World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

The economic crisis and war

பொருளாதார நெருக்கடியும் யுத்தமும்

By Barry Grey
24 October 2008

Use this version to print | Send this link by email | Email the author


உலகின் கவனம் பூகோள பொருளாதார நெருக்கடியில் குவிமையப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, அமெரிக்கா ஈராக்கில் அதன் நவ-காலனித்துவ யுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதோடு ஆப்கானிஸ்தானிலும் அதை அண்டிய பாகிஸ்தானின் எல்லைப் பிரதேசத்திலும் தனது இராணுவ வன்முறைகளை விரிவுபடுத்தியுள்ளது.

ஏஜன்சி பிரான்ஸ்-பிரஸ் செய்தியின் படி, வியாழக்கிழமை அதிகாலை பாகிஸ்தானின் பழங்குடியினர் வசிக்கும் பிரதேசமான வடக்கு வஸிரிஸ்தானில் ஒரு மத பாடசாலை அல்லது மத்ரஸா மீது அமெரிக்க இராணுவம் நான்கு எறிகணைகளை வீசியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். விசேட தரைப்படை துருப்புக்கள் நடத்திய குறைந்தபட்சம் ஒரு கமாண்டோ தாக்குதல் உட்பட, செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பாகிஸ்தானுக்குள் முன்னெடுக்கப்பட்ட ஒரு தொகை அமெரிக்க தாக்குதல்களில் இது புதியதாகும். பாகிஸ்தானுக்குள் அமெரிக்க தரை படையினரை பயன்படுத்துவதற்கு அதிகாரமளித்து ஜூலை மாதம் ஒரு இரகசிய கட்டளையில் ஜனாதிபதி புஷ் கைச்சாத்திட்டுள்ளார் என்பது கடந்த மாதம் அம்பலத்துக்கு வந்ததன் மூலம், ஆப்கானிஸ்தான் மீதான தனது ஆக்கிரமிப்பு யுத்தத்தை பாகிஸ்தானுக்குள்ளும் வேண்டுமென்றே பரப்பும் திட்டத்தில் அமெரிக்கா இறங்கியுள்ளமை கீழ்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலேயும் கூட, வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக விரிவடைந்துவரும் எதிர்ப்பு யுத்தத்தை தடுக்கும் முயற்சியில் அமெரிக்காவும் அதன் நேட்டோ பங்காளிகளாலும் இராணுவம் மற்றும் பொதுமக்கள் மீதும் தமது தாக்குதல்களை முன்னெடுத்துள்ளன. அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தின் மீது முன்னிரவில் மேற்கொண்ட விமானத் தாக்குதலில், அதாவது "தங்களுக்குள்ளேயே ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்ளும்" சம்பவத்தில், ஒன்பது ஆப்கான் படையினர் கொல்லப்பட்டனர். அண்மைய மாதங்களில் அமெரிக்க விமானத் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழப்பது பெருமளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட்டில் தலிபான்களின் கட்டிடம் என கூறப்பட்டதன் மீது நடந்த தாக்குதலும் அடங்கும். இதில் 90 பொது மக்கள் உயிரிழந்ததோடு அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்களும் சிறுவர்களுமாவர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் சுமார் 500 ஆப்கான் பொது மக்களை கொன்றுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள செய்தி, உண்மையான எண்ணிக்கையை கடுமையாக குறைத்து மதிப்பிடுவதாகவே இருக்கும். ஏனெனில், வியாழக்கிழமை நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தவாறு, உதாரணமாக அமெரிக்க ஆக்கிரமிப்பின் முதல் மாதங்களில், "அதாவது 2001 கடைப் பகுதியில் தொடங்கி ஆப்கானிஸ்தானில் மோதல்கள் உச்ச நிலையை அடைந்துள்ள நிலையிலேயே புதிய விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன."

