World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

A socialist policy for auto workers

கார்த் தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிசக் கொள்கை

சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை
15 December 2008

Use this version to print | Send this link by email | Email the author

கீழ்க்கண்ட அறிக்கையை PDF வடிவமைப்பில் பதிவிறக்கம் செய்து வினியோகிக்க முடியும்.

அமெரிக்க கார் நிறுவனங்கள் திவால்தன்மை மற்றும் ஆழ்ந்த பொருளாதாரப் பின்னடைவு என்ற பின்னணியின் அச்சுறுத்தலில் காங்கிரஸும் வெள்ளை மாளிகையும் தொழிலாள வர்க்கத்தின்மீது வரலாற்றுத் தன்மை வாய்ந்த தாக்குதலை கொடுக்கத் தயாரித்து வருகின்றன. அமெரிக்க ஆளும் உயரடுக்கு பொருளாதார நெருக்கடியை அமெரிக்காவில் வர்க்க உறவுகளை அடிப்படையில் மறுகட்டமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக காண்பதுடன், முந்தைய தலைமுறை தொழிலாளர்கள் போராடிப் பெற்ற நலன்களில் எஞ்சியிருப்பதையும் தகர்க்க விழைகின்றன.

வாஷிங்டனில் இருக்கும் பல பிரிவுகளிடையே எத்தகைய வேறுபாடுகள் இருந்தபோதிலும், கார்த் தொழில் "செயல்திறனை இழக்காமல் இருக்க வேண்டும்" என்றால் தொழிலாளர்களுடைய வாழ்க்கைத் தரங்கள் கட்டாயம் குறைக்கப்பட வேண்டும் என்பதை அனைத்துமே வலியுறுத்துகின்றன. தொழிலாளர் தொகுப்பை சுரண்டுதல் கட்டாயம் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அவற்றின் உண்மையான கருத்து ஆகும். தங்கள் வறிய நிலைமையை ஏற்கும் கட்டாயத்தை தொழிலாளர்கள் கொள்ள வேண்டும் என்றும் அப்பொழுதுதான் நிதிய உயரடுக்கு ஒரு இலாபகரமான முதலீட்டை, அளவு ரீதியாய் குறைக்கப்படவுள்ள கார்த் தொழில் துறையில் செலுத்தும் என்றும் கூறப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியினர், புஷ் நிர்வாகம் மற்றும் ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கம் ஆகியவை ஆதரவு கொடுத்துள்ள கார்த்துறை கடன் சட்டவரைவு, கடந்த வாரத்தில் செனட்டில் தோல்வியுற்றது, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லருக்கு $14 பில்லியனை கடனாகக் கொடுத்திருக்கும்; ஆனால் இதற்காக அவை ஒரு "கார் சார்" உத்தரவின் பேரில் சில ஆலைகளை மூடுதல், பல ஆயிரக்கணக்கான வேலைகளை அகற்றுதல், சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதிய நலன்களை அழித்தல் மற்றும் ஊதியங்களை குறைத்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். அத்தகைய சலுகைகளை தொழிலாளர்கள் ஏற்றால் அமெரிக்க கருவூலத்தில் இருந்து பணத்தைத் தர தயார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ள நிலையில், குடியரசுக் கட்சியின் ஒரு பிரிவு நிறுவனங்கள் திவாலாக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை கொடுத்துள்ளன. அதைத் தொடர்ந்து ஒரு நீதிபதிதான் இருக்கும் ஒப்பந்தங்களை இரத்து செய்து புதிய சலுகைகளை கொடுக்க முடியும் அல்லது மூன்று பெரிய கார் நிறுவனங்கள் திவால்தன்மையை மேற்பார்வையிட முடியும் என்று விடப்பட்து.

செய்தி ஊடகமும் அரசியல்வாதிகளும் தொழிலாளர்களின் ஊதியங்களை "போட்டித்தன்மை உடையதாக" இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதன் பொருள் என்ன? GM, Chrysler, Ford ஆகிய நிறுவனங்களில் புதிதாக எடுக்கப்படும் தொழிலாளர்கள் மணி ஒன்றுக்கு $14 பெறுகின்றனர். இது மற்ற அனைத்து கார்த் தொழிலாளர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும்.

