World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

A historical milestone?

Reflections on class and race in America

ஒரு வரலாற்று மைல்கல்லா?

அமெரிக்காவிலுள்ள வர்க்கம், இனம் பற்றி சில சிந்தனைகள்

By Barry Grey
7 November 2008

Use this version to print | Send this link by email | Email the author

வாக்களிப்பிற்கு பின்னர் தேர்தல் இரவிலிருந்து வாக்குகள் எண்ணப்பட ஆரம்பித்தது முதல் அமெரிக்க செய்தி ஊடகம் பாரக் ஒபாமாவின் வெற்றியை முற்றிலும் இன அடிப்படையிலேயே விளக்கம் காண்பது வியப்பிற்கு உரியதாகும். இந்தப் போக்கு, புதனன்று "ஒபாமா: உறுதியான வெற்றியில் இனவாத தடை வீழ்கிறது", என மிகப் பெரிய தலைப்பை வெளியிட்ட அமெரிக்க தாராளவாத நடைமுறையின் மிக முக்கியமான பத்திரிக்கையான நியூ யோர்க் டைம்ஸ், ஜனநாயகக் கட்சியின் பெரும் வெற்றியை எடுத்துக்காட்டிய முறையில் சுருங்கக் காட்டப்படுகிறது.

மிக அடிப்படையான இதழியல் தராதரத்தின் அடிப்படையில்கூட இந்த தலைப்பு பொதுநிலை தகவல் அளித்தல் என்ற நிலையை போலித்தனமாக கூட கடைப்பிடிக்கவில்லை என்பது தெரியவரும். இது ஒன்றும் ஒரு செய்தித் தலைப்பு அல்ல. ஒரு முக்கியமான செய்தித்தாள் ஒரு நாட்டின் தேர்தல் முடிவை பொதுவாக எப்படி அளிக்கிறது என்பது அல்ல.

1960 தேர்தலில் பலமுறையும் ஜோன் எப். கென்னடி தான் ஒன்றும் ஜனாதிபதி பதவிக்கான ஒரு கத்தோலிக்க போட்டியாளர் அல்லர் என்றும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர், ஒரு கத்தோலிக்கராக இருக்கும் பின்னணியை கொண்டவர் என்றும் பல முறை கூறினார். இவருடைய வெள்ளை மாளிகைக்கும் வரும் முயற்சியானது, ஆல்பிரெட் இ. ஸ்மித் என்னும் ஒரு கத்தோலிக்க ஜனநாயகக் கட்சி வேட்பாளர் 32 ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய அளவில் தோற்கடிக்கப்பட்ட பின் வந்தது. ஆயினும்கூட கென்னடி அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கண்ட முதல் கத்தோலிக்கர் என்று வந்தபின், செய்தி ஊடகம் மத பிரச்சினையை ஒரு சிறு பிரச்சினையாக காட்டிக் கொண்டது.

இதற்கு மாறாக செவ்வாய் தேர்தலை முற்றிலும் இனம் பற்றிய ஒரு வாக்கெடுப்பு போல் அளிக்க டைம்ஸ் விரும்பியது -- புஷ் நிர்வாகம் மற்றும் குடியரசுக் கட்சியின் வலதுசாரி அரசியல் மக்களால் நிராகரிக்கப்பட்டது, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர்கள் பற்றிய ஒரு நிராகரிப்பு அல்லது மூன்று தசாப்தங்களாக நிதிய உயரடுக்கை இன்னும் செல்வம் கொழிக்கச் செய்வதற்கு முனைப்புடன் இருந்த சமூகக் கொள்கை நிராகரிப்பு என்று காட்டவில்லை. இத்தகைய விளக்கம், முந்தைய பொருளாதாரக் கொள்கைகளை மாற்றுவதற்கான அடையாளத்தைத்தான் ஒபாமா தேர்தல் காட்ட வேண்டும் என்பதற்காக பல இனங்களையும் சேர்ந்த பல மில்லியன் கணக்கிலான உழைக்கும் மக்களும் இளைஞர்களும் உந்துதல் பெற்று பொருளாதார நெருக்கடி ஒன்றுதான் மிக முக்கியமான பிரச்சினை என்பதைத் தவிர்க்க முடியாமல் காட்டியுள்ளதை, புறக்கணிக்கிறது.

