World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Founding conference of German Left Party in Hessen

Aged trade unionists, disgruntled Social Democrats and former Stalinists

ஹெசனில் ஜேர்மன் இடது கட்சியின் நிறுவக மாநாடு

வயதான தொழிற்சங்கவாதிகள், அதிருப்தியடைந்த சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்ட்டுக்களின் கூட்டம்

By Ulrich Rippert
30 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த சனிக் கிழமையன்று பிராங்க்பேர்ட்-மைன் நகரத்தில் நடைபெற்ற இடது கட்சியின் நிறுவக மாநாட்டில் நுழைந்த எவருக்கும் சாதாரண தொழிற்சங்கக் கூட்டத்தின் வாடிக்கையான சூழ்நிலைதான் தவிர்க்க முடியாமல் நினைவிற்கு வந்திருக்கும். மாநாட்டிற்கு வந்திருந்த கிட்டத்தட்ட 300 பிரதிநிதிகள், விருந்தாளிகளில், மிகப் பெரும்பான்மையினர் ஒருவரை ஒருவர் பல ஆண்டுகளாக, ஏன் தசாப்தங்களாக கூட அறிந்திருக்கக்கூடும். பெரும்பாலானவர்கள் ஏற்கனவே ஓய்வுபெறும் வயதை அடைந்திருக்க வேண்டும் அல்லது கடந்து இருக்க வேண்டும்.

இளவயதுப் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தது வியக்கத்தக்கதாகும்; ஓரளவேனும் ஒரு நிறுவன மாநாட்டில் எதிர்பார்கக்கூடிய வகையில் சிறிது அக்கறை அல்லது ஆர்வத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கக்கூடும். இருந்த ஒரு சில இளவயதினரும் இளம் தொழிற்சங்கவாதிகளை போல்தான் பேசினர். புதிதாக ஏதும் அளிக்கப்படவில்லை --பழைய கீறல் விழுந்த ஒலிக்குறிப்புத்தான் எழுந்தது.

ஹெசியாவின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (DGB) யின் தலைவர் முக்கிய பேச்சாளரும் கட்சித் தலைவருமான ஒஸ்கார் லாபொன்ரைன் (Oscar Lafontaine) அரங்கில் அவர் நண்பர்கள் புடைசூழ நுழைந்தபோது முழு வரவேற்பை பெற்றார். பிரதிநிதிகள் எழுந்து நின்று "ஒஸ்கார்! ஒஸ்கார்!" என்று பாராட்டிக் கூவினர்.

நாற்பது ஆண்டுகள் சமூக ஜனநாயக கட்சியின் (SPD) முக்கிய அலுவலராகவும், அதன் தலைவராக எட்டு ஆண்டுகள் முன்பு இருந்தவரையும் பெரும் ஆர்வத்துடன் இந்தப் "புதிய" கட்சி புகழாரம் சூட்டிப் போற்றுவது அதன் இயல்பான தன்மையை காட்டுகின்றது. இடது கட்சியின் தன்மையை மிகத் தெளிவாக பிராங்க்பேர்ட் மாநாடு விளக்கிக் காட்டியது. இது ஒரு மூத்த தொழிற்சங்கவாதிகளின் சங்கம் ஆகும்; நாட்டின் கிழக்கிலிருந்தும், மேற்கில் இருந்து வந்த அதிருப்தியடைந்த சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் முன்னாள் ஸ்ராலினிசவாதிகள் நிறைந்த; பல தசாப்தங்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாகத்திற்கும் இடையே ஜேர்மனிய அமைப்பு முறையான சமூக கூட்டுழைப்பு (social partnership) இருந்தபோது அதில் இருந்து இலாபம் அடைய தீவிரமாக செயல்பட்ட ஆடவரும் பெண்டிரும் ஆவர். இப்பொழுது இவர்கள் புதிய வர்க்க முரண்பாடுகளின் வெடிப்பிற்கு பெரும் எச்சரிக்கை உணர்வுடன் விடையிறுக்க முன்வந்துள்ளனர்.

