World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama transition points to more war and repression

ஒபாமா மாறுகை கூடுதலான போர், அடக்குமுறை ஆகியவற்றை சுட்டிக் காட்டுகிறது

By Bill Van Auken
14 November 2008

Use this version to print | Send this link by email | Email the author


ஜனநாயக கட்சி ஆரம்ப தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாரக் ஒபாமா அவரது வெற்றியை, பெரும்பகுதி, புஷ் நிர்வாகத்தின் அழிக்க முடியாத மரபாக கொண்டிருக்கும் ஆண்டுக்கணக்கான இராணுவ ஆக்கிரமிப்பு, சித்திரவதை, அசாதாரண மாற்றி அமைத்தல், உள்நாட்டு வேவு பார்த்தல் மற்றும் பிற குற்றங்களுக்கு அமெரிக்கர்களின் தீர்க்கமான குரோததத்தின் விளைவாகக் பெற்றிருக்கிறார்.

இந்தக் கொள்கைகள் பற்றி கவனத்துடன் இயக்கப்பட்ட ஒபாமாவின் குறைபாடுகள் கூறல் மற்றும் அவருடைய முக்கிய ஜனாதிபதிப் பதவிக்கான வேட்பாளார் ஹில்லாரி கிளின்டனை அக்டோபர் 2002 ல் அமெரிக்கா ஈராக்கின் மீது படையெடுத்ததற்கு ஒப்புதல் கொடுத்ததற்காக குற்றம் சாட்டியது, "நீங்கள் நம்பக்கூடியதை மாற்றுங்கள்" என்ற ஒபாமாவின் முழக்கம் அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் பலராலும் அவருடைய தேர்தலானது இராணுவவாதம் முடிவடையவும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் நிறுத்தப்படவும் ஓர் உறுதி மொழி என்று உணரப்பட்டன.

ஆனால் புதிய நிர்வாகத்திற்கு மாறும் காலம் விரிகையில், இந்த வழிவகையில் சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் பதிவுச்சான்றை ஆராயத்தவறும் மட்டத்திற்கே மாற்றத்திற்கான ஒபாமாவின் உறுதிமொழியின் மீதான நம்பிக்கையும் இருக்கும் என்பது தெளிவு.

பெரும்பாலான பகுதி, ஒபாமா-பிடென் மாற்றத்திற்கான குழு கிளின்டன் நிர்வாகத்தில் இருந்த மூத்த அதிகாரிகளைத்தான் கொண்டிருக்கிறது; இவர்கள் பால்கனில் அமெரிக்க போர்களுடன் தொடர்பு கொண்டவர்கள்; அதேபோல் புஷ்ஷின் ஜனாதிபதி பதவி காலத்தின் தொடர்ந்த போருக்கான அரங்கை அமைத்து, ஈராக்கில் ஆட்சி மாற்றம் என்ற கொள்கையுடனும் தொடர்பு கொண்டவர்கள்.

கிளின்டனின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மாடலின் ஆல்பிரைட்டை வாஷிங்டனில் வார இறுதியில் நடக்கும் G20 குழு கூட்டத்திற்கு தன்னுடைய சொந்த தூதராக அனுப்புவதற்கான ஒபாமாவின் முடிவு இந்த உறவின் குறியீடாகும். 1996ல் "60 நிமிடங்கள்" எனும் CBS செய்தி நிகழ்ச்சியில் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கத் தடைகள் அரை மில்லியன் ஈராக்கிய குழுந்தைகளின் இறப்பிற்கு வழிவகுத்தது என்ற உண்மையை பேட்டியில் எதிர்கொண்டபோது, ஆல்பிரைட் விடையிறுத்தார்: "இது ஒரு கடினமான விருப்பத் தேர்வு; ஆனால் கொடுத்த விலை சரியானதுதான் என்று நினைக்கிறேன்." இதன்பின் இவர்தான் அமெரிக்க ஆதரவுடன் யூகோஸ்லேவியா சிதைக்கப்படவும், அதையொட்டி நிகழ்ந்த சேர்பிய போருக்கும் வழி வகுத்தவர்களில் முக்கியமானவராக இருந்தார்; சேர்பியாவின் மீது மிகப் பரந்த முறையில் சாதாரண மக்கள் பகுதியில் குண்டுவீச்சு நடந்ததால் இது குறிக்கப்பட்டது. இதுதான் உலகிற்கு காட்டும் ஒபாமாவின் முகம் ஆகும்.