ஏராளமான பண்டிதர்கள் இதே இனம் பற்றிய மந்திரத்தை திருப்பித் திருப்பிக் கூறும் வகையில் காற்றலைகளை பயன்படுத்தியுள்ளனர்; தேர்தல் முடிவைப் பற்றிய தங்கள் கருத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோன் மக்கெயினும் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷும், இதேபோல் வாக்கெடுப்பில் ஒபாமாவின் இனத்தை ஒரு முக்கிய விஷயமாக முன்வைத்தனர்.

இப்படி இடைவிடாமல் ஒபாமாவின் தோல் நிறம் மற்றும் அவரின் தனிப்பட்ட பின்னணியைப் பற்றி கூறுதல் என்பது இன வழிவகைகளுக்குள் எப்படி மரபார்ந்த அமெரிக்க அரசியல் பகுப்பாய்வு சூழ்ந்துள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் அதே நேரத்தில் இது உறுதியான அரசியல் நோக்கங்களுக்கும் உதவுகிறது. தேர்தலுக்கு உந்துதல் கொடுத்த அரசியல் பிரச்சினைகள் மறைக்கப்பட உதவுகிறது; இதில் மக்கள் போருக்கு காட்டும் எதிர்ப்பும் அடங்குகிறது. ஓபாமா ஆரம்பத்தில் தன்னுடைய நம்பகத்தன்மையை ஈராக் போருக்கு எதிராகக் காட்டினார் என்ற உண்மை என்பது கிட்டத்தட்ட புறக்கணிக்கப்பட்டுவிட்டது.

அதையொட்டி இத்தன்மை வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட வலதுசாரிப் பொருளாதார, மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகள் ஆகியவை தொடர்வதற்கு பாதை போட்டுக் கொடுத்துள்ளது. ஜனாதிபதியாக பதவி ஏற்பவரும் அத்தகைய போக்கிற்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவர் தன்னுடைய பணியாளர்களின் தலைவராக சட்டமன்ற உறுப்பினரான Rahm Emanuel ஐ நியமித்த முடிவில் இருந்தே தெரியவரும்; இவர் ஈராக் போருக்கு முதலில் ஆதரவு கொடுத்தவர் என்று மட்டும் இல்லாமல் சிக்காகோ சொத்துக்கள் மற்றும் நிதிய நலன்கள் பிரிவின் முக்கிய நண்பர் ஆவார்; அதே போல் ஒபாமா குறைந்தது இரு குடியரசுக் கட்சியினரை தன்னுடைய மந்திரி சபையில் நியமிக்க உள்ளார் என்பதும் இதைத்தான் காட்டுகிறது.

ஒபாமாவின் வெற்றியை இனவழியில் சித்தரித்துக் காட்டுதல் என்பது அவருடைய கொள்கைகளை எதிர்ப்பவர்கள் இன அடிப்படையில் தாக்கப்படுவார்கள் என்ற பொருளைத் தர வாய்ப்புள்ளதா? இந்த வினாவிற்கு "ஆம்" என்று கூறப்படும் என்பதுதான் விடைக்கான குறிப்பாக உள்ளது.

