World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Mumbai atrocity: the dead end of communal politics

மும்பை கொடூரம்: வகுப்புவாத அரசியலின் முன்னேற முடியாத முட்டுச்சந்து

By Keith Jones
01 December 2008

Use this version to print | Send this link by email | Email the author

மும்பை நகரத்தில் பயங்கரவாதிகள் கொடுமையினால் மடிந்தோர் எண்ணிக்கை --நகரத்திற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், கடைக்காரர்கள், தொழிலாளர்கள், வீதியில் நடந்து சென்றவர் என 170க்கும் மேலான அப்பாவிகள் இறப்பு, 300 பேர் காயமுற்றனர்-- உலகம் முழுவதும் இருக்கும் மக்களிடம் இருந்து உண்மையான பீதி உணர்வைத்தான் ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய பெரும் சோகங்கள் தற்செயலாக நடந்துவிடுவதில்லை: இவை பல தசாப்தங்கள் தயாரிப்பை அடுத்துத்தான் நிகழ்கின்றன. 1947ல் நாடுகள் பிரிவினை பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி முடிவடைந்ததில் இருந்து இந்திய துணைக் கண்டத்தை பீடித்துள்ள தேசிய மற்றும் வகுப்புவாத அழுத்தங்களில் இருந்துதான் வந்துள்ளன; அவை இன்னும் அவற்றை அதிகப்படுத்தும்.

இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமையின் கூட்டணி அரசாங்கம் இதை எதிர்கொண்டவிதம் எந்த அளவிற்கு எதிர்பார்க்கப்பட்டதோ அதே வகையில் மிகவும் பொறுப்பற்றது ஆகும். இந்திய அதிகாரிகள் இந்தியாவின் வரலாற்று ரீதியான எதிராளி நாடான பாக்கிஸ்தானை குறைகூற விரைந்துள்ளனர்; இதை ஒட்டி பெருகிய முறையில் பதிலடி கொடுக்கும் தீய அச்சுறுத்தல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவின் மிகப் பெரிய நகரத்தை 10 துப்பாக்கி தாரிகள், ஏன், எவ்வாறு மூன்று நாட்களுக்கு ஒரு போர் பகுதியாக மாற்றினர் என்பது பற்றித் தீவிர விசாரணை இன்னும் நடத்தப்படவில்லை. இந்து எழுதியது: சமீபத்திய வாரங்களில் "இந்தியாவின் உளவுத்துறைப் பிரிவுகள்" "குறைந்தது மூன்று முறையாவது துல்லியமான எச்சரிக்கைகளை" தவிர்க்க முடியாத தாக்குதல் பற்றிக் கொடுத்துள்ளது. இது குறைந்த பட்சம் இந்தியப் பாதுகாப்பு படைகளின் பங்கில் மகத்தான குறைபாடு இருந்தது என்பதைத்தான் தெரிவிக்கிறது.

இந்தியாவின் உள்துறை ராஜாங்க மந்திரியான ஸ்ரீபிரகாஷ் ஜெயஸ்வால் இந்திய உளவுத்துறை "ஒரு போர்த்தரத்திற்கு விரிவாக்கப்படும்" என்று கூறியுள்ளார். இந்திய இராணுவ செய்தித் தொடர்பாளர் பாக்கிஸ்தானுக்கு எதிராக துருப்புக்களை திரட்டிக் கொண்டிருக்கிறது என்பதை மறுத்து அறிக்கைகளை வெளியிட நேர்ந்தது.

சனிக்கிழமை அன்று பாக்கிஸ்தானின் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி இத்தாக்குதல்களில் பாக்கிஸ்தானில் இருக்கும் நபர்கள் அல்லது குழுக்கள் தொடர்பு இருப்பதாக தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி மொழி கூறிய பின்னர், இந்தக் கொடுமையில் பாக்கிஸ்தானிய உளவுத்துறை மற்றும் தொடர்புடைய சக்திகள் எந்த பங்கைக் கொண்டிருந்தன என்பது பற்றி அவருக்கே உறுதியாகத் தெரியவில்லை எனத் தோன்றுகிறது.