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமா, அமெரிக்க ஆக்கிரமிப்பை பெருமளவில் துரிதப்படுத்த வாக்குறுதியளிப்பதில் முன்னிலை வகிப்பதுடன், ஜனாதிபதி தேர்தலானது ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் இராணுவ மற்றும் அரசியல் நிலைமை சீரழிவு மீது பார்வை குவிந்துள்ளது. புதன்கிழமை வேர்ஜினியாவில் பிரச்சாரத்தின் போது உரையாற்றிய ஒபாமா, தான் வெள்ளை மாளிகையை கைப்பற்றிய உடனேயே அலை அலையாக அமெரிக்கத் துருப்புக்களை அனுப்ப கட்டளையிடுவதாக தெரிவித்தார். இது 15,000 துருப்புக்களாக அல்லது அதைவிட கூடுதலாகவும் இருக்கலாம். "மேலதிக துருப்புக்களுக்கு அழைப்பு விடுப்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. எனவேதான் நான் குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று மேலதிக படைப் பிரிவுகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பவுள்ளேன்," என அவர் பிரகடனம் செய்தார்.

ஒபாமா பதவியேற்று ஆறு மாதங்களுக்குள், "நம்புவதற்கரிய கடினமான" மற்றும் வெறுக்கத்தக்க முடிவுகளை எடுப்பதன் மூலம் மிகப்பெரிய வெளிநாட்டுக் கொள்கை நெருக்கடிக்கு புதிய ஜனாதிபதி பதிலளிப்பார் என, சியட்டலில் நிதி சேகரிப்பு வைபவத்தில் அவரின் உப ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் ஜோசப் பிடன் தெரிவித்ததை, ஒரு "சொற்ஜால வாய்வீச்சு" எனக் கூறி அதை மறுதலித்தார். மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட கொரியா, ரஷ்யா போன்ற சாத்தியமான ஐந்து இடங்களை பிடன் மேற்கோள் காட்டினார்.

பிடனின் மெய்சிலிர்க்கும் குறிப்புகள் வெறும் "சொற்ஜால வாய்வீச்சு" அல்ல என்பது வியாழக்கிழமை நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் வெள்ளை மாளிகை செய்தியாளர் டேவிட் இ. சங்கீர் வெளியிட்ட நீண்ட கட்டுரை ஒன்றில் மெய்ப்பிக்கப்பட்டிருந்தது. ஒபாமாவும் அவரது குடியரசுக் கட்சி போட்டியாளர் செனட்டர் ஜோன் மக்கைனும் அபிவிருத்தி செய்த வெளிநாட்டுக் கொள்கை நிலைமைகளை கலந்துரையாடும் சங்கீர், மக்கைனை விட ஒபாமா மிகவும் ஆக்கிரமிப்பு தோரணையை தெளிவாகக் காட்டியுள்ள பிரதான பிரதேசங்களை குறிப்பிட்டுள்ளார்.

உதாரணமாக, ஈரான் விவகாரத்தில், ஈரான் தனது பிராந்தியத்தில் யுரேனியத்தை உற்பத்தி செய்வதற்கு ஈரானை அனுமதிக்கும் ஒரு உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள விரும்புவதாக மக்கைனின் பிரச்சாரத்தில் யோசனை தெரிவிக்கப்படும் அதே சமயம், ஒபாமாவின் வெள்ளை மாளிகை "ஈரானின் மண்ணில் யுரேனியத்தை உற்பத்தி செய்ய அதை அனுமதிக்காது என ஒபாமாவின் பிரச்சாரம் செய்தித்தாளுக்கு தெரிவிக்கின்றமை, புஷ் நிர்வாகத்தால் பறைசாற்றப்பட்ட அதே கடும்போக்கு பார்வையே ஆகும்."

"இராணுவ தேர்வை நாம் மேசையை விட்டு அகற்ற மாட்டோம்" என ஒபாமா பிரகடனம் செய்ததாகவும், ஈரானிய அணு வசதிகளை அடைவது பற்றிய முடிவு தொடர்பாக ஐ.நா. சபையின் "இரத்து அதிகாரத்தை" அவர் வழங்க மாட்டார் எனவும் சங்கீர் சுட்டிக் காட்டுகின்றார். ஒரு சாத்தியமான இராணுவத் தாக்குதலுக்கான -ஆயுதமொன்றை உருவாக்குவதற்கு தேவையான அணுப் பொருட்களை ஈரான் உற்பத்தி செய்யும் இடமே தாக்குதல் புள்ளி- தொடக்க நிலையை அமெரிக்க புலனாய்வுத்துறை வலியுறுத்துகிறது. இது அடுத்த ஜனாதிபதி பதவிக்காலத்தின் முற்பகுதியிலேயே கூட நடக்கலாம்" எனவும் தெரிவிக்குமளவுக்கு சங்கீர் செல்கின்றார்.

