World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Washington secretly authorized military raids on 20 countries since 2004

2004 முதல் 20 நாடுகள் மீது இராணுவ தாக்குதல்கள் நடத்த வாஷிங்டன் ரகசியமாக அனுமதியளித்தது

By Bill Van Auken
11 November 2008

Use this version to print | Send this link by email | Email the author

திங்களன்று, நியூயோர்க் டைம்ஸில் பிரசுரமான செய்தியின்படி, எவ்வித யுத்த அறிவிப்போ அல்லது ஆயுதந்தாங்கிய நடவடிக்கைக்கான காங்கிரசின் எந்த வெளிப்படையான அனுமதியும் இல்லாமல் 2004 முதல், 20 நாடுகளுக்கு எதிராக இராணுவ தாக்குதல்கள் நடத்த புஷ் நிர்வாகம் இரகசியமாக அனுமதி அளித்துள்ளது.

பாக்கிஸ்தான், சிரியா மற்றும் சோமாலியா ஆகியவற்றில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை மேற்கோளிட்டு காட்டும் இந்த அறிக்கை, ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் அனுமதியுடன் பாதுகாப்பு செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்டின் உத்தரவின் கீழ், "உலகின் எந்த இடத்திலும்" உள்ள சந்தேகத்திற்கிடமான அல்கொய்தா இலக்குகளை தாக்க அமெரிக்கா இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை படைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடுகிறது.

அமெரிக்காவுடன் யுத்தத்தில் ஈடுபடாத நாடுகளிலும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஒரு பலமான கட்டளையை அந்த அனுமதி அளித்திருந்ததாக, பெயர் குறிப்பிடாத மூத்த அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது. ஒரு டஜனுக்கு நெருக்கமான முந்தைய அறிவிக்கப்படாத தாக்குதல்களுக்கு அமெரிக்க இராணுவம் இந்த உத்தரவை பயன்படுத்தி இருந்ததாக அவ்வறிக்கை குறிப்பிட்டது.

ஈராக்கிய எல்லைக்கருகில், சிரியாவின் கிராமமான சுக்கிரயாவில் அக்டோபர் 26ல் நடந்த தாக்குதல், இந்த உத்திரவின் கீழ் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒன்றாகும். அதில் நான்கு அமெரிக்க தாக்குதல் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. அதில் இரண்டு ஹெலிகாப்டர்கள் சிறப்பு படை துருப்புகளை தரையிறக்கவும், மற்ற இரண்டு கவனத்தை திருப்ப தாக்குதல் நடத்தவும் பயன்பட்டன. பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த குடியானவர்கள் மீது துருப்புகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேர் அதில் பலியாயினர்; பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் டமாஸ்கஸில் ஆர்ப்பாட்டங்களை தூண்டிவிட்டது. சிரிய அரசாங்கம் இதையொரு "போர்க்குற்றம்" (War Crime) என்றும், "பயங்கரவாத ஆக்கிரமிப்பு நடவடிக்கை" என்றும் குற்றஞ்சாட்டியது.

டைம்ஸ்் இதழின் கணக்குப்படி, ஈராக்கிற்குள் போராளிகளை கூட்டி வருவதில் தொடர்புடைய ஒரு தனிப்பட்ட நபருக்காக இந்த தாக்குதல் போலியாக குறிவைக்கப்பட்டது. சிரியா மாகாணத்தில் இதுபோன்றதொரு நடவடிக்கையை அமெரிக்க இராணுவம் மேற்கொள்வது இது முதல் முறையல்ல.

இதேபோன்று, செப்டம்பர் 3ல், கடற்படையினரை (Naval Seals) உள்ளடக்கியதாக நம்பப்படும் ஓர் அமெரிக்க தாக்குதல் படை ஆப்கான் எல்லைக்கருகில் பாகிஸ்தானின் வஜிரிஸ்தான் பிராந்தியத்தில் மூன்று வீடுகளை தாக்க ஹெலிகாப்டரில் கொண்டு சென்று இறக்கப்பட்டனர். அந்த தாக்குதலில் 15 முதல் 20க்கு இடைப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அதில் எட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

பாக்கிஸ்தான் மண்ணிலும் இதுபோன்றதொரு தாக்குதல் நடப்பது இது முதன் முறை இல்லை என்பதையும் டைம்ஸ் அறிக்கை எடுத்துக்காட்டியது. 2006ல், இதேபோன்றதொரு கடற்படை துருப்புகள் (Navy Seals) பாக்கிஸ்தானின் பாஜவார் பிராந்தியத்தில் இருந்த ஒரு வளாகத்தின் சுற்றுச் சுவரில் தாக்குதல் நடத்தியது. அந்த நடவடிக்கை பைலட் இல்லாத பறக்கும் நூதன சிறு விமானம் மூலம் படமெடுக்கப்பட்டு, வெர்ஜீனியாவின் லேஸ்லேவிலுள்ள CIA இன் பயங்கரவாதத்திற்கு எதிரான மையத்திலிருந்த அதிகாரிகளால் அதே நேரத்தில் கண்காணிக்கப்பட்டது.

