World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Eyewitness reports police violence against Athens protesters

ஏதென்ஸ் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான போலீஸ் வன்முறை பற்றி நேரில் பார்த்தவர்கள் தகவல்கள்

16 December 2008

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தளத்திற்கு ஒரு கிரேக்க மாணவர் கொடுத்துள்ள தகவல்:

டிசம்பர் 12 வெள்ளியன்று, ஏதென்ஸின் மையப்பகுதியில் எதிர்ப்பை தெரிவிக்க 10,000 மக்கள் கூடினர். மாணவர்கள், பள்ளி மாணவர்கள் தங்கள் பேராசிரியர்கள், பெற்றோர்கள் மட்டும் இல்லாது பல குடி பெயர்ந்தவர்கள், வேலையின்றி வாடும் குடிமக்கள் மற்றும் பொதுப்பணித் துறை ஊழியர்களும் கூட சமூகத்தின் ஒவ்வொரு பின்னணியில் இருந்தும் மக்கள் குழுமியிருந்தனர். அரசாங்கத்திற்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த அவர்கள் தெருக்களுக்கு வந்துவிட்டனர்.

ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய எதிர்ப்பு அணி Stadiou Street, Syntagma Square வழியாக சென்று பாராளுமன்ற கட்டிடத்திற்கு முன் முடிவடைந்தது; அங்கு போலீஸாருடன் சிறு பூசல்கள் ஏற்பட்டன. பள்ளி மாணவர்கள் MAT எனப்படும் கலகப் பிரிவு போலீஸாருக்கு எதிராக கீழே அமர்ந்து போராட்டம் நடத்தினர். நிறைய எதிர்ப்பாளர்கள் வந்தவுடன் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய கூட்டம் இருமுறை முயற்சித்தது.

சிறிது நேரத்தில் போலீசார் கூட்டத்தை ஆத்திரமூட்டும் வகையில் சிலரை தேர்ந்தெடுத்து கைது செய்யலாயினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் நிலைப்பாட்டை விடவில்லை. இதில் வெற்றி பெறாததை அடுத்து போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டை கூட்டத்தின் மீது வீசினர்; தங்களின் வாயுப் பாதுகாப்பு உடைய முகமூடிகளை அணிந்து எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதிருஷ்டவசமாக போலீஸாரால் பிடிபட்டிருந்தவர்கள் மற்ற மாணவர்களுடைய உதவியுடன் தப்ப முடிந்தது; சில வயதானவர்கள் போலீஸ் அதிகாரிகளிடம் (அவர்கள் மிக இளவயதினராக இருந்தனர்) "தங்கள் நிலை குறித்து வெட்கப்பட வேண்டும்" என்று கூச்சலிட்டனர்.

போலீஸார் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியவுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் திரும்பிவிட்டனர். போலிடெக்னியோவிற்கு (National Technical University) (எதிர்ப்பிற்கு ஏற்பாடு செய்திருந்த மாணவர்கள் சார்ந்த இரு பல்கலைக்கழகங்களில் ஒன்று) செல்லும் வழியில் போலீசார், எதிர்ப்பாளர்களை தொடர்ந்து தூண்டிவிட்டதோடு கூட்டத்தில் இருந்த மக்களையும் பிடித்து இழுத்தனர்.

Exarchia பகுதியில் போலிடெக்னியோ உள்ளது; இங்கு இளவயது மாணவரான அலெக்ஸிஸ் கிரிகோரோபோலஸ் ஒரு வாரத்திற்கு முன்பு கொல்லப்பட்டிருந்தார். கொலை நடந்த இரவன்றே மாணவர்கள் ஆக்கிரமித்த முதல் பல்கலைக்கழகம் இதுவாகும்.

