World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

World economy: Credit crunch could bring recession

உலகப் பொருளாதாரம்: கடன் தீவிர நெருக்கடி, பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தக்கூடும்

By Nick Beams
7 September 2007

Use this version to print | Send this link by email | Email the author

குறைந்த பட்சம் தற்போதைக்கேனும் உலக பங்குச் சந்தைகள் உறுதி அடைந்துவிட்டாலும், கடன் சந்தைகளை பொறுத்தவரையில் விஷயம் வேறுவிதமாகத்தான் உள்ளது. வளர்ந்து வரும் நெருக்கடி உலகப் பொருளாதாரத்தில் ஒரு பெரிய சரிவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சங்கள் இருக்கின்றன.

புதனன்று வந்த கட்டுரை ஒன்றில் பைனான்சியல் டைம்ஸ், வங்கிகளுக்கிடையிலான சந்தையில் இருக்கும் பிரச்சினைகள் பற்றி எழுதியுள்ளது; இச்சந்தையில் வங்கிகளும் பெரும் நிதிய அமைப்புக்களும் ஒன்றுக்கொன்று கடன் கொடுக்கின்றன. இங்கு "நிதிய குழுக்களிடையே செலுத்துமதி தகமையில் --தற்போதுள்ள சொத்துக்களால் கொடுக்கல்-வாங்கல் செய்யக்கூடிய தகமை-- பரபரப்பான போட்டி ஏற்படக்கூடும் என்பதால் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என தோன்றுகிறது."

கொள்கை வகுப்பாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இது "பெரும் பலவீனத்தை" ஏற்படுத்தியுள்ளது; ஏனெனில் அமெரிக்க மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி மிகப் பெரிய அளவில் செலுத்துமதி தகமையை நிதியச் சந்தைகளில் உட்செலுத்திய பின்னரும் கூட இந்நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அச்செயற்பாடுகளோ நிதியச் சந்தைகளை அமைதிப்படுத்தி கடன் நெருக்கடியை குறைப்பதற்காக நோக்கம் கொண்டிருந்தவை ஆகும்.

வங்கிகளுக்கு இடையேயான கடன் தொடர்புகள் "கிட்டத்தட்ட முற்றிலும் முறிந்துவிட்டன", யூரோ, டாலர் சந்தைகளில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் இப்படி ஆகியுள்ளது என்று பங்குச் சந்தை பகுப்பாய்வாளர் கூறியுள்ளதை அறிக்கை மேற்கோளிட்டுக் காட்டியுள்ளது.

நிதியச் சந்தைகளின் நிலை, செலுத்துமதி தகமை இல்லாத நிலையின் உட்குறிப்புக்கள் பற்றிய கவலைகள் ஐரோப்பிய மத்திய வங்கி புதனன்று வெளியிட்ட அறிக்கையின் பொருளுரையாக அமைந்தது. ஒரு குறுகிய ஸ்திரமானகாலத்திற்கு பின்னர் நிதியக் கொந்தளிப்பு மீண்டும் வருகிறது என்று அது எச்சரித்துள்ளது.

உலகின் பெரிய பொருளாதாரங்களை தழுவியுள்ள பொருளாதார கூட்டுழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (Organization for Economic Cooperation and Development-OECD) பொருளாதார வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்காவில், நிதியச் சந்தைகளின் கொந்தளிப்பால் பாதிக்கப்படக்கூடும் என்ற எச்சரிக்கை கொடுத்திருந்த அறிக்கை ஒன்று வெளியிட்ட பின்னர்தான் ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) எச்சரிக்கை வந்துள்ளது.

