World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

World economy: Financial crisis exposes market myths

உலகப் பொருளாதாரம்: நிதிய நெருக்கடி, சந்தைக் கற்பனைகளை அம்பலப்படுத்துகிறது

By Nick Beams
30 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

1997--98 ஆசியப் பொருளாதார நெருக்கடியை ஒட்டி, உலகச் சந்தைகளை தாக்கிய நெருக்கடி மீண்டும் வராமல் தடுக்கும்பொருட்டு நிதிய மற்றும் அரசியல் வட்டாரங்களில் ஒரு புதிய "உலகந்தழுவிய நிதியக் கட்டுமானம்" மற்றும் கூடுதலான "வெளிப்படைத்தன்மை" தேவை என்று அதிகம் பேசப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பின்னரும், ஒரு புது நிதியக் கட்டுமானத்திற்கான திட்டங்கள் இன்னும் நிறைவேறாமல் உள்ளன. வெளிப்படைத் தன்மைக்கான கோரிக்கை ஒரளவிற்கு கூடுதலான வகையில் நிதிய அதிகாரிகளால் எதிர்கொள்ளப்பட்டாலும், சந்தைமுறையின் அடிப்படை அறிவுக்கு பொருந்தாத்தன்மையானது இப்பொழுது மீண்டும் பேரழிவு தரக்கூடிய சக்தியுடன் வெளிப்பட்டுள்ளது.

சந்தை மற்றும் அதன் "அறிவுடைமை" யின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்படும் முக்கிய வாதங்களில் ஒன்று, -முன்னாள் மத்திய வங்கி தலைவர் அலன் கிரீன்ஸ்பானுக்கு பிடித்தது- சிக்கல் வாய்ந்த உலகந்தழுவிய பொருளாதாரத்தில் வேறு எந்த "தகவல் முறையும்" அதன் இடத்தை எடுத்துக் கொள்வது சாத்தியப்படாது என்பதாகும்.

இக் கற்பனையுரை மீண்டும் சமீபத்திய நெருக்கடியினால் சிதறுண்டுள்ளது; இதன் தோற்றம் உலக நிதிய முறையின் இதயத்தானத்தில், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கச் சந்தையில் நடைபெற்று வரும் இருள் படர்ந்த வழிவகை பற்றித் தகவல் ஏதும் அதிகம் இல்லாமலிருப்பதில் உள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் நிதியச் சந்தைகளை கிட்டத்தட்ட கவ்விவிட்ட கடன் நெருக்கடியின் பின்னணியில் இருக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று எந்த அளவிற்கு பெரிய வங்கிகளும் நிதிய அமைப்புக்களும் குறைந்த பிணையுள்ள அடைமான கடன் என அழைக்கப்படும் ஆபத்து நிறைந்த வணிகத்தில் எவ்வளவு தூரம் பிணைந்திருந்தன என்பதாகும். இதன் விளைவாக வணிக ஆவணங்கள் --பெரும் நிறுவனங்களும் நிதிய அமைப்புக்களும் அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான தங்கள் குறுகிய கால நிதியை பெருவதற்காக வெளியிடப்படும் கடன்கள்-- சந்தையில் உறைதலுக்கு உட்பட்டன.

குறைந்த பிணையுள்ள அடமானங்கள் நிதியச் சந்தைகளில் ஒப்புமையில் குறைவான விகிதத்தையே கொண்டிருந்தாலும், காப்பு நிதிகள் (Hedge funds) பற்றிய உறுதித் தன்மை மற்றும் வங்கி ஆதரவுகள் உடைய மூலதனப் பிரிவுகளும் அவற்றை வைத்திருக்கக்கூடும் என்ற கருத்து முழுச் சந்தையையும் ஆக்கிரமிக்க தொடங்கியது.

இப்பொழுது பெரிய வங்கிகள் மற்றும் பிற நிதிய அமைப்புக்கள் எந்த அளவிற்கு குறைந்த பட்சமேனும் தொடர்பு கொண்டிருந்தன என்பது வெளிவந்துவிட்டது.

பிரிட்டனின் முக்கிய வங்கியான Barclays அதன் SachsenLB என்னும் நொடித்துவிட்ட ஜேர்மனிய அரசு வங்கியுடன் கொண்டிருந்த தொடர்பு பற்றி ஆய்விற்கு உட்பட்டுள்ளது; அவ் வங்கியோ ஆபத்து நிறைந்த அமெரிக்க குறைந்த பிணையுள்ள அடைமான கடனில் அதிகம் மூழ்கியிருந்தது. கடந்த மே மாதம், கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர்கள் சொத்துக்களை கொண்டிருந்து அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க முக்கிய மற்றும் குறைந்த பிணையுள்ள அடைமானங்களில் முதலீடு செய்திருந்த சாக்ஸென்சிற்காக - Sachsen Funding1-- பார்க்ளேஸ் ஒரு நிதியத்தை ஒதுக்கியிருந்தது. பைனான்சியல் டைம்ஸில் வந்துள்ள ஒரு தகவலின்படி பார்க்ளேயின் இழப்பு "குறைந்தது பல நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களாக" இருக்கக்கூடும்.