குறைந்தபட்சம் 20 பேர் கொல்லப்பட்ட செம்டம்பர் 3ம் தேதி நடவடிக்கையானது, கடந்த ஜூலையில் புஷ்ஷின் ஒப்புதலுடன் பாதுகாப்பு செயலர் ரொபேர்ட் கேட்ஸால் கையெழுத்திடப்பட்ட மற்றொரு இரகசிய உத்தரவின் அடிப்படையில் நடத்தப்பட்டது. பாக்கிஸ்தான் பழங்குடி இனத்தவர் பகுதியில் சிறப்பு நடவடிக்கை படைகள் மூலம் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு தயார் செய்ய மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) உதவியுடன் செயல்பட இராணுவத்தை இந்த உத்தரவு திசை திருப்பியது. இந்த நடவடிக்கைகளுக்கான அதிகாரம் இதற்கு முன்னர் 2004ல் அனுப்பிய முந்தைய உத்தரவின் அடிப்படையில் இருந்தது.

தெற்கு சோமாலியாவிற்கு எதிராக ஜனவரி 2007ல், AC - 130 யுத்த விமானங்களால் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு முக்கிய உத்தரவின் அதிகாரத்தின் கீழ் நடத்தப்பட்ட இதில், பல சாதாரண குடியானவர்கள் கொல்லப்பட்டனர். அதேசமயத்தில் விமானங்களின் கனத்த துப்பாக்கிகளால் கொல்லப்பட்டவர்களில் உண்மையிலேயே இலக்கில் வைக்கப்பட்ட இஸ்லாமிய போராளிகள் இருக்கிறார்களா என்பதை இடிபாடுகளுக்கு இடையில் கண்டறிய கென்யாவின் எல்லையோர பகுதியில் சிறப்பு நடவடிக்கை துருப்புகள் இறக்கிவிடப்பட்டனர்.

நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அப்பாற்பட்டு, மேலும் ஒரு டஜன் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு இருந்ததாகவும், ஆனால் அவை மிகவும் "அபாயகரமானவை" அல்லது "இராஜதந்திரத்தின் பெரிய வெளிப்பாடாக" இருக்கும் என்று கருதி, நிர்வாக அதிகாரிகள் அவற்றை கைவிட்டுவிட்டதாகவும் டைம்ஸ் குறிப்பிட்டது.

உத்தியோகபூர்வ உத்தரவில், "Al Queda Network Exord" என்று அறியப்படும் இந்த நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் முடிவானது, "புஷ் கொள்கைவழி" என அழைக்கப்படுவதன் நடைமுறை விளைவுகளையே குறித்தது. இது, பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு சர்வதேச போராட்டம் என்ற பெயரில் உலகின் எந்த இடத்திலும் ஒரு கொடூரமான யுத்தம் நடத்துவதற்கான "உரிமையை" அமெரிக்காவிற்கு அளித்தது. இந்த கொள்கை வழியை விளங்கப்படுத்தும் வகையில் 2002 ஜூனில், வெஸ்ட் பாயிண்டில் உள்ள அமெரிக்க இராணுவ பயிலகத்தில் உரையாற்றும் போது, "அறிவிக்கப்பட்ட உடனேயே உலகின் எந்த இருண்ட மூலையிலும் தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் தயாராக இருக்க வேண்டியதன்" தேவை குறித்து புஷ் உரையாற்றினார்.

பெரும்பாலான இந்த தாக்குதல்களில் தீவிர தாக்குதல் குழுக்களான "வேட்டைக்காரர்களை கொல்லும் குழுக்கள்" என்று அறியப்படும் சிறப்பு நடவடிக்கை குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. எவ்வாறிருப்பினும், அவற்றில் பெரும்பாலானவற்றில், பெரும் எண்ணிக்கையிலான குடியானவர்களின் இறப்புக்கு காரணமான விமானப்படை பயன்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பால் வழிவழியாக நடத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, ரம்ஸ்பெல்டின் பிரச்சாரத்தை கொண்டு இந்த உத்யோகபூர்வ உத்தரவை டைம்ஸ் அறிக்கை ஆய்வு செய்தது. அமெரிக்க புலனாய்வு அமைப்பு இதுபோன்ற முறைகளைப் பயன்படுத்துவதால், அது "Murder Inc" என்ற புனைப்பெயரையும் ஈட்டி உள்ளது. "ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானின் யுத்த பகுதிகளுக்கு வெளியே உள்ள போராளிகளுக்கு எதிராக இராணுவத்தின் பரந்த தாக்குதல் அதிகாரத்தை கட்டவிழ்த்து விட ரம்ஸ்பெல்ட் கடுமையாக வலியுறுத்தினார்" என்று அப்பத்திரிகை குறிப்பிட்டது.