வரவிருக்கும் ஒபாமாவின் ஜனாதிபதி பதவிக் காலத்தில் இராணுவக் கொள்கையை பொறுத்தவரையில் நிர்வாக மாற்றத்திற்கு பின்னரும் புஷ்ஷின் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் அவருடைய பதவியில் நீட்டிக்கப்படுவார் என்று தொடர்ந்து வரும் தகவல்களே, மாற்றத்தில் மிகக் குறுகிய தன்மைதான் இருக்கும் என்பதைத்தான் எதிர்பார்க்கமுடியும் எனக் காட்டுகிறது.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரின் இரண்டு முக்கிய ஆலோசகர்கள் பற்றி மேற்கோளிட்டு வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் செவ்வாயன்று "ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமா குறைந்தது ஓராண்டிற்காவது தன்னுடைய நிலைமையில் இருக்குமாறு பாதுகாப்பு மந்திரி ரொபேர்ட் கேட்ஸை கேட்பதின் மூலம் அவர் மீது சாய்ந்துள்ளார்."

ஜேர்னல் சுட்டிக் காட்டியுள்ளபடி, கேட்ஸை தக்கவைத்துக் கொள்ளுதல் புஷ் நிர்வாகத்தின் இராணுவவாத வெளிநாட்டுக் கொள்கை அடிப்படையில் தொடரும் என்பதற்கான தெளிவான அடையாளத்தைத்தான் காட்டும். "தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதியை போலவே திரு கேட்ஸும் ஆப்கானிஸ்தானிற்கு கூடுதலான படைகளை அனுப்பவதற்கு ஆதரவு கொடுப்பவர்" என்று செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. "ஆனால் பாதுகாப்பு மந்திரி ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதற்கு ஒரு உறுதியான கால அட்டவணை கூடாது என்பதை வலுவாக எதிர்ப்பவர்; இவர் நியமிக்கப்பட இருப்பதானது 2010ன் நடுப்பகுதி வரை ஈராக்கில் இருந்து படைகளை அகற்றுவது என்ற தேர்தல் பிரச்சாரத்தை ஒபாமா ஒதுக்கி வைத்துள்ளார் என்ற பொருளைத்தான் தரும்."

ஜனநாயக கட்சித் தலைமைக்குள் கேட்ஸை தொடர்ந்து பாதுகாப்பு மந்திரியாக நீடிப்பதற்கான கணிசமான ஆதரவு கடந்த வாரம் செனட் பெரும்பான்மை கட்சித் தலைவரான நெவடாவின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஹாரி ரீட் CNN க்கு கொடுத்த பேட்டியொன்றில் வெளிப்படுத்தப்பட்டது: "நாங்கள் ஏன் அவரை தக்க வைத்துக் கொள்ளக் கூடாது? அவர் ஒருபோதும் குடியரசுக் கட்சி உறுப்பினராக பதிவு செய்து கொண்டவர் அல்லர்."

பாதுகாப்பு மந்திரிப் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய திறன் இருப்பதாக அதிகம் பேசப்படும் மற்றொரு நபர் முன்னாள் கிளின்டன் சகாப்த கடற்படை செயலர் ரிச்சார்ட் டான்சிக் ஆவார். கடந்த ஜூன் மாதத்தில் டான்சிக், கேட்ஸை தொடர்ந்து தக்க வைப்பதற்கான தன்னுடைய ஒப்புதலை தெரிவிக்கும் வகையில் டைம்ஸ் ஆப் லண்டனில் கூறினார்: "என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு கேட்ஸ் ஒரு சிறந்த பாதுகாப்பு மந்திரி, ஒபமா நிர்வாகத்தில் இதையும் விடச் சிறப்பாக செயல்கூடியவர் என்பதுதான்."

கேட்ஸ் இருந்தாலும் அல்லது போனாலும், ஒபாமா தன்னுடைய இடை மாற்றத்திற்கான பென்டகன் குழுவில் முக்கிய நபர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது வரவிருக்கும் நிர்வாகம் "ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானை புஷ் நிர்வாகத்திலிருந்து வேறுபட்டவிதத்தில் கையாளும் -- ஆனால் இரு போர்ப் பகுதிகளிலும் அமெரிக்க இராணுவ மூலோபாயத்தை முற்றிலும் மறு கட்டமைப்பு செய்வதில் இருந்து சற்று குறைவாக நிறுத்திக் கொள்ளும்" என்று ஜேர்னலின் யோச்சி ட்ரீஸன் பின்னர் வந்த கட்டுரை ஒன்றில் கூறியுள்ளார்.

