World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush cheers "free enterprise" as US capitalism goes bust

அமெரிக்க முதலாளித்துவம் உடைகையில் "சுதந்திர நிறுவனங்களை" புஷ் வரவேற்கிறார்

By Bill Van Auken
15 November 2008

Use this version to print | Send this link by email | Email the author

"சந்தையின் அற்புதம்" என அழைக்கப்பட்டவை அமெரிக்கா மற்றும் உலகின் பல இடங்களிலும் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை அளித்து வருவதை பல பொருளாதார அறிகுறிகள் தெளிவுபடுத்தினாலும் கூட, "சுதந்திர நிறுவன" முறையின் நற்பண்புகளை உயர்த்திக்காட்டும் வகையில் ஓர் உரையாற்ற வியாழனன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் வோல் ஸ்டீரிட்க்கு வந்திருந்தார்.

பெடரல் அரங்கத்தில் அமெரிக்காவின் முதலாளித்துவத்திற்கு புஷ் அவரின் நன்றியுரையை வெளியிட்டார். அது நியூயோர்க்கின் பங்குச்சந்தையிலிருந்து அளிக்கப்பட்ட ஓர் உரையாகவே இருந்தது. இந்த வரலாற்று புகழ்பெற்ற கட்டிடம் ஜோர்ஜ் வாஷிங்டனால் திறந்து வைக்கப்பட்டது என்பதுடன் அமெரிக்க காங்கிரசின் முதல் கூட்டங்களும் அவரால் இதில் தான் ஆரம்பிக்கப்பட்டன. கோட்பாடு சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் சமூக பொருளாதார உண்மைகளுக்கு இடையே இருந்த இடைவெளியில், தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களின் பண்புக்கு முற்றிலும் மாறுபட்டு நின்ற அந்த ஆகஸ்ட் நிறுவுதலானது, இந்த புவி நிலப்பரப்பில் ஒரு கூட்டத்தை கூட்டி இருந்தது.

வரி வெட்டுகள், நிதி மறுசீர்திருத்தங்கள், சமூக திட்டங்களை நீக்குதல், பொதுகல்வியை மாற்றுதல் போன்றவற்றின் மூலம் ஏழைகளை ஆட்டுவிப்பதில் சிறப்பு பெற்ற ஒரு வலதுசாரி சிந்தனை சுரங்கமான மன்ஹாட்டன் பயிலத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்திற்கு மொத்தம் 175 பேர் வந்திருந்தனர்.

சர்வதேச பொருளாதார நிதி உருகிவழிதலை எதிர்கொள்ள, ஒரு பொதுவான போலி திட்டத்தை வடிவமைக்கும் நோக்கில் உலகின் பல முக்கிய பொருளாதார நாடுகளின் தலைவர்களை வாஷிங்டனில் ஒன்றுகூட்டி இருந்த ஜி20 மாநாட்டில், இந்த வாரயிறுதியில், தற்போதைய ஜனாதிபதி அவரின் உரையை அளித்தார்.

அற்பத்தனம் மற்றும் மிகைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, உலக மக்களை விலையாக அளித்து, அமெரிக்காவின் நிதிய உயரடுக்கு மற்றும் அவற்றின் பாதுகாப்பு நலன்களின் தடையில்லா செல்வவள திரட்சியில் குறுக்கிடும் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்பதை தான் வாஷிங்டனில் கூடியிருந்தவர்களுக்கு புஷ்ஷின் செய்தி தெளிவுபடுத்தியது.

இந்த வாரயிறுதியில் கூடியிருக்கும், ஜனாதிபதிகள் மற்றும் பிரதம மந்திரிகளின் இந்த கூட்டம் எதையும் நிறைவேற்றாது; எவ்வித ஒருங்கிணைந்த உடன்பாட்டிற்கும் வருவதை அவரின் நிர்வாகம் தடுக்கும் என புஷ் தொடக்கத்திலேயே துல்லியமாக எடுத்துக்காட்டினார். "எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் விஷயம் மிக பெரியதென்பதால், இந்த ஒரே கூட்டத்தில் எதையும் நிறைவேற்ற முடியாது." என்று அவர் தெரிவித்தார். "இந்த பிரச்சனைகள் மிகவும் சிக்கலானவை; மேலும் இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முயற்சியோ அல்லது ஒரே கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளத்தக்க பரிந்துரைகளுக்கு வருவதென்பதோ மிகவும் சிரமமாகும்." என்றார்.