சனிக்கிழமை இரவில் ஜர்தாரி தன்னுடைய பிரதம மந்திரி மற்றும் இராணுவப் படைகளின் தலைவரை சந்தித்து ஒரு இந்தியத் தாக்குதல் வந்தால் பாக்கிஸ்தான் தயாராக இருக்க வேண்டியது பற்றி விவாதித்தார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியுடன் பொதுவான இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள விரைந்துள்ளார்--இது நீண்ட காலமாக அரசாங்கம் பயங்கரவாதம் குறித்து மிருதுவாக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது; இந்திய பாதுகாப்பு சக்திகளுக்கு மிக அதிகமான புதிய அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஞாயிறன்று சிங் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாகும் பயங்கரவாதத்துடன் போராடுவதற்கு "ஒரு புதிய சட்ட பூர்வ வடிவம் கொடுத்து" ஒரு புதிய கூட்டாட்சி பயங்கரவாத அமைப்பைத் தோற்றுவிப்பது பற்றி விவாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஒரு இந்து மேலாதிக்கக் கட்சியான பாஜக இந்தியாவின் முஸ்லிம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை, அப்பட்டமான இனக் கொலைகள் ஆகியவற்றை தூண்டிய நீண்டகால வரலாற்றை கொண்டுள்ளது ஆகும். கடந்த வாரம் மும்பையில் நடத்தப்பட்ட கமாண்டோ தாக்குதல்களுக்கு முந்தைய வாரங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டாளிக் கட்சிகள் பரந்த விதத்தில் இறப்புக்களை ஏற்படுத்திய குண்டு வீச்சுக்ளை நடத்திய இந்து தீவிரவாதிகள் காக்கப்பட வேண்டும் என்று உரத்த குரலில் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தன.

இதற்கிடையில் மும்பை கொடூரம் பற்றி மக்கள் இகழ்வைப் பயன்படுத்தி "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" நெறித்தன்மை கொடுக்க முற்பட்டுள்ளது; இந்த '"சொற்றொடர்கள்தான்" ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இது நடத்தும் கொள்ளைமுறை போர்கள் மற்றும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள்மீது நடத்தப்படுத்தும் தாக்குதல்கள் ஆகியவற்றை நியாயப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. திரைக்குப் பின் இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே வெடித்துள்ள இந்தப் புதிய அழுத்தங்களைப் பயன்படுத்தி, பாக்கிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக கிளர்ந்துள்ள ஆயுதமேந்திய எதிர்ப்புக்களை அடக்குவதற்கு இஸ்லாமாபாத் கூடுதலாகச் செயலாற்ற வேண்டும் என்றும், பாக்கிஸ்தானுக்கும் இராணுவ நடவடிக்கை எடுக்கும் அமெரிக்காவின் "உரிமையை" ஆக்கிரோஷமாக உறுதிப் படுத்தவும் முயன்று வருகிறது.

இந்த நிகழ்வுகள் மீண்டும் உலக அரசியலில் இருக்கும் எரியூட்டும் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஒரு எதிர்பாராத நிகழ்வு அரசியல் நெருக்கடி ஒன்றை ஏற்படுத்துகிறது; அது உலகம் முழுவதும் கணக்கிட்டுக் கூற முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் திறனைக் கொண்ட அச்சுறுத்தலாகிறது. முதலாளித்துவ செய்தி ஊடகம், அதன் பரபரப்பு மற்றும் வர்க்க உந்துதல் முறையிலான தகவல் கொடுக்கும் வகையில், இத்தகைய திடீரென்ற தற்செயல் நிகழ்வு எனக் கூறக்கூடியவற்றிற்கு தீவிர விளக்கம் கொடுக்க முற்படும்.