இடது கட்சியின் முன்னோக்கு வருங்காலத்தை பற்றி, அதாவது ஒரு தற்கால தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச உற்பத்திமுறைகளின் அடிப்படையில் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்கு வகை செய்யும் புதிய சமூகம் ஒன்றை கட்டமைப்பது என்று இல்லாமல் தேசிய அரசமைப்பு பாதுகாப்பாக இருந்து அமைதியான முறையில் வர்க்க வேறுபாடுகளை சமரசப்படுத்தி கொள்ள முடிந்த நிலை இருந்த பழங்காலத்தைத்தான் காண்கிறது. பரந்த சமூக அடுக்குகள் சமூக ஜனநாயக கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் வீழ்ச்சியில் இருந்து எவ்வித படிப்பினைகளையும் பெறக்கூடாது என்ற நிலைப்பாட்டைத்தான் இக்கட்சி காண விரும்புகிறது; இதை ஒட்டி, ஒரு புதிய அரசியல் முன்னோக்கிற்கான பாதைக்கு தடைக்கல் இடுகின்றது.

இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு போதிய தந்திர அறிவை ஒஸ்கார் லாபொன்ரைன் கொண்டுள்ளார்; இது அவரை, இடது கட்சியின் போட்டிக்கு இடமில்லாத தலைவராக செயல்படுத்துவதற்கு உதவியிருந்தது. அதே பல்லவிதான் இப்பொழுது அவருடைய தற்போதைய, முந்தைய அரசாங்கங்களின் சமூக விரோத கொள்கைகளை கண்டிக்கும் உரைகளில் ஒலிக்கிறது; பொதுவாக சர்வதேச பொருளாதார கொள்கையின் "பைத்தியக்காரத்தனத்தை" பற்றிய புகார்கள், ஜேர்மனிய கொள்கை பற்றி குறிப்பாக மற்றும் அதற்கு நீண்ட காலமாக இவர் கூறும் காலம்கடந்துவிட்ட சமூக சீர்திருத்தவாத வழிவகைகள் ஆகியவைதான் மீண்டும் கூறப்படுகின்றன.

அத்தகைய மக்களை திருப்தி செய்யும் உரை ஒன்றைத்தான் பிராங்பேர்ட்டிலும் அவர் நிகழ்த்தினார்: சமூக ஜனநாயக கட்சியின் தற்போதைய தலைவர் Kurt Beck அண்மையில் சராசரி வேலைசெய்யும் காலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது, "மனக்குழுப்பம்" என்ற அடிப்படை ஒன்றினால்தான் அதனை விளங்கிக்கொள்ளமுடியும் என லாபொன்ரைன் கூறுகின்றார்.

"அவருடைய கட்சி பசுமைக்காரர்களுடன் கூட்டு சேர்ந்து ஓய்வூதிய தொகைகளை குறைத்தபோது Kurt Beck எங்கு இருந்தார்? பிரான்ஸ் முன்டேபெரிங்தானே (தற்போதைய சமூக ஜனநாயக கட்சியின் துணைத்தலைவர்) ஓய்வூதிய வயது அதிகப்படுத்த வேண்டும் என்று வாதிட்டது?" என்பவைதான் அவரது உரைகளில் இருந்தன.

கூட்டத்திலிருந்த வயதான பிரதிநிதிகள் இசை நிகழ்ச்சியில் இளைஞர்கள் போல் இக்கருத்துக்களை எதிர்கொண்டனர். லாபொன்ரைன் கூறிய ஒவ்வொரு மூன்றாம் சொற்றொடரும் கரவோலியுடனும், "தீரச்செயல்" என்றும் வரவேற்கப்பட்டன. உத்தியோகபூர்வ கொள்கையை பற்றி வாடிக்கையாக கூறும் அதே கருத்துக்கள் ஏமாற்றத் திகைப்பில் உள்ள சமூக ஜனநாயகவாதியினர் மற்றும் நொந்துபோய் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் நிறைந்த பார்வையாளர்களிடையே அலைகளென உற்சாகத்தை கொடுப்பதற்கு போதுமானவையாக இருந்தன.