மாறாக, இந்த மாநாடு "கொள்கைகளை வகுப்பதில்" கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார், எல்லாவற்றிற்கும் மேலாக, "சரிந்து வரும் செல்வவளத்திற்கான நிச்சயமான வழியை கட்டுப்பாடற்ற சந்தை கொள்கைகள் மட்டுமே அளிக்கும்" என்பதை அவர் அழுத்தமாக வலியுறுத்தினார்.

தேசியப் பொருளாதாரம் கைவிடப்பட்ட நிலையில், 1930க்கு பின்னர் ஏற்பட்டிருக்கும் மிக கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதில், புஷ்ஷின் செய்திகள் வெளிப்படையாக இல்லை. கூட்டம் நடந்த அந்த வாரத்திற்கு முன்னர், அரை மில்லியனுக்கும் மேலான அமெரிக்க தொழிலாளர்கள் வேலைவாய்ப்பற்றோர் நலன்களுக்காக பதிவு செய்திருந்தனர் என்றும், அக்டோபரில் 85,000 வீடுகள் அடைமான உரிமை இரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் சில புள்ளிவிபரங்களை எடுத்துக்காட்டி அவர் பேசினார். அக்டோபர் மாதம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கருவூலத்துறை $237.2 பில்லியன் நிதி பற்றாக்குறையை அறிவித்தது. அதற்கு ஒரு நாள் முன்னர், அதன் செயலாளர், Goldman Sachs நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஹென்றி பால்சன், "வீழ்ச்சியுற்ற" அடைமான சொத்துக்களை வாங்குவதற்காக காங்கிரசால் $700 பில்லியன் பிணையெடுப்பு அளிக்கப்பட்டது போல, முக்கிய வங்கிகளுக்கு மட்டுமில்லாமல், தோல்வியடைந்து வரும் கடன்வசதி துறையையும் காப்பாற்ற தற்போது நிதி அளிக்கப்பட வேண்டும் என்று ஓர் அவசர அறிப்பை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

"நிதி நெருக்கடியால், பேராசை, சுரண்டல் மற்றும் தோல்வியடையக் கூடிய இந்த சுதந்திர நிறுவன அமைப்பு முறைக்கு இடது மற்றும் வலதுசாரிகளின் குரல்களும் ஒன்றுபடுவதை" புஷ் வலிந்து எடுத்துக்காட்ட நினைத்தார்.

சில சிறிய குறைபாடுகளை கூறிய போதினும், முதலாளித்துவ முறை மீதான எந்த முறையார்ந்த குற்றச்சாட்டையும் புஷ் நிராகரித்து ஒதுக்கினார். "இந்த நெருக்கடி சுதந்திர சந்தை முறையின் தோல்வியல்ல" என வலியுறுத்திய அவர், "இந்த முறையை மாற்ற முயற்சிக்க வேண்டியதில்லை என்பதே பதிலாக உள்ளது" என்றார். "நாம் சந்தித்து வரும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்; அதற்கு தேவையான சீர்திருத்தங்களை செய்து கொள்ள வேண்டும்; உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு நம்பிக்கையையும், செல்வவளத்தையும் அளித்துள்ள சுதந்திர சந்தை கொள்கைகளுடன் தான் நாம் முன்னோக்கி நகர வேண்டியுள்ளது என்றார்.

புஷ் வலியுறுத்திய "தீர்வுகள்" மிகவும் தெளிவற்றதாகவும், அர்த்தமற்றதாகவும் இருந்தன: "நிதி திட்டங்கள் முறையாக நெறிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தும் கணக்கியல் விதிகளை மேம்படுத்துவது மற்றும் சந்தை மோசடி மற்றும் ஏமாற்று முறைகளை அனுமதிக்கும் விதிகளை புதிதாக மாற்றி அமைப்பது குறித்து குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும், "சுதந்திர சந்தை" மீதான அவரின் நம்பிக்கை மிகவும் உறுதியாக இருந்தது: "மனிதர்களால் வடிவமைக்கப்பட்ட பிற எந்த முறைகளையும் போன்று முதலாளித்துவமும் துல்லியமாக இல்லை தான். [உண்மையென ஏற்கத்தக்க அளவில், கடவுளால் உருவாக்கப்பட்ட சாசுவதமான கட்டுப்பாடற்ற சந்தை மட்டுமே இனிமேல் அதுபோன்றதொரு அரசை உருவாக்க முடியும்.] அதில் பழிகளும், அட்டூழியங்களும் இருக்கலாம். ஆனால் நீண்டகால நோக்கில் அது மிகவும் துல்லியமானது என்பதும் ஒரு பொருளாதாரத்தை வடிவமைப்பதற்கான ஒரே பாதையாகவும் உள்ளது. அதன் மிக அடிப்படை நிலையில், மக்கள் எங்கு வேலை செய்யலாம், அவர்கள் என்ன செய்யலாம் என்பதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும் அது அவர்களுக்கு அளிக்கிறது" என்றார்.