உலகப் பொருளாதார இயங்கு விசை வலுவாக இருந்து, வருங்கால எதிர்பார்ப்புகள் உறுதியற்ற நிலையில் இருக்கும்போது இந்த நெருக்கடி வந்துள்ளது. "கீழ்நோக்கிய ஆபத்துக்கள் மிகவும் தீயதன்மையை கொண்டுவிட்டன; நிதியச் சந்தை நிலைமைகளோ மிகக் கடினமாக இருக்கக்கூடிய நிலைமைகளின் பின்னணியில் இது ஏற்பட்டுள்ளது" என்று அறிக்கை கூறுகிறது.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டின் இரண்டாம் பகுதியில் இரண்டாம் கால்பகுதியில் வலுவான மீழ்ச்சியை அடுத்து "அது கொண்டிருக்ககூடிய திறனைவிடக் கூடுதலாக" சரியக்கூடும். தன்னுடைய கணிப்புக்கள் "கூடுதலான புறத்தில் பிழையாகலாம்; ஏனெனில் கடன் சந்தையின் கொந்தளிப்பு பொருளாதார நடவடிக்கைகள் மீது எத்தகைய எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி முழுமையாக மதிப்பிட இயலவில்லை" என்று அறிக்கை எச்சரித்துள்ளது.

அறிக்கையை கொடுத்த OECD தலைமைப் பொருளாதார வல்லுனர் Jean-Philippe Cotis, அமெரிக்காவில் ஒரு பொருளாதார பின்னடைவு வராது எனக் கூறுவதற்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

புதனன்று வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் எந்த அளவிற்கு அமெரிக்க வீடுகள் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளன என்பதை காட்டுகின்றன. வீடுகள் விற்பனையில் 2 சதவிகிதம் சரிவு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, சரிவு உண்மையில் 12.2 சதவிகிதமாயிற்று என்று National Association of Realtors தெரிவிக்கிறது.

Merrill Lynch ன் தலைமை பொருளாதார வல்லுனர் David Rosenberg கூறினார்: "வீடுகள் பிரிவு மோசத்தில் இருந்து மிக மோசமாகப் போய் கொண்டிருக்கிறது என்பதில் கேள்விக்கு சிறிதும் இடமில்லை. வீடுகள் விலைகளில் சரிவு உள்ள போதிலும், தேவை தொடர்ந்து குறைந்துவருவதை நாம் காண்கிறோம்."

இச்சரிவு வரவிருக்கும் மாதங்களில் தொடர்ந்துதான் இருக்கும். Mortgage Bankers Association வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள், இந்தச் சமீபத்திய கடன் நெருக்கடி தீவிரமாவதற்கு முன் ஆண்டின் இரண்டாம் கால் பகுதி பற்றியவை, மிக அதிக எண்ணிக்கையிலான வீடுகள், கடன்கள் கட்டப்படாததால் ஏலத்தில் விடப்படும் முறை நுழைந்துவிட்டது என்பதை காட்டுகின்றன.

கடன்பெறத் தகுதியில்லாத நிலையை சரிசெய்துகொள்ளும் விகிதம் உடைய அடைமானங்களை பொறுத்தவரையில் 18 மாநிலங்கள் இத்தகைய கடன்களில் 19 சதவிகிதமாவது "திரும்பி வருவது சந்தேகமே" என்று தகவல் கொடுத்துள்ளன. மிசிசிப்பியிலும் மேற்கு வேர்ஜீனியாவிலும், இந்த எண்ணிக்கை 26 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது. இரண்டாம் காலாண்டில் ஏலத்தில் விடப்படுவது 2006ன் இதே காலத்தை ஒட்டி ஒப்பிடப்படும்போது 4 சதவிகிதம் அதிகமாக உள்ளன.

புதனன்று ஐக்கிய நாடுகள் வணிகம், வளர்ச்சி வெளியிட்ட அறிக்கை ஒன்று உலக வளர்ச்சி இவ்வாண்டு 3.4 சதவிகிதமாக, கடந்த ஆண்டின் 4 சதவிகிதத்தில் இருந்து குறையக்கூடும் என்று தெரிவிக்கிறது. அமெரிக்க வீடுகளின் விலைகள் "முற்றிலும் சுருக்கம் கண்டால்" அது நுகர்வோர் தேவையில் வெட்டுக்களை ஏற்படுத்தி, வளர்ச்சி பெற்று வரும் நாடுகளின் ஏற்றுமதிகளை பாதிக்கும் தன்மைக்கு இட்டுச் செல்லக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