வெள்ளியன்று நடந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து 500 முதல் 700 பேர் போலிடெக்னியோ அரங்கத்தில் கூடினர்; இதில் மாணவர்கள், வேலையின்மையில் வாடுபவர், குடியேறியவர்கள், பொதுப்பணித் துறை ஊழியர்கள் ஆகியோர் இருந்தனர்; மேலே என்ன செய்யலாம் என்பது பற்றி விவாதித்தனர். கூடியிருந்தவர்கள் இயக்கத்தின் ஒற்றுமையை காக்கும் தேவையை வலியுறுத்தியதுடன் கட்சிகளுக்கு கீழ்பட்டுவிடமால் அதை இயக்க வேண்டும் என்றும் கட்சிகள் தங்கள் தேர்தல் நோக்கங்களுக்காகத்தான் அணிகள், எதிர்ப்புக்கள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர் என்றும் கூறினர்.

இதைத் தொடர்ந்து கூட்டம் ஆர்ப்பாட்டத்தின் முன்னணியில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு எப்படி ஆதரவு தருவது என்று விவாதித்தது. தகவல் பரிமாற்றத்தை முன்னேற்றுவிக்கக்கூடிய நடவடிக்கைகள் விவாதிக்கப்பட்டன; மாணவர்கள் ஒழுங்குற, ஒற்றுமையுடன் அமைக்கப்படுதல், காக்கப்படவும் கைது செய்யப்படுவதில் இருந்து அவர்களை எப்படிக் காப்பது என்பதும் விவாதிக்கப்பட்டன.

வந்திருந்த பொதுப்பணித்துறை ஊழியர்கள் சில நகரசபைகள் முற்றிலும் மூடப்பட்டுவிட்டன என்றும் அதில் இருந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு தீவிர ஆதரவைக் கொடுத்து வருவதாகவும் அறிவித்தனர். செய்தி ஊடகம் எதிர்ப்பு இயக்கத்தை தனிமைப்படுத்தி முறிக்க முற்பட்டுள்ள திட்டமிட்ட பிரச்சாரத்தில் இருந்து வரும் ஆபத்துங்கள் பற்றியும் கூட்டம் விவாதித்தது. அதற்கு அரசாங்க ஆதரவு இருந்தது என்பதுடன் விழிப்புணர்வு இல்லாவிட்டால் அரசாங்கத்தின் பிடியில் சிக்க வேண்டும் என்பதும் ஐயத்திற்கு இடமின்றி விளக்கப்பட்டது.

தொழிலாளர்கள் இயக்கத்தையும் ஆதரவிற்கு மாணவர்கள் அழைப்பு விடுத்ததுடன், அரசாங்கத்திற்கு உண்மையில் உழைக்கும், நெருக்கமான தொடர்புடைய அதன் தலைவர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் கூறினர்.

அவர்கள் கோரிக்கைகளில் அடங்கியிருந்தவை: அலெக்சிஸ் கிரிகோரோபோலஸின் மரணத்திற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அரசாங்கம் இராஜிநாமா செய்ய வேண்டும், "பயங்கர சட்டங்கள்" அகற்றப்பட வேண்டும், சிறப்பு போலீஸ் பிரிவுகள் அகற்றப்பட வேண்டும், போலீசார் ஆயுதங்களை ஏந்திவருவது தடைக்கு உட்படுத்தப்பட வேண்டும், ஆர்ப்பாட்ட ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட 200 மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பனவாகும்.

தங்கள் சமூகக் கோரிக்கைகளையும் மாணவர்கள் முன்வைத்துள்ளனர்; அவற்றுள் அனைத்து தனியார் கல்வி நிலையங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவை அகற்றப்பட்டு, இலவச, தடையற்ற உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் வேண்டும் என்று கூறப்பட்டது. 1973 கிரேக்க இராணுவ ஆட்சிமாற்றம் வந்தபோது மக்கள் இயக்கத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் சொத்துக்களில் தஞ்சம் கோரும் உரிமை தக்க வைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். குறைந்த பணிநேர வாரம் மற்றும் கெளரவ ஊதியத்துடன் கூடிய பாதுகாப்பான வேலைகளும் தேவை என்று எதிர்ப்பாளர்கள் கூறினர்.

