World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Sarkozy calls for European military build up

ஐரோப்பிய இராணுவத்தை கட்டியெழுப்ப சார்க்கோசி அழைப்பு

By Antoine Lerougetel
3 September 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஆகஸ்ட் 26ம் தேதி பாரிசின் ராஜதந்திரிகள் கூட்டத்தில் பேசிய பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஒரு வலுவான ஐரோப்பாவில் ஒரு வலுவான பிரான்ஸ் இருப்பதுதான் அமெரிக்காவுடன் சம நிலையில் உறவு கொள்ளும் திறனை பெறுவதற்கு தேவையானது என்று வலியுறுத்திப் பேசினார்.

ஐக்கிய நாடுகள், அட்லான்டிக் கூட்டு மற்றும் ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவற்றுடனான ஒத்துழைப்பில் "ஐரோப்பா சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கான முதல் நிலை வினையாற்றுநராக தன்னை கட்டாயம் முன்னேற்றகரமாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்."

உலக வளங்களை, குறிப்பாக சக்தியை மறு பங்கீடு செய்வதற்காக, உலகின் முக்கிய சக்திகளுக்கு இடையே இருக்கும் போராட்டம் பற்றி சார்க்கோசி வெளிப்படையாகவே குறிப்பிட்டு எச்சரித்தார்: "பலமுனைகள் உடையதாக உலகம் மாறிவிட்டது; ஆனால் இந்த பல முனைத்தன்மை புதிய வகையில் பெரிய சக்திகள் இணைந்து செயலாற்றுவதற்கு வழிவகுப்பதற்கு மாறாக, அதிகார அரசியலின் மோதல் போக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது."

இவருடைய உரை அமெரிக்க இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை சவால்விடும் சில நடவடிக்கைகளை எடுத்துக் கூறியது.

உலகின் செல்வம் கொழித்த நாடுகளின் G8 என்பதை சீனா, இந்தியா, பிரேசில், மெக்சிகோ மற்றும் தென்னாபிரிக்காவை இணைத்து G13 என்று விரிவாக்க வேண்டும் என்று சார்க்கோசி அழைப்பு விடுத்தார். அதேபோல் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போதைய ஐந்து (அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன்) என்பதில் இருந்து ஜேர்மனி, ஜப்பான், இந்தியா, பிரேசில் மற்றும் "ஆபிரிக்காவில் இருந்து நியாயமான பிரதிநிதித்துவத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கருத்தை முன்வைத்தார்.

ஆனால் "குரோதமுடைய பல முனை உலகின் அபாயங்களுக்கு" அவரது முக்கிய விடை ஐரோப்பாவை இராணுவமயமாக்குதலின் மூலம் ஒரு புது சமநிலை கொண்டுவருதலாகும். "ஐரோப்பா தன்னுடைய பங்கை ஒரு பெரும் சக்தி என்று எடுத்துக் கொள்ளாதவரை, உலகம் தேவையான சமபலநிலையை இழந்து நிற்கும்" என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கு உலகில் பிரான்ஸ் முன்னணி பங்கை ஆற்றும் ஒரு சக்தி வாய்ந்த ஐரோப்பிய ஒன்றிய இராணுவம் இருப்பது தேவை: "அடுத்துவர இருக்கும் மாதங்களில், நாம் ஐரோப்பாவை ஒரு இராணுவ சக்தியாக வலுவூட்டுவதை நோக்கி ஒன்றாக முன்னேறுவோம், மற்றும் பிரான்ஸ் அவசியமான உறுதியான முன்முயற்சிகளை எடுத்துக் கொள்ளும்."

பிரான்சும் மற்ற பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும் உறுப்பினர்களாக இருக்கும் அமெரிக்க தலைமையிலான இராணுவ கூட்டான NATO- வை வலிமைப்படுத்துவதற்காகவும் அவர் அழைப்பு விடுத்தார்; ஆனால் சமமானவர்களின் பங்காளித்துவத்தை தான் காண விரும்புவதாக அவர் தெளிவுபடுத்தினார். "இரண்டும் ஒன்றாகத்தான் இணைந்து செல்லும்; ஒரு சுதந்திரமான ஐரோப்பிய, பாதுகாப்பு, மற்றும் நாம் முழுப் பங்கை ஆற்றும் ஒரு அட்லாண்டிக் அமைப்பு."