மேற்கத்திய செய்தி ஊடகம் "உலகின் மிக அதிக மக்கட்தொகை கொண்ட ஜனநாயகம்" என்று சமீப ஆண்டுகளில் இந்தியாவை பாராட்டியுள்ளது--இதற்குக் காரணம் ஒரு தொழில் முயல்வோரின் உயரடுக்கு உள்ளது என்றும் கூறியது--சுருங்கக் கூறின், இது ஒரு முதலாளித்துவ முறையில் வெற்றிக் கதை என்று பாராட்டியுள்ளது.

உண்மை என்ன என்றால், தெற்கு ஆசியா மகத்தான சமூக விரோதப் போக்குகளால் பெரும் பாதிப்பில் உள்ளது. இந்த விரோதப் போக்குகள் இந்திய துணைக்கண்டத்தை காலனிய முறையில் ஆட்சி நடத்தியதில் வேரூன்றியவை ஆகும்; இதைத்தவிர மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சமூக அளவில் விடுதலை இயக்கம் என்று 20ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் துணைக் கண்டத்தை உலுக்கிய இயக்கங்களை புதிய இந்திய, பாக்கிஸ்தானிய முதலாளித்துவவாதிகள் காட்டிக் கொடுத்து, நசுக்கியதிலும் உறைந்துள்ளன.

பிரிட்டிஷ் இந்தியாவை ஒரு முஸ்லிம் பாக்கிஸ்தான், ஒரு பெரும்பான்மை இந்துக்கள் வாழும் இந்தியா எனப் பிரித்தது வகுப்புவாத வன்முறையை ஏற்படுத்தியது; இதில்கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர்; 14 மில்லியன் மக்கள் பாக்கிஸ்தானில் இருந்து இந்தியா, இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தான் என்று இடம் பெயர்ந்தனர். இந்திய பாக்கிஸ்தானிய கடுமையான புவிசார் அரசியல் போட்டிக்கும் இது இடம் கொடுத்தது; மூன்று முறை அது முழுப் போராக வெடித்தது.

ஜனநாயகப் புரட்சியின் பணிகளை முடிக்கக் கூடிய இயல்பான ஆற்றல் தெற்கு ஆசியாவில் தோன்றிவரும் முதலாளித்துவ முறையின் இல்லை என்பதின் சோகம் ததும்பிய வெளிப்பாடுதான் குருதி கொட்டிய பிரிவினை ஆகும் --பல வகை மக்களை துணைக்கண்டத்தில் ஒன்றுபடுத்துவது, நிலப்பிரபுத்துவத்தை அகற்றுவது, சாதி அடக்குமுறையை அகற்றுவது போன்ற பணிகள் செய்யப்பட முடியவில்லை; ஏனெனில் அது ஏகாதிபத்தியத்தை நம்பியிருந்தது; மற்றும் இளைஞர்கள், பெருகிய முறையில் போர்க்குணம் நிறைந்த தொழிலாளர் வர்க்கம் பற்றிய அச்சத்தையும் கொண்டிருந்தது.

இப்பொழுது சுதந்திரத்திற்குப் பின் 61 ஆண்டுகளுக்குப் பிறகு தெற்கு ஆசியா உலகின் மிக வறிய மக்களின் குவிப்புப் பகுதியாக உள்ளது. IMF ஆணையின்பேரில், பாக்கிஸ்தான் இப்பொழுது மிருகத்தனமான மறுகட்டமைப்பு பொருளாதாரத் திட்டத்தைச் சுமத்தியுள்ளது; இதில் சமூகச் செலவினக் குறைப்புக்கள், எரிசக்திக்கு உதவி கொடுத்தது அகற்றப்படுதல், வட்டிவிகிதம் கூட்டப்படல் ஆகியவை அடங்கியுள்ளன. இந்தியாவில் விவசாயத்துறையை தம் வாழ்வாதாரமாக பெரும்பாலான இந்திய மக்கள் நம்பியுள்ளனர். முதலாளித்துவ "வளர்ச்சி மூலோபாயம்" என்பதைத் தொடர்வதற்காக முதலாளித்துவவர்க்கம் விவசாயத்துறையை அரசு ஆதரவை இழக்கச்செய்துள்ளது. இதன்படி முதலாளித்துவ வர்க்கம் உலக முதலாளித்துவத்திற்கு மலிவான கூலி உழைப்பு உற்பத்தியை அளித்துத் தன்னைச் செல்வக் கொழிப்பு உடையதாக செய்து கொள்ளும்.

