World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

G-20 summit: More like London 1933 than Bretton Woods 1944

G-20 உச்சிமாநாடு: 1944 பிரெட்டன் வூட்ஸ் போல் என்பதை விட 1933 லண்டனை போல் இருந்தது

By Nick Beams
15 November 2008

Use this version to print | Send this link by email | Email the author

இன்று வாஷிங்டனில் நடக்க இருக்கும் G-20 உச்சிமாநாடு 1930களின் பெரு மந்தநிலைக்கு பின்னர் மோசமான பொருளாதார, நிதிய முறிவு நடக்கும் நேரத்தில் நடைபெறுகிறது. ஆனால் ஒரு புதிய பிரெட்டன் வூட்ஸ் போன்ற முறைக்கு உடனடித் தேவை என்ற அலங்காரச் சொற்களும், சர்வதேச நிதிய முறை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற அழைப்புக்கள் இருந்த போதிலும், உச்சிமாநாடு விரைவில் ஆழ்ந்துவரும் நெருக்கடிக்கு எந்தவித தீர்வையும் கொடுக்காது. மாறாக ஒரு முறையான திட்டம் இல்லாத நிலையில், முக்கிய முதலாளித்துவ சக்திகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் விரியக் கூடிய வாய்ப்பும் உள்ளது.

பதவியில் இருந்து வெளியேறும் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷினால் கடந்த மாதம் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த இந்த உச்சிமாநாட்டில் G8 நாடுகளின் தலைவர்களும், எழுச்சி பெற்று வரும் பொருளாதாரங்கள் எனக் கூறப்படும் இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, ஆர்ஜென்டினா, துருக்கி, இந்தோனேசியா, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அடங்கியுள்ளன. மொத்தத்தில் இவை உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 90 சதவிகிதத்தை பிரதிபலிப்பதாக உள்ளன.

உச்சிமாநாடு ஆரம்பிக்கப்படும் முன்னர், பிரிட்டிஷ் பிரதம மந்திரி உலகப் பொருளாதாரத்திற்கு "முக்கியமான கணம்" வந்துள்ளது என்றும் ஒரு "புதிய பிரெட்டன் வூட்ஸ்" அமைப்பதற்கான வாய்ப்பை அளித்துள்ளது -- அதாவது 1930 களின் பொருளாதாரப் பேரழிவை தொடர்ந்து போருக்குப் பிந்தைய பொருளாதார ஒழுங்கிற்கு அஸ்திவாரம் கொடுத்த ஜூலை 1944ல் நடந்த மாநாட்டுக்கு ஒப்பாக இருக்கும் என்று கூறினார்.

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக இருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி, "நிதிய உலகத்தின் விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியதன் அடிப்படையில் வாஷிங்டனில் அடையப்படும் உடன்பாடுகளின் ஆய்வுகளை மேற்கொள்ள வசந்த காலத்தில் மற்றொரு மாநாடு வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆனால், உச்சிமாநாட்டில் நடக்கக்கூடிய செயற்பாடுகள் பிரிட்டிஷ் ஏடான Independentல் வந்துள்ள ஒரு கருத்தின் மூலம் மிகத் துல்லியமாக சுருக்கிக் கூறுப்படுகிறது: "செயல்படும் அரசாங்கம் இல்லாத ஒரு நாட்டில், உடன்பாடுகள் இல்லாத நோக்கத்திற்காக, ஒரு செயற்பட்டியல் இல்லாத உச்சிமாநாட்டைத்தான் காண்கிறோம்." என்று அது கூறியுள்ளது.