அமெரிக்காவுடன் முழு உடன்பாட்டை கொண்டு உலகம் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துகையில், அவர் பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியமும் கிடைக்கும் கொள்ளைப்பொருளில் தங்கள் சொந்தப் பங்கை போராடிப் பெறவேண்டிய தேவையையும் வலியுறுத்திக் கூறினார். ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பில் பிரான்சின் தலையீட்டை 150 இராணுவ பயிற்சியாளர்கள் உடைய பிரிவின் மூலம் அதிகரிப்பதாக உறுதி கூறிய அவர், "ஐரோப்பிய ஒன்றியம் எமது கண்டம், ஆபிரிக்காவில், மத்திய கிழக்கில் மற்றும் ஆசியாவில் சுமார் பதினைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது" என வலியுறுத்தினார்.

ஐரோப்பிய ஆயுதமயம் மற்றும் பாதுகாப்புத் திறனின் வளர்ச்சிக்கும் சார்க்கோசி அழைப்பு விடுத்தார். "பிரான்சும் ஜேர்மனியும் பிராங்கோ-ஜேர்மனிய இராணுவப் பிரிவின் மூலம் அடித்தளங்களை நாட்டியுள்ளன; பின்னர் ஐரோப்பிய போர்ப்பிரிவு வந்துவிடும்" என்று அவர் கூறினார். பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு இராணுவச் செலவீனங்கள் மற்ற 25 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணைந்து செலவழிப்பதில் மூன்றில் இரு பங்கை பிரதிபலிக்கின்றன என்று கூறிய அவர், "எமது ஏனைய பங்காளிகளும் இந்த பொது முயற்சியில் பங்கு பெறவேண்டும்" என்று வலியுறுத்தினார்.

மறுநாள் ஒரு பாதுகாப்பு பற்றிய வெள்ளை அறிக்கையை தயாரிக்கும் குழுவில் உரையாற்றிய சார்க்கோசி, தான் நாட்டின் பாதுகாப்பு முயற்சியை தேசிய செல்வத்தில் இரண்டு சதவீதம் இருக்குமாறு அமைத்திருந்ததாக கூறினார். "இந்த இலக்கு பிரான்சை மற்ற முன்னணி ஐரோப்பிய நாடுகளின் மத்தியில் இங்கிலாந்துடன் தொடர்ந்து நீடித்திருக்கும் திறனை பெறுவதற்கான சாத்தியத்தை உருவாக்கும்" என்று அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்து பற்றி சாதகமான குறிப்புக்களை சார்க்கோசி கூறியுள்ளது பிரெஞ்சு வெளியுறவுக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்; நீண்ட காலமாகவே பிரிட்டனை அமெரிக்காவின் மாற்றுக் குரல் போலவே கருதி வந்த அது, தன்னை பிரான்ஸ்-ஜேர்மனி உடன்பாட்டின் அடிப்படையில் நோக்குநிலைப்படுத்திக் கொண்டது. இது சார்க்கோசி பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய பொருளாதார நலன்களை ஆதரிக்க இராணுவ வலிமையை இணைப்பதில் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டுள்ளார் என்பதின் அடையாளம் ஆகும்.

ஐரோப்பிய நாடுகளில் அணுஆயுதங்களை உடையவை பிரான்சும் பிரிட்டனும்தான்; இதுதான் சார்க்கோசியின் உரையில் கூறப்படாத காரணக்கூறாகும். பிரெஞ்சு ஏகாதிபத்தியம் தலைமைத்துவ உரிமைகளை கோரும்பொருட்டு, தன்னுடைய சக ஐரோப்பிய உறுப்பினர்கள் மற்றும் போட்டியாளர்களை விட கொண்டிருக்கும் இந்த சாதகமான அம்சங்களை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கங் கொண்டுள்ளது.