ஆனால் இவ்விதத்தில் பிரதிநிதிகள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருந்தனர். சமூக ஜனநாயக கட்சி, கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU) மற்றும் கிறிஸ்துவ சமூக யூனியன் (CSU) ஆகியவை அடங்கியுள்ள தற்போதைய ஆளும் பெரும் கூட்டணிக்கு அரசியல் அளவில் மாற்றீடு ஏதும் இல்லாத நிலையில் இடது கட்சி வாக்குகளை தற்போது வாக்குகளை பெறக் கூடும்; ஆயினும்கூட கட்சிக்கும் பெரும்பாலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் இடையே பெரும் பிளவு உள்ளது.

பெரும்பாலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் தீவிர அரசியல் விடையைக் காண வேண்டிய பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை அன்றாடம் எதிர்கொள்ளுகின்றனர்; லாபொன்ரைனின் துர்நாற்றம் வீசும் வாடிக்கைப் பேச்சுக்களை அல்ல; அவரோ அவர்களுக்கு சமூக சீர்திருத்தக்காலம் என்ற பொற்காலத்திற்கு மீண்டும் செல்லலாம் என உறுதி மொழி தருகிறார். லாபொன்ரைனின் வனப்புரையின் தேவை இன்றியே அவர்கள் சமூக நெருக்கடியின் விளைவுகளை அவர்கள் சொந்த முறையில் அனுபவித்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்; Hartz IV விதிகள் மற்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகள் ஜேர்மன் சமூகநல அரசாங்கத்தின் இல்லாதொழித்ததற்கு எவர் பொறுப்பு என்பதை அவர்கள் நன்கு அறிவர்.

ஆலைகளிலும் அலுவலகங்களிலும் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் Hartz IV மீது நம்பி வாழும் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் உண்மைப் பிடியை எதிர் கொண்டுள்ளனர்; இது வேண்டுமென்றே முதலாளிகளால் ஊதிய, சமூகநல வெட்டுக்களை சுமத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி முறையினால் ஏற்படும் பின்விளைவுகளையும் அவர்கள் இடைவிடமால் சந்திக்க வேண்டியுள்ளது; அவை அரசியல் வடிவமைப்பையும் அடிப்படையில் மாற்றி விட்டன; வர்க்கங்களுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்திய கொள்கைகளின் அடித்தளத்தையும் அகற்றிவிட்டன.

சமூக கூட்டுழைப்பு என்ற கொள்கை தங்கள் நலன்களை இல்லாதொழிக்க பயன்படுத்தப்படுகிறது என்ற அனுபவத்தையும் தொழிலாளர்கள் கொண்டுவிட்டனர். Opel Motors, Siemens, Telkom, German Railways என்று எந்த நிறுவனமாயினும், தொழிற்சங்க அதிகாரிகளும், தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களும் வேலைநீக்கம், சமூகநலச் செலவினக் குறைப்புக்கள் ஆகியவற்றை செயல்படுத்துவதில் முக்கிய பங்கைக் கொண்டு, அதே நேரத்தில் அத்தகைய நடவடிக்கைகளுக்கு எவ்விதத்தில் எதிர்ப்பு ஏற்பட்டாலும் அதை நெரித்து விடுகின்றன.

தொழிற்சங்க அதிகாரத்துவம் ஒத்துழைப்பாளர்களாக

இடது கட்சி, மிக நெருக்கமான உறவுகளை அத்தகைய தொழிற்சங்க அலுவலர்களுடன் ஏற்படுத்திக் கொள்ள முற்படுகிறது என்பது இயல்பானதுதான். பேர்லினில் இடது கட்சியின் கூட்டாட்சி நிறுவன மாநாட்டில் ஏற்கனவே ஓர் உயர்மட்ட ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பின் (DGB) பிரதிநிதிகள் குழு கலந்து கொண்டுள்ளது. இக்குழுவில் Transnet ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரான Norbert Hansen உம் இருந்தார்; அவர் சமீபத்தில் ரயில் சாரதிகள் வேலைநிறுத்தத்தை முறிப்பதில் அதிகத் தீவிரம் காட்டியிருந்தார். பிராங்பேர்ட்டில் லாபொன்ரைன் அந்த தொழிற்சங்கங்களை இடது கட்சியின் "மிக முக்கிய நட்பு அமைப்புக்கள்" என்று வெளிப்படையாக புகழ்ந்தார்.