அமெரிக்கா ஈரானிய எண்ணெய் இறக்குமதி மீதும் மற்றும் பெற்றோலிய உற்பத்தியை மெருகேற்றல் மீதும் தடை விதிக்க வேண்டும் எனவும் ஒபாமா யோசனை தெரிவித்துள்ளார். இத்தகைய நகர்வுகளை பிரேரிப்பதை புஷ் நிர்வாகம் நிறுத்துக் கொண்டதை சுட்டிக் காட்டியுள்ள அவர், "எவ்வாறெனினும் அத்தகைய ஒரு தடை ஒரு யுத்த நடவடிக்கைக்கு சமமானதாக இருக்கக் கூடும்" என எழுதுகிறார்.

பாகிஸ்தான் பற்றி எழுதும் போது, "அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புவதாக அச்சுறுத்தல் விடுப்பதில் திரு. மக்கைனை விட திரு. ஒபாமாவே மிகவும் விருப்பம் கொண்டிருந்தார்," என சங்கீர் குறிப்பிடுகின்றார்.

தனது பூகோள பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களாக இருக்க வேண்டியவை எவை என தாம் கருதுவதற்குப் பொருத்தமாக, அமெரிக்காவின் வெளிநாட்டு மற்றும் இராணுவ கொள்கையை தீர்மானிக்கும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக பேசுவதில் மக்கைனை விட ஒபாமா குறைந்தவர் அல்ல.

வெள்ளை மாளிகையை எந்த முதலாளித்துவக் கட்சி கைப்பற்றும் என்பதற்கும் அப்பால், அளவில் பூகோளரீதியானதாக இருந்தாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக பொருளாதார நெருக்கடியை மையமாகக் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, மிகவும் உக்கிரமான மற்றும் போர்ச்சூழல் திசையை நோக்கி அந்தக் கொள்கையை தவிர்க்க முடியாமல் முன் தள்ளும். பொருளாதார நெருக்கடியானது மிகவும் பரந்தளவிலான பதட்ட நிலைமையை ஏற்படுத்தும் சக்தியையையும் போட்டி ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ நாடுகளுக்கிடையிலான மோதல்களையும் உலக விவகாரங்களுக்குள் நுழைக்கின்றது.

அமெரிக்கா, நிதி நிலைகுலைவு மற்றும் பொருளாதார மந்த நிலைமையின் கீழ், முந்தைய தசாப்தங்களை விட அதிகமாக இராணுவ வழிமுறையில் தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முயற்சிக்கும். வரலாற்றுப் படிப்பினைகளைக் கற்றுக்கொள்வது அவசியமானது. கடைசியாக ஏற்பட்ட மிகப்பெரும் உலகப் பொருளாதார நெருக்கடியான, 1930ல் நேர்ந்த வீழ்ச்சி, இராணுவ மோதல்களை கிளறிவிட்டதோடு அது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் மாபெரும் மனிதப் படுகொலைகளில் உச்ச கட்டத்தை அடைந்தது.

ஆழமடைந்துவரும் பொருளாதார பின்னடைவு மற்றும் அதிகரித்துவரும் இராணுவ வன்முறை நிலைமகளின் கீழ் 2008 தேர்தல் இடம் பெறுவது, ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சி தொடர்பான அரசியல் மாயைகளால் உருவாக்கப்பட்டுள்ள வரம்பற்ற ஆபத்துக்களை அம்பலப்படுத்துகிறது. மீண்டும் ஒரு முறை அமெரிக்க மக்களின் பரந்த யுத்த விரோத உணர்வு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஜனநாயகக் கட்சி பிரிவுக்குப் பின்னால் திருப்பிவிடுவதன் மூலம் வெளிப்படுவதற்கு முன்னரே நசுக்கப்பட்டுள்ளது.

மிகத் தெளிவாகத் தெரிவது போல் ஒபாமா தேர்தலில் வெற்றி பெற்றால், இராணுவவாதம் மற்றும் யுத்தத்திற்கு எதிரான போராட்டம் அவரது நிர்வாகத்திற்கு எதிராகவே இடம்பெறும்.