ஆனால் உலக அரங்கில் பொருளாதார நிலையிலும் தன்னுடைய நலன்களை அதிகப்படுத்திக் கொள்ள ஐரோப்பா தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சார்க்கோசி விரும்புகிறார். பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் "முதல் தர நடவடிக்கையாளளர்" ஆக இருக்க வேண்டும் என்பதற்கான உந்துதலின் அடிப்படை விளைபயன், தொழிலாள வர்க்கத்தை சுரண்டுதல் தீவிரமாக்கப்பட வேண்டும் என்பதும் உள்நாட்டில் ஒழுங்கை பராமரிப்பதும் ஆகும். இக்காரணத்திற்காக அவர் சமூக நலச் செலவினங்களில் முக்கியமான வெட்டுக்களை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற அதேவேளை, போலீஸ் மற்றும் நீதித்துறையின் அடக்குமுறை அதிகாரங்களை அதிகரிக்க மிகப் பரந்த சட்டமியற்றும் திட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய உரையில், பிரான்ஸ் கொடுக்கும் செய்தி "தன்னையே சமரசப்படுத்திக் கொண்டு, வெற்றிகரமான பொருளாதாரத்தை கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தின், ஒரு பேரவாக் கொண்ட, நம்பிக்கை நிறைந்த மக்களால் கொடுக்கப்பட்டால்தான் உலகில் கேட்கப்படும்" என்றார்.

துரதிருஷ்டத்திற்குட்பட்ட சுதந்திர சந்தை ஐரோப்பிய அரசியலமைப்பின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பை, மாற்றி அமைக்கப்பட்ட உடன்பாட்டைப் பெற்றதற்காக தன்னையே சார்க்கோசி பாராட்டிக் கொண்டார். பிரெஞ்சு மற்றும் டச்சு பொது ஜன வாக்கெடுப்புக்களில் 2005ம் ஆண்டு ஐரோப்பிய அரசியல் அமைப்பு நிராகரிக்கப்பட்டது, ஐரோப்பிய ஒன்றியத்தை, சமூக உரிமைகள் தகர்க்கப்பட்டுள்ள, வணிக நலன்களுக்கு ஆதரவான ஒற்றை சந்தை உந்துதல் பகுதியாக ஒன்றிணைப்பதில் திடீர்ப்பின்னடைவை, ஏற்படுத்தியது. திருத்தியமைக்கப்பட்ட உடன்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர் நாடுகளை இணைக்கும் ஒரு கருவியாக விளங்கும் என்று அவர் காண்கிறார்.

இராணுவவாதத்திற்கு சார்க்கோசி திரும்பியது, குறிப்பாக ஐரோப்பா இன்னும் கூடுதலான பங்கினை ஈராக்கில் கொள்ள வேண்டும் என்ற அவரது அழைப்பு, அமெரிக்காவுடன் சமரச இணக்கம் என்று சித்தரித்துக் காட்டப்படுகிறது. ஈராக்கில் அமெரிக்காவிற்கு தோல்வி என்பது அனைத்து ஏகாதிபத்திய நாடுகளுக்கும் ஆபத்து என்பதை அவர் அறிந்துள்ளது உறுதிதான். ஆயினும்கூட, பிரான்சிற்கு மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரானில் அதன் சொந்த நலன்கள் உள்ளன; இதில் சார்க்கோசி பிரான்சின் நலன்களை உயர்த்திப் பிடிக்க நோக்கங்க்கொண்டுள்ளார் மற்றும் அது அவரை வாஷிங்டனுடன் மோதலுக்குக் கொண்டு வருகிறது.

அமெரிக்கத் தலைமையில் ஈராக்கின் மீதான படையெடுப்பு "ஒரு துன்பியலுக்கு" வழிவகுத்தது என்பதை அவர் வலியுறுத்தினார்; "அந்தப் போருக்கு" பிரான்ஸ் அப்பொழுதும் இப்பொழுதும் விரோதப் போக்கைத்தான் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். ஐ.நா. ஒப்புதல் இல்லாமல் படையெடுத்த அமெரிக்க முடிவை விமர்சித்து, "ஒருதலைப்பட்சமாக வலிமையை பயன்படுத்தும் ஆர்வத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்திக் கொள்ளவில்லை என்றும், சுற்றுச் சூழல் பாதுகாப்பை பொறுத்தவரையில் மற்ற இடங்களில் அது கூறிக்கொள்ளும் தலைமைத்துவத்திற்கான திறனை எடுக்காட்டவில்லை" என்றும் வலியுறுத்தினார்.

ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், "படைகள் திரும்பப் பெறுவதற்கு தெளிவான கால அட்டவணை வேண்டும்... அப்பொழுதுதான் சர்வதேச சமூகம், அப்பகுதியில் இருக்கும் நாடுகளில் இருந்து இன்னும் உபயோகமாகச் செயல்பட முடியும். தன்னுடைய பங்கிற்கு பிரான்ஸ் தயாராக இருக்கிறது. இதைத்தான் பாக்தாத்திற்கு வெளியுறவு மந்திரியான பேர்னார்ட் குஷ்நெர் தகவலாக எடுத்துச் சென்றுள்ளார்; அது ஐக்கியம் மற்றும் எளிதில் கிடைக்கும் நிலை யாகும்."

சிரியாவுடனும் உறவுகளை சார்க்கோசி புதுப்பித்துக் கொண்டுள்ளார்: அது முன்னாள் ஜனாதிபதி ஜாக் சிராக்கினால் முறித்துக் கொள்ளப்பட்டிருந்தது; இது வெள்ளை மாளிளையுடன் அவரை மோத வைத்தாலும், பிரான்சிற்கு அப்பகுதியில் தரகு வேலைசெய்யும் வாய்ப்பை கொடுத்துள்ளது.

சூழ்நிலைக்கு ஏற்ப, அமெரிக்காவிற்கு நட்பு மற்றும் போட்டி என்ற இரு நிலையில் இருக்கும் அவருடைய நிலைப்பாடு, ஈரான் விஷயத்தில் மிகத் தெளிவாக வந்துள்ளது; அதை அவர் "சர்வதேச ஒழுங்கில் பெரிதும் கீழ்ப்படுத்தும் மிகத் தீவிர நெருக்கடி" என்று குறிப்பிட்டார். அந்நாடு ஒரு முக்கிய எரிவாயு, எண்ணெய் அளிக்கும் நாடு என்றும் பிரான்ஸ், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பிற போட்டியாளர்களுக்கு முதலீடு மற்றும் வணிகம் செய்வதற்கான களம் என்றும் குறிப்பிட்டார்.

புஷ் நிர்வாகத்துடன் ஈரானிய ஆட்சிக்கு அழுத்தம் கொடுத்து அணுவாயுதத் திட்டத்தை முற்றிலும் கைவிடுவதற்கு சார்க்கோசி முழு உடன்பாடு காட்டுகிறார்; அவ்வாறு செய்யாவிட்டால் ஈரான் குண்டுவீச்சை சந்திக்க நேரிடும் என்றுகூட எச்சரித்தார். ஈரான் அணுசக்தித் திட்டத்தை நிறுத்தினால் அன்றி, "மாற்றீடு என்பது பேரழிவைத் தரும்: ஈரான் குண்டுவீச்சை நடத்தும் அல்லது ஈரான் மீது குண்டுகள் பொழியும்."

ஆனால் தான் ஒரு தூதரக முறைத் தீர்வைத்தான் காண விரும்புவதாக தெளிவுபடுத்தி, "பிரான்ஸ், ஐரோப்பியர்கள், சீனர்கள், ரஷ்யர்கள் உடனான பேச்சு வார்த்தைகளில் அதிக இலாபம் பெறலாம் என்று ஈரானை நம்பவைப்பதில் பிரான்ஸ் அனைத்துவிதங்களிலும் முயலும்; அமெரிக்கர்களுடனும் என்பதும் இதில் சேரும்". அமெரிக்காவை கடைசியாக சார்க்கோசி வைத்துள்ளது ஐரோப்பாவும் மற்ற சக்திகளும் அமெரிக்க ஆதிக்கத்திற்கு சரியீடு செய்பவராக செயல்பட வேண்டும் என்ற சார்க்கோசியின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது.

கொசோவோ பற்றியதில் அவர் மீண்டும் ஐரோப்பிய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டிய அவரது ஆவலை வலியுறுத்தினார், "ரஷ்யர்கள் மற்றும் அமெரிக்கர்கள் இந்த விஷயம் மிகவும் கடினமானது, முதலும் முக்கியமானதுமாக ஒரு ஐரோப்பிய விவகாரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்; ...ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்தான் பால்கன் பகுதியின் எதிர்காலம் உள்ளது" என்று வேண்டுகோள் விடுத்து கூறினார்.