நாட்டின் கிழக்குப் பகுதியில் இடது கட்சி தன்னுடைய முக்கிய ஆதரவை ஸ்ராலினிஸ்ட்டுக்களின் எஞ்சிய ஜேர்மன் சோசலிச ஐக்கிய கட்சி (SED) அதிகாரத்துவத்திடம் இருந்து பெருகையில், மேற்கில் கட்சி முக்கியமாக தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம் இருந்து பெருவதை நம்பியுள்ளது. கட்சியின் பல முக்கிய உறுப்பினர்களும் முழுநேர தொழிற்சங்க அலுவலர்களாக அல்லது தொழிற்சாலை தொழிலாளர் குழு அதிகாரிகளாக உள்ளனர்.

2008ல் வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் கட்சியின் முக்கிய வேட்பாளராக Hesse மாநில ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான Dieter Hooge ஐ வேட்பாளராக நிறுத்துவது என்பதும் பிராங்பேர்ட் மாநாட்டின் திட்டமாக இருந்தது. லாபொன்ரைன் சொந்த முறையிலேயே Hooge இன் நியமனத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார்.

ஜேர்மன் தொழிற்சங்க இயக்கத்தின் வீழ்ச்சி மற்றும் வலதுபக்கம் சார்ந்தமை என்ற இரண்டையுமே ஒன்றாக உருவகப்படுத்திய முறையில் Hooge உள்ளார். Academy of Labour (AdA) என்னும் தொழிற்சங்கப் பள்ளியில் 1960களின் இறுதியில் அவர் படித்து முடித்து அதிகாரத்துவ ஏணியில் பிந்தைய தசாப்தங்களில் படிப்படியாக முன்னேறினார். ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியுடன் (DKP) நெருக்கமான உறவுகளை தக்க வைத்துக் கொண்டிருந்தாலும், சமூக ஜனநாயக கட்சியில் 40 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் கட்சியில் இருந்து விலகி தேர்தல் மாற்றிட்டுக் குழுவின் ஹெசிய மானில பிரிவை நிறுவனார். இது பின்னர் கிழக்கு ஜேர்மனிய தளத்தைக் கொண்ட Party of Democratic Socialism (PDS) உடன் இணைந்து இடது கட்சியை அமைத்தது.

பிராங்பேர்ட் மாநாடு தொடக்கப்படுவதற்கு முன்பு, லாபொன்ரைனுடன் செய்து கொண்ட ஏற்பாட்டின் பேரில், Hooge செய்தி ஊடகங்களில் தன்னை கட்சியின் முக்கிய மாநில வேட்பாளர் என அழைக்க அனுமதி கொடுத்ததுடன், மாநாட்டின் போதும் ஒன்றன்பின் ஒன்றாகப் பல பேட்டிகளை கொடுத்தார்.

ஆனால், கடைசி நேரத்தில் லாபொன்ரைனுக்கும் Hooge இற்கும் பிரதிநிதிகள் மூக்கறுப்பு கொடுத்தனர். இரு முறை வேட்பாளர் நியமனத்திற்கு தேவையான வாக்குகளை பெறுவதற்கு ஹூஜ் தவறிவிட்டார்; அதன் பின்னர் தன்னுடைய வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

இவருக்கு பதிலாக பிரதிநிதிகள் நீண்ட காலப் பணியாற்றியுள்ள ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (DKP) ஸ்ராலினிஸ்ட்டான Pit Metzக்கு (மார்பேர்க் நகரைச் சேர்ந்தவர்) வாக்களித்தனர். வேட்புமனு உரையின் போது அரசாங்கத்தில் சமூக ஜனநாயக கட்சியுடன் கூடி இயங்குவது என்ற கருத்தை Hooge நிராகரித்துவிடவில்லை; அதே நேரத்தில் அவர் கட்சி வரவிருக்கும் மாநில பாராளுமன்றத் தேர்தலில் ஒரு "எதிர்த்தரப்புக் கட்சி" என்ற பங்கைக் கொள்ளுமா என்பது பற்றிய தன்னுடைய கருத்திலும் "முற்றிலும் தெளிவாக" இல்லை. தன்னை "ஒரு கம்யூனிஸ்ட்" என்று கருதிக் கொள்ளுவதாகவும், "ஒரு அமைப்பு மாற்றம்" தேவை என்ற முன்னோக்கு உடையவர் என்றும் அவர் கூறினார்; அந்த பாதை "ஒரு நீண்ட கற்கள் நிறைந்த" பாதையாக இருந்தாலும் தன்னுடைய விருப்பம் அதுதான் என்றார்.