வாக்களித்து விட்டு வெளியே வரும் குடிமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் பொதுச் சான்றுகள் வாக்களித்த மக்களில் பெரும்பாலானவர் மனத்தில் இனம் என்பது மிகச் சிறிய பங்கைத்தான் கொண்டிருந்தது என்பதைக் காட்டியுள்ளது. தன்னுடைய பங்கிற்கு ஒபாமா தன்னை ஒரு இனத்தின் பிரதிநிதி என்றும், பொதுவாக சிறுபான்மையினரின் பிரதிநிதி என்று காட்டிக் கொள்வதை தவிர்த்தார். இவருடைய பண்பாட்டுச் சூழல் இவருடைய அரசியல் தோற்றத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது; வெளிப்படையாக இல்லை என்றாலும் ஒரு ஆபிரிக்க-அமெரிக்க ஜனாதிபதி தொழிலாள வர்க்கத்தின் நிலை பற்றி கூடுதலான பரிவுணர்வைக் காட்டுவார் என்ற உட்குறிப்பை கொண்டிருந்தது; இந்த கருத்தாய்வுதான் Nation ஏடு போன்ற பல மத்தியதர வர்க்க "இடது" மற்றும் சந்தர்ப்பவாத போக்குகளினால் வளர்க்கப்பட்டது; இவை அவருடைய பிரச்சாரத்தில் இருந்த சமூக மற்றும் வர்க்க நலன்களை மறைக்க முற்பட்டன.

செய்தி ஊடகம் இனம் பற்றி பெருமளவு பேசியுள்ளதை மறுப்பது அமெரிக்காவில் ஆபிரிக்க- அமெரிக்கர்கள் இனவழியில் அடக்கப்பட்ட மிருகத்தனமான வரலாற்றை மறுப்பது என்று பொருள் அல்ல. ஆனால் உண்மையான பிரச்சினை, அமெரிக்க அரசியலை வதைப்பது என்பது, வர்க்கப் பிரச்சினைதான். அமெரிக்காவில் வர்க்கப் பிரச்சினை மிகவும் வெடிப்புத் தன்மை கொண்டிருப்பதால் பதவிக்கு போட்டியிடும் எந்த அரசியல்வாதியும் "தொழிலாள வர்க்கம்" என்ற சொற்களை கூடக் கூறுவதில்லை.

கடந்த நான்கு தசாப்தங்கள் வரை முற்போக்கு எண்ணம் கொண்ட புத்திஜீவிகள் மற்றும் தாராளவாத அரசியல் வர்ணனையாளர்கள் மத்தியில் இனவழி ஒடுக்குதல் என்பது அமெரிக்க சமூகத்தின் வர்க்க அடிப்படையுடன் பிணைந்திருந்தது என்பது பரந்த முறையில் ஏற்கப்பட்டிருந்தது. ஆனால் 1970களின் ஆரம்பத்தில் இருந்து அமெரிக்க அரசியல் மற்றும் புத்திஜீவித வாழ்வு என்பவை வர்க்கப் பிரச்சினைகளை நிராகரிக்கும் தன்மையினால் மேலாதிக்கத்திற்கு உட்பட்டுள்ளன. மாறாக இரண்டாம் தர பிரச்சினைகளான பால், பால் விருப்பம், எல்லாவற்றிற்கும் மேலாக இனம் ஆகியவைதான் அரசியல் விவாதத்திற்கு உரிய கருத்துக்கள் என்று எடுத்துக் கொள்ளப்பட்டன.

அரசியல் மற்றும் செய்தி ஊடக நடைமுறையின்படி அமெரிக்காவில் தொழிலாள வர்க்கம் என்று ஏதும் கிடையாது. "மத்தியதர வர்க்கம்" ஒன்றுதான் உள்ளது; இந்தச் சொற்றொடர் சில இடைப்பட்ட சமூக அடுக்குகளான வழக்கறிஞர்கள், பல் மருத்துவர்கள், கடைக்காரர்கள் ஆகியோரை முன்பு குறிப்பவை; இப்பொழுதோ மிகப் பெரிய செல்வந்தர்கள், மிக வறியவர்கள் ஆகியோரை தவிர மற்றவர்கள் அனைவரையும் உள்ளடக்கியுள்ளது. இத்தகைய சொற் புரட்சி (அல்லது எதிர்ப்புரட்சி-) ஒரு ஊதியக் காசோலையை நம்பித்தான் தப்பிப் பிழைக்க முடியும் என்ற மக்கள் தொகையின் விகிதத்தில் அதிகரித்துள்ள தன்மையுடன் இயைந்துள்ளது; அதே நேரத்தில் சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மை என்பது மகத்தான அளவில் வளர்ச்சி பெற்றுவிட்டது. அதன் நிலைப்பாடே இல்லை என மறுக்கப்பட்ட முறையில், தொழிலாள வர்க்கம் இக்காலகட்டத்தில் அதன் சமூக அந்தஸ்தில் மகத்தான சரிவைக் கொண்டது.