அமெரிக்கா, சார்க்கோசியின் உரையை வரவேற்று பிரான்சுடன் அது கொண்டுள்ள உறவுகளை இது சுமுகமாக்கும் தன்மையை காட்டுகிறது எனக் கூறியது. ஈரான் அணுவாயுதங்களை வைத்துக் கொள்ளுதலுக்கு சார்க்கோசியின் எதிர்ப்பை பற்றி Voice of America வலியுறுத்தி, மேலும் "ஜனாதிபதி அமெரிக்காவுடன் நல்லுறவுகள் பற்றிய முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்தினார்" என்றும் கூறியுள்ளது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், "அமெரிக்க எதிர்ப்பு என முணுமுணுப்புக் காட்டும் ஒரு வினையாற்றுநர் தவிர பிரான்ஸ் சர்வதேச அரங்கில் நன்கு செயல்படும் ஒன்று என்பதை இவர் அடையாளம் காட்டினர். அது பாராட்டிற்கு உரியது" என்று குறிப்பிட்டுள்ளது.

முடிவில், பிரான்சின் பேரவாக்கள் கட்டுப்படுத்தப்பட முடியும், சார்க்கோசியின் அமெரிக்காவின் பாலான அவரது இணக்கப்படுத்தவல்ல ஒலிகள் மற்றும் அவர் உள்நாட்டு மக்களின் நுகர்வுக்காக தேசிய பேரிகையை முழக்கும் ஒலியை விட முக்கியமானது என்று அமெரிக்க செய்தி ஊடகம் கணக்குப் போடுகிறது. ஆனால் பிரெஞ்சு ஐரோப்பிய நலன்கள் உறுதிப்படும் எந்த உண்மையான முயற்சியுடனும் அமெரிக்கா சமரசம் காணமுடியாது. குறிப்பாக, பிரான்சின் வரலாற்று ரீதியான தொடர்பு மற்றும் நலன்கள் அமெரிக்காவால் மட்டுமின்றி சீனாவாலும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு வரும் ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் வருங்காலப் பூசல்கள் என்பவை தவிர்க்க முடியாதவையாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்னுரிமை அதன் பொருளாதார மேலாதிக்கத்திற்கு சவால் விடும் எதையும் இராணுவ வழிவகை உட்பட எதையும் பயன்படுத்தி தகர்த்துவிடுதல் என்பதாகும். ஐரோப்பா கூடுதலான இராணுவப் பங்கை கொள்ள வேண்டும் என்று வாஷிங்டனும் விரும்புகிறது; ஆனால் அது தாழ்ந்த நிலையில்தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறது. மிகப் பெரிய இராணுவ வலிமை மற்றும் ஐரோப்பாவிற்குள் தன்னுடைய இங்கிலாந்து, போலந்து போன்ற நட்புநாடுகள் மூலம் பிளவிற்கான விதைகளையும் ஊன்ற முடியும் என்ற திறனையும் எடுத்துக் கொண்டால், இப்பொழுது அமெரிக்கா சார்க்கோசியின் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா பற்றிய மாபெரும் திட்டங்கள் பற்றிய கூற்றுக்களை நோக்கிய ஒரு வகை பெருமிதப் பகட்டான எல்லாம் நலமாகும் என்ற நம்பிக்கையை வழங்க முடியும் என நம்புகிறது.

சார்க்கோசியின் பிரான்சிற்கான கனவுகளின் புறநிலை மட்டுப்பாடுகளை ஆய்ந்த Liberation ஒரு தலையங்கத்தில், "தனக்கு அப்பாற்பட்ட குழுசேர்த்தலுக்கான எண்ணிறைந்த ஒப்பந்தங்களால் இணைக்கப்பட்டுள்ள ஒரு நடுத்தர அளவுள்ள நாட்டிற்கு தலைமை வகிக்கும்பொழுது, ராஜதந்திர பேச்சுக்கள் அடிப்படையானவை அல்ல..... அனைத்து விஷயங்களிலும் ஒரு முறிவைக் காண வேண்டும் என்பது ஐயத்திற்கு இடமின்றி மிகத்தீவிர பேரவா விழைவு உடையது ஆகும்" என்று குறித்துள்ளது.