வேறுபாடுகள் மிகவும் வெளிப்படையாகத்தான் உள்ளன. புஷ் நிர்வாகம் எவ்வித சர்வதேச கட்டுப்பாட்டு முறையையும் எதிர்க்கிறது --வியாழன் கொடுத்த பேச்சு ஒன்றில் புஷ் மிகப் பெரிய ஆபத்து சந்தையில் மிகக் குறைவான அரசாங்கக் குறுக்கீட்டினால் அல்ல என்றும் அதிக குறுக்கீட்டினால்தான் என்று வரலாறு காட்டியுள்ளதாக அறிவித்தார்; அதே நேரத்தில் சில ஐரோப்பிய சக்திகள், குறிப்பாக பிரான்ஸ், கூடுதலான குறுக்கீட்டிற்கு ஆதரவு தருகின்றன. G20 நிதி மந்திரிகள் கூட்டத்திற்கு பின்னர் பிரேசிலில் பேசிய பிரெஞ்சு நிதி மந்திரி Christian Lagarde, "ஆங்கிலோ-சாக்சன் முதலாளித்துவம் ஒருபுறம், ஐரோப்பிய மாதிரியிலான முதலாளித்துவம் மறுபுறம் என்ற இரண்டிற்கும் இடையே விரிசலை நாம் காண்கிறோம்" என்று கூறினார்.

aஅமாநாட்டிற்கு முன்னதாக, சர்வதேச நிதிய அமைப்பின் (IMF) நிர்வாக இயக்குனரான Dominique Strauss-Kahn ஒரு புதிய பிரெட்டன் வூட்ஸ் வகை அமைப்பு பற்றிய குறிப்பின் மீது குளிர்ந்த நீரைத்தான் ஊற்றினார். "எதிர்பார்ப்புக்கள் கட்டாயப்படுத்தப்படக் கூடாது" என்று பைனான்ஸியல் டைம்ஸுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் கூறினார். "பலரும் இரண்டாம் பிரெட்டன் வூட்ஸ் பற்றி பேசுகின்றனர். சொற்கள் கேட்பதற்கு நன்றாக உள்ளன; ஆனால் ஒரு புதிய சர்வதேச ஒப்பந்தத்தை நாங்கள் தோற்றுவிக்கப்போவது இல்லை."

ஒரு வருங்கால உலக நெருக்கடியை தடுப்பதற்கு IMF நிர்வகிக்கும் ஆரம்ப எச்சரிக்கை முறையுடன் பலவற்றிற்கு ஆதரவு கொடுத்துள்ள பிரெளன் முன்வைத்த கருத்துக்கள் பற்றி ஸ்ட்ராஸ் கான் சந்தேகங்களை எழுப்பியுள்ளார். "நம்மால் ஒன்றும் சிகப்பு, பச்சை விளக்குகளை கொண்ட இயந்திரகதியிலான முறை ஒன்றை நிறுவ முடியும் என்று நான் நினைக்கவில்லை; சில சமயம் நாட்டிற்கு நாடு விளக்கு பச்சையில் இருந்து சிவப்பு ஆகப் போகலாம்" என்று அவர் கூறினார்.

G20 உலகப் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தீர்வு அளிக்கக்கூடும் என்ற கருத்து அந்த அமைப்பின் வரலாற்றை நினைவு கூர்ந்தால் முற்றிலும் அகன்றுவிடும். இது 1999ல் நிறுவப்பட்டது; 1997-98 ஆசிய நெருக்கடியில் விளைவாகத் தோன்றியது. தென்கிழக்கு ஆசியப் பொருளாதாரங்களில் பலவற்றில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 சதவிகிதம் கூட இழப்பு என்பதை அது ஏற்படுத்தியது; அந்தப் பேரழிவின் விளைவாக ஆகஸ்ட் 1998ல் ரஷ்யா பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போயிற்று; அதன் பின்னர் "ஒரு புதிய நிதியக் கட்டமைப்பு" நிறுவப்பட வேண்டும் என்பது பற்றிய பேச்சுக்கள் எழுந்தன.