டிசம்பர் 13 சனிக்கிழமையன்று, பாராளுமன்ற கட்டிடத்திற்கு எதிரில் பிற்பகலில் ஒரு எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கிரிகோரோபோலஸ் படித்து வந்த பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்ட இளைஞருக்கு தங்கள் மரியாதையை செலுத்தினர்.

இதன்பின், சில பல்கலைக்கழக மாணவர்கள் கூடியிருந்த போலீசாருக்கு முன்பு எதிர்ப்புக்களை தெரிவிக்கும் வகையில் தங்கள் சட்டையை அகற்றிவிட்டு தங்கள் கைகளையும் முதுகுப்பின்னே தாங்கள் கைதிகள் என்பது போல் வைத்துக் கொண்டனர்.

அணிவகுப்பு அமைதியாக இருந்தாலும், பாராளுமன்றத்திற்கு காவல் என்ற விதத்தில் அரசாங்கம் இராணுவத்தை அழைத்திருந்தது; கண்ணீர்ப்புகை பாட்டில்களை எதிர்ப்பாளர்கள்மீது பயன்படுத்த தயாரான விதத்தில் சிறப்பு அதிகாரிகள் இருந்தனர். அழுத்தமான சூழ்நிலை இருந்தபோதிலும், ஒரு மாணவர் போலீசிடம் கூறினார்: "நாங்கள் உங்களுக்கு எதிராக போரிடவில்லை; நீங்களும் எங்களை போல் மனிதர்கள்தாம்; உங்கள் சீருடைக்கும் நீங்கள் கீழ்ப்படியும் சட்டங்களுக்கு எதிராகத்தான் போரிடுகிறோம்."

இதன் பின்னர் ஆர்ப்பாட்ட அணி ஏதென்ஸ் காஜி பகுதியை அடைந்து, அதற்குப் பிறகு Peireos Street க்கு சென்றது; அங்கு சிறப்பு போலீஸ் பிரிவுகள் காத்திருந்தன. இரண்டு பிரிவுகள் திடீரென எதிர்ப்பாளர்களுக்கு பின் புறத்தில் இருந்து வந்தனர்; மற்றவர்கள் பக்கவாட்டில் இருந்து எதிர்ப்பை நிறுத்தி இயன்றவரை கைது செய்யமுடிந்தவர்களை கைது செய்தன.

Omonia சதுக்கத்திற்கு செல்லும் வழியில் ஒரு குறைந்த எண்ணிக்கையுடைய எதிர்ப்பாளர்கள் சில வங்கிகளை தாக்கி cctv முறையையும் அகற்ற முற்பட்டனர்; அது போலீசாரால் ஆர்ப்பாட்டங்களை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டிருந்தது. பரந்த முறையில் அழிவு என்று செய்தி ஊடகம் கூறியிருப்பதற்கு முற்றிலும் மாறான வகையில், இவை இரண்டும்தான் எதிர்ப்பாளர்களில் இலக்காக இருந்தன.

அன்றாட எதிர்ப்புக்களில் பங்கு பெறுவபர்கள் கிரேக்க செய்தி ஊடகம் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றி சீற்றம் அடைந்துள்ளனர்; அவை போலீஸுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடக்கும் மோதலை எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் பற்றிய தீவிரத் தோற்றத்துடன் காட்டுகின்றன. எதிர்ப்புக்களை பற்றி கூறும் தகவல்கள் மாணவ எதிர்ப்பாளர்களை பற்றித்தான் தெரிவிக்கின்றனவே அன்றி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் தொகுப்பு மற்றும் பெற்றோர்கள் பங்கு பெறுவது பற்றி ஏதும் கூறுவதில்லை. அதற்கு பதிலாக செய்தித்தாட்கள் கடைகளுக்கு ஏற்படும் சேதம் பற்றியும் அரசாங்கம் வணிகர்களுக்கு கொடுக்க இருக்கும் இழப்பீட்டு தொகை உறுதிமொழி பற்றியும்தான் குவிப்பை காட்டுகின்றன.