World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Europe's ruling elite fear the "contagion" from Greece

கிரேக்கத்திலிருந்து கலகம் பரவும் என்று ஐரோப்பிய ஆளும் உயரடுக்கு அச்சம்

By Chris Marsden
15 December 2008
 

Use this version to print | Send this link by email | Email the author

கிரேக்க நாட்டில் கடந்த வாரம் நடந்த நிகழ்வுகளின் பரந்த விளைவுகள் பற்றி உழைக்கும் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆராய்ந்து அறிவது தேவையானதாகும். இது, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆளும் உயரடுக்கில் பதவியில் மேல் நிலையிலுள்ளவர்களின் சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வினா பற்றிய பிரச்சினையாகும்.

போலீசார் ஒரு 15 வயது சிறுவன் அதாவது Alexis Grigoropoulos ஐ கொன்றதினால் அதனுடைய பொறி கிரேக்கத்தை முழுமையாக கலகம் பற்றிக்கொண்டிருந்தது. இது பெரும் மக்களின் அதிருப்தி, குறிப்பாக கிரேக்க இளைஞர்கள் மற்றும் அதன் மாணவர் மத்தியிலே அதிருப்தியை தூண்டிவிட்டது. புதிய ஜனநாயக அரசாங்கம் மற்றும் அதன் பெயரளவு உத்தியோகபூர்வ இடது எதிர்ப்பாளர்கள், அராஜகவாத போராட்டக்காரர்கள் மீது குற்றம் சாட்டும் முயற்சிகள் நடக்கின்ற போதிலும், மிகக்கடுமையான மிருகத்தனமான அடக்குமுறையையும் மீறி நடக்கும் எதிர்ப்புக்களின் நீடித்ததன்மை, நாடு முழுவதும் பரவும் விதம் ஆகியவை சமூக எதிர்ப்பின் தன்மையை காட்டுவதாகத்தான் உள்ளன.

பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்கள் உட்பட, கிரேக்கத்தில் உள்ள இளைய தலைமுறையை எதிர்நோக்கியுள்ள ஆபத்தான நிலைமை பற்றி கவனத்தை ஈர்க்க பல தகவல்கள் வெளிவந்துள்ளன. 15 வயது முதல் 24 வயதிற்குள் இருப்பவர்களுள் நான்கில் ஒருவரை வேலையின்மை பாதித்துள்ளது; இது உலகப் பொருளாதாரத்தின் ஏற்பட்டிருக்கும் சரிவின் முழு பாதிப்பிற்கு மிகவும் முன்னரே இருக்கும் நிலைமையாகும். பட்ட மேற்படிப்பு படித்தவர்கள்கூட குறைந்த மாத ஊதியமான 600 யூரோக்களுக்கு வேலை செய்யும் கட்டாயத்தில் உள்ளனர்; அதுகூட அவர்களுக்கு அதிருஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும். இரு வேலைகளை செய்தால்தான் பிழைக்க முடியும் என்ற நிலையில் சிலர் உள்ளனர்.

கனடாவிலுள்ள Globe and Mail ஏட்டில் Andre Gerolymatos, "சிறிதும் நம்பிக்கையற்ற நிலை தான் இவ்வளவு இளைஞர்கள் நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கு காரணமாகும்" என்று எழுதியுள்ளது; மேலும் 15ல் இருந்து 20 வயது வரை இருப்பவர்களிடையே வேலையின்மை "20 சதவிகிதத்திற்கு சற்று அதிகமாக இருக்கிறது" என்றும் குறிப்பிட்டுள்ளது. அவர் மேலும் கூறுவதாவது: "அந்த வயது பிரிவில்தான் பெரும்பாலான கலகக்காரர்கள் உள்ளனனர் என்பது ஒன்றும் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. உண்மையில் நான்கில் ஒரு ஆடவரும் பெண்டிரும் குறைந்த ஊதிய வேலை, வறிய நிலைமை என்ற எதிர்காலத்தைத்தான் நோக்கியுள்ளனர்."

கிரேக்கத்தில் உள்ள நிலைமை மிக மோசமாகத்தான் உள்ளது; ஆனால் அது ஒன்றும் ஒரு விதிவிலக்கு அல்ல. ஐரோப்பா முழுவதும் இத்தகைய நிலைமைதான் உருவாகிக் கொண்டு வருகிறது. "பல ஐரோப்பிய நாடுகளிலும் பெருகி வரும் அதிருப்தி இளைஞர்களிடையே இருப்பதைத்தான்" கிரேக்கம் அடையாளம் காட்டுகிறது என்ற விதத்தில் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் தன் கருத்துக்களில் ஒப்புக் கொண்டுள்ளது.