இத்தகைய சமூகச் சரிவு பொருளாதார அளவில் மிகவும் பிற்பட்ட பிரிவுகளில் இருப்பவர்கள், குறிப்பாக ஆபிரிக்க-அமெரிக்க தொழிலாளர்களிடம், மிக அதிகமான மிருகத்தனமான பாதிப்பை ஏற்படுத்தியது போல் வேறு எந்தப் பிரிவிற்கும் ஏற்படுத்தவில்லை. தொழிற்துறையின் மிக அதிக பிரிவுகள் தகர்க்கப்பட்டது மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க சமூக சக்தி என்ற நிலையில் தொழிற்சங்கங்கள் இருந்தது மறைந்தது ஆகியவை உள்நகரங்களில் சிதைவு, அவற்றின் பொதுப் பள்ளிகள் கிட்டத்தட்ட வீழ்ச்சி அடைந்தது, எங்கும் படர்ந்திருந்த சுகாதாரப் பாதுகாப்பு இன்மை, சரிந்து விழும் வீடுகள் மற்றும் உள்கட்டுமானங்கள், நீரிழிவு போன்ற வறுமையுடன் தொடர்பு உடைய நோய்கள் பெருக்கம் மற்றும் நீடித்த கால வேலையின்மை ஆகிவற்றின் பெருக்கத்திற்கு வகை செய்தன.

இதற்கு மாறாக அமெரிக்க தாராளவாதத்தின் முக்கிய அம்சமான அடையாள அரசியல் (Identity politics) ஒரு சிறிய ஆபிரிக்க-அமெரிக்கர்கள் பிரிவை உயர்த்துவதில் மிக அதிகமான வெற்றியை கண்டது; அவர்களுக்கு அரசியல் பதவிகள், பெருநிறுவனங்கள், கல்விக்கூடம் மற்றும் செய்தி ஊடகம் போன்றவற்றில் உயர் பதவிகள் பெறுவதற்கு தடையாக இனவேறுபாடு என்பது அகற்றப்பட்டது. கறுப்பு தொழிலாளர்களின் பெரும்பான்மையினரின் அபிலாசைகளின் வெற்றியை ஒபாமா பிரதிபலிக்காமல், இந்த சலுகை பெற்ற சிறுபான்மையினரின் அபிலாசைகளின் வெற்றியைத்தான் குறிப்பிடுகிறது. இவருடைய தேர்தல் அப்பிரிவினர் உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் செல்வத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பிற்கு உத்தரவாதமாக அமைந்துள்ளது.

உத்தியோக முறையில் இனம் பற்றி அதிகம் பேசுவது மற்றும் வர்க்கப் பிரச்சினையை அடக்குவது என்பது அறிவார்ந்த தன்மையின் இழிசரிவு மற்றும் அமெரிக்க தாராளவாதத்தின் அரசியல் போக்கு வலதுபுறம் உள்ளது என்பவற்றின் வெளிப்பாடாகும். வரலாற்றாளர் அலன் பிரிங்க்லி 1955ம் ஆண்டு வெளியிட்ட தன்னுடைய புத்தகமான The End of Reform என்பதில் ரூஸ்வெல்ட்டின் புதிய உடன்பாட்டுச் சரிவுக் காலத்தில் தொடங்கி, இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் மிக விரைவாக பரவி, போருக்கு பிந்தைய காலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட அமெரிக்க தாராளவாத சிந்தனை மற்றும் அரசியலில் ஏற்பட்ட, காணப்பட்ட பெரும் மாற்றம் பற்றி உட்பார்வையுடன் விளக்கியுள்ளார்.