புவிசார்-அரசியல் மூலோபாயப் போட்டி, ஏகாதிபத்தியத்தால் சூழ்ச்சியாய்க் கையாளப்பட்டது, இப்பொழுது பல பில்லியன்கள் போர்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்க செலவழிக்கும் விளைவைக் கொடுத்துள்ளது; இது பொருளாதார வளர்ச்சியை திகைப்பிற்கு உட்படுத்திவிட்டது. இன்று தெற்கு ஆசியா உலகின் மிக ஒருங்கிணைப்பற்ற பொருளாதார பகுதி என்ற குறைந்த தன்மையில் உள்ளது.

மக்களுடைய பிரச்சினைகளுக்கு எவ்வித முன்னேற்றகரமான தீர்வும் கொடுக்க முடியாத நிலையில், இந்திய பாக்கிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கங்கள் "வெளி விரோதிக்கு" எதிராக மக்கள் எதிர்ப்பைத் தூண்டுவதன் மூலம், மற்றும் அதையொட்டி சாதி, இன, சமய, குறுகிய வெறி அரசியலை வளர்ப்பதன் மூலம் சமூக பதட்டங்களை விலக்குவதற்கு முயன்று வருகின்றனர். .

பாக்கிஸ்தானில், அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த வழிவகையில் ஒரு நேரடிப் பங்கைக் கொண்டுள்ளது; பாக்கிஸ்தானுக்கு ஆயுதம் கொடுத்து தொடர்ந்து பல இராணுவ சர்வாதிகாரங்களுக்கு ஊக்கம் கொடுத்தது; அதிலும் குறிப்பாக 1979ல் சோவியத் நாடு ஆப்கானிஸ்தானின்மீது படையெடுக்கத் தூண்டிய பின்னர், அது பாக்கிஸ்தானை ஒரு வட்டார மாற்றாக வைத்துத் தானும் அங்கு களம் இறங்கியது.

சுதந்திர இந்தியாவின் முதல் மூன்று தசாப்தங்களில் மிகக் குறைந்த செல்வாக்கை மட்டுமே கொண்டிருந்த இந்து வலது பாஜக என்ற வடிவமைப்பில் இப்பொழுது இந்திய முதலாளித்துவத்தின் அரசாங்கம் அமைக்கும் மாற்றுக் கட்சி என ஆகியுள்ளது. மும்பை நிகழ்வுகள் மறுபடியும் தெளிவாக நிரூபித்துள்ளது போல் காங்கிரஸ் கட்சி இந்த பிற்போக்கு அடுக்கிற்கு ஏற்ப வளைந்து கொடுத்து உடந்தையாகவும் உள்ளது.

மும்பை பெரும் சோகம் இறுதியில் முதலாளித்துவ தேசியம் பற்றி பேரழிவு நிறைந்த குற்றசாட்டு என்றுதான் உள்ளது; வர்க்க முறையீட்டிற்கு இதன் எதிர்ப்பு, தெற்கு ஆசியாவில் இன, வகுப்புவாத, சாதி விரோதப் போக்குகளைக் கடக்க முடியாமல் செய்துவிட்டது. மாறாக தெற்கு ஆசியாவின் பிற்போக்கு அரசாங்க முறை இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கும் தொழிலாளர்களைப் பிரித்து ஒருவருக்கு ஒருவர் எதிராகத் தூண்டி விடுகிறது; அணு ஆயுதங்களை இப்பொழுது கொண்டுள்ள பகுதியில் அதிகப் போர்களையும் தூண்டிவிடுகிறது. இப்படி முன்னேற இடமில்லாத பாதைதான் தெற்கு ஆசியாவில் மக்களை ஒரு சோசலிசப் புரட்சி மூலம் ஒன்றுபடுத்தாவிட்டால் வேறு நிரந்தரத் தீர்வு இல்லை என்ற முடிவை ஏற்படுத்தும்.