கிரேக்கத்தில் இருக்கும் இளைஞர்கள் "தலைமுறை 600" என்று முத்திரையிடப்பட்டுள்ளனர் என்றும் ஜேர்னல் குறிப்பிடுகிறது -- இது நாட்டின் குறைந்தபட்ச ஊதியமான 600 யூரோக்களைக் குறிக்கிறது. இதன் பின் அது பல பெயர்களையும் கொடுத்துள்ளது: ஜேர்மனியில் இது "அடைக்கப்பட்டுள்ள தலைமுறை", ஏனெனில் "பட்டதாரிகள் நீண்ட காலத்திற்கு குறைந்த ஊதியத்தைப் பெறும் வகையில்தான் சிறு வேலைகளை நிறுவனங்களில் பெற்றுள்ளனர்."

ஸ்பெயினில் இளைஞர்கள் "mileuristas" என்று குறிப்பிடப்படுகின்றனர் --"அதாவது மாதம் ஒன்றுக்கு 1,000 யூரோக்களில் எப்படியும் வாழவேண்டும் என்ற நிலை ... மிகச்சிறியளவு பாதுகாப்புக்கள் மற்றும் சலுகைகள் அதிகமற்ற பணியிடங்களில் நுழைதல், பல நேரமும் தற்காலிக ஒப்பந்த வேலைகளுக்கு செல்லுதல் என்ற விதத்தில்."

டிசம்பர் 9ம் தேதி ஸ்பெயினை பற்றி பரந்த விதத்தில் வந்த ஒரு கருத்தாய்வில், Blookberg, "அதன் மிகச் சிறந்த தலைமுறை, உயர் ஏற்றம் வெடித்ததால் ஏற்பட்ட கடுமையான பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது" என்று கூறுகிறது. ஸ்பெயினில் இருக்கும் இளையவர்களில் 28 சதவிகிதத்தினர் வேலையில் இல்லை; இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரியைப் போல் இரு மடங்கு ஆகும். 15ல் இருந்து 24 வயது வரை இருப்பவர்களில் 63 சதவிகிதத்தினர் கடந்த ஆண்டு தற்காலிக ஒப்பந்த வேலைகளில்தான் இருந்தனர், "எனவே இளைஞர்கள்தான் முதலில் வேலைகளை இழக்கின்றனர், அதுவும் மிகப் பெரிய முறையில்." என்று மாட்ரிட்டில் உள்ள Instituto de Empresa வணிகப் பள்ளியின் துணைத் தலைவரான Gayle Allard குறிப்பிட்டுள்ளார்.

29 வயதிற்குக் குறைவானவர்களில் நிகர மாத ஊதியம் சராசரியாக 964 யூரோக்கள் என்று உள்ளது. இளந்தொழிலாளர்களில் 55 சதவிகிதத்தினர்தாம் தங்கள் செலவுகளை ஈடுகட்டும்விதத்தில் ஊதியம் பெறுகின்றனர் என்று ஒரு அரசாங்க அறிக்கை தெரிவித்துள்ளது.

அலெக்சிஸ் கிரிகோரோபோலஸ் கொல்லப்படுவதற்கு முதல் நாள் Selcuk Gokoluk கொடுத்த அறிக்கை ஒன்றை Forbes "இளம் துருக்கியர்களிடையே பெருகும் வேலையின்மை சமூக அமைதியின்மைக்கு எரியூட்டுகிறது" என்ற எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது. ஒரு முதலாளிகள் குழுவின் பொதுச் செயலாளரான Bulent Pirler, "துருக்கி ஏராளமான இளைய தலைமுறை மக்களைக் கொண்டுள்ளது. அவர்களுக்கு கல்வியறிவு கொடுத்து வேலை கொடுக்கப்படாவிட்டால், உங்கள் கைகளில் ஒரு குண்டு இருக்கிறது என்று பொருளாகும்" என்று அறிவித்துள்ளார்.

Forbes தொடர்ந்து எழுதியது: "அரசு வேலையின்மை நிறுவனத்தில் 1.09 மில்லியன் மக்கள் பதிவு செய்துள்ளதாக காட்டப்படுகிறது; ஆனால் அது 14,526 வேலைகளுக்கு மட்டுமே விளம்பரம் செய்துள்ளது. வேலையில்லாதவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலானவர்கள், கடந்த மாதம் 15-24 வயதுப் பிரிவில் இருந்து வந்துள்ளனர்."

டிசம்பர் 8ம் தேதிக் கட்டுரை ஒன்றில் பிரிட்டனின் The Telegraph வணிகப் பக்கங்களில் Constantine Courcoulas எழுதிய கட்டுரை ஒன்று, "கிரேக்க கலகங்களை முதலீட்டாளர்கள் கவனிக்கவில்லை என்றால் அது பெரும் தவறாகிவிடும்" என்று கூறுகிறது.