1967ம் ஆண்டு ஒரு தொழிலாளி போர்ட் நிறுவனத்தில் சராசரியாக வாரம் ஒன்றிற்கு $178 அல்லது மணி ஒன்றிற்கு $4.45 ஊதியம் பெற்று வந்தார். இது இன்றைய மதிப்பில் $27.70 க்கு சமமாகும் என்று அமெரிக்க தொழிலாளர் துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது-- இது தற்பொழுதைய ஒரு மூத்த கார்த் தொழிலாளியின் ஊதியம். ஆனால் புஷ் நிர்வாகம் திட்டமிட்டிருக்கும் பிணை எடுப்பின் விளைவாகவும் ஜனநாயகக் கட்சியும், UAW உம் ஒப்புக் கொண்டிருக்கும் திட்டத்தை அடுத்து, கார்த் தொழிலாளர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுடைய தந்தையர்கள், பாட்டனார்கள் பெற்ற ஊதியத்தில் பாதியைத்தான் இப்பொழுது வாங்குவர்.

இவ்விதத்தில் கார்த் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவிலும் ஊதியக் குறைப்பு என்ற அலைக்கு தொடக்க நிலையாக இருக்கும்; இப்படித்தான் கிறைஸ்லர் பிணை எடுப்பு மற்றும் PATCO விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலை நிறுத்தம் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு தோற்கடிக்கப்பட்டபின் ஊதியக் குறைப்பு அலை நாடெங்கிலும் கொண்டுவரப்பட்டது. ஊதியக் குறைப்புக்களும் ஒரு ஆரம்ப செயற்பாடுதான். ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு, மருத்துவவசதிகள், சமூகப்பாதுகாப்பு என்று பெருநிறுவன இலாபங்களில் இருந்து எடுக்கப்படும் திட்டங்கள் அனைத்தின்மீதும் புதிய தாக்குதல்கள் வெள்ளம் மடை திறந்தாற்போல் எடுக்கப்படும்.

கார்த் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருப்பது தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பேரழவிற்கு உட்படுத்தக் கூடிய ஒரு பெரிய நெருக்கடியின் சிறு பகுதிதான். வேலையின்மை மட்டங்கள் மிக அதிகமாக உயர்ந்து கொண்டு வருகிறது; மில்லியன்கணக்கில் மக்கள் வீடுகளை இழந்து வருகின்றனர்; நகரங்களும் மாநிலங்களும் திவால்தன்மை விளிம்பில் உள்ளன. அடிப்படை சமூகப் பணிகளான இளைஞர்களுக்கான பள்ளிகள்கூட போதிய பணம் இல்லாமல் தவிக்கின்றன.

இந்த நிகழ்வுகள் ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்காவின் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆகியவற்றின் கொள்கையின் அப்பட்டமான தோல்வியைத்தான் அம்பலப்படுத்தியுள்ளது. 1979ம் ஆண்டு கிறைஸ்லர் பிணை எடுப்பின் ஒரு பகுதியாக UAW மிக அதிக அளவு தொழிலாளர்கள் பணிநீக்கம் மற்றும் பல சலுகைகளை ஒப்புக் கொண்டது; இதற்கு ஈடாக நிர்வாகத்தின் இயக்குனர் குழுவில் ஒரு இடம் கொடுக்கப்பட்டது. அப்பொழுது முதல், தொழிற்சங்கம் தன்னை பெறுநிறுவன கட்டமைப்பின் ஒரு பகுதியாக இன்னும் அதிகமாக பிணைத்துக் கொண்டு, நிர்வாகத்திற்கு எதிரான தொழிலாள வர்க்க சுயாதீன நலன்களை போராடிப் பெற வேண்டும் என்ற கருத்தாய்வையும் கைவிட்டுவிட்டது.

வெள்ளியன்று UAW தலைவர் Ron Gettlefinger ஏற்கனவே தொழிற்சங்கம் விட்டுக்கொடுத்துள்ள சலுகைகளையும் புதிதாக ஏற்க இருக்கும் சலுகைகளையும் பற்றி பேசினார்: வேலைகள் வங்கி என்பதை அகற்றுதல், ஓய்வு பெறுவோரின் சுகாதாரப் பாதுகாப்பு நிதி அகற்றப்படல், மேலதிக ஊதிய மற்றும் பிற நலன்கள் குறைப்பு, கூடுதலான வேலையின்மைக்கால ஊதியத்திற்கு முற்றுப்புள்ளி ஆகியவை இதில் அடங்கும். கெட்டில்பிங்கரே கொடுத்துள்ள பகிரங்க அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் UAW க்கும் பெரும்பாலான அரசியல் நடைமுறைப் பிரிவுகளுக்கும் இடையே இருக்கும் ஒரே வேறுபாடு UAW தொழிலாளர்களின் இழப்பீட்டு தொகை தொழிற்சங்கம் இல்லாத ஆலைகளில் இருக்கும் தொழிலாளர்களின் தரத்திற்கு குறைக்கப்படும் என்பது என்று இல்லாமல் எவ்வளவு விரைவில் இது சாதிக்கப்படும் என்பதாக உள்ளது.