அமெரிக்காவில் கூட்டாட்சி ரிசேர்வ் வங்கி அசாதாரண முறையில் முக்கிய வங்கி விதிகளை மீறி Citigroup மற்றும் Bank of America விற்கு உதவி செய்த வகையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக Fortune தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதி மத்திய வங்கி எழுதிய இரு கடிதங்களை இது மேற்கோளிட்டுள்ளது; அவற்றில் இவ்வங்கி "இரு வங்கிகளையும் மத்திய வங்கியின் பாதுகாப்பில் இருக்கும் வங்கிகள் தங்கள் இடைத்தரகு நிறுவனங்களுடன் கொள்ள வேண்டிய நடவடிக்கைகளின் ....விதிகளில் இருந்து கொடுக்க வேண்டிய பண வரம்பு பற்றி விலக்கு அளிக்கிறது". அறிக்கையின்படி Citigroup மற்றும் Bank of America இரண்டும் "அடைமானக் கடன்கள், அடைமான தளமுடைய காப்பு நிதிகள், பிற நிதிகள் இவற்றை கொண்டுள்ள நிறுவனங்களுக்கு செலுத்துமதி தகமை (liquidity)" பற்றிய விலக்குகள் அளிக்க வேண்டும் என்று கோரியதாக தெரிகிறது.

ஆகஸ்ட் 22ம் தேதி சிட்டி வங்கியும், அமெரிக்க வங்கி $500 மில்லியனுக்கும் மேலாக ஒவ்வொன்றும் 30 நாள் கடனாக கூட்டாட்சி இருப்பின் தள்ளுபடிப் பிரிவில் இருந்து பணம் கேட்ட நான்கு வங்கிகளில் இரண்டு ஆகும். அந்த நேரத்தில் இந்த நடவடிக்கை இவ்வங்கிகளை கடன் வசதிகளை பயன்படுத்திக் கொள்ள ஊக்கமளிக்கும் இலக்கை கொண்டதாக விளக்கப்பட்டது; இதையொட்டி பொதுவாக அத்தகைய கடன்வாங்குதலில் இருக்கும் களங்கத்தை அகற்றும் என்று விளக்கப்பட்டது.

மத்திய வங்கி கொடுத்த விதிவிலக்கு பற்றிக் கருத்துக் கூறிய ஒரு அமெரிக்க வங்கி செய்தித் தொடர்பாளர் அது "மத்திய வங்கியின் தள்ளுபடிப் பிரிவில் இருந்து வாடிக்கையாக வணிக வழிவகைகளை பயன்படுத்துவதற்காக கொடுக்கப்பட்ட "நடைமுறை செயல்தான்" என்று குறிப்பிட்டார்.

Citigroup ஐ பொறுத்த வரையில், மத்திய வங்கி, அதன் இடைத்தரகு பிரிவிற்கு செலுத்துமதி தகமை கொடுப்பதற்கு "விரைவிலும், அதிக செலவினங்கள் இல்லாதான வகையிலும்" அனுமதிக்கப்பட்ட விதிவிலக்கு ஆகும் என்று கூறியது.

விதிவிலக்குகள் அளித்திருப்பது பெரிய வங்கிகள் மற்றும் அதன் கிளைகளில் செலுத்துமதி தகமை விளைவு பற்றிய வினாக்களை எழுப்பியுள்ளது. "அந்த நேரத்தில் தள்ளுபடி பிரிவு கொடுக்கும் கடன்கள் மிக ஒழுங்காகவும் கிட்டத்தட்ட ஒரு அடையாளம் போல்தான் பூசிக் காட்டப்பட்டன. அப்படி என்றால், இந்த விதிவிலக்குகளை பயன்படுத்தி இடைத்தரகு நிதிகளுக்கு அவசரமாகப் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன" என்று Fortune கட்டுரை கேட்டுள்ளது.

ஐயத்திற்கு இடமின்றி இன்னும் கூடுதலான வினாக்கள் கடன் நெருக்கடி பற்றிய விவரங்கள் வெளிவரும்போது தோன்றும். இதற்கிடையில் அமெரிக்க வீடுகள் சந்தையின் சரிவு என்ற அடித்தளத்தில் உள்ள இக்காரணிகளில் ஒன்றின் பாதிப்பு குறையும் தன்மையை காட்டவில்லை.