அவர் பின்வருமாறு தொடர்ந்தார்: "சுதந்திர சந்தை முதலாளித்துவம் ஒரு பொருளாதார கோட்பாடிற்கும் அப்பாற்பட்டது. அது சமூக மாற்றத்திற்கான என்ஜினாக உள்ளது. அது அமெரிக்க கனவின் பரந்த பாதையாக உள்ளது" என்றார்.

"அவர்கள் எங்கு வேலை செய்யலாம் என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை?" - யாரை அவர் ஏமாற்றி கொண்டிருப்பதாக அவர் நினைக்கிறார்?

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, 10 மில்லியன் அமெரிக்க தொழிலாளர்கள் தற்போது வேலையில்லாமலும், வேலை கிடைக்காமலும் இருக்கிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் 1 மில்லியனாக இருந்த அவர்களின் எண்ணிக்கை தற்போது பெரிதாகியுள்ளது. கட்டாயமாக பகுதி நேர வேலைகளில் திணிக்கப்பட்டு வேலையில் உள்ளவர்கள் மற்றும் வேலையில்லாதோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட "ஊக்கமில்லா" தொழிலாளர்கள் என அழைக்கப்படுவோர் ஆகியோரையும் ஒருவர் கணக்கிட்டால், எட்டில் ஒருவர், எங்கு வேலை செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க முடியாதவராகவும், முழு நேர வேலை பெற முடியாதவராகவும் இருக்கிறார். இது ஆரம்பம் மட்டும் தான், தினந்தோறும் அறிவிக்கப்படும் பரந்த கதவடைப்புகளுடன் சேர்ந்தால், இதுவரை பார்த்திராத ஒரு பெரிய வேலைவாய்ப்பற்றோர் இராணுவம் இந்த பெரிய அமிழ்விலிருந்து உருவாகும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

"சமூக இயக்கத்திற்கான எஞ்சினாக" சுதந்திர சந்தை முதலாளித்துவம் இருப்பதால், பெருமளவிலான உழைக்கும் மக்களின் வருமானம், மந்தநிலை அடைந்தும் சரிந்தும் வரும் நிலையில், சமூக படிஅடுக்கின் மேற்தட்டில் இருப்பவர்கள் மொத்த செல்வவளத்தில் தங்களின் பங்கை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு அதிகரிப்பதால், இந்த இயக்கம் தொடர்ச்சியாக எதிர் திசைகளில் செல்லலாம். 1920ல் இருந்து எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் செல்வவளம் மற்றும் வறுமைக்கு இடையிலான இடைவெளி தற்போது மிக அதிகமாக உள்ளது.

மேற்தட்டில் உள்ளவர்களால் பெருமளவில் குவிக்கப்பட்ட சொத்துக்களை புஷ் காப்பாற்ற முனைகிறார். வெள்ளியன்று வாஷிங்டன் போஸ்ட்டில் குறிப்பிட்டது போல, "புஷ்ஷூம், அவரின் உதவிகளும் விரும்பத்தக்கவையாக இல்லை" என வாஷிங்டன் மாநாட்டில் கலந்து கொண்ட பிற நாட்டு தலைவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள், "செயலதிகாரிகளின் சம்பள குறைப்புக்கான" அழைப்பாகவே உள்ளது.