தொழிலாளர்கள் இரு பெரு வணிகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கம் திட்டமிட்டுள்ள "பிணை எடுப்பு" என அழைக்கப்படும் திட்டத்தின் முழு வடிவமைப்பையும் உறுதியாக நிராகரிக்க வேண்டும். மில்லியன்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வைப் பாதிக்கக்கூடிய பொருளாதார முடிவுகளை பெருநிறுவனங்கள் மற்றும் அரசியல் நடைமுறையின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்க அவர்கள் அனுமதிக்கக் கூடாது. அத்தகைய பேரழிவை தவிர்க்கக் கூடிய ஒரே வழி தொழிலாளர்கள் பொறுப்பை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு தங்கள் சொந்த வர்க்க நலன்களை வலியுறுத்துவதுதான்.

தொழிலாளர் இயக்கத்தின் செயற்பாடு, அரசியல் மற்றும் தத்துவம் ஆகியவை தொடர்புடையவற்றிலும் ஒரு தீவிரமுன்னேற்றம் கொண்ட புதிய மூலோபாயம் தேவைப்படுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கும் கருத்தாவது:

1. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களை அடிப்படையாக கொண்ட நேரடிப் போராட்டத்தை புதுப்பித்தல்.

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள், ஆலை ஆக்கிரமிப்புக்கள் ஆகியவற்றை நடத்த வேண்டும்; தொழிற்சங்க அதிகாரத்துவத்தினால் நசுக்கப்பட்டுவிட்ட ஒரு முந்தைய காலத்தில் இருந்த போர்க்குணம் மிக்க மரபுகள் புதுப்பிக்கப்பட வேண்டும். Republic Windows and Doos ஆலையை சிக்காகோவில் ஆக்கிரமித்த செயல் எல்லா இடங்களிலும் இருக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது; 1930 களில் கார்த் தொழிலில் செயல்படுத்தப்பட்ட பெரும் உள்ளிருப்புப் போராட்டங்கள் போன்ற போராட்ட வழிவகைகள் புதுப்பிக்கப்பட வேண்டிய தேவை உருவாகியுள்ளது.

வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் திட்டத்திற்கு எதிராக செயல்பட வேண்டிய குழுக்களை ஆலைகள், பணியிடங்கள், இருக்கும் பகுதிகள் ஆகியவற்றில் சுயாதீனமாக தொழிலாளர்கள் நிறுவவேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுகிறது. கார்த் தொழில்களை ஆக்கிரமிப்பதற்கான தயாரிப்புக்களை தொழிலாளர்கள் தயாரித்து ஊதியக் குறைப்பை எதிர்ப்பதற்கும் இன்னும் கூடுதலான வகையில் ஆலை மூடல்கள், பணிநீக்கம் ஆகியவற்றை தடுப்பதற்கு மகத்தான வேலைநிறுத்தங்களிலும் ஈடுபட வேண்டும். அத்தகைய மூலோபாயத்திற்கு UAW உடனும் முழு தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனும் முறித்துக்கொள்வது தேவையாகும்; ஒரு புதிய உண்மையான ஜனநாயக வடிவமைப்புடைய தொழிலாள வர்க்க அமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும்.

2. ஜனநாயகக் கட்சியுடனும் வர்க்க ஒத்துழைப்பு அரசியலுடனும் ஒரு உடைவு தேவை.

தொழில்துறை நடவடிக்கை ஒரு புதிய அரசியல் மூலோபாயத்துடன் இணைக்கப்பட வேண்டும். பல தசாப்தங்களாக தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்கள் ஜனநாயகக் கட்சியின் மூலம்தான் முன்னேற்றுவிக்கப்பட முடியும் என்ற கட்டுக் கதையை வளர்த்துள்ளன. குடியரசுக் கட்சிக்கு சிறிதும் குறைந்திராத வகையில்தான் ஜனநாயகக் கட்சியினரும் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். வரவிருக்கும் ஒபாமா நிர்வாகத்தின்மீது தொழிலாளர்கள் எவ்வித நம்பிக்கையும் வைக்கக் கூடாது; அது கார்த் தொழிலாளர்கள் மீதான தாக்குதலை முழுமையாக ஆதரிக்கிறது. தொழிலாளர்களுக்கு தங்கள் சுயாதீன நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அரசியல் கட்சி தேவைப்படுகிறது.