இக்குழுவின் இணைத்தலவரான மிக்கேல் பிளோர்நோய், கிளின்டன் நிர்வாகத்தில் பாதுகாப்பு துறையில் இருந்தவர், இப்பொழுது Center for New American Strategy எனப்படும் இரு கட்சி இராணுவக் கொள்கை சிந்தனைக் குழு அமைப்பின் தலைவராக உள்ளார். இவ்வம்மையார் பகிரங்கமாக ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறுவதற்கான உறுதியான கால அட்டவணை என்ற கருத்தை எதிர்த்தவர். மார்ச் 2007ல் ஈராக் பற்றி மையத்திற்காக எழுதிய ஆய்வுக் கட்டுரையில், "இந்த முற்றுகைக்கு உட்பட்டுள்ள நாட்டிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமெரிக்கா நீடித்த நலன்களை கொண்டுள்ளது; இந்த நலன்களை காத்தல் என்பதற்கு அங்கு வருங்காலத்தில் குறிப்பிட்ட அளவு இராணுவத் துருப்புக்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகும்."

மாறுதலை கண்காணிக்கும் குழுவில் மற்றொரு முக்கிய உறுப்பினர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் "மனித உரிமைகள்" பற்றிய வல்லுனரான சாரா செவால் ஆவார்; இவர் ஈராக்கில் தளபதி டேவிட் பெட்ரீயசுக்கு ஆலோசகராகப் பணியாற்றிய சிறப்பு வல்லுனர் ஆவார்; இராணுவத்தின் எழுச்சி எதிர்ப்பு நடவடிக்கை பற்றிய களப் பொருட்களை எழுதுவதில் இவர் பங்கு பெற்றவர் ஆவார்.

பென்டகனில் மாறுதல்களைப் பற்றி ஆலோசனைகளை கூறுவதில் மூத்தவராக இருக்கும் மற்றவர் சாம் நன் ஆவார். இவர் 1987ல் இருந்து 1995 வரை ஆயுதப் படைகள் பற்றிய செனட் குழுவின் தலைவராக இருந்தவர். ஒரு வலதுசாரி ஜனநாயகக் கட்சியாளரான இவர் இராணுவத்தில் ஓரினச் சேர்க்கை ஆண்கள் மீதான தடைகள் பகிரங்கமாக நீக்கப்படுவது பற்றிய பில் கிளின்டன் திட்டத்தை எதிர்த்து நடந்த பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செனட்டை விட்டு நீங்கினார்.

இந்த மாற்றக் குழுவின் தன்மை வரவிருக்கும் ஒபாமா நிர்வாகத்தின் உண்மை நோக்கங்களுடன் இயைந்ததுதான் உள்ளது: அதாவது பல்லாயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்கள் தொடர்ந்து ஈராக்கை ஆக்கிரமித்தல் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் காலனித்துவ போரை தீவிரமாக்குவது என்பது.

இதே சித்திரம்தான் உளவுத் துறைபற்றிய மாறுதல் குழுவிலும் வெளிப்படுகிறது. வெளிவந்துள்ள தகவல்கள்படி முக்கிய நபர் இம்முயற்சியில் ஜோன் பிரென்னன் ஆவார்; இவர் இப்பொழுது National Counter-Terrorism Center என்று அறியப்படும் அமைப்பின் தலைவராக உள்ளார்; முன்பு CIA இன் துணை நிர்வாக இயக்குனராக முன்னாள் CIA இயக்குனர் ஜோர்ஜ் டெனட்டின் முக்கிய பணியாளர்கள் தலைவராக இருந்தார். இவர் இந்த அமைப்பை விட்டு 2005ல் விலகினார்.

பயங்கரவாதத்தின் மீதான உலகப் போர் என்று அழைக்கப்படும் நிகழ்வில் ஒரு மூத்த செயலராக இருந்த பிரென்னன், சித்திரவதை, படுகொலைகள், அசாதாரண கடத்தல்கள் மற்றும் உள்நாட்டு வேவு பார்த்தல் என்று CIA யில் இவர் பதவியில் இருந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட கொள்கைளுடன் நெருக்கமான தொடர்பு உடையவர் ஆவார்.

ஒபாமாவின் உளவுத் துறை மாற்றக் குழுவில் முக்கியமாக இருக்கும் மற்றொரு நபர் ஜேமி மிஸிக் ஆவார்; இவர் டெனட்டின் கீழ் CIA ன் பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினார். இவ்வம்மையார் "பேரழிவு ஆயுதங்கள்" ஈராக்கில் இருப்பது பற்றி மற்றும் அல் கைடாவுடன் தொடர்புகள் போலித்தனமான உளவுத் தகவல்களை தயாரித்ததில் முக்கிய பங்கு கொண்டவர் ஆவார்; இவைதான் போர் பற்றிய பொது மக்கள் ஆதரவு பெறுவதற்கு உதவியவை; மேலும் அமைப்பின் பகுப்பாய்வாளர்கள் அனுப்பிய அறிக்கைகளை மூடி மறைப்பதற்கு அவை ஆதாரமற்றவை என்று கூறியதற்கும் காரணமாக இருந்தவர். 2004 இறுதியில் அமைப்பை நீங்கியபின் இவர் இப்பொழுது திவாலாகிவிட்ட வோல்ஸ்ட்ரீட்டின் நிறுவனமான லெமென் பிரதர்ஸில் உலகளாவிய ஆபத்துக்களை பற்றிய பகுப்பாய்வாளர் குழுவின் தலைவராக, பெரும் ஊதியம் பெற்றாலும், சிறிது காலமே இருந்தார்.