ஜேர்மனியில் இதன் பதிலானது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் பதட்டங்களை பிரதிபலிக்கிறது மற்றும் பிரான்சானது ஐரோப்பாவின் மீது தான் கொண்டுள்ள மேலாதிக்கத்திற்கு சவால் விடும் நிலையில் பிரான்ஸ் செயல்படுகிறது என்ற நம்பிக்கையையும் காட்டுகிறது. ஜேர்மனிய செய்தி ஊடகத்தின் நச்சு தோய்ந்த சுற்றிவளைப்பு Der Spigel TM, "Rambo in the Elysee" என்ற தலைப்பில் வணிக ஏடான Handelsblatt ஐ மேற்கோளிடுகிறது: "சில விஷயங்களை பற்றி அவர் குறைவாக பேசும்போதும், சில விஷயங்களை பற்றி மிகவும் தீவிரமாக அவர் தன்னையே எடுத்துக் கொள்ளுகிறார். நாட்டின் தலைவர் நேற்று ஆற்றிய உரை பிரெஞ்சுத் தலைமை ஐரோப்பா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் இருக்க வேண்டும் என்பதின் பன்முக விரிவாக்க கூற்றுதான்."

கன்சர்வேட்டிவ் நாளேடான Die Welt எழுதியது: "உலக அரங்கில் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாளர் என்று தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள பாரிஸ் விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை ஆபிரிக்காவிற்கும் விரிவுபடுத்துதற்கான அவரது முயற்சியை ஒருவர் ஜேர்மனியின் மறு ஐக்கியத்தினை அடுத்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கத்தை அடுத்து ஜேர்மனியின் அதிகரித்த செல்வாக்கிற்கான விடை என்று பொருள் கொள்ள முடியும்.."

சார்க்கோசி ஜேர்மனிக்கு ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் ஒரு நிரந்தர உறுப்பினர் இடத்திற்கான ஆதரவை கொடுத்துள்ளதை இந்நாளேடு "சொற்ஜால செயற்களத்தினை சேர்ந்தது. இது ஜேர்மனிக்கு சற்று ஊக்கம் கொடுக்கும், இறுதியில் எந்த விளைவையும் இது ஏற்படுத்தாது" என உதறித் தள்ளியது.

ஜேர்மனிய அரசியல் நடைமுறை மிகையான பிரெஞ்சு தேசிய வாதம் மற்றும் பல ஒருதலைப்பட்ச முயற்சிகள் சார்க்கோசி அரசாங்கத்தால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பேர்லினை கலந்து கொள்ளாமல் எடுப்பது பற்றி கோபம் அடைந்துள்ளது: உதாரணம், லிபியாவில் பல்கேரிய செவிலியரை விடுவிப்பதற்காக தலையிட்டது; மற்றும் அணுசக்தி ஆலையை எண்ணெய் வளமுடைய நாட்டிற்கு விற்றது; ஐரோப்பிய மத்திய வங்கியை பிரெஞ்சு ஏற்றுமதிகளுக்கு ஊக்கம் தரும் வகையில் மதிப்பைக் குறைக்குமாறு கேட்டுள்ளது ஆகியவை ஆகும். ரஷ்யாவை இவர் கடிந்து கொண்டு, அதை "தன்னுடைய வளங்களை குறிப்பாக எரிவாயு, எண்ணெயை ஒருவித மிருகத்தனமான முறையில் பயன்படுத்துதல்" என்று குற்றம் சாட்டியுள்ளது மாஸ்கோவுடன் பேர்லின் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளுக்கு ஆபத்து கொடுக்கும் தன்மையுடையதாக கருதப்படுகிறது. ஜேர்மனி ரஷ்யாவைத்தான் தன்னுடைய அனைத்து எண்ணெய், எரிவாயு இறக்குமதிகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு நம்பியிருக்கிறது; பிரான்ஸ், ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கை நாடி நிற்கிறது.

பைனான்சியல் டைம்ஸ் டொய்ச்லான்ட் கூறியது: "உலகந்தழுவிய பாதுகாப்பு அரசியலில் ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு வலுவான சக்தியாக மாற்றும் இவருடைய கருத்தை பொறுத்தவரையில், இவர் விரைவில் இதன் படிப்பினைகளை கற்க நேரிடும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள இவருடைய பங்காளிகள் பலர் பாரிசில் வந்திருக்கும் புதிய நபரை விரைவில் அவருடைய திட்டத்துடன் சேர்த்து மூக்கறுப்பர்."