அண்மையில் வந்துள்ள தவகல்கள் அமெரிக்காவில் விற்பனையாகாத வீடுகளின் அளவு என்பது கடந்த மாதம் 16 ஆண்டுகளாக இல்லாத உயர்மட்டத்தை எய்தியது; இதை ஒட்டி பொருளாதார வல்லுனர்கள் ஜூலை மாதப் புள்ளிவிவரங்கள் மே, ஜூன் நிலைமையை மட்டுமே பிரதிபலித்ததால் கீழ்நோக்குப் போக்கு இன்னும் கூடுதலான வகையில் கடன் சந்தையை நெருக்கடிக்கு உட்படுத்தும் என்று தெரிவிக்கின்றனர்.

வீடுகள் சந்தையில் உள்ள பிரச்சினைகள் தொடரும் விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை உடையவை ஆகும். இந்த வாரம் வெளிந்துள்ள புள்ளிவிவரங்கள் கடன் அட்டைகளில் வாங்கிய பணத்தை கொடுக்கத் தவறுதல் பெருகிவிட்டதை காட்டுகின்றன. கடன்கள் அட்டை கொடுக்கும் நிறுவனங்கள் 2007 முதல் பாதியில் வரவேண்டிய தொகையில் 4.58 சதவிகிதத்தை வசூலிக்க முடியாது எனத் தள்ளுபடி செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டன; இது கிட்டத்தட்ட கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகழ்ந்ததைவிட 30 சதவிகிதம் அதிகமாகும். வீடுகளுக்கு கொடுக்கும் கடன் சந்தை நெருக்கடியில் இருப்பது இதன் காரணங்களில் ஒன்றாகும்; இதன் பொருள் கடன்கள் அட்டை கடனுக்கு வீடுகள் அடைமானத்தில் இருந்து பணம் எடுத்துக் கொடுப்பது இன்னமும் கடினமாகிவிடும் என்பதாம்.

தற்போதைய நெருக்கடியின் மிக முக்கியமான கூறுபாடுகளில் ஒன்று செய்தி ஊடக கட்டுரையாளர்கள் காட்டும் முழுக் குழப்பம் ஆகும்; இவர்கள் உலகப் பொருளாதாரச் சந்தையின் செயல்பாடுகள் அனைத்தையும் விளக்க முற்படுகின்றனர்; எப்படிப்பட்ட குறைகள் இருந்தபோதிலும், பொருளாதார அமைப்பின் தன்மையை ஒட்டித்தான் அவை இருக்கும் என்றும் இவர்கள் வலியுறுத்துகின்றனர்.

வாஷிங்டன் போஸ்ட்டின் பொருளாதார நிருபரான Robert Samuelson, ஆகஸ்ட் 22 Newsweek கட்டுரை ஒன்றில் எழுதுகையில் பெருமந்த நிலை அனுபவம் ஒன்றை நினைவு கூருகிறார்; பின் இன்றைய உலகந்தழுவிய பொருளாதாரம் ஐயத்திற்கு இடம் இன்றி, "ஒரு பெரிய, உறுதி குலைக்கக்கூடிய அச்சுறுத்தல் திறனை" எதிர் கொண்டுள்ளது என்றும் அவற்றுள் ஒன்று பூகோள நிதியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றைய உலகப் பொருளாதார முறையை அறிந்ததாக கூறிக் கொள்ளும் எவரும் ஒன்று "மனச் சிதைவு உடையவராக இருக்க வேண்டும் அல்லது நேர்மையற்றவராக இருக்க வேண்டும்."

அதிகம் கருத்தை வளர்க்க விரும்பாத சாமுவல்சென் தன்னுடைய கருத்துக்களின் உட்குறிப்புக்களை அதிகமாக ஆராயாமல் விட்டுவிட்டார்: அதாவது பல நூறாயிரக்கணக்கான மில்லியன் கணக்கான மக்களுடைய வாழ்வுகள் ஒரு பொருளாதார முறையினால் பேரழிவிற்கு உட்படுத்தப்படுகின்றன; அந்த முறைபற்றி அதை நடத்தும் சக்திகள் கூட, கட்டுப்படுத்துவது ஒமு புறம் இருக்க, புரிந்துகூடக் கொள்ள முடியாது.

Morgan Stanley Asia உடைய தலைவரும் முன்னாள் முக்கிய பொருளாதார வல்லுனருமான Stephen Roach இந்நெருக்கடி மத்திய வங்கியின் தோல்வியினால்தான் ஏற்பட்டது என்று கூறியுள்ளார். எளிதான பணத்தை தொடரும் கொள்கையில் மத்திய வங்கி ஒரு சங்கிலித் தொடர் போன்ற நிகழ்வுகளை தொடக்கியது; அது ஒரு நிதியக் குமிழ் மற்றொரு நிதியக் குமிழை, நிலையற்ற பங்குகள், வீடுகள் இவற்றில் இருந்து கடன்கள் வரை பெருகிக் காட்ட அனுமதித்து விட்டது.