3. முதலாளித்துவ சந்தையை நிராகரித்தல் மற்றும் ஒரு தொழிலாள வர்க்கத்திற்கான சர்வதேச சோசலிச இயக்கத்தை புதுப்பித்தல்.

அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்கள், ஒட்டு மொத்த சமூகத்திற்குமான அதன் விளைவுளை பற்றிப் பொருட்படுத்தாமல் தனியார் இலாபத்தை தொடருவதை பிரதான கொள்கையாய் உடைய ஒரு பொருளாதார முறையின் விளைவுகளைத்தான் எதிர்கொண்டுள்ளனர். உலக முதலாளித்துவ நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில், சோசலிச சமத்துவக் கட்சி பொருளாதாரம் சோசலிச வகையில் மறு சீரமைக்கப்பட வேண்டும் என்பதற்கு பாடுபடுகிறது. இதில் கார்த் தொழில் நிறுவனங்கள், பெரிய வங்கிகள் ஆகியவை தேசியமயமாக்கப்பட்டு பொது உடைமையின்கீழ், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்; அவை தனியார் இலாபத்திற்கு என்று இயங்காமல் சமூகத் தேவை அடிப்படையில் செயல்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் புதுப்பிக்கப்பட்ட அரசியல் இயக்கம் தொழிலாளர் அரசாங்கத்திற்காக போராடுவதை --அதாவது தொழிலாள வர்க்கத்தினால், தொழிலாள வர்க்கத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் அரசாங்கத்திற்குகாக போராடுவதை தன் இலக்காக கொண்டிருக்க வேண்டும். முதலாளித்துவ முறையின் கீழ் இருக்கும் அரசின் வர்க்கத் தன்மை பற்றிய மாதிரிப் படிப்பினைதான் உலக மக்களுக்கு இப்பொழுது கூறப்படுகிறது. மகத்தான வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் டிரில்லியன் கணக்கான டாலர்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் கார்த் தொழிலுக்கு கொடுக்கப்படும் எவ்விதக் கடனும் தொழிலாளர்களின் மகத்தான இழப்பின் அடிப்படையை நிபந்தனையாக கொண்டுள்ளன. இந்த இரு செயல்களிலும் அரசானது நிதிய உயரடுக்கின் மிகச்சக்தி வாய்ந்த பிரிவுகளின் ஒரு கருவியாகத்தான் நேரடியாக செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் இதேபோன்ற வருங்காலத்தைத்தான் எதிர்கொண்டுள்ளனர்: அதாவது, பெருகும் வேலையில்லாத்திண்டாட்டம், ஊதியச் சரிவுகள், பொருளாதார மந்தநிலை என்பன. தொழிலாளர்கள் அனைத்துவித தேசியம், நாட்டுவெறி என தொழிற்சங்கங்கள் கூறும் கருத்துக்களின் வடிவமைப்புக்களை நிராகரிக்க வேண்டும். முதலாளித்துவத்தின் நெருக்கடி ஒரு உலக நெருக்கடியாகும்; தொழிலாள வர்க்கத்தின் இந்த நெருக்கடிக்கான விடையிறுப்பும் உலகந்தழுவியதாக இருக்க வேண்டும்.

உலகெங்கிலும் இருக்கும் கார்த் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்களே: ஒரு போராட்டத்திற்கான நேரம் வந்துவிட்டது! இப்பொழுது எடுக்கப்படும் வலுவான, சுயாதீனமான நடவடிக்கை ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் ஆதரவை வென்றெடுக்கும். பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் முன்முயற்சி எடுப்பதை அனுமதிக்காதீர்! இன்றே உங்கள் சுயாதீன நலன்களை காக்கத் தொடங்குவீர்!.

சோசலிச சமத்துவக் கட்சியானது இந்த முன்னோக்கிற்கு உடன்படும் அனைத்து தொழிலாளர்களையும் அதில் சேர்ந்து சோசலிசத்திற்காக போராடுமாறு அழைப்பு விடுகிறது.