அமெரிக்க தாராளவாதம், குறிப்பாக புது பேரத்தின் ஆரம்ப ஆண்டுகள் பொதுவாக பெருமுதலாளிகளின் அதிகாரத்தை வெட்டிக் குறைக்கவும் பணியிடத்தில் ஒருவித தொழில்துறை ஜனநாயக வடிவமைப்பு அறிமுகப்படுத்தவும் அமெரிக்க முதலாளித்துவம் மறுகட்டமைப்பு செய்யப்படுவதற்கான சீர்திருத்தச் செயற்பட்டியலுக்கு பொதுவாக ஆதரவு கொடுத்தது. பல புதிய பேர ஜனநாயகக் கட்சியினர் ஆதரவு நடவடிக்கைகள் செல்வத்தை மறுபங்கீடு செய்வதற்கும் பெரிய அளவில் சமூக சமத்துவம் அடைவதற்கும் ஆதரவு தந்தனர்.

ஆனால் 1937ம் ஆண்டின் பகுதியளவான பொருளாதார மீட்பு குலைந்து, வேலைநிறுத்த போராட்டங்கள் அடிப்படை தொழிலில் புரட்சிகர பரிமாணங்களை அடையக்கூடிய அச்சுறுத்தலை காட்டிய முறையில், ரூஸ்வெல்ட் புதிய தொழில்துறை தொழிற்சங்கங்களை கண்டித்தார்; ஜனநாயகக் கட்சியின் தாராளவாதம் முதலாளித்துவ முறையின் அடிப்படை கட்டமைப்பு சீரமைக்கப்பட வேண்டும் என்ற செயற்பட்டியலில் இருந்து பின்வாங்க தலைப்பட்டது. இந்த வழிவகை இரண்டாம் உலகப் போர் காலத்தில் இன்னும் தீவிரமாகியது.

1945ஐ ஒட்டி அமெரிக்க தாராளவாதிகள் "நடைமுறையில் முன்பு சீர்திருத்தம் பற்றிய வலியுறுத்தல் இருந்ததை தாராளவாதத்தில் இருந்து அகற்றினர் --வர்க்கப் பிரச்சினைகள் பற்றி கவனிப்பு, சுதந்திரம், ஜனநாயகம் என்பவை பொருளாதார தன்னாட்சியோடு ஒப்பாக இருக்க வேண்டும் எனக் கூறியது, பொருளாதார அதிகாரம் ஓரிடத்தில் குவிந்திருப்பதற்கு விரோதப் போக்கு ஆகியவை சீர்திருத்தத்தின் தன்மைகளாக இருந்தன. மேலும் தாராளவாதிகள் குடிமை என்பதை மறு வரையறைக்கு உட்படுத்தி ஆடவர், பெண்டிரின் பங்கை உற்பத்தியாளர்கள் என்பதில் இருந்து வலியுறுத்துவதை குறைத்து நுகர்வோர் என்று அவர்கள் மதிப்பை உயர்த்தும்" நிலைதான் இருந்தது.

Congress of Industrail Organizations என்று அமைக்கப்பட்ட புதிய தொழில்துறை தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தப் போராட்டங்கள், ஆலைகள் அக்கிரமிப்பு, மிகப் பரந்த அளவில் வர்க்க சமூகங்களை திரட்டல், அரசியல் மற்றும் சிந்தனைப் போக்கு நெறி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்பட அவற்றை மாற்றிக் கொள்ளுதல் --அவை ஆதரித்த ரூஸ்வெல்ட் நிர்வாகத்தின் கோரிக்களை ஏற்றல் என்பது-- தொழில் பணியிடத்தில் முதலாளித்துவ முறை அடிப்படைச் சீர்திருத்தம் மற்றும் ஜனநாயகத்திற்கான அழைப்புக்களை கைவிட்ட முறையில் ஏற்கப்பட்டன. இந்த மாற்றம்தான் போர்க்காலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது; அப்பொழுது தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடனும் வணிகத் தலைவர்களுடன் போர் முயற்சிகள் நலன்களுக்காக பெருநிறுவன உறவுகளில் நுழைந்தன. இத்தகைய போர்க்கால உடன்பாட்டின் ஒரு பகுதி வேலைநிறுத்தம் அல்ல, ஊதியக் கட்டுப்பாடு இவற்றை ஒப்புக் கொண்ட உடன்படிக்கைகள் ஆகும்.