பிரச்சாரத்தை பற்றிக் கூறுகையில், சில நேரம் ஒபாமா புஷ் நிர்வாகத்தின் உளவுத்துறை தவறுகளை கண்டித்துள்ளார் --உரிய அனுமதி இல்லாமல் தொலைபேசி ஒட்டுக் கேட்பு, நீரில் முழுக அடிப்பது போல் பயமுறுத்துதல், விசாரணையின்றி காலவரையற்ற காவலில் வைத்தல் போன்றவை ஆகும்; ஆனால் கடந்த கோடையில் செனட்டில் வாக்களிப்பது என்ற நிலையில் அவர் தேசிய பாதுகாப்பு அமைப்பு உள்நாட்டில் பரந்த முறையில் ஒற்று வேலை செய்யும் அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கு வாக்களித்தார்; இது பின்தேதியிடப்பட்டு புஷ் நிர்வாகத்துடன் ஒத்துழைத்த தொலைபேசி நிறுவனங்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பை அளித்தது.

கேட்ஸ் போலவே, புஷ்ஷின் கீழ் அமெரிக்க உளவுத்துறையில் பொறுப்பாக இருந்தவர்கள் ஒபாமாவின் கீழ் தொடர்ந்து இருப்பர் என்பதைத் தள்ளிவிட முடியாது. தேசிய உளவுத்துறை இயக்குனர் Michael McConnell, CIA இயக்குனர் Michael Hayden இருவரும் வரவிருக்கும் ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தில் தாங்கள் தொடர்ந்து இருக்கத் தயார் என்பதை குறிப்பாகக் காட்டியுள்ளனர். கடந்த வாரம், ஜனாதிபதி பாணியில் ஒபாமாவிற்கு தகவல் விளக்கம் தந்த McConnell, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரின் குழு "மிக சுறுசுறுப்பான, போர்த்திறன் வாய்ந்த" குழு என்று விவரித்துள்ளார்.

ஒபாமாவின் அனைத்து மாற்றத்தையும் கவனிக்கும் தலைவரான ஜோன் பெடெஸ்டா கடந்த வார இறுதியில் வரவிருக்கும் ஜனாதிபதி, புஷ் நிர்வாகம் வெளியிட்டுள்ள பல நிர்வாக ஆணைகளையும் அகற்றிவிடுவார் -- குறிப்பாக அவர் சுட்டிக் காட்டியது stem cell ஆராய்ச்சி, உள்நாட்டு எண்ணெய் தோண்டுதல் போன்றவை-- அதில் உலகெங்கிலும் ஆக்கிரமிப்பு செயல்களை நடத்த அமெரிக்க இராணுவ, உளவுத்துறை பிரிவுகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பல ஆணைகள் அடங்கவில்லை.

பாக்கிஸ்தானுக்கு எதிரான எல்லைத் தாக்குதல்களை தீவிரப்படுத்த ஒபாமா உறுதி கொண்டுள்ளார், பயங்கரவாதத்திற்கு எதிரான போரையும் நீடிக்க உள்ளார் என்றுள்ள நிலையில் --இதுதான் உலகில் இருக்கும் எண்ணெய் வளப் பகுதிகளில் மேலாதிக்கம் செலுத்த வாஷிங்டன் இராணுவ வலிமையை பயன்படுத்த நியாயப்படுத்த உதவியது-- அவர் அநேகமாக இந்தக் கட்டளைகளையும் தன்னுடையது போல் ஏற்றுக்கொள்ளுவார் என்றுதான் தோன்றுகிறது.

புஷ் நிர்வாகத்திற்கு எதிரான மக்கள் விரோதப் போக்கு அலையினால் ஒபாமா ஜனாதிபதி தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு தள்ளப்பட்டு 10 நாட்கள்தான் ஆகின்றன. ஆயினும் கூட ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் மற்றும் அவருடைய ஆலோசகர்களுடைய செயல்பாடுகள் அமெரிக்க இராணுவவாதம் மற்றும் அதன் சர்வதேச குற்றம் சார்ந்த தன்மை ஆகியவற்றிற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் கொண்டுள்ள ஏக்கம் ஜனவரி மாதம் இவர் பதவியேற்ற பின்னும் தீரப்போவதில்லை என்பதைத்தான் தெளிவாக்குகின்றன.