்டத்தை - "சிறப்புத் திட்டத்தை" தகர்க்கும் சீர்திருத்தத்தை திணித்து வருகிறது.

இந்த சக்திவாய்ந்த வேலைநிறுத்தம் பிரான்சின் நலன்புரி அரசு அமைப்பின் சமூக நலன்களை அழிக்கும் சார்க்கோசியின் திட்டங்களுக்கு எதிரான முதல் வெகுஜன நடவடிக்கையாகும். இரயில் தொழிலாளர்களுடன் எரிவாயு, மின்சாரத்துறை தொழிலாளர்களும் அனைத்து ஆசிரியர்கள் பிரிவுகள் மற்றும் தனியார் துறைத் தொழிலாளர்களும் இணைந்துள்ளனர்.

SUD Rail, Force Ouvriere, Autonomous General Federation of Drivers (FGAAC) என்ற மூன்று தொழிற்சங்கங்களும் 24 மணி நேர பணிநிறுத்தம் தொடரப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியினால் மேலாதிக்கம் செய்யப்படும் பொது தொழிலாளர் கூட்டமைப்பு (CGT), அதேபோல சோசலிஸ்ட் கட்சியுடன் சேர்ந்த பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) ஆகியன வேலைநிறுத்தம் எவ்விதத்திலும் தொடர்வதை எதிர்ப்பதுடன், அரசாங்கத்துடன் நடத்தவிருக்கும் பேச்சு வார்த்தைகள் முடியும்வரை காத்திருக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஆனால் இரயில் தொழிலாளர்களின் பரந்த பிரிவுகள், முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புக்களை மீறி வியாழன் காலை நடந்த வெகுஜனக் கூட்டங்களில் வேலை நிறுத்த நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. பாரிஸ், மார்சை, லியோன் ஆகிய இரயில் நிலையங்களில் கிட்டத்தட்ட 95 சதவிகிதத்தினர் வேலைநிறுத்தத்தை நீடிக்கும் வகையில் வாக்களித்தனர். பாரிசில் பொதுப் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இணைவதற்கு வாக்களித்தனர். அடுத்த நடவடிக்கை பற்றி முடிவெடுக்க பெருங் கூட்டங்கள் மீண்டும் வெள்ளி காலை நடக்க உள்ளன.

SNCF (தேசிய இரயில் நிறுவனம்) அதிகாரிகள், வெள்ளி காலை பணிகள் "பெரிதும் தடைபடும்" என்றும், ஆனால் நேரம் செல்லச் செல்ல பணிகள் முன்னேற்றம் பெறும் என்றும் உறுதியளித்துள்ளனர்.

புதன் மாலை 8 மணிக்கு வேலைநிறுத்தம் தொடங்கியது. வியாழன் காலை, பிரான்சின் அதிவேக TGV இரயில்கள் 700ல் 46 மட்டும்தான் ஓடிக் கொண்டிருக்கின்றன என்று SNCF சுட்டிக்காட்டியது. வியாழன் காலை 6:30 க்கு சில பகுதிகளில் இரயில் சேவை முற்றிலும் இல்லை என்றும் பயணிகள் "வெள்ளி மாலை வரை தங்கள் பயணத்தை ஒத்தி வைக்கலாம் அல்லது இரத்து செய்துவிடலாம்" என்றும் அழைப்பு விடுத்தது. ஈரோஸ்டார் பணிகள் குறைந்த அளவில்தான் பாதிக்கப்பட்டிருந்தன. 10 இரயில்களில் 8 லண்டனுக்கும் பாரிசுக்கும் இடையே இயல்பாக ஓடிக் கொண்டிருந்தன.

பாரிஸ் நகரப் போக்குவரத்து நிறுவனமான RTAP, சுரங்க ரயில் பணிகள் "கிட்டத்தட்ட செயல்படாமலேயே போகக்கூடும்" என்று அறிவித்தது. வெளிப்பகுதிகளில் இருந்து தொழிலாளர்களை தலைநகரத்திற்கு கொண்டுவரும் தடங்கள், மிக அதிக பயணம் இருக்கும் புறநகர் RER தடங்கள் A மற்றும் B, சேவை வழங்கா என்று எச்சரித்தது. பேருந்துகளில் 10 சதவிகிதம்தான் ஓடின; டிராம்கள் ஏதும் ஓடவில்லை.