1930 களில் நடந்த வர்க்க யுத்தங்களில், சோசலிச, புரட்சிகர அமைப்புக்களில் இணைந்திருந்த தொழிலாளர்கள் ஒரு மையப் பங்கை கொண்டிருந்தனர். இந்த பெரும் மக்கள் தொகுப்பு ஆர்ப்பாட்டங்கள் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம், நல்ல ஊதியங்கள், குறுகிய பணி நேரங்கள், முன்னேற்றமான பணி நிலைமைகள் ஆகியவற்றை கோரியதுடன் இல்லாமல் தொழிலாளர் இயக்கத்தை தொழில் துறைப் பொருளாதாரம் மற்றும் அமெரிக்க அரசியலில் இருந்து தனித்து ஒரு சுயாதீன சக்தியாக ஆக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது; இவற்றை தவிர, தொழில்துறை ஜனநாயகம் என்ற கருத்தாய்வும் வெளிவந்தது. பிரிங்க்லியின் கருத்துப்படி "அது தொழிலாளர்கள் வாழ்வு என்று மட்டும் இல்லாமல் அமெரிக்க சமூகத்தின் தன்மையையே மாற்றும்."

ஆனால், "ஜனநாயகக் கட்சி மற்றும் தாராண்மை அரசுடன் உடன்பாட்டை கண்டது, தொழில்துறை குழுத் திட்டம் அல்லது தொழிற்கட்சி கருத்து ஆகிய விரிவான இலக்குகள் கைவிடப்பட்டது ஆகியவற்றால் முறையாகக் கூடிய தொழிலாளர்கள் ஒரு சுயாதீன அரசியல் இயக்கமாக மாறும் வாய்ப்பை நழுவ விட்டது. 1945 ஐ ஒட்டி, இந்த இயக்கம் மிக நவீன முறையை மிக அதிகமான அதிகாரத்துவ வடிவமைப்பை கொண்டதிலும் (சில சமயம் இது ஊழல் வாய்ந்ததாகவும் இருந்தது), முக்கியமாக தன்னுடைய சொந்த நிறுவன அமைப்பு தப்பிப் பிழைத்தால் போதும் என்பதற்கு அர்ப்பணித்துக் கொண்டது."

பெருநிறுவனங்களின் சக்தியை குறைக்க முயலும் முயற்சிகள் கைவிடப்பட்டது, மற்றும் தொழிற்துறையில் ஓரளவிற்கு சுய அதிகாரம் கொண்ட மற்றும் சுயாதீனமான தொழிலாளர் சக்தி இருக்க வேண்டும் என்பது கைவிடப்பட்டதும், 1940, 1950 களின் பிற்பகுதியில் தொழிற்சங்கங்களில் இருந்து இடது சாரிக் கூறுபாடுகளை களையெடுப்பு மற்றும் கம்யூனிச எதிர்ப்பு சூனிய வேட்டைகள் என்பதில் ஒரு முடிவுற்ற மற்றும் முழு பிற்போக்கு வடிவத்தை எடுத்தது.

போருக்கு பிந்தைய அமெரிக்க தாராளவாதத்தின் நம்பகத்தன்மை மற்றும் அது வரவேற்ற "மத்தியதர வர்க்க" நுகர்வோர் சமூகம் என்பது போருக்கு பின் ஏற்பட்ட பெருகிய முறையில் எழுச்சியுற்ற வளமை பொருளாதாரத்தின் விரிவாக்கத்தில் தொடரப்பட வேண்டும் என்பதை மையமாகக் கொண்டிருந்தது. ஆனால் 1960களின் கடைசிப் பகுதியில், ஏற்றம் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. வியட்நாம் போர், குடிமை உரிமைப் போராட்டங்கள், நகர்ப்புற கலகங்கள் மற்றும் மோசமடைந்து வந்த பொருளாதார நிலைமைகளினால் தூண்டப்பட்ட நகர்ப்புற கலவரங்கள் மற்றும் வேலைநிறுத்த அலைகள் இவற்றின் பாதிப்பு புதிய பேரக் கூட்டணியைக் கீழறுத்தன. ஒரு சில ஆண்டுகளுக்குள்ளேயே ஜனநாயகக் கட்சி வெளிப்படையாக புதிய பேரத்தின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துக்கொள்ள தலைப்பட்டது.