உலகப் பொருளாதாரத்தின் சமச்சீரற்ற தன்மைகளின் குறிப்புக்களை தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வரும் ரோச், "ஒரு குமிழில் இருந்து மற்றொன்றிற்கு" உலகம் பாய்ந்துவிடாது என்று எச்சரித்துள்ளதுடன், அலட்சியப்படுத்துவதன் விளைவு, "இன்னும் பெருகிய முறையில் முறையான ஆபத்தை எதிர் கொள்ளுதல் என்பது பெருகிய முறையில் ஒருங்கிணைந்த உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை கொடுக்கும்" என்றும் கூறியுள்ளார். ஆனால் நெருக்கடிக்கு அவரால் விடையிறுக்க முடியவில்லை; "தாமதமாவதற்குள் மத்திய வங்கியின் கலை, அறிவியல் முறைகள் 'மிகப் பெரிய அளவில்' தூய்மையாக்கப்பட வேண்டும்" என்று மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார்.

பைனான்சியல் டைம்ஸின் பொருளாதாரக் கட்டுரையாளரான Martin Wolf, ஆகஸ்ட் 21 வெளியிட்ட கட்டுரை ஒன்றில் மத்திய வங்கி "தொடர்ச்சியான குமிழ்களை ஏற்படுத்துகிறது" என்ற குற்றச் சாட்டிற்கு உட்படுத்தப்படலாம்; ஆனால் திறமையற்றவர்களால் இது நிர்வகிக்கப்படுகிறது என்ற பொருளைத் தராது என்று எழுதியுள்ளார். மாறாக இதன் செயற்பாடுகள் "அசாதாரண சூழ்நிலைக்கு" திறமையான நபர்கள் எதிர்கொண்டுள்ள தன்மையைத்தான் காட்டுகிறது.

மகத்தான இருப்புக் கணக்கு அதிக தொகைகள் இருக்கும் சூழ்நிலையில் --முதலீடுகளை விடக் கூடுதலாக இருக்கும் சேமிப்புக்கள்-- உலகின் மற்ற பகுதிகளில் குறிப்பாக சீனாவிலும், கிழக்கு ஆசியாவிலும், சேமித்து வைக்கப்படுகையில், அமெரிக்கா வேறு வழியின்றி உலகின் செலவாளியாகவும், கடனாளியாகவும் செயல்பட வேண்டிய தேவையில் உள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் வணிகங்கள் முதலீடு செய்யத் தவறியுள்ள நிலைமையில், இதன் பொருள் மத்திய வங்கி ஒரு கொள்கை வகுக்க வேண்டும் என்பதுதான்; அது "மகத்தான அளவில், முன்னோடியில்லாத வகையில், அமெரிக்க வீடுகளில் நிதியப் பற்றாக்குறையை தோற்றுவிக்கும் தன்மை உடையதாக இருக்க வேண்டும்". அவ்வாறு செய்வதும்கூட பொருளாதாரம் பெருமந்த நிலையை அடையச் செய்துவிடும்.

"இன்றைய கடன் நெருக்கடி... ஒரு குறைபாடு உடைய நிதிய முறையின் அறிகுறி என்பதைவிடக் கூடுதலான தன்மை உடையது. சமசீரற்ற உலகப் பொருளாதாரத்தின் ஒரு அறிகுறியும் ஆகும். உலகப் பொருளாதாரமானது அமெரிக்க குடும்பங்கள் தாங்கள் சம்பாதிப்பதைவிட அதிகம் செலவு செய்யத் தயாராக இருக்கும் விருப்பத்தை இனியும் சார்ந்திருக்காது. அவர்களுடைய இடத்தை எவர் எடுத்துக் கொள்ளுவர்?" என்று அவர் முடிவாய் கூறினார்.

தன்னுடைய பகுப்பாய்வை அந்த இடத்தில் வொல்ப் நிறுத்திக் கொள்ளுகிறார்; ஏனெனில் அதற்கு மேல் தொடர்ந்தால் ஒரு பொருளாதார பேரழிவைத் தரக்கூடிய செயற்பாட்டை தோற்றுவிக்கும் ஒரு அமைப்பின் தொடர்ந்தும் உயிர்வாழக்கூடிய தன்மை பற்றி உளைச்சல் கொடுக்கும் வினாக்களை எழுப்ப நேரிடும்.