புறநகர் போக்குவரத்து சேவைகள் 28 முக்கிய நகரங்களில் பாதிப்பிற்கு உள்ளாயின; இதில் Clermont-Ferrand, Dijon, Lyons, Montpellier, Nancy, Reims, Toulouse ஆகிய நகரங்கள் அடங்கும். பிரான்சின் இரண்டாம் பெருநகரமான மார்சையில் தொழிற்சங்கங்கள் நகர போக்குவரத்து தடமான RTM தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்த அழைப்புவிடுக்கவில்லை. இத்தொழிலாளர்கள் சிறப்பு திட்டத்தின் கீழ் வரவில்லை.

வியாழனன்று காலை 7.30 மணி அளவில் போக்குவரத்து முக்கிய புறநகரப் பகுதிகளில் நின்று போயிற்று; குறிப்பாக Ile de France, பாரிஸ் பகுதியில்; அங்கு வண்டிகள் கிட்டத்தட்ட 165 கி.மீ தொலைவு வரை தடைப்பட்டு நின்றன.

SNCF தன்னுடைய ஊழியர்களில் 75 க்கும் குறைவான சதவிகிதத்தினர்தான் வேலை நிறுத்ததில் ஈடுபட்டதாக அறிவித்தது. 1995 இரயில் வேலைநிறுத்தத்தைவிட இது அதிக சதவிகிதம் ஆகும்; அப்பொழுதும் சிறப்புத் திட்ட ஓய்வூதியங்களை காப்பதற்குத்தான் வேலைநிறுத்தம் அழைக்கப்பட்டிருந்தது. 1995ம் ஆண்டு வேலைநிறுத்தம் அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த அலன் யூப்பே ஐ பின்வாங்கச் செய்து அவருடைய அரசாங்கத்தையும் முடக்கியது.

RATP, பாரிஸ் பேருந்து மற்றும் சுரங்க ரயில் வலைப்பின்னலுக்கு கொடுத்த கணக்கு 59 சதவிகிதம் ஆகும்.

மின்சாரத்துறை மற்றும் எரிவாயுத் துறைகளான EDF, GDF ஆகியவற்றில் இருந்து கிட்டத்தட்ட 50 சதவிகித தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இணைந்தனர். சார்கோசியின் சீர்திருத்தத்தின் கீழ், அவர்கள் முழு ஓய்வூதியம் பெறுவதற்கான மொத்த ஆண்டுகள் தற்போதைய 37.5 ல் இருந்து 40 ஆண்டுகள் என்று உயர்த்தப்படுவதை காண்பர்; மேலும் அது 2008ல் 41 ஆண்டுகளாக அதிகப்படுத்தப்படும். குறிப்பிட்ட ஆண்டுகள் பணிபுரியவில்லை என்றால், பொது ஓய்வூதிய திட்டத்தின்கீழ் ஓய்வுபெறுபவர்களை போல் இவர்களும் கடுமையான அபராதங்களை எதிர்கொள்வதுடன், கணிசமாகக் குறைந்த ஓய்வூதிய வருமானத்தைத்தான் பெறுவர்.

60க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் பிரான்சில் உள்ள நகரங்கள் முழுவதும் நடைபெற்றன; இதில் பெரும்பாலும் இரயில் மற்றும் புறநகர் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்; ஆனால் மின்சாரம், எரிவாயுத்துறை தொழிலாளர்களின் முக்கிய பிரிவுகள் மற்றும் ஆசிரியர்களின் சிறு பிரதிநிதிகள் ஆகியவையும் பங்கு பெற்றன; ஆசிரியர்களை பொறுத்தவரையில் முக்கிய கூட்டமைப்பான Federation of Unitary Unions (FSU) வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. அணிவகுத்துச் சென்றவர்களின் எண்ணிக்கை 150,000ல் இருந்து 300,000 வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

CGT தேசிய செயலாளரான பேர்னார்ட் திபோ மற்றும் அதன் இரயில் பிரிவின் தலைவரான Didier Le Reste, இருவரும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், தொழிலாளர்கள் பணிக்கு செல்லுமாறு அழைப்புவிடுத்து, விவாதங்களின் முடிவிற்கு காத்திருக்குமாறு கூறினர். வியாழனன்று திபோ இன் உதவியாளர் Maryse Dumas, தொழில் மந்திரியான சேவியர் பெத்ரோன் இன் திட்டமான தொழிற்சங்கங்களுடன் மீண்டும் அரசாங்க முன்மொழிவுகள் பற்றி பேச்சு வார்த்தைகள் நடத்துவது என்பதை வரவேற்றார்.