மதிப்பிழந்துள்ள சமூக ஜனநாயக கட்சியுடன் வெளிப்படையாக ஒத்துழைப்பு என்று கூறினால் தீவிரமயப்படுத்தப்பட்ட தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அது விலகிச் சென்றுவிடக்கூடும் என்ற கருத்து பெரும்பான்மையான பிரதிநிதிகளுக்குத் தாமதமாக தோன்றியது வெளிப்படையாகும். Der Spiegel குறிப்பிட்டுள்ளபடி, "சில பிரதிநிதிகள் ஏமாற்றமடைந்த சமூக ஜனநாயகவாதிகளினதும் தொழிற்சங்கவாதிகளினதும் அமைப்புத்தான் இது என்று கருதப்பட்டுவிடக்கூடும் என அஞ்சினர் என்பது வெளிப்படை."

மார்பேர்க்கில் இருந்து வந்த ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் குழு பெற்ற வெற்றி கட்சியின் பொது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஜேர்மனிய மறு ஒருங்கிணைப்பிற்கு முன்பு ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு ஜேர்மனியில் கிழக்கு ஜேர்மனிய அரசாங்கக் கட்சியின் ஒரு பிரிவாக செயல்பட்டு வந்து கிழக்கு பேர்லினிடம் இருந்து கணிசமான நிதி உதவியை பெற்று வந்தது. பல தொழிற்சங்கங்களிலும் அவ்வமைப்பு தீண்டத்தகாதது என்று கண்டிக்கப்பட்டிருந்தாலும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கண்காணிப்பு பங்கை அது எடுத்துக் கொண்டிருந்தது. இடதில் இருந்து தொழிற்சங்க தலைமையை எவர் குறை கூறினாலும் அவர் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் காப்பாளர்கள், ஏன் குண்டர்களையும் சமாளிக்க வேண்டி இருந்தது. குறிப்பாக உண்மையான ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் அல்லது அவ்வாறு கூறிக்கொள்ளுவோருக்கு எதிரான போராட்டத்தில், தொழிற்சங்க அதிகாரத்துவம் எப்பொழுதுமே ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் நம்பியிருந்தது.

1980 களிலும் 1990 களிலும் தொழிற்சங்கங்கள் தங்கள் செல்வாக்கை இழந்துவிட்டிருந்த நிலையில், தீவிரமாக இயங்கிவந்த வந்த முன்னாள் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பெருகிய முறையில் தொழிற்சங்க குழுக்களில் முக்கிய பதவிகளை எடுத்துக் கொள்ள முடிந்தது. Pit Metz ஒரு நீண்ட கால முக்கிய Verdi தொழிற்சங்க தலைவராக இருந்தார்; கடந்த ஒன்றரை தசாப்தங்களில் மார்பேர்க்கில் விழியற்றோருக்கு நடத்தப்படும் கல்விக்கூடம் ஒன்றில் தொழிற்சாலை தொழிலாளர் குழுத் தலைவராக முழுநேர வேலையும் பார்த்து வந்தார்.

நம்பகத்தன்மையில் இடைவெளி

வலதுசாரி தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் தொடர்பு கொண்டவர் எவருக்கும் அவர்கள் எப்படி சிறிதும் தயக்கமின்றி பொய் கூறுவர் என்பது தெரியும்; ஆனால் லாபொன்ரைனை சந்தித்தாலோ அவர்களுள் தலையாயவரை கண்டு கொண்டோம் என்பது தெரிய வரும்.