நுகர்வோர் சமூகத்தை விரிவாக்குவதன் மூலம் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும் என்ற உறுதிமொழி தடுமாற்றத்தை கண்ட நேரத்தில், 1972 McGovern பிரச்சாரத்துடன் ஆரம்பித்து ஜனநாயகக் கட்சி தன்னை மீள உருவாக்கிக் கொண்டது. ஜனநாயகக் கட்சியின் தொலை விளைவுகள் தரக்கூடிய சீர்திருத்தம், இன மற்றும் பால் வேறுபாடுகளில் வேற்றுமை ஆகியன பொன்மொழிகளாயின, வர்க்கப் பிரச்சினைகள் பற்றிய எந்த விவாதமும் நசுக்கப்பட்டது. கட்சி அதன் இயல்பான அமைப்பிலேயே அடையாள அரசியல் கொள்கையை இணைத்துக் கொண்டது. "Affirmative Action --உடன்பாட்டுச் செயல்" இன்னும் அதே போன்ற கொள்கைகள் பல இன, பண்பாட்டு கூறுபாடுகள், தளங்கள் மற்றும் மகளிரிடையே உயரடுக்குகளுக்கு சிறப்பு சலுகைகள் கொடுக்கும் வழக்கம் கொண்டுவரப்பட்டது; அதே நேரத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள், ஆபிரிக்க-அமெரிக்க மற்றும் லத்தினோ மற்றும் வெள்ளை, மகளிர் என்ற பிற குழுக்களின் நிலைமை தேக்கம் அடைந்தது அல்லது சரிவுற்றது.

1930களுக்கு பின்பு, இப்பொழுது, அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி நிலைமைமைகளின் கீழ், இனத்தை அமெரிக்க சமூகத்தை விளக்கும் கூறுபாடு என உயர்த்துதல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஒபாமா தேர்தலை இன வழியில் காட்டும் செய்தி ஊடகத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும் கூட, அவருடைய வெற்றியானது, உண்மையில், இரு கட்சிகளும் கொண்டுள்ள கொள்கையான போர் மற்றும் சமூகப் பிற்போக்கு கொள்கைகளுக்கு எதிரான ஒரு வர்க்க இயக்கத்தின் ஆரம்ப எழுச்சிகளின் விளைவு ஆகும்.

வர்க்கப் போராட்டம் முதிராது புதுப்பிக்கப்படல் என்பது அமெரிக்க அரசியல் மற்றும் அதன் இரு கட்சி முறை ஏகபோக உரிமை என்ற கட்டமைப்பிற்குள், குடியரசுக் கட்சி நிராகரிப்பு மற்றும் ஒரு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படல் என்ற திரிந்த மற்றும் முரண்பாடான எதிர்பார்ப்பு வடிவத்தைத்தான் அவசியமாக எடுக்கும். ஆனால் ஒபாமாவை வெள்ளை மாளிகைக்குள் சுழற்றிக் கொண்டுவந்துள்ள இத்தகைய தொழிலாள வர்க்கத்தின் அடக்கி வைக்கப்பட்டுள்ள வர்க்க சீற்றமும் பெரும் திகைப்பும் காலதாமதம்கூட ஆகாது விரைவிலேயே ஒபாமாவிற்கே எதிராக இயக்கப்படும்.

ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் ஒரு புதிய வர்க்கப் போராட்டக் காலத்திற்கான அரங்கை அமைத்துள்ளது.