தற்போதைய "பெரும் ஆரவாரம் முன்னோடியற்றது" என்று எச்சரித்தபின், "இது அராஜகவாதி பகுதியினர்களின் வரம்பில் மட்டும் இல்லை, அரசாங்கத்தின்மீது உள்ள பரந்த சீற்றத்தையும் காட்டுகிறது" என்று Courcoulas எழுதியுள்ளார்; மேலும், "வேலையின்மையினால் தோற்றுவிக்கப்படும் பதட்டங்கள், ஒதுக்கப்பட்டுள்ள இளைஞர்கள் மற்றும் திறமையற்ற அரசாங்கங்கள் போன்றவை ஏதோ கிரேக்கருக்குரிய விஷயங்கள் என்று கருதப்படக்கூடாது. இதே போன்ற வெடிப்புக்கள் மற்ற நாடுகளிலும் வரக்கூடும். பொருளாதார மந்த நிலை எப்பொழுதுமே இளைஞர்கள்மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். கிரேக்க கலகக்காரர்களின் கோஷம் "உங்கள் இளைமைக்கு தோட்டாக்கள், வங்கிகளுக்குப் பணம்" என்பது சரியான சமூகப் பொருளாதாரப் பகுப்பாய்வு என்று கருதப்பட முடியாது, ஆனால் ஈர்க்கக்கூடிய தன்மையை அது கொண்டுள்ளது."

"சமூக ஆர்ப்பாட்டங்கள் சில நேரம் உலகை மாற்றியுள்ளன. பிரெஞ்சு மற்றும் ரஷியப் புரட்சிகள் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்." என்று அவர் முடிவுரையாக எழுதியுள்ளார்.

Associated Press க்கு எழுதியுள்ள இதேபோன்ற மதிப்பாய்வு போல் ஹவனால் கூறப்பட்டுள்ளது; "ஐரோப்பாவில் இருக்கும் அதிகாரிகள் கலகம் பரவுவதற்கு காலம் கனிந்துள்ளது என்று கவலைப்படுகின்றனர்; ஏனெனில் கண்டம் பொருளாதாரப் பின்னடைவில் மூழ்கத் தொடங்கிவிட்டது."

இதையும்விட அழுத்தமான முறையில் Scotsman செய்தித்தாள் கிரேக்க நிகழ்வுகளுக்கு பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி எதிர்கொண்டுள்ள விதம் பற்றி கவனத்தை ஈர்த்துள்ளது. இவருடைய கட்சியே கொடுத்துள்ள பட்ஜெட் திட்டங்களை நிராகரித்து செல்வந்தர்களுக்கு அதிக நலன்களை தருகிறவைகளை மிக வெளிப்படையாக அவர் கவனத்தில் கொண்டுள்ளார், "கிரேக்கத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்" என்று கூறினார்.

இந்த அமைதியின்மை பிரான்ஸிற்கும் பரவக்கூடும் என்ற கவலையை சார்க்கோசி வெளிப்படுத்தினார் என்று கூறும் ஸ்கொட்ஸ்மன் கூறுவது: "கார்லாவுடன் ஒரே வாகனத்தில் நான் செல்லும்போது பிரெஞ்சுக்காரர்கள் உவப்படைகின்றனர்; ஆனால் அதே நேரத்தில் ஒரு அரசரையும் அவர்கள் தலையை கில்லட்டின் மூலம் சீவியுள்ளனர்." என்றார் சார்க்கோசி.

மேலே கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்கள் முக்கிய நிதிய ஏடுகள், செய்தித்தாட்கள் என்று வலதுசாரி போக்கை உறுதியாகக் கொண்டவை, பொதுவாக "உத்தியோகபூர்வ சான்றுகள்" என்று குறிக்கப்படுபவை. பலரும் கல்வி பயின்றுள்ள, அதிக கெட்டிக்காரத்தனமான, உரைக்கும் திறன் படைத்த, ஆனால் பெரும் வறுமையில் வாடும், இளைய தலைமுறையினால் முதலாளித்துவ முறைக்கு பெருகிய அச்சுறுத்துல் உண்டு என்று அவை தீவிரமான மதிப்பீட்டைக் கொடுத்துள்ளன. வெற்றி பெறுவதற்கு கல்வி ஒன்றே போதும் என்று பல ஆண்டுகள் கூறப்பட்டபின், அவர்களுக்கு தங்களுடைய மற்றும் பெற்றோர்களுடைய தியாகங்களினால் வருங்காலத்தில் எந்தப் பயனும் இல்லை என்ற உணர்வுதான் மேலோங்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் தோள்களில் ஏற்றிவிட முயலும் அரசாங்கங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இடது வலதுகள் செயற்படுகையில், அதற்கு எதிர்க்கட்சிகள் எந்த உண்மையான எதிர்ப்பையும் காட்டவில்லை என்ற நிலையில், கிரேக்கத்தில் இருக்கும் இளைஞர்கள் மகத்தான முறையில் தங்கள் சீற்றத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்த தெருக்களுக்கு வந்துவிட்டனர். ஆனால் இனி தவறு செய்ய இடமில்லை. சமரசத்திற்கும் அவநம்பிக்கைக்கும் உட்பட்டுவிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இடது அமைப்புக்களுடன் மட்டுப்படுத்தப்படாத அரசியல் வடிவங்களை கட்டாயம் எடுக்கும் ஒரு ஆழ்ந்த சமூக மாற்றத்தின் நகர்வின் ஆரம்பத்தின் அடையாளமாக நாம் காண்கிறோம்.