"உத்தியோகபூர்வ அரசியலில் நம்பகத் தன்மை இல்லை" என்பதை எதிர்த்து பிராங்பேர்ட்டில் அவர் கடுமையாக தாக்கிப் பேசினார்; இதையொட்டி மக்கள் "பெருகிய முறையில் கட்சிகளிடம் இருந்து நகர்ந்து விட்டன, வாக்களிப்பதும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

"ஒரே விஷயத்தை பற்றி ஒரே நேரத்தில் அதற்கு எதிராகவும் ஆதரவாகவும் இருக்க முடியாது." என்று தொடர்ந்த அவர், "சமூகநலச் செலவினக் குறைப்பிற்கு எதிராக இருந்து கொண்டு Hartz IV க்கும் ஆதரவைத் தரமுடியாது. ஒப்பந்த முறை, கெளரவமான ஊதியங்கள் ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு அதே நேரத்தில் மிகப் பெரிய ஊதிய வெட்டுக்களுக்கும் ஆதரவு கொடுக்க முடியாது. போருக்கு எதிராக இருந்து கொண்டு பாராளுமன்றத்தில் அதற்கு ஆதரவாக வாக்களிக்கவும் முடியாது" என்றார்.

ஆனால் இது லாபொன்ரைன் மற்றும் அவருடைய கட்சியின் நம்பகத்தன்மையையே வினாவிற்கு உட்படுத்துகிறது.

1988 ல் சமூக ஜனநாயக கட்சியின் தலைவராக இருந்தபோது லாபொன்ரைன்தான் சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சிக் கூட்டணியின் சிற்பியாக இருந்தார்; அதுதான் Hartz IV விதிகளையும், கூட்டாட்சி வரலாற்றிலேயே மிக அதிகமான முறையில் செல்வம் கொழித்தவர்களுக்கு வரிக்குறைப்புக்களையும் அறிமுகப்படுத்தியது. நிதி மந்திரி, அரசாங்கத்தின் துணைத் தலைவர் என்ற முறையில், இப்பொழுது இவர் உரத்த குரலில் வாதிடும் சில சமூக நடவடிக்கைகளை செயல்படுத்தக்கூடிய நிலைமையில் இருந்தார். கடைசியில் அப்படி ஏதும் அவர் செய்யவில்லை; மாறாக எவ்விதக் காரணமும் கொடுக்காமல் தன்னுடைய பதவிகளை விட்டு விலக ஹெகார்ட் ஷ்ரோடர் பதவிக்கு வர வழிவகுத்தார்.

இடது கட்சியின் ஒவ்வொரு கூறுப்பாட்டிலும் நிற்கும் ஏமாற்றுத்தனம், பாசங்குத்தனம் ஆகியவற்றை நிரூபணம் செய்வதற்கு வரலாற்றுப் பழைய நிகழ்வுகளில் அதிக தூரம் செல்ல வேண்டியதில்லை. கடந்த ஆறு ஆண்டுகள் கட்சி பேர்லின் நகரசபையில் அதிகாரத்தில் இருந்து தற்போது கட்சியின் வேலைத்திட்டத்தில் உள்ள பலவற்றிற்கும் முற்றிலும் எதிரானவற்றைத்தான் செயல்படுத்தியது.

சமூக ஜனநாயக கட்சியுடன் கூட்டுக் கொண்டிருந்து, பேர்லினில் இடது கட்சி பொதுப் பணிகளில் 15,000 வேலை இழப்புக்களுக்கு வழிவகுத்து, ஊதிய வெட்டுக்களையும் 10 சதவிகிதத்திற்கு செயல்படுத்தியது. அரசாங்கக் கூட்டணி பாரிய வேலைக்குறைப்புக்கள் ஊதிய வெட்டுக்களையும் பொதுப் போக்குவரத்து, பல்கலைக் கழகங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் செயல்படுத்தியதுடன் மழலையர் பள்ளி, அதற்கும் ஆரம்பகல்விக் கூடங்கள் ஆகியவற்றில் கட்டணத்தையும் உயர்த்தியது. இதைத்தவிர, செனட் மன்றம் 65,000 அரசாங்கத்திற்கு சொந்தனமான குடியிருப்புக்களை அமெரிக்க முதலீட்டாளரும் ஊக வணிக நிறுவனமான Cerberus க்கு விற்றது. பொதுநலப் பணிகள் குறைப்பு என்று வரும்போது ஜேர்மனிய மானிலங்களிலேயே பேர்லின்தான் முதலிடத்தில் உள்ளது.