ஆனால் விளைவுகள் ஒன்றும் ஏற்படவில்லை. சர்வதேச நிதிய முறையில் பெருகிய உறுதியற்ற தன்மையை தீர்ப்பதற்கு மிகவும் அப்பாற்பட்ட வகையில், அமெரிக்க பெடரல் ரிசேர்வ் அமெரிக்க நிதிய முறையில் கடன்கள் வரத்தை பெருக்கும் வகையில் வட்டிவிகிதங்களை 2001ல் இருந்து 2004 வரை குறைத்தது; இது வீடுகள் குமிழி ஏற்பட வகை செய்தது; அதை ஒட்டி நிதிய நெருக்கடியும் ஏற்பட்டது. G20 ஐப் பொறுத்தவரையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அது நிறுவப்பட்டதில் இருந்து மிகக் குறைத்த தாக்கத்தைத்தான் கொடுத்துள்ளது; ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரெட்டிடம் நடந்த உரையாடல் ஒன்றில் புஷ் அந்த அமைப்பின் தன்மை என்ன என்று வினவினார்.

சற்று நீண்ட வராற்றுப் பார்வையை கொண்டால் --1944 பிரெட்டன் வூட்ஸ் மாநாடு மற்றும் அதற்குப் பின் இருந்த நிலையையும்-- ஒரு உறுதியான உலக நிதிய ஆட்சிக்கு G20 உச்சிமாநாடு அல்லது வேறு எந்த குழுவினாலும் ஏதும் செய்ய முடியாது என்ற இயலாமைதான் அடிக்கோடிட்டுக் காட்டப்படும்.

இன்றைய நிலைமைக்கும் ஜூலை 1944க்கும் இடையே இருக்கும் அடிப்படை வேறுபாடு அமெரிக்காவில் நிலைமை ஆகும். அந்த நேரத்தில் இரண்டாம் உலகப் போரில் வெற்றி என்பது கிட்டக்கூடிய நிலையில், அமெரிக்கா அதன் உலக ஆதிக்க சக்தியில் மிக உயர்ந்து நின்றது. தொழில்துறை முழு வேகத்துடன் நடந்த விதத்தில், தன்னுடைய பொருளாதார சக்தியைப் பயன்படுத்தி அது உலகப் பொருளாதார முறையில் முந்தைய தசாப்தத்தின் பேரழிவைக் கடப்பதற்கான மாற்றங்களை கட்டாயமாகக் கொண்டுவர முடிந்தது. அவற்றில் முக்கியமானவை ஒரு உறுதியான நாணய மாற்று விகித முறை கொண்டுவந்தது ஆகும் --இது $35 க்கு ஒரு அவுன்ஸ் தங்கம் என்ற உறுதியான விகிதத்தை கொண்டுவந்தது. இதையொட்டி போட்டியில் நாடுகள் தம் நாணய மதிப்பைக் குறைப்பது, பாதுகாப்பு முறையை கொள்வது ஆகியவை தவிர்க்கப்பட்டன. இவைதான் பெருமந்த நிலை அதிகமாகக் காரணமாக இருந்தன.

நாணய உறுதிப்பாடு ஒரு கட்டுப்பாட்டு முறையுடன் இணைந்து செயல்பட்டது; அதில் அரசாங்கங்கள் தங்கள் பொருளாதாரங்களை சர்வதேச முதலீட்டு வரத்தின் பெரும் அதிகரிப்பில் இருந்து தனித்து இருக்கச் செய்ய முடிந்தது. அமெரிக்க நிதி மந்திரி Henry Morgenthau அவருடைய முடிவரையில் கூறியபடி புதிய நடவடிக்கைகளின் நோக்கம் தனியார் வங்கிகளை வரம்பிற்கு உட்படுத்துதல், மற்றும் "பெரும் வட்டிக்குப் பணம் கொடுக்கும் நிதியாளர்களை சர்வதேச நிதிய முறையில் இருந்து விரட்டுதலும்" ஆகும். அல்லது தலைமை பிரிட்டிஷ் பேச்சுவார்த்தை நடத்துபவரான John Maynard Keynes, உடன்பாட்டை இயற்றிய இருவரில் ஒருவர், குறிப்பிட்டது போல், "ஒரு மாற்றுக்கால நடவடிக்கையில் கூறுபாடு என்று மட்டும் இல்லாமல், ஒரு நிரந்தர ஏற்பாடாக இருக்கும் இத்தட்டம் ஒவ்வொரு உறுப்பு அரசாங்கறத்திற்கும் அனைத்து மூலதன போக்கு பற்றியும் கட்டுப்படுத்தும் உரிமையைக் கொடுக்கும். மரபிற்கு மாறானது என்று கருதப்பட்டது இப்பொழுது மரபார்ந்தது என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது."