சோசலிஸ்ட் கட்சி வேலைநிறுத்தம் தொடர்வது பற்றி ஏதும் கூறவில்லை; ஆனால் தொழிலாளர்களின் போர்க்குணம் ஒடுக்கப்பட வேண்டும் என்ற அதன் விருப்பத்தை காட்டியதுடன், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னே அவர்களை வழிப்படுத்தியதுடன், ஓய்வூதியச் சீர்திருத்தம் தேவை ஆனால் சார்க்கோசி தவறான வகையில் அதை செயல்படுத்த முற்படுகிறார் என்றும் அறிவித்து, தொழிலாளர்களின் உண்மை ஓய்வூதியங்களில் வெட்டுக்களுக்கு தன் ஆதரவைத் தெரிவித்தது.

அக்டோபர் 17 அன்று கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை ஒன்று வேலைநிறுத்தத்திற்கு பெயரளவு ஆதரவைக் கொடுத்தது; ஆனால் அது நீட்டிக்கப்பட வேண்டும் என்ற அழைப்பைக் கொடுக்கவில்லை.

தென்கிழக்கு பாரிசில் உள்ள ரயில் நிலையமான Gare de Lyons ல் பணியாற்றும் ஒரு Sud Rail தொழிலாளியான Christian Drouet, உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார்: "24 மணிநேரம் போதாது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்." பிரான்சின் 250 பணியிடங்களில் குறைந்தது 30 இடங்களிலாவது, குறிப்பாக வடக்கே Lille TM, CGT உறுப்பினர்கள் தேசியத் தலைமையை மீறி 24 மணி நேரத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்துள்னர் என்று அவர் கூறினார்.

பாரிசில் உள்ள Gare du Nord இரயில் நிலையத்தில் தொழிற்சங்க அலுவலகத்தில் உள்ள மற்றொரு Sud Rail அங்கத்தவர், டிரைவர்களும், டிக்கட் பரிசோதகர்களும் வெள்ளியன்று வேலைநிறுத்தம் தொடர்வதற்கு வாக்களிப்பர் என்று தான் கருதுவதாக WSWS இடம் தெரிவித்தார். Gare du Nord ல் பெரும்பாலான CGT உறுப்பினர்கள் வெளிநடப்பு தொடர்வதற்கு வாக்களிப்பர் என்றும் அவர் கூறினார்.

"தேசிய தலைமையில் இருந்து அடித்தளத்தில் ஒரு உடைவு ஏற்படுவதற்கான தொடக்கம் உள்ளது. இரயில்வேயில் வலுவாக CFDT இருந்தபோது, அரசாங்கத்திடம் ஓய்வூதியங்கள் பற்றி பேச்சு வார்த்தைகள் நடத்தியது [1995ல் அலன் யூப்பேயுடன் CFDT கொண்ட உடன்பாட்டைக் குறித்துக் கூறியது]. அதன் உறுப்பினர்களில் நான்கில் மூன்று பகுதியினர் விலகி, எங்களுடன் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் இப்பொழுது 3 முதல் 4 சதவிகிதம்தான் பிரதிநிதித்துவம் உள்ளது. CGT தலைவர்கள் பேச்சுவார்த்தைகளை விரும்புகின்றனர்; ஆனால் தொழிலாளர்களோ பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒன்றும் இல்லை எனக் கூறுகின்றனர்" என்று தெரிவித்தார்.

CGT தலைமை, அரசாங்கம், நிர்வாகம் ஆகியவற்றுடன் பெரிதும் நெருக்கமாக ஒத்துழைப்பதாக இப்பொழுது பல தொழிலாளர்களாலும் பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

Force Ouvrière இன் தலைமை பெரும் தயக்கத்துடன் கீழிருந்து வந்த அழுத்தத்தை ஒட்டி வேலைநிறுத்தம் தொடர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். "முதலில் FO வின் தலைமை வேலைநிறுத்தம் தொடர வேண்டும் என விரும்பவில்லை; ஆனால் தொழிலாளர்களின் அதிருப்தியை கருத்திற் கொண்டு அவர்கள் இணங்கியுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

அக்டோபர் 20, சனிக்கிழமை அன்று வேலைநிறுத்தம் பற்றி மேலும் அறிக்கை வெளியிடப்படும்.

See Also:

மருத்துவ பராமரிப்பின் மீதான "வரிக்கு" பிரஞ்சு தொழிலாளர்கள் எதிர்ப்பு