"ஒரே நேரத்தில் ஒரு விஷயத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் இருக்க முடியாது" என்னும் லாபொன்ரைனின் கூற்றிற்கு இது ஒன்றே போதும்.

முக்கிய அரசியல் கட்சிகளின் பாசாங்குத்தனத்திற்கு ஒரு மாற்றீடு அளிப்பதற்குப் பதிலாக இடது கட்சி ஏமாற்றுத்தனத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைத்தான் கொடுத்துள்ளது. சமூக ஜனநாயகத்திற்கு இது ஒரு மாற்றீடு அல்ல; மாறாக ஏமாற்றமடைந்துள்ள சமூக ஜனநாயகவாதிகளை தடுத்து அவர்களை சமூக ஜனநாயகத்தின் செல்வாக்கிற்குள் தக்க வைப்பதற்கான வழிவகைதான்.

1914 ல் யுத்தக்கடன்களுக்கு ஆதரவாக வாக்களிப்பது என்ற முடிவிற்கு வந்ததில் இருந்தே சமூக ஜனநாயக கட்சி ஜேர்மனியில் முதலாளித்துவ முறையின் முக்கிய தூண்களில் ஒன்றாகத்தான் இருந்து வந்துள்ளது. போருக்குப் பின், சமூக ஜனநாயக கட்சி இரத்தம்தோய்ந்த முறையில் தொழிலாள வர்க்கப் புரட்சியை நசுக்கியது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அது புரட்சிகர நெருக்கடி, மாபெரும் பணவீக்கம் ஆகியவற்றில் இருந்து 1923ம் ஆண்டு முதலாளித்துவ ஆட்சியை பாதுகாத்தது. 1930 களின் தொடக்கத்தில் இக்கட்சி பிற்போக்குத் தன்மை நிறைந்த Brunning அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தது; அந்த ஆட்சியோ அவசரகால ஆணைகளை சுமத்தி நாஜிக்கள் சர்வாதிகாரம் அமைப்பதற்கு வழிவகுத்தது.

இரண்டாம் உலகப் போர், பாசிசம் இவற்றை தொடர்ந்து, சமூக ஜனநாயக கட்சி போருக்கு பிந்தைய கூட்டாட்சி குடியரசை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கை கொண்டிருந்தது. 1960களின் கடைசியில் "இன்னும் கூடுதலான ஜனநாயகம் தேவை" என்ற கோஷங்களை எழுப்பிய மாணவர் தீவிரவாத இயக்கத்தை உண்மையில் மழுங்க வைத்தது; அதே நேரத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு சில சலுகைகள் வழங்கப்பட்டன. இறுதியில், ஹெகார்ட் ஷ்ரோடரின் தலைமையில் சமூக ஜனநாயக கட்சி போருக்குப் பிந்தைய காலத்தில் எஞ்சியிருந்த சமூக நலன்களையும் இல்லாதொழித்தது.

இதையொட்டி ஏற்பட்ட சமூக ஜனநாயக கட்சி உறுப்பினர் எண்ணிக்கை மிகப் பெரிய அளவு குறைந்தது, வாக்குகள் குறைந்தது ஆகியவை லாபொன்ரைன் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை பெரும் எச்சரிக்கையில் தள்ளியது. முதலாளித்துவ ஆட்சிக்கு மிக முக்கியமான தூணாக இருக்கும் சமூக ஜனநாயகத்தை அழித்தலை அல்லது இலகுவாக கைவிடுதலை அவர்கள் எதிர்த்தனர். சமூக ஜனநாயக கட்சியின் சீர்திருத்தவாதம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் உறுதியாக நம்பினர்; புதிய வடிவத்தில் அது இடது கட்சி என்று வந்தாலும்; இதுதான் முதலாளித்துவ ஒழுங்கைக் காப்பதற்கு மிக முக்கியம் என்று அறிந்தனர். எனவேதான் இடது கட்சி சமூக ஜனநாயக கட்சி உடன் எங்கும், எப்பொழுதும் ஒரு கூட்டிற்கு விழைகிறது.