போருக்கு பிந்தைய பொருளாதார விரிவாக்கத்திற்கான அஸ்திவாரங்களைத்தான் பிரெட்டன் வூட்ஸ் முறை இயற்றியது. ஆனால் 1970களில் இருந்து உலக முதலாளித்துவத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளை அதனால் கடக்க முடியவில்லை. ஆகஸ்ட் 1971ல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் அமெரிக்க டாலருக்கு தங்கப் பாதுகாப்பு என்பதை அகற்றினார்; 1973 ஐ ஒட்டி பிரெட்டன் வூட்ஸில் நாணயங்களுக்கு இடையே இருக்கும் உறவுகளில் நிலையான மாற்றுவிகித உறவுகள் தோன்றின. வூட்ஸ் முறைக்குப் பதிலாக மிதக்கும் நாணய மதிப்புக்கள் உறை (floating currency values) என்பது கொண்டுவரப்பட்டது.

எந்த அரசாங்கம், அரசாங்கக் கூட்டுக்கள் அல்லது நிதிய அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்ட முறையில் டிரில்லியன் கணக்கான டாலர்கள் அன்றாடம் சந்தைகள் மூலம் உட்செலுத்தப்பட்டதுதான் கடந்த 35 ஆண்டுகளில் நடந்துள்ளது.

அனைத்தின் மிகக் குறிப்பிடத்தக்க மாற்றம் அமெரிக்காவில் பொருளாதார சக்தியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகும்; இன்றைய உலக நெருக்கடி அதி பற்றிய ஒரு வெளிப்பாடுதான். பிரெட்டன் வூட்ஸ் காலத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் போர்ட் என்ற பெயர்கள் அமெரிக்கப் பொருளாதார மேலாதிக்கத்திற்கு கட்டியம் கூறும் பெயர்களாக இருந்தன. இன்று அவையே தப்பிப் பிழைப்பதற்காக அரசாங்கத்திடம் இருந்து நிதி உதவியை நாடுகின்றன

பிரெட்டன் வூட்ஸ் மாநாடு 1930களின் பொருளாதார மோதல்களுக்கு முடிவு காண்பதற்காக வந்தது; அந்த மோதல்கள்தான் நேரடியாக போருக்கு வழிவகுத்திருந்தன. இன்றைய கூட்டமோ முக்கிய சக்திகளிடையே பெருகிவரும் பொருளாதார அழுத்த நிலைமைகளுக்கு இடையே நடைபெறுகிறது.

ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் பாரக் ஒபாமா கூட்டத்திற்கு வராததற்கான காரணங்களில் ஒன்று "அமெரிக்கர்கள் ஒரு ஜனாதிபதியைத்தான் ஒரே நேரத்தில் கொண்டிருப்பர்" என்பதினால் இல்லை; மாறாக, வரவிருக்கும் நிர்வாகம் பெருகிய முறையில் மோசமாகிக் கொண்டிருக்கும் பொருளாதார நிலைமையில் அமெரிக்க நிலைப்பாட்டை முன்னேற்றுவிக்க அதன் கரங்களை சுதந்திரமாக வைத்திருக்க விரும்புகிறது.

இன்றைய மாநாடு ஜூன் 1933ல் லண்டனில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டைத்தான் அதிகம் நினைவிற்குக் கொண்டுவருகிறதே அன்றி பிரெட்டன் வூட்ஸை அல்ல. பெருமந்த நிலைக்கு ஒற்றுமையான விடையிறுப்பை விவாதிக்கக் கூட்டப்பட்ட அம்மாநாடு, பெரிய சக்திகளில் போட்டியினால் தடுமாற்றம் அடைந்து எந்த உடன்பாடும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதற்குப்பின் ஆறு ஆண்டுகளுக்குள்ளாக போர் மூண்டுவிட்டது.