பைனான்சியல் டைம்ஸில் இந்த வாரம் வெளிவந்த ஒரு கட்டுரை மற்றும் கடிதத்தில் கடன் சந்தைகள் நெருக்கடி பற்றிய பெருகிய உணர்வின் குறிப்புக்களை காணமுடிகிறது. புதனன்று இச்செய்தித்தாள் Barclays Capital உடைய தலைவரான Hans Jorg Rudloff கொடுத்த தகவல்களை வெளியிட்டது; அவர் நிதியச் சந்தைகள் "மாரடைப்புக்கு" உட்பட்டுவிட்டன என்றும் இப்பொழுது அதில் இருந்து பிழைத்து உடல்நலம் பெற்று வருவதாக கூறிப்பிட்டுள்ளார். சொத்து மதிப்பின் அடிப்படையில் கடன்வாங்குவதற்கு விலைகள் தரத்தை நிர்ணயிப்பதற்கு முதலீட்டாளர்கள் தயாராவதற்கு அடுத்த நான்கு முதல் ஆறு வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இதுதான் ஒரு பெரிய கேள்வியாகும்: புதிய விலைத் தரத்தை இச்சொத்துக்களுக்கு நிறுவும் திறனை நாம் கொண்டிருக்கிறோமா? அகப்பட்டு சிக்கிவிட்டால் நோயாளி இறந்து விடுவார்" என்று அவர் மாஸ்கோவில் நடைபெற்ற ரஷ்ய வணிக நிர்வாகிகள் கூட்டம் ஒன்றில் கூறினார்.

இதற்கு மறுநாள் பைனான்சியல் டைம்ஸ் BNP Paribas என்னும் ஒரு முக்கிய தனியார் வங்கிச் சந்தைகள் பற்றிய உலகப் பொருளாதார தலைமை வல்லுனராக இருக்கும் Paul Mortimer-Lee இடம் இருந்து வந்த கடிதம் ஒன்றை வெளியிட்டது. "மாரடைப்பு" ஒப்புமையை விரிவுபடுத்திய அவர் நிலைமை மோசமாகத்தான் உள்ளது என்றும் மத்திய வங்கிகள் இதுகாறும் தங்கள் நடவடிக்கைகளை ஒரு இதயநோயிற்கு மின்சார அதிர்ச்சி வைத்தியம் (Defibrillator) தேவைப்படும்போது ஆஸ்பிரின் கொடுத்து சரிசெய்யும் வகையில் மேற்கொண்டுள்ளன என்று கூறினார். இன்னும் தீவிர சிகிச்சை "அறநெறி ஆபத்தை" ஒட்டி கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று, அதாவது மிகப் பெரிய தலையீடு என்பது மோசமான முதலீட்டிற்கு உடந்தை அளிப்பது போலாகும் என்ற வகையில், அவர் தெரிவித்தார். இது நோயாளி உணவு முறையையும், உடற்பயிற்சிகளையும் சரியாக செய்திருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவருடைய இதய நோய்க்கு சிகிச்சை கொடுக்காமற் போவதற்கு ஒப்பாகும் என்றார் அவர்.

Mortimer-Lee இன் கருத்தின்படி, மத்திய வங்கிகள் செலுத்துமதி தகமையை உட்செலுத்தும் முறையில் தோற்றுவிட்டன என்றும் ஒரு கடன் நெருக்கடி ஏற்பட்டுவிடும் என்றும் உள்ளது.

"நோயாளிக்கு இழப்பு வந்து, உடல் உறுப்புக்கள்கூட நீலமாகி வரும் நேரத்தில், நோயாளியின் நீண்ட கால உணவு முறை பற்றிய திட்டங்களோ, விரும்பத்தகாத பக்க விளைவுகள் பற்றியோ தற்போதைய சிகிச்சையில் கவனத்திற்கெடுப்பதற்கு உகந்த நேரம் இல்லை. ஆயினும் கூட இதைத்தான் மத்திய வங்கிகள் செய்யும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் நம்பகத்தன்மை நிறைந்ததாகவும், உறுதியாவும் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் இன்னும் பரந்த முறையில் நிதிய உள்வெடிப்புக்களும் பொருளாதார பின்னடைவுகளும் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாகும்."