கட்டுப்பாடற்ற சந்தைக்கான அவரின் பொறுப்புகளும், எல்லைக்குட்பட்டே இருப்பதாக குறிப்பிடும் நிலைக்கும் புஷ் தள்ளப்பட்டார். "ஒரு சர்வதேச உருகிவழிதலை நாம் முகங்கொடுத்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார். "ஆகவே நாங்கள் துணிச்சலான முறைமைகளுடன் விடையிறுத்துள்ளோம். நான் சந்தை நோக்குநிலை கொண்டவன் தான், ஆனால் ஒரு சர்வதேச உருகிவழிதலின் அறிகுறிகளை முகங்கொடுக்கும் போது நான் அவ்வாறு இல்லை" என்றார்.

புஷ்ஷினால் மட்டுமில்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக வலம் வரும் பராக் ஒபாமாவினாலும் மொழியப்படும் இந்த "துணிச்சலான முறைமைகள்", நாட்டின் மிகப்பெரிய வங்கிகள் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் நிதி அமைப்புகளை பிணையெடுக்க சமூக சொத்துக்களில் இருந்து ட்ரில்லியன்கணக்கான டாலர்களை கொள்ளை அடிப்பதில் தான் கொண்டு சேர்த்துள்ளன. நூறு ஆயிரக்கணக்கான இந்த பணம், வங்கிகளை வலுப்படுத்தவும், சொத்துக்களில் மேலும் கவனம் செலுத்தவும் உதவுவதுடன், நிதியியல் செயலதிகாரிகளுக்கு போனசாகவும், சொத்து பங்குதாரர்களுக்கு டிவிடெண்டுகளாகவும் நேரடியாக போய்க் கொண்டிருக்கிறது.

எவ்வாறிருப்பினும், தங்களின் வேலைகளை இழந்த தொழிலாளர்கள் மற்றும் தங்களின் வீடுகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள குடும்பங்கள் மீது "சுதந்திர சந்தை கொள்கைகள்" முழுவீச்சுடன் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. அவர்களுக்கு எந்த பிணையெடுப்பும் கிடையாது, வாழ்க்கை நிலைமைகள், வேலைகள் மற்றும் சமூக திட்டங்கள் மீதான கூடுதல் தாக்குதல்கள் மூலம் வோல் ஸ்ட்ரீட்டில் மூழ்கடிக்கப்பட்ட ட்ரில்லியன்களுக்காக செலுத்த வேண்டிய கட்டாயம் தான் இவர்களுக்கு முன் உள்ளது.

புஷ் அவரின் முந்தைய ஜனாதிபதி பதவி காலத்தில், கட்டளை விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு அவரை மதிப்புடன் நடத்தும் இராணுவ கூட்டத்திலேயே அவர் பெரும்பாலும் தோன்றினார். தற்போது, அவரின் பதவி காலத்தின் இறுதி காலத்தில், மான்ஹட்டன் பயிலகத்தில் கூடியிருந்தவர்களைப் போன்ற வலதுசாரி கோட்பாடு கொண்ட சிறு குழுக்களுக்கு முன் உரையாற்றுவதையே அவர் வெளிப்படையாக செளகரியமாக கருதுகிறார்.

நல்ல வேளை. இந்த வளமான சூழ்நிலைக்கு வெளியே, முதலாளித்துவம் மற்றும் "சுதந்திர சந்தைக்கு" மதிப்பு குறைந்து வருகிறது. அத்துடன் இதற்கு முன்னர் வெள்ளை மாளிகையில் இருந்தவர்களில், யாரும் எட்டாத அளவிற்கு வாக்கு எண்ணிக்கையில் ஆழமான சரிவைக் கொண்ட வெளியேறவிருக்கும் இந்த ஜனாதிபதியின் மதிப்பும் குறைந்துள்ளது.

உண்மையில், இந்த "சுதந்திர நிறுவன முறை" என்பது பேராசை, ஊழல் மற்றும் தோல்வியுடன் கூடியது என்பதை மில்லியன்கணக்கானவர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கி உள்ளனர். ஒபாமா நிர்வாகம் அலுவலகத்திற்கு வந்து, இந்த முறையை பாதுகாக்க தொடங்கும் போது, முதாலாளித்துவத்தால் சமூக நிலைமைகள் மீது உருவாக்கப்பட்ட பரந்த எழுச்சி, தவிர்க்க முடியாமல் அவரின் அரசாங்கத்திற்கு எதிரான பரந்த போராட்டங்களின் வடிவத்தை எடுக்கும்.