ரம்ஸ்பெல்டால் வழங்கப்பட்ட உத்தரவை "இரகசியமானதாகவும்", "வகைப்படுத்தப்பட்டதாகவும்" டைம்ஸ் எடுத்துக்காட்டிய போதினும், அவ்வாறு கருதுவதற்கு அதில் எல்லாவித காரணங்களும் உள்ளன. கடல் முகாம்கள், அசாதாரண விளக்கம், உள்நாட்டு உளவு மற்றும் புஷ் நிர்வாகத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச யுத்தத்துடன் தொடர்புடைய பிற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் உத்தரவுகளை போன்றிருந்தது அது. உலகில் நாடுகளுக்கிடையிலான இறையாண்மையை மீறி அமெரிக்க இராணுவம் சுதந்திரமாக தாக்குதல்களை நடத்துவதை நேரடியாக அங்கீகரிக்கும் அந்த உத்தரவு குறித்து காங்கிரசில் உள்ள ஜனநாயக கட்சி தலைவர்கள் அறிந்திருந்தார்கள் என்பதுடன், அவர்களின் மெளனமான ஒப்புதலையும் அது பெற்றிருந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஜனவரியில் புஷ் நிர்வாகம் முடிவடைந்து பராக் ஒபாமா அலுவலகத்திற்கு வந்தவுடன் இதுபோன்ற பழக்கங்கள் வரலாற்றில் தேய்ந்தழிந்துவிடும் என்ற கற்பனையும் கூட சுத்தமாக காணமுடியவில்லை.

ஜனநாயக கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி, அவரின் கட்சி வேட்பாளர் போட்டியிலும், ஜனாதிபதி போட்டியிலும் கூறிய பிரச்சாரங்களில், பாக்கிஸ்தானில் உள்ள முகாம்களுக்கு எதிரான இதுபோன்ற தாக்குதல்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையில் மேலும் 100,000 பேர்கள் மற்றும் கடற்படைகளை விரிவாக்குவது என்பது மட்டுமில்லாமல் இதுபோன்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காகவே இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை படைகளை உருவாக்குவதும் தான் அவரின் அடித்தளமாக உள்ளது.

ஒபாமாவின் ஆலோசகர்கள், காங்கிரசில் உள்ள ஜனநாயக கட்சி தலைவர்கள் மற்றும் புஷ் நிர்வாகம் ஆகிய அனைத்து வட்டாரங்களும், அரசாங்க நிர்வாகத்தில் ஏற்படவிருக்கும் மாற்றம் அமெரிக்க வெளிநாட்டு கொள்கையில் எவ்வித பெரிய மாற்றத்தையும் உருவாக்குவதற்கு பதிலாக, பெரும்பாலும் முந்தைய ஆட்சியின் தொடர்ச்சியாகவே பண்புருப்படுத்தப்படும் என்ற குறிப்புகளையே அளிக்கின்றன.

கார்ட்டர் நிர்வாகத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவரும், ஆப்கானிஸ்தானில் சோவியத் பின்புலத்திலுள்ள ஆட்சிக்கு எதிரான இஸ்லாமிய படைகளின் யுத்தத்திற்கு நிதியுதவி அளிப்பதிலும், அமெரிக்க மூலோபாயத்தை முன்னெடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒபாமாவின் வெளியுறவு கொள்கைக்கான ஆலோசகர் Zbigniew Brzezinskiஆல் இது மிக தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

கடந்த வெள்ளியன்று Deutsche Welle க்கு பேசும் போது, அமெரிக்க வெளியுறவு கொள்கையில் "ஒரு பெரும் மாற்றம் வரும்" என்ற எதிர்பார்ப்புகளுக்கு எதிராக Brzezinski எச்சரித்தார். அவர் கூறுகையில், "ஒரு படகு கடலில் நகர்ந்து செல்கிறது என்ற உதாரணத்துடன் தான் நீங்கள் வெளிநாட்டு கொள்கையை பார்க்க வேண்டும்." என்றார். "ஒரு மோட்டார் படகு செய்வது போல ஒரு பெரிய கப்பல் அதன் போக்கை திடீரென மாற்றிக்கொள்ள முடியாது. ஆகவே அமெரிக்கா அதன் எல்லா கொள்கைகளையும் திடீரென மாற்றிக் கொள்வது சாத்தியமில்லை." என்றார்.

இதற்கிடையில், சனியன்று, வெர்ஜினா இராணுவ பயிலக துருப்புக்கள் மத்தியில் துணை ஜனாதிபதி டிக் செனி உரையாற்றும் போது, ஒரு காலத்தில் ஜேர்மன் நாசியால் முன்வைக்கப்பட்டது போல தற்போது "ஜிஹாதிஸ்டுகள்" "அமெரிக்காவிற்கு ஒரு மூலோபாய அச்சுறுத்தலாக" இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஒபாமாவும், துணை ஜனாதிபதி பெடெனும் அமெரிக்காவை பாதுகாக்கும் தங்களின் கடமையை கையில் எடுக்கும் போது, அதிகாரம் சுமூகமாக மாற்றியளிக்கப்படும் என அவர் உறுதியளித்த போதும், ஜிஹாதிஸ்டுகளுக்கு எதிராக ஒரு முடிவில்லா யுத்தம் நடத்தப்படும் என்று செனி